Advertisement

வட மாநிலங்களில் தமிழ்நாடு தினம் பிரதமர் மோடி புது யோசனை

"வேற்றுமையில் ஒற்றுமையே நம் சிறப்பு. வட மாநிலங்களில், தமிழ்நாடு தினத்தை ஏன் கொண்டாடக் கூடாது," என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

அமெரிக்காவின் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றியதன், 125வது ஆண்டு மற்றும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு, மாணவர்கள் இடையே, பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார். டில்லியில் நடந்த நிகழச்ச்யில், 'வீடியோ கான்பரஸ்' மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக மாணவர்களிடம், தமிழில் வணக்கம் கூறி, அசத்தினார் மோடி.

நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் நாட்டின் பெருமை. ஆனால், அதை நாம் முறையாக கொண்டாடுகிறோமா, கடைபிடிக்கிறோமா? ஒவ்வொரு மாநிலம் குறித்தும், ஒவ்வொரு மொழி குறித்தும், நாட்டு மக்கள் அனைவரும் பெருமை அடைந்தால் தான், அது சாத்தியமாகும்.

தமிழ்நாடு தினத்தை ஹரியானாவிலும், பஞ்சாபில் உள்ள பள்ளி, கல்லூரியில், கேரளா தினத்தையும் ஏன் கொண்டாடக் கூடாது. அவ்வாறு அந்த மாநில நாள் கொண்டாடும்போது, அந்த மாநிலம் மற்றும் மொழியின் பாரம்பரியம், கலாசாரத்தை அனைவரும் தெரிந்து கொள்ள முடியும்.

அந்த நாளில், அந்தந்த மாநிலத்தின் உடையை அணிந்தும், அந்த மாநில மொழியில் பாடல் பாடியும், நடனமாடியும் கொண்டாடலாம். தமிழகம், கேரளாவில் உள்ளதுபோல், கைகளால் அரிசி சாதத்தை சாப்பிடுவது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும். அந்த மொழிகளில் உள்ள சினிமாவையும் பார்க்க வேண்டும்; இது முடியாத விஷயமல்ல. அனைவரும் ஒரு அடி எடுத்து வைத்தால், இது சாத்தியமே.இவ்வாறு அவர் பேசினார்.

- நமது சிறப்பு நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (173)

 • Mano - Madurai,இந்தியா

  என்னடா ஒரேயடியா தமாஷ் பண்ணிண்டு இருக்கிறீங்க. முடியலடா சாமி. ஸ்வாச் பாரத் அபியான் என்று சொன்னீங்க. UP யில் மெட்ரோ உள்ளேயே மூத்திரம் அடிக்கிறானுங்க. போங்கடா நீங்களும் உங்க மோடி மஸ்தானும். நாட்டை சீர் அழிக்கமா நீங்க ஒழிய மாட்டீங்க.

 • Nanjilaan - Bangalore,இந்தியா

  மக்களே... திருவாளர் வாயால வடை சொல்லாம விட்டது இது தான் "அப்படியே தமிழ் நாட்டுலே MP UP மற்றும் இன்ன பிற ஹிந்தி சார்ந்த நாட்களையும் கொண்டாடிலாம் இல்லே ...ஹி ஹி ஹி"

 • Sandru - Chennai,இந்தியா

  நடிகன்டா இந்த வருஷம் நடிப்புக்கான ஆஸ்கர் இவருக்குத்தான் .

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  நானும் பார்க்கிறேன் ஒரு முக்கிய விஷயத்தை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை ..... அதாவது இதை அவர் பேசியது தமிழர்களிடம் ..... அதாவது தமிழக கலாச்சாரத்தை அறிந்து கொள்ளுங்கள் என்று தமிழர்களுக்கே புத்தி புகட்டியுள்ளார் .....

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இந்த செய்தியை கேட்டவுடன் திராவிட மட்டைகள் அதிலும் குறிப்பாக வெளிநாட்டு மத கும்பல்கள் உடனடியாக பாய்ந்து பிராண்டும். ஏனென்றால் அவர்களின் திட்டமே இந்த தமிழர்களை மூடர்களாக , முட்டாள்களாக வைத்திருக்க வேண்டும். அவர்கள் இந்த நாட்டின் தேசியத்தில் கலந்து முன்னேறிவிட்டால் பிறகு நாம் புறக்கணிக்கப்படுவோம், ஆட்சி அதிகாரம் நம் கையில் இருந்து போய் விடும், சட்டவிரோத செயல்களை செய்யமுடியாது.

 • Prabaharan - nagercoil,இந்தியா

  தமிழ்நாட்டை வைத்து நல்லா காமெடி பண்ணுகிறார்கள்?

 • Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா

  அது சரிதான் ஒரே மதம் ஒரே மொழி என்று திணிக்க வேண்டாம் சாமி ......

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  தமிழ் நாடு மக்களே இந்தியா என்ற சுதந்திர நாட்டில் - பாஜக மோடி ஷா ஒரு அடிமைநாட்டை உருவாக்கத்தான் திட்டம் போடுகிறார்கள்

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  பாதி இந்தியர்களுக்கு போட்டுக்க உடை இல்லை ...

 • Meenu - Chennai,இந்தியா

  தமிழ் நாட்ல தினமும் ஒரு மணி நேரத்துக்கு மின் வெட்டு நடக்குது. வெள்ளையரிடமிருந்து ஏன் சுதந்திரம் அடைந்தோம் என்று சற்று யோசிக்க வைக்கிது.... 70 வருடங்கள் ஆகியும் நம்மளால முழு நேரத்துக்கு மின்சாரம் கொடுக்க வக்கில்லை.... வெள்ளைக்காரனே ஆண்டுகொண்டிருந்தால் ஒருவேளை மின்சார பிரச்னை இருந்திருக்காது.... எத்தினை தலைவர்கள் ஆட்சிக்கு வந்தும் இந்த பிரச்சனையை தீர்க்க முடியவில்லை... என்னிக்குத்தான்யா மின்சார பிரச்சனையா தீர்ப்பீங்க? அது போல் காவிரி நீர் பிரச்சினை ஒன்னு? எதற்கு தான் ஆட்சி செய்றாங்கண்ணே தெரியல

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  நல்லதொரு ஆலோசனை. இதில் வெறும் பாட்டு பாடுவது, சினிமா பார்ப்பது என்று மட்டும் நிற்கக்கூடாது. சங்கு வளையல் வங்காளத்தில் உண்டு. தமிழ் நாட்டில் சங்கு வளையல்கள் செய்ய கற்கலாம். இதேபோல் சின்னாளப்பட்டி, காஞ்சிபுரம் புடவைகளை மற்ற மாநிலங்களில் செய்ய முயலலாம். இதனால் கலாச்சார பரிமாற்றம் மட்டுமின்றி தொழில்களையும் பரிமாறிக்கொள்ளலாம். திண்டுக்கல்லில் அலிகர் பூட்டுக்களையம், அலிகாரில் திட்டுக்கள் பூட்டுக்களையும் செய்ய முயலலாம். முரடாபாத் கடைசல் தொழிலை நாமும் முயன்று பார்க்கலாம். பிரதர் சொன்னது இதுபோல் இன்னும் பெரிய அளவில் நடக்குமானால், இந்திய திருநாட்டில் தொழில்வளம் பெருகும், வறுமை குறையும், வேலையில்லா திண்டாட்டம் குறையும்.

 • Arasan - Thamizhnadu,இந்தியா

  அடேங்கப்பா, வடக்குல எல்லாம் பொறக்குறப்பய கைல கரண்டியோட பொறந்துருத்திக்கானுங்க டா.

 • R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா

  எல்லாம் சரிதான். தமிழ் நாட்டை பற்றி மற்ற மாநிலக்காரர்கள் உண்மையா தெரிந்துகொள்ள ஆசை பட்டால், திருட்டு திராவிட ஆட்சி காலத்திற்கு, அதாவது 50 வருஷத்திற்கு முன்பு உள்ளதை தெரிந்து கொண்டால், மட்டும் போதும்.

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  சாமி நீ ஒரு ஆணியையும்...வேண்டாம் அப்புறம் தமிழ் நாட்டில் உ பி தினம், பிஹார் தினம் என்று சொல்லி தமிழ் நாட்டை குழிதோண்டி புதைத்துவிடுவீர்கள் - அப்புறம் அது பாஜக தினம் என்று தான் வரும் தமிழ் மக்களே

 • kmish - trichy,இந்தியா

  அப்புறம் ஏன்யா இந்தி கொண்டு வர முயற்சி பன்ற

 • Guna - Chennai,இந்தியா

  தமிழ் நாடு என்று ஒன்று இருக்கிறது அதுவும் அது இந்தியாவில் தான் இருக்கிறது என்று இவருக்கு தெரிந்து விட்டதே மிக்க மகிழ்ச்சி அது சரி தமிழ் நாடு தினம் என்றைக்கு வருகிறது ?

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  //அந்த மொழிகளில் உள்ள சினிமாவையும் பார்க்க வேண்டும்// ரெண்டு விஷயம்... இப்போ வர படங்களை நாங்களே பார்ப்பதில்லை... இதை பார்த்து இதுதான் தமிழ்நாடுன்னு அவங்க நெனச்சிக்க வேணாம்...அதனால தயவுசெஞ்சு இதை சொல்லாதீங்க...

 • மா. முருகன் - மதுரை,இந்தியா

  யார் இவருக்கு இப்படி எல்லாம் பேச ஆலோசனை வழங்குகிறார்கள் என்றே தெரியவில்லை. அரியானாவில் தமிநாடு தினம் கொண்டாடினால், இப்படி எத்தனை மாநிலங்களோடு தினங்களை கொண்டாடிக் கொண்டு இருப்பது? அதற்க்கு பதிலாக மற்றவர்களை மற்ற மாநிலங்களை மதிக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு அர்த்தம் உண்டு.

 • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

  சம்பந்தப்பட்ட மாணவர்கள் இதை ஆரம்பித்து வைத்தால் அதை பின்பற்றி மற்ற மாநில மாணவர்களும் இதேபோல செய்வர். மாநில ஒற்றுமை பரவ இது ஒரு நல்ல யோசனை

 • R dhas - Bangalore,இந்தியா

  இவர் நடிக்கிற நடிப்புக்கு ஆஸ்கார் விருது கூட இவருக்கு பத்தாது....

 • BABU - Trichy,இந்தியா

  டெல்லியில் தமிழ்நாட்டு விவசாயிகளை சந்திச்சு பேச வக்கு இல்லை. இவர் தமிழ்நாட்டு தினத்தையும், கேரளா தினத்தையும் வெவ்வேறு மாநிலங்களில் கொண்டாட சொல்கிறார். இவருக்கு மனசாட்சி என்பது துளி அளவும் கடவுள் கொடுக்கவில்லையா?

 • Prabaharan - nagercoil,இந்தியா

  முதலில் திருக்குறள் என்று சொல்லி திருவள்ளுவர் சிலையை ஒதுக்குப்புறத்தில் போட்டார்கள். இப்பொழுது தமிழ்நாடு தினம். இவர்கள் இல்லாமலே தமிழ்நாடு மிகவும் நன்றாக இருக்கிறது. இப்பொழுது தமிழ்நாட்டில் ஊழலை வளர்க்கிறார்கள். என்ன தேசபக்தி ? கதிரமங்கலம் , காவிரி மேலாண்மை வாரியம் எல்லாம் அப்படியே இருக்கிறது. அதை எலாம் விட்டுவிட்டு வாயால் வடை சுட்டால் போதாது

 • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

  நான் தமிழ் நாட்டை சேர்ந்தவன்தான். நன்கு படித்து வணிகவியல் துறையில் பட்டம் பெற்றவன். கருணாநிதி ஆட்சியில் பிழைக்க வழி இல்லாமல் ஆந்திரா வந்துவிட்டேன். எனக்கு தமிழ் ஆங்கிலம் தவிர வேறு மொழி தெரியாது. அப்போது இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி என்னைப்போன்ற பல மாணவர்கள் வாழ்க்கையை கெடுத்தவர் இந்த மனிதர். வழி தெரியாமல் வந்த எனக்கு நல்ல வேலையும் வழங்கி இந்திமொழியை கற்க வழி வகுத்த இந்த மாநில தலைவர்களுக்கு எனது நன்றி. எனது மனைவி கேரளாவைசேர்ந்தவர். எனது மகன்கள் இருவரும் மும்மொழி பாடதிட்டதில் பயின்று இன்று மிகப்பெரிய பொறியாளராக நல்ல வேலைக்கு செல்கிறார்கள். எனது குடும்பத்தினர் நான்குபேரும் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் ஆங்கிலம் என ஐந்து மொழி களும் சரளமாக பேசி எழுதுகிறோம். என்னுடன் படித்த என் நண்பன் நமது தமிழகத்தில் நல்ல வேலையின்றி தி.மு.க. கட்சியில் கூலி வேலை செய்து கொண்டு மதுபழக்கம் பழகி குடும்ப த்தினரையும் சீரழித்து வருகிறான். தி.மு.க நல்ல ஆட்சி தரவில்லை என்று தான் மக்கள் அ.தி.மு.க விற்கு ஆட்சி யை கொடுத்தார்கள் நீங்களும் அவர்கள் போல தவறான வழிக்கு செல்ல வேண்டாம். நமது நாட்டை நல்ல வழியில் கொண்டுசெல்லுங்கள். மீண்டும் மீண்டும் வெற்றி உங்களுக்கே.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  கண்ணா லட்டு திங்க ஆசையா? அதை இப்பிடி தேவையில்லாத இடங்களில் விற்றால் விற்பனை ஆகுமா?

 • Jayaraj - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  கனடா பிரதமர் தமிழ் பற்றி பேசினால், உடனே அவரை போற்றுவோம். ஆனால் நம் பிரதமர் நம்மை பற்றி உயர்வாக பேசினால் நாம் தூற்றுவோம், ஏனென்றால் நாம் தமிழர்கள்.

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  நல்லா பேசறாரு பேச்சு....தமிழர்களின் கலாச்சாரம் ஜல்லி கட்டு...அதை ஒழிக்க எப்படி எல்லாம் பாடு பட்டார்கள்..மொத்த தமிழ் நாடே திரண்டு தங்கள் கலாச்சாரத்தை காப்பாற்றி கொண்டது..நம் தமிழ் மொழியை ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்திடமிருந்து காப்பாற்ற இன்னும் போராடி கொண்டிருக்கிறோம்... பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை இல்லை என்று சொல்லி நம் பண்பாட்டு பண்டிகையை தடுத்தவர்கள் யார்..நம்முடைய விவசாய நிலங்களை காப்பாற்றவும் போராடுகிறோம்..நம் மாநிலமே நம் கலாச்சாரத்தையும், மொழியையும், பண்பாடையும் கொண்டாடாமல் தடுக்க பார்க்கிறார்கள்.. இதிலே மற்ற மாநிலங்கள் கொண்டாட வேண்டும் என்பது தமிழர்களின் காதில் பூ வைப்பது அல்லது தமிழர்களுக்கு ஐஸ் வைப்பது அன்றி வேறென்ன...

 • vnatarajan - chennai,இந்தியா

  இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையாகவும் ஒருவர் பாரம்பரியத்தை மற்றவர் புரிந்துகொள்ளவேண்டுமானால் இந்தியாவில் ஓடும் எல்லா நதிகளையும் ஒன்றொடுஒன்று இணைத்துவிட்டாலேபோதும் மக்கள் தானாகவே வேற்றுமையை மறந்துவிடுவார்கள். அப்படிசெய்துவிட்டால் பல அரசியல் வாதிகளுக்கு இங்கு போராட்ட வேலை இருக்காது. மக்களும் நிம்மதியாக வாழ்வார்கள். ஆகையால் மோடி அவர்களே நதிகள் இணைப்பை துரிதப்படுத்துங்கள்

 • Raji - chennai,இந்தியா

  இந்திய நதிகள் இணைப்பு திட்டத்தை மோடி அவர்கள் இன்னும் 5 ஆண்டுகளில் அதை செயல் படுத்தி விடுவார் .... ஆனால் அப்பொழுதும் மோடி எதிர்ப்பாளர்கள் நதிகளை மோடி தவறாக இணைத்து விட்டார் , தமிழகத்திற்கு 100 லிட்டர் தண்ணீர் குறைவாக வருகிறது , தமிழகத்தை மோடி வஞ்சித்து விட்டார் , மோடி ஒழிக, மோடி ஒழிக என்று தான் கூக்குரல் இடுவார்கள் , இவர்கள் என்றுமே திருந்த மாட்டார்கள் .

 • PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  தமிழனை ஏமாத்த வழி கண்டுபிடித்த்துவிட்டாரோ.....

 • PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  வாய் சொல்வீரர்....உங்களை தமிழகம் நம்பாது....

 • VOICE - CHENNAI,இந்தியா

  மோடி தமிழக மக்களின் திறமையை சிங்கப்பூர் எப்படி பயன்படுத்தியதோ அது போல இந்தியா வளர்ச்சிக்கு பயன் படுத்தினால் இந்தியா முன்னேற்றம் எங்கோ போய்விடும். அரசியல்வாதிகள் ஹிந்தி தடுத்தனர் என்பதை விட தமிழக மக்களுக்கும் ஆங்கிலம் மேல் இருந்த ஆர்வம் ஹிந்தி மீது இல்லை. இருந்திருந்தால் என்னதான் அரசியல்வாதிகள் தடுத்து இருந்தாலும் மக்கள் படித்து இருப்பார்கள். அது போல தற்போழுது நடைபெறும் நீட் போன்ற நுழைவு தேர்ச்சி 2 வருடம் விலக்கு கொடுத்து விட்டு அந்த இரண்டுவருடத்தில் 11 12 சிலபஸ் மாற்றிவிட்டு நீட் அனுமதிருத்து இருக்கலாம். தமிழ் நாட்டில் தற்பொழுது 10 ,11 , 12 மற்றும் நீட் போன்ற அணைத்து வருடமும் அரசு தேர்வுகளை எதிர் கொள்ளும் நிலைமை உருவாகிவிட்டது. இது பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் பெரும் மன உளைச்சலை கொடுக்கும். அது போல கோட்டா சிஸ்டம் ஜாதி அடிப்படையில் இல்லாமல் வருமானத்தின் அடிபடையில் இருத்தல் வேண்டும் .

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  தமிழக விவசாயி பட்டினியாய் போராடினான், பாடையில் படுத்து போராடினான் , பாதி நிர்வாணமாய் போராடினான் , அதையும் களைந்து பிறந்த உடலோடு போராடினான், மண்டை எலும்பு ஓடு கூட்டை மாட்டி கொண்டு கதறினான் , எலியை கடித்து வேதனை தெரிவித்தான் அப்போதெல்லாம் மாளிகையை விட்டு வெளியில் வந்து என்ன வேண்டும் என்ன ஆயிற்று உங்களுக்கு என ஒரு வார்த்தை கேட்காத வள்ளல் பெருமான், உச்ச நீதிமன்றம் காவிரிமேலாண்மை வாரியத்தை கூட்ட வலியுறுத்தியும் செவி சாய்க்காத செம்மல் ,நீட் வேண்டாம் மாநில மொழி பாடத்திட்டத்தில் படித்த மாணவ மணிகளை பாதிக்கும் என கதறியும் காதில் போட்டுக்கொள்ளாத கனவான், தமிழக தினம் கொண்டாடுகிறாராம், எரிகின்ற நெருப்பில் எண்னெய் ஊற்றி ஏளனம் செய்கிறார்.

 • m.viswanathan - chennai,இந்தியா

  கெட்டிக்காரனின் பொய்யும், புரட்டும் டக்குமுக்கு டிக்கு தாளம். வரும் 2019 ஆண்டிலே புரிந்து போகும் டக்கு மூக்கு டிக்கு தாளம், ஆஹா டக்கு மூக்கு, டிக்குமுக்கு, மெல்ல மெல்ல வந்தாளாம் மிளகு னாளாம், சுக்குன்னாளாம்

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  யப்பா பேரு வச்சியே சோறு வச்சியா? என்ற காமெடி தான் நினைவில் வருகிறது.....

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  தமிழக தினம் என்று அடுத்த மாநிலங்களில் கொண்டாட சொல்லும் தங்க தலைவரே முதலில் தமிழக மக்களின் எத்தனை கோரிக்கைகளை நிறைவேற்றினீர்கள் என்று சொல்லுங்களேன் , இந்திய மாநிலங்களிலேயே உங்க ஆட்சியில் பாதிப்புக்கு உள்ளாகி அதிக நாட்கள் போராட்டத்திலேயே காலம் தள்ளிக்கொண்டிருப்பது தமிழகம் மட்டும் தான் , எதை எடுத்தாலும் தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கையாகத்தான் எடுக்கிறீர்கள்.

 • SKM - Chennai,இந்தியா

  உங்களுக்கு தமிழ்நாடு வேண்டுமென்றால் முதலில் ஆறுகளை இணையுங்கள் . மக்கள் உங்களுக்கு வரிசையில் நின்று வோட்டை போடுவார்கள். இல்லையென்றால் நாங்கள் இந்த கூத்தடிகளுக்கேய வோட்டை போடுவோம்.. இப்படிக்கு ஒரு ஏமாந்த தமிழன்

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  தமிழகத்தில் கிடைத்த அடிமைகள் போல வேறு மாநிலத்தில் கிடைக்க மாட்டார்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறார், தமிழகத்திற்க்கான அனைத்து திட்டங்களிலும் மண்ணை அள்ளி போட்டு தமிழகத்தை புறக்கணித்த பாவத்தை எப்படி போக்குவது என தெறியாமல் குழம்புகிறார் போல, மாமோய் இத விட அதிக ஐஸ் கட்டி எல்லாம் நாங்க பார்த்தாச்சு உங்க பசப்பு பாசம் எதுவும் வேலைக்கு ஆகாது நாங்க உங்க கட்சியை ஒரு நூற்றாண்டாய் ஒதுக்கி வச்சது வச்சதுதான்.

 • Arachi - Chennai,இந்தியா

  இவர் பேச்சை நம்ப முடியலே. தமிழக மாணவர்களிடம் உரையாற்றியது நல்ல விஷயம்தான் ஆனால் எங்க விவசாயிங்க உங்க வீட்டு முற்றத்தில் தானே இருக்காங்க அதுவும் கோவணத்தோடு 55 நாளா போராடிட்டு இருக்காங்க அவங்களை பார்த்து இரண்டு வார்த்தை பேசினா உங்க கவுரவம் குறைஞ்சிடுமா என்ன? எதுக்கு இப்படி யோசனை பண்றீங்க என்பது எங்களுக்கு புரியுது.

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  நல்ல யோசனை. அப்படியே தமிழ்நாடு மழை மறைவு பிரதேசம் என்பதால், மற்ற மாநிலங்களை விட ,தமிழக நதி நீர் திட்டத்துக்கு முன்னுரிமை கொடுங்க. தமிழ் நாடு விவசாய மாநிலம் என்ற தகுதியில் இருந்து அழிந்து கொண்டிருக்கிறது .

 • Appu - Madurai,இந்தியா

  மஸ்தான் சாப் எவ்வளவு தான் சத்தமா கூவுனாலும் தென் இந்தியாவுல தாமரை மலராது.. வாய்ப்பே இல்ல..உங்க முயற்சிக்கு பாராட்டு....

 • Muthu Kumarasamy - Mettupalayam, Coimbatore Dist.,இந்தியா

  முதலில் உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடுங்கள்.

 • Pandianpillai Pandi - chennai,இந்தியா

  அரசியலற்ற பேச்சு மாணவருக்காக பேசியிருக்கிறார். தமிழர்கள் அனைத்து மாநில மக்களின் கலாச்சாரத்தை மதிப்பவர்கள். சமூக நீதி தழைத்தோங்க கலைஞர் அவர்கள் பல மாநிலத்து பண்டிகைகளை அரசு விடுமுறை தினமாக மாற்றினார். வட மாநிலங்களும் தமிழர்களின் சிறப்பு தினமான தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகைகளுக்கு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும். கோதுமை, அரிசி போன்றவற்றை உண்பதால் பசி அடங்கும் அவ்வளவே... கையில் உண்பதால் பல நன்மைகள் உண்டு... ஒற்றுமை தழைத்தோங்க மாநிலங்களின் சுதந்திரம் தழைத்தோங்க வேண்டும்.. மாநிலங்களின் மொழியில் பாராளுமன்றத்தில் பேசுவதற்கு அங்கீகாரம் இருந்தும் ஹிந்தி மற்றும் ஆங்கிலங்கள் தான் இடம் பெறுகின்றன. இந்த நிலை மாற வேண்டும்.. ஒவ்வொரு உறுப்பினரும் அந்த மாநிலத்தின் தொகுதிக்காக அவர்கள் வைக்கின்ற வாதங்களை மக்கள் அறிய வேண்டும்... உலகமெல்லாம் பேசும் தமிழ் மொழியை ஆட்சிமொழியாக்கி வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நிலைநாட்ட வேண்டும். மக்களை பார்த்து இவ்வாறு நடந்து கொள்ளுங்கள் என்று கூறுவதை விட நான் இவ்வாறெல்லாம் செய்கிறேன் என்பதை காட்ட வேண்டும்.பிறகு மக்கள் தானாக மாறிவிடுவர்..

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  வரலாறு ரொம்ப முக்கியம் பிரதமரே. தொட்டிலாட்டும் கலையில் டாக்டரேட் வாங்கிய உங்களை விமர்சிக்கும் தகுதி எனக்கு கிடையாது. அண்மையில் ஏ ஆர் ரகுமான் எனும் தமிழன் நடத்திய நிகழ்ச்சியில் தமிழில் சில பாடல்களை பாடினான் என்பதற்காக நிகழ்ச்சியை புறக்கணித்ததோடு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதோடு வழக்கும் தொடர்ந்த வடமொழி வெறியர் கூட்டத்தை எந்த தேச பக்தர்களும் கண்டிக்கவில்லை. வந்தேமாதரம் பாடலை உலகளவில் கொண்டு சென்ற ஒரு தமிழனுக்கே இந்தக்கதி. வேற்றுமையில் ஒற்றுமை என்பது திணிப்பினால் வரக்கூடாது. ஒருவர் மற்றவருக்கு கொடுக்கும் மரியாதையிலும் அவரவருக்கு உள்ள உரிமையில் தலையிடாமையிலும் இருக்க வேண்டும் .

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்று சொல்லி தமிழனை போற்றி துதி பாடிய பெரியார், திக/முக மட்டுமே தமிழையும், தமிழரையும் வாழ வைக்க பிறந்தவர்கள். மோடியால் தமிழர்களின் சுயமரியாதை கெட்டுவிட்டது..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தேர்தல் வருகிறது இல்லையா... ஏதோ சொல்லுகிறார்... ஆனால் மறைமுகமாக இந்தியை தான் திணிக்கிறார்...

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  Next scene ...next shot..of a flop movie ...

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  பிரதமர் சொல்வதைப்போல பலர் முன்பு செய்ய முட்பட்டார்கள், அப்போ ஒருவர் தான்தான் தமிழின காவலன், நாங்களே தமிழை காப்பாற்றுவோம் என்று மற்றைய மாநிலங்களை அடக்கிவைத்துவிட்டு, தமிழ் மக்களை காப்பாற்றுவேன் என்று மெரினா பீச்சில் 2 மணிநேரம் உணாவிரதம் இருந்து, லட்சக்கணக்கான தமிழ் மக்களை இலங்கையில் கொல்வதுக்கு துணை போனார், நம்ம தமிழின காவலன்.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  பிரதமர் சொன்னதில் தவறேதும் இல்லையே, ஒரு மாநிலத்தின் கலாச்சாரத்தை வேறுமாநிலத்தில் கொண்டாடுவது தவறில்லை. அப்போதான் மாநிலங்களுக்கிடையே பரஸ்பர உறவு உண்டாகும். ஆஸ்திரேலியாவிலும் பல்லினகலாச்சர விழா நடைபெறும், அப்போ தங்கள் நாட்டின் கலாச்சார ஊர்திகளில் கொண்டுசெல்வார்கள். மெல்போர்னில் இந்த விழா ஒருவார காலத்துக்கு நடக்கும், 'மும்பா' விழா என்று சொல்வார்கள். முக்கியமாக இந்திய ஆசிய நாட்டுல இந்த நாட்டு மக்களை அதிகம் கவரும், இலங்கையில் கூட கடந்த சுதந்திரதின விழாவில் முதலில் தமிழில்தான் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதுக்கு காவியுடை புத்தபிக்குகள் சிலர் தான் எதிர்த்தார்கள். மற்றவர்கள் ஒரே நாடு என்ற கோட்பாட்டில் வரவேற்றார்கள். இன்றுஅங்கு எல்லா பாதுக்காப்பு பிரிவும் ஊழியரும் தமிழிலும் தேர்ச்சி அடைந்து இருக்கணும் என்று அவசியமாகியிருக்கு, இது காலம் கடந்த ஞானம் என்றாலும்,பல உயிர்களை முன்பு காவு கொண்டிருந்தாலும், இனிவரும் காலத்தில் பல உயிர்கள் கொல்லப்படுவதை தவிர்க்கப்படும். சில விடயங்கள் ஆரம்பிக்கும்போது கசக்கத்தான் செய்யும்.

 • ManoharSn -

  தமிழனை ஏமாற்றியது போதும், விழித்துக் கொண்டோம், இனியும் உங்களை தமிழர்கள் நம்ப தயாராயில்லை.

 • Mahesh -

  மோடி, முதலில் மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்கிடுங்கள். தேச ஒற்றுமை தமிழர்களுக்கு இரண்டாம் நிலை. கூடிய விரைவில் தமிழகமும், காஷ்மீர் போல தனி நாடு கேட்கும்

 • samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா

  தேர்தலுக்கு எடுத்து வைக்கும் முதல் அடி போலும் பாராட்டுக்கள் தமிழனை எனக்கும் ஏமாற்ற தெரியும் மொழியின் பெயரால் என இதர கட்சிகளுக்கு சொல்லாமல் சொல்லுவதாலே அந்த அளவிற்கு ஏமாளிகள் தமிழர்கள் என எல்லோரையும் போல கணித்துவிடடார்

 • Raman - kottambatti,இந்தியா

  ஆனா ஒண்ணு... 2019 தேர்தல் ரொம்ப காமெடியா இருக்கும்.... நேரம் நெருங்க நெருங்க இன்னும் காமடி எல்லாம் நம்ம மஸ்தான் பண்ணுவார்....

 • vns - Delhi,இந்தியா

  பலராமன் கட்டாக்.. இப்போதைய தமிழ் இளைஞர்கள் அவர்களின் குறைகளை அறிந்து கொள்வதும் இல்லை அறிந்து கொள்ள முற்படுவதும் இல்லை. எல்லோரும் அரசியல்வாதிகள் ஆகிவிட்டனர் மற்றவர்களை தங்களின் தோல்விகளுக்கு குற்றம் கூறுவதே இவர்களுக்கு மன நிம்மதி கொடுக்கும். ஆங்கிலம் தமிழை 60 சதவிகிதம் அழித்து விட்டது ஆனால் இவர்கள் இந்தித் திணிப்பு என்று புலம்புகின்றனர். ஒரு தமிழனுக்காவது தமிழில் வர்ணங்களின் பெயரை சொல்லத் தெரியாது. காலை மாலை இரவு நேரங்கள் ஆங்கிலத்தில் தான் அடையாளம் காட்டப்படுகின்றன.

 • மணிமேகலை - paris ,பிரான்ஸ்

  ஐயா உங்களோட சொல்லுக்கும் செயலுக்கும் 100 வித்தியாசங்கள் உள்ளதே இதை நங்கள் யாரிடம் சென்று சந்தேகத்தை தீர்த்துக்கொள்வது ,ஒன்னு பண்ணுங்க எங்க தமிழ் மீடியாவிடம் ஒரு நாள் ஒதுக்கி பேட்டி கொடுங்களேன் .

 • vns - Delhi,இந்தியா

  சூரிய புத்திரன் போன்றவர்கள் நிறைய கருத்துக்கள் எழுதவேண்டும்.. தினமலரில் மத வெறியர்கள் மட்டுமே கருத்து எழுதுகின்றனர். இந்துக்கள் இவர்களது ஆதிக்கத்தை பயந்து இந்த மத வெறியர்களுக்கு எதிராக கருத்துக்கள் கூட எழுதுவது இல்லை. தினமலர் தமிழர் நீதி டோல், தங்கை raja போன்ற முஸ்லீம் வெறியர்களின் கருத்துக்களை வெளியிடக்கூடாது.

 • krishnan - Chennai,இந்தியா

  நீ கம்முனு இருந்தாலே போதும்.

 • rama - johor,மலேஷியா

  தமிழ்நாட்டில் இவ்வளவு பிரச்சினைக்கு மோடிதான் காரனம், மோடி காலில் விழுந்து அதேவேளையில் அம்மா ஆட்சி என்று கூறி ஏமாற்றும் அரசியல்வாதிகள்.

 • Raja Seb - Chennai,இந்தியா

  Ellaaththayum uruvi kondu irukkireergale Gopal....

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  தமிழை நாட்டின் ஆட்சிமொழியாக்கி விடுங்கள் அது எங்களுக்கு போதும் சோறு கூட வேண்டாம்

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  யாா் நல்ல விசயம் சொன்னாலும் செய்தாலும் நாங்கள் எதிா்ப்போம், கிண்டலடிப்போம், தமிழ்... தமிழ் வாய்கிழிய பேசுவோம் ஆனால் பிள்ளைகளை ஆங்கில கல்வி படிக்க அனுப்புவோம், அந்நிய மொழி கலப்போடே தமிழை கலந்து பேசி அது தான் சுத்த தமிழ் என்போம், தமிழில் பேசுபவனை தரக்குறைவாய் பாா்ப்பேம், திராவிட திருடா்களின் மாய்மாலத்தில் மயங்கி காலமெல்லாம் அவா் கால் நக்குவோம், ஈரோட்டு திருடன், அண்ணாதுரை போன்ற வஞ்சகா்கள் ஏற்றிய வஞ்சக தீ தனி தமிழ்நாடு அதில் குளிா்காய நினைப்போம், தேசியம் என்று சொன்னால் தேள் கொட்டியது போலிருக்கும் எங்களுக்கு... காரணம் அரை நூற்றாண்டாய் கருத்து குருடா் தீராவிடங்கள் எங்களை மூளை செய்து வைத்தனா்..... இனி ஒரு விதி செய்வோம், பாரஜ நீரோட்டத்தில் இரண்டற கலந்து வலிமை மிக்க பாரதத்தை உருவாக்குவோம்.... தேசியவாதிகளின் வழி நடந்து தேசியம் காப்போம்.... வாழ்க பாரதம்.... வளா்க தமிழகம்..... ஜெய் ஹிந்த்

 • ச.சண்முகம்திருவாரூர் -

  மோடி எது சொன்னாலும் எது செஞ்சாலும் அதனை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டும் என எண்ணுகிற இந்த கேடுகெட்ட செம்மறி க்கூட்டம் இருக்கும்வரை எதுவும் சாத்தியமில்லை

 • E.PATHMANABAN - vikramasingapuram,இந்தியா

  செய்ய வேண்டிய வேலைய விட்டுப்புட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ன்னு புத்தி எப்படியெல்லாம் வேலை பாக்குது, மோடிஜி இன்னும் 20 மாதம் தான் உள்ளது அப்புறம் குஜராத் ல கூட இடம் கிடைப்பது கஷ்டம் கொஞ்சம் அடக்கி வாசிப்பதே நல்லது

 • Thirumalai kumar - TVNR,இந்தியா

  Good

 • கார்த்தி -

  இதற்கு மேக் இன் தமிழ்நாடு என்று பெயர் வைப்பீரோ

 • Raman - kottambatti,இந்தியா

  தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் வரை என்ன கேவலமான வேலையும் செய்யும் இந்த ஜென்மம்..

 • vns - Delhi,இந்தியா

  மோடி இந்தியாவின் உண்மையான பிரதமர். உழைப்பு மற்றும் தன்னம்பிக்கை மட்டுமே மூலதனமாக வைத்து இந்தியாவின் மிகப்பெரிய பதவியை அடைந்த தலைவர்களில் ஒருவர். லால் பகதூர் சாஸ்திரி, காமராஜ் போன்று மக்களுக்காக மட்டுமே உழைக்கும் தலைவர். மோடி பலகாலம் நீடு வாழவேண்டும்.

 • rama - johor,மலேஷியா

  நல்ல நடிப்பு தமிழ் நாட்டை சீர்கெட்டு வடமாநிலங்களில் தமிழ் நாடுதினம் யார்கேட்டது நேர்மை இருந்தால் தமிழ்மொழியை கொன்டுவாருங்கள், மீனவரை காப்பாற்றுங்கள், தண்ணீர் பிரச்சனை தீர்த்து வையுங்கள்

 • Mal - Madurai,இந்தியா

  Unity in diversity....- first step taken after 70 years of indepence.... Great idea sir.... You are a great PM who is to new ideas and suggest new ideas....

 • Raju - jersi,யூ.எஸ்.ஏ

  வாயால வடை சுடாதீங்க மோடிஜி . காவிரியில் தண்ணிய காட்டுங்க ப்ளீஸ்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  தான் மட்டும் இந்தியரல்லாத தனி இனம் என்ற கொள்கையை உடைய கட்சிகளுக்கு தடை கொண்டுவரவேண்டும்... ஊழல், ஏமாற்றுவேலை, பொய் சொல்லுதல் போன்ற கலைகளை நன்கு கற்றவர்கள் - ஆகையால் இவர்களை மடக்குவது எளிது... தமிழுக்கு தான் ஒருவன்தான் ஏகபோக உரிமைதாரர் என்று மார் தட்டும் அடிமைகளை அடக்கிவைக்க வேண்டும்...

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  கிரேட் வரவேற்போம் .

 • Siva - Johor,மலேஷியா

  அப்ப தமிழ்நாடு, கேரள மாநிலங்களை தவிர அனைத்து மாநிலத்தவரும் கரண்டிகளால் சாப்பிடுகிறீர்களா? இல்ல அவர்கள் சோறே சாப்பிடுவதில்லையா?

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  உங்கள் வேற்றுமையில் ஒற்றுமை நீங்கள் விவசாயிகள் பிரச்சினை, நீட் பிரச்சினை, நியூட்ரினோ திட்டம்,காவேரி மேலாண்மை நிறுவியத்தில் இருந்து அறிந்து கொண்டோம்.

 • SaiBaba - Chennai,இந்தியா

  நல்லது தான் சார். எங்கள் மேனேஜர் வடமாநிலத்தவர்கள். எங்களுக்கு இந்தி தெரியாத காரணத்தால் எப்படி கொடுமை படுத்துகிறார்கள் தெரியுமா. வேலை பார்ப்பதற்கு மட்டும் தான் நாங்கள், சம்பளம், பாதி உயர்வு எல்லாம் அவர்கள் ஆட்களுக்கு தான். இதெல்லாம் நியாயமா சார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement