14. "காகித சிற்பி" ஜெ.ரமேஷ், சித்தலபாக்கம், சென்னை.
தமிழகத்தை சேர்ந்த குடிசைவாசி நான் தற்போது கடந்த 25 வருடங்களாக காகித சிற்ப கலையில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் பயிற்சியும், கண்காட்சியும் நடத்தி வருகிறேன். இக்கலையை (அகீகூ Oஊ ஓஐகீஐஎஅMஐ) (ஐNஈO ஒஅகஅN) தமிழக அரசு அங்கீகாரம் செய்து நானும் போட்டியில் பங்கேற்று 2012ஆம் ஆண்டு பூம்புகார் விருது பெற்று உள்ளேன். நான் பெற்ற விருது ஒரு அபூர்வ ஓவியத்துக்காக கிடைத்த விருது, இந்த ஓவியத்துக்கு மத்திய அரசிடம் காப்புரிமை பெற்று உள்ளேன்.
குறிப்பு: மேலே கூறிய ஓவியத்தின் சிறப்பு: ணீணிண்t ஞிச்ணூஞீ அளவுள்ள காகிதத்தில் அ,ஆ,இ,ஈ ஆங்கில எழுத்து அடங்கி உள்ளது. இந்த ஓவியம் ஜப்பான் நாட்டின் கிரிகாமி (ஓஐகீஐஎஅMஐ) முறையில் வடிவமைக்க பட்டுள்ளது, இது அரிய வகை ஓவியம்.
தினமலர் விளக்கம்: காகித சிற்பக்கலையில் தாங்கள் பெற்றிருக்கும் சிறப்பான அங்கீகாரம் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. குடிசைவாசியாக இருந்து தாங்கள் காகித சிற்பக் கலையில் எட்டியிருக்கும் உயரம் மிகவும் பாராட்டப்பட வேணடும். தவிர, தங்களுடைய கலை ஈடுபாடு உணர்த்துவது, கலைத்திறன் வளர்ச்சிக்கு முக்கியம் தீவிர ஈடுபாடும், தொடர் ஆர்வமும்தான். பணத்திற்கும் அதற்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லை என்ற செய்தியைத்தான்.
இக்கலை அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வேட்கை நியாயமானது. இதைப் பாடத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளீர்கள். நாங்கள் தற்பொழுது ஈடுபட்டிருப்பது பள்ளிகளில் தன்னாட்சியென்பதால், தங்களுடைய கோரிக்கையை தாங்கள் அரசிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று நாங்கள் தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!