Advertisement

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி -7

கல்வித் தரம் உயர வேண்டுமானால் கல்விச் சுதந்திரம் தேவை. இந்த சுதந் திரம் ஆசிரியர் களுக் கும் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கும் வழங் கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் தான் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த, தகுதியான பள்ளிகளுக்கு தன்னாட்சி தருவது அவசியமாகிறது.

இதை வலியுறுத்தும் வகையில் உருவாக்கி உள்ள கருத்துருவை, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், பாடத்திட்ட கலைத் திட்டக் குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன் ஆகியோரி டம் தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதி வழங்கியிருந்தார். இந்த கருத்துரு குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத் துகளை, தினமலர் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தினமலர் வாசகர்கள் சில கருத்துக்களைத் தெரி வித்துள்ளனர். அந்த கருத்துக்களையும் அவை தொடர்பான தினமலர் விளக்கத்தையும் இங்கே அளித்திருக்கிறோம்.


கல்வித் தரம் உயர வேண்டுமானால் கல்விச் சுதந்திரம் தேவை. இந்த சுதந் திரம் ஆசிரியர் களுக் கும் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கும் வழங் கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் தான் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த, தகுதியான பள்ளிகளுக்கு தன்னாட்சி தருவது அவசியமாகிறது. இதை வலியுறுத்தும் வகையில் உருவாக்கி உள்ள கருத்துருவை, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், பாடத்திட்ட கலைத் திட்டக் குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன் ஆகியோரி டம் தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதி வழங்கியிருந்தார். இந்த கருத்துரு குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத் துகளை, தினமலர் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தினமலர் வாசகர்கள் சில கருத்துக்களைத் தெரி வித்துள்ளனர். அந்த கருத்துக்களையும் அவை தொடர்பான தினமலர் விளக்கத்தையும் இங்கே அளித்திருக்கிறோம்.

11. K.ANAND, MCA MFM MPhil, PGITM, (Phd)மாநில பாடத்திட்டம், 12 ஆண்டுகள் பழமையானதாக உள்ளது. பொதுத்தேர்வு, நுழைவுத்தேர்வுகளில் கூட, பங்கேற்க முடியாத அளவுக்கு, மாணவர்கள் திணறி வருகின்றனர். என்ன பாட திட்டடத்தை மாற்றினாலும் தமிழத்தில் வேஸ்ட்- ஏன் எனில் பலபள்ளிகளில் இருக்கும் அரசு ஆசிரியர் வேஸ்ட்.
*ஓட்டை குடத்தை வைத்து தண்ணீர் பிடிப்பது போன்று தமிழக அரசு செய்வது*
அரசு பள்ளிகளிக்காக மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளிக்காக அரசு பல லட்ச கோடி செலவு செய்கிறது அனால் தனியார் பள்ளிகள் சில ஆயிரம் மட்டும் செலவு செய்து நல்ல ரிசல்ட் தருகின்றனர் தனியார் பள்ளிகள் பல லட்ச மாணவர்கள் பேரெண்ட்ஸ் படிப்பு இல்லாதவர்கள் மற்றும் கூலி வேலை செய்பவர்கள் தான் அனால் தனியார் பள்ளிகள் நல்ல ரிசல்ட் கொடுக்கின்றனர் ஏன் அரசு பள்ளிகள் நல்ல ரிசல்ட் தரவில்லை ஏன் எனில்

1. கூஉகூ, குஉகூ, Nஉகூஎக்ஸாம் வருடம்தோறும் அணைத்து ஆசிரியர்க்கு வைக்க வேண்டும். ஆண்டுகளுக்கும் ஒருமுறை தேர்வு எழுதி80 % மார்க் எடுக்க வேண்டும் அரசு பணிகளை தொடர உங்களுக்கு சம்மதமா?......ஓடிபோங்கள், காற்று வரட்டும். வளர்ந்த நாடுகளில் இந்த முறை விள்ளது

2. போலீஸ் துறையில் உள்ளது போல அரசு ஊழியர்களும் சங்கங்கள்ஏற்படுத்த கூடாது என்று சட்டம் கொண்டுவந்து அனைத்து அரசு ஊழியர்களின்சங்கங்களை கலைக்க வேண்டும்

3. நன்று படித்த ஒருவர்தான் ஆசிரியராக வேலை செய்ய தகுதி: குறைந்தபட்சம்..10,11,12 + DEGREE, Bed 80 % மார்க் ஆசிரியர் எடுத்திருக்க வேண்டும்.

4. அரசு ஆசிரியர்களின் குழந்தைகள் எல்லாம் கட்டாயம் அரசுபள்ளிகளின்தான் படிக்கணும் என்பதை முதலில் சட்டம் ஆக்குங்கள்...
5. இதற்கு அரசு ஆசிரியர் மாணவர்க்குகாக தனியார் பள்ளி போல் காலை எட்டு மணிமுதல் மாலை ஆறு மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் எத்தனை அரசு சம்பளம் ஆசிரியர் மூன்று மணிக்கு எல்லாம் பிரைவேட் டியூஷன் எடுக்கின்றனர்.
தினமலர் விளக்கம்: அரசு பள்ளிகள் இயங்கும் முறை மற்றும் அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் பணியாற்றும் முறையில் உள்ள குறைகளைத் தாங்கள் சுட்டிக் காட்டியுள்ளீர்கள்.
எந்த பாடத் திட்டமானாலும், அதை மாணவர்களிடம் சிறந்த வழியில் கொண்டு செல்பவர்கள் ஆசிரியர்கள்; ஆகையால் மாணவர்களின் கல்வித் தரம் ஆசிரியர்களின் கடமையுணர்வைப் பொருத்திருக்கிறது என்று தாங்கள் எடுத்துக் கூறியிருக்கும் கருத்தில் நமக்கு மனப்பூர்வமான முழு உடன்பாடு. இந்த கருத்தைத்தான் அரசு நடத்திய கருத்து கேட்கும் கூட்டங்களில் வலியுறுத்திப் பேசியிருக்கின்றோம்,
ஆசிரியர்களின் தரம் உயர்ந்த பிறகு, மாணவர்களின் நலனில் அக்கறை கொள்வதுதான் சரியாக இருக்கும் என்று தாங்கள் கருதுவதாகத் தெரிகிறது. இந்த கருத்தைத்தான் "ஓட்டைக் குடத்தை வைத்து தண்ணீர் பிடிப்பது போன்று தமிழக அரசு செய்வது" என்ற சொற்றொடரில் விளக்கியுள்ளீர்கள். "ஒன்றன் பின் ஒன்று" என்று முடிவெடுக்கையில் அது முன்னிறுத்தும் பிரச்னைகளைச் சுருக்கமாக காண்போம். "பின்" என்றால், எத்தனை வருடங்கள்? அவ்வருடங்களின் முடிவில், நாம் திட்டமிட்ட குறிக்கோளை அடையவில்லை என்றால், இன்னும் சில வருடங்களுக்குக் குறிக்கோளைத் தள்ளி வைப்பதா? அது வரைக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லையா? ஏற்கனவே 13 ஆண்டுகள் வீணாகியுள்ளன.

"இதற்குப் பின் அது" என்ற பாதைக்குப் பதிலாக இரண்டையும் சிறப்புச் செய்வோம் என்பது சரியாக இருக்குமில்லையா? இதில் மாணவர் நலனும் காக்கப்படுகிறது. இதெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டால், புதுப் பாடத்திட்டத்துடன், தரத்தை உறுதிப்படுத்தும் தன்னாட்சியையும் மேற்கொண்டால், ஓட்டைக் குடத்தில் முடிந்தவரை ஓட்டைகளை அடைத்து தண்ணீர் பிடிப்பதுதானே விவேகம், யதார்த்தமான முடிவாக இருக்கும். அதனால்தான் தினமலர், பள்ளிகளில் தன்னாட்சியை வலியுறுத்துகிறது.
ஆசிரியர்களின் தர உயர்வை உறுதிப்படுத்தத் தாங்கள் கூறிய யோசனைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, தாங்கள் சொல்லியிருப்பது, "சமூகத்திற்கு சேவை செய்வது, இறைவனுக்கு சேவை" என்று. வருங்கால சமூகத்தின் ஆணிவேர்கள்தான் மாணவர்கள். அவர்களுடைய நலன் காக்கப்படுவது இறைவனுக்கு நாம் செய்யும் சேவைதானே.

பலர் கடமையுணர்வின்றி, ஆசிரியர்களும், அதிகாரிகளும், இருந்தாலும், குறைந்தது சிலராவது கடமையைப் போற்றுகின்றவர்கள் இருப்பார்கள்- இருக்கிறார்கள். புகழ்ச்சிக்காக அல்ல, உங்கள் கடிதம் நமக்கு உணர்த்துவது நீங்கள் கடமை தவறமாட்டீர்கள் என்பது. உங்களைப்போல் சிலரை நம்பி, இந்த "இறைவன் சேவையைத்" தொடங்குவோம். சிலர் பலராவது உறுதி என்று நம்பி நல்ல பாதையில் அடி எடுத்து வைப்போம்.

12. senthil.jஅய்யா தினமலரில் தங்கள் கருத்தை பார்த்தேன். அரசு கட்டுப்பாட்டில் உள்ள போக்குவரத்து துறை எப்படி உள்ளது என கேட்டு அதனால் கல்விதுறையில் தன்னாட்சி கொடுப்பது சரி என கூறியுள்ளீர்கள். அப்படி என்றால் காவல் துறையும் அப்படிதானே! நீதி துறையும் அப்படி தானே ! அய்யா அரசு கட்டுப்பாட்டில் உள்ள துறைகள் சரியில்லை என்றால் அரசே சரியில்லை என்று தானே பொருள். அரசு மருத்துவர்கள் சரியில்லை என்றால் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் தனியார் துறை சார்ந்த நபர்களிடம் கொடுக்க முடியுமா. எனவே எனது கருத்து சாமானியர்களுக்காகவோ! , வசதியானவர் களுக்காகவோ! அரசு வேலை செய்யவேண்டும்.

தினமலர் விளக்கம்: "அரசு வேலை செய்ய வேண்டும்" எல்லாருக்குமாக, சாமானியர்களுக்கும், வசதியானவர் களுக்கும் அரசு வேலை செய்ய வேண்டும் என்று தாங்கள் கூறியிருக்கிறீர்கள். இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அரசு எல்லாருக்கும் பொதுவானது. இப்படி சொல்வதனால், தாங்கள் பள்ளிகளில் தன்னாட்சி என்ற ஒன்றை ஏற்றுக் கொளளாமல், கல்வி அரசிற்கே உரிய ஒன்று என்று சுட்டிக் காட்டுவது போலத் தெரிகிறது.
எது எப்படி இருக்க வேண்டும் (ஙிடச்t ண்டணிதடூஞீ ஞஞு) என்பது ஒன்று; எது எப்படி இருக்கிறது (ஙிடச்t டிண்) என்பது மற்றொன்று. சில நாட்களுக்கு முன், மத்திய அரசிற்கு திட்டங்களை உருவாக்கு வதைப் பற்றி ஆலோசனை வழங்கும் "நிதி அயோக்" (ணடிtடி அதூணிஞ்) என்ற துறை ஒரு யோசனையை மத்திய அரசிற்கு வழங்கியுள்ளது. சரியாகச் செயல்படாத அரசு கல்வி நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பது இன்றைய சூழலில் சரியாக இருக்கும் என்று அது கூறுகிறது. அரசு நிறுவனங்களில் தரமில்லை; அங்கு பயின்று வெளியேறும் மாணவர்களின் திறன் மிகவும் குறைவாக உள்ளது. ஏராளமான பொருட்செலவில் நடைபெறும் அரசு நிறுவனங்கள் சரியாக இயங்கவில்லை. இது இன்றைய நிலை. அது ஒருபுமிருக்கட்டும். நாங்கள் கூறுவது தன்னாட்சி என்பது தனியார் மயமாக்குதல் இல்லையென்று வலியுறுத்துவதும் ஒன்று. கல்லூரி களில் தன்னாட்சிக் கொள்கையில், அரசின் தொடர் கண்காணிப்பு உள்ளது. எந்த வகையில் பார்த்தாலும், "தன்னாட்சி" என்ற கொள்கை "தரத்தை" நோக்கியது; தரத்தை உறுதிப்படுத்துவது. தரமான கல்வி தரமான மாணவர்களை உருவாக்கும். தரமான மாணவர்கள் இறுதியில் தரமான இந்தியாவைப் படைத்து உலகில் இந்தியாவின் பெருமையை நிலை நிறுத்துவார்கள். இது உண்மை.

தொடரும்

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement