Advertisement

'செம பிகர்டா' - ஜீவிதா துரு...துரு...!

நாடகம், குறும்படங்கள், டிவி., தொகுப்பாளினி... என துருதுரு பெண்ணாக சுற்றித் திரிந்த சென்னை ஜீவிதாவுக்கு, தனது 'ஹீரோயின்' கனவு 'ஆறடி' திரைப்படம் மூலம் நிறைவேறியுள்ளது.முதல் படத்தை அடுத்து வரிசையாக உள்ள பட வாய்ப்புகளால் பிஸியாக உள்ள அவர் மதுரை வந்தபோது தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்த தருணம்...
* படிப்பும் நடிப்பும்... படிப்பு, சென்னையில் பல்கலை ஒன்றில் பி.ஜி., 'அவசர மற்றும் விபத்து காயங்கள் சிகிச்சை டெக்னாலஜி' படிக்கிறேன். நடிப்பு, சிறு வயது ஆசை. படிக்கும் போதே நிறைவேறியுள்ளது.
* முதல் படம்... 'ஆறடி'. கதாநாயகியாக நடித்துள்ளேன். இயக்குனர் சந்தோஷ் குமார் இயக்கி உள்ளார்.
* கதாநாயகன்... விஜய். இவரும் புதுசு தான்.
*எல்லோருமே புதுசா... படத்தில் கதை தான் ஹீரோ. சடலம் புதைக்கும் தொழில் செய்யும் பெண்ணாக நடித்துள்ளேன். தற்போதைய சமுதாய சூழலில் பெண் இந்த தொழிலில் செய்யும்போது ஏற்படும் உணர்வு பூர்வ விஷயம் தான் கதை. வித்தியாசமாக இருக்கும்.
* கைவசம் உள்ள படங்கள்... தற்போது 'செம பிகர்டா' படத்தில் நடிக்கிறேன். தவிர, 'வள்ளி முருகன்' மற்றும் பெயர் வைக்காத மூன்று படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளேன். 'ஷூட்டிங்' நடக்கிறது.
* கிளாமர்... கதைக்கு தேவைப்பட்டால் தப்பில்லை. 'தமிழச்சி' என்பதையும் மறக்க கூடாது.
*நடிக்க விரும்பும் இயக்குனர் பிரபு சாலமன்.
* ரோல் மாடல்... 'தைரிய பெண்' மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
* சொல்ல விரும்புவது நடிப்பில் சாதிக்க வேண்டும். சினிமா துறையில் பெண்களுக்கு தைரியம் வேண்டும். சவால்களை சமாளிக்க தெரிய வேண்டும். அப்போது தான் லட்சியத்தை எட்ட முடியும்.இவருக்கு 88257 45996ல் வாழ்த்து தெரிவிக்கலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement