Advertisement

அழிந்துவரும் நதிகள் மாற்றம் உருவாக்க சத்குரு சொல்லும் வழி!

சத்குரு: இன்று நாம் இவ்விதமாய் உருவாகியிருப்பதற்குக் காரணமே நதிகள்தான். மொகஞ்சதாரோ-ஹரப்பா போன்ற பண்டைய நாகரீகங்கள், நதிக்கரையில் பிறந்தன. நதிகள் திசைமாறியபோது அவையும் அழிந்தன.

மக்கள் உடனடித் தீர்வுகளை எதிர்நோக்கி நதிகளை இணைத்து, அதன்வழி கூடுதல் நீரை நிலங்களுக்கு விநியோகிக்க முடியுமென எண்ணுகின்றனர். இது இன்னும் ஆபத்தாகத்தான் முடியும். பெருந்தொகையைச் செலவழித்து சூழலியலுக்கு ஓர் ஆபத்தை இதன்மூலம் உருவாக்குவோம்.

இன்று பல நதிகள் துரிதமாக அழிந்து வருகின்றன. இன்னும் இருபதாண்டுகளில் அவை அருகிப் போக வாய்ப்பிருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 10, 12 நதிகள் முற்றிலும் அழிந்துப்போவதை நான் பார்த்திருக்கிறேன். இன்று, தென்னிந்தியாவின் மிக முக்கிய நதிகளாகிய காவிரி, கிருஷ்ணா, கோதாவரி ஆகியவை ஆண்டின் சில மாதங்களுக்கு கடலில் கலப்பதே இல்லை.

பூமி சூடாவதன் காரணமாக, இருபுறமும் கடல்கள் கொண்ட இந்தியாவின் தென் பிரதேசங்களில் கூடுதலாக மழை பொழிகிறது. கடலோர மாநிலங்களான ஆந்திரா உள்ளிட்ட பகுதிகள் பருவமழைக் காலங்களில் வெள்ளப் பெருக்குக்கு உள்ளாவதைப் பார்க்கிறோம்.

டிசம்பர் மாதத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்திற்குப் பிறகு சென்னைவாசிகள், மழை என்றாலே அஞ்சத் தொடங்கிவிட்டார்கள். இப்போது இரண்டு நாட்கள் மழை பெய்தாலும் மீட்புப் படகுகளை தயார்நிலையில் வைத்துக்கொள்கிறார்கள்.

மழையின்மையால் வரும் பாதிப்பை விடவும், கூடுதல் மழை தென் மாநிலங்களை விரைவில் பாலைவனம் ஆக்கிவிடும். ஏனெனில், அதிகப்படியான மழை, காலப்போக்கில் பூமியை விவசாயத்திற்குத் தகுதி இல்லாததாகச் செய்துவிடும். இந்நிலை, தமிழகத்தின் சில பகுதிகளில் ஏற்கனவே உருவாகத் துவங்கிவிட்டது. ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படும்போது இருநூறு அடிகளிலேயே தண்ணீர் கிடைத்த நிலை மாறி, இப்போது ஆயிரம் அடிகள் தோண்டினாலும் தண்ணீர் கிடைப்பதில்லை.

ரயில்களிலும் லாரிகளிலும் தண்ணீர் விநியோகித்து இந்த தேசத்தை எத்தனை காலங்களுக்கு நடத்திச் செல்ல இயலும்? நான் எச்சரிக்கை மணி அடிப்பவனாக ஆக விரும்பவில்லை. ஆனால், நதிகளைத் தவறாக நடத்துவதால் ஏற்படும் சிக்கல்களைப் பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும். இத்தனை கோடி மக்கள் தொகையை வைத்துக்கொண்டு, நதிகள் வற்றினால் ஒருவரையொருவர் கொன்று ரத்தத்தையா குடிக்க முடியும்?

பனிக் கட்டிகளால் உருவாகும் நதிகளை உடனடியாக மீட்க முடியாது. ஏனெனில், பனிப்பொழிவு என்பது உலகளாவிய விஷயம். ஆனால், வனங்களில் உருவாகும் நதிகளை நம்மால் உயிர்ப்பிக்க முடியும். மக்கள் உடனடித் தீர்வுகளை எதிர்நோக்கி நதிகளை இணைத்து, அதன்மூலம் கூடுதல் நீரை நிலங்களுக்கு விநியோகிக்க முடியுமென எண்ணுகின்றனர். இது இன்னும் ஆபத்தாகத்தான் முடியும். பெருந்தொகையைச் செலவழித்து சூழலியலுக்கு ஆபத்தினை விளைவித்து விடுவோம்.

நதிகளுக்கு என்ன நிகழ்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தி, செய்ய வேண்டியது என்ன என்பதையும் நாம் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். ஆதாயம் தரும் தீர்வுகளைத் தந்தால்தான் மக்கள் நதிகளைக் காக்க முன்வருவார்கள். மரக்கன்றுகளை வளர்ப்பதில் அடுத்த பத்தாண்டுகளுக்கு 1 லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தலாம். இதன்மூலம், நாட்டில் பெருமளவு நிலம் பசுமைப் போர்வைக்குள் வரும்.

பருவமழை தவறாத சூழலை ஏற்படுத்தி, பூமி சிதைவுறுவதைத் தடுக்க முடியும். இது முழுமையான தீர்வாக அமைவதோடு, நதிகளை இணைப்பதற்கு ஆகும் செலவில் 10% மட்டுமே ஆகும்.

நதியின் இரு கரைகளுக்கும் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு மரப்பயிர் விவசாயம் செய்யவேண்டும். அரசு நிலமாக இருந்தால் காடு வளர்க்கவும், தனியார் நிலமாக இருந்தால் மரப்பயிர் செய்யவும் திட்டமிட வேண்டும்.

தேவையான பயிற்சியையும், மானியத்தையும் அரசு வழங்கி ரசாயனக் கலப்பின்றி இயற்கை விவசாய முறையில் மரப்பயிர் செய்ய மக்களை ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம், விளைநிலங்கள் முன்பைவிட நல்ல வருவாயை ஈட்டித் தரும்.

அரசாங்கங்கள் நதிகளின் நலனுக்கு உகந்த திட்டங்களை உருவாக்க வேண்டும். ஆந்திரா மற்றும் மத்தியப் பிரதேச அரசுகள் நம் கருத்தை ஏற்று, இதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளன. இதுகுறித்து, மத்திய அரசுக்கு ஈஷா அறக்கட்டளை ஒரு விரிவான திட்டத்தைச் சமர்ப்பிக்கவுள்ளது.

தாங்கள் என்ன செய்தாலும் எதுவும் மாறாது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டதாலேயே பலரும் தோல்வியைத் தழுவுகிறார்கள். ஆனால், மாற்றத்தை உருவாக்க இதுவே நேரம். பத்தாண்டுகள் தாண்டினால் காலம் கடந்து போய்விடும்.

நமது பொருளாதார வேட்கையால் நதிகளையும் நிலங்களையும் பராமரிக்கத் தவறிவிட்டோம். நம் தலைமுறையிலேயே அவற்றை அழித்து விடக்கூடாது. இந்த ஆண்டு மரம்நட்டு, இரண்டு ஆண்டுகள் பராமரித்து அதன்பின், அடுத்த மரத்தை நட்டுப் பராமரிக்கத் துவங்கினால், இதுவே ஓர் இயக்கமாக மாறிவிடும்.

இதைச் செய்ய முடியுமா… முடியாதா என்பதல்ல கேள்வி; செய்ய விரும்புகிறோமா… இல்லையா என்பதே கேள்வி.

இது போராட்டமல்ல, இது ஆர்ப்பாட்டமல்ல, நம் நதிகள் வற்றி வருவதைப் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் இது. தண்ணீர் குடிக்கும் ஒவ்வொரு மனிதரும் நம் நாட்டின் உயிர்நாடிகளான நதிகளை காக்க செயல்புரிய வேண்டும்.

இதனை நாம் நிகழச் செய்வோம்.

அன்பும் அருளும்,
சத்குரு

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (18)

 • samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா

  ஆக்கிரமிப்புகள் பற்றி என்ன கருத்துரு வழங்கவிருக்கிறீர்கள் வோட்டுகள் போய்விடுமே என அரசியல்வாதிகள் எண்ணுகின்றனர் நோட்டுகள் போய்விடுமே என அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் நினைக்கிறார்கள் செய்திகள் கிட்டாது போய்விடுமே என ஊடகங்கள் நினைக்கின்றன நாடு போய்விடுமே என எவருமே எண்ணுவதில்லை விரைவில் நல்ல மாற்றம் உறுதியாய் செயல்படவைத்தால் வருங்காலம் வாழ்வு கொண்டதாக அமையும்

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  இவன் காட்டில் மழை, கொடுத்து வைத்தவன், வந்தே மாதரம்

 • pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா

  ஏன் சார் சுத்தி வளச்சு பேசணும்? " வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் வையகத்து நாடுகளில் பயிர் செய்குவோம்" பாரதியார். அன்றே சொன்னது. நாம் மறந்தோம். அப்துல் அதையே அறிவுறுத்தினார். அலட்சியப்படுத்தினோம். வெயில் வந்தது. வறட்சி வந்தது. இன்று மழை வருகிறது. தடுப்பணை கட்டாமல் கஷாயம் கொடுக்குறோம். இதுதான் வளர்ச்சியா? நான் சொல்வது என்னவெனில் , கோவையில் காட்டை அழித்து சிவனுக்கு சிலை கட்டிய இவர் அருகில் இருக்கும், ஓடும் அல்ல , நொய்யல் ஆற்றினை காப்பாற்றாமல் வடக்கில் இருக்கும் ஆறுகளை காக்க miscall numbar கேட்பது ஏன்? . பக்தர்களை கொண்டு ஒரு தடுப்பணை கட்டி ஆலந்துறை பஞ்சாயத்துக்கு அன்பளிப்பாய் கொடுக்கலாமே? இவரின் ஈஷா மையத்துக்கு வந்தவர்கள் கொடுத்த அன்பளிப்பு போதுமே ஒரு நல்ல காரியம் செய்ய? தேசிய அளவில் புகழும் பெறலாமே.அடியேனின் ஆசை, அருளாளரின் செவியில் விழுமின் நட்பயன் நாட்டுக்கே, நாட்டு மக்களுக்கே.

 • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

  தீவிர வாதிகளால் அழிந்து வரும் அப்பாவி ஹிந்துக்களை காக்க ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க.......பிறகு முண்டாசு கட்டிக்கொண்டு போஸ் கொடுக்கலாம் பாஸ்.

 • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

  அழிந்து வரும் நதிகளை பற்றி கவலை தெரிவித்த சதகுரு அவர்கள், சுருங்கிப்போகும் காடுகளை பற்றி சொல்லாதுபோனதேன்? காடுகளை வசப்படுத்தி, கட்டு மிருகங்களுக்கு மனித மிருகங்கள் இருக்க இடமில்லாது செய்ததை சத் குரு கண்டனம் செய்வாரா? செய்யவேண்டும்.

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  அருமை. நல்ல திட்டங்களை ஆதரிக்க வேண்டும். நேர்மறையாக சிந்தியுங்கள். இந்த திட்டத்தில் கொஞ்சம் வெற்றி அடைந்தாலே பலன்கள் ஏராளம். நல்லதை அரசியல் லாபத்துக்காக எதிர்க்கும் எதிர் கட்சிகளும், மோடியை கண் மூடித்தனமாக எதிர்க்கும் மத வெறியர்களும், எதெற்கெடுத்தாலும் குதர்க்கம் பேசி மக்களை திசை திருப்புவர்களும் , குற்றம் கண்டுபிடிப்பவர்களும் தான் நலத்திட்டங்கள் தோல்வி அடைவதற்கும் , முழுப்பலன் கிடைக்காததற்கும் காரணம்., திட்டங்களில் குறை இருந்தால் கூப்பாடு போடாமல் குறைகளை களைய ஆலோசனை சொல்லுங்கள். வாழ்க நம் நாடு.

 • bal - chennai,இந்தியா

  நதிகள் இணைப்பு என்று சொல்லி ஒரு கொள்ளை கூட்டம். அதை ஆக விடாமல் மாநில கட்சிகள். இப்போது இவரும் ஆரம்பித்துவிட்டார். அடுத்து ஒரு மிஷனரி கூட்டம் வேறு ஒரு கருது கொண்டு வரும். எல்லோரும் சேர்ந்து மக்களை குழப்பி விடுகிறார்கள். இந்த swatch பாரத் திட்டம் கொண்டு வந்தார் மோடிஜி, ஆனால் குடிக்கவே தண்ணீர் இல்லாமல் கோடி மக்கள் திண்டாடுகிறார்கள். இந்த நேரத்தில் இந்த திட்டம். இந்த திட்டத்துக்கு பண்ணும் விளம்பரத்தை விட்டு விட்டு எல்லோருக்கும் குடி நீர் என்ற திட்டம் வர வேண்டும்.

 • Karunakaran - Chennai,இந்தியா

  இதுவரைக்கும் யாரும் செய்யாத காரியத்தை அவர் செய்ய துணிகிறார். முடிந்தால் உதவுங்கள். இல்லை என்றால் அமைதியாக வேடிக்கை பாருங்கள். அடுத்தவர்களை பற்றி மோசமாக எழுதுவதும் முன்பு, நீங்கள் என்ன நல்ல காரியம் பண்ணி இருக்கிறீர்கள் என்று யோசித்து பாருங்கள் நூறு பேரு போராட்டம் பண்ணி வாங்கிகொடுத்தை கோடிக்கணக்கான பேர் அநுபவவீங்க . திரைல மட்டும் வீரத்தைகாட்டும் நடிகனுக்கு ஓ போடுவீங்க.

 • JeevaKiran - COONOOR,இந்தியா

  இவர் கூற்று தவறாக இருக்கே? நதிகளை இணைப்பதால் என்ன நஷ்டம் என்று விளக்கவேயில்லையே?

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  புவியியலாளர்கள் இவைகளையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்... துட்டு பண்ணுவதை மட்டும் நீர் பாரும்

 • ganapathy - khartoum,சூடான்

  மழை நீர் சேகரிப்பு மரம் வளர்த்தல், பிளாஸ்டிக் உபயோகிக்காமல் இருத்தல். மின்சாரம் சிக்கனமாய் உபயோகித்தல், பொது போக்குவரத்தை பயன்படுத்துதல், போன்று பலவும் செய்தால் தான் இயற்கையை பாதுகாக்க முடியும்....விளைநிலங்களை பிளாட் போடாதீர்கள். நதிகள் ஆறு குளங்களை ஏரிகளை தூர்வாருங்கள்..அதை ஆக்கிரமிக்காதீர்கள்... மக்கள் தங்களை ஊறுகளில் உள்ள குளங்களை தூறு வாருங்கப்பா...எல்லாம் சரியா வரும்...

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  இவருகருத்து எப்பாடி இருக்குன்னா? ஒரு பழம் பாடல் ? கத்தும் கடல் சூழ்ந்த காத்தான் தன் சத்திரத்தில், அஸ்தமிக்கும் வேளையில் அரிசி வரும் அதை தீட்டி உலையில் இட ஊர் அடங்கும், ஒரு அகப்பை இலையில் விழ வெள்ளி எழும் இந்தபாட்டு மதிரிதான் இவரது பேச்சு இருக்கு? தாகத்துக்குதான் தன்ணீர் வேண்டுமே ஒழிய இப்ப மத்த காரியத்துக்கு அல்ல அதுக்கு எல்லாம் வேற வழி இருக்கு?

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  இவரு சொல்ற கருத்து ரொம்ப நல்லாதான் இருக்கு? ஆனா கடல் எப்ப வற்றிபோறது? அப்புறம் அதுல மீனை பிடிச்சி, காயவச்சி அப்புறம் கருவாடாக்கி குழம்பு வச்சி திங்கறத்துகுள்ள எத்தனை மாமாங்கம் ஆகுமோ அல்லது எததனை யுகமோ யாரு கண்டா?

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  சரி நீங்க சொல்ல வந்த உண்மையான கருத்துதான் என்ன?ஒரு மனிதனுக்கு எல்லா நேரத்திலேயும் அறிவுறையை சொல்லிகிட்டு இருக்க முடியாது? அத அவனும் கேக்கமாட்டான்? எப்ப அவன் வயிறி நிறையுதோ அப்பதான் அவன் கேட்பான் அப்பதான் நாம் சொல்றகருத்து அவன் மண்டையில ஏறும்? ஆக மொதல்ல உணவு அதுக்கு என்ன வழி? அது மட்டும்தான் இப்ப தேவை? அதுக்கு மிக முக்கியமான காரணி தண்ணீர், அது இல்லன்னா என்ன சொல்லி எதுக்கு ஆவ போவுது?

 • Arasu - Madurai,இந்தியா

  சத்குருவா யாருப்பா அது , ஓ நம்ம ஜக்கியா

 • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

  என்ன முண்டாசைய்யா ஒரே அண்ணாயிசமாக அல்லவா உள்ளது. உம்மிடம் பக்தர்கள் கொடுக்கும் கொள்ளை கொள்ளை பணத்தை கொண்டு நிறைய காடுகள் உருவாக்க வழி செய்யலாமே....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement