Advertisement

‛சொந்த ஊருக்கு கூட வர முடியாது': நாஞ்சில் சம்பத்துக்கு எச்.ராஜா எச்சரிக்கை

நாகர்கோவில்: ''நாஞ்சில் சம்பத் அவதுாறு பேசுவதை நிறுத்தா விட்டால், அவர் சொந்த ஊருக்கு கூட வரமுடியாத நிலை ஏற்படும்,'' என, பா.ஜ., தேசிய செயலர் எச். ராஜா கூறினார்.

நாகர்கோவிலில், நேற்று அவர் அளித்த பேட்டி: தினகரன் அணியை சேர்ந்த நாஞ்சில் சம்பத், பிரதமரையும், பா.ஜ., தலைவர்களையும் தரக்குறைவாக பேசி வருகிறார். இதை அவர் நிறுத்த வேண்டும். இப்படியே தொடர்ந்தால், அவர் சொந்த ஊருக்குள் கூட வர முடியாத நிலை ஏற்படும். வைகோவுடன் இருந்த போது, ஜெ.,யை தரக்குறைவாக பேசியவர் இவர்.

அ.தி.மு.க., இரு அணிகளும் இணைந்துள்ள நிலையில், தினகரனை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இதனால், அவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பழனிசாமியை மாற்ற வேண்டும் என கோரியுள்ளனர். அரசின் மீது நம்பிக்கை இல்லை என்றால், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரமுடியும். முதல்வரை மாற்றுவது என்பது, கட்சியில் எடுக்க வேண்டிய முடிவு. இதை கவர்னரும் தெளிவுபடுத்தி உள்ளார்.

ஒரு கட்சியில், 50 சதவீத உறுப்பினர்கள் வெளியேறினால் தான், அது பிளவாக கருதப்படும். அல்லாத பட்சத்தில், கொறடா உத்தரவை மீறுபவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயும். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (176)

 • Vijay - Ashburn,VA,யூ.எஸ்.ஏ

  எச். ராஜா மீது எந்த குற்றச்சாட்டும் இதுவரையில் இல்லை நாஞ்சில் சம்பத் "துப்பினா துடைச்சிருவேன் " முதல் எல்லா அநாகரீக வார்த்தை பயன்படுத்தி கொண்டு இருக்கிறார். ஆனால் அவருக்கு எல்லோரும் வக்காலத்து . வருத்தமாக இருக்கிறது எங்கு தர்மம் இல்லையோ அங்கு அழிவு நிச்சயம் என்று ஏன் தோன்றவில்லை தமிழ்நாட்டை இறைவன் காக்கட்டும்

 • rajarajan - bangalore,இந்தியா

  தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. இவரை நாடு கடத்தினாலும் தப்பில்லை

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  சொந்த ஊரை பற்றி கவலை படமாட்டார்கள்.

 • ksn_kumar.28 - chennai,இந்தியா

  யார் குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்தது என்று உங்களுக்குத்தெரியாத, இனிமேல் வரும் ஆட்சியாவது நல்ல ஆட்சியாக இருக்கட்டும், இந்த கழகங்கள் ஆண்டது போதும் அதன் பலனை நாங்கள் அனுபவிப்பதும் போதும், தமிழகத்தை முன்னடத்தி செல்ல திரு மோடி அவரை விட்டால் வேறு யாருக்கும் தகுதியோ இப்போதைக்கு திராணியோ வேறு யாருக்கும் இருப்பதாக மக்கள் நினைக்கவில்லை, அந்த மாறுதல் மிக விரைவாக வரும், இது காலத்தின் கட்டாயம், இந்த வரிகள் யாரோ முன்னரே சொன்ன மாதிரி தெரிகிறது

 • ksn_kumar.28 - chennai,இந்தியா

  திரு ராஜா அவர்கள் சொன்னது முற்றிலும் சரியே,

 • Appu - Madurai,இந்தியா

  யோவ் சம்பத்து அவரு அங்கிள் இந்தியர்களை எல்லாம் கண்டவர் ஆமா...பயப்பனும் அவுரு மிரட்டுனா

 • oliver - karimun,இந்தோனேசியா

  H RAJA ARIYAN IS NOW DIRECTLY MAKING THREAT TO DRAVIDAN, yedapadi is now completely sleeping in modi's feet, Only People leader stalin can save tamil nadu, a strong leader without corruption is required to save tamil nadu from these evil forces.

 • Indian - Shelton,யூ.எஸ்.ஏ

  இவரை தமிழகத்துக்குள்ளே விட்டதே தவறு

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  ஆக இதுதான் உண்மையான பிஜேபி -RSS முகம் . என்ன தெனாவெட்டு , அடவாடி . அருவடித்தனம் . பிரதமரும் , பிஜேபி அமைச்சர்களும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா , புனிதர்களா இல்லை மாசு இல்லாதவர்களா ? கடந்த மூன்றாண்டு உட்க்கார்ந்து இந்தியாவை கெடுத்தவர்களை, தமிழகத்தை சீரழித்தவர்களை நாஞ்சில் சம்பத் வெளிச்சம் போட்டு காட்டுறார் . இது பொறுக்கல ,பதில் கொடுக்க முடியலை . இதை மார்வாடி ராஜா ஆணவத்தின் உச்சிக்கு சென்று கண்டிக்கிறார் . இப்படி பேசும் ஒருவரை, பசு குண்டரை , கண்டிக்காமல் , ஆனால் பா.ஜ., தேசிய செயலர் பதவி கொடுத்து வைத்திருக்கும் பிஜேபி ஐ எந்த கணக்கில் சேர்ப்பது . இவர்கள் தொடர்ந்தால் தமிழகம் சீரழியும் ,தேசம் சூறையாகும் . ஒரு தமிழ் மகனை ,நாஞ்சில் சம்பத்தை மேடையில் சந்திக்க தைரியம் இல்லாத வடநாட்டு ராஜா வாலட்டுவது, வன்முறை வார்த்தை பயன்படுத்துவது இன்று தமிழ்கத்தின் நிலமையை காட்டுது . ஜெயா இருக்கும்போது இந்த ராஜாக்களை எங்கும் காணோம் . இப்போதுதான் மெல்ல எலி பொந்திலிருந்து வெளிவந்து பயிர் அறுக்க தானியம் திருட வருகிறார்கள்

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  நாஞ்சில் சம்பத் எப்படி பேசினாலும் தமிழை மிக அழகாக உச்சரிக்கிறார்....ஆனால் அவர் தமிழ் நாட்டை விட்டு போகணுமாம்... இன்னமும் வந்துண்டு போயிண்டு நட்டுண்டு என்று பேசுறதுகள் எல்லாம் தமிழ் நாட்டில் இருக்கலாமாம் ...என்னே கொடுமை ?

 • மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா

  முன்னாடிலாம் தினமலர் சைட்டுக்கு வந்தாலே கருணாநிதியும், ராமதாஸும்தான் ஒரே காமெடியா இருக்கும். இப்ப யார் யாரோ வருகிறார்கள். மீண்டும் கருணாவின் கணீர் குரலும், ராமதாஸின் காமெடி பேச்சும் தொடர வேண்டும்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  யாகாவாராயினும் நா காக்க

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  நல்லது .. இப்பிடியே பேசிட்டு இரு .. தமிழகத்துக்கு ரொம்ப நல்லது .. தமிழகத்தில் உங்க கட்சிக்கு இப்போவே ஒன்னும் கிடையாது .. நீ இப்பிடி பேசறதெல்லாம் பார்த்தா தமிழகத்தில் இருக்கும் 3 சதவீதமும் போயிரும் .. இப்பிடியே பேசு தயவு செஞ்சு .. அதெப்படி 50 சதவீதம் பேர் பிரிஞ்சு தான் கட்சி ஒடையுமா ?? அப்போ 10 பேர் வெச்சு பன்னீர்செல்வம் பிரிஞ்சப்போ எங்க போன ?? பன்னீர் ஜி எடப்பாடி ஜியுடன் சேர வேண்டும் என்று வழிஞ்சிட்டு இருந்தது நீதானே ??

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  ஹெச் ராஜா மீது எந்தவித ஊழல் புகாரும் இல்லை.. தேசத்துரோக வழக்கும் இல்லை.. எந்தவித குற்றச்சாட்டிற்கு ஆளாகாத ஆள். ஆனாலும் மூர்க்கங்கள் பல்வேறு பெயர்களில் அவர் மீது எரிந்து விழுவதின் காரணம் தெரியுமா? விடை என்னவென்றால் மூர்க்கன்களை துணிச்சலாக எதிர்க்கும் ஒரே தமிழக தலைவர். வேறு எந்தக்கட்சியிலும் - ஏன் பிஜேபி கட்சியில் கூட -இந்த அளவிற்கு துணிச்சலாக எதைப்பற்றியும் பயப்படாமல் மூர்க்க பயங்கரவாதத்தை எதிர்க்கும் ஒரே தலைவர் என்பதாலும், மூர்க்க ஓட்டுக்களை தூசி போல நினைத்து நெஞ்சு நிமிர்த்தி பேசுவதினாலும் தான் மூர்க்கன்கள் இந்த அளவிற்கு கொதிப்படைகிறார்கள், பல்வேறு பெயர்களில் ஊளையிடுகிறார்கள். தமிழகத்தில் தலைவிரித்தாடும் மூர்க்க அரசியலுக்கு முடிவு கட்ட இவர் தான் தமிழக பிஜேபி கட்சி தலைவராகவும் பிஜேபி சார்பாக முதலமைச்சர் பதவிக்கு பொருத்தமானவராகவும் இருப்பார்.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  இவன் எல்லோரையும் தேச துரோகி என்பான்.. பிஜேபி காரர்கள் இதை படிக்க வேண்டும் " Patriotism is supporting your country all the time, and your Government when it deserves it" - Mark twin..சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் தான் தேச பக்தர்கள்... ஆதரிப்பவர்கள் அல்ல ..

 • vnatarajan - chennai,இந்தியா

  தமிழில் நன்றாக அடுக்காக பேசுவேன். ஆனால் என் நாக்கோ தடித்த நாக்கு. சோறு கண்ட இடம் எனக்கு சுவர்க்கம் எலும்பு போட்ட எஜமானனுக்கு நன்றியுடன் குரைப்பேன் அவருக்காக பிறரைகூட கடிப்பேன் இதுதான் என் நற் குணம்

 • Kalyani S - Ranipet,இந்தியா

  வைகோ பேசினால் தமிழகத்திற்குள் நுழையமுடியாது, நாஞ்சில் சம்பத் பேசினால் தமிழகத்திற்குள் நுழையமுடியாது ....... திரு H.ராஜா அவர்களே தமிழகத்தை யாராவது உங்கள் குடும்பத்திற்கு தானமாக எழுதி தந்து விட்டார்களா?....... முதலில் பாஜக ஒரு தொகுதியிலாவது நுழைய வைக்கும் வழியை பாருங்கள். பிறகு மற்றவர்கள் நுழைவதை தடுக்கலாம்.

 • Chitrarasan subramani - Chennai,இந்தியா

  Who is this Raja, How can he threat a fellow citizen like this, can he talk like this when Karunanidhi in active politics or Jaya is alive. Police should initiate action against Hariha Raja Sharma for threating . In political we cannot expect all are in one stream.

 • Pravin - Chennai,இந்தியா

  Sir please ask raja to speak three times a in stage or in press meet my 1 year chid enjoy his comedy & take food happily. I try to download his speach from youtube. Its very funny u know

 • sundar - Hong Kong,சீனா

  நானும் ரௌடிதான்.... நானும் ரௌடிதான்.... நானும் ரௌடிதான்.....

 • Siva Rama Krishnanan - Mayur Vihar,இந்தியா

  சொகுசு கார் கிடைத்த காரணத்தால் நாக்கில் நரம்பில்லாமல் பேசும் சம்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது. ஜெயலலிதாவை வாய்க்கு வந்தபடி திட்டியவன் . ஆமாம் எங்கியோ ஒரு சாமியார் ஏதாவது சொன்னால் ஊளையிடும் புதிய, தந்திரமான ஊடகங்கள் இவனை பற்றிய விமர்சங்களை வெளியிடுவதில்லை ஏன்?

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  ஒரு வார்டு மெம்பெர் கூட இல்லாத கட்சி 133 MLA கட்சியில் உள்ளவனை பார்த்து கொக்கரிக்குது சிங்கத்தின் மீது சுண்டலி ஓடியதாம் அப்போ சிங்கம் வாலை ஆடியதாம் உடனே சுண்டெலி என்னை பார்த்து பயந்து வால் ஆடுச்சு என்றதாம்

 • Snake Babu - Salem,இந்தியா

  அய்யா மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் எழுச்சி விரைவில் ஆரம்பிக்கும். நன்றி வாழ்க வளமுடன்.

 • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

  நீங்க ரெண்டுபேர் .... எல்லாமே தேவை இல்லாத ...தான்

 • Selvamony - manama,பஹ்ரைன்

  இந்த ராஜா போன்ற ரவுடிகளை தமிழ்நாட்டை விட்டே விரட்டவேண்டும் . ஒரு சீட் இல்லாத போதே இப்படி எனில் தப்பி தவறி 4 சீட் கிடைத்தால் சொல்லவே வேண்டாம் .

 • VOICE - CHENNAI,இந்தியா

  ஒரு Mla சீட் ஜெயிக்க முடியல பேச்சு மட்டும் பெருசா இருக்கு. இன்னும் ஒரு வருடம் தான் அதன்பின் கதை கந்தல் ஆகிவிடும். உங்க தலையில் நீங்களே மண்ணை வாரி போட்டது இல்லாமல் பன்னீர் எடப்பாடி ரஜினி வாயிலும் மண்ணை வாரிபோட்ட பெருமை பிஜேபி சாரும். இவர்கள் அனைவரும் பிஜேபி அடிமை என்பது தான் தற்பொழுது மக்கள் கருத்து.

 • baskeran - london,யுனைடெட் கிங்டம்

  All over tamilnadu know about sambath but we don't know about you don't try to get cheap publicity

 • sundar - Hong Kong,சீனா

  எலும்பு நிபுணர் இப்போ immigration officer ஆகிவிட்டார். இனி மாவட்டத்திற்கு ஒரு பாஸ்போர்ட் வேணும் போல.

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  கூடு விட்டு கூடு பாயும் ஆசாமி நஞ்சுபோன சம்பத் . இவருக்கு முதன் மந்திரியாகும் ஆசை திடீரென்று வந்து விட்டது

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  ஊருக்கு வர முடியாத நிலை என்றால் அவருக்கு எதிராக போராட்டங்கள் , கண்டங்கள் போன்றவை செய்யப்படும் என்று அர்த்தம் ...அவரு என்ன ஆளை வச்சி அடிச்சிடுவோம்ன்னா சொன்னாரு?...வெக்கமே இல்லாத ஒருத்தர் மேல யாராவது கையை வைப்பார்களா?

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  காசேதான் கடவுளடா கொள்கைதான் இவர்களுக்கும் ..... அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கொள்கை ..... சூப்பரப்பு .....

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  நானும் ஒரு ரவுடிதான் என்று அவர் வாயால் கொடுத்துள்ள வாக்குமூலம்.

 • Prabaharan - nagercoil,இந்தியா

  இருவருக்கும் சரியான போட்டி? ஆனால் இதில் ஒருவருக்கு தகுதி இல்லை

 • Rajasekar K D - Kudanthai,இந்தியா

  பிஜேபி ஆட்சியில் இல்லையென்றால் தாங்கள் இருக்கும் இடம் தெரியாது. ரொம்ப மிரட்ட கூடாது. தமிழ்நாடு மக்கள் பயந்துடுவோம்.

 • rama - johor,மலேஷியா

  அம்மா ஆட்சியில் பெட்டி பாம்பா இருந்த இவர்கள் மத்தியில் உள்ளவர்கள் ஆதரவள பேசராங்க

 • Sigamani -

  திரு ராஜா அவர்களுக்கு ஓர் வோண்டுகோள் நாஞ்சிலாரை விட மிக கேவலமாக பேசும் சீமானிடம் ஏன் பயபடுகிறீர்கள் ????

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  அமித் ஷாவே இங்க வர எவ்வளவு யோசிக்கிறார்...அதை மறந்து விட்டு இந்த ஜென்மம் ஊளை உதார் விடுகிறது...

 • anvar - paramakudi,இந்தியா

  உங்களுக்கு சரியான ஆள் நாஞ்சில் தான்

 • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

  சொந்த ஊருக்கு கூட வரமுடியாதென்ற எச்சரிக்கையா. இதுதான் பல மாநிலங்களிலும் மத்தியிலும் மக்களாட்சியென்றப் பேரில் ஆட்சிச் செய்கின்ற பாஜக ஆட்சியின் இலக்கணமா அல்லது லட்சணமா?

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  ஹெச் ராஜா பேசுகிறார் என்றாலே அது யாருக்கு வியர்க்கிறது இல்லையோ ஆனால் நிச்சயமாக மூர்க்கங்களுக்கு மூக்கில் வியர்க்க துவங்கும்..உடல் விறைக்க துவங்கும்..கருத்து மழையை கொட்ட ஆரம்பிப்பார்கள்..சரிதானா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள்..

 • உகதி -

  பாஜக ஆட்சி முடிவுக்கு வரும் போது எச் ராஜாவால் தமிழ் நாட்டிற்கு வருவதை யோசிக்கக் கூட முடியாது

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  ஹெச் ராஜா அவர்கள் ஒரு சிறந்த கருவி. அதாவது மூர்க்கங்களை அடையாளம் காட்டும் கருவி. அவருடைய பேச்சிற்கு மூர்க்கங்கள் வரிந்து கட்டிக்கொண்டு வந்து விடுவார்கள். அவரது கருத்திற்கு எதிராக ஊளையிடும் பெயர்களை பாருங்கள்..ஹெச் ராஜாவிற்கு நன்றி.

 • Laser Eyes - Chennai,இந்தியா

  சபாஷ், தமிழக மக்களே பி ஜே பி அரசியல் வியாதிகள் எப்படி பட்ட மன நிலமைமை உடையவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்ற பழமொழி உண்டு. சும்மா இருக்கும்போதே இப்படி பதவி கிடைத்தால் எப்படி???? இவர்கள் மேல் குற்றம் கூறுவதைவிட இவர்களுக்கு பேச இடம் கொடுத்த பதவி ருசி கண்ட பூனைகள்தான் காரணம்.

 • balaji -

  thiru raja avargalal Oru 15000 vote kuda sonda togudil vanha mudia

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  நாக்கில் நரம்பில்லாமல் பேசும் இந்த பைத்தியத்திற்கு நாஞ்சில் சம்பத் தான் மிக சரியான ஆள்...நல்ல தமிழில் அவரை நார் நாராக கிழிப்பதே செவிக்கு இன்பம் தான்...

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  நாஞ்சில் சம்பத் பிஜேபியை மிக சரியாகத்தான் விமர்சிக்கிறார். ராஜா பிஜேபியின் கேவலம்.. பேஜேபியே ஒரு கேவலம் என்பது வேறு விஷயம்....இவரை விட கேவலமாக தமிழர்களை எவரும் பேசியதில்லை.. இந்த மிரட்டல் எல்லாம் செல்லாது.. அப்புறம் இவர் சொந்த ஊருக்கு திரும்ப நேரிடும்...

 • Rajasekar K D - Kudanthai,இந்தியா

  உன்னைப்போல் தரங்கெட்ட மனிதரை பார்த்ததில்லை.

 • Rajasekar K D - Kudanthai,இந்தியா

  நீ தமிழ்நாட்டில் இருக்கும் வரை அவர் கண்டிப்பாக நாங்கள் அனுமதிப்போம். உன்னால் முடிந்தால் நீ சொல்வதை செய்து காட்டு பார்ப்போம்.

 • குண்டுத்தமிழன் - Chennai,இந்தியா

  ரொம்ப சரியா சொன்னீங்க... ஆனா ஒருவகைல இது உங்களுக்கு பொருந்துமே...

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  சம்பத்து எல்லாம் ஒரு ஆளே இல்லை...டம்மி பீசு...அவனுக்கு எதிராக அறிக்கை விட்டு அவனை ஒரு பெரிய ஆளாக சித்தரிக்க வேண்டாம்...

 • Murugan - Mumbai

  இந்த எச்ச ராசாவுக்கு தமிழ்நாட்டில் ஒரு பத்து ஓட்டு கூட இல்லை ஆனால் பேச்சைப் பருங்கள் இந்தியாவுக்கே அதிபர் போல் உள்ளது

 • Madurai K.சிவகுமார் - Madurai,இந்தியா

  நான் கட்சி சம்பந்தபட்டவன் இல்லை. இந்த நல்ல மனிதர் பெயர் ஹரிஹரன் ராஜா சர்மா.( Hariharan Raja Sharma) எங்கேயோ இருந்து பஞ்சம் பொழைக்க தமிழகம் வந்த இவர், இந்த உள்ளூர் தமிழனை ஊருக்குள் விடமாட்டாராம்.

 • Aarkay - Pondy,இந்தியா

  இன்னோவா சம்பத்துக்கு மட்டும், பென்ஸ், ஆடி, BMW, என ஆசை வரக்கூடாதா? ஆமாம் நீங்கள் ஏன் அடுத்த கட்சி விவகாரங்களில் மூக்கை நுழைக்கிறீர்கள்? கவர்னர் ஏதோ பிரிந்து சென்ற கணவன் மனைவியை ஒன்று சேர்த்தது போல் EPS, OPS நடுவே நின்று போட்டோவிற்கு போஸ் கொடுத்தது கேவலத்திலும், கேவலம் பெரும்பான்மை மக்களுக்கு, இயங்காத இந்த அரசு தேவை இல்லை யார் கவிழ்த்தாலும், நன்றி சொல்வோம்

 • rama - johor,மலேஷியா

  நாஞ்சில் சம்பத் உங்களைப் போன்ற இனபற்று உள்ளவர்களை தமிழ் நாடு காலம் கடந்து உயரும் அம்மா 40 ஆன்டுகள் அரசியலில் இருந்தார் அவரை அறிய 35 ஆண்டுகள் பிடித்தது இமக்களுக்கு.

 • Pandiyan - Chennai,இந்தியா

  திரு H ராஜா அவர்கள் பேட்டை ரௌடி போல பேசிக்கொண்டு இருப்பது ..தமிழகத்தில் எந்தவிதத்திலும் பாஜக வளர்ச்சிக்கு உதவாது .

 • JOKER - chennai,இந்தியா

  தன் முதுகுல அழுக்கை வச்சி கிட்டு அடுத்தவன் முதுகு சுத்தமா இருக்கணும் னு நினைக்கிற ஜென்மம்

 • Kgopalan - kovai,இந்தியா

  Nalla karuththu..

 • shahul -

  குறை சொல்லி தீர்க்குது

 • Saravana kumar - Coimbatore,இந்தியா

  ரெண்டுமே கழிசடைக்க

 • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  குறுக்கு வழியில் தமிழகத்தை ஆள நினைக்கும் உங்களுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கு.

 • Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  நாஞ்சில் உங்களை பற்றி சொல்வதற்கு இனி என்ன இருக்கிறது, இதுவரை உங்களை கழுவி ஊத்தியதற்க்கே நீங்கள் தூக்குல தூங்கவேண்டும், மானம் என்ற ஒன்று இருந்திருந்தால்

 • அப்பாவி - coimbatore,இந்தியா

  நீ என்ன பெரிய ரௌடியா? 2 % வோட்டு வாங்குன நீ 30 % மேல வாங்குனவா கிட்ட மோதறியா? அவனுக நெனைச்சா நீ தமிழ்நாட்டுக்குள்ளயே இருக்க முடியாது தெரியுமா உனக்கு

 • krishnan - Chennai,இந்தியா

  மோஸ்ட் இரிடேடிங் கேரக்டர்

 • Saravana Kumar - TIRUPUR,இந்தியா

  இருவருமே ஜனநாயகக் கழிவுகள்.

 • RAMANATHAN - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  நாஞ்சில் சம்பத்துக்கு சீக்கிரம் சங்கு... காசுக்கு மாரடிக்கிறவர்களுக்கு எல்லாம் இப்போ பேச தைரியம் கொடுக்கிறது யாரு.....எதற்கும் எல்லை உண்டு........ தேவையில்லாமல் காமெடியன் வடிவேலு மாதிரி இருந்த இடம் தெரியாமல் போகப்போகிறார்........அவருக்காவுது விஜயகாந்த் மன்னிப்பு கொடுத்து மறுபடியும் ஜெயலலிதா அணைத்துக் கொண்டார்.........நாஞ்சில் சம்பத்துக்கு தினகரன் ... சசிகலா விட்டா நாதியில்லை....நாவை அடக்கி பேசவேண்டும்..... தமிழக மக்கள் அரசியலை உன்னிப்பாக கவனித்து கொண்டு உள்ளார்கள்,,,,,,,தினகரன் உன்னை வைத்து பிஜேபியின் பெயரை களங்கப்படுத்த பாக்கிறார்கள் ....அடுத்து காமெடியன் செந்திலுக்கு சங்கு...... நாகாக்கார் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு.........

 • Arachi - Chennai,இந்தியா

  உனக்கும் நாஞ்சில் சம்பத்துக்கும் ஒரு வித்தியாசம் இல்லை

 • Mariappan Rajangam - tamilnadu,இந்தியா

  தமிழ்நாட்டிலே ஒரு எம் எல் ஏ கூட கிடையாது ,ஆனால் மிரட்டலை பாருங்க ஆளுங் கட்சி மாதிரி நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் .

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  டம்மி பீசு இன்னொரு டம்மி பீசு கிட்டே அட்டைகத்தி வீசுது.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  தேர்தல்ன்னு ஒண்ணு வச்சிப் பாக்க துப்பில்லாமல் தரங்கெட்ட அரசியல் செய்து எச்ச சோத்துக்கு அலையும் உயர்திரு எச் ராசா அவர்களுக்கு. தேர்தல் வச்சா காவிகட்சியில் அவரும், மற்றும் அவர்கள் கட்டை பஞ்சாயத்து செய்யும் அடிமைகள் எவரும் சட்டசபைக்குள் நுழைய முடியாது. அதான் நிதர்சனம்.

 • vinu - frankfurt,ஜெர்மனி

  வட இந்தியாவில் இருந்து வந்த நீர் இம்மாநிலத்தின் உள்ளவரை மிரட்ட எந்த அதிகாரமும் கிடையாது. உனக்கு தமிழ்நாடு பிடிக்கவில்லையா இடத்தை காலிபண்ணு. நீ முதலில் ஒழுங்கா பேச கற்றுக்கொள்

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இவங்க மட்டும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம், அதுவும் இந்த ராஜா பேசுவது நாஞ்சில் சம்பத் பேசுவதை விட மோசம், ஆனால் யாரும் கேட்கமுடியாது, அநாகரிகமாக பேசுவதற்கு, மிரட்டுவதற்கு, கொலைசெய்வதற்கு, அடிதடியில் ஈடுபடுவதற்கு உரிமை அவங்களுக்கு மட்டுமே உண்டு, அதை யாரும் தட்டி பறிக்க முடியாது,

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  சமயத்துக்கு சமயம் நேரத்திற்கு நேரம் வேண்டியவாறு செப்பிடி வித்தை காட்டுபவர்களுக்கு சொந்த ஊர் இல்லையென்பதை நேரிடையாக சொல்கிறார் அவ்வளவுதான்

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  அட்ரஸ் இல்லாத அநாமத்தை எல்லாம் உதார் விடுறான். அது இவன் கட்சியே இல்லை, ஆனா சவுண்டை பாருங்க. இதத்தான் கட்டைபஞ்சாயத்துன்னு சொல்றோம். தேர்தலில் இவர்களை ஓட்டின் மூலம் என்கவுண்டர் செய்வார்கள்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நீங்கள் திருடனுக்கு துணை போய் அவனை உங்கள் வழிக்கு கொண்டு வர நினைக்கும் உங்களை அடுத்த தேர்தலில் உங்கள் வாலை கூட காட்டமுடியாது...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பா.ஜ., தேசிய செயலர் எச். ராஜா வன்முறையை தூண்டுகிறாரா... ?

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  இவர் சொல்வது சரிதான்

 • Denesh - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  வந்தேறி... நீ யாரு அதை சொல்வதற்கு?

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  Noose is getting tightened

 • TamilReader - Dindigul,இந்தியா

  நீங்கள் தரக்குறைவாக நடப்பதால் தான் அவர் அப்படி பேசுகிறார் நீங்கள் யோக்கியமா ஆட்சியை நடத்துங்க அப்புறம் எல்லாம் நல்ல படியா நடக்கும்

 • Joseph Fernando - Chennai,இந்தியா

  Yokkiar solkirar

 • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

  திரு ராஜா அவர்கள் பாஜக மற்றும் பிரதமரை எதிர்ப்பவர்களை தேசத்துரோகி என சொல்கிறார் ஒருவரை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அவர்களது உரிமை இதை மட்டும் ஏன் எதிர்க்கிறார் அப்படியென்றால் அவ்வாறு செய்வதை அவர் நிறுத்திக் கொள்வாரா இல்லையெனில் அவருக்கும் அதே கதி ஊருக்குள் வர முடியாது

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  நாலு சாத்து வாங்கனா சரியாகிடும்..

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  தினமலர் அனுமதி கொடுத்தால் இதே நாஞ்சில் மதிமுகவில் இருந்தபோது ஜெயா சசி பற்றிப்பேசிய பேச்சுக்களை அனுப்புகிறேன் நிச்சயம் வாந்தி வரும்

 • Anandan - chennai,இந்தியா

  ராஜா பெரிய ரௌடியா? பேசுற பேச்சு சரியா இல்லையே.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  எம் எல் ஏக்கள் சொந்த ஊர்ப்பக்கம் போக பயந்தே புதுசேரியில் முடித்து கும்மாளம் போடுகின்றனர் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் நாஞ்சில் வயிற்றுப்பிழைப்புக்கு நாக்கை அடகு வைத்தவர்

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  இதெல்லாம் பத்தாது? இன்னும் கொஞ்சம் வலுவா இருக்கனும்? ஒரு ஆறு மாசத்துக்கு எந்திரிக்க முடியாம? அப்ப கூட இந்த வாயாடி வாயி அடங்காது?

 • செந்தமிழ்அரசு -

  இருவரும் வாய்ச்சொல் வீரர்கள்.

 • Good - Kumbakonam,இந்தியா

  தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்கிறான்...

 • Raman - kottambatti,இந்தியா

  எல்லாம் நேரக்கொடுமை.. மஸ்தான் இந்த மாதிரி ஆளுக்கு கட்சியில் பதவி கொடுத்தால் இப்படித்தான் ....

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  செஞ்சு காட்டுங்க சார் இவர் யாரு கிட்டே இருந்து வந்திருக்காரு அவரை போல தான் இவரும் இருப்பாரு காசுக்காக பேச கூடியவர்கள் பேசட்டும் வேண்டாம் ஆனால் மற்றவர்கள் மனது புண் படியும்படி பேச கூடாது. இப்போ அந்த தெய்வமே வந்தால் கூட இவரை காப்பாற்ற முடியாது. தினகரன் கூட ஒதுங்கி விடுவாரு. அவரு கூட தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவது கிடையாது ராஜா சொல்லாம சொல்லிட்டாரு இனிமே உங்களுக்கு இருப்பிடம் vellore தான்

 • raja - Kanchipuram,இந்தியா

  அதே போல பாஜக தலைவர்களும் ஊருக்குள் நுழைய முடியாத நிலை வர வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement