Advertisement

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி-4

கல்வித் தரம் உயர வேண்டுமானால் கல்விச் சுதந்திரம் தேவை. இந்த சுதந் திரம் ஆசிரியர் களுக் கும் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கும் வழங் கப்பட வேண்டும். இதன் அடிப்படை யில் தான் பள்ளிக் கல்வி யின் தரத்தை உயர்த்த, தகுதியான பள்ளிகளுக்கு தன்னாட்சி தருவது அவசியமாகிறது. இதை வலியுறுத்தும் வகையில் உருவாக்கி உள்ள கருத்துருவை, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வி செயலர் உதயசந்திரன், பாடத்திட்ட கலைத் திட்டக் குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன் ஆகியோரி டம் தினமலர் நாளிதழின் வெளியீட் டாளர் ஆர்.லட்சுமிபதி வழங்கியிருந்தார். இந்த கருத்துரு குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத் துகளை, தினமலர் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தினமலர் வாசகர்கள் சில கருத்துக்களைத் தெரி வித்துள்ளனர். அந்த கருத்துக்களையும் அவை தொடர்பான தினமலர் விளக்கத்தையும் இங்கே அளித்திருக்கிறோம்.

7. G. JEBADOSS, Physics teacher, MCC HR Sec School, Chennai 31.

It is a good idea to the government by you. As a teacher I support your idea so that the students can be benefited. The school need not depend only the government for a good syllabus.

தினமலர் விளக்கம்: எமது கருத்தை தாங்கள் வரவேற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்களும், தங்களைப் போன்று, மாணவர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். தமிழக மாணவர்களின் அறிவுத்திறன் எந்த மாநிலத்து மாணவர்களுடன் ஒப்பிட நேர்ந்தாலும், அது பாராட்டும்படி மேலோங்கியிருக்க வேண்டும் என்பது எமது தீர்க்கமான குறிக்கோள். அதன் அடிப்படையில்தான் பள்ளிகளில் தன்னாட்சி என்ற கல்விப் புரட்சி நமக்குத் தோன்றியது. தவிர, தாங்கள் குறிப்பிட்டுள்ளது போன்று, பாடத்திட்டத்தின் மாற்றத்திற்கு அரசை மட்டும் முழுவதுமாக பள்ளி சார்ந்திருக்கக் கூடாது என்ற கருத்தும் நமது எண்ணம் தான். மிகச் சுருக்கமாக, தன்னாட்சியின் குறிக்கோளை இரண்டே வாக்கியங் களில் சொல்லியிருக்கிறீர்கள்.8. எஸ்.சரவணன்,
ஆசிரியர்,
நகராட்சி நடுநிலைப் பள்ளி , மேட்டுப்பாளையம், திருப்பூர்.12/8/17 நாளிட்ட தினமலர் நாளிதழில், பள்ளிகளுக்குத் தன்னாட்சி அளிப்பது குறித்த எனது கருத்துகள் இடம் பெற்றிருந்தன. அதில் தங்களால் வினவப்பட்ட சில வினாக்களுக்கான விளக்கங்கள்:
இன்றையசமூகத்தின் பங்களிப்பாக பள்ளிகளுக்குத் தேவையான நிதி ஆதாரங்களுக்கு, அந்தந்தப் பகுதியில் இருக்கும் வசதி படைத்தவர்கள், பள்ளிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கலாம். ரோட்டரி, லையன்ஸ் போன்ற அமைப்புகள் பள்ளிகளுக்கு ஆதரவளிக் கலாம். (sponsorship). சமூகத்தில் பிரபலமாக உள்ளோர் பள்ளிகளைத் தத்து (adopt) எடுத்துக் கொள்ளலாம். முன்னாள் மாணவர் அமைப்பினர், மேம்பட்ட நிலையில் உள்ள முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு நிதி அளிக்கலாம். வசதி படைத்த பெற்றோர் பள்ளிகளுக்கு நிதி அளிக்கலாம். சுற்று வட்டாரப் பகுதி மக்கள் பள்ளிகளுக்கு நிதி அளிக்கலாம். (கல்விச் சீர் என்ற பெயரில் தற்போது சில பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது)


பாடத்திட்டத்தில் வட்டாரக்கருத்துகள் எனும் போது, குறிப்பிட்ட பகுதியின் நாட்டுப்புறக் கலைகளை, நிகழ்த்து கலைகளாக மாற்றும் வகையிலான வட்டார அளவிலான பாடத்திட்டம் உருவாக்கப்படலாம். குறிப்பிட்ட வட்டாரத் தின் புகழ்பெற்ற தொழில்களை தெளிவாக விளக்கும் படியான பாடத்திட்டம் அமைக்கப்படலாம்.

உதாரணம்: திருப்பூர் பின்னலாடைத் தொழில்.
குறிப்பிட்ட பகுதியின் பெருமைகளையும், சிறப்பு களையும் விளக்கும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்படலாம்.

உதாரணம்: தஞ்சாவூர் பெரிய கோவில்.குறிப்பிட்ட பகுதியில் புகழ் பெற்றவர்களின், தியாகிகளின் வரலாறுகள் பாடப் புத்தகங்களில் இடம் பெறலாம்.

உதாரணம்: திருப்பூர் குமரன்.
குறிப்பிட்ட பகுதி பருவநிலை, காலநிலை குறித்த தகவல்கள் பாடப்புத்தகங்களில் இடம்பெறலாம்.நெகிழ்வான தேர்வுகள் எனும் போது, பயின்றதைப் பயன்படுத்தும் (அணீணீடூடிஞுஞீ) வகையிலான வினாக்கள். மாணவர் மன அழுத்தத்தினைக் குறைக்கும் வகையில், புத்தகத் தினைப் பார்த்து எழுதும் வகையில் சில தேர்வுகள். பள்ளிகள் அல்லாத சில வகைத் தேர்வுகளில் இப்போதே பார்த்து எழுதும் நடைமுறை உள்ளது. குறிப்பிட்ட சில வகுப்புகள் வரை தேர்வுகளற்ற நடைமுறை. சுய சிந்தனைக்கு வாய்ப்பு அளிக்கும் வகையிலான சிந்தித்து எழுதும் வினாக்கள். பிற்கால போட்டித் தேர்வுகளுக்கு இயல்பாகவே பொருந்தும் படி 60% ஒரு மதிப்பண் வினாக்கள். வாரம் ஒரு நாள் புத்தகமும், வகுப்புத் தேர்வுகளும் இல்லாத நடைமுறை. வகுப்பறையில் கற்றுக் கொண்டவை அல்லாது, வெளி உலகில் கற்றதைப் பகிரும், மேலும் அவற்றை வலுப்படுத்தும் நோக்கில், அதில் வினாக்கள் கேட்கப்படும் வகையில் மாதம் ஒரு நாள் தலைகீழ் மாற்ற (Fliped Class)வகுப்பறை. அனைத்துப் பள்ளிகளையும் தன்னாட்சியின் கீழ் கொண்டு வருவது இயலாது என்ற உங்கள் கருத்து ஏற்புடையதே.தகுதி அடிப்படையில் தன்னாட்சித் தகுதி பெரும் பள்ளிகளை மட்டுமாவது ஒருங்கிணைத்து செயல்படச் செய்யலாம்.
பள்ளிகள் தன்னாட்சி எனும் போது அரசுப்பள்ளிகளைத் தனியார் மயமாக்குதல் என்ற தவறான புரிதலும், அச்சமும் மக்களிடம் காணப்படுவதை உணர முடிகிறது. தன்னாட்சி என்றால், முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி,தனியார் பள்ளியாக இயங்குவது அல்ல. பல்கலைக் கழகங்களின் கீழ் வரும் அரசுக் கல்லூரிகள் போல, க்எஇ யின் கீழ் வரும் பல்கலைக்கழகங்கள் போல, இந்திய தேர்தல் ஆணையம் போல, இஸ்ரோ போல என்பது என் கருத்து. தன்னாட்சி அளிப்பதால், பெரிய அளவில் நிர்வாகம் செய்யும்போது ஏற்படும் சிக்கலும், தாமதங்களும் தவிர்க்கப்படும். தேவையற்ற பாடங்கள் பயில்வதற்குப் பதில் தனக்குத் தேவையானதை மட்டும் மாணவன் பயில முடியும். அதை நோக்கியே நம் பள்ளிக்கல்வித்துறை பயணிக்க ஆரம்பித்துள்ளது என்பது என் கருத்து.
ஆகவே மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கி, தன்னாட்சி என்றால் தனியார் மயம் அல்ல என்பதனை தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.


தினமலர் விளக்கம்: பள்ளியின் நிதி ஆதாரங்களில் சமூகத்தின் பங்களிப்பு பற்றி நாங்கள் கேட்ட விளக்கங்களைத் தாங்கள் விரிவாக, தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். பாடத் திட்டத்தில் வட்டாரக் கருத்துகளில் எவை இடம் பெறலாம் என்பதையும் விளக்கியிருக்கிறீர்கள். பள்ளிகளில் தன்னாட்சி என்பது அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, சில பள்ளிகளை அரசு தேர்வு செய்து, அறிவிக்கும் பொழுது, அப்பள்ளிகளுக்கு தங்கள் கருத்துக்களைத் தாங்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.


தன்னாட்சியைத் தனியார் மயமாக்குதலாகத் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக் கிறது. உறுதியாக, தன்னாட்சி என்பது தனியார் மயமாக்குதல் இல்லை என்பதை நாம் அடிக்கோடிட்டு உறுதியாக சொல்கிறோம்.

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement