Advertisement

உருது மொழி நாடு முழுவதற்கும் தேவையான ஒன்று: ஹமித் அன்சாரி

புதுடில்லி: '' உருது மொழி முஸ்லிகள் மட்டும் பேசும் மொழி அல்ல. நாடு முழுவதற்கும் தேவையான ஒன்று,'' என, முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த உருது மொழிக்கான இணைய தள துவக்க விழாவில் ஹமித் அன்சாரி பேசியதாவது:

பல நாடுகளில் பேசப்படுகிறதுஉருது மொழி என்பது முஸ்லிம் மக்கள் மட்டும் பேசும் மொழி அல்ல. நாடு முழுவதற்கும் தேவையான ஒன்று. ஆனால், உருது மொழியை அரசியல் பிரச்னையாக்கி விட்டனர். முஸ்லிம் மக்களுக்கு மட்டுமானது உருது மொழி என்ற தோற்றத்தை உருவாக்கி விட்டனர்.
தென் மாநிலங்கள், மேற்கு வங்கம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உருது மொழி பேசும் மக்களை எளிதில் அடையாளம் காண முடியும். கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் உருது மொழி பேசும் மக்கள் உள்ளனர்.
அன்றாட வாழ்க்கைக்கு உருது மொழி முக்கியமில்லை என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், அதற்காக அந்த மொழியை கற்க கூடாது என எந்த தடையும் இல்லை. இது தான் உருது மொழிக்கு உள்ள மிகப்பெரிய தடை. எனினும், மற்ற மொழிகளை விட உருது மொழியில் தெளிவாக கூறவும், விளக்கவும் முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (178)

 • srisubram - Chrompet,இந்தியா

  கணேஷ் தருண் அவர்களே : தங்கள் கருத்து கேவலமாக மிக மிக கேவலமாக உள்ளது. தயவு செய்து தமிழை இழிவு படுத்தாதீர்கள் . தமிழில் அனைத்து விதமான தேவைகளுக்கும் சொற்கள் , வாக்கியங்கள் உள்ளன . நாங்கள் ஒன்றும் , துளுவிலிருந்தோ , மலையாளத்திலிருந்தோ , கன்னடத்திலி இருந்தோ , சொற்களை எடுத்துக்கொள்ளவில்லை .. இன்று நீங்கள் உபயோகிக்கும் ஆங்கில சொல்லான Boss என்பதற்கு , எங்கள் தூய தமிழில் உச்சி என்று ஒரு பதம் உள்ளது . தமிழை பற்றி நன்கு உணர தெரிய வேண்டும் என்றால், முதலில் , தேவார , திருவாசக , திருப்புகழ் பாடல்களை படியுங்கள் , முடியவில்லை என்றால் , மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் வழக்கை வரலாற்றை படியுங்கள் , குறைந்த பட்சம் , உ வே சா அவர்களின் என் சரித்திரம் படியுங்கள் . பிறகு தெரியும் தமிழின் அருமை ..

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  பாஜக அரசு ஏற்கனவே சில நூறு வருடங்களுக்கு முன்பே தோன்றிய ஹிந்தியை வலுக் கட்டாயமாக திணித்து வருகிறது. இப்பொழுது ஹமித் அன்சாரியோ "உருது மொழி நாடு முழுவதற்கும் தேவையான ஒன்று" என்று மற்றொரு பூதத்தை அவிழ்த்து விட்டுள்ளார். ஏற்கனவே இஞ்சி தின்று, கள்ளைக் குடித்த குரங்காக செயல்படும் பாஜக அரசு இவரின் பேச்சுக்குப் பிறகு, "இஞ்சி தின்று, கள்ளைக் குடித்து, குளவி கொட்டிய குரங்காக" செயல்படாமல் இருந்தால் நல்லது.

 • Aarkay - Pondy,இந்தியா

  ஐயோ பாவம் An idle mind is a workshop of devils என்று சும்மாவா சொன்னார்கள்? மாமி வீட்டிலே அவருக்கு ஏதாவது வேலை கொடுங்கள் பையை கொடுத்து, ரேஷனில் சர்க்கரை வாங்கி வர சொல்லுங்கள்.

 • Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  ஹிந்தியே வேண்டாம் என்று சொல்லும்போது இவர் என்னடான்னா உருது பற்றி பேசுகிறார். நல்ல கிழம்

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் சொன்னாரு இந்த புண்ணியவான் இந்தியாவிலே எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று... இப்பொழுது புரிந்ததா மக்களே யாரால யாருக்கு பாதுகாப்பு இல்லை என்று?...

 • GOPALASAMY - bengaluru,இந்தியா

  உடனே , வீரமணி , திருமா , முத்தரசன் , ராமகிருஷ்ணன் அனைவரும் உருது படித்து ஷாஹிர் எழுத வேண்டும் தங்கள் மத சார்பின்மையை நிரூபிக்க . தமிழ் நாட்டில் உருது மொழியையும் ஆட்சி மொழி ஆக்க வேண்டும் . 100 வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் தமிழை அரபிக் மொழி லிபியில் எழுதி படித்தார்கள் . அதை கூட செய்யலாம் .

 • murugan - erode,இந்தியா

  எங்க ஆளுங்களுக்கு சமஸ்க்ரிதம்நல்ல மொழி னு சொன்னாதான் வையும் வயிறு எரியும் உருது மொழி பத்தி பத்தி பேசுனா மதசார்பிமைக்கு பங்கம் வந்துடும் னு மூடிக்குவாங்க ...

 • venkatesh - coimbatore,இந்தியா

  ஐயா இப்போ சொல்லற கருத்தையெல்லாம் பதவியில் இருக்கும்போது ஏன் சொல்லவில்லை.நீங்க இப்போ செல்லா காசு.பொய் ஓய்வு எடுங்க அதைவிட்டுட்டு சும்மா கண்டதையும் பேனாதாதீர்கள்.

 • Appu - Madurai,இந்தியா

  ஏண்டா இந்த ஆள் தான் இப்ப சரி இல்லையே?அப்பால எதுக்குடா பாவம் மாஞ்சு மாஞ்சு கருத்து சொரியிறீங்க?எங்கட வலிக்குது உங்களுக்கு?உண்மைகளை பேசுபவர்களுக்கு பின்னால் சுற்றும் நீங்கள் என்று பொயும் புரட்டையும் பேசுபவர்கள் பக்கம் உண்மையா திரும்பி பார்த்து திருந்த போகிறீர்கள்?

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  விழா என்று போனால் அவ்விழாவைப்பற்றி பெருமையாக பேசுவது இயல்பு தான்., விருப்பமான மொழியை கற்றுக்கொள்வதில் தவறில்லை., மொழிக்கு சிறப்புண்டு அதனை அரசியலாக்குவது முட்டாள்தனம்., சமஸ்கிருதம் ..அப்படி எப்படி என்று பேசுபவர்களுக்கு அன்சாரி பேச்சு கடுப்பை ஏற்படுத்தும்., நீங்க பேசினா மற்றவங்க கேட்கணும் அவர் பேசினா விமர்சனமா?

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  ஹரே பையா (HARE BAIYA) என்ற ஹிந்தி சொல்தான் பின்னாளில் அரே பையா (AREY BAIYA) என்று மாறி இன்று அரேபியா (ARABIYA) என்று மாறி விட்டது... ஆக, அரேபியா என்பதே ஒரு ஹிந்தி சொல்தான்...

 • yaaro - chennai,இந்தியா

  உருது என்பதே "horde " என்பதின் மரு..horde அர்த்தம் பார்த்தா புரியும் உர்துவின் மூலம்

 • Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து

  அருமையான திட்டம் ஹமீது அன்சாரி. காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை உருது மொழியை திணித்து விட்டால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுலபமாய் அந்தந்த மாநில மக்களுடன் கலந்து கன்னியாகுமாரி வரை சென்று நாசகார வேலையை சுலபமாக செய்யமுடியும். நல்ல முயற்சி, இந்த உருது திணிப்பு முயற்சிக்கு நம்ம தி.முன்னேற்ற கழக செயல் தலைவர் என்ன சொல்லறாரு?

 • Siva - Chennai,இந்தியா

  சுடாலின், வீரமணி, வைகோ, சீமான், திருமா, ஜல்லிக்கட்டு க்ரூப், இன்னும் பிற அல்லக்கைகள் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.

 • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  சூரியன் படத்துல கவுண்டர் டயலாக்: நாராயணா... இந்த கொசுத்தொல்ல தாங்க முடியல நாராயணா...பிஞ்சுபோன பிரஸ் தலையர் தொல்ல தாங்க முடியல நாராயணா

 • Indhiyan - Chennai,இந்தியா

  தமிழை ஒசத்தி பேசறவங்களுக்கு, இப்போ பேச்சு வழக்குல இருக்கிற மொழிக்கு பேர்தான் தமிழுன்னா தமிழைப்போல செதஞ்சு போன மொழி வேற எதுவுமே இல்லை. இப்ப நா எழுதி இருக்கிற இந்த பதிவை பார். முக்கா வாசி ஒடஞ்சு போன வார்த்தை, இப்படித்தான் நாம இல்லாருமே பேசறோம். இன்னும் ஒருபடி மேல போயி, உங்க வீட்ல இங்கிலீஷ் கலக்காம ஒரு நாள் பேச முடியுமா? சம்ஸ்க்ருதம் போலவே 'நல்ல தமிழ்' பேச்சு வழக்கில் அழிந்து விட்டது என்பதே வருத்தமான உண்மை. எவனாவது அஞ்சு 'பழங்கள்' கொடுன்னு கேட்பானா? அஞ்சு பழ(ம்) கொடு என்றுதான் எல்லாருமே கேட்கிறோம். பன்மைக்கான 'கள்' பேச்சு தமிழில் செத்து ரொம்ப காலம் ஆச்சு. பாரதி அன்றே சொன்னான் 'மெல்லத் தமிழினி சாகும், அந்த மேற்கு மொழி புவிமிசை ஓங்கும் '. அதை நாம் எல்லாரும் சேர்ந்து தமிழை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டு இருக்கிறோம். சும்மா தமிழ் உணர்வு இருக்கிற மாதிரி கூவினா பத்தாது.

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

  அட... அப்படியா....??? அதே போல “வாக்ரி போலி” மொழியும் நாடு முழுவதும் அவசியமான ஒன்றுதான்..... அதையும் தேசிய மொழியாக்குங்கள்.... அதற்குத்தான் எழுத்து வடிவமே கிடையாதே....??? உம்மை எல்லாம் இத்தனை காலம் துணை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்தது தான் காங்கிரசின் சாதனை....

 • SPB - Chennai,இந்தியா

  மோடிக்கு பதிலா இவரை பிரதமர் அக்கிருக்கலாம், புதிய உருது இந்தியாவை உருவாகியிருப்பாரு.... என்னமா திங்க் பண்ணிருக்காரு

 • cvm -

  அதெப்படி உருது எல்லோராலும் பேசப்படும் மொழி. புரியவில்லை. இந்திய, பாகிஸ்தான் மற்றும் வங்காள இஸ்லாமியர்கள் மட்டுமே உருது பேசுபவர்கள். மற்ற நாடுகளில் பேசப்படுமாயின், அவர்கள் இந்த நாட்டிலிருந்து குடிபெயர்ந்தவர் மட்டுமே.

 • SathishThangavelGounder -

  Now we can find out his color in public. his the one of the culbrate who had a big post.we should same on this.

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  மழை விட்டும் தூவானம் விடவில்லை . ஒய்வு பெற்றுவிட்டார் . பொழுது போவதற்காக ஏதாவது செய்யவேண்டாமா .இப்போது உருது மொழியை கையில் எடுத்துக்கொண்டு விட்டார் .குறிப்பாக தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு உருது மொழி இலக்கண சுத்தமாக பேசவராது ஏன் என்றால் மாலிக் கபூர் என்ற முகமதிய தளபதி தமிழ்நாட்டை ஊடுருவி ராமேஸ்வரம் வரை சென்று மக்களை அச்சுறுத்தி தனது ஒரு கையில் வாளையும் மறு கையில் குரானையும் வைத்துக்கொண்டு மக்களிடையே சென்று உங்களுக்கு என்ன வேண்டும் கத்தியா, குரானா என்று . குரான் வேண்டாம் என்றால் என் கத்தியால் கொல்லப்படுவீர்கள் ,குரான் வேண்டுமென்றால் முஸ்லிமாக மதம் மாறவேண்டும் என்று ஆர்ப்பரித்தான். தைரியமில்லாத மக்கள் குரான் வேண்டும் எங்களை கொலை செய்துவிடாதீர்கள் , நாங்கள் முஸ்லிமாக மாறிவிடுகிறோம் என்று அந்த மூர்க்கனின் காலில் விழுந்தார்கள் , அவர்கள்தான் தமிழ்நாட்டின் மதம் மாற்றப்பட்ட முஸ்லிம்கள் 'இன்று உருது மொழியை சரளமாக பேச அவர்களால் முடியாது .

 • Raji - chennai,இந்தியா

  முஸ்லிம்கள் என்றுமே முஸ்லிமாக மட்டுமே இருப்பார்கள் .... அவர்களுடைய எண்ணங்களும் செயல்பாடுகளும் என்றுமே சமத்துவம் வாய்ந்ததாக இருக்காது .....

 • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அப்படியானால் நீங்கள் பதிவியில் இருந்த போது ஆங்கிலத்தில் பேசிய பேச்சுக்கள் எல்லாம் முழுமை பெறாதவைகளா ?

 • Rajasekar Venkatesan - Singapore,சிங்கப்பூர்

  இந்த ஆளை முதல்ல பேச விடாம பண்ணனும். உட்டால் இந்தியாவில் முஸ்லிம்கள் மட்டும்தான் இருக்கணும் அப்படின்னு கூட சொல்லுவான்.

 • Vijay - Chennai,இந்தியா

  எங்கப்பா நம்ம தமிழ் போராளிகள்

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  பாஜ இந்தியை திணிக்க பார்க்கிறது... இவர் உருதுவை திணிக்க பார்க்கிறார்....ஆனால் உருதுவும் , இந்தியும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள்... இரண்டுமே எக்ஸ்டரா லக்கேஜுகள்... ஆக, சங்கம் வளர்த்த தமிழும், அழகான மொழியாம் ஆங்கிலமும் எங்களுக்கு போதும் ...

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  ஏன் இத்தோட நிறுத்திட்டீங்க? உருதுல தான் பேசணும், எழுதணும், மூணு பெண்களை கட்டிக்கணும், முத்தலாக் சொல்லணும், இன்னும் எவ்வளவோ இருக்கே

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  சமஸ்க்ரிதம் படிக்க வேண்டும் என்று சொன்ன போது பொங்கி எழுந்த அல்ல கைகள் எங்கே? போலி திராவிடர்கள் எங்கே? நமது நாட்டில் தொன்று தொட்டு இருந்து வரும் தமிழ் மற்றும் சமஸ்க்ரிதத்தை விட வேறு எந்த மொழிகளும் தேவை இல்லை. பேச்சு வழக்கில் இல்லை என்பதால் சமஸ்க்ரிதத்தை ஒதுக்கி விட முடியாது. ஜெர்மனியில் சமஸ்க்ரித மொழி மீது முழு ஆராய்ச்சி நடை பெறுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் சமஸ்க்ரித மொழியை , அதன் இயந்திர (மெஷின் லாங்குவேஜ் ) ஆக மற்ற முயற்சி செய்து வருகின்றனர். அப்படி வரும்போது மைக்ரோ சாப்ட் வேண்டாம் என்று பச்சைகளும் போலி திராவிடர்களும் ஒதுக்கி விடுவீர்களா? சமஸ்க்ரித மொழியின் சிறப்பை அறியாமலே அந்த மொழியை பழிக்கிறீர்களே முதலில் மொழியைக் கற்று பின் உங்கள் வடை சுடும் வேலையை செய்யுங்கள் .ஏசு கிருத்துவை வழி படும் டென்மார்க் நாட்டினர் பகவத் கீதையை சமஸ்க்ரித மொழியில் பள்ளிக்கு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கின்றனர். ஒரு அமெரிக்க பல்கலையில் பகவத் கீதை தியானமும் படிக்க வேண்டும் (அதில் 7500 பேர் கிறித்தவர்கள் ). வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது . சமஸ்க்ரிதம் தேவ பாஷை அதனால் வேண்டாம் என்று சொல்கிறீர்கள் . ஒரு உதாரணம் விபத்து நடப்பதால் வண்டியில் பயணம் செய்ய மாட்டேன் என்று கூறுவீர்களா? வளம் மிக்க மொழியின் சிறப்பை குறுகிய மனத்தால் கெடுக்காதீர்கள் . உருது மொழியை விட , கோடி மடங்கு நல்ல மொழி சமஸ்க்ரிதம் தான்

 • balaji -

  ivaruku Urdu inoru group Sanskrit nu soludu idu Enga poi mudia pogudu terila

 • dandy - vienna,ஆஸ்திரியா

  வங்காளி மொழி இந்திய மொழி அல்ல ..அது அன்று இந்திய நில பரப்பில் பேசப்பட்ட்து அவ்வளவே ...வங்காளி மொழி இலக்கிய திறன் கொண்டது மட்டும் அல்ல இன்று உலகில் பேசப்படும் மொழிகளில் 3 ம் இடத்தில உள்ளது ..இந்த மொழி கவிதை நோபல் பரிசு பெற்றது ..அனால் தமிழ் ??? சிந்தியுங்கள்

 • dandy - vienna,ஆஸ்திரியா

  மொகலாய ராணுவத்திட்காக உருவாக்க படட ஒரு செயற்கை மொழிதான் இந்த உருது .. இந்த ராணுவத்தில் பல மொழிகள் பேசும் வீரர்கள் இருந்ததால் ஒரு பொதுவான மொழியாக பல மொழிகளை சேர்த்து உருவானது

 • Mal - Madurai,இந்தியா

  Recently read in a history book that our constitution had plans to scrap off English after 1965.... And make hindi our national language.... But because of a few agitations it was not made compulsory in all states.... If only that had materialised we could have mingled freely with our fellow Indians easily...

 • Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா

  ஏன் எல்லோரும் அவர் மதத்தை அனுசரிக்க வேண்டுமா?

 • தேசிய பிற்படுத்தப்பட்டோர் மக்கள் முன்னணி - சோழர்கள் நாடு ,இந்தியா

  திருடர் முன்னேற்ற கலகம் இப்போது இதுகுறித்து என்ன நாடகம் நடத்தப்போறாங்க தெய்வத்துக்கு வெளிச்சம்

 • Kumar - Kuwait City,குவைத்

  எல்லா மொழிகளுக்கும் சிறப்பு உண்டு, அவரவர்களுக்கு நன்றாக தெரிந்த மொழி அவரவர்களுக்கு சிறந்ததாக அமையும், மொழியை வைத்து நமது உணர்வை தூண்டி அரசியல் லாபம் அடைய நினைக்கும் அயோக்கிய அரசியல்வாதிகளை புறக்கணிப்போம்.

 • தேசிய பிற்படுத்தப்பட்டோர் மக்கள் முன்னணி - சோழர்கள் நாடு ,இந்தியா

  ரைட்டு அடுத்து உருது எதிர்ப்பு நடத்தவேண்டும் டுமீல் போராளீஸ் நாம் டுமிழர் கட்சி இதுகுறித்து விளக்கம் அளிக்கவேண்டும்

 • வால்டர் - Chennai,இந்தியா

  எனக்கு கத்துக்கணும்னு ஆசைதான், என் நண்பர்களுக்கும்தான் எங்க அக்கவுண்ட்ல கொஞ்சம் பணம் போட்டு விட்டீங்கன்னா புக் வாங்கறதுக்கு யூஸ் பண்ணிப்போம்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  அடப்பாவிகளா? அடுத்ததா தமிழையும் ஸம்ஸ்க்ருதத்தையும்விட உருதுதான் உயர்வு எனக்கூட சொல்வாரோ? நான் தற்போது  கிடைப்பவற்றிலேயே பழைமையான தமிழ்நூலான தொல்காப்பியதிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட தூய சம்ஸ்க்ருத சொற்களை கண்டேன். சம்ஸ்க்ருதத்தில்கூட மீன் ஆணி பிரியம் போன்ற பல தமிழ்ச்சொற்கள் உண்டு. ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றியதாகச்சொல்வது  தவறு. இரண்டும் பாரதத்தாய் பெற்ற சகோதர மொழிகளே.

 • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

  இவர் வெகுவிரைவில் தீவிரவாதிகளை ஆதரித்தாலும் ஆச்சர்யப்பட முடியாது. மத வெறிபிடித்தவர் .

 • kc.ravindran - bangalore,இந்தியா

  மற்ற மாநில மொழியை படித்தே தீர வேண்டும் என்று திணிக்கும் செயல் வரவேற்க தக்கதல்ல. மற்ற மாநில மொழியை இழிவாக பேசுவதும் மனிதாபிமானமே அல்ல. காக்கைக்கு தன குஞ்சு பொன் குஞ்சு. இப்பொன்மொழி தமிழில் மட்டுந்தான் உள்ளது என்று கருதவும் வேண்டாம். இது உலகறியும் பொன்மொழி. முதலில் நீ வணக்கம் சொல். அவன் திருப்பி வணங்குவான்.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  உருது மொழியை ஏற்கமாட்டோம் என்ற ஒரே காரணத்துக்காகத்தானே பங்களாதேஷ் என்ற நாடே பிறந்தது.

 • Sanjisanji - Chennai,இந்தியா

  இவ்வளவு உயரிய பதவியை அளித்த பின்பும் தன் இனத்தின் வெறி அடங்கவில்லை இந்திய மக்களுடன் இணைய விரும்பவில்லை... தன் இன புத்தியை வெளிப்படுத்தும் இவனையும் நாம் துணை ஜனாதிபதி பதவிக்குவைத்திருந்ததற்கு வெட்கப்படுகிறோம்...

 • Rajathiraja - Coimbatore,இந்தியா

  ரொம்ப முக்கியம் தான் போ. இந்திய உருப்பிடாம போனதற்கு காரணமே பல்வேறு மொழிகள் தான். இருக்கிற இடத்திலேந்து 500 மைல் தாண்டி போய்ட்டா எதோ வேற்று நாட்டிற்கு போனதுபோல முழிக்கவேண்டியிருக்கு.

 • Veluvenkatesh - Coimbatore,இந்தியா

  ஐயா நீங்க இந்த மாபெரும் தேசத்தின் முன்னாள் துணை ஜனாதிபதி-பதவி போனபின் ஏன் இந்த பிதற்றல். உங்க கருத்து நீங்க சார்ந்த மதத்தின் பெயரால் வழி மொழியகூடாது. பதவியின் பெருமையை காப்பீர்-இல்லையேல் இந்த தேசம் உங்களுக்கானது அல்ல-உடனே நாடு மாறலாம்..

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  1 ) ஏம்பா இளஞ்சிங்கமே பதவியில் இருந்த வரை என்ன ஒரு பொறுமை? இப்போ என்ன பதவி இனி குடுக்க மாட்டாங்க ப்ரோமோஷன் (ஜனாதிபதியாக) குடுக்க மாட்டாங்க என்று தெரிந்ததும் ஏன்னா துள்ளாட்டம் இதை ப்பார்த்தல் அச்சு அசலாக திராவிட அறிவு துளிர் விடும் ஒரு முஸ்லீம் போல இருக்கின்றது. 2 ) ஹைதராபாதில் எப்படி பேசப்படுகின்றது உருது? - ஏ பஸ் "அபிட்ஸ்" ஜாரியோ (இந்த பஸ் "அபிட்ஸ்" போகுமா) இந்தியில் "ஏ பஸ் "அபிட்ஸ்" ஜாயேகா நொக்கோபா காய்க்கோ (வேண்டாம், எதற்காக?) இந்தியில் நஹி சாஹியே, கிஸ்கேலியே . அதாவது வார்த்தை மாற்றங்கள் ஆனா இந்துஸ்தானி உருது என்று சொல்லப்படுகின்றது. சில மாற்றங்கள் உள்ள அரபி எழுத்துக்கள் உருது எழுத்துக்கள் ஆனது.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  கீதையின் மூல மொழி கூட உருது என்று சொல்லவில்லையே... அதுவரை பிழைத்தோம்...

 • ganapathy - khartoum,சூடான்

  இறைவனுக்கு பிடித்த மொழி "மவுனம்"

 • PichamaniKumar -

  தமிழுக்கு பதில் உருதையே ஆட்சிமொழி ஆக்கலாமே. கிருத்துவர்க்கும் உபயோக படும்.

 • Ganesh Tarun - Delhi,இந்தியா

  ஹமீது அன்சாரி அவர்கள் சொல்வது உண்மை. உருது மொழி முஸ்லிம்கள் மட்டும் பேசும் மொழி அல்ல. முஸ்லிம் மக்களுக்கு மட்டுமானது உருது மொழி என்ற தோற்றத்தை உருவாக்கி விட்டனர். அதற்கு ஆதாரம் கொடுக்கப்பட்ட இந்த லிங்கை படித்து பாருங்கள். s://controversialhistory.blogspot.in/2009/11/myths-of-urdu.html

 • Antoni Raj - Uthamapalayam,இந்தியா

  அய்யா சாமி, பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின் கொஞ்சம் பெருந்தன்மையாக நடக்கக்கூடாதா ?

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  சரி சரி சண்ட போடாதிங்கப்பா, பாகிஸ்தானில் எவனும் ஹிந்தி பேசக்கூடாது, இந்தியாவில் எவனும் உருது பேசக்கூடாதுன்னு சொல்லிட்டு போங்கப்பா,

 • Nellai Ravi - Nellai,இந்தியா

  நம்ம தமிழன்டா குரூப் என்ன சொல்ல போகுது ?

 • SIVA POLLACHI - POLLACHI,இந்தியா

  இருக்க இடம் கொடுத்தா, படுக்க பாய் கேப்பானுக

 • srisubram - Chrompet,இந்தியா

  தமிழ் தெய்வ தமிழ் , தமிழனுக்கு தான் இறைவன் தமிழில் பேசியுள்ளான், ஒரு சொல்லை கொடுத்து ஒரு புராணத்தையே , சேக்கிழார் மற்றும் உமறுபுலவரை எழுதவைதான் . ஒரு ஏழை காக இறைவனே ஒரு கவிதையை கொடுத்தான் , அதனை கண்டித்தவரை , கண்டித்து காத்தருளினான் , ஒரு சொல்லை கொடுத்து திருப்புகழை கொடுத்தான் , தமிழில் பாடல்கள் கேட்டு தன் கோவில்களின் கதவை திறந்தான் .. முக்கியமாக ஒன்று உணர்வுகள் இயற்கையுடன் ஒன்று படும்போது , எம்மொழியும் , தெய்விக மொழியே .. பறவைகளுக்கும் , விலங்குகளுக்கும் , பாம்பிற்கும் மொழி கிடையாது , ஆனால் அவை மனிதர்களுடன் ஒன்றி வாழ்கின்றன , ஆனால் நாம் மனிதர்கள் ???????

 • Raghul Smart - mos,ரஷ்யா

  பேசாமே உருது எங்க அதிகமா பேசறாங்களோ அங்கேய் போய்டுங்க .ஹிந்தி எதிப்பு மாதிரி உருது எதிர்ப்பு பண்ண மாட்டாங்க பயதாகோயிலங்கெய்

 • Ganesh Tarun - Delhi,இந்தியா

  சமஸ்க்ரித மொழியின் ஒரு பரிமாணமான சௌரசேனி பாஷை பரிமாணம் அடைந்து ஹிந்துஸ்தானி என்று மாறியது. இருநூறு வருஷங்களுக்கு முன்பு ஹிந்துஸ்தானியில் இருந்து பிரிந்து உருது என்று தோன்றியது. எனவே சமஸ்க்ரித மொழியில் இருந்து தோன்றியது தான் உருது மொழி. உருது மொழியின் மூத்த சகோதரி ஹிந்தி.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  ஹிந்தியும் உருதுவும் சுமார் என்பது சதவிகிதத்துக்கும் மேல் ஒன்று போலத்தான் ..... ஹிந்தி எதிர்ப்பு என்று பச்சைத் தமிழர்களுடன் சேர்ந்து கொண்டு கூவும் பச்சைகள் இந்த உருதுத் திணிப்பை எதிர்ப்பார்களா ???? குறைந்த பட்சம் இவர் கூறுவதைக் கண்டிப்பார்களா ????

 • Prabaharan - nagercoil,இந்தியா

  உருப்படியான விஷயங்களை பேசினால் நல்லது. இருக்கிறமொழிகளுக்கு பெரிய அக்கப்போர். அதில் சமஸ்கிருதம் உருது இவை இல்லாததுதான் குறை

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  இஸ்ரேல் உருவாக்கப்பட்டவுடன் முதல் வேலை அவர்கள் செய்தது, யூதர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் இஸ்ரேல் குடிபுகலாம் என்றதும் ஹீப்ரூ மொழியை தேசிய மொழிஆக்கியதும், சரியான எல்லை வகுத்தது தான். இதை மூன்றையுமே நம்ம நேரு கான் சொதப்பியது மட்டும் இல்லை இன்று வரை மூன்று பிரச்சனைகளும் தொடர செய்ததுதான்.

 • Darmavan - Chennai,இந்தியா

  ராஜ்ய சபையை நடத்தும்போது கூட நான் கண்டது ( டிவி மூலம் ) பதவிக்கேற்ற பெருந்தன்மையோடு இல்லை என்பதுதான் .காங்கிரஸின் ஏஜெண்டாக நடந்ததுதான் .வேதனை பட வேண்டிய ஒன்று.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  \\\\ மற்ற மொழிகளை விட உருது மொழியில் தெளிவாக கூறவும், விளக்கவும் முடியும். //// இதெல்லாம் உனக்கே ஓவராத் தெரியல ????

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  பங்களாதேஷ் நாட்டுமக்கள் இந்திய மொழியான வங்காளத்தை தேசிய மொழியாக வைத்து உள்ளார்கள் . ஆனால் இந்தியர்களோ அந்நிய மொழியான ஹிந்தியை தேசிய மொழியாக வைத்து உள்ளார்கள் . சமஸ்க்ரிதம் தான் கடவுள் மொழி என்ற்றால் கண்டிப்பாக அந்த கடவுள் தமிழனுக்கு என்றுமே துணை வரமாட்டான் . இவன்னுங்க சமஸ்க்ரிதம் தான் கடவுள் மொழி என்கிறார்கள் , முஸ்லீம்கள் அரபு தான் கடவுள் மொழி என்கிறார்கள் , யூதர்கள் hebrew தான் கடவுள் மொழி என்கிறார்கள் . மொத்தத்தில் எல்லாம் கட்டுக்கதை என்று தெளிவாகிறது . உலகத்திலேயே பழமையான பேச்சு வழக்கத்தில் ஒரே மொழி தமிழ் தான் . தமிழ் தெரியாத கடவுள் எப்படி இருக்க முடியும் . அவருக்கு தமிழ் பிடிக்கவில்லை என்றால் அவன் கடவுளே அல்ல.

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  உருது மொழி தானே ஹிந்தி மொழி ?? அது எங்களுக்கு வேணாம் .. எங்க தமிழே போதும் ..

 • HSR - Chennai,இந்தியா

  தேர்தல்ல நிக்கப்போறீங்க அதுக்கு முசுலீமு வோட்டு வேண்டும்,,அவ்வளவுதானே ? அதுக்கு நீங்க இதெல்லாம் செய்யவேண்டியதே இல்லை ... உங்க அராபி பேர பார்த்தவுடனே ஓட்ட நச்சுன்னு குத்திடுவானே முட்டாப்பய ,, அப்புறம் எதுக்கு உ. ஜனாதிபதவி பேர கெடுக்குற ?

 • HSR - Chennai,இந்தியா

  தேர்தல்ல நிக்கப்போறார் போல ? என்னமோ பண்ணுங்கடா

 • Vimall - Rajapalayam ,இந்தியா

  அவனவனுக்கு வேண்டிய மொழியை கத்துகுங்கப்பா. முடியலையா? விட்டுடுங்க. இதைபோய் ஒரு பெரிய ப்ரிச்சனைனு ஆளாளுக்கு ஏதாவது சொல்லிக்கிட்டு. நாட்டில ரோடு சரி இல்ல, விலைவாசி உயர்வு, தண்ணி இல்ல, கரண்டு ப்ரிச்சனை, இன்னும் எவ்வளவோ இருக்கு. இத போய் பெருசா பேசிகிட்டு.

 • mrsethuraman - Bangalore,இந்தியா

  முதலில் உதவி ஜனாதிபதி தேவையா என்று சொல்லுங்க

 • velimalaya - Chennai,இந்தியா

  தேசிய கொடி ஏற்றும் பொழுது மரியாதையை செலுத்த கூட தெரியாதவர்தான் இந்த அன்சாரி.

 • PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  உருதுவும் ஹிந்தியும் ஒண்ணுதான்,,,,,,ரொம்ப வித்தியாசமென்னுமில்லை......இதெல்லாம் நீங்களும் மோடியும் வட இந்தியாவுல சொல்லுங்க.....இங்க செல்லாது.....போங்க போங்க....

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  இந்திய மொழிகளுக்கே இங்கு வேலை இல்லை, இவரு வெளிநாட்டு மொழியை பத்தி பேசுதாரு.....போவியா அங்கிட்டு....

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  இவர் சொல்வதை எல்லாம் இனிமேல் பேப்பரில் போடாதீர்கள்.

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு..

 • karthik - salem,இந்தியா

  உருது மொழி முஸ்லிம்களால் இந்துக்களிடம் பிரித்து கட்ட உருவாக்க பட்ட மொழி, இந்தி மொழியும், உருது மொழியும் ஒன்றுதான். எழுத்து வடிவம் வேண்டும் என்றே அரபி மொழி போன்று எழுத படுகிறது. பேச்சு வழக்கில் இரண்டிற்கும் அதிக வேறுபாடு இல்லை. என்ன கொடுமை பாகிஸ்தானியர்கள் இந்தி மொழி படங்களை இயல்பாக எந்த மொழி பெயர்ப்பும் இன்றி பார்க்கிறார்கள். இந்திய மக்களிடம் இயல்பாக பேசுகிறார்கள். ஹிந்தி தான் உருது. இதற்க்கு எதற்கு உருது மொழி இந்தியாவிற்கு வேண்டும்.

 • Vensuslaus Jesudason - Nagercoil,இந்தியா

  உருது இந்தியாவில் பரவலாக பேசப்பட்டாலும், அது எல்லோருக்கும் தேவையான மொழி என்று சொல்ல முடியாது. எல்லா மாநிலத்தவருக்கும் அவரவர் தாய்மொழிகள் உள்ளன. மேற்கொண்டு ஆங்கிலமும் உள்ளது. இதற்கு மேல் உருது தேவையா? எப்படி இந்தி தேவையில்லையோ அப்படியே உருதும் தேவையில்லை. இந்தியர்கள் எல்லோரும் அவரவர் தாய்மொழியையும் ஆங்கிலத்தையும் கட்டாயம் படித்தால் போதும். ஆங்கிலம் தெரிந்த ஒருவர் இந்தியாவில் எந்த மாநிலத்தவரோடும் பேசி தொடர்பு கொண்டுவிடலாம். ஆனால் வேறு எந்த பாஷையாலும் அது இயலாது.

 • Rajan -

  what does he mean by saying that non Muslims speak Urdu. let me know any other community which speaks Urdu than Urdu. I have nothing against Urdu. Its a beautiful language. I have LEARNT to speak it. his statement is misleading like all his ditherings.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  பாவம் இதுக்கு நேரம் சரியில்லை போலும், தவளையும் தன வாயால் ,,,, வந்தே மாதரம்

 • Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா

  திரு ஹமீது அன்சாரி அவர்களே, தமிழ் மொழி இலங்கை, சிங்கப்பூர், மலேயா, சீஷெல்ஸ், போன்ற நாடுகளில் அரசு மொழியாக உள்ளது. அதற்க்கு சொந்த வடிவம், இலக்கணம், பூர்விகம் எல்லாம் உண்டு. தமிழர்கள் இது குறித்தெல்லாம் தம்பட்டம் அடித்து கொளவதில்லை. உங்களை போன்ற மூத்த பதவியில் இருந்து வந்தவர்கள் சிந்தித்து நல்ல உபதேசமாக கூறினால் பயனளிக்கும். மக்களிடம் நன்மதிப்பு பெறும்.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  இவரா அந்த "உப ஜனாதிபதி" ( சமஸ்க்ரிதம் சொல்) பதவியில் இதுநாள் வரை இருந்தார்?

 • SIVA POLLACHI - POLLACHI,இந்தியா

  அப்படியே வெடி குண்டு தயாரிக்கவும் சொல்லிக்கொடுங்கள் ... அப்போதுதான் உங்கள் மனம் நிம்மதி அடையும்

 • MANI DELHI - Delhi,இந்தியா

  டெல்லியில் பல ஆண்டு காலமாக இந்தியா பாக்கிஸ்தான் பிரிவிற்கு பின் அங்கிருந்து இங்கு வந்த ஹிந்துக்கள் பலரும் நன்றாக உருது பேச தெரிந்தவர்கள் எழுதவும் தெரிந்தவர்கள் . ஆனால் கடந்த நாற்பது ஆண்டுகளாக டெல்லியில் உள்ள இஸ்லாமியர்களுக்கு ஹிந்தி தான் படிக்க வரும். சிலர் உருது நாளிதழ்களை படிப்பதை பார்ப்பதுண்டு. ஹிந்தி பேச தெரிந்தவர்களுக்கு உருது கற்பது பெரிய கடினம் இல்லை. ஹிந்தியே வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு இது புதிய மொழி தான். தமிழ் நாட்டில் பல இஸ்லாமியர்கள் வீட்டில் தமிழ் பேசுவார்கள் உருது பேசுவார்கள். அவர்களும் தூய உருது பேசுவதில்லை. பாகிஸ்தானியர்களுடன் அலுவல் நிமித்தமாக பழகியவன் என்ற முறையில் அவர்களுக்கு உருது தான் தாய் மொழி என்றாலும் நன்கு சரளமாக ஹிந்தி பேசுபவர்களுடன் எளிதாக பேசுவார்கள். இனிமேல் உருது கற்க வேண்டும் என்று சொல்வது நடைமுறைக்கு கடினம் தான். அதுவும் நமது மொழிகள் அனைத்தும் பொதுவாக இடமிருந்து வலம் தான் ஆனால் உருது வலமிருந்து இடமாகும். படிப்பதும் கடினம் எழுதுவதும் கடினம். மற்றபடி அவரது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஒரு மொழியின் பால் அவருக்கு உள்ள அபிப்ராயமாக தான் பார்ப்பது நல்லது.

 • Darmavan - Chennai,இந்தியா

  இந்த மாதிரி மொழி வெறி/ மதவெறி பிடத்தவர் து.ஜனாதிபதி பதவிக்கு தகுதியா ? போலி மத சார்பிமை பற்றி குலைப்பவைகள் இப்போது என்ன சொல்லும்.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  உருது பார்சி ( ஈரான்) அரபி ( சவூதி) , ஹிந்தி மற்றும் சமஸ்க்ரிதம் , தமிழ் , ஆங்கிலம் கலவை என்பதால் இது அனைத்து மொழியையும் அணைத்துக்கொண்டுள்ளது, உள்ளடக்கியுள்ளது . பேசும் மக்களும் அதிகம் . ஒரு 14 ,000 பேர் மட்டும் பேசும் சமஸ்க்ரிதம் தேசியமொழியாக அங்கீகரிக்கப்படும்போது , மிக அதிகம் பேசும் ,பல மொழிகளை கலந்துள்ள ஆங்கிலம்போலோர் மொழிக்கு ஆதரவு கொடுப்பது காலத்தின் கட்டாயம் .

 • kmish - trichy,இந்தியா

  மோடி பொழப்பு நடத்த இந்தி மொழி , நீ பொழப்பு நடத்த உருது மொழி , இப்படி அவன் அவன் வருவான்ங்க தெரிஞ்சு தான் , இந்திய அரசியல் சாசனத்தை எழுதுன அறிவு ஜீவிகள் அணைத்து இந்திய மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்தாங்க

 • rajan. - kerala,இந்தியா

  இந்த ஆளு இப்போல்லாம் அடிக்கடி உச்ச கட்டத்துக்கு போய்டுவான். எதுக்கும் நல்ல பார்த்துக்கோங்க எங்கேயாகும் ஓடி போகிற வரைக்கும்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  கொல்லன் தெருவில் ஊசி விற்கிறார்கள்.உலகத்தின் சிறந்த தொன்மையான செம்மொழிகள் ஸம்ஸ்க்ருதமும் தமிழும் இருக்குமிடத்தில் கலப்பட அந்நிய உருதுவுக்கு என்னவேலை?

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  இவருக்கு காங்கிரஸில் உயர்ந்த பதவி காத்திருக்கிறது... ஆனா பாவம், காலாவதியான மருந்தை வாங்கிட்டார்...

 • தமிழ் கண்ணு - Nellai,இந்தியா

  இருக்கற பிரச்சனை என்னால் தாங்க முடியவில்லை . இது வேற? தினமும் பெட்ரோல் விலை ஏற்றம் ? இறக்கம் என்பது இல்லை .

 • Vensuslaus Jesudason - Nagercoil,இந்தியா

  எது எவனுக்கு தேவையோ அது அவனுக்கு. ஒருவனுக்கு தேவையானது மற்ற எல்லாவனுக்கும் தேவையானது என்று சொல்லவே முடியாது.

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  நமது தாய் மொழியாம், தமிழின் சகோதரி, தேவ பாஷை சமஸ்க்ரிதத்தையே விட்டு விட்டோம், இதுல அந்த மூர்க்க மொழியை வேற வளக்கணுமா...

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  ஆமாம் எஜமானே... சமஸ்க்ரிதம் கத்துக்கணும் .... உருது கத்துக்கணும்.... ஹிந்தியும் கத்துக்கணும்..... ஆனா எங்க மொழியை எவனும் கத்துக்கமாட்டான் (நான் எல்லா தென் மாநிலத்துக்கு பொதுவாதான் சொன்னேன்).... ஹிந்தி கூட ஓகே.... நான் ஏன் சமஸ்க்ரிதமும் உருதுவும் கத்துக்கனும்?...

 • N.K - Hamburg,ஜெர்மனி

  உருது மொழி தெரிந்தால் பாகிஸ்தானியர்களோடு எளிதாக பேசலாம். நாடு முழுவதும் உங்கள் "அமைதியை" parappalaam

 • குணா -

  ஐயா பதவியில் இருந்த போது செய்திறுக்கவேண்டும். கருத்து மட்டும் போதாது.

 • Ramesh Sundram - Muscat,ஓமன்

  தமிழ்நாட்டில் உருது மொழி கட்டாயமாக படிக்க வேண்டும் என்றால் நமது திராவிடர்கள் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்பார்கள் ஏன் என்றால் பிரியாணி மீது இவர்களுக்கு பாசம் அதிகம்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  மேற்கிலிருந்து கொலை கொள்ளையடிக்க. வந்த முகலாயர்கள் உள்ளூரிலிருந்த ஐந்தாம்படையினரோடு தொடர்புகொள்ள தங்களது பாரசீகம் மற்றும் அரபியோடு உள்ளூரில் பேசப்பட்டுவந்த ஹிந்துஸ்தானி பஞ்சாபி போன்ற மொழிகளைக் கலந்து உருது (இங்கு தக்கனி) வை உருவாக்கினர்.அதற்கு சொந்த எழுத்துருவே இல்லை.அரபி எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர்.அவர்களே இப்போது ஆளவில்லை. இனியும் அதனை இங்கு வைத்திருப்பது அம்மொழியை ஆட்சிமொழியாக வைத்திருக்கும் பாகிஸ்தானுக்கே உதவும் .

 • kmish - trichy,இந்தியா

  இப்ப தெரியுதா உன்னை ஏன் ஜனாதிபதியா ஆக்குலன்னு, உன் சாக்கடை பேச்சி முன்னமே தெரிஞ்சு இருந்ததனால் தான் , துணை ஜனாதி பதவிக்கும் தகுதி இல்லாதா ஆள் நீ , திரு . அப்துல் கலாம் அவர்கள் எங்கே, நீ எங்கே , மத்திய அரசு இந்த ஆள் ஊர் சுற்றிய செலவுகளை மறுபடியும் இவரிடம் இருந்து வசூல் செய்யவும்

 • Balan Palaniappan - Chennai,இந்தியா

  ஒத் அப்படியா. சரிங்க . அப்படியே செய்யிறோமுங்க

 • CHANDRA GUPTHAN - doha,கத்தார்

  இவன் இன்னும் இங்கே தான் இருக்கானா? பாகிஸ்தானுக்கு பார்சல் பண்ணி அனுப்பு. இருக்கிற மொழிக்கே வேலை இல்லை, மதிப்பில்லை இதுல உருது வேற .

 • RamananLatvia -

  இவ்வளவு நாளா சும்மாதான இருந்தாரு

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  இந்தி மொழியே முஸ்லீம் மன்னர்களால் தான் இந்தியாவில் பரவியது . பெர்சியன் (ஈரான் ) , அரபு (உருது ) சமசுகிர்தம் கலந்து தான் இந்தி உருவானது . பாக்கிஸ்தான் மொழியும் ஹிந்தி தான் .

 • Balaji - Bangalore,இந்தியா

  உருது மொழி அப்பா அம்மா இல்லாத மொழி. பார்சி ( ஈரான்) அரபி ( சவூதி) ஹிந்தி மற்றும் சமஸ்க்ரிதம் கலந்த ஓர் மொழி. அன்சாரி அரசியல் செய்ய தொடங்கி விட்டார்.

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  ஏன் இந்தியாவில் இருக்கும் மற்ற மொழிகளில் தெளிவாக கருத்து சொல்ல முடியாதா?? தமிழ் மொழி சிறப்பு இவருக்கு தெரியுமா??

 • murugu - paris,பிரான்ஸ்

  அப்படி போடு அருவாளை

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்தியாவின் உதவி ஜனாதிபதியாக இருந்தவர், பாக்கிஸ்தான் மொழி மீது பற்று அதிகம், ,இந்தியாவில் பல மொழி இருக்கு அது அவருக்கு தெரிய வில்லை, இவரை உயர்ந்த பதவியில் உட்கார வைத்த காங்கிரஸ் இருக்கும் வரை இப்படி தான் நடக்கும்...

 • kmish - trichy,இந்தியா

  துணை ஜனாதிபதியா இருந்தப்ப மோடி கிட்ட சொல்லி இருக்க வேண்டியது தானே, இப்ப சொல்லி கிட்டு இருக்க, உண்மையாலுமே நீ சரியான ....

 • Appu - Madurai,இந்தியா

  கமான் ஸ்டார்ட் ம்யூசிக் பக்தால்ஸ்....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement