Advertisement

பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி-1

கல்வித் தரம் உயர வேண்டுமானால் கல்விச் சுதந்திரம் தேவை. இந்த சுதந் திரம் ஆசிரியர்களுக் கும் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் தான் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த, தகுதியான பள்ளிகளுக்கு தன்னாட்சி தருவது அவசியமாகிறது. இதை வலியுறுத்தும் வகையில் உருவாக்கி உள்ள கருத்துருவை, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வி செயலர் உதயசந்திரன், பாடத்திட்ட கலைத் திட்டக் குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன் ஆகியோரிடம் தினமலர் நாளிதழின் வெளியீட் டாளர் ஆர்.லட்சுமிபதி வழங்கியிருந்தார். இந்த கருத்துரு குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத் துகளை, தினமலர் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தினமலர் வாசகர்கள் சில கருத்துக்களைத் தெரி வித்துள்ளனர். அந்த கருத்துக்களையும் அவை தொடர்பான தினமலர் விளக்கத்தையும் இங்கே அளித்திருக்கிறோம்.


01.K.ANAND MCA MFM MPhil, PGITM, (Phd) ( abc4anandgmail.com)நல்ல யோசனை, ஜே.இ.இ., - நீட் போன்ற நுழைவு தேர்வுகளுக்கு ஏற்ப, மாணவர்களுக்கு, நாமே பாடத் திட்டம் உருவாக்கலாம். இதன்மூலம், கல்விப்புரட்சி ஏற்பட்டு, இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்டியாக மாறும். ஆனால் தமிழக அரசு ஆசிரியர்களை வைத்து ஒன்றும் செய்ய முடியாது தமிழகத்தில் எத்தனையோ பள்ளிகளில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு முறையாக படிக்காமல் பிரைவேட் எழுதி அதிலும் பலமுறை எழுதி பாஸ் ஆகி கரெஸ்பாண்டன்ஸ் பட்டம் பெற்று கரெஸ்பாண்டென்ஸ் பிஎட் பெற்று ஆசிரியர்களாக உள்ளனர். அரசு என்னதான் பாட திட்ட மாற்றினாலும் அது வேஸ்ட்தான் முதலில் ஆசிரியர்களின் கல்வித்தகுதி முக்கியம். இதற்கு அரசு ஆசிரியர் மாணவருக்காக தனியார் பள்ளி போல் காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும். அரசு சம்பளம் பெறும் எத்தனையோ ஆசிரியர்கள் மூன்று மணிக்கு எல்லாம் பிரைவேட் டியூஷன் எடுக்கின்றனர்.

தினமலர் விளக்கம்: எங்களது கருத்தை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.
நாம் கொண்டு வர விரும்பும் கல்விப் புரட்சியில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.பாடத் திட்டத்தை மாணவர்களிடம் எடுத்துச் செல்வபர்கள் ஆசிரியர் கள்தாம். ஆசிரியர்களின்றி எந்தவொரு கல்விப்புரட்சியும் நிகழ்ந்து விட முடியாது. திறமை வாய்ந்த, நேர்மையான ஆசிரியர்களே இல்லை என்று தாங்கள் கருதுவதுபோல் தெரிகிறது.இன்னும் நல்ல ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த கல்விப் புரட்சியில் நேர்மையான நிர்வாகத்தின் செயல்பாட்டினால் நல்ல ஆசிரியர்கள் உருவாவது அநேகமாக தவிர்க்க முடியாது.
பள்ளியில் இருக்க வேண்டிய நேரத்தில், இருக்காமல் ஆசிரியர்கள் பல மணி நேரம் முன்னதாகவே ட்யூஷன் எடுக்கச் சென்று விடுகின்றனர் என்று கூறியிருக்கிறீர்கள். இதில் உண்மை உண்டு என்றாலும் கூட, அத்தனை ஆசிரியர்களும் அப்படி செய்கின்றனர் என்று கூறுவது சற்றிலும் பொருந்தாது என நினைக்கிறோம். மேலும் தன்னாட்சி பெற்ற நல்ல நிர்வாகம் குறைகளைக் கண்டு கவனமாக நீக்கிவிடும் என்று கருதுவது தவறாகாது. கல்விப் புரட்சியின் மற்றுமொறு அங்கம் குறைகளை நீக்குவதுதான்02.நகு.சரவணன், ஆசிரியர், ந.ந.பள்ளி, மேட்டுப்பாளையம், திருப்பூர். (sarogod6gmail.com)பள்ளிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து அளிக்க வேண்டும் என்கிற உங்கள் ஆலோசனை இப்போதைய காலச் சூழலுக்கு சாலச் சிறந்தது.
இந்த ஆலோசனை குறித்த என் கருத்துகள்:
* தன்னாட்சி அந்தஸ்து பெறும் பள்ளிகளின் பல்வேறு குழுக்களில் ஆசிரியரையும், பெற்றோரையும், திறன் மிக்க மாணவரையும் இடம் பெறச் செய்யலாம்.
* நிதி ஆதாரங்களுக்கு முற்றிலும் அரசுகளையே சார்ந்திரா மல் சமுதாயத்தின் பங்களிப்பையும் பெறலாம்.
* உருவாக்கப்படும் பாடத்திட்டம் உலக போக்கிற்கு ஏற்ப வும்,அதே சமயம் வட்டார கருத்துகளையும் உள்ளடக்கியதாக அமைக்கலாம்.
* நிர்வாகக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் நியமனம் செய்யப்படாமல் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கலாம்.
* க்எஇ போன்று மாநில அளவில் அமைப்பு ஒன்று ஏற் படுத்தலாம்.
* ஒரு பள்ளியில் பயிலும் மாணவன் வேறு பள்ளிக்குச் செல்லும் போது பயில வேண்டிய பொதுவான பாடத் திட்டத்தினை வகுக்கலாம்.
* உள்கட்டமைப்பு ஏற்படுத்தும் பொறுப்பு உள்ளாட்சி களிடம் இருந்து பள்ளிகளுக்கு மாறும் நிலையில்,அதற்கான நிதி ஆதாரங்களை அரசுகளும், உள்ளாட்சிகளும் விடு விக்கலாம்.
* நெகிழ்வான தேர்வு மற்றும் மதிப்பீட்டு முறைகள் அமைக்கப்படலாம்.
* அனைத்துப் பள்ளிகளையும் இணைய வழி இணைக் கலாம்.
* ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகள் பின்லாந்து நாட்டினைப் போல தரமானதாக மாற்றப்படலாம்.
* திறமையான ஆசிரியரை வேறு பள்ளிகளுக்கும் அனுப்பி கற்பித்தலை மேம்படுத்தலாம்.
* பணிக்கால அடிப்படையில் ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படாமல், திறமை அடிப்படையில் வழங்கலாம்.
தினமலர் விளக்கம்: பள்ளிகளுக்கு தன்னாட்சி குறித்து தாங்கள் வழங்கியுள்ள யோசனைகள் சரியாகவும் ஏற்றுக் கொள்ளும்படியாகவும் உள்ளன. இருப்பினும் இது தொடர்பாக நாம் சில விளக்கங்களை வேண்டுகிறோம்.
* நிதி ஆதாரங்களுக்கு சமுதாயத்தின் பங்களிப்பைப் பற்றி தெளிவுபடுத்தவும். தனியார் பள்ளிகளுக்கு அந்தந்த நிர்வாகம் கவனித்துக் கொள்ளும்; அரசுப் பள்ளிகளுக்கு எவ்வாறு இந்த பங்களிப்பு இருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
* பாடத்திட்டத்தில் வட்டார கருத்துக்கள் என்ற விஷயத்தை மேற்கோளுடன் தெளிவு படுத்தவும்.
* நெகிழ்வான தேர்வு எம்முறையில் அமைய வேண்டும்?
* தன்னாட்சி என்பது உரிய தகுதியின் அடிப்படையில் அமைவதால் அனைத்து பள்ளிகளையும் இந்த திட்டத்தில் இணைப்பது சாத்தியமாகாது. தமிழ்நாட்டில் உள்ள 5 ஆயிரத்து 600 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் தன்னாட்சி என்பது இயலாத ஒன்று. தகுதியின் அடிப்படையில் சில பள்ளிகளில் மட்டும்- அதாவது மாவட்டத்திற்கு 10 அல்லது 15 பள்ளிகளுக்கு மட்டும் பரிசோதனை முறையில் தன்னாட்சி வழங்கலாம். இந்த பள்ளிகள் அரசு பள்ளிகளாகவோ, தனியார் பள்ளிகளாகவோ இருக்கலாம்.


உங்கள் கருத்தையும் பகிரலாம்!

பள்ளிகளுக்கான தன்னாட்சி குறித்த கருத்துரு மற்றும் பாடத்திட்ட மாற்றம் குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட சமூக ஆர் வலர்கள், தங்கள் கருத்துகளை, தினமலர் வெளியீட்டாளர், டாக்டர் ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம். தங்களின் எண்ணங்கள், கருத்துகளை, rlpdinamalar.in என்ற, இ - மெயில்முகவரியில் தெரிவிக்கலாம்.

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement