Advertisement

உலகில் அனைவரும் ஆனந்தம் உணர வழி என்ன?

சத்குரு இந்த உலகில் அனைவரும் ஆன்மீகத்தில் ஈடுபட்டு அன்பும் ஆனந்தமும் கொண்டவர்களாக மாறவேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
சத்குரு: அனைவரும் இன்னும் சிறப்பாக இருக்கவேண்டும், ஒருவருக்கொருவர் அன்பும் அக்கறையுமாக இருக்கவேண்டும், அதைநோக்கி இந்த உலகம் மாறவேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு மனிதருக்குமே இருக்கிறது. ஆனால், அதைத் தவறான இடத்திலிருந்து தொடங்க முயற்சிக்கின்றனர். தான் அன்பும் அக்கறையுமாக இருப்பதற்கு முன் மற்றவர் எல்லோரும் அன்பும் அக்கறையுமாக இருக்கவேண்டும் என்று நினைக்கின்றனர். ஒருவருக்கு அன்பும் அக்கறையும் எப்போதுவரும்?மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இருக்கிற நேரங்களில் அனைவரும் இயல்பாகவே அன்புடனும், தாராள சிந்தையுடனும், அற்புதமான மனிதராகவும் தான் இருக்கிறீர்கள். இதை உங்களிடமே பலமுறை நீங்கள் கவனித்திருக்க முடியும். அதேநேரத்தில் நீங்கள் மகிழ்வற்ற தன்மையிலும், மனவேதனையிலும் இருக்கும்போது காரணமில்லாமலே கூட அனைவர் மீதும் எரிந்து விழுபவராக இருக்கிறீர்கள். எனவே நீங்கள் முதலில் மகிழ்ச்சியானவராகவும் ஆனந்தமானவராகவும் மாறவேண்டியது முக்கியம். உங்களுக்குள் முதலில் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இல்லாமல் அடுத்தவர்மீது முயற்சி செய்து அன்புடன் இருக்க விரும்பினால் அப்படி அது நடக்காது. எனவே ஒவ்வொருவரும் தாங்கள் முதலில் ஆனந்தமும், களிப்பும் மிகுந்தவராக மாறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டும். மக்கள் ஆனந்தமாக இருக்கும்போது அற்புதமனிதர்களாக இருக்கின்றனர். மக்கள் ஆனந்தமாக இருக்கும்போது தங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் இயல்பாகவே அன்பையும் ஆனந்தத்தையும் பொழிகின்றனர். எனவே மனிதர்களை உண்மையாகவே ஆனந்தம் கொண்டவர்களாகச் செய்வதுதான் என்னுடைய ஒட்டுமொத்த வேலையாக இருக்கின்றது. அதற்கு ஆன்மீக செயல்முறை அவசியமாக இருக்கிறது. ஆன்மீகம் என்றால் வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்வது என்று பொருளல்ல. ஆன்மீகம் என்றால் முழுஅளவில் நீங்கள் உயிரோட்டமாக இருப்பதுதான். வாழ்க்கையின் மையம்வரையில் உயிர்ப்புடன் இருப்பது. எனவே உங்கள் மகிழ்ச்சியும் உயிர்த்துடிப்பும் அதிகரிக்க ஆன்மீகத் தேடுதலும் உதவுகிறது. ஆன்மீகம் என்பது எப்போதும் தாகமும், தேடுதலும் உள்ளடக்கியது.
நீங்கள் முதலில் ஆனந்தமானவராக மாறும்போது உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலை ஆனந்தமானதாக மாறுகிறது. உங்களின் ஆனந்தமான சூழ்நிலையே அடுத்தவரின் மனத்திலும் ஒருதாக்கத்தை ஏற்படுத்த முடியும். இப்படி சமூகத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஆனந்தமானவராக மாறும்போது ஒருவருக்கொருவர் அன்பும் அக்கறையுமாக இருப்பது இயல்பாகவே நிகழ்ந்துவிடும். அப்போது அந்த சமூகமே அற்புதமானதாக இருக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (19)

  • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

    இந்த சாமியார் மாதிரி மலைகளை அழிக்கவேண்டும்,. அடுத்து அரசியலில் உள்ள செல்வாக்கை பயன் படுத்தி, நதிகளை மீட்போம் என்று ஒரு பெரிய விளம்பரத்தை ஏற்படுத்துவோம்.பிஜேபி போன்று நதிகளை மீட்க மிஸ்டு கால் கொடுக்க செய்வோம். இப்படியெல்லாம் செய்தால் ஆனந்தம் பிறக்கும். இவரு அமெரிக்காவுக்கும் -இந்தியாவுக்கும் விமானத்தில் பறக்கும்.சாமியார்.

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

    முதலில் தான் ஆனந்தம் அடைந்தது எப்படி என்பதை வெளிப்படுத்தினால் . அதே வகையில் மற்றவர்கள் ஆனந்தம் அடையலாம் .. மறப்பாட்சிக்கட்டைகளும் ஆனந்தம் அடைவதில் வியப்பில்லை .. ஆனால் உலகம் அனைத்திற்கும் என்று சொன்னால் கிறுக்கன் என்பதல்லவா வெளிப்படும்

  • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

    எதை எல்லாம் நாமே செய்யமுடியுமோ, அதை எல்லாம் நம் முன்னோர்கள், யாருடைய போதனையும் இல்லாமல், சொந்த முயற்சியால், கற்று வாழ்க்கை என்பது கலையையும் விக்யானத்தையும் விட உயர்ந்தது என்றறிந்து வாழ்க்கையை செவ்வனே சீரும் சிறப்புடனும் நடத்தி செல்லவில்லையா? நம் வாழ்க்கையை வளம்படுத்துவதாக சொல்லி, தங்களின் வாழ்க்கை வசதிகளை, நம் கண்முன்னே பெருக்கிக்கொண்டவர்களை கண்டும் 'நம்மால் முடியும்' என்ற எண்ணம் ஏன் நமக்கு தோன்றவில்லை? தோன்றாதவரை சிலர் ஏற்றம் பெருவதை தடுக்கமுடியாது. எண்ணங்கள் தோன்றினால் சிலரின் எண்ணங்களையும், வண்ணங்களையும் அறிவதுடன், 'கூடா நட்பை' நம் ஏற்றத்துக்காக தவிர்க்கமுடியாத என்ன?

  • arabuthamilan - Manama,பஹ்ரைன்

    அட போய்யா....நீயும் உன் தத்துவமும். . காட்டுல உள்ள மரங்களையெல்லாம் வெட்டி நல்ல விலைக்கு கொடுத்து நாலு காசு பார்த்தா அதுவே ஆனந்தம்.

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

    இவருக்கு ஆதாவாராகவும் சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள் வயிற்றுப்பிழைப்புக்காக

  • குருவி - Chennai,இந்தியா

    ஒரு வினைக்கு எதிர் வினை இருந்தே தீரும். இதுதான் விதி. ஒரு உயிர் முற்பிறப்புகளில் செய்த பாவங்களையே இந்த ஜென்மத்தில் துன்பமாக அனுபவிக்கிறது. துன்பம் (மற்றும் இன்பம்) வேண்டாம் என்றால் நம் வினைகளை வேரறுக்க வேண்டும். அது எல்லாம் வல்ல இறைவனால் மட்டுமே முடியும். உலகியல் துன்பத்தில் இருந்து ஒருவரை விடுவித்து இன்பம் மட்டுமே அனுபவிக்க வைக்க இவரால் எப்படி முடியும் என்பதை விளக்கி கூற வேண்டும். துன்பத்தில் இருந்து எப்படியாவது வெளியில் வந்து விட வேண்டும் என்ற துடிப்பு அனைவரிடமும் உண்டு. அதை பலரும் பல்வேறு விதமாக பயன்படுத்துகின்றனர். அதில் இவர் எந்த ரகம் என்று மக்களுக்கு இறைவன்தான் உணர்த்தி அருள வேண்டும். அவனின் சங்கல்பத்தில்தான் இவ்வுலகமே இயங்குகிறது. நமது தமிழ் சமய இலக்கியங்கள் நமக்கும் பல்வேறு வழிவகைகளை அழகாக தொகுத்து கொடுத்துள்ளன. தயவு செய்து, மக்கள் அதை பிரமாணமாக கொண்டு ஆன்மீக பாதையில் பயணித்தால், ஆண்டவனின் அருள் நிச்சயம். திருச்சிற்றம்பலம்.

  • srafiqahmed - chennai,இந்தியா

    சத்குருஜி, எளிமையாக வாழ்ந்து பார் உன் வாழ்க்கை உன் கையில், ஆடம்பரமாக வாழ்ந்து பார் உன் வாழ்க்கை பிறர் கையில். என்று சொல்ல வேண்டும்

  • Rangaraj - Coimbatore,இந்தியா

    குருஜிஎப்போ ஆல் India tour போறீங்க நர்த்தலே சாமியார் சப்போர்ட் கிடைக்கும் நல்ல சாப்பிடுங்க பார்த்து வண்டி ஓட்டுங்க ஜாலியா ஆனந்தம் உணருங்க வாழ்க வளமுடன்

  • Rangaraj - Coimbatore,இந்தியா

    ஜக்கிவாசுதேவ் ஒன்னு தெரியுமோ உலகில் அனைவரும் அனந்தத்தினை உணர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இந்தமாதிரி ஒரு லிங்கத்தினை வைத்து உங்கள் வாழ்க்கையை(பொழப்பே) நடத்தி நீங்கள் உட்பட அனந்தத்தினை உணர்கிறீர்கள் இது ஒரு பக்கம் இருக்கட்டும் உலகத்தில் அனைவரும் அனந்தத்தினை உணரவைக்க எந்த சாமியாராலும் முடியாது ஏனென்றால் இதைப்பற்றி உண்மையான நேர்மையான கமர்ஷியல் இல்லாத விளம்பரம் இல்லாத சித்தர்களும் யோகிகளும் சிந்தைமிகு ஞானிகளும் ஏற்கனவே சொல்லியிருக்காங்கோ ஒருவன் துன்பத்தினை நுகர்ந்தால் தான் அவன் அந்நந்தினை உணரமுடியும் அப்படியென்றால் உலகில் அனைவரும் ஆனந்தம் உணர்வதற்க்கான வழி உலகில் அனைவரும் துன்பத்திநை நுகரவேண்டும் உலகில் இறைவன் அனந்தத்தினையும் துன்பத்தினையும் அதிகமுமும் இல்லமே கம்மியாவும் இல்லமே கச்சிதமா சரிசமமா படைச்சிருக்காரு என்ன ஒருத்தருக்கு ஆனந்தமாக தெரியறது மற்றவருக்கு சங்கடமா தெரியும் ஆண்டவன் அடைக்கதேலே யாரும் டச் பண்ண முடியாது கூடாது அவன் எல்லாவற்றையும் கரெக்ட்டா வெச்சிருக்கான் என்னமாதிரி உங்கள் மாதிரி ஆளுங்கதான் தப்புத்தப்பா சொல்லிகுடுக்கறோம் அவன் புல்லுக்கு புழுவையும் ,புழுவுக்கு புறாவையும் புறாவுக்கு வேடணையும் வேடனுக்கு விதியையும் வெச்சிருக்கான் இதுலே ஆனந்தமும் இருக்கு துன்பமும் இருக்கு அதனாலே ப்ளீஸ் குழப்பதிங்க குருஜீன்கர ஜக்கிவாசுதேவ்

  • Rangaraj - Coimbatore,இந்தியா

    குருஜி உலகில் ஆனந்தம் உணர சோகத்தினை சமாளிக்க உறவுகள் மேம்பட மேலும் நீங்கள் கூறும் அனைத்திற்கும் ஒரே ஒரு பதில் என்னெவென்றால் மனிதன் தன்னுடைய நவ துவாரங்களை சரியாக வைத்துக்கொண்டால் போதும். ஜீ செய்ய முடியறவன் சாதிக்கிறான் செய்யமுடியாத வன் போதிக்கிறான் சாமி நீங்க உங்கவேலயே செய்யுங்க அதுதான் கர்மா பயித்தியக்காரங்க நெறய பேருக்கு அதுதான் பிராப்தம்

  • Swamy - pondicherry,இந்தியா

    முதலில் உன்னிடம் உள்ள கோடி கணக்கான சொத்துக்களை , ஏழைகளுக்கு எழுதி கொடு , அப்புறம் ஆனந்தம் தானே வரும்.

  • Rangaraj - Coimbatore,இந்தியா

    உலகில் அனைவரும் ஆனந்தம் உணர அடைய தற்போதுள்ள நவீன சாமியார்களின் வெட்டி வேலைக்குஆகாத பிரசாங்ககளையும் பிற வேதாந்தங்களையும் கேட்காமல் நம் மனம் சொல்லும்படி நடப்பதே ஆகும் ஏனெனில் ஆனந்தமும் சங்கடமும் நம் மனதை பொறுத்ததே மற்றவர்கள் அதில் டச் பண்ணமுடியாது அறிவுள்ளவர்கள் இதனை உணர்ந்துகொள்வார்கள் அது இல்லாதவர்கள் இது போன்ற வேலையற்ற ஆன்மிகவாதிகளிடம் சென்று வேதனை தான் அடைவர் மென்டலாவர் ஒருபோதும் ஆனந்தம் அடையமுடியாது மகனே

  • magesh - gudalur,இந்தியா

    ஊரார் பணத்தை ஏய்த்து பிடுங்கி தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்து ஊரார் பெண்களுக்கு மொட்டை போட்டால் உலகில் ஆனந்தம் உணரலாம்

  • ananda - thirunelveli,இந்தியா

    தவறான நடக்கையில் மற்றும் ஒழுக்கங்களாலும் ஒருவன் ஆனந்தமாக இருக்க முடியும் அது தான் இந்நாட்களில் பருகி வருகிறது, தேசம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, தவறான ஆன்மீக கொள்கைகள் பலரையும் ஆனந்தம் என்ற போர்வையில் தவறான நடத்தைக்கு வித்திடுகிறது. இளம் தலைமுறையினர் அந்த விதமான ஆனந்த சுகத்திற்கு அடிமைகளாகி தங்கள் வாழ்க்கையை மட்டும் அல்லாது பிறருடைய வாழ்க்கையும் குடும்பங்களையும் ஆனந்தம் அல்ல , உண்மையான அமைதி சமாதானம் தான் முக்கியம் அது இல்லாமல் எந்த ஆனந்தம் இருந்தாலும் அது தவறான பாதையாகவே வெளிப்படும். துன்பத்தை சகிக்க வேண்டும், மன்னிக்க வேண்டும், உழைக்க வேண்டும் உதவி செய்ய முன்வரவேண்டும் என்ற காரியங்கள் தான் உண்மையான சமாதானத்தை தரமுடியும். அதினால் வரும் இன்பமே மெய்யான ஆனந்தமாக இருக்க முடியும், அது பிறருடைய இன்முகத்தக் காண செய்யும் தியாகமாக இருக்க வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement