Advertisement

அடுத்த கவுண்டமணி - செந்தில் நாங்க தான் ! - கலாய்க்கும் முல்லை - கோதண்டம்

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சந்தானம், சிவகார்த்திகேயன், மா கா பா என்று வரிசை கட்டி வரும் நேரத்தில், தற்போது அந்த லிஸ்ட்டில் சேர்ந்திருப்பவர்கள் முல்லை - கோதண்டம்.
* உங்களை பற்றிய அறிமுகம்
ரெண்டு பேருக்கும் கிட்டத்தட்ட 15 ஆண்டு பழக்கம். முதலில் லோக்கல் சேனல்ல வேலை பார்த்தோம். பிறகு 'டிவி'க்கு வந்தோம். கோதண்டம் சென்னையை சேர்ந்தவர். முல்லையாகிய நான் திருவண்ணாமலை மாவட்டம் கோனா மங்களம் பூர்வீகம். இப்போது நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நிகழ்ச்சிகள் செய்கிறோம்
* சின்னத்திரை டூ பெரிய திரை நடிப்பு எப்படி
நல்லா இருக்கு. சின்னத்திரை நம்ம எல்லார்கிட்டேயும் கொடுக்காத விசிட்டிங் கார்டு தான். எங்களை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு. மீடியா மூலம் வந்தது எங்களுக்கு பெரிய ப்ளஸ்
* காமெடி சீன்ஸ் எழுத டீம் வச்சிருக்கீங்களா
இதுவரை நாங்க பேனா, பேப்பர் எடுத்து ஸ்கிரிப்ட் எழுதினது இல்லை. கான்செப்ட் மட்டும் கோதண்டம் சொல்வார். அப்புறம் அதை பற்றி கொஞ்சம் யோசித்து வைத்து ஸ்பாட்ல ரெண்டு பேரும் பேசுவோம். அது இறைவன் கொடுத்த வரம். ஒரு குழு அமைத்து எழுதும் அளவு நாங்க வொர்த் இல்லை
* ஒருத்தருகொருத்தர் பேசும் போது குழப்பம் வராதா
நாங்க மேடைக்கு கீழே பேசினதை மேடைக்கு மேலே போய் பேச மாட்டோம். அப்படியே மாற்றிடிவோம். ஒருத்தருகொருத்தர் விட்டு கொடுத்து பேசிடுவோம்.முல்லை தான் வசனம் கான்செப்ட் பற்றி எல்லாம் ரொம்ப யோசிப்பார். நான் முகபாவனை. உடல் அசைவுகள் இப்படி எல்லாம் வைத்து சமாளித்து விடுவேன்.
* ரெண்டு பேரும் கணவன், மனைவியா நிறைய நிகழ்ச்சிகள் செய்றீங்க. உங்க வீட்டில் என்ன சொல்வாங்க
நாங்க ரெண்டு பேரும் எங்க போனாலும் ஒன்றாகத்தான் போவோம் வருவோம். நாங்க வெளியே இருக்கும் நேரம் தான் அதிகம். அதனால் எங்க ரெண்டு பேர் வீட்டிலும் சொல்ற வார்த்தை பேசாம நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு எங்காவது போய்டுங்க என்று திட்டுவாங்க. என் மனைவி அவருக்கு சகோதரி போல. அவர் மனைவி எனக்கு சகோதரி போல. அதனால் இப்படி பேச்சு வரும். கோதண்டம் மனைவி விவாகரத்து வரை போயிட்டாங்க. நான் தான் பேசி சமாதானம் செய்தேன். இதை தலைப்பா போற்றாதீங்க. சும்மா ஒரு பரபரப்புக்காக சொன்னேன்
* என்னென்ன படங்கள் நடிக்கிறீங்க
இப்ப ரிலீஸ் ஆக போகும் படம் பரணி இயக்கத்தில் ஒண்டிக்கட்டை என்று ஒரு படம். பட தலைப்பு வைக்காத மூன்று படங்களில் நடிக்கிறோம். விஷால் படம் இரும்பு திரையில் நடிச்சிருக்கோம். மை டியர் லிசா என்று ஒரு படம், ஊதா என்று ஒரு படம். கிட்டத்தட்ட எட்டு படங்களில் நடிக்கிறோம்.
ஹீரோவா நடிப்பீங்களா, இல்லை காமெடி மட்டும் தானா
நாங்க தெளிவா இருக்கோம். காமெடியன் மட்டும் தான். இந்த முகத்தை பார்த்தும் இப்படி ஒரு கேள்வி கேட்டுடீங்களே ?
கவுண்டமணி செந்தில் இடத்தை ....
அவங்க பெரிய லெஜென்ட். அவங்க இடத்தை கண்டிப்பா தொட முடியாது, அவங்க பண்ண காமெடிய மனதில் வைத்து, நாங்க தனி வழியில் போவோம். அவங்க ரெண்டு பேரின் செல்வாக்கு வேற. அவங்கள மாதிரி எங்களை மக்கள் சொல்வது சந்தோஷமா இருக்கு. கண்டிப்பா அவங்கள போல வருவோம்
* உங்களை மக்கள் மத்தியில் அடையாளம் தெரிகிறதா
என்ன இப்படி கேட்டுடீங்க. நாங்க போற நிகழ்ச்சிக்கு ரொம்ப கூட்டம் சேர்ந்து அமளி துமளி ஆகி கலாட்டா ஆகி... அப்படின்னு எல்லாம் சொல்ல மாட்டோம்.
குடும்பத்தோட வருவாங்க ரசிப்பாங்க. எங்க நிகழ்ச்சி பத்து நிமிட நிகழ்ச்சியா இருக்கும். ஆனால் எங்களோடு 'செல்பி' எடுக்க ஒரு மணி நேரம் வரிசையில் நிப்பாங்க. இதை தவிர்க்க முடியாது. இதுக்குதானே நாங்க இத்தனை வருஷம் நம்மை அடையாளம் காட்ட முடியுமா என ஏங்கி இருக்கோம். எல்லாமே மக்கள் தரும் சந்தோஷம் தான்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement