Advertisement

ஆஸ்கர் விருதை நோக்கி 2.0 - மனம் திறக்கம் ரசூல் பூக்குட்டி

'ஸ்லம் டாக் மில்லினியர்' படத்தில் சிறந்த ஒலி அமைப்பிற்காக ஆஸ்கர் விருது பெற்றவர்
ரசூல் பூக்குட்டி. சவுண்ட் டிசைனரான இவர் பல புதிய சப்தங்களை உருவாக்கியவர். ஷங்கரின் 2.0 படத்தில் பல சிறப்பு சப்தங்களை அமைத்து வரும் அவருடன் ஒரு சந்திப்பு.

* உங்களை அடையாளம் காட்டி பேச வைத்த படங்கள்?
ஸ்லம்டாக், பழஸிராஜா, எந்திரன், ரெமோ இப்படி சில படங்களை சொல்லலாம்.

* தற்போது வேலை பார்க்கும் படங்கள்

அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் 2.0 படம் (ரோபோ 2). ஜனவரியில் இப்படம் வெளியிட இருப்பதால் இப்போது இதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. அதன்பின் மலையாளத்தில் 'டிரான்ஸ்' என்ற படம், அதை தொடர்ந்து இந்தி படங்கள் மற்றும் குறும்படங்களில் வேலை பார்க்கிறேன். தமிழில் அடுத்த ஆண்டு சங்கமித்ராவுக்கான வேலை துவங்கும்.

* நீங்கள் சப்தத்தை உருவாக்குகிறீர்களா ; புதிதாக படைக்கிறீர்களா

திரையில் பார்த்து ஒளிக்கு, ஒலி கொடுக்கிறேன் என்றும் சொல்லலாம். இது கற்பனையும், ரசனையும் கலந்த வேலைதான். ஆனால் நம்பக்கூடியதாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு டயனோசர் சப்தத்தை அதற்கான அறிவியல் டெக்னாலஜி சிஸ்டம் உதவியுடன் நான் கண்டுபிடித்து உள்ளேன்.

* ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனின் குரலை பெண் குரலாக பேசவைத்தது பற்றி

சிவகார்த்திகேயனின் மேக்அப், டிரஸ் எல்லாம் பெண்ணாக இருந்தாலும், குரல் மட்டும் ஆண் குரலாக இருந்தது. சில டெக்னிக் இருக்கிறது. அதை பயன்படுத்தி பெண் குரலாக மாற்றினேன்.
பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டும் தான் நீங்கள் சவுண்ட் டிசைன் பண்ண முடியுமா?
ஒரு பெரிய படம் செய்தால், இரண்டு சிறிய படங்கள் செய்வேன். நிறைய இளைஞர்களுடன் வேலை பார்க்கிறேன். பட்ஜெட் ஒரு பொருட்டல்ல.

* ரோபோ 2

இந்த படத்தில் நிறைய வேலை இருக்கு. வில்லனுக்கு (அக் ஷய்) சிறப்பு சப்தங்கள் வைக்கப்பட்டுள்ளது. படம் முழுக்க வித்யாசமான ஒலிகள் கேட்கும். டில்லி விளையாட்டு மைதானத்தில் எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் சீன்... என, எனக்கு சவாலான காட்சிகள் நிறைய உள்ளன. எந்திரனில் சிட்டி, வசீகரன் என இரண்டு கேரக்டர்கள் தான். ஆனால் 2.0 வில் ரஜினியை தவிர யார் ஹீரோ என்றே சொல்ல முடியாதபடி ஒரு கடும் போட்டி இந்த படத்தில் இருக்கும்.

* ஷங்கரை பற்றி

ஷங்கர் நம்ம ஊர் ஜேம்ஸ் கேம்ரூன். எந்த ஒரு சீனையும் பிரம்மாண்டமாக எடுப்பார். அவருடைய பிரம்மாண்ட காட்சிகளுக்கு ஒலி வடிவம் மேட்ச் செய்வது எனக்கு பெரும் சவாலாக இருக்கும். இதில் இசையும், சப்தமும் சேர்ந்து ஒலிப்பது ஒரு விருந்தாக இருக்கும்.

* எமி ஜாக்சன் நடிப்பு

2.0 படத்தில் எமி ஜாக்சனை தவிர வேறு யாரும் இந்த ரோலுக்கு பொருந்தியிருக்க மாட்டார்கள். அவ்வளவு சிறப்பாக நடித்துள்ளார்.

* படம் 3டி -யில் வெளிவருவது குறித்து?

2.0 படம் பல திருப்பங்களை கொண்டது. இது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாகும். இது 3டி-க்கு மிகவும் பொருத்தமான படமாகும். ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக வந்துள்ளது. கதை சொல்லப்படும் விதம், நேர்த்தியாக எடுக்கப்பட்ட விதம்... ஷங்கர் இஸ் கிரேட்.

* 2.0 படத்திற்கு உங்களுக்கு மீண்டும் ஆஸ்கர் விருது கிடைக்குமா?

'உங்களுக்கு இந்த படத்தில் ஆஸ்கர் விருது கிடைக்கும்' என ரஜினி கூறினார். அவருடைய வாக்கு பலிக்கும் என நம்புகிறேன். என்னால் முடிந்தவரை படத்திற்கான தேவையான
அனைத்தையும் செய்திருக்கிறேன்.

* எந்த ஊர் திரையரங்குகளில் சிறப்பான ஒளி ஒலி சப்தங்கள் கேட்குமாறு அமைந்துள்ளன?

சென்னை, மும்பை, திருவனந்தபுரத்தில் சில திரையரங்குகள் உள்ளன. இதற்கெல்லாம் ஒரு ரசனை இருக்க வேண்டும்.

* படம் இயக்க போறீங்களாமே?
2.0 முடித்த பிறகு அதற்கான வேலை தொடங்கலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement