Advertisement

ஜி.எஸ்.டி.,க்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு: பிரதமர் மோடி

புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டதற்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நல்லது நடக்காது:பிரதமர் மோடி ராஜஸ்தான் எம்.பி.,க்களை டில்லியில் சந்தித்து பேசினார். அவர்கள் மத்தியில் மோடி பேசியது குறித்து பா.ஜ., சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது: தேர்தல் வெற்றிக்காக கடைபிடிக்கப்படும் மென்மையான பொருளாதாரக் கொள்கையால் நாட்டுக்கு நல்லது நடக்காது. இது நாட்டு மக்களுக்கும் தெரியும்.

அமோக ஆதரவு:நம் அரசு வரலாற்று சிறப்பு மிக்க பொருளாதார நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டதற்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் பா.ஜ., அரசு ஊழலற்ற நேர் வழியில் பயணிக்கிறது. இதை தான் மக்கள் விரும்புகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (207)

 • Abbas M - Doha,கத்தார்

  இவ்வளவு நல்ல திட்டமா இருந்தா எதிர்கட்சியாக இருந்த போது ஏன் மகாராசா எதிர்த்தீங்க

 • g.s,rajan - chennai ,இந்தியா

  மக்கள் ஜி எஸ் டி யை கொண்டு வந்ததுக்கு நல்லாத் திட்டித் தீக்கறாங்க அதைத் தான் வாழ்த்தா நினைக்கிறார் போல இருக்கு ஜி.எஸ்.ராஜன் சென்னை

 • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

  சூப்பர் மெகா ஜோக் .

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  GST யை பற்றி மக்கள் அதிகம் பேசும்படி வைத்து விட்டார் அவையெல்லாம் அரசுக்கு ஆதரவு என்று முழு பூசணிக்கையை ஒற்றை பருக்கையில் மறைக்க முயலுகின்றார். உலக வரலாற்றில் எங்குமே இல்லாத இவ்வளவு பெரும் தொகையை ஒரு ஏழை நாட்டில் நடத்தி மக்களின் அன்றாட வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டார். வெளிநாட்டு கம்பனிகளுக்கு வெண்சாமரம் வீசி, பெரும் பண முதலைகளுக்கு சலுகைகள் வழங்கி ஏழைகளை வதக்கி விட்டார். வெறும் 5 சதவிகிதம் வசூலிக்கு கனடாவில் மருத்துவம், கல்வியின் சலுகைகளை மக்களுக்கு வழங்குகின்றது. சாதாரணமான மக்களுக்கு இவ்வளவு பெரும் தொகையை வசூலித்து என்ன திருப்பி அவர்களுக்கு செய்ய போகின்றது. கல்வியை இலவசமாக்குமா? அனைவருக்கும் மருத்துவ வசதியை இலவசமாக்குமா?

 • krishnan - Chennai,இந்தியா

  எல்லா ஹோட்டல்களிலும் 100 ரூபாய்க்கு 10 ரூபாய் அதிகமாகி விட்டது.

 • baski - Chennai,இந்தியா

  ஜி.எஸ்.டி.,க்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு: பிரதமர் மோடி....இது மக்களுக்கு தெரியுமா...

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  ஒரு ஆண்டு முன்னர் வரை பாஜகவுக்கு ஆதரவா நிறைய கருத்துக்கள் இங்கு பதிவாகும்... ஆனால் இந்த கட்டுரைக்கு 80 % எதிர்மறை கருத்து தான் உள்ளது.... ஆக பாஜக படுபாதாளத்தில் விழுந்துகிடக்கிறது என்பதற்கு " ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் " என்பதற்கு பாஜக எதிர்ப்பு கருத்துக்களே அத்தாட்சி.... இதற்க்கு மேலும் நானும் , சொம்புகளின் "வெந்த புண்ணில்" வேல் பாய்ச்ச விரும்பவில்லை.....

 • K.Sugavanam - Salem,இந்தியா

  GST கொண்டான் வாழ்க வாழ்கவே..

 • g.s,rajan - chennai ,இந்தியா

  இந்திய ஜனநாயக சர்வாதிகாரி மோடிஜி ஜி.எஸ்.ராஜன் சென்னை .

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  GSt வரியால் தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் அதிக வரி செலுத்தும் நிலைமை. ஆனால் அதிக வாங்கிய மத்திய அரசு தமிழகத்துக்கு தரும் திட்டமோ மிகவும் குறைவு. இங்கே அள்ளிக்கொண்டு கிள்ளி தர தான் மத்திய அரசின் திட்டம்

 • Visu Iyer - chennai,இந்தியா

  அங்கே அங்கே gst போராட்டம் செய்யறாங்க.. அதை இவர் ஆதரவு என நினைத்து அறிக்கை விடுகிறார் போல..

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  ,மக்களே...உஷார்.......இவர் சொல்வதை பார்த்தால் அடுத்த அடி பேரிடிதான் இருக்கும்...

 • Arasan - Thamizhnadu,இந்தியா

  GST ஓகே அனால் அதை நடைமுறைப்படுத்துவது யாரு.? ஹோட்டல், மற்ற கடைகள் இஷ்டத்துக்கு விற்கிறார்கள். யார் இவர்களுக்கு கடிவாளம் போடுவது ? அரசா அல்லது வேறு யார். ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னே அதை பின்பற்றப்போகிறவர்களை முதலில் கடிவாளத்திற்குள் கொண்டுவர வேண்டும். ஆவர் செய்திருந்தால் விலைவாசியில் ஒளரவு இறக்கம் இருந்திருக்கக்கூடும். மக்கள் ஆறுதல் அடைத்திருக்கக்கூடும்.

 • Rajathiraja - Coimbatore,இந்தியா

  நானும் மீண்டும் ஒரு வாஜிபையின் ஆட்சியை எதிரிபார்த்தேன். ஆனால் இப்பொழுது நடப்பது வேறு. புத்தி உள்ளவர்கள் தான் ஏமாற்றப்படுவதை உடனடியாக புரிந்து கொள்வார்கள்.

 • MANI DELHI - Delhi,இந்தியா

  GST இந்த வரியினை எப்படி ஏளனப்படுத்தமுடியுமோ ஏளனப்படுத்துங்கள். சில கேள்விகள் என்மனதில் எழுகின்றன 1. என்றாவது சாதாரண மளிகை கடையில் பில் கேட்டு இருக்கிறீர்களா 2. மளிகை கடையில் பில் இல்லாது நீங்கள் வாங்கும் போது MRP விலை கொடுக்கிறீர்கள். என்றாவது கடைக்காரர் உங்களிடம் வசூலித்த வரியை அரசுக்கு செலுத்தியத்து உண்டா என்று யோசித்து இருக்கிறீர்களா. 3. யாரிடமாவது பில் கேட்டால் அவன் பில் கொடுத்தால் வரி போடுவேன் என்று சொன்னவுடன் பில் வேண்டாம் என்று சொல்லிவிட்டு மொத்த MRP விலையையும் கொடுத்து விட்டு வந்தால் நீங்கள் கஷ்டப்படுகிறீர்களா இல்லை கடைக்காரன் லாபம் பெருகிறார்களா. அப்படியும் நீங்கள் உங்களுக்கு தெரியாமல் வரி கட்டிவிட்டு தான் வந்து இருக்கிறீர்கள். அவன் அதை கணக்கிலும் காட்டுவதில்லை மற்றும் வரியையும் கட்டுவது இல்லை. 4. இதில் இன்னும் ஒரு வேடிக்கை என்றால் மொத்த வியாபாரிடமிருந்து பொருள் வாங்கும் போது சிறு வியாபாரிகளும் பில் வாங்குவதில்லை. பின்னர் இதற்கென்றே கள்ளக்கணக்கு எழுதி அதிலும் வரி ஏய்ப்பு. ஆனால் இவன் உங்களிடம் பொருளின் மேல் உள்ள விலையை கேட்கும்போது அவன் கொடுக்காத வரியையும் சேர்த்து கொடுக்கும்போது விலை உயர்வை நாம் கண்டு கொண்டதே இல்லை 5. எல்லாருக்கும் தெரியும் இந்த வரி போடுவதற்கு சிறு வியாபாரிகளுக்கு நிறைய சலுகைகள் அளிக்கப்பட்டு இருக்கிறது. 6. அம்பானி, அதானி பற்றி பேசுபவர்கள் பெரிய கார்போரேட்டுகள் இந்த வரி விதிப்புகளை முறையாக நடை முறை படுத்தியே ஆக வேண்டும் என்பதயும் மறக்காமல் நினைவு கொள்ள வேண்டும் 7. இந்த வரி விதிப்பினால் விலை ஏற்றம் உள்ளது என்பது உண்மை தான். ஆனால் அன்றாட பொருள்களின் விலையில் பெரிய மாற்றம் இல்லை என்பதே உண்மை. மேலே நண்பர்கள் கூறிய அத்தனை விலை உயர்வுகளும் வரியை ஒழுங்காக காட்டாத மற்றும் செலுத்தாத வியாபாரிகள் அந்த பணத்தையும் மக்களிடம் வசூலிக்க முற்படும் முயற்சி தான். இந்த வரிவிதிப்பின் படி அதிகமான பொருள்களின் விலை குறையவேண்டும். ஏன் ஏற்றி இருக்கிறார்கள். கலையுணர்வு மிக்க கலைஞர்கள் அளவுக்கு மீறிய சம்பளம் வாங்கும் போது சினிமா உரிமையாளர்கள் அதை உங்களிடம் தான் வசூலிப்பார்கள். அதை வைத்து பாப் கார்ன் விக்கிறவன் விலை ஏற்றினால் அதனை எப்படி ஒத்துக்கொள்கிறீர்கள். நவீன சினிமா அரங்குகளில் விற்கும் 250 ருபாய் தின்பண்டங்கள் வாங்கி உண்ணும்போது என்றாவது அதன் விலை 50 ருபாய் பெருமானது என்று தெரிந்தும் கேள்வி கேட்க முற்படுகிறோமா. அரசியல் வாதிகள் தனது சுய லாபத்திற்காக வரி எதிர்ப்பு என்று கோஷம் போடுகிறார்கள். நம்மையே அறியாமல் நாம் தகுதிக்கு மீறிய விலை கொடுக்கும்போது யோசிக்காமல், இன்று வெளிப்படையாக ஒரு வரி விதிப்பு வரும்போது சிந்திக்காமல் கருத்து சொல்ல முயன்று இருக்கிறோம். இங்கு கருத்து சொல்பவர்கள் அனைவரும் படித்தவர்கள் என்றே நம்புகிறேன். இரண்டு மாதம் விலை வாசிகளை மானிட்டர் செய்தால் உண்மை புலப்படும். பில் தர மாட்டேன் என்று சொன்னால் நீங்கள் பொருளின் மீதுள்ள விலையில் வரியை கழித்து தான் கொடுப்பேன் என்று சொல்லிப்பாருங்கள். வியாபாரிகளின் சுய ரூபம் தெரியவரும். ITC, ing stock Cenvat சலுகைகள் அத்தனையும் வியாபாரிகள் சுருட்டி கொள்ள தான் போகிறார்கள். உற்பத்தியாளர்களை விட வியாபாரிகள் தான் அதிக லாபம் அடைவார்கள். இந்த வரி விதிப்பில் அரசு, வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகைகள் விலை குறைப்பின் மூலம் சென்று அடைய வேண்டும் என்று சொல்லுகிறது. உண்மையை சொன்னால் நமக்கு வலிக்கிறது சொல்லாமல் நம்மை ஏமாற்றினால் நாம் அமைதியாக இருக்கிறோம். சிந்தியுங்கள் கருத்தாளர்களே.

 • என் தேசமே - erode,இந்தியா

  கருத்துக்களை படித்ததிலேயே தெரிகிறது GST ஆதரவு என்ன வென்று

 • PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  வாடகைத்தாய் கருவுக்கு சொந்தம் கொண்டாடுதாம்......

 • ராம.ராசு - கரூர்,இந்தியா

  GST க்கு முன்னாள் திருச்சியில் ஒரு ஸ்வீட் கடையில் 400 ரூபாய்க்கு இனிப்புக் காரம் வாங்கினேன். 403 ரூபாய்க்கான இனிப்புக் காரத்தைக் கொடுத்தார்கள். GST க்கு பிறகு அதே கடையில் அதே 400 ரூபாய்க்கு அதே பொருட்களை வாங்கியபோது 443 ரூபாய் வாங்கினார்கள். அதாவது வரியாக வாங்கப்பட்டது ரூபாய் 40. கண்டிப்பாக நமது பிரதமர் சொன்னது போல மிகவும் மன மகிழ்ச்சியோடு வந்தேன் என்பதை மிக்க மகிழ்ச்சியோடு பதிவு செய்கிறேன். கண்டிப்பாக விற்ற அந்தப் பொருட்களுக்கு input வரியை அந்தக் கடைக்காரர் வாங்குவார். அந்த வகையில் அந்தக் கடைக்காரருக்கு கூடுதல் வருமானம் கிடைக்கப்போகிறது. அதை நினைத்தும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அடைந்துதான் தீரவேண்டும். ஏனென்றால் GST வரியால், நாட்டுக்கு வருமானத்தைத் தந்துள்ளேன் என்பதற்க்காக மகிழ்ச்சி அடைவதைத் தவிர வேறு வழியே இல்லை. முன்பு 15% மாக இருந்த சேவை வரி 18% மாக உயர்த்தியதற்க்கு, சுங்க வரியை உயர்த்தியதற்க்கு, ரயில் கட்டணத்தை உயர்த்தியதற்க்கு, கடலை மிட்டாய் போன்ற வரியே இல்லாமல் இருந்த பொருட்களுக்கு 18% வரியை போட்டதற்காக இன்னும் மக்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்ற பொருட்களுக்கு போட்ட வரிகளுக்காக மக்கள் அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருக்கவே இருக்கின்றார்கள். இன்னும் கூடுதலாக வரியைப் போட்டாலும் நாட்டுக்காக என்று மக்கள் அதையும் கட்டுவதற்க்கு தயாராகவே இருக்கிறார்கள்.

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  தமிழ்நாட்டில் இத்தனை "அறிவாளிகள்" இருப்பதை நினைத்து மனசுக்கு நிறைவா இருக்கு....

 • g.s,rajan - chennai ,இந்தியா

  மக்களாகிய நாங்கள் உங்க ஆட்சியில ரொம்ப ரொம்ப எதிர்பார்த்தோம், உங்களை ரொம்ப நம்பினோம், உங்களைத் தேர்ந்து எடுக்க முழு நம்பிக்கை வெச்சு மனதார ஓட்டுச் சீட்டை நம்பிக் குத்தினோம் மக்கள் முதுகிலே நல்லாக் குத்திடீங்களே மோடிஜி ,நீங்க மகராசனா நல்லா இருக்கணும்

 • Hari Raj - Kuala Lumpur,மலேஷியா

  நீங்கல்லாம் ஓட்டு போடுவீங்களா அல்லது போடமாட்டிகளா என்பதை பத்தி கவலைப்படாமல் நாட்டின் வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுகிறது தற்போதைய அரசு.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  இந்த ஜி எஸ் டி என்பது நல்லதா கெட்டதா என்பதை காலம் தீர்மானிக்கும்.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  17 ஆண்டுகளாக விவாதத்தில் GST இருந்ததை செயல்படுத்திய மோடி குழுவினருக்கு பாராட்டுக்கள் காங்கிரேசின் தகுதிக்கு 25 பைசாவை ஒழித்தது பாஜகவின் தகுதிக்கு 1000 ரூபாயை ஒழித்தது. இரண்டும் நீண்டகாலத்தில் நற்பலனை தரும்

 • Visu Iyer - chennai,இந்தியா

  அங்கே அங்கே gst போராட்டம் செய்யறாங்க.. அதை இவர் ஆதரவு என நினைத்து அறிக்கை விடுகிறார் போல.. ஆமாம். மக்களை சந்தித்தால் தானே தெரியும்.. டெல்லி வரை வந்து போராட்டம் செய்த விவசாயிகளை கூட சந்திக்காத இவர் பதவியில் இல்லா பன்னீரை மட்டும் சந்திப்பது ஏன்?

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  " பா.ஜ., அரசு ஊழலற்ற நேர் வழியில் பயணிக்கிறது "....ஆமாம்...ஆமாம்....ஊழலற்ற அதிமுகவுடன் கூட்டு சேர்ந்திருப்பதே சாட்சி.....

 • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

  Modhiji should get real peoples reactions on GST instead of blowing his own trumpet of achievements.For MILK under GST no tax is levied but the milk prices have not been reduced even by a paise. Request Govt to find out the reality and then propagate your achievements if any.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  தமிழகத்தில் ஆட்சி நடைபெறவில்லை - அதை காரணமாக வைத்துக்கொண்டு வணிகர்கள் கண்டமேனிக்கு விலையை ஏற்றி விட்டு அதை மோடிதான் செய்தார் என்று கதை விடுகிறார்கள்... திமுக இதற்க்கு முக்கிய தூண்டுகோல். ஹோட்டல் தான் வாங்கும் மூலப்பொருள்களை செலுத்தும் வரியை அரசிடம் திரும்ப பெற்றுக்கொள்ளும்... பிறகு எப்படி விலை உயரும்?

 • Bava Husain - riyad,சவுதி அரேபியா

  திரு. மோடிஜி அவர்களே, எந்த சட்டம் அல்லது திட்டம் வகுத்தாலும், அது பாவப்பட்டவனை பாதிக்காதவாறு தவறு செய்பவர்களுக்கும், பணத்தில் புரளும் பணக்காரர்களுக்கும் தான் "கிலி" ஏற்படுத்தவேண்டும்... மாறாக உங்கள் திட்டங்கள் எல்லாம் பாவப்பட்டவனையே குறி வைத்து தாக்குகிறதே அது ஏன்? இந்த திட்டங்களால் பணக்காரர்களுக்கு சிறு நெருடல்கூட இல்லையே அது ஏன்? அரசாங்கத்தின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடையாததற்கு, அதிகாரிகளும்,சில அரசியல்வாதிகளும்,இடை தரகர்களும் என நீங்கள் நினைத்தால், அதைத்தானே முதலில் நீங்கள் சரி செய்திருக்க வேண்டும்? திரு. மோடிஜி அவர்களே, செவ்வாய்க்கு செயற்கைகோள் விட்டதாலும், வானுயர்ந்த கட்டடங்கள் எழுப்பப்படுவதாலும், தொழிற்சாலைகள் நிரம்பி வழிவதாலும் மட்டுமே, ஒரு நாடு வளைச்சியடைந்துவிடும் என நீங்கள் நினைத்தால் அது தவறு... பாவப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை எல்லாம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் இந்த அரசை, "மக்கள் அரசு" என்று எப்படி அழைக்க முடியும்??? "கார்ப்ரேட் அரசு" என்பதே சரி....

 • KrishnaMurthy -

  அதை நீ சொல்ல கூடாது செல்லாது செல்லாது

 • Mal - Madurai,இந்தியா

  Actually sirs I have a doubt.. I got halwa yesterday near Periyar bus stand... The bill read.. 120₹ for halwa, 3 for state GST and 3 for central GST.. is this correct... I paid ₹126 but don't know if they have a GST number for their business... Also, I have another doubt... Yesterday took my dad to an ENT hospital... The bill came to 302 but in the credit card I used they took 305... When I asked about this...they said... They usually charge like this for credit card.... Is this true....

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டதற்கு மக்கள் மத்தியில் வெறுப்பு தான் உள்ளது . மக்கள் இப்போது எதையும் எதிர்நடவடிக்கையாக காட்டிட முடியாது .அப்படிப்பட்ட ஜனநாயகம் . மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று RSS / காவிகள் /பசுநேசர்கள் கூவித்திரியலாம் . அதை பிஜேபி விளம்பர எச்சி துண்டு வாங்கி தின்னும் மீடியாக்கள் வெளியிடலாம் . தினம் 100 ரூ கூலி வாங்கும் சுமார் 60 % இந்தியர்கள் , வாங்கும் சம்பளத்தில் 18 டு 28 ரூ வரியாக கொடுத்துப்புட்டு , உங்களை வாழ்த்துவார்கள் ? . இதுல சொம்பில் , மஞ்சப்பையில் சேர்த்து வைத்த பணத்தை செல்லாது என்று கூவினீர்கள் . அதை மாத்த வங்கி வாசலில் பலநாள் . ஒரு RSS / பிஜேபி /காவிகள் எங்கள் முன்னாலயோ ,பின்னாலயே வரிசையில் வங்கி வாசலில் காணோம் . அவர்களிடம் செல்லாத பழைய நோட்டு இல்லை போலும் . நள்ளிரவில் வரிவிதிக்கும் அரசன் பற்றி திருவள்ளுவர் சொல்வது வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு. விளக்க உரை: நடு இரவில் கொள்ளைக்காரன் ஆயுதத்தைக் காட்டி மக்களிடம் பணம் பறிப்பது எவ்வளவு கொடுமையானதோ அவ்வளவு கொடுமையானது ஆட்சியாளன் நள்ளிரவில் சட்டம் இயற்றி தன் குடிமக்களிடம் அதிக வரி கேட்பது. மு.வரதராசனார் : ஆட்சிக்குரிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல், போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது. கலைஞர் கருணாநிதி : ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது சல்மான். சாலமன் பாப்பையா : தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக்கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம். இதை தான் இரவில் பாரளுமன்றத்தில் செய்தார்கள் . இதுல வரி கொடுக்கும் மக்களுக்கு வயிறு எரிகிறது . திட்டம் ,சட்டம் போட்டு கூலி என்று படி என்று , கமிஷன் என்று கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் ,அரசு ஊழியர்கள் , இடைத்தரகர்கள் , அரசிடம் பெரும் சிறு திட்டம் பேரில் சுழட்டும் அரசின் செல்லப்பிள்ளை தொலதிபர்கள் காட்டில்தான் மழை.இவர்களைத்தான் மக்கள் என்று மோடி ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டதற்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 • Bava Husain - riyad,சவுதி அரேபியா

  எல்லாம் சரிதான் மோடிஜி.... அந்த லோக்பால்...???

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  படித்தவர்கள் அனைவரும் மோடியின் பக்கம்தான். படிக்காதவர்களுக்கும் அந்த சலுகைகள் வீடுதேடி வருவது தெரிய ஆரம்பித்து விட்டது. இனி மோடி ராஜ்ஜியம் தான்.

 • siriyaar - avinashi,இந்தியா

  Here many people write comments looks like big misunderstanding. I hope negative mentality. First of GST not for increase or reduce the tax ( only tamilnadu and kerala says ola or uber is a wrong tem not allow inside station and airport). In practical GST reduces the complex tem and simplifies business management, previously due to lots of confusion for business owners also. Lots of forms for transfer goods between states, lots of check post, lots of loop hole to fraud. Lots of ways to do corruption ( like train ticket tester was doing got eliminated by good online solutions). Same way GST will eliminate lots of corruption, simplify the tem will give benefit like OLA. 28 % GST is combined tax ( which previously 12 % as excise , 2.5 % as sar, 14.5 as Vat ) now all combined. almost no change total tax on all products. But unfortunately tamilnadu people believe more on news than their brain, biased by politicians. But what Modi said is practical

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  இப்போது கசப்பு மருந்து கொடுக்கப்பட்டாலும் பிறகு நிச்சயம் இனிக்கத்தான் செய்யும்.

 • Ram - Panavai,இந்தியா

  சட்டி சுட்டதடா... கை விட்டதடா ..புத்தி கெட்டதடா

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  நாங்க பாட்டுக்கு சின்ன சின்னதா ஊசி குத்தி அது முனைல எலுமிச்சை பழத்தை தொங்கவிட்டு காவடி எடுத்துக்கிட்டு காலத்தை ஓட்டிக்கிட்டிருந்தோம் இவரு எல்லா ஊசியையும் எடுத்துட்டு ஒரே ஒரு கடப்பாரையை சொருகி அது முனைல பலாப்பழத்தை கட்டிட்டு இப்போ காண ஜோருன்னு சொல்றாரு

 • Snake Babu - Salem,இந்தியா

  ஏற்கனவே பணம் செல்லாத தாக்கியத்தில் மக்களை தெருவுக்கு கொண்டு வந்தீர்கள், அடுத்து GST கிஸ்தி போட்டு தெருவுக்கு கொண்டு வந்தவர்களை தெருவிலேயே நிறுத்தி வைத்திருக்கிறீர்கள். அத்யாவசிய பொருள் விலை ஏறிப்போச்சு, இதுகப்பரம் வேற என்ன கொடுமை நடக்கணும். நல்லா குத்திவிட்டு எகத்தாளமாக சிரிப்பது போல இருக்கிறது. நீங்கள் இப்போது கூறுவது.... கிஸ்தி நல்ல திட்டம் தான் ஆனால் அதை எவ்வளவு சொதப்ப முடியுமோ அவ்வளவு சொதப்பி கெடுத்து வைத்திருக்கிறீர்கள். மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நன்றி வாழ்க வளமுடன்.

 • Sandru - Chennai,இந்தியா

  அனைத்து இந்தியா மக்களும் மோடியின் கொள்கைகளால் பாதிக்க பட்டு இருக்கிறார்கள்.

 • Sandru - Chennai,இந்தியா

  இரவு எத்தனை மணி ஆனாலும், நாளை எந்த பொருள் விலையை உயர்த்தலாம், எந்த வரியை கூட்டலாம் என்று முடிவு செய்யாமல் அருண் ஜெட்லேயும், மோடியும் உறங்க செல்ல மாட்டார்கள்.

 • Saravanan - Chennai,இந்தியா

  தமிழகத்தில் டாஸ்மாக்குக்கும், ஓவியாவிற்கும் மட்டும் தான் ஆதரவு

 • Balaji - chennai,இந்தியா

  ஆமா ஆமா ரொம்பவே

 • R Sanjay - Chennai,இந்தியா

  அமோக ஆதரவு ஆஹா கேக்கவே காதுக்கு ரொம்ப இதமா இருக்கு. GSTயை வைத்து அனைத்து தொழில்துறை முதலாளிகளும் மக்களை மூடர்கள் ஆக்கிக்கொண்டு இருக்கிறார்கள். எவன் ஒருவன் GSTயால் விலையை குறைத்து விற்கிறோம்னு அறிவித்து இருக்கிறான் (கார் கம்பனிகளை தவிர்த்து) எல்லாரும் GSTயை காரணம் காட்டி பலமடங்கு பணத்தை உயர்த்தி புடுங்குறாங்க அவுங்களை உடனே தண்டிக்கமாட்டீங்க உடனே அல்லக்கைகள் சொல்வாங்க இது மாநில அரசு நடவடிக்கை எடுக்கணும்னு. இவங்களுக்கு எல்லாம் பதில் கூறும் விதமாக மக்கள் மன்றத்துல BJP யோட H ராஜா சொல்லி இருக்காரு டிசம்பர் 2017 வரை நாங்கள் பொறுமை காப்போம் இந்த GSTயால் விலை அதிகப்படுத்தும் கம்பனிகளின் நடவடிக்கைகளை வேடிக்கை மட்டுமே பார்ப்போம் அதன் பிறகு நடவடிக்கை எடுப்போம்னு. இது என்னய்யா கூத்து, GST அறிமுகமான அடுத்த ஆறு மாதம் தொழில்துறை நிறுவனங்கள் GST என்ற பெயரில் மக்களின் பணத்தை ஆறு மாதங்களுக்கு கொள்ளை அடிக்க விடுவார்களாம். பிறகு திருந்தாத தறுதலை தொழில்துறையை தண்டிப்பார்களாம் எப்படி? அப்போ மக்கள் அடுத்த 6 மாதமாக சாதாரண விலை கொடுக்கவேண்டியவற்றிற்கு அதிக விலை கொடுக்கிறார்களே கொடுக்கப் போகிறார்களே அதற்க்கு என்ன நியாயம் கொடுக்கப் போகிறீர்கள்? அடுத்த ஆறுமாதம் GSTயால் மக்கள் இழக்கும் பணத்தை யார் மீட்டுக்கொடுப்பது. இதில் இருந்தே தெரியவில்லை இது எவ்வளவு கேவலமா ஒரு ஆட்சி என்று. மளிகை சாமான் முதல் உயர்தர பொருட்கள் வரை இந்த தொழில்துறை நிறுவனங்கள் GSTயை காரணம் காட்டி அதிகவிலைக்கு ஏமாற்றி விற்பார்களாம் ஆனால் அரசு அவர்களை உடனே தண்டிக்காதாம்? மஹா கேவலம். அடுத்த ஆறு மாதத்திற்கு மக்கள் பணத்தை இழப்பது உறுதி. மக்களே அடுத்த ஆறு மாதத்திற்கு உங்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற விஷயங்களை வாங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்க. ஒரு சிறந்த உதாரணம் சொல்கிறேன் எனக்கு ஒரு புதிய INDANE GAS புக் செய்ய சம்மந்தப்பட்ட காஸ் ஏஜென்சியை தொடர்பு கொண்டபொழுது அவர்கள் GSTயை காரணம் காட்டி காஸ் சம்பந்தமான அனைத்து பொருட்களுக்கும் விலையை அதிகமாக கூறினார்கள் (நேரடியாக OFFLINE டீலர் கட்டணங்கள்:- GSTக்கு பிறகு GAS பைப்பை RS.200, STOVE RS.4100, ஸ்டவ் வேண்டாம் என்றால் வீட்டில் இருக்கும் பழைய GAS ஸ்டோவ்வை சரிபார்க்க Rs.296 ருபாய் கட்டணம், INSTALLATION கட்டணம் RS.150) இப்படி பல கட்டணங்கள் GSTயால் உயர்த்திவைக்கப்பட்டது. பிறகு INDANE ONLINE சேவையை நாடியபோது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது டீலர் கூறிய கண்டங்களில் இருந்து முற்றியும் மாறுபாடாக குறைந்து இருந்தது (INDANE ONLINE டீலர் கட்டணங்கள்:- GSTக்கு பிறகு GAS பைப்பை RS.170, STOVE RS.3800, ஸ்டவ் வேண்டாம் என்றால் வீட்டில் இருக்கும் பழைய GAS ஸ்டோவ்வை சரிபார்க்க 236 ருபாய் கட்டணம், INSTALLATION கட்டணம் RS.118).இதை பற்றி indane customer care க்கு கூறியபோது அதை ஒரு கம்ப்ளாயின்ட்டாக எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டனர், பிறகு நான் ONLINEலேயே என்னுடைய மொத்த கட்டணத்தையும் (இரண்டு சிலிண்டர் + மேற்க்கூறிய இதர கட்டணங்கள் சேர்த்து 3721 ருபாய் (ஸ்டாவ் நீங்கலாக)) செலுத்திவிட்டேன். இதே நான் நேரடியா அந்த டீலர் மூலம் தொடர்பு கொண்டு சென்று இருந்தேன் என்றால் எனக்கு 4500 ருபாய் பட்டை நாமம் தீட்டி இருப்பார்கள். பிரதமரே நிதியமைச்சரே அல்லது பிஜேபி சொம்புகளே அல்லைக்கைகளே நீங்கள் சொல்லுங்க இப்படி GSTயை காரணம் காட்டி மக்களிடம் பகல் கொள்ளை அடிக்கும் நிறுவனங்கள் அடுத்த ஆறு மாதத்திற்கு கொள்ளை அடிக்கப்போகின்றன இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் என்ன செய்யப்போகிறது? இங்கு மாநில அரசு பலவீனம் அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? H ராஜா சொல்லிட்டாரு வெறும் அடுத்த ஆறுமாதத்திற்கு வெறும் வேடிக்கை மட்டுமே பார்க்கும் என்று. மக்கள் தலையில் மிளகாய் அல்ல மாபெரும் அநீதியை மத்திய அரசு சுமத்திவிட்டு வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. ஒரு பிளானை கொண்டுவருவதற்கு முன்னாள் அதற்குரிய முன்னேற்பாடுகள் அனைத்தையும் சரிசெய்துவிடவேண்டும், அனைத்து தொழில் துறைக்கும் GSTக்கு ஏற்றவாரு மாற்றியமைக்க குறைந்தபட்ச்சம் பயிற்சியாவது கொடுத்திருக்கவேண்டும் இது எதுவும் செய்யாமல் இந்த பிஜேபி அரசு GSTயை கொண்டுவந்துவிட்டு மக்களை கசக்கி பிழிகிறது. நான் கூறிய ஒரு உதாரணம் அடர்ந்த காட்டில் உள்ள ஒரு மரத்திலிருந்து முறிந்து விழுந்த விழுந்த ஒரு சிறு இலைக்கு சமம். மற்றவிஷயங்களை கொஞ்சம் யோசித்துப்பாருங்க. மறுபடியும் சொல்கிறேன் மக்களே நீங்கள் வாங்கப்போகும்/ செய்யப்போகும் சில விஷயங்கள் ( TV, பிரிட்ஜ், கட்டில், மரச்சாமான்கள், டிரஸ், GOLD, வீடு, பாலிசி, திருமணங்கள், வீடு கட்டுதல்/வாங்குதல், வீட்டு உபயோகப்பொருட்கள், மற்றும் முக்கியமான அனைத்தும்) ஒரு ஆறுமாதத்திற்கு தள்ளிப்போடுங்க, மக்கள் இழக்கப்போகும் பணத்திற்கு அரசாங்கமோ அல்லது கொள்ளை அடித்த தொழித்துரையோ திரும்ப கொடுக்காது நாம் தான் நம்மை நம் பணத்தை பாதுகாத்துக்கொள்ளவேண்டும். தயவுசெய்து இந்த GST சூழ்ச்சியை புரிந்து கொள்ளுங்கள்) இந்த கேடுகெட்ட ஆட்சியால் நம் பணம் நம் கையாய் விட்டு போவதை முற்றிலும் தடுக்கமுடியவில்லையாயினும் குறைத்து கொள்ளமுடியும். செய்வீர்களா நீங்க செய்வீர்களா?

 • g.s,rajan - chennai ,இந்தியா

  இந்தியாவில் பிறக்க ,இறக்க நடக்க ,மூச்சு விட ,தூங்க ,சேவை வரி போட்டாலும் மற்ற எந்த வகையிலும் வரி போட்டாலும் மக்கள் அதைக் கட்டத் தயாரா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்காங்க நல்ல வரவேற்போட இருப்பாங்க மோடிஜி,வரி என்பதே தொலைந்த நமது நாட்டைக் காக்கத் தானே மோடிஜி அப்புறம் என்ன வரி எதுவா இருந்தாலும் எப்படி இருந்தாலும் போடுங்க. ஒன்னும் தப்பே இல்லை போடுங்க, போடுங்க,போட்டுக்கிட்டே இருங்க நாங்களும் ஏமாந்த சோணகிரிகள் தானே ,தவறாம கட்டிக்கிட்டே இருக்கோம் .

 • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

  மெகா ஜோக் .

 • L.Pannneerselvam - chennai,இந்தியா

  ஜிஎஸ்டி யை ஏற்றைக்கொண்டோம் என எந்த மக்கள் வந்து சொன்னார்கள்? தலையெழுத்தே என ஏற்றுக்கொண்டிருக்கலாம், அல்லது பாறாங்கல்லில் நார் உரிக்கமுடியாது என நினைத்திருக்கலாம். இவர்கள் எதை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளபோவதுல்லை என்ற அவநம்பிக்கையோடு ஏற்றிருக்கலாம். கண்டிப்பாக யாரும் மனமுவந்து ஏற்றிருக்கமாட்டார்கள் இந்த மாதிரியெல்லாம் பேசி மக்கள் வயிற்றெரிச்லை கொட்டிக்கொள்ளாதீர்கள் மோடி அவர்களே

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  பிரதமர் ஐயா, சில கிணற்று தவளைகள் எப்போதும் கத்திக் கொண்டுதான் இருக்கும்...திருடர்களையே, திருட்டு கயவாளித் தனத்தையே பார்த்து பழகியவர்களுக்கு புரிய இன்னும் கொஞ்ச கால அவகாசம் பிடிக்கும்...இந்த புதிய வரி அமைப்பை எதிர்ப்பவர்கள் எல்லோரும் எவ்வகையான கட்டுப்பாடுகள் இல்லாத கோவில் காளை மாதிரி தெரிந்தவர்கள்...அரசை, மக்களை ஏமாற்றி வந்த கும்பல்...அவர்களின் தவறான தூண்டுதல்களை ஒரு சில மக்களும் நம்புகின்றனர்..எப்போதும் உண்மையை உணர கொஞ்சம் புத்தியும் கால அவகாசமும் தேவை...

 • Sarthar sirajudeen - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  போங்கடா நீங்களும் உங்க அரசியலும் பாவப்பட்ட ஏழைகளை வாழ விடுங்கடா .

 • CJS - cbe,இந்தியா

  இந்த மத்திய அரசு வந்ததிலிருந்து அனைத்திலும் வரி. வரி வரி வரி. அனைத்திலும் விலை ஏற்றம். ரயில்வே, காஸ், பெட்ரோல். இப்போது புதிய பூதம் GST(கிஸ்தி). நம் மக்கள் அனைவரும் இந்தியர்களாய் இருப்பதினால் அனைத்தையும் பொறுத்து கொள்கிறோம்.

 • Sandru - Chennai,இந்தியா

  முதல் தர நடிகன்டா

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  ஆஹா..ஓஹோ..நாட்டு மக்கள் எல்லாம் ரொம்ப நல்லவங்க எவ்ளோ அடிச்சாலும் தாங்குறானுங்க..அமோகம்..அமோகம்..சூப்பரு இன்னும் அடிங்கன்னு சொல்றானுங்க.

 • FIRDOUS - chennai,இந்தியா

  ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி., அமல், இதோடு பழைய முறையில் (voting Machine இல்லாமல்) தேர்தலை நடத்தினால் மக்கள் மேலும் சந்தோசம் அடைவார்கள்.

 • A.Gomathinayagam - chennai,இந்தியா

  அவர் மக்கள் என்று கூறுவது தன்னை சுற்றி இருப்பவர்களையா?

 • தாமரை - பழநி,இந்தியா

  GST அமுலுக்குப் பிறகு தமிழகத்தில் பெரும்பாலான பொருட்களுக்கு விலை அதிகமாகவே உள்ளது. கடைக்காரர்கள் ஒரு கிரைண்டர் GST க்கு முன்னர் 8500 /- என்றவர்கள் இப்போது 9000 /- கேட்கிறார்கள். ஒரே தேசம் ஒரே வரிக்குப்பின்னர் வீட்டு உபயோகப் பொருட்களின் விலை குறைவுதான் என்று கேட்டதற்கு அதெல்லாம் சும்மா என்று கடைக்காரர்கள் சொல்கிறார்கள். ஓட்டலில் சாப்பிட்டால் சர்வ சாதாரணமாக ரூபாய் 20, 30 அதிகமாக GST என்று போட்டு ஒரு ஆள் சாப்பாட்டுக்கே வாங்குகிறார்கள். இதெல்லாம் எங்கோ ஸ்டார் ஓட்டலில் அல்ல. சாதாரண தாராபுரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஓட்டலில்தான். சாதாரண வால்போஸ்ட்டருக்கு கால்பங்கு விலை கூடியுள்ளது. எனக்குத் தெரிய ஜீனி மட்டும்தான் இந்த வரியால் விலை குறைந்ததாக கடைக்காரர்கள் கூறுகிறார்கள். இந்த வரியை பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் பா ஜ க அடுத்த தேர்தலில் பெரும் விலை கொடுக்க வேண்டும். அப்படி நடந்தால் பிரதமர் இவ்வளவு உழைத்தும் அது வீணாகிவிடும். மத்திய அரசு உடனே விழித்துக்கொள்ள வேண்டும்.

 • krishnan - Chennai,இந்தியா

  டுபாகூர்

 • A shanmugam - VELLORE,இந்தியா

  யார் சொன்னது GST க்கு மக்கள் மத்தியில் ஆதரவு? ஏழை நடுத்தர மக்கள் கொதிப்பில் உள்ளார்கள் என்பது மோடிஜி அவர்களுக்கு தெரியாது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்த சேவை வரி 12 .5%, 13 .5 % மாறி இப்போ 18 .5 % விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் Rs .10000 /- கீழ் உள்ள சம்பளக்காரரர்களின் நிலை என்ன என்பதை மோடிஜியும் அருஞ்சைட்லயும் உன்னரமுடியாது. எதோ பிஜேபி ஜாலராடிக்கும் மக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் இது ஒட்டுமொத்த இந்திய மக்களின் ஆதரவு பெறப்பட்ட தகவல் இல்லை?

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  GST யினால் பெரும் நிறுவனங்கள் எக்ஸைஸ் க்கு ஒரு கணக்கு, சேவை வரிக்கு ஒரு கணக்கு, மாநில வாட் வரிக்கு ஒரு கணக்கு என்று பல வரி சட்டங்கள் படி பல்வேறு ரிட்டர்ன்கள் தாக்கல் செய்ய வேண்டிய தொல்லை குறைகிறது... செக் போஸ்டுக்கள் கெடுபிடி, லஞ்சம் குறையலாம் ... ஆனாலும் இதில் சிறு வியாபாரிகள்(வருடம் 20 லட்சம் வியாபாரம் மேல் விற்பனை உள்ளவர்கள்) கணக்கு வைத்து கொள்ளும் சிரமம் ஏற்படுகிறது... மற்றவர்களுக்கு முன்பு VAT இருந்ததால் அதன் நீட்சி என்றே இதை சொல்லலாம். பெரிய மாற்றம் இல்லை (EXCEPT FILING OF THEIR SALES DETAILS).. ஒரே நாடு ஒரே வரி என்ற கோசம் நன்றாக இருந்தாலும் , மாநிலங்களுக்கு தனி தனி பட்ஜெட் இருப்பதால் மாநில அரசுகளின் வரி வசூலிக்கும் அதிகாரம் இதன் மூலம் பெருமளவில் பாதிக்க படுகிறது ...

 • wellington - thoothukudi,இந்தியா

  எல்லா திட்டங்களையும் மக்களிடம் வலுக்கட்டாயமாக திணித்துவிட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று சொல்வது சர்வாதிகாரத்தனம், இது எப்படி இருக்கு என்றால் ஒருத்தனுக்கு வாயையை திறந்து விஷத்தை ஊற்றிவிட்டு அவன் ஏற்றுக்கொண்டுவிட்டான் என்பது போல் இருக்கு ,

 • புதுகை வானம்பாடி - புதுக்கோட்டை,இந்தியா

  ஐயா..... அம்பானி டாடா பிர்லா அதானி.. இவங்க இல்லையா நாட்டு மக்கள்... நீங்க தவறுத்தால் இவங்கங்க தான் நாட்டு மக்கள்னு நினைச்சுக்கிட்டு பேசுறீங்க.. ஏற்கனவே 100க்கு 5% tax போட்டு 105 க்கு வாங்கின பொருளுக்கு இப்போ 100 க்கு 18%tax போட்டு 118 கொடுத்து வாங்குறோம் ஐயா இவங்க தான் நாட்டு மக்கள் இவர்களுக்கிட்ட கேட்டுட்டு இந்த மாதிரி அறிக்கை விடுங்க.....

 • srisubram - Chrompet,இந்தியா

  மாநில அரசு, உணவகத்தில், விலையை நிர்ணயிக்கணும், இந்த காஸ்ட் அக்கௌன்டன்ட் னு ஒரு படிப்பு படிச்சுட்டு வரவங்களை கூப்பிட்டு விலைகளை நிர்ணயம் நம் மாநிலம் முழுதும் செய்யணும். உணவகத்தில் தரும் உணவின் தரத்தையும், அளவையும், எடையையும் standardise செய்யணும். உதாரணத்துக்கு. ஒரு வெங்காய ஊத்தப்பம் வெங்காய, பருப்பு விலை ஏற்றத்துக்கு முன்னால், 45 என்று இருந்தது. வெங்காய விலை உயர்வை காரணம் காட்டி 75 ரூபாய்க்கு ஏற்றினார்கள். பின்னர் வெங்காயம் விலை, பருப்பு விலைகள் குறைந்த போதும் அதே விலை வைப்பது, ஏற்று கொள்ள முடியாத விஷயம். இதை சீர் செய்ய, நிச்சயம் ஒரு அமைப்பு தேவை. அதே போன்று உணவகம் நடத்துபவர்கள், காவல், மற்றும் இதர தமிழக அரசு துறையால், துன்புறுத்தப்படாமல், இருக்கவேண்டும். மேலும் ஏதாவது ஒரு வரி இருக்கணுமே தவிர, பல வரிகள் இருப்பது தவறு தான். நீங்கள் விற்பனை வரி வாங்குகிறீர்களா ஓகே வாங்குங்க அப்ப வருமான வரியும், உத்தியோக வரியும் ஏன்? அளவுக்கு அதிகமாக வருமானம் வரும், மனிதர்களையும், நிறுவனத்தையும் மட்டும் வருமான வரிக்கு உட்படுத்துங்கள்.

 • Balan Palaniappan - Chennai,இந்தியா

  பணமதிப்பிழப்பு ஊழலை முற்றிலும் நீக்கிவிடும் என்கிறார் இவர். மக்களே நீங்கள் எல்லோரும் இப்போது லஞ்சமே தருவதில்லையாமே

 • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  நீர் மக்கள் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டும் தவிர நீங்கள் அதிகம் வெளிநாடுகளில் வசிப்பதால் மக்களிடம் அதிகம் வரவேற்பு இருப்பதாக கூறியதை வெளிநாட்டு மக்களிடம் என்றுதானே அர்த்தம் ?

 • அசோக் வளன் - Chuan Chou,சீனா

  எதிர்க்குறவனெல்லாம் ஆன்டி இந்தியன் .....

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  நாக்கூசாமல் பொய் சொல்லி பிழைப்பதும் ஒரு பிழைப்பா ???

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே...

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  எந்நேரமும் ஆகாயதிலேயே இருந்தால் கீழே நடப்பது எப்படி தெரியும்

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  ஐயோ..ஐயோ...இதற்கு மக்கள் தான் பதில் சொல்லணும்..2019 தேர்தலில்...

 • Appu - Madurai,இந்தியா

  பாரத பிரதமராக இருக்கும்போது ஜி எஸ் டி பற்றி பெருமைப்படும் இவர் குஜராத் முதல்வராக இருந்தபோது கடுமையாக எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது..ஜி எஸ் டி நல்ல திட்டம் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை..ஆனால் அதை வடிவமைத்து நாட்டுமக்களுக்கு வழங்கியது மிக மோசம்.. வேண்டப்பட்டவர்களின் வியாபாரம் தொழிலுக்கு குறைவாகவும் பல சாதாரண குடிசை தொழிலுக்கு அதிகப்படியாகவும் போட்டிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது...மக்களை கொல்லும் மதுவிற்கு நோ ஜி எஸ் டி ??? கச்சா என்னை விலை குறைவாக இருக்கும் இந்த காலகட்டத்தில் அதன் விலையை நிர்ணயிக்க எண்ணை நிறுவனங்களுக்கு அதிகாரம் கொடுத்ததே தவறு இதில் எண்ணை பொருட்களுக்கு ஜி எஸ் டியில் விலக்கு அதே போல மற்ற நாடுகளோடு கம்பேர் செய்கையில் இந்தியாவில் நிர்ணயிக்கப் பட்டிருக்கும் இந்த ஜி எஸ் டி அதிகப்படியே.. ஜி எஸ் டி பெயரால் பல தொழில் செய்வோர் விலைவாசியை(பொருட்களின் விலை) தங்கள் தேவைக்கேற்ப மாற்றிக்கொண்டது குறிப்பாக விலையை அதிகப்படுத்தி கொண்டது அரசுக்கு தெரியுமோ இல்லையோ தினம் வாழ பணம் செலவழிக்கும் பொது குடிமகன்களுக்கு நன்றாக தெரியும்..இவ்வளவு ஓட்டைகளை வைத்துக்கொண்டு அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி மார் தட்டி கொள்வது சிறிதும் நன்றாக இல்லை ...இந்த ஜி எஸ் டியை பெருமையாக பீத்திக்கொள்ள இயலாது....பாடி ஸ்ட்ராங் பேஸ்மாண்ட் வீக் கதை தான் போங்க..

 • Sam Raj - Gun tur,இந்தியா

  சிரிக்காமல் பொய் சொல்லுகிறார். பேசி பேசி ஏமாற்றிய திராவிட கட்சிகள் பேச இவரிடம் கற்று கொள்ளுங்கள்

 • சேகர்,மறைமலைநகர் -

  ஆமாம் தல, நீங்க சொன்னா அது கரெக்ட்டுதான். வெளிநாட்டுல லட்சக் கணக்கான கோடி கறுப்புப்பணம் இருக்கு. நான் பதவிக்கு வந்து நூறு நாளில் மீட்டு ஒவ்வொருத்தனுக்கும் 15 லட்சம் அக்கௌண்ட்ல போடுவேன்னு சொன்னதை நம்பி பாங்கிலேயே படுத்துக்கிடந்தவங்க நாங்க. ஜிஎஸ்டி யால பாலாறும் தேனாறும் பாய்ந்து விலைவாசி குறைந்துவிட்டதுன்னு நீங்க சொல்லும்போது மறுக்க முடியுமா? தெய்வக்குத்தம் ஆயிடுமே. நாங்க நம்பறோம்.

 • P Sundaramurthy - Chennai,இந்தியா

  மக்கள் வரவேற்பு எப்படி கண்டுபிடித்திட்டார் என்று கூறினால் மிகவும் வசதியாகஇருக்கும் .

 • Megam - Dindigul

  உழைப்பாளிகள் வெறுத்து சோம்பேறி ஆகும் நிலை வந்து விடும்

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  ஆமால்லை.. ஜி.எஸ்.டி ஆமா... அமோகம் இல்லே.. இந்தியா ஒளிர்கிறதுன்னு பொய் சொல்லி ஒழிஞ்சாங்க.. இப்போ அமோகம்ன்னு சொல்லி கிட்டே அழிவது சர்வ நிச்சயம்.

 • ranaraja - Kl,மலேஷியா

  Poi solatheega Ji....ungalluku daan profit

 • இந்தியன் -

  சிறப்பு

 • RameshNatarajan.Driver,Coimbatore -

  மோடி மீது மிகுந்த எதிர்பார்புடன் நல்லது செய்வார். என்று நினைத்தோம்.. அவர் நாட்டுக்கு கசப்பான மருந்து தேவை என்று கூறி.. விஷத்தை கொடுத்துக் கொண்டுருக்கிறார். இவரிடம் வெளிபடதன்மை இல்லை. கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் போகிறது. கருப்பு பணம் காற்றில் உள்ளது. நதிநீர் இணைப்பு நாறிப்போய் உள்ளது. நாட்டின் விவசாயிகள் நலன் நாதியற்று போகிறது. இந்த நிலையில் இவர் கூறும் வளர்ச்சி எங்களை போன்ற ஓட்டு போட்ட மக்களுக்கு. சாவு மணி அடிப்பதாக இருக்கிறது மொத்ததில் மோடி அரசு. மக்களின் வயிற்றுரிச்சல் இந்த ஏழைகளின் குமுறல்கள் மற்றம் பாவங்களை சேர்த்துக் கொண்டே இருக்கிறது. கீதையில் கிருஷ்ணார் கூறியுள்ளார்.... மக்களின் நலன்களையும் பாதுகாப்பையும் அளிக்க தவறிய அரசன். அரசனாக இருக்க தகுதியற்றவன். .......இவண் இரமேஷ் நடராஜன். ஒட்டுநர்....

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  (சவடால்) வைத்திக்கு உடனே வைத்தியம் பாருங்கப்பா....

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  அட பாலாறு, தேனாறு ஓடுதாம்.. ஆனா நம்ம பாலாற்றில், எல்லா ஆற்றலுடன் தண்ணி ஓடல்லை, வென்னீரோட மணல் மாபியா லாரி தான் ஓடுது. மோசடி ஆசீர்வாதம் தான்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பூனை கண்ணை மூடி கொண்டு பூலோகம் இருண்டு விட்டதாக கூறுகிறது... ஹோட்டலில் ஒரு இட்டிலி சாப்பிட்டால் இது அவருக்கு விளங்கும்...

 • MURUGAN - Mumbai

  குசராத்தி மார்வாடி வியாபாரிகளிடம் சிக்கி இந்த நாடு பெரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறது

 • MANICKAVASAGHAM - Coimbatore,இந்தியா

  இது இவருடைய சொந்த கருத்து. தன் கருத்தை மக்கள் கருத்து என்று சொல்லி எல்லோரையும் ஏமாற்றுகிறார்.

 • R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா

  GST க்கு அனைத்து இந்திய மக்களும் ஆதரவு தெரிவித்ததாக தெரியவில்லை விலை ஏற்றம் தான் அதிகம். நள்ளிரவு வரிபோட்டு விலையேற்றி வைத்து விட்டார்கள். காஷ்மீர் மாநிலம் GST க்கு ஆதரவு தெரிவித்ததாக தெரியவில்லை. ஒரு சில மாநிலங்களுக்கு GST ஆல் நல்லதாக இருக்கலாம். தமிழகத்தில் இது நல்லதா கெட்டதா என்று மக்கள் ஓரளவு புரிந்து கொண்டிருப்பார்கள். காங்கிரஸ் ஆட்ச்சியில் பேசப்பட்டதை இப்போது செயல்படுத்தியிருக்கிறார்கள்.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  ஊழலற்ற நேர்வழியில் அரசு நடக்கிறது, ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் உயர் பண மதிப்பு நீக்கம், ஜீ.எஸ்.டி, இவற்றை மக்கள் அமோகமாக ஆதரிக்கிறார்கள் என்ற அரசின் நம்பிக்கை, தவறானது, இதனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது தான் பெரும்பாலான மக்களின் எண்ணம்

 • Jeyapandian - Singapore,சிங்கப்பூர்

  அமாம் அமாம் மாமாய்.. Wait for next election, i don't think you will come back to power.

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  ஆமாம் உணவுப்பொருள்கள் ஓட்டல்களில் 40% கூடியிருக்கும் போது ஹோட்டல் நடத்தும் மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் அமோக வரவேற்பு இருக்கத்தான் செய்யும். மக்கள் அதிகமாக வாங்கும் பொருள்களுக்கு வரி செலுத்தும்போது எப்படி சந்தோஸமாக இருக்கமுடியும். எப்படி GST

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  1200 க்கும் மேற்பட்ட பொருள்களுக்கு ஜி எஸ் டியே இல்லை வரிவிகிதங்களை முடிவு செய்தது அனைத்துக் கட்சிகளும்தானென அவர்களுக்கும் மோதி நன்றி சொன்னார் இதனையும் போட்டிருக்கலாம் கெட்டதுக்கெலாம் மோதியும் நல்லதுக்கெல்லாம் மற்றவவர்களும் காரணம் என சொல்பவர்களின் வாயை அடைக்க அதுபோதும்

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  இப்படியே சொல்லிக்கிட்டு திரிங்கப்பா... .நாடு விளங்கிடும்...... இன்னும் எத்தனை வடை தான் சுடுவீங்களோ....

 • ganeshdevan -

  மக்களை கேனையன் என நினைத்து துக்ளக் தர்பார் நடத்தும் மத்திய அரசு.. பார் போற்றும் பழைய பாஐக எங்கே? அதன் தற்போதைய நிலை ஹிட்லரிச ஆட்சி தான் நடத்துகின்றனர். மக்கள் மனபுலுங்களுடன் உன்னிப்பாக ஆட்சியாளர்களை கண்கானிக்கின்றனர்....

 • Mariappan Rajangam - tamilnadu,இந்தியா

  ஆமாம் மோடி ஜி வந்து மெடிக்கல் ஷாப் மற்றும் ஹோட்டல் பக்கம் வாங்க உங்களை மக்கள் எப்படி வயிறெரிய புகழறாங்க னு ,மன்னர் வீதி வலம் வந்து பார்த்த மாதிரி சொல்லாதீங்க ,தலை எழுத்து வேற வழி இல்லை மக்களுக்கு

 • senthil -

  dear modiji still ATM problems not solved. 2000 black money increased. many people facing the money problems . many people died in the bank que. do u know?

 • SasiKumar -

  500/1000 Rupai Nota olichittu neraya per velaya ilanthanga athil nanum oruvan pongada neengalum ungaloda puthiya indiavum

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  ஒரு நாளைக்கு இரண்டு பொய்களுக்கு மேல் சொல்ல மாட்டார்......

 • K.Sugavanam - Salem,இந்தியா

  காலை வணக்கம்..

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  எப்பொருள் யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement