Advertisement

சொகுசு வசதிக்காக ரூ.2 கோடி லஞ்சம் தந்த சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்?

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.,வின் சசிகலாவை, கர்நாடகாவில் உள்ள வேறு சிறைக்கு மாற்றலாமா என்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், பெங்களூரு சிறை விவகாரம் பற்றி பேச உயர் அதிகாரிகளுக்கு, முதல்வர் சித்தராமையா தடை விதித்துள்ளார். இதற்கிடையில், சிறையில் சொகுசு வசதிகள் வழங்கப்பட்டது குறித்து டி.ஐ.ஜி., ரூபாவிடம் தகவல் கொடுத்த கைதிகள் 32பேர் பலமாக தாக்கப்பட்டதுடன் வேறு சிறைகளுக்கும் மாற்றப்பட்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைதண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ள அ.தி.மு.க.,வின் சசிகலா, சிறையில் சொகுசு வசதிகள் பெற வேண்டும் என்பதற்காக
இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா வெளியிட்ட தகவலால் கர்நாடக அரசே ஆடிப் போயுள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு விரைவில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் நேரத்தில், சிறை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை, முதல்வர் கடுமையாக கண்டித்துள்ளார். பெங்களூரு சிறைவிவகாரம் குறித்து, எந்த அதிகாரியும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கக் கூடாது என தடை விதித்துள்ளார்.

இதற்கிடையில் சிறையில் நடந்த முறைகேடு கள் குறித்து டி.ஐ.ஜி., ரூபாவுக்கு தகவல் தெரிவித்ததாக ஆயுள் தண்டனை கைதி கள் 32 பேர் சிறை அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டனர். அவர்களை அழைத்து அதிகாரி கள் சரமாரியாக அடித்து உதைத்ததாக தெரிகிறது.

இதன்பின், அந்த கைதிகளை இடமாற்றுவது குறித்து உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனை யில் ஈடுபட்டனர். பகல் நேரத்தில் வெளியில் அனுப்பினால் பிரச்னை எழும் என்பதால் இரவு நேரத்தில் அனுப்ப முடிவு செய்து நேற்று முன் தினம் நள்ளிரவே 'முறையான கவனிப்பு'க்கு பின், மாநிலத்திலுள்ள பல சிறைகளுக்கு 32 கைதிகளையும் பிரித்து அனுப்பினர்.

இந்நிலையில் சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
ஏற்கனவே சென்னையை சேர்ந்த 'டிராபிக்' ராமசாமி 'சசிகலாவை தமிழக அமைச்சர்கள் அடிக்கடி சந்திக்கின்றனர். அதனால் அவரை துமகூரு மகளிர் சிறைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்' என கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
'விதிமுறைப்படி தான், சசிகலாவை சந்திக்க அனுமதி தரப்படுகிறது' என அரசு தரப்பில் கூறியதையடுத்து, அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சிறைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் கூறுகையில் 'சசிகலாவை பெங்களூரு சிறையிலிருந்து கர்நாடகத்தின் எந்த சிறைக்கு வேண்டுமானா லும் மாற்றலாம். துமகூருவில் மகளிர் சிறை இருப்பதால் அங்கு மாற்றுவது சரியாக இருக்க வாய்ப்புள்ளது. இடமாற்றத்துக்கு எந்த காரண மும் சொல்ல வேண்டிய அவசியமில்லை' என்றார்.
சிறையில் நடந்த முறைகேடுகள் குறித்து மாநில அரசின் அதிகாரிகள் குழு இன்று விசார ணையை துவக்குகிறது. இந்நிலையில் டி.ஐ.ஜி., ரூபாவை வேறு இடத்துக்கு துாக்கியடிக்க லாமா என்பது குறித்து, முதல்வர் சித்தராமையா ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (140)

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  ethu eppadiyo Roopa kootru sariyakivittathu, ivarukku idamaatram nitchayam. aduththa thaerthalukku BJP-kku nalla oru point paesuvatharku.

 • bairava - madurai,இந்தியா

  இந்த துரோகி சிறையிலிருந்து வெளியில் வராமல் இருக்க என்ன வேண்டுமென்றாலும் செய்துகொடுங்க... நாட்டுக்குள்ள வந்தா கொடுமை தாங்காது எல்லாரையும் முட்டாளாக்குவார்கள்.... சிறையிலே இருப்பர் என்றால் என்னவேண்டுமானாலும் செய்து கொடுக்க உத்தரவு போடுங்கள்

 • N. Sridhar - Kanchipuran

  திகார்தான் சரி, மீதம் உள்ள நாட்களாவது களி மட்டும் தின்று, செய்த பாவங்களை கழிக்கட்டும்!

 • elangovan - TN,இந்தியா

  Karnataka government and higher official in Jail support SASI

 • Laxmanan Mohandoss - ambur,இந்தியா

  Politicians and some police officials become slaves of bribery,no self respect and shameless people

 • Chandrasekar - Manglaore ,இந்தியா

  ஐயோ இது திமுகவின் சதி. என்னை சிறையில் அடைத்தபின் உளவு பார்ப்பதற்கு 32 திமுக கைக்கூலிகளை ஏற்பாடு செய்திருக்கிறார் ஸ்டாலின். நான் எந்த வசதியும் பெறவில்லை. என் அறையில் பேன் கூட கிடையாது. CCTV யை பாருங்கள்.

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  சித்தராமையாவிற்கான பங்கு எவ்வளவு..?

 • R Sanjay - Chennai,இந்தியா

  வகுப்பில் முதல் வரிசையில் உட்கார்ந்து ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் பாடங்களை நன்றாக படித்து பிறகு வீட்டிற்கு சென்று மீண்டும் நன்றாக படித்து தாய் தந்தை உறவினர்கள் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் என்று அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்து கஷ்டப்பட்டு IAS/IPS படித்து இந்த உயர் நிலைக்கு வந்தால். அதே வகுப்பில் கடைசி வரிசையில் அமர்ந்து ஆசியர் சொல்லிக்கொடுப்பதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு வகுப்பறையில் கவனம் செலுத்தாமல் வெறுமனே பெஞ்சை சில பல அங்குலங்கள் குறைத்துவிட்டு உடன் படிக்கும் மாணவிகளை கலாய்த்துவிட்டு ஒன்றுமே படிக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிவந்துவிட்டு வீட்டிலும் தாய் தந்தை உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் "இது வீட்டிற்கு உதவாத தறுதலை" என்ற மானங்கெட்ட பெயரை சம்பாத்தித்துவிட்டு பத்து பன்னிரண்டாம் வகுப்புகளில் பல கோட்டை விட்டபிறகு தருதலையாகத்திரிவது, அல்லது அதற்க்கு அடுத்த முயற்சியாக கல்லூரியில் சேர்ந்து முறையாக கல்லூரிப்படிப்பை முடிக்காமல் அனைத்து பாடத்திலும் தோல்வி கண்டு சினிமா தியேட்டர் பார்க்கென்று ஊர்ப்பொறுக்கி தனமாக சுற்றி இந்த ஜடம் ஒன்றிக்குமே உதவாது என்ற நிலைக்கு சென்றுவிட்ட பிறகு எதோ ஒரு கூத்தாடி /குடுமிப்புடி அரசியல் கட்சியில் சேர்ந்து பல பல முல்லை மாற்றங்கள்(ரி) வேலைகள் செய்து அவன் இவன் கையை பிடித்து MLA சீட்டு வாங்கி பிறகு அமைச்சர் முதலமைச்சர் ஆகி தான் உட்கார்ந்த கடைசி பெஞ்சிற்கு நன்றி நினைப்பது பிறகு தனக்கு தொல்லை கொடுக்கும் முதல் வகுப்பில் பாஸாகி IAS/IPS மாணவர்களை மட்டும் தனக்கு விருப்பம் போல் இந்தியால எங்கு வேண்டுமானாலும் தூக்கி இடம் மாற்றம் செய்து தான் பெற்ற கெட்ட பெயர்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது. ஐயோ கடவுளே. இது தான் கலியுகம். திருமதி ரூபா அவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஜெயலலிதாவுக்கு நூறு கோடியும் சசி கும்பலுக்கு தலா பத்து கோடியும் ஆறு ஆண்டு சிறை தண்டனையும் அபராதம் விதித்த நீதித்துறையைக் கேலிக் கூத்தாக்கி விட்டார்கள். அந்தம்மா செத்துட்டதால நூறு கோடி குடுக்க வேண்டாம் என்று இன்னொரு நீதிமான் சொல்லிட்டார் இந்தம்மாவுக்கு பத்து கோடி எல்லாம் ஜுஜுபி. நீதிபதியவே மாத்தின கும்பல், 22 வருஷம் கேஸை இழுத்தடிச்ச கும்பல் கிட்ட இதெல்லாம் நடக்குமா? அடுத்த தேர்தலில் பாருங்கள் இவர் செயலாளராக இருக்கிற கட்சியுடன் கூட்டணி பிஜேபி கூட்டணி போட்டு நிக்கப் போறாங்க.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  இதற்குத்தான் "சமத்துவம்" என்பது. அது ஏன் வெறும் பரப்பன சிறை மட்டும் ரூ. 2 கோடி மற்றும் மாதத்திற்கு 10 லட்சம் பெறவேண்டும். மற்ற சிறையில் உள்ள ஊழியர்களும் இதன் பயன் அடைய வேண்டும் என்ற உயரிய "சீர் நோக்கு" "சீரிய சிந்தனை" "சமத்துவ எண்ணத்துடன்" தான் இந்த சிறை மாற்றம் "சின்னா பின்னமான அம்மாவுக்கு" செய்யப்பட்டுள்ளது என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். என்று சித்தராமையா கூறுகின்றார். மற்றும் தமிழ் மக்களுக்கு நான் நன்றி கூறிக்கொள்ள விரும்புகின்றேன் எனக்கு அப்போ அப்போ ரூ 50 கோடி வரவு வைப்பதற்காகத்தான் தாங்கள் சின்னா பின்னமான அம்மாவை இங்கு அனுப்பியதற்காக சென்னையில் புழல் சிறை இருந்தாலும்.

 • Vijay Kumar - Bamako,மாலி

  தமிழர்களுக்கு தலை குனிவை ஏற்படுத்தும் தமிழக அரசியல் நிலை . மகாத்மா உருவாக்கிய congress தற்போது இருக்கும் நிலை வெட்கப்பட வைக்கிறது

 • vnatarajan - chennai,இந்தியா

  சசிகலாவை இந்தியாவில் எந்த சிறைக்கு மாற்றினாலும் அந்த இடத்தை i கொடநாடாக மாற்றிவிடும் திறமை யுள்ளவர். . போட்டுக்கொடுத்த 32 ஆயுள் கைதிகளை அடித்து உதைத்த அதிகாரிகளின் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் . எடுக்காவிட்டால் கர்நாடக அரசியல் வாதிகளுக்கும் இந்த விஷயத்தில் சம்பந்தம் இருப்பதாகவே நினைக்க வேண்டியிருக்கிறது.

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம், இதை தானாக கையிலெடுக்கும் வழக்காக, விசாரிக்க முடியாதா? ஏனென்றால், சிறையில் இன்னின்ன வசதிகள் தான் உண்டு என்று கருதியே சிறைத்தண்டனை கொடுக்கப்படுகிறது. அதற்கு மாற்றாக சிறையில் வசதிகள் செய்து கொடுத்தால் ஒரு மனிதனை சிறைக்கு அனுப்பும் நோக்கமே சிதைந்து போகாதா?

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  கர்நாடகத்தில் உள்ள எல்லா சிறைகளுக்கும், வாரத்துக்கு ஒரு சிறையாக, மாற்றினால், அங்குள்ள எல்லா சிறைத்துறை அதிகாரிகளும் வளம் பெறுவர். சமூகநீதி நிலைநாட்டப்படும்.

 • Revathi Archana - madurai,இந்தியா

  அடி மானங்கெட்ட ஜென்மமே இப்படி கழுவி கழுவி ஊத்தறாங்களே உனக்கு உரைக்கல. இப்படி நாரப் பேர் எடுத்தே உன் DRP லெவல் கூடிருச்சு. ஆனாலும் உன்னை பத்தின விசயத்துக்கு மட்டும் தான் கருத்து கணிப்பு மலையளவு குமியுது. உண்மையிலேயே அரசியல் நாற்றம், அரசியல் நாற்றம் என்று கேள்வி பட்டேன், பட் நீ வந்ததுக்கு அப்பறம் படு வேகமா நாறுது .

 • Sandru - Chennai,இந்தியா

  சிறைக்கு சசிகலாவை DIG ஆக நியமித்து விட்டால் எல்லாம் சரி ஆகிவிடும்.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  அன்று சுதந்திரத்துக்கு உழைத்த தியாகிகளை, சாக்கு உடை, செக்கு இழுத்தல் , கடின உழைப்பு என்று உடல் ரத்தத்தை சுண்ட வைத்து , காசநோய் பிடித்து உடல் நலம் கெட்டு நடைப்பிணமாக வெளியே அனுப்பினர் ஆங்கிலேயர்கள். இதற்க்கு அந்தமான் சிறை ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் இன்றோ மக்களின் சொத்தை கொள்ளையடித்து , ஆட்சியை மறைமுகமாக கையகப்படுத்தி, தமிழகத்தை செல்லாக்காசு ஆக்கிய ஒரு கும்பலுக்கு ராஜ மரியாதை ? என்ன கொடுமை இது. ஏன் இந்த கம்பெனியாருக்காக மீண்டும் அந்தமான் சிறையை திறக்க கூடாதா? அந்த கண்கொள்ளா காட்சியை காண எங்களுக்கு காண கண்கோடி வேண்டுமே. சந்தர்ப்பம் கிடைக்குமா?

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  டி.ஐ.ஜி., ரூபா பெருமைக்கு உரியவர். இவரைப்போல இருக்கும் மிக சிலரால் மட்டுமே காவல்துறைக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. தன மேலதிகாரியாக இருந்தாலும் அநீதியை எதிர்த்து போராடும் அந்த பெண் அதிகாரியை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. கால் நூற்ராண்டுகாலம் நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் ஒருவருக்காக சிறையை உல்லாச விடுதியாக மாற்றித்தர உதவிய அந்த டிஜிபியை பனி நீக்கம் செய்யவேண்டும். குற்றம்நிரூபிக்கப்பட்டால் சிறையில் அடைக்க வேண்டும். சிறையை நாறடித்த அந்த கைதியை டில்லி திஹார் சிறைக்கு மாற்ற வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு சட்டம், நீதிமன்றம், தண்டனை போன்ற விஷயங்கள் குறித்து நம்பிக்கை ஏற்படும்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  கைதிகள் தப்பி செல்லாமல் இருக்க மக்கள் போக முடியாத இடங்களில் கட்டப்பட்டுள்ள சிறையில் அடைக்கவேண்டும்.

 • karthikeyan -

  சீதாராமையா ரூபாவை போட்டு தள்ளிடுவார்.

 • Snake Babu - Salem,இந்தியா

  //மோடி- ஜெட்லீ- தத்து- குமாரசாமி கூட்டணியால் தப்புவிக்கப்பட்ட ஜெயா @ கோவை மீண்டும் குற்றவாளி கூண்டில் ஏற்றி தண்டனையை நிறைவேற்ற செய்தவர் இந்த காங்கிரசை சேர்ந்த சித்தராமைய்யா. வெக்கமே இல்லாமல், மனசாட்சிக்கே இடம் கொடாமல் பாஜகவுக்கு சோம்பு தூக்கும் உம்மை போன்றோர் காங்கிரசை பழிக்க இப்படியெல்லாம் வழி தேடுகிறீர்கள்.... // அய்யா தங்கை கூறவருவது அப்போது இவர் தான் அவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்தார் என்று. அது ஒன்றினால் காங் உத்தம கட்சி என்றும் ஆகிவிடாது காங் யும் திமுகவையும் குறை கூறிக்கொண்டே இருப்பதால் பிஜேபி கட்சி செய்கிற தற்போது நடப்பது சரி என்று ஆகிவிடாது. எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், அவ்வளவே. பேய்க்கு பயந்து பிசாசுக்கு வாக்கப்பட்ட கதையே தற்போது நடக்கிறது. காங் திமுக வை கூறிக்கொண்டே தங்களிடம் இருக்கும் குறையை மூடிமறைக்கப் பார்க்கிறீர்கள். நன்றாக கவனியுங்கள் நான் காங் திமுகவையும் ஆதரிக்கவில்லை. அதேநேரத்தில் சித்தராமையா தான் இவர்களை கூண்டுக்குள் அடைத்தவர். அதை நினைத்து பாருங்கள். தற்போது தமிழகத்தில் நடப்பதும் டம்மி ஆட்சியே பிஜேபி பின்னால் இருந்து இயங்குகிறது. எபடப்பாடியை பின்னாலிருந்து தமிழகத்தை வறட்சி இல்லா மாநிலமாக கூற வைத்திருக்கிறது. மீத்தேன் திட்டத்திற்கு போலீசை கொண்டு அடக்குவது நீட் தேர்வு இப்படியே நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். பிஜேபி செய்கிறதெல்லாம் செய்துகொண்டே குறைகளை அதிமுக மீது போட்டுவிடுவது. இதற்காக அதிமுகவை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை. எந்த கட்சியும் நல்லவை அல்ல. தற்போது நடக்கும் எல்லா தவறுக்கும் பிஜேபி ஒன்று பொறுப்பு. அதை சாதகமாக மற்ற கட்சி மீது போட்டுவிட்டு வே டிக்கை பார்க்கிறது அதுக்கு ஒரு கூட்டம் வாக்களித்தது நன்றி வாழ்க வளமுடன்

 • Prabaharan - nagercoil,இந்தியா

  கர்நாடகாவில் எல்லா சிறைகளுக்கும் மாற்றி எல்லா அதிகாரிகளையும் கோடீஸ்வரர்கள் ஆக்க வேண்டும்

 • Jecintho SirumalarKins - chennai ,இந்தியா

  நான் டி.ஐ.ஜி ரூபாவை நினைத்து கவலைப்படுகிறேன். அவர் ஒரு பெண்ணானாலும் , இவ்வளவு தைரியமாக இந்த ரிப்போர்ட் அனுப்பியதால் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அவர் காப்பாற்றப் பட வேண்டும்

 • Ramaswamy Sundaram - Mysore,இந்தியா

  நாடு பூரா நாத்தம் எடுக்குது இந்த சதிகாரியின் "புகழ்"....எல்லாம் தலைச்சுழி.....அழகா பொத்திக்கிட்டு இருந்தா.....அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தின் பொது செயலாளர் என்று ஒரு உயர்ந்த பீடத்தில் உக்கார வச்சாங்களே? அதை காப்பாத்திக்க முடிஞ்சுதா இவளால்? பெரியவங்க அனுபவிச்சு தான் எல்லாம் சொல்லி இருக்காங்க.... இன்னிக்கு இந்த கதி இவளுக்கு வந்ததுக்கு சண்டாளன் தம்பிதுரை கொளுத்திப்போட்ட வெடி தான் காரணம்....அவன்தான் தன் நாரா வாயை திறந்து இந்த .... முதல்வர் பதவிக்கு வரணும் என்று உளறினான். உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா அடேய் தம்பிதுரை

 • natarajan kannan - chennai,இந்தியா

  சசி பணம் கொடுத்ததால் சலுகை கிடைத்தது என்றால் பணம் வாங்கிய அதிகாரியை என்ன பண்ணுவது. உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு மரியாதை கொடுக்காத அதிகாரிகள் மீது உச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு நீதி காப்பாற்ற பட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 • Ramaswamy Sundaram - Mysore,இந்தியா

  ஆமங்க தும்கூர் சிறையில் இருக்கிறவங்களுக்கு சம்பாதிக்க வேண்டாமா?

 • Raman Gopalakrishnan - chennai,இந்தியா

  தமிழ்நாட்டை கெடுத்த இந்த ....கள் ,இப்போது பணபலத்தை காட்டி கர்நாடக சிறை அதிகாரிகளை விலைக்கு வாங்கி எல்லா வசதிகளையும் அனுபவிக்கின்றனர்.கேடு கெட்ட இந்த ஜென்மங்களை அந்தமான் சிறைக்கு அனுப்பவேண்டும்.

 • Achchu - Chennai,இந்தியா

  துமுக்குறை விட பெலகாவி (பெல்காம்) சிறந்தது

 • R.BALAMURUGESAN - Muscat,ஓமன்

  ...விடாதீங்க சிறையில் இருந்து வெளியே வரவே கூடாது, அதற்கு செய்ய வேண்டியதை தயவு செய்து செய்யுங்கள் டி.ஐ.ஜி அவர்களே...

 • balasubramanian - coimbatore,இந்தியா

  The way sitharamaiah deeling this case it seems he is very honest CM.

 • Balaji - Khaithan,குவைத்

  சதிகாரியை பேசாமல் அந்தமான் சிறையில் அடைந்துவிட்டால் நன்றாக இருக்கும்.. தேவையில்லாமல் அவரை சந்திக்க தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மக்களின் வரிப்பணத்தில் அங்கு சென்று சந்திக்க தயங்குவார்கள். இரண்டு பேரையும் தனித்தனி சிறையில் வைக்க வேண்டும்.. இல்லையென்றால் சதிகாரிக்கு ஏதாவது நேர்ந்தால் பிறகு சதிகாரியுடன் சிறையில் தியாகம் செய்த சின்ன நொண்ணம்மா என்று இன்னொரு கூத்து நடக்க வாய்ப்பாக அமைந்துவிடும்.............

 • Shanu - Mumbai,இந்தியா

  சசிகலா கூட்டம் ஜெயலலிதாவை ஆட்டி படைத்தது, அதோடு சேர்ந்து தமிழ்நாட்டை ஆண்டது. இப்போ அதை நேரடியாக செய்து கொண்டு இருக்கிறது. இதை பிஜேபி பயன்படுத்துகிறது.

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  சித்தராமையா பேசுவதைப்பார்த்தால் அவருக்கும் பங்கு போயிருக்குமோ என்று தோன்றுகிறது.

 • Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ

  திருநா வை புடிச்சி நொங்கு எடுத்தால் அவ்வளவு உண்மையும் வந்திரும்...சித்து வுக்கு கூட பெட்டி போயிருக்கலாம்.......கள்ளப்பயலுக்கு பேரு சத்ய நாராயணா வாம்... ..

 • A shanmugam - VELLORE,இந்தியா

  கூட இருந்தே ஜெயாம்மாவை குழிபறித்துவிட்டு, இப்போ சிம்ம சொப்பனத்தில் ஜெயிலில் இருக்கும் உன்னை ஜெயாம்மாவின் "ஆவி" உன்னை சும்மா விடாது?

 • christ - chennai,இந்தியா

  இப்படி பணத்தை தண்ணீரை செலவு செய்யும் இந்த கிருமினால் பணத்தை நல்லவழியில் சம்பாதித்து இருக்கவே முடியாது. ஆகவே இந்த கிருமினலின் அணைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்

 • Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா

  அந்தமான் சிறைக்கு அனுப்பிவிடலாம் இல்லையேல் மீனவ படகில் ஏற்றி இலங்கை கடல் பகுதியில் விட்டால் இலங்கை கடற்படை அவரை கைது செய்யும். நம் மக்கள் பிழைப்பர்.

 • R Sanjay - Chennai,இந்தியா

  தூ ஜனநாயகமா இது. தவறு செய்தவள் ஒருத்தி, அந்த தவறை சுட்டிக்காட்டியவர்கள் (குற்றவாளிகளேயானாலும்) பல பேர், அதை நேர்மையாக வெளியுலகிற்கு தெரிவித்து முறைப்படி நடவடிக்கை எடுங்கள் என்று கூறும் உயர் அதிகாரி ஒருவர். ஆனால் இந்த ஜனநாயகம் தவறு செய்த அந்த கேடுகெட்டவளை ஒன்றும் செய்யவில்லை. மாறாக உண்மையை போட்டு கொடுத்தவர்களுக்கு மரணஅடி கொடுத்திருக்கிறார்கள், நடவடிக்கை எடுக்க சொன்ன IPS ரூபாவை வேறு சிறைக்கு மாற்ற யோசிக்கிறார்கள்? இதுவா ஜனநாயகம். அப்போ இதற்க்கு எல்லாம் மூலக்காரமாக இருக்கும் அந்த சதிகாலா சாணிகலா அவளுக்கு என்ன தண்டனை? இப்படி பண்ணுவியா பண்ணுவியான்னு போட்டு நாலு சாத்து சாத்தாம வேறு சிறைக்கு மாற்றுகிறார்களாம் கண்றாவியை, தமிழகத்துக்கு பிடித்த பீடை, எவ்வளவு கடும் வார்த்தைகளால் அந்த சதிகாரியை திட்டினாலும் தகாது. அதர்மம் தான் எங்கேயும் ஆட்சி செய்கிறது உண்மைக்கும் தர்மத்திற்கும் துளியளவு கூட நியாயம் இல்லை. நான் வணக்கும் உருவமில்லா இறைவா இதற்க்கு முடிவில்லையா? பிஜேபி/காங்கிரஸ்/அதிமுக/திமுகவிற்கு ஒட்டு போட்ட மக்கள் செய்த பாவத்திற்கான தண்டனைகளை ஒட்டுமொத்த தமிழகமும் அனுபவித்து கொண்டு இருக்கிறது. நடுத்தர மக்களின் நிலை இன்னும் கேள்விக்குறிதான். மாறுங்கள் மக்களே நேர்மையான மாற்றம் ஒன்று தான் நம்மை நல்வழிப்படுத்தும். தேர்தல் சமயத்தில் மேற்க்கூறிய கட்சிகளை மறந்து மக்களுக்கு உண்மையான தொண்டாற்றக்கூடிய சமூக சேவகர்களை கண்டறிந்து உங்கள் ஓட்டை போடுங்க அதுவே ஜனநாயகம் செழிக்க நாம் தொடுக்கும் முதல் அஸ்திரம்

 • N.K - Hamburg,ஜெர்மனி

  நல்லதுதான், இந்த சின்னம்மா இப்படியே ஏதாவது பண்ணி நாலு வருட தண்டனையை நிரந்தரம் ஆக்கிடும்னு நினைக்குறேன். அப்படி எதுவும் நடந்தால் ரொம்ப நல்லது

 • BALAKUMAR - CHENNAI,இந்தியா

  திகார் சிறைக்கு மாற்றுவதற்கு பதிலாக வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சிறைச்சாலை இல் மாற்றலாம், சென்னையில் இருந்து விமான வசதி இல்லாத சிறையாக இருந்தால் அமைச்சர்கள் பார்ப்பது தவிர்க்க படும்.

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  அவர்கள் பணம், சொத்துக்களை முடக்குவதா? ஹா ஹா, இந்தியாவின் மூலை முடுக்குகளெல்லாம் பரந்து விரிந்து கிடைக்கும் அந்த சாம்ராஜ்யத்தில் எந்த சொத்தைத் தேடுவது, முடக்குவது? இன்னும் இருபது ஆண்டு சிறையில் இருந்தாலும் ராஜ வாழ்க்கை வாழும் அளவு பணம் சொத்து உள்ளது. வேணுமானால் இந்தியாவிலுள்ள எல்லா சிறைகளுக்கும் 'உல்லாசப் பயணமாக ' அழைத்துச்சென்று அங்குள்ள அதிகாரிகளும் செழிக்க வகை செய்யலாம்

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  வடகொரியாவின் ஒரு சிறையை குத்தகைக்கு எடுத்து இவளை அங்கே தள்ளவேண்டும். மவளே ஒரு ரொட்டி துண்டுக்கு இருபது மணி நேரம் உழைக்கவேண்டும்.

 • Rajan - singapore,சிங்கப்பூர்

  தவறை கண்டுபித்தவருக்கு, இடமாற்றம், ஊழலரசு ஊழியருக்கு தண்டனை இல்லை ? தவறை வெளியில் சொன்னவர்க்கு அடி உதை என்ன கொடுமை, அப்போ முதலமைச்சருக்கு தெரிந்துதான் நடந்திருக்கு என்பது போல் உள்ளது. லஞ்சம் , ஊழலில் கர்நாடக, பீகார், தமிழ்நாடு, (தெரிந்த) எது முதலிடம் , பட்டிமன்றம் வைக்கலாம்

 • manamaboy - Manama,பஹ்ரைன்

  அந்தமான்தான் சரியான இடம் இந்த அம்மணிக்கு

 • krishna - cbe,இந்தியா

  அந்தமானில் உள்ள செல்லுலார் ஜெயிலில் கொண்டு போய் அடைக்க வேண்டும் இந்த களவாணி சசிகலாவை.

 • R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா

  என்ன கேட்டா, எந்த டூபாக்கூர் குடும்பத்தையே கொண்டு போயி, எதாவது மனிதர்கள் இல்லாத பாலைவனத்தில் விட்டு விடலாம்.

 • krishna - cbe,இந்தியா

  சசிகலா லஞ்சம் கொடுத்தது ஒரு புறம் இருக்கட்டும்.காங்கிரஸ் ஆட்சிதானே நடக்கிறது அங்கே. ஆட்சியாளர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்.ஒரு சிறையில் இருக்கும் கைதிக்கு வீட்டில் உள்ளதை விட வசதிகள் செய்து கொடுத்து நீதியை கேலிக்கூத்தாக்கிய செயல் என்பது மிகவும் கண்டிக்க தக்கது.அந்த டிஜிபி பதவியை பறித்து வீட்டிற்கு அனுப்பி இருக்க வேண்டாமா?

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  அடுக்காது...அடுக்காது..ஒரே சிறையில் வைப்பதின் மூலம் அந்த சிறை அதிகாரிகள் மட்டுமே பணம் பெற வசதி செய்யப்பட்டு உள்ளது...ஆகவே இந்தியர்களை செல்வந்தர்களாக மாற்ற, நடமாடும் பண கண்டெய்னர் சதிகலாவை பிஹாரில் ஒரு ஆறு மாதம், வேஸ்ட் பெங்காலில் ஒரு ஆறு மாதம், ஒரிசாவில் ஒரு ஆறு மாதம் என்று கான் கிராஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்று மாநிலங்களில் வைத்து அந்த மாநில மக்களை பணக்காரர்கள் ஆக வேண்டும். இந்தியர்களை செல்வந்தர்களாக்க இதை விட ஒரு அருமையான வாய்ப்பு இனி கிடைக்கவே கிடைக்காது.

 • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  நாடே இவளையும் இவளின் கூட்டத்தையும் காரி துப்புகின்றது ஆனால் அந்த அல்லக்கைகள் கொஞ்சம்கூட சொரணை இல்லாமல் தங்களின் புராணத்தை பாடிக்கொண்டுதான் உள்ளனர் சட்டமும் வேடிக்கை பார்க்கிறது

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  NO-ONE IS GENUINE IN INDIAN POLITICS.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  இந்தியாவில் உள்ள எல்லா சிறை அதிகாரிகளும் சசியை வரவேற்பார்கள். (கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்பதால்) எனவே அரபு நாடுகளில் உள்ள ஏதாவது சிறைக்கு மாற்றினால் நல்லது.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  பேசாமல் தினகரன் சதிகலா மாபியா தமிழ்நாட்டை விட்டுட்டு பேசாமல் கர்நாடகா போயிடலாம்.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  உண்மையைக் கூறினால் அடி உதை , இதற்குப் பெயர்தான் ஜநாயகம், . சூப்பர் சட்டம், வந்தே மாதரம்

 • Aruna Subramanian - Kuala Lumpur,மலேஷியா

  இது எல்லாம் சாகசம்ப்பா. பணம் எல்லா கதவையும் தட்டும், திறக்கும். இப்போது மட்டும் இல்லை எந்த காலத்திலும் உள்ளதுதான் . என்ன இப்போது இன்டர்நெட் வசதியுள்ளதால் எல்லோருக்கும் உடனே தெரிகிறது. ஆனால் அவர் அவர் எதாவது எழுதி தன வயிற்றுஎரிச்சலை வெளியில் சொல்லலாம். இவ்வளவு பேரும் ஏன் இப்படி. பணம் என்பது அதிகாரத்துடன் சேர்ந்து விட்டால் அதயும் இருபது வருடம் பவரின் மையத்தில் இருந்துவிட்டால் அதன் வெளிப்பாடு இப்படித்தான் . இங்கு கருத்து எழுத்துபவர்கள் கையில் கொஞ்சம் மட்டும் பவர் கொடுத்து பார்த்தால் பிறகு தெரியும். யார்தான் இன்று ஆடவில்லை. சாதாரண ஒரு பஞ்சாயத்து ஆபீஸ் போய்ப்பாருங்கள். அங்கு உள்ள ஒரு கடைசியில் உள்ள ஒருவன் கூட காசை கையில் வைக்காவிட்டால் உள்ளேயே போகமுடியாது. அப்பறம் என்ன எல்லோரும் சுத்தமான ஊரில் ஒருவர் மட்டும் ஆடுவதுபோல் . இது மிக ..........

 • Shree Ramachandran - chennai,இந்தியா

  sidda ராமையாஹ் , குமாரசாமி, தேவகௌடா, யாரை முதல்வராகப் போட்டாலும், பணத்தை நீட்டினால் "என்ன வேண்டுமானாலும் "செய்வார்கள். ஊழலின் ஊற்று கர்நாடகா.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்தெ சசி போன டிசம்பர்லயே மோடியோட ஒப்பந்தம் போட்ருக்கலாம்.... இப்டி சந்தி சிரிக்கற மாரி நெலம வந்துருக்காது.... ஹ்ஹம்ம்ம்.....

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  திராவிட கட்சி தலைவர்கள் இருக்கற எடத்துல ஒழுக்கம் இருக்காது... எங்க போனாலும் லஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை... இது அவர்களுடைய கொள்கை... இத்தனை நாளா வெளில சுதந்திரமா பண்ண அக்கிரமங்களை இன்று ஜெயிலில் சுதந்திரமாக செய்க்கிறார்கள்.. காங்கிரஸும் நாட்டை குட்டிச்சுவர் அடித்து நாட்டில் லஞ்சம் பரவும் படி செய்திருக்கிறார்கள்... இவங்களாவது தண்டனை பெற்று உள்ளே இருக்கிறார்கள்... உள்ளே போகாம வெளில இருக்கற தலைவர்களை என்ன சொல்லுவது.. எல்லாத்துக்கும் ஒரு நாள் முடிவு வரும்... மேலிருந்து ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்...

 • Indhuindian - Chennai,இந்தியா

  Should be shifted every week to various prisons so that lot many prison officials get the benefit of redistribution of ill gotten wealth Real economic redistribution

 • chidhambaram - chennai,இந்தியா

  கஷ்டம் ... ஒரு வருடத்துக்குள் சிறைச்சாலையை கெடுத்து விட்டார்கள் , இவர்களிடம் நாட்டை கொடுத்தால் என்ன வாகும் ???

 • Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா

  இந்த தரித்திரம் எந்த இடத்துக்கு போனாலும் அங்குள்ளவர்களுக்கு கஷ்டம்தான். பேசாமல் திகார் ஜெயிலுக்கு மாத்திடுங்க.

 • Goutham Mani - maldives,மாலத்தீவு

  இதற்க்கு ஒரே வழி குற்றவாளிகளின் அனைத்து சொத்துக்களையும் அரசுடமை ஆக்கிவிட்டால் அவருக்கு பண சம்மந்தப்பட்ட எந்த பயனும் கிடைக்காமல் செய்தால் அவர்களுக்கு எந்த வழியிலும் யாரும் உதவவிடாமல் செய்தால் மட்டுமே இதை தடுக்கமுடியும். இந்தியா இப்படிதான் என்ற நிலைமையை வரும்கால சந்ததியினராவது மாற்றவேண்டும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எல்லாவற்றிக்கு ஆடும் ஸ்டாலின் மௌனம் காப்பது ஏன்... போதுமான பணம் வங்கியில் சசியால் தங்கள் /தங்கள் பினாமி கணக்கில் செலுத்தப்பட்டு விட்டதா.. ?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சோனியா ..சித்தராமையா நேர்மையாக ஆட்சி நடத்தும் அழகை பார்த்தீர்களா..? இதில் இருந்து ஊழலின் ஊற்று கண் காங்கிரஸ் தான் என்று தெரிகிறதா...?

 • krishna - cbe,இந்தியா

  திஹார் ஜெயிலுக்கு மாற்றுங்கள்

 • sam - Doha,கத்தார்

  காங்கிரஸ் இவ்வளவு பாதாளத்துக்கு போவதற்கு காரணம், இப்படிப்பட்ட மாநில அரசியல் தலைவர்கள் தான்.

 • ravi - chennai,இந்தியா

  இந்த மாதிரி ஊழல் அரசியல்வாதிகளை அழிக்கவேண்டும் - மரண தண்டனை கொடுக்கவேண்டும் - காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் இல்லை என்றால் அது ஆச்சர்யம் தானே - ஊழலை மறைக்காது என்னமா உழைக்கிறார் இந்த சித்தம் தவறிய ராமாய்யா - இவருக்கெல்லாம் வெக்கம் மானம் சூடு சொரணை இருந்தால் தமிழ்நாட்டுக்கு இவ்வளவு துரோகம் செய்யமாட்டார் - வருமானவரித்துறை இவரின் ஊழலை வெளிக்கொணரவேண்டும் - பார்ப்பனகார சிறையில் நடந்த ஊழலை வெளிப்படையாக சொல்லவேண்டும் - காங்கிரெஸ்க்காரன் அதை செய்யமாட்டான் தேசத்துரோகியாச்சே - ஜெய் ஹிந்த்

 • rajan. - kerala,இந்தியா

  எல்லா சிறைச்சாலைகளிலும் லஞ்ச ஊழல் மயம் தான். ஏன் இந்த அமலாக்க துறை சிபிஐ எல்லாம் இந்த மன்னார்குடி சின்னதாய் மொத்த வட்டாரத்தையும் ரைடு பண்ணாமல் அழகு பார்க்கிறார்கள்? இவுக கிட்ட உள்ள மொத்த கருப்பு பணத்தையும் உருவி எடுங்க. அப்புறம் எங்கே இருந்து பணம் வருதுன்னு பார்த்து அங்கும் பியூச புடுங்குங்க. எதனை கோடி மக்கள் பணத்தை சூறையாடி இருந்தால் இந்த ஆட்டம் ஜெயிலுக்குளேயே போடுவார் இந்த சின்னதாய். இந்த மூன்று பேரையும் வேற வர சிறையிலே கொண்டு அடையுங்க. அந்த சின்னத்தாய்ய மட்டும் அள்ளி கொண்டு போய் அந்தமான் ஜெயில்ல போட்டு அவரையே களி கிண்டி துன்ன உடுங்க. நல்ல உறைக்கிற மாதிரி ஒரு கைதியா தினமும் டிவி ல இந்த கைதி சிறையிலே என்ன வேலை பண்ணுறார்ன்னு மக்களுக்கு போட்டு காட்டுங்க. அப்போ தான் இந்த கேச நம்புவோம். எல்லா சிறைச்சாலையிலும் அரங்கேறும் லஞ்சத்தை களை எடுங்க. எங்கும் எதிலும் லஞ்சம் தான் கோலோச்சுகிறது. லஞ்சம் வாங்கிறவனை தூக்கில போடாத வரை லஞ்சத்தை ஒழிக்க முடியாது மோடி ஐயா. அதுக்கு சட்டம் விடுவாங்க. அதை அமுல் படுத்துங்க ஜுட்ஜ் ஐயா. அப்போ தான் கோர்ட்டில் உள்ள லஞ்சத்தையும் ஒழிக்க முடியும். இந்த கேசு சின்னதாய் ஜூட்ஜுக்கு வரை லஞ்சம் கொடுத்து கடைசில சிறைச்சாலை வரை லஞ்சம் கொடுத்து தண்டனை என்ற பெயரிலே சுக போகம் ஜெயில்ல அனுபபிக்கிறா. தேவையா இந்த ஜனநாயகம்??

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  இந்த சசி இந்தியாவில் எந்த ஜெயிலுக்கு மாற்றினாலும் லஞ்சம் கொடுத்து சொகுசு வாழ்க்கையையே அனுபவிக்க விரும்பும். இந்த குற்றவாளியை "கியூபாவிலுள்ள குண்டனமா பே" ஜெயிலுக்கு மாற்றினால் இந்த மாதிரியான லஞ்ச பேரம் அங்கு நடக்காது.

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  சசி என்னும் சிறை கைதியிடம் பணம் வாங்கிட்டு பிஸ்னஸ் செய்த அரசியல்வாதிகள் முதல், அதிகாரிகள் வரை அனைவரும் தங்கள் செய்த தவறை மறைக்க ரூபா போலீஸ் அதிகாரியை தண்ணீர் இல்லா காட்டுக்கு மாற்றுவார்கள் என்று தெரிந்த ஒன்று. தவறு செய்தவர்கள் தண்டிக்கபடுவார்கள் என்று கூறிவிட்டு, ஒரு நேர்மையா போலீஸ் அதிகாரி ரூபாவை இடமாற்றம் செய்வது எந்தவிதத்தில் நியாயம்?

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  சிறையில் வைத்திருப்பதால் வரிப்பணம் தான் வேஸ்ட் எனவே ஐ எஸ் ஸிடம் ஒப்படைத்துவிடலாம்

 • raja - Kanchipuram,இந்தியா

  மக்கள் புரட்சி ஒன்று தான் இதை போன்ற அக்கிரமங்களுக்கு தீர்வு

 • HN.Subramanian -

  பணம் பாதாளம் வரை பாயும். பரப்பன சிறைக்குள் பாயாதா. வாழ்க ஜனநாயகம்.

 • manivannan - chennai,இந்தியா

  அப்போ இளவரசி? நான்கு வருட தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்ட உடனேயே சத்தம் போடாமல் அபராத தொகை யை செலுத்தி விட்டு அடக்கமாக ஜெயிலுக்கு , போய் விட்டு , செய்த தவறுகளை .ஆசை போட்டு மனம் வருந்தி , உள்ளம் திருந்தி.. இருக்கிற இடம் தெரியாமல் இருந்து விட்டு இன்னிக்கு போச்சா நாளைக்கு போச்சான்னு நாட்களை எண்ணி . கடவுளிடம் மன்றாடி இந்தம்மா இருந்திருந்தால், மக்கள் ஏற்றுக்கொண்டு இருந்திருப்பார்கள் ஆனால் இவரோ " பழைய கள்ளு புதிய துருத்தியில் " என்கிற மாதிரி அட்டகாசம் ஆரவாரம் பண்ணி நானா விடுவேன் என்று அராஜகம் பண்ணி கொண்டு தன வாழ்க்கையை தானே பாடு படுத்தி கொண்டு இருக்கும் இந்த சசிகலா இதையெல்லாம் எண்ணி எண்ணி கதறுவார், ஆனால் அங்கே அப்போ யாரும் இருக்க மாட்டார்கள் .. . ஜெ கூடவே இருந்து அதை போல தானும் வளைய வர வேண்டும் என்று கற்பனை செய்து கொண்டார் அதன் விளைவுகளே இதெல்லாம். ஒரு விதத்தில் இவர் ஒரு மன நோயாளி தான் கட்சியை காப்பற்றினேன் என்று தன் செயல் களுக்கு போர்வை போர்த்து கிறார். இவருக்கு கட்சியின் அடி தெரியுமா , நுனி தெரியுமா, கட்சி பேரில் கமிஷன் அடிக்கலாம் , சொத்து குவிக்கலாம் என்பது மட்டும் தானே தெரியும்?

 • மு. தணிகாசலம் - கரூர் - ( முகாம் - தும்பிவாடி ),இந்தியா

  தயவு செய்து கூண்டுச்சிறைக்குள் மட்டும் சசிகலாவை அடைத்து விடாதீர்கள். வேண்டுமானால், சிறையில் எத்தனை நாட்கள் சொகுசாக இருந்தாரோ அதே எண்ணிக்கையிலான நாட்களுக்கு சிறைத்தண்டனையை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். சிறையில் லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக தனியாகவும் ஏதாவது தண்டனை கொடுத்துக் கொள்ளுங்கள். ஆனால்..... தயவு செய்து சசிகலாவை கூண்டுச்சிறையில் மட்டும் அடைத்துவிடாதீர்கள்.

 • SRINIVASAN - BANGALORE,இந்தியா

  இந்த அராஜகம் பண்ணும் பெண்ணை அந்தமான் ஜெயிலுக்கு அனுப்பலாம்

 • aanthai - Toronto,கனடா

  இந்த காலத்தில் உண்மையை சொல்பவன் சதிகாரன் . இது இப்போதைய தமிழ்நாடு , கர்நாடக அரசுக்கு மிகவும் பொருந்தும்.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  இந்த பொம்பளை போகுமிடம் எல்லாமே, ஆமை புகுந்த வீடுமாதிரி ஆகுதே.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  குற்றம் செய்தவர்களை விட்டுவிட்டு, அதை காட்டி கொடுத்தவர்களை எதுக்கு மாற்றானும், இதில் இருந்து தெரிவது திருட்டுப்பூனைகள் சிறைக்குள்ளேயே இன்னமும் வேலை செய்கிறார்கள், அவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, காங்கிரஸ் அரசு தோல்வி அடைவது நிட்சயம், அடுத்த அரசு வந்தால் நிட்சயம் தண்டனை உண்டு,

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  சிறையை ஒரு உல்லாசபுரி போல மாற்றிய சிறைத்துறை இந்த நாட்டுக்கு, நீதிமன்றத்துக்கு மற்றும் நீதிக்கு பெரிய எதிரி... சிறைத்துறை தலைமை கண்காணிப்பாளருக்கு இதற்காக ஆயுள்தண்டனையே கூட கொடுக்கலாம்... இவர்களது குடியுரிமையை கூட பறித்தால் தவறில்லை...

 • SaiBaba - Chennai,இந்தியா

  ஜாதவிற்கு பதிலாக சசிகலாவைத்தருகிறோம் என்று பாகிஸ்தானிடம் பேசிப்பார்க்கலாம். போனால் போகிறது, சசிகலாவுடன் சேர்த்து அவருடைய கோடிகளையும் பாகிஸ்தானிடம் கொடுத்து விடலாம்.

 • Mandakol Manian - Raleigh,யூ.எஸ்.ஏ

  கர்நாடகா அரசின் செயல் முறைகள் சரியா என்று அவர்கள் மறுமுறை சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். சிறை அதிகாரிகள் இப்படி...உண்மையைச் சொன்னதற்காக அவர்களை அடித்து நொறுக்குவது கண்டிப்பாய் சரியல்ல. அவர்கள் உண்மையைத்தான் கூறியுள்ளார்கள் டி.ஐ.ஜி. மிஸ் ரூபா அவர்களுக்கு. டி.ஐ.ஜி. ரூபாவும் ஒன்றும் தவறு செய்ததாக எனக்குத் தெரியவில்லை. இந்த எல்லா விஷயங்களையும் ஸ்ரீ.மோடி தலைமையில் ஆன மத்திய அரசு சரிவர விசாரணை செய்து நீதியை நிலைநாட்டுவர் என்பது என் நம்பிக்கை. என் நம்பிக்கைப்படி அனைத்தும் நடக்குமா? "மணியன்"

 • LAX - Trichy,இந்தியா

  'பெங்களூரு சிறைவிவகாரம் குறித்து, எந்த அதிகாரியும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கக் கூடாது என தடை விதித்துள்ளார்.' - ஏன் 'கட்டிங்' போச்சா..?

 • Nagercoil Suresh - India,இந்தியா

  பொதுவாக ஒருவர் தவறு செய்துக்கொண்டு சிறைக்கு செல்வதை மக்கள் மிகவும் கேவலமாக எண்ணுவார்கள் அதிலும் ஒருவர் திருடிவிட்டு சிறைக்கு செண்டால் மக்கள் காறித்துப்பி அசிங்கப்படுத்துவதுண்டு, பலர் கிராமங்களில் பொது இடங்களில் முகத்தை காட்டுவதற்கே வெட்கப்படுவார்கள், மக்களுடைய மனதை இவர் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் கடந்த 25 வருடங்களாக கொள்ளை அடித்துவிட்டு திரும்பவும் கொள்ளை அடிக்க துடிக்கும் கூட்டம் இவர்களினால் ஒரு கட்சியே காணாமல் போகும் சூழ்நிலை. தமிழகத்தில் குழப்பத்தை உண்டுபண்ணியவர்கள் கர்நாடகாவையும் விட்டுவைக்கவில்லை, இவர்களின் பேராசை பெரு நஷ்ட்டமாக அமையும்....கர்நாடக அரசு ஒருவரை பதவியில் வைத்துக்கொண்டே விசாரணை கமிஷன் அமைப்பது வெறும் கண் துடைப்பு நாடகம் மட்டும் தான்...

 • SaiBaba - Chennai,இந்தியா

  நீங்க எந்த சிறைக்கு எங்களை மாத்தினாலும் நாங்க செய்ய வேண்டியதை செஞ்சுக்கிட்டுத்தான் இருப்போம். உங்களால ஒன்னும் பண்ண முடியாது. அதெல்லாம் எங்க ரத்தத்திலேயே ஊறினது

 • Artistramki Oviyarramki - Kumbakonam,இந்தியா

  சூப்பர் சித்தராமையா அவர்களே எனக்கு என்ன டவுட்டுன்னா சசிகலாம்மாவோட அதிமுக, ஜனாதிபதி தேர்தல்ல காங்கிரசை ஆதரிக்குமாங்கிறதுதான் (பிஜேபிக்கு ஆப்பு?)

 • Pillai - Lagos,நைஜீரியா

  ஊழலின் உச்சம் கர்நாடகா காங்கிரஸ்

 • MANI S - CHENNAI,இந்தியா

  நீ எங்க மாத்தினாலும் நாங்க நாங்க தான் டா தமிழன்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement