Advertisement

வந்தாளே...வனமகள் : ஐஸ்கிரீம் அழகி ஷாயிஷா

ஐஸ் கட்டிகளே 'ஐ லவ் யூ' சொல்லும் ஐஸ்கிரீம் அழகி... பூந்தொட்டிகளே 'ஐ கிஸ் யூ' சொல்லும் இதழ்களில் மில்கி... நெளியும் இடை வரிகளில் இனிக்கும் ஜெல்லி, நீ நகர்ந்தாலே நாளெல்லாம் மணக்கும் மல்லி, வில்லென வளையும் உன் 'வேவ் மூவ்மென்ட்' நடனம் கில்லி... என, சொல்லி, சொல்லியே வர்ணிக்க துாண்டும் பியூட்டி, பிரபல ஹிந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தி, 'ஷைனிங் ஸ்டார் ஷாயிஷா' வனமகளாய் நம் மனதை தொட்டு பேசுகிறார்...* அழகின் அறிமுகம் எப்படிநான் மும்பை பொண்ணு, லண்டன்ல ஐ.டி., படிச்சிருக்கேன். தெலுங்கில் 'அகில்', ஹிந்தியில் 'ஷிவாய்' படங்களில் நடிச்சிருக்கேன்.* பாலிவுட் - கோலிவுட் ?கோலிவுட்டில் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக, 'வனமகன்' படத்தில் அறிமுகமானது ஹேப்பியா இருக்கு.* ரவி 'வனமகன்'- நீங்கள் 'வனமகளா' ?இல்லை, நான் மாடர்ன் சிட்டி கேர்ள் கேரக்டர்ல வரேன். காட்டுவாசியான ரவி, சிட்டிக்கு வந்து என்னை சந்திக்கிறார்... அப்புறம் காதல் மலருது, அப்படியே கதை நகருது...* ஹோம் ஒர்க் ?பெருசா எதுவும் ஹோம் ஒர்க் எல்லாம் பண்ணலை. தமிழ் பேசுறது தான் கொஞ்சம் கஷ்டமா இருந்தது.* டான்ஸ் கிளப்புறீங்களே...எனக்கு கதகளி, ஒடிசி, லத்தீன் அமெரிக்கன் டான்ஸ் தெரியும். தினமும் பிராக்டிஸ் பண்றதால டான்ஸ் நல்லா வருது.* லேடி மைக்கேல் ஜாக்சன் ?அய்யோ அப்படி எல்லாம் இல்லை... 'வனமகன்'ல என்னோட 'டாமன் டாமன்' இன்ட்ரோ சாங்கிற்கு பிரபுதேவா தான் நடன இயக்குனர். இந்த பாட்டில் நான் ஆடும் 'வேவ் மூவ்மென்ட்' எல்லாம் அவர் சொல்லிக் கொடுத்தது தான், ஒரே டேக்ல ஆடினேன்.* காட்டுக்குள் ஷாயிஷா ?வெயில் ஒரு பக்கம், குளிர் ஒரு பக்கம். இதுல கேமரா முன்னாடி ஓடி, ஆடி நடித்தது ஒரு புதிய அனுபவம், என்ஜாய் பண்ணினேன்.* உங்கள் ரியல் கேரக்டர் ?அமைதியான ஹோம்லி பொண்ணு, அதிகமாக பேசக் கூட மாட்டேன்.* சாக்லேட் கேர்ள் ?ஆமா... எனக்கு க்ரீமி சாக்லேட் கேக் ரொம்ப பிடிக்கும், அதுமட்டுமல்ல பலவிதமான கேக்குகளை செய்யவும் தெரியும்.* அடுத்த படங்கள்...பிரபுதேவா இயக்கும் கருப்பு ராஜா, வெள்ளை ராஜா படத்தில் நடிக்கிறேன். இதில் விஷால், கார்த்தி என ரெண்டு ஹீரோக்கள் இருக்குறாங்க.www.sayyeshaa.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement