Advertisement

இந்தியாவின் பலத்தை உலகம் உணர்ந்தது; மோடி

விர்ஜீனியா: ‛சர்ஜிக்கல் ஸ்டிரைக்' மூலம் இந்தியாவின் பலத்தை உலகம் உணர்ந்துள்ளது என பாக்.,கை தாக்கி பிரதமர் மோடி அமெரிக்காவில் பேசியுள்ளார்.

சாதனையை நோக்கி..அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி வெர்ஜீனியா நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசியதாவது : ‛‛இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களில் உள்ள மக்களும் இங்கு இருக்கிறீர்கள். உங்களது கனவுகளை நனவாக்க ஆர்வமுடன் இருக்கிறேன். இந்தியா துன்பத்தை சந்திக்கும் போது எல்லாம் நீங்கள் வலியை உணர்ந்து வருகிறீர்கள். இந்தியா ஓர் பெரிய சாதனையை நோக்கி முன்னேறி வருகிறது.

கவனம்:இந்தியாவின் வளர்ச்சியை பற்றி யோசிக்கும் போது எல்லாம் இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்தும் கவனம் செலுத்தி வருகிறோம்.

ஊழல் இல்லை:இந்தியாவில் ஊழல் செய்த அரசுகளை எல்லாம் மக்கள் தங்கள் ஓட்டுக்களால் ஒதுக்கி வைத்துள்ளனர். எனது தலைமையிலான அரசில் ஓரு ஊழல் சுவடு கூட கிடையாது. சாதாரண இந்தியன் ஊழலை வெறுப்பான். தொழிற்நுட்பத்தை சரியாக பயன்படுத்துவன் மூலம் வெளிப்படை தன்மை அதிகரிக்கும். இந்திய இளைஞர்கள் தொழிற்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து மிகச்சரியாக புரிந்து வைத்துள்ளனர்.

முன்னேற்றம்:வெளிப்படைதன்மை கொண்ட கொள்கை மக்கள் மத்தியில் நம்பகமான சூழ்நிலையை உருவாக்கும். இந்தியா எல்லா துறைகளில் நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறது. மக்களுடைய எதிர்பார்ப்புகள் சரியான தலைமையை கொடுக்கும். இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியபோது உலகம் இந்தியாவின் பலத்தை உணர்ந்தது. அதில் பாதிக்கப்பட்ட நாடு தவிர்த்து உலகின் எந்த நாடும் இது குறித்து சந்தேக கேள்வியெழுப்வில்லை. தீவிரவாதித்தின் அச்சுறுத்தல் குறித்து அவர்கள் இப்பொழுது அறிந்திருக்கிறார்.

இந்தியா வெற்றி:20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா பயங்கரவாதத்தை பற்றி பேசிய போது, உலகில் பலர் அது ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சனை என்று கூறியதுடன் அதை புரிந்து கொள்ளவில்லை. தற்போது உலகிற்கு அழிவை ஏற்படுத்தும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை இனி யாராலும் தடுக்க முடியாது.

விரைந்து நடவடிக்கை:அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு உதவி செய்வதில் இந்திய தூதரகம் எந்நேரமும் தயராக இருக்கிறது. வெளிநாட்டில் வாழும் இந்தியாவை சேர்ந்த யாருக்கு பிரச்னை என்றாலும் சுஷ்மாவிற்கு டுவிட் செய்தால் அவர் உடனடியாக பதிலளிப்பார். அந்த பிரச்னை மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும்.

நேரம் இதுவே:இந்தியாவிற்கு நீங்கள் செய்ய விரும்புவதை செய்வதற்கான நேரம் இது. இந்தியா உடனான தொடர்பை மேற்படுத்தி கொண்டே இருங்கள். உங்களது அடுத்த தலைமுறையும் இந்தியாவுடனான நெருங்கிய நட்புடன் திகழட்டும்.'' என பேசினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (166)

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  நம்ம ஆளு அமெரிக்காவில் பேசுவார்..நெதர்லாந்தில் பேசுவார்..தெருவில் மேடையில் பேசுவார்.. ரேடியோவில் பேசுவார்...டிவியில் பேசுவார்...தனக்கு தானே கூட பேசிக்கொள்வார்...ஆனால் பாராளுமன்றத்தில் மட்டும் பேசவே மாட்டார்...இவர்கள் தான் மன் மோஹனை ஏளனம் செய்தவர்கள்...வெட்கக்கேடு...

 • Akbar Muhthar - Madurai,இந்தியா

  மோடிஜி எதற்கு பாரசீக உடையான ஷெர்வானி அணிகிறார். ராம்தேவ் போல ஹிந்து தோற்றம் கொடுக்கணும் தோத்தி, நோ செருப்பு மேல ஒரு துண்டு இன்ஸ்டெடு ஆப் சட்டை

 • Akbar Muhthar - Madurai,இந்தியா

  மோடிஜியோட பலம் மேனேஜிங் தி நியூஸ். தீவாலியப்போ பிரதம மந்திரி ராணுவ வீரர்களோடு கொண்டாடுகிறார் என்று பெரிய நியூஸ் ஆனா இவர் போனது வீரர்கள் கஷ்டப்படும் காஷ்மீர் எல்லை அல்ல இவர் போனார்அமைதியான திபெத் எல்லைக்கு.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  இந்தியாவில் இது போன்ற கதையை சொன்னால் யாரும் கேட்கப்போவது இல்லை. இப்படி போகும் இடங்களில் பில்டப் செய்து பேச வேண்டியதுதான்.

 • Sahayam - cHENNAI,இந்தியா

  நம்ம பிரதமருக்கு நம் நாட்டை தாண்டினால் தான் விலா வாரியாக பேச்சு

 • murugan - chennai,இந்தியா

  ‛சர்ஜிக்கல் ஸ்டிரைக்' இன்னும் எத்தனை வருடம் சொல்வீர்கள். அதன் பிறகு தாக்குதல் நடந்துகொண்டுதான் உள்ளது. நம் மரியாதைக்குரிய இராணுவ வீரர்கள் இழப்பு அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Halo....., America vaa....? Ange ennoda brother....

 • rinesh -

  In a nation like India, new set of Government can give good governance only after a continuous period of two terms. This will be possible provided they should a pragmatic approach in all areas. As of now, result of 3 years rule is nil. BJP is one more INC.

 • jagadeesan - Hosur,இந்தியா

  நாம இப்படியே பேசவும் பிஜேபி தமிழ் நாட்டிடை ஆளும் நாள் வரும். தமிழ் நாட்டிடை ஆண்ட திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்ள்ளும் அரசுகள் அடித்த கொள்ளைகள் அவர்களின் அல்லகைகள் சொத்து பல தலைமுறைக்கு இருக்கும். இவர்களை மக்கள் புரிந்துகொண்டு இவர்களை இனி ஒதுக்குவார்கள் தேசிய கட்சிகளுக்கு தான் இங்கு ஆளும் காலம் வரும். திமுக, அதிமுக, தமிழ்கட்சிகள் என்று சொல்லும் காலாவதியான கட்சிகளுக்கும் இனி தமிழ் நாட்டில் வேலை இருக்காது

 • Indian - Shelton,யூ.எஸ்.ஏ

  கடந்த மூன்றாண்டுகளில் வேலையில்லா திண்டாட்டம் ஏறிக்கொண்டே போகிறது.., விவசாயி செத்து மடிகிறான், காவிரி ஆணையத்தை கூட்ட துப்பு இல்லை.,., டீமானிட்டசேசன் என்று ஒரு முட்டாள் தனத்தை செய்து இந்தியாவின் வளர்ச்சியை இரண்டு சதவீதம் கீழே தள்ளி விட்டாச்ச்சு.. காஸ்மீர் முன்னெப்போதும் இல்லாதவகையில் பற்றி எரிகிறது, மாட்டுக்கறி அரசியல் செய்து அப்பாவிகளை அடித்து கொல்கிறார்கள்.. லவ் ஜிகாத் என்ற பெயரில் மற்றவர்களின் படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் அவலம் நடக்கிறது .. இதெல்லாம் தெறியாத ஒருத்தர் மக்கள் பணத்தில் டூர் போய்.. அது எலக்ஷ்ன மீட்டிங் அப்படின்னு நின்னுகிச்சு பீலா விடுறாரு

 • Senthil - Bangalore,இந்தியா

  இந்தியா ராணுவ தளவாட உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து, மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வர வேண்டும்.

 • yaaro - chennai,இந்தியா

  வாங்கிற காசுக்கு நிறையவே கருத்து போடுறீங்க .. பலே பலே...போனஸ் ஏதானும் உண்டா ?

 • Mja Mayiladuthurai - chennai,இந்தியா

  இந்தியாவின் பலத்தை கடலில் கொட்டிய குரூட் ஆயிலை வாளியை கொண்டு அள்ளியபோதே உலகம் உணர்ந்துவிட்டது. எந்த ஒரு பலனும் இல்லாத டெமானிடைசேஷன் மூலம் சுமார் 120 பேர் செத்து இந்திய மக்கள் ஒட்டுமொத்தமும் நடுத்தெருவுக்கு வந்தபோதே இந்தியாவின் வலிமையை இந்த உலகம் உணர்ந்துவிட்டது.

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  இந்திய - பாக் போர் என்பது ஏராளமான உயிர் சேதத்தையும் , பெரும் பொருளாதார பின்னடைவையும் ஏற்படுத்தும்.....இந்தியா தற்போது பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் சூழலில் இது பெரும் பாதிப்பாக அமையும்......சீறலாமே தவிர...கொத்தலாம் என்று நினைப்பது தவறு....அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்த்து கொள்வதில் தவறில்லை....நம்மை சுற்றியுள்ள எல்லா அண்டை நாடுகளும் (பூடான் தவிர) மதில் மேல் பூனையாகவே உள்ளன...அவர்கள் சீனா பக்கம் சாயவே வாய்ப்பு அதிகம்.....

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  சர்ஜிக்கல் அட்டாக்கில் பயந்து பாக்கிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்தி விட்டது .. காஷ்மீர் அமைதி பூமி ஆனது .. இன்னும் ரெண்டு வரி சேர்த்து போட்டு விடுங்க தல காசா பணமா .. ஆனா இதை கூட மன்னிக்கலாம் ஆனா பண மதிப்பிழப்புனால தீவிரவாதம் அழிஞ்சிருச்சு என்று உட்டீங்களே அய்யா ஒரு ரீலு .. முடியல ..

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  75 % இந்தியர்கள் குடிநீர், கழிவறை, மருத்துவம், கல்வி, ஆண் பெண் சம உரிமை, நிலையான வருமானம், மின்சாரம் இல்லாமல் தவித்து கொண்டிருக்கும்போது, இந்தியா ஒளிர்கிறது...மிளிக்கிறது என்று வாய் சவடால் சொல்வது இந்தியர்களை கேவலப்படுத்தும் செயல்... 3 ஆண்டுகளாக, சாமானிய மக்களுக்காக ஒரு துரும்பை கூட எடுத்து போடாத அரசு, சுதந்திரத்திற்கு பிறகு இந்த அரசு தான்... ஆகவே காங்கிரஸ் காரன் ஒன்னும் செய்யல என்று சொல்ல இந்த அரசுக்கு தார்மீக உரிமை இனி இல்லை.. [ முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் காலத்தில் இந்தியா நிச்சயமாக ஒளிர தொடங்கியது ... ஆனால், அப்போது அவர்கள் உண்மையை சொன்னபோது கூட மக்கள் அதனை ஏற்கவில்லை ...காரணம், மக்கள் எதிர்பார்ப்பு வானத்தை தாண்டி இருந்தது...ஆனால் இந்த ஆட்சி எதுவுமே செய்யாமல், இந்தியா மிளிர்கிறது என்று பீலா விடுகிறார்கள்... மக்கள் ஆப்படிக்க காத்து இருக்கிறார்கள்... ஆனால் EVM துணை இருப்பதால் இப்போதைய ஆட்சியாளர்கள் ஒருவித குஷியுடன் இருப்பது தெரிகிறது .. மக்கள் பணத்துக்காக நாயாட்டம் தெருவில் அங்கும் இங்கும் அலைந்தபோதே UP யில் 325 ஜெயித்தவர்களுக்கு 2019 எம்மாத்திரம் ? ]

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  இந்தியாவின் பலம் அதிகரித்திருக்கு என்பதுக்கு ஆஸ்திரேலியா இம்மிகிரேஷன் இலாகாவை கேட்டால் சொல்லுவார்கள். இங்கு நிரந்தர வதிவிட விசா பெற என்ன தில்லுமுல்லுகளை பஞ்சாபிகள் செய்கிறார்கள் என்று, ஒருவர் குறைந்தது 3 தடவையாவது மாத்தி, மாத்தி திருமணம் செய்கிறார்கள். அதனால் 400 டாலரில் இருந்த spouse விசா கட்டணம் இன்று 6890 டாலர்வரை உயர்ந்துள்ளது. விபரம் தெரிந்தவர்களுக்கு இது புரியும். அடுத்து பிரிட்டன், அமெரிக்காவிழும் அப்படித்தான்.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  மோடி யின் கூச்சல் வர வர எல்லை மீறிப்போகிறது... ?. சுயதம்பட்டம்... இந்தியாவில் ஊழலே இல்லை என்று இவரால் எப்படி கூற முடிகிறது?...இவரது ஆட்சியில் ஊழல் இல்லையாம்...எங்கும் ஊழல் தலை விரித்தாடுவதை கூட இவரால் உணர முடியவில்லை ...

 • kmish - trichy,இந்தியா

  வெளிநாட்டு கருப்பு பணம் கொண்டு வருவேன் கொண்டு வருவேன் சொல்லி காலத்தை தள்ளுனது தான் மிச்சம் , இவரால் மக்கள் வரி பணம் வேஸ்ட்

 • ganapati sb - coimbatore,இந்தியா

  மோடியின் பெருமிதம் உண்மை. மத்தியில் உள்ள பாஜக ஆட்சி மேல் மூன்றாண்டில் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லாததால் எதிர்க்கட்சிகள் நடுரோட்டில் மாட்டிறைச்சி சாப்பிடவேண்டும் RSS தொடர்பில்லாத தலித் ஜனாதிபதி வேண்டும் என ஒன்றுமில்லா விஷயங்களை ஊதி பெரிதாக்கி பேசி கொண்டிருக்கிறார்கள்.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  கூவல் தான் . இங்கு இலங்கை காரன் மீனவர்களை கடலுக்கு போகவிட மாட்டேன்கிறான் . பாகிஸ்தான் காரன் மோடியை பாத்து சிரிக்கிறான் . RSS காரங்க மட்டும் தான் மோடி சாதிக்கிறார் என்கிறார்கள் . பொருளாதார வீழ்ச்சி உலகம் எள்ளி நகைக்கிறது . இவரு மான்கிபாத் கூவலில் ஓட்டிக்கிட்டிருக்கார் .கூசாமல் புளுகிறார் .

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  குடும்ப அரசியல், வாரிசு அரசியல், பரம்பரை அரசியல் போன்ற அருவருப்பான அரசியலுக்கு சாவுமணி அடிக்க வந்தவர் மோடி. மைனாரிட்டி வாக்குகளை ஆண்டி பொழப்பு நடத்திக் கொண்டிருந்த ஊழல் ஆட்சியை இனி இந்தியாவில் தலைதூக்க வழியே இல்லாமல் துடைத்து எறிந்தவர் மோடி என்பதில் சந்தேகமே இல்லை.

 • vimal -

  vasi chitti ku kovam varudhu vimal

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  இந்தியர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் நம் தாய் நாடு வளம் பெற வேண்டும் என்றே இருப்பார்கள் . மற்ற காவி கூட்டம் போல் இல்லாமல் மோடி வித்யாசமாக செயல்படுவார் என்று மோடி மீதே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. நான் இந்தியா வந்து பெங்களூரில் பிஜேபி இக்கு வாக்கு அளித்தேன் . ஆனால் ஸ்ம்ரிதி இரானி போலி செர்டிபிகேட் பிரச்சனையில் ஆரம்பித்து மோடி யும் சராசரி அரசியல்வாதி என்று நிரூபித்து விட்டார்

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  டிரம்ப் சந்திப்பதற்கு பதிலாக பாக்கி தலைவர்களை சந்தித்து பேசினால் கூட ஒரு முன்னேற்றம் இருக்கும்., இந்த சந்திப்பு ஒரு சம்பிரதாயமாக தான் இருக்கும்., பாக்கிற்கு ஆய்தம் சப்ளை பண்ணக்கூடாதுன்னு தைரியமாக அதிபரிடம் சொன்னால் நல்லது அதில் வெளிப்படை தன்மை இருக்கணும் சார்., எங்கே பார்ப்போம் ..

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  அவன் இங்க எல்லையில் அடிக்கிறான்... இவர் அமெரிக்காவில் கூவுகிறார் ...... தாக்குதல் எல்லாம் பேச்சில்தான்.... அதுவும் வெளி நாட்டில்...நல்ல பிரதமர்

 • kmish - trichy,இந்தியா

  இந்திய மக்களால் தகுதி இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் இவர் தான் , சுற்றுலா செல்லும் பொழுது ஊர் சுற்றி விட்டு வருவதோடு நிறுத்தி கொண்டால் நன்றாக இருக்கும் ,அதை விட்டு கண்டதை பேசி அசிங்க பட்டு நிற்கும் நிலைமை வேண்டுமா , சுய தம்பட்டம்

 • nizamudin - trichy,இந்தியா

  பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் நிறைய பேர் பலியானார்கள் / நேற்று ஆயில் டாங்க் வெடித்து 150 பேர் செத்தார்கள் / மோடியின் சார்பாகவும் நம் அனைவரின் சார்பாகவும் ஆழ்ந்த வருத்தம் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் தினமலர் சார்பாக

 • Mayilcity Ragu Raman - Mayiladuthurai,இந்தியா

  மோடிக்கு ஓட்டு போட்ட நிறைய பேர் அதிருப்தி அடைந்துள்ளார்கள் என்பதை மோடி உணர வேண்டிய தருணம் இது. மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. இந்தியாவில் செய்ய வேண்டிய செயல்கள் ஆயிரம் ஆயிரம் இருக்கின்றன. நாடே ஊழலில் திளைக்கிறது. ஒவ்வொரு இடங்களிலும் லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடுகிறது. இயற்கை வளங்கள் கொள்ளைபோகின்றன. காடுகள் அழிக்கப்படுகின்றன. நீர்நிலைகள் பறிபோகின்றன. மக்களின் முக்கிய தேவைகள் பொது கல்வி மற்றும் பொது மருத்துவமனைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் போதுமான அளவிற்கு மேம்படவில்லை. மாநில அரசுகளில் லோக் ஆயுக்தா இல்லை. லோக் பால் இல்லை. கருப்பு பணம் அத்தனையும் பத்தாயிரம் பேரிடம் மட்டும் தான் உள்ளது. அதைவிட்டு மக்களின் ஒட்டுமொத்த பணத்தை முடக்கி வேறு பணம் கொடுப்பதால் ஒரு பயனும் இல்லை. இந்தியாவில் பல பெரும் காரியங்கள் தைரியமாக அரங்கேற்றவேண்டிய காலம் இது. மோடியால் நிச்சயம் முடியும். வெளிநாட்டு வேலைகளை, சுஷ்மா ஸ்வராஜ் செய்ய முடியும். ஆனால் உள்நாட்டில் தைரியமாக செயல்பட கூடிய தலைவரை மக்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள். மோடி அத்தனை வெளிநாட்டு பயணங்களை தள்ளிவைத்து விட்டு, உள்நாட்டில் செய்ய வேண்டிய வேலைகளை இனியாவது ஆரம்பியுங்கள். மக்களின் ஆசைகளை பூர்த்தி செய்யுங்கள். இந்தியாவிற்கு இப்போது மாடு காவலர்களோ, ஹிந்தி திணிப்போ முக்கியம் இல்லை. இப்போது அத்தனை மக்களுக்கும் தண்ணீர், பொது மருத்துவம், பொது கல்வி, சுத்தமான காற்று, இயற்கையை பறிக்காத முன்னேற்றகரமான வேலைவாய்ப்பு, லஞ்ச ஊழல் இல்லாத இந்தியாவை பார்க்க விரும்புகிறோம். அதை தாருங்கள் போதும்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ஒரு சிங்கத்தை அதன் குகைக்குள் இன்னொரு( முதல்) சிங்கம் சந்திக்கிறது

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  கடந்த மூன்றாண்டுகளில் இந்தியாவின் புகழ் உலக அளவில் முன்னேறி இருக்கிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை

 • Aaa - Bangalore,இந்தியா

  Who are all honoring PM Modi please tell wht development he did in this 3 years, please list it out at least 10. So many peoples are eagerly waiting for knw abt that... After that honor him...

 • Subhash.U - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Modiji please continue your way forward we will support always and good people will support always..India is becoming global power in the world because of Modiji. India always retaliate cross border terrorism. After President takeover by Mr.Kovind there will be lot of changes in J&K and all over the India. During president election approximate 20 to 22 states CM are warmly supporting BJP Nominated president it means 85% of Indian people and all over the world & India developing interested people will support Modiji.. He is very brilliant and very talented speech we are seeing after SWAMI Vivekanatha Ji. He will serve India PM again 20 more years. God will give good health to our great leader Modiji and we will be safe in india and all over the world.Even US President tweeting as True friend and Israel PM also tweeted same it means world leader like very much Modiji very fast action for India becoming global power. As a Indian proud to Say Modiji tenure India will be No 1. Always spreading wrong message to any one wont support by God finally truth will come out and support MODIJI as No1 leader

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  பாகிஸ்தான் அண்டை நாடு. கடுப்பேத்துவதற்காக , அமெரிக்கரின் காதையா குடையவேண்டும்?

 • Ravi Manickam - சேலம்,இந்தியா

  வெளிநாட்டில் வாசிப்பவர்களை வசதிக்காக, பணத்திற்காக ஓடியவர்கள் என்று எழுதுபர்கள் ஒன்றை நினைத்து பார்க்கவில்லை, இத்தனை பேர் வேலைகளை இந்தியாவில் வேறு ஒருவருக்கு விட்டு கொடுத்திருக்கிறார்கள் என்று. வெளிநாட்டிலிருந்து கருத்து எழுதினால், அதற்க்கு மாற்று கருத்து இருக்குமாயின் அதை எதிர்கருத்து மூலமாக பதில் தரவேண்டும் அல்லது unlike செய்யலாம் அதை விட்டுட்டு, லூசு என்றும் திருட்டு தனமாக குடியேறியவன் என்றும் கேவலமாக திட்டுவது கேவலமாக உள்ளது. திருட்டு தனமாக குடியேறுவதற்கு நான் என்ன ஹஜ் விசா எடுத்துக்கொண்டு சவூதி அரேபியாவிற்கா வந்துள்ளேன், ஹஜ் யாத்திரை முடிந்ததும் அல்லாஹ்வின் விசா அல்லது ஷேக் விசா என்று கூறிக்கொண்டு 6 வருடம் திருட்டு தனமாக வேலை செய்வதற்கு. கனடா மற்றும் இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட இந்திய குடிமகன்.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  வெளிநாட்டின் மண்ணில் நின்று கொண்டு, இந்தியா என்ற நினைப்பில் தேர்தல் பரப்புரை செய்துள்ளார், நம் நாட்டில் ஊழல் பேர்வழிகள், லஞ்ச பேர்வழிகள் இருக்கலாம், அதை ஒரு வெளிநாட்டில் போய் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஊழல் சுவடே இல்லை என்று பெருமை பேசிக்கொள்ளும் நமது பிரதமர், தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் இந்த மூன்று வருடத்தில் ஒரு இடம் மட்டுமே முன்னேற முடிந்துள்ளது, இலங்கை நம்மை விட முன்னேறி உள்ளது, வெளிப்படை தன்மை பற்றி பேசும் நமது பிரதமர் அதை அவரே கடைபிடிப்பதில்லை என்பது தான் மிகப்பெரிய சோகம், இவரை பற்றி இந்தியாவிலேயே விமர்சனம் செய்வதை அவரது அடியார்கள் பொறுத்துக் கொள்வதில்லை, இனி மற்ற எதிர்க்கட்சிகள் வெளிநாடுகளில் மோடி ஆட்சியை பற்றி விமர்சிக்ககலாம், நம் நாட்டு அரசியலை பற்றி, அரசியல்வாதிகளை பற்றி விமரிசனம் செய்யும் புதிய முறையை இவர் துவக்கி வைத்துள்ளார்

 • krishnan - Chennai,இந்தியா

  பாகிஸ்தான் செய்தித்தாள்களை ஒரு மாறுதலுக்காக படித்து பாத்திருக்கீர்களா ?

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  மோதி அவர்களே ...... சொந்த மாநிலமாகிய குஜராத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆரோக்கியம் எப்படி ????

 • Indira -

  பிரிவினைவாதிகள் பெரிய கூட்டத்துடன் வளர காரணம் முந்தைய அரசு. மெஹபூபாவும் ஒமரும் அவர்கள் எத்தனை கொலை அராஜகம் செய்தாலும் பேச்சு நடத்த வேண்டும் என்பார்கள் .ஹவாலா பணத்தை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இன்று அவர்களை காவலில் வைத்தால் ரொட்டி துண்டு கூட்டம் வன்முறையில் இறங்கி கொலைகள் செய்து பழியை ராணுவத்தின் மீது போடுவார்கள்.மெதுவாக கவனமாக கையாள வேண்டும் என்றே பொறுமை காக்கிறார்கள் .இன்று சேனை தீவிரவாதிகளை தேடி அழிக்கிறது ..தொலைதொடர்பு சுலபமாக இருப்பதால் மக்களை தூண்டி விடுகிறார்கள் .போன மாதம் வரை பாகிஸ்தான் டிவி அங்கு தடை செய்ய படவில்லை. இந்தியாவை பற்றி பொய் பிரச்சாரம் மட்டுமே செய்து வந்தது பாக்.இதெல்லாம் தான் காரணம்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எனது தலைமையிலான அரசில் ஓரு ஊழல் சுவடு கூட கிடையாது ... அப்பிடியா.... ஊழலே கிடையாதா... அப்போ ஏன் தமிழ்நாட்டில் பன்னீரும். பழனியும், சசியும், தீபாவும் அடிச்சிக்கிறாங்க...

 • Ravi Manickam - சேலம்,இந்தியா

  அப்பாவி... அப்பாவித்தனமாக இருக்கிறது உங்களின் கருத்து, இது என்ன மாநில கட்சிகள் ஆளும் நாடு என்று நினைத்து விட்டீர்கள் போலிருக்கிறது, பழைய நோட்டு மாற்ற தேவையான அறிவுரைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு பதிலாக மக்களை குழப்பி விட்டது மாநில கட்சிகள் மட்டுமே. எங்களுக்கு தேவையான விபரங்களை இந்திய அரசு இணைய தளத்தில் (pmindia.gov.in) விபரமாக படித்து தெரிந்து கொண்டு நல்லபடியாக பணத்தை மாற்றியிருக்கின்றோம்.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  மோடிக்கு ஒட்டு போட்ட நிறைய பேர் அதிருப்தி அடைந்துள்ளார்கள் என்பதை மோடி உணர வேண்டிய தருணம் இது. மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. இந்தியாவில் செய்ய வேண்டிய செயல்கள் ஆயிரம் ஆயிரம் இருக்கின்றன. நாடே ஊழலில் திளைக்கிறது. ஒவ்வொரு இடங்களிலும் லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடுகிறது. இயற்கை வளங்கள் கொள்ளைபோகின்றன. காடுகள் அழிக்கப்படுகின்றன. நீர்நிலைகள் பறிபோகின்றன. மக்களின் முக்கிய தேவைகள் பொது கல்வி மற்றும் பொது மருத்துவமனைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் போதுமான அளவிற்கு மேம்படவில்லை. மாநில அரசுகளில் லோக் ஆயுக்தா இல்லை. லோக் பால் இல்லை. கருப்பு பணம் அத்தனையும் பத்தாயிரம் பேரிடம் மட்டும் தான் உள்ளது. அதைவிட்டு மக்களின் ஒட்டுமொத்த பணத்தை முடக்கி வேறு பணம் கொடுப்பதால் ஒரு பயனும் இல்லை. இந்தியாவில் பல பெரும் காரியங்கள் தைரியமாக அரங்கேற்றவேண்டிய காலம் இது. மோடியால் நிச்சயம் முடியும். வெளிநாட்டு வேலைகளை, சுஷ்மா ஸ்வராஜ் செய்ய முடியும். ஆனால் உள்நாட்டில் தைரியமாக செயல்பட கூடிய தலைவரை மக்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள். மோடி அத்தனை வெளிநாட்டு பயணங்களை தள்ளிவைத்து விட்டு, உள்நாட்டில் செய்ய வேண்டிய வேலைகளை இனியாவது ஆரம்பியுங்கள். மக்களின் ஆசைகளை பூர்த்தி செய்யுங்கள். இந்தியாவிற்கு இப்போது மாடு காவலர்களோ, ஹிந்தி திணிப்போ முக்கியம் இல்லை. இப்போது அத்தனை மக்களுக்கும் தண்ணீர், பொது மருத்துவம், பொது கல்வி, சுத்தமான காற்று, இயற்கையை பறிக்காத முன்னேற்றகரமான வேலைவாய்ப்பு, லஞ்ச ஊழல் இல்லாத இந்தியாவை பார்க்க விரும்புகிறோம். அதை தாருங்கள் போதும்.

 • Indira -

  சுத்தம் சுகாதாரம் தண்ணீர் சேமிப்பு என்று அநேக விஷயங்களில் விழிப்புணர்வு ,பொதுவாகவே ஒரு உத்வேகம் ,புதிய கண்டுபிடிப்பு என்று மக்கள் கிராமங்களிலும் அறிந்திருக்கிறார்கள் .இன்று பிரதமர் அலுவலகத்திலிருந்து பதில் கிடைக்கிறது. 9 ￰சிலிண்டரா 12 ￰சிலிண்டரா என்ற கவலை இல்லை. கௌரவம் கிடைத்திருக்கிறது .முன்னேற்ற பாதையில் செல்கிறோம் என்று நம்பிக்கை உள்ளது .வேண்டுமென்றே கண்ணை மூடிக் கொள்ளும் கூட்டத்திடம் பேசி என்ன பயன். நாம் முதலில் இந்தியர்கள் .பிறகே மற்ற பிரிவுகள்

 • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

  vns - Delhi,இந்தியா அவர்களே மிக சரியாக சொல்லிவிட்டிர்கள்.இந்த மத வெறியர்களுக்கு மோடிஜியை பிடிக்காது .இந்தியாவையும் பிடிக்காது மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு - கேரளாவில்- காசர் கோட்டில் - கிரிக்கெட்டில் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்ததை வெகு விமர்சையாக பட்டாசுகள் வெடித்தும் ,இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிய 23 பேர் கைது .இவர்கள் பாக்கிஸ்தான் சொர்க்கம் ,இந்தியா நரகம் என்ற உன்னத மார்க்கத்தை சேர்ந்தவர்கள்.இந்த கூட்டங்கள் பிரதமர் மோடிஜி அறிமுகம் செய்யும் அனைத்து மக்கள் நல திட்டங்களையும் மதவாதமாக சித்தரிக்கும் கீழ்த்தரமான புத்தி கொண்டவர்கள் .இவர்களின் கேடு கேட்ட புத்தியை தெரிந்து கொள்ள இவர்களிடம் பிரதமர் மோடிஜி ஆட்சியில் சிறுபான்மை மக்கள் நலமாக வாழ்கிறார்களா ? என்று வினவி பாருங்கள் .உடனே அவர்கள் பிறழ் முரணாக ஈரான், ஈராக் ,சிரியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை கிறிஸ்துவர்களை விட இங்கு இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் கொடுமையான ,அடக்கு முறையிலான ,சுதந்திரமற்ற வாழ்க்கை வாழ்வதாக கூசாமல் சொல்லுவார்கள். அவ்வளவு ஏன்? இப்போது பயங்கர போர் நடக்கும் இராக்கின் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள மொசூல் நகரத்தில் வாழும் முஸ்லிம்கள் ,இந்தியாவில் மதவாத பிஜேபி அரசில் வாழும் முஸ்லிம்களை விட மிக மிக வசதியான ,பாதுகாப்பான ,அமைதியான சூழலில் வாழ்வதாக வாதிடுவார்கள். இவர்கள் பின் லேடனுக்காக மாபெரும் சிறப்பு தொழுகைகள் - (இறப்பு தொழுகைகள் )நடத்தினார்கள் ( மே 6,2011) அது மட்டும் அல்ல மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி கசாப் (பாகிஸ்தான் தீவிரவாதி ) தூக்கில் இடப்பட்ட போதும் சரி ,இந்திய பார்லிமெண்ட் கட்டடத்தை தாக்கிய அப்சல் குருவை தூக்கில் இடப்பட்ட போதும் சரி ,அவர்களுக்கும் இறப்பு தொழுகைகள் நடத்தி ,அமைதி ஊர்வலங்களும் ,கூட்டங்களும் தமிழகத்தில் நடந்தன .இதனை யாரும் மறுக்க முடியாது. நிச்சயம் இந்த மார்க்கத்தினரும் மனம் திரும்பும் காலம் வரும். நம்பிக்கை தான் வாழ்வு .

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்த பின் எத்தனை எல்லை பாதுகாப்பு வீரர்கள் இறந்தார்கள்.

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  காஷ்மீர் பிரச்னை முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தை விட தற்போது கொழுந்து விட்டு எரிகிறது..... எல்லை தாண்டிய தாக்குதல்களும் அதிகரித்திருக்கிறது.. மொத்தமாக பாக்குடன் ராஜ தந்திர ரீதியில் தோல்வியடைந்திருக்கிறது மோடி அரசு........ஒன்று பாக்கை ராணுவ ரீதியில் அடக்க வேண்டும்...அல்லது ராஜ தந்திர ரீதியில் பேசி பதட்டத்தை குறைக்க வேண்டும்...அதை விட்டு விட்டு வெறும் வாய் சவாடல் பேசி எந்த பயனுமில்லை....

 • Sami - Tirupur,இந்தியா

  மக்கள் இந்தியாவில் மதநல்லிணக்கத்தோடும், நட்போடும் நல்ல முறையில் வாழ்கிறார்கள். இந்து வெறியன் முஸ்லீம் மதத்தை தூற்றுவதும், முஸ்லீம் வெறியன் இந்து மதத்தை தூற்றுவதும் சகஜம். அதில் மோடி போன்ற இந்துமத தீவிரவாத கட்சியை சேர்ந்தவர்கள் பேசுவதில் எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லை. ஏனென்றால் அது அவர்களின் மதவெறியின் வெளிப்பாடு. அவ்வளவு தான். மதம், மொழி கொண்டு இந்தியாவை துண்டாடி, அதில் குளிர்காயும் எண்ணம் ஒருபோதும் நிலைக்காது.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதில் வெற்றி - இனி பாகிஸ்தானை அடித்து தரைமட்டமாக்க வேண்டிய நேரம்...

 • K.Sugavanam - Salem,இந்தியா

  அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் இப்படி பேசுவதை விட அவர் வெள்ளை மாளிகையில் டிரம்புடன் கூட்டறிக்கை கொடுக்கும்போது இப்படி பேசினால் நல்லது.. அது Official .. இப்படி பேசுவது எதற்கும் பயன் படாது.. இது offbeat ...

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  நாட்டில் எதுவும் நல்லது நடந்ததாக தெரியவில்லை. அதனால் மக்களை திசை திருப்ப இப்படி எதையாவது பேச வேண்டியதுதானே

 • R.Ravindran -

  Modi govt.now proceeding India to good level economic growth

 • Raju - jersi,யூ.எஸ்.ஏ

  இந்தியா மக்களுக்கு நல்லது செய்வதற்கென்றே தன்னை அர்பணிக்கிறார். வாழ்க , வளர்க அவர் பணி.

 • அப்பாவி -

  வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பழைய ரூபாய் நோட்டு மாற்றுவதில் பட்டை நாமம் போட்டவர் மோடிஜி. அங்கு அவர் பேச்சுக்கு கை தட்டுபவர்கள் யாரும் ஏமாந்திருக்க மாட்டார்கள். முன்னமேயே விவரம் அறிந்து பணத்தை மாற்றியிருப்பார்கள்.

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  மோடியின் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்...

 • vns - Delhi,இந்தியா

  மோடியைப்போன்ற தலைவர் இந்தியாவிற்கு கிடைத்ததற்கு இந்தியர்கள் அனைவரும் அவரவர்கள் கடவுள்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்ளுங்கள். மத வெறியர்கள் மற்றும் தீவிரவாதிகள் அவரை வெறுப்பது அவருடைய புகழுக்கும் அவருடைய திறமைக்கும் சான்று..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement