Advertisement

பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்

புதுடில்லி : ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்வதற்கான பா.ஜ., ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்தது. ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்திற்கு பிறகு பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், தற்போது பீகார் கவர்னராக உள்ள ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்திருப்பதாக அறிவித்தார்.

உபி.,யை சேர்ந்தவர்இவர் உ.பி.,யில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். வழக்கறிஞரான இவர், 2015 ஆகஸ்ட் 8 ம் தேதி பீகார் கவர்னராக நியமிக்கப்பட்டார். 1945, அக்., 1 ம் தேதி கான்பூரில் பிறந்த இவர், பா.ஜ., தலித் பிரிவின் தேசிய தலைவராக இருந்தவர். தற்போது இவருக்கு வயது 71. இவர், ஜூன், 23ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என அமித்ஷா தெரிவித்தார்.
பா.ஜ., தங்கள் கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்து விட்டதால் காங்கிரசும் தங்களின் வேட்பாளரை எந்த நேரத்திலும் வெளியிடலாம் அல்லது பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (215)

 • Indian - Bangalore,இந்தியா

  அத்வானி மேல் நம் போராளீஸ் வைத்திருக்கும் பாசம் புல்லரிக்கவைக்கிறது. இதே செகுலர்ஸ் வாஜ்பாயீயை போற்றினர் அத்வானியை தூற்றினர் அத்வானியை போற்றினர் மோடியை தூற்றினர். இன்னும் சிறிது காலம் போனதும். மோடியை போற்றுவர் யோகியை தூற்றுவர். அறிவுஜீவிகள், கம்யூனிஸ்ட்கள், கலை துறையினர், மீடியா, லுட்யன்ஸ் elite ஆதிக்கம் இவ்வாறு குறைந்துகொண்டே போகும்.

 • Prakash JP - Chennai,இந்தியா

  மத்திய கேபினெட் அமைச்சராக ஆ.ராசா இருந்தாரே.. அவர் தலித் தானே.. அதோடு, இருபது ஆண்டுகளுக்கு முன்பே, தலித் வகுப்பை சேர்ந்த கே.ஆர். நாராயணன்னை, இதே குடியரசு தலைவராக ஆகியது காங் & திமுக போன்ற கட்சிகள் தான்..

 • S.J.ANANTH - Nagercoil,இந்தியா

  அத்வானி என்ற ஒரு பழுத்த அனுபவம் வாய்ந்த ஒருவர், கட்சியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றிய ஒருவரை புறக்கணித்து வேறு ஒருவரை தெரிந்தெடுக்க காரணம் என்னவோ?

 • Mariappan Rajangam - tamilnadu,இந்தியா

  இந்த மாதிரி ஒரு பெரிய பதவிக்கு தேர்ந்து எடுக்கப்படுபவர் ஒரு முன்னோடியா இருந்தால் நாட்டுக்கு நல்லது .VAJBAYEE IS THE GREAT MAN HE ELECTED THE RIGHT ONE.NOW MODI JI KYA KAR RAHEY HAI APP

 • Mariappan Rajangam - tamilnadu,இந்தியா

  பிஜேபி-க்கு தேவை ஒரு வாயில்லா பூச்சி கோவிந்தன் மாட்டிகிட்டாரு ஏற்கனவே அந்த பதவி ஒரு ரப்பர் ஸ்டாம்ப் இப்ப .......

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ராம்நாத் கோவிந்தை என்ற சின்ன மீனை போட்டு பெரிய திமிங்கலத்தை பிடிக்கலாம் என்ற எண்ணம்...

 • Nagercoil Suresh - India,இந்தியா

  நல்ல தேர்வுபோல் உள்ளது, பிரதீப பாட்டிலை போல் ஊர் மக்களையும் கூட்டிக்கொண்டு மக்களுடைய வரி பணத்தில் ஊர் சுத்தி பார்க்காமல் இருந்தாலே போதுமானது..தினமலர் தலித் என்ற வார்த்தையை தவிர்த்து முன்னோடியாக இருந்திருக்கலாம் இது இன்டர்நெட் காலம்...

 • Hari Krishnan - Coimbatore,இந்தியா

  பிஜேபி யின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்விற்கு பின்..நமது டமிலர் டொலர்கள் புதுசாக ஒரு ஜாதியைய் உருவாக்கிவிட்டனர் - ஆர்ய தலித்..நல்ல வேளை Dr. APJ வுக்கு ஆர்ய இஸ்லாமியர் என்று ஒன்றை உருவாக்காமல் விட்டார்கள்

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  இங்கே தலித் போராளிகள் போல கருத்து எழுதியவருள் எத்தனை பேர் உங்கள் வீட்டு கழிவுநீர் தொட்டியை (Septic Tank) நீங்களே சுத்தம் செய்கிறீர்கள் ? அல்லது உங்கள் வீட்டிற்கு முன்னாள் உள்ள சாக்கடையை நீங்களே சுத்தம் செய்கிறீர்கள் ? எத்தனை பேர் பிச்சையெடுக்கும் ஏழை தலித்துக்களை உங்கள் வீட்டிற்குள் அனுமதித்து உணவு பரிமாறுகிறீர்கள் ? அல்லது எத்தனை பேர் தங்கள் வீட்டு பெண்ணை நரிக்குறவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளீர்கள் ? வெளியே பட்டியல் இன மக்களுக்கு ஆதரவாக போராடுவதை போல நடிப்பது, உள்ளே அரசியலும் செய்து சலுகைகளையும் அனுபவிப்பது. பி.ஜெ.பி யாவது நேரடியாக நீங்கள் கூறும் ஹிந்துத்துவதை ஆதரிக்கிறது. பிற மத, ஜாதி, மொழி, இன அரசியல் காட்சிகள் என்ன செய்து கிழித்தார்கள் என்று எங்களுக்கு தெரியும்..

 • Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா

  இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. நம் நாட்டில் ஜனாதிபதியின் அதிகாரம் வெறும் ஏட்டளவில்..ரபபர் ஸ்டாம்ப் பதவிக்கு தலித் அல்லது சிறுபான்மையினம் ,உயர் அல்லது பிற்படுத்தப்பட்ட சாதி என்று யாராயினும் எதுவும் கிழிக்கப்போவதில்லை .அரசியல் கட்சியில் தொண்டனுக்காவது ரூ. 500 /- . பிரியாணி பொட்டலம் , போகவரச்செலவு என்று ஒருவகையில் பயன் இருக்கும் .பாமர மக்களுக்கு ஏமாற்றம்தான் மிச்சம் . கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் ,அம்பையர் ,மற்றும் அதை சார்ந்தோர்க்கு நல்ல வருமானம் கிடைக்கும் .அதை வேடிக்கை பார்க்கும் ரசிகர்களுக்கு வேதனையும் ,பணச்செலவும் ,காலவிரயம் தான் மிச்சம்.ஆளும் .மத்திய அரசுக்கு ஏதேனும் இடர்பாடு வந்தால் அதனை தடுத்து காத்து முட்டுக்கொடுக்க ஒரு காவலன் வேண்டும் .அவர்தான் ஜனாதிபதி.

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  படித்தவர், முன்னாள் எம் பி, வக்கீல், பீஹார் ஆளுநர், எந்த கரும்புள்ளியும் இல்லை, அமைதியானவர். இன்னும் என்ன தகுதி வேண்டும் என்று நீங்களே கூறுங்கள் ? அய்யா அப்துல் கலாமை ஜனாதிபதி ஆக்கியபொழுது, ஒரு தமிழரை அதுவும் சிறுபான்மை இனத்தவரை ஜனாதிபதி ஆக்கிவிட்டார்கள் என்று எந்த தமிழனும் வோட்டு போடவில்லை. இப்பொழுது, ஒரு தாழ்த்தப்பட்டவரை வேட்பாளராக அறிவித்தவுடன், அவர்கள் வோட்டு போடுவார்கள் என்றும் நினைக்கத்தேவையில்லை. ருபாய் நோட்டு பணமதிப்பை இழக்கசெய்தபொழுது, ஓட்டுக்கள் பறிபோகும் என்று தெரிந்தே தான் செய்தார்கள். போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும், போய் சேரட்டும் கண்ணனுக்கே என்று நடப்பவர் மோடி. இங்கே பெரும்பாலானோர் வகிப்பது அரபு நாடுகளில். அங்கே ஒரு ஹிந்துவிற்கு ஏதோ அரச பதவி வாங்கி கொடுத்ததை போலவும், மக்காவில் ஏழை ஹிந்துக்களை வேலை செய்ய அனுமதி வாங்கிக்கொடுத்ததை போலவும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் ? ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும்வரை தான் உங்கள் மதச்சார்பின்மையும் ஜாதிசார்பின்மையும் என்று எங்களுக்கு தெரியும், வேலையை பாருங்கள்..

 • Indian - Shelton,யூ.எஸ்.ஏ

  எப்படியோ அத்வானியை அடித்து துவைத்து வீட்டில் முடக்கியாகிச்சு.,.

 • M.Ravindran - Tirunelveli,இந்தியா

  வேறு சமூகத்தினரை நிறுத்தினால் பா ஜ க நிச்சயம் தோல்வி பெரும். பா ஜ க தோல்வி பயம் வேட்பாளர் தேர்வின் மூலம் தெரிகிறது. பா ஜ க முழு மனதுடன் இவரை நிறுத்தவில்லை. வேறு வழியில்லை.

 • PrasannaKrishnan -

  wellsaid

 • Radj, Delhi - New Delhi,இந்தியா

  அண்ணாமலை படத்தில் ராதா ரவி அவர்கள் சொன்ன கருத்து தான் நினைவில் வருது 'கூட்டி கழிச்சி பாரு கணக்கு கரெக்டாக வரும்'. ரஜினி மாதிரி யாராவது வந்து கணக்கை மாற்றினால் மட்டுமே உண்டு.

 • Radj, Delhi - New Delhi,இந்தியா

  பிஜேபி அதன் பழைய தலைவரை மறந்து விட்டது. அத்வானி கட்சிக்காக உழைத்தார் ஆனால் ?

 • Radj, Delhi - New Delhi,இந்தியா

  மக்களை நேரில் சந்திக்காத ஒருவர் ஜனாதிபதியாக தேர்வு செய்தது பற்றி யோசிக்கணும். மக்களின் கஷ்ட நஷ்டங்கள் பற்றி தெரியுமோ என்பது ஒரு கேள்வி குறி. இந்தியா திரு நாட்டிற்காக இவர் என்ன செய்தார் என்பதை தினமலர் ஆசிரியர் சொன்னால் மக்களும் தெரிந்து கொள்ளலாமே.

 • kulandhaikannan -

  He will prove to be a better President than V.V.Giri, Fakhruddin Ali Ahmed, Zail Singh and Pratibha Patil

 • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

  இது நாடாயா இது...? இங்க கமெண்ட் போட்டவங்க அதிமேதாவிகள், மெத்த படித்த அறிவாளிகள் அனைவரும்... இவர் இந்த சாதி... இந்த பிரிவு...ன்னு “மதச்சார்பற்ற... சமூகநீதி போற்றும்... ஒரு இந்தியாவின் முதல் குடிமகன்” தேர்தலைப் பற்றி பேசுறீங்களே...? இந்த நாடு எங்கய்யா உருப்படுறது....? சுதந்திரம் வாங்குறது முன்னாடிதான் நம்ம பாட்டனும், தாத்தனும், அப்பனும் படிக்கல... அதனால... சாதி, மதம், இனம்...னு வேறுபாடு பார்த்தாங்க...ன்னு புளுகிகிட்டு இருந்தோம்... இப்ப என்னாடான்னா... அந்த படிக்காத முன்னோர்களை விட அடி முட்டாளா இப்ப படிச்சவங்களே இருக்காங்களே...? படிச்சவங்க மட்டுமே கமெண்ட் போடும் இந்த தினமலர் பதிவில் பெரும்பான்மையோர்... இவர் இந்த சாதி, இந்த இனம்...னு குறிப்பிட்டு பாகுபாடு பார்க்கிறாங்க... அப்ப இவங்க என்னத்ததான் படிச்சாங்க..? ஜாதியையா..? இனத்தையா..? மதத்தையா..? “சாதிகள் இல்லையடி பாப்பா”ன்னு பாடிய பாரதி மட்டும்... இந்த பதிவுல வந்த கமெண்ட் பார்த்தா... நொந்து நூடுல்ஸ் ஆகி... தானே தூக்குபோட்டு செத்துருவாய்யா...? இந்த நாடும்... நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்... இந்த லட்சணத்துல... இந்தியா எங்க வளர்றது.. வல்லரசு ஆகுறது..

 • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

  தற்போது பீகார் கவர்னராக உள்ள ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்திருப்பதாக பிஜேபி அறிவித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது . ஏற்கனவே அப்துல் கலாம் அவர்களை இந்திய நாட்டின் ஜனாதிபதியாய் அழகு பார்த்தது பிஜேபி வாஜ்பாய் அரசு தான். பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மை ஹிந்து ஜனாதிபதியாக ஆக முடியாது. அப்படி இருந்தும் பிஜேபி மதவாத கட்சி. பிஜேபி கட்சியில் அனைத்து மதத்தவர் இருந்தாலும் அது மதவாத கட்சி மற்றும் வகுப்பு வாத கட்சி ஆனால் முஸ்லிம் லீக் ,மனித நேய மக்கள் கட்சி ,கிருஸ்துவ ஜனநாயக முன்னணி ஆகிய ஒரே ஒரு மதத்தினர் மட்டும் உள்ள கட்சிகள் மத சார்பற்ற கட்சிகள். என்ன கொடுமை சரவணன் ?. தமிழக RK நகர் இடை தேர்தலில் பிஜேபி சார்பில் இசை அமைப்பாளர் கங்கை அமரன் நிறுத்தப்பட்டார் .அவர் அரசியலுக்கு புதியவர் .அவர் மீது ஊழல் ,லஞ்ச லாவண்யங்கள் ,மோசடிப்புகார்கள் எதுவும் கிடையாது .அப்படியிருந்தும் கூட விடுதலை சிறுத்தை திருமாவளவன் தமிழக டிவி விவாதத்தின் போது இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்களை நான் தலித் /தாழ்த்தப்பட்டவர் என பார்க்க மாட்டேன் .எப்போது கங்கை அமரன் பிஜேபி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாரோ , அதன் பின்பு அவரை நான் தலித்தாக பார்க்க மாட்டேன்.அவரை பிஜேபிக்காரராக தான் பார்ப்பேன் என்றார்.இதன் விளக்கம் பிஜேபியில் சேரும் தலித்துக்கள் சாதியில் இருந்து விலக்கம் செய்யப்பட்டவர்களாக ஆம் சாதியில் இருந்து விலக்கம் செய்யப்பட்டவர்களாக கருதப்படுவார்கள் என்பது தான். காரணம் பிஜேபி மதவாத கட்சியாம்.இதே திருமாவளவன் பிஜேபியுடன் இருக்கும் ராம்விலாஸ் பாஸ்வான் ,மற்றும் பிஜேபி ஆதரவுடன் ஆட்சி நடத்திய பகுஜன் கட்சி தலைவர் மாயாவதி மற்றும் வாஜ்பாய் அமைச்சரவையில் பதவி வகித்த ஆண்டிபட்டி ராசா 2G புகழ் ராசா ,ஆகியோரை பிஜேபியுடன் கூட்டு வைத்ததற்காக ,அவர்களை தலித் இல்லை என்று சொல்ல தயாரா ? சொல்ல மாட்டார்.அது போல ஜனாதிபதி வேட்பாளரையும் சாதியில் இருந்து விலக்கம் செய்வாரா ? இல்லையா ? இன்றய தமிழக டிவி விவாதங்களில் நிச்சயம் பார்க்கலாம் .ஜாதிய அரசியலை வைத்து வியாபாரம் செய்பவர்களை மக்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும் .தலித் சமூக மக்களை ஹிந்து மதத்திற்கு எதிராக திருப்பி விடும் வேலையை தான் திருமாவளவன் கன கட்சிதமாக செய்து வருகிறார் .,ஹிந்து மதம் தான் ஜாதிகளின் பிறப்பிடம் என பிறழ் முரணாக கருத்துக்கள் சொல்லுவார்கள் இந்த மாதிரியான தலித் தலைவர்கள் . ஆனால் உண்மை என்ன ? ஜாதி வேறுபாடுகளுக்கு ஹிந்து மதம் காரணம் அல்ல. ஹிந்து மனு தர்மம் எங்களை சமமாக நடத்தவில்லை என்று கூறி ,ஹிந்து தெய்வங்களை பழித்து, இந்த ஹிந்து தலித்துக்கள் கிருஸ்துவ மதம் மாறுகிறார்கள் .ஆனால் அங்கும் ஜாதி பிரச்சனை தான் . தலித் கிருஸ்துவர்கள் ,கிருஸ்துவ நாடார்களுடன் /கிருஸ்துவ வன்னியர்களுடன் திருமண சம்பந்தம் வைக்க முடியாது - இதற்கும் ஹிந்து மனு நீதி தான் காரணமா ?.தலித் கிருஸ்துவர்கள் கிருஸ்துவ திருச்சபைகளில் தங்களுக்குரிய பிரதிநிதித்துவம் கேட்டு வீதிகளில் போராடும் போராட்டங்களை நாங்கள் அறிவோம் .அவ்வளவு ஏன் திருச்சி மேலபுதூர் கிருஸ்துவ கல்லறையில் தீண்டாமை தடுப்பு சுவர் - ஆம் தலித் கிருஸ்துவர்களுக்காக - வாழும் போது தான் இந்த அவலம் என்றால் கிறிஸ்துவுக்குள் மரித்தாலும் விடாத ஜாதி வெறி. ..அது மட்டும் அல்ல இம்மானுவேல் சர்ச் -தலித் கிருஸ்துவர்களுக்காக மட்டும் அந்த சர்ச்சுகளில் ஹிந்துக்களின் கருப்பசாமி பாடல்கள் மெட்டுக்களில் (அங்கே இடி முழங்குதே -) கர்த்தர் பாடல்கள் ஒலிக்கின்றன இதற்கும் ஹிந்து மனு சாஸ்திரங்கள் காரணமன்று. .தலித் மக்களின் மனதில் ஹிந்து மத துவேசத்தை மட்டும் விதைத்து அதை அறுவடை செய்ய தான் திருமாவளவனுக்கு தெரியும் .இது இந்தியாவின் சாபக்கேடுகளில் ஓன்று .இதனை தயவு செய்து அந்த சமூகம் உணர வேண்டும் .செங்கல்பட்டு அருகே உள்ள தச்சூரில் 20 ஆண்டுகாலமாக கத்தோலிக்க சர்ச் மூடப்பட்டு கிடக்கிறது . வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் இருக்கிறது , தலித் கிருஸ்துவர்கள் சர்ச்சுக்குள்ளே வரக் கூடாது என்று வன்னியர், ரெட்டியார் கிருஸ்துவர்கள் எதிர்கிறார்கள். இந்த பிரச்சினையில் முன்னின்று போராடிய தலித் கிருஸ்துவ இளைஞர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.தனிக் கல்லறை வழக்கம் கிருஸ்துவர்களிடமும் இருக்கிறது ..கிராமங்களில் தலித் கிருஸ்துவர்கள் சேரிக்குள்தான் வாழ வேண்டும் , சாதி இந்து கிருஸ்துவர்களோடு ஊர்த்தெருவில் குடியிருக்க முடியாது. இதையெல்லாம் மறைத்து தான் திருமாவளவன் ஹிந்து துவேசகருத்துக்களை பரப்புகிறார் .பிஜேபியை நிந்திக்கிறார் ஆதலால் ஜாதியை வைத்து பிழைப்பு நடத்தும் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் வெட்கப்படும் அளவுக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து , பிஜேபியின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் .ஆதரிக்க வேண்டும் .

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  கோயிந்தா கோயிந்தா கோவிந்தா

 • Boopathi Pattan Muthuraja - chennai,இந்தியா

  ஜனாதிபதி தேர்தலில் முத்தரையருக்கு (கோலி) வாய்ப்பளித்த BJP. முத்தரையர் இனத்தின் வட இந்திய பிரிவான கோலி இனத்தை சேர்ந்த மேதகு பீகார் மாநில ஆளுநர் திரு ராம்நாத் கோவிந்த் அவர்கள் BJP சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முத்தரையர் எழுச்சிச் சங்கம் சார்பில் தயாரிக்கப்பட்ட 2016ஆம் ஆண்டு மாத காலண்டரில் திரு ராம்நாத் கோவிந்த் அவர்கள் பற்றி குறிப்பிட்டப்பட்டுள்ளது. மேதகு பீகார் மாநில ஆளுநர் திரு ராம்நாத் கோவிந்த் அவர்கள் 1945- ஆம் வருடம் அக்டோபர் 1-ஆம் தேதி உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் அருகிலுள்ள பாரா உங்கி கிராமத்தில் பிறந்தார். இவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார். இவர் அகில் பாரதிய கோலி சமாஜின் தலைவராக இருந்த போது முத்தரையர் சங்கம் 23-05-1992 ஆம் ஆண்டு தஞ்சையில் நடத்திய பேரணியிலும், 23-05-1993 ஆம் ஆண்டு சென்னையில் நடத்திய பேரணியிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 1994 முதல் 2006 வரை ராஜ்ய சபை உறுப்பினராக (MP) இருந்துள்ளார். 8-8-2015 அன்று பீகார் மாநில ஆளுநராக பதவியேற்றுள்ளார்.

 • balakrishnan - Mangaf,குவைத்

  பிஜேபி நல்ல ஆளை தேர்வு செய்துள்ளது .

 • PandiKala -

  காங்கிரஸ் தலித் வேட்பாளரை நிறுத்தினால் அது இயற்கை.அதுவே பா ஜ க செய்தால் செயற்கை .இது தான் வெறுப்பு அரசியல் என்பது.

 • Sundararaman Iyer - Bangalore,இந்தியா

  I think Justice Karnan is a better choice He fits the bill as a Lawyer and as a Dalit. And he is from South. At least he can now come out of his hiding....................

 • Gnanam - Nagercoil,இந்தியா

  ராஜ்யசபா உறுப்பினர், வழக்கறிஞர், கவர்னர், வயதுமுதிர்ந்தவர் அனுபவசாலி - எல்லா தகுதிகளும் பொருந்தும். நல்ல தேர்வு. மோடி, அமித்ஷா, பா ஜ க அனைவருக்கும் பாராட்டுக்கள்.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  இவராச்சும் டெல்லி ராஷ்ட்ரபதி பவன்ல தேசிய கொடியை இறக்கிட்டு காவி கொடியை ஏத்துனா நம்ம இம்சை அரசி சந்தோசப்படுவாங்க. செய்வாரா பார்ப்போம்.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  பி ஜெ பி எதை செய்தாலும், அதில் ஒரு குற்றம், வெறுப்பு என்று காண்பிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் மக்களுக்கு இதுவும் போதாது.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னர் தான் எழுதினேன் UP காரர் என்பதால், மாயாவதி ஆதரிக்க கூடும் என்று....இப்போ BREAKING NEWS ல அது தான் ஓடுகிறது... ஆக, மாயாவதி 3000 கோடி...என்று முந்தாநேத்து செய்தி... இன்று UP தலித் வேட்பாளர்.. மாயாவதி ஆதரவு... கூட்டி கழிச்சு பார்த்தால், பாஜகவின் பிளாக் மெயில் பாலிடிக்ஸ் க்கு ஆஸ்கர் அவார்ட் கூட தரலாம்...

 • R.SANKARA RAMAN - chennai,இந்தியா

  அந்தோ பாவம் தளபதி எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களையும் கூப்பிட்டு ஏதோ தாங்கள் தான் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்போம் என்று சினிமா காண்பித்தார். இப்போ என்ன செய்விங்க? இப்போ என்ன செய்விங்க?

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  எனக்கு தெரிந்து பாஜகவிற்காக அதிகம் உழைத்த தமிழகத்தை சேர்ந்த " மைத்ரேயன் " அவர்களை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து இருந்திருக்கலாம்...

 • abdul rajak - trichy,இந்தியா

  காங்கிரஸ் யிலும் தலித் வேட்பாளர்கள் உள்ளனர் . எனவே பிஜேபி ராஜ தந்திரம் என்பது இல்லை .அதை அவர்களும் யோசித்து இருப்பார்கள் . இவர் காங்கிரஸ் மற்றும் பிஜேபி இணைந்து எடுத்த முடிவா இருக்கும் . வல்லவன் இருந்தால் அவனை விட வல்லவன் பூமியில் இருக்க தான் செய்வான் . சூழ்ச்சி செய்தால் சூளிச்சியை முறியடிக்க வேறு சூழ்ச்சி செய்வார்கள் . எனவே இவர் தேர்வு என்பது ஒரு மனதாக இருக்கும் என நினைக்கிறேன் .

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  2007 க்கு பிறகு தென் மாநிலங்களுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. 2012 ல் பிரதீபா பாட்டீல் ஒய்வு பெற்ற பிறகு இப்பதவி தென் மாநிலங்களை சேர்ந்த ஒருவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம் ஏமாந்தோம். 2017 லாவது தென் மாநிலங்களை சேர்ந்த ஒருவருக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். வழக்கம் போல ஏமாந்தோம். 2019 லும் எதிர்பார்ப்போம், ஏமாறுவோம்.

 • Mara Maravan - ஜெக்கம்மாபேட்டை,இந்தியா

  ப்ராஹ்மன், சூத்திரன், தலித் என எந்த சினிமா காட்டினாலும் இரண்டு வருடம் கழித்து பாஜக வுக்கு உண்டு ஆப்பு. இவர் என்ன மாட்டுக்கறி தின்னாதவரா? சான்று வாங்கினார்களா?. எப்படியாவது எதிர் அணி உருவாகாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த ஜிமிக்கி வேலை. எதிரணியில் உள்ளவர்களை ஒன்று சேர விடாமல் கலைக்க பிரிக்க பார்க்கும் மாய மோடி மஸ்தான் வித்தை. எதிரணியில் கூட ஒரு தலித் மகாநாயகர் விரைவில் அறிவிக்கப்படுவார். அப்போ என்ன செய்வீங்க அப்போ என்ன செய்வீங்க.

 • grg - chennai,இந்தியா

  If Modi s a person from the downtrodden - then it is for votes if he s a forward e person - then he ignores the interests of dalits

 • krishna - cbe,இந்தியா

  அருமையான தேர்வு.

 • krishna - cbe,இந்தியா

  அருமையான thervu.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  அப்படினா, இனி எந்த உயர்ந்த பதவிக்கும் வடஇந்தியாவில் உள்ள அந்த 10 % மக்களில் இருந்தும், தமிழகத்தில் உள்ள, அந்த 1 % மக்களில் இருந்தும் வரவே முடியாதா?... பாஜகவே இப்படி காலை வாரினால் என்ன அர்த்தம்?...

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  மோகன் பகவத்தை தெனாவெட்டாக நிறுத்தலாம் என்று கணக்கு போட்டுக்கொண்டிருந்த பாஜக என்னும் புலி பம்முவதை பார்த்தா சிப்பு சிப்பா வருகிறது... இதுவே காங் இன் முதல் வெற்றி என்றாலும், ஜெகஜீவராமின் மகள் மீராகுமார் தான் சிறந்த தேர்வாக இருக்க கூடும்.. பாஜக அறிவித்த வேட்பாளர் , UP காரர் என்பதால், மாயாவதி , அகிலேஷ் ஓட்டுக்கள் கிடைக்கும் என்பது பாஜகவின் கணக்கு... ஆனால் பீகாரை சேர்ந்த மீராகுமாரை அறிவித்தால், நிதிஷ், மற்றும் ராம்விலாஸ் பசவான் ஓட்டுக்கள் மீராகுமாருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது... காங் தலித் வேட்பாளரை அறிவித்தால், அது மனசார காங் செய்யும் செயல்...ஆனால் பாஜக இப்போது அறிவித்திருப்பது பெரும்பாண்மை இல்லாத காரணத்தால் வெளிப்பட்ட இயலாமை ... [ பாஜகவுக்கு வேண்டிய பல கட்சிகள், பாஜகவுக்கு செக் வைக்க மறைமுகமாக பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க தயாராக இருந்ததால் தான் பாஜகவின் இந்த சூழ்நிலைக்கேற்ற முடிவு... இது செயற்கையான, பாஜகவுக்கு அன்னியோன்யம் இல்லாத , கையாலாகாத முடிவு ]

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ஜாதியை ஒழிக்க எந்த அரசுமே இனி முன் வராதா ? அணைத்து ஜாதிகளையும் ஒழிக்க வேண்டும் , பொருளாதார அடிப்படையில் மக்களை பிரித்து அணைத்து ஏழைகளையும் முன்னேற செய்ய வேண்டும் , எல்லாம் வல்ல இறைவன் தான் அதட்கு வழி காட்ட வேண்டும்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  பாஜக எதிர்த்து வேட்பாளரை நிறுத்த முடியாத அளவிட்கு அணைத்து கட்சிகளுக்கும் செக் வைத்து விட்டது

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  ரோஷக்கார பாஜக, கடைசியில் தனது இயலாமையின் வக்கிரத்தில், வீழ்ந்துவிட்டது... இதுவே பெரும்பாண்மை இருந்திருந்தால், மோகன் பகவத்தை தெனாவெட்டாக நிறுத்தியிருக்கும்... ஆனால் அய்யஹோ, இன்று நாங்களும் தலித் வேட்பாளரை தான் நிறுத்தியுள்ளோம், எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று இன்று எதிர்கட்சிகளிடம் யாசகம் கேட்கும் அளவுக்கு இயலாமையால் தள்ளப்பட்டுள்ளது... என்றாலும் தலித் முத்திரை என்பதனை விட, பாஜக வேட்பாளர் என்ற நிலையில் இவரை எதிர்க்கட்சிகள் ஆதரிக்க கூடாது.. ஆக, எதிர்கட்சிகளால், காந்தியின் பேரனை இப்போது நிறுத்து இயலாது... ஆகையால், முன்னாள் சபாநாயகர் " மீரா குமாரை " தைரியமாக வேட்பாளராக எதிர் கட்சிகள் நிறுத்தவேண்டும்..தலித் ஐகான் ஜெகஜீவன் ராம் இன் மகள் மீராகுமார் தான் உண்மையான தலித் ஐகான் ஆக இருக்க கூடும்.. இவர் தான் முதல் பெண் சபாநாயகர் கூட, ...இவரை முதல் பெண் தலித் ஜனாதிபதியாக்கினால், பாஜகவின் சூழ்ச்சியை தவிடு பொடியாக்கலாம்... பாஜக வில் , RSS பின்னணி இல்லாதவர்களால் கோலோச்ச முடியாது என்பது வரலாறு...ஆக, பாஜகவை பணியவைக்க, மீராகுமார் விரைவில் பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறேன்...

 • srini - chennai,இந்தியா

  வேட்பாளர் தேர்வுக்கு முன் பாஜக குடியரசு தலைவராக ஒரு தலித் சமூகத்தை சேர்ந்தவரை நிறுத்துமா? இப்போது பாஜக அரசியல் செய்கிறது, தந்திரம் அப்போ என்ன தான் இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்?

 • geetha - mysore,இந்தியா

  பிரதிபா பாட்டிலுக்கு இவர் எவ்வோளவோ மேல்....படித்தவர், முன்னாள் எம் பி, வக்கீல் ...

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  குடியரசுத் தலைவர் வேட்பாளர் தலித் சமூகத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும் என்று அண்ணன் திருமா சொல்லி இருந்தார்...திருமாவின் வற்புறுத்தல், மற்றும் அவரின் செல்வாக்கை கண்டு பயந்து மோடி தலித் சமூகத்தை சார்ந்த ஒருவரை குடியரசு தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்துள்ளார்....அண்ணன் செல்வாக்கு டில்லி வரை பேசுது....

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  தலித் போர்வையில் உயர்சாதி பிஜேபி கூட்டம் பதுங்குது . வெற்றிபெற்றால் பாயும் . சட்டம் சீரழியும் . மாட்டுக்கறி ,ஆட்டுக்கறி , கோழிக்கறி எல்லாம் தீட்டாக அறிவிக்கப்படும் , சம்ஸ்கிருதம் தேசிய மொழியாகும் , ராமர் தேசிய கடவுளாவார் , தேசம் ஒரு தலித் உதவியால் உய்ர்சாதிக்கு உடமையாகும் . ஜாதி பார்க்காமல் தலித் போர்வைக்குள் மறையும் மதவாதிகள் விரட்டப்பட்ட ,ராம்நாத் கோவிந் வீழ்த்தப்படவேண்டும் . தேசம் முக்கியம் . அதன் அமைதி மிக முக்கியம் . வீழ்ந்த தேசம் ,கலவர பூமியாகிப்போன இந்தியா அமைதி பூங்காவாக மீண்டும் மலரவேண்டும் . இயந்திரம் வாக்களிக்காமல் மக்கள் வாக்களிக்கும் நபர் MLA , MP களாக வரவேண்டும் .

 • Balaji - Khaithan,குவைத்

  இந்த தேர்தல் முடிந்த பிறகு பல அதிரடி நடவடிக்கைகள் இருக்கும் என்று தோன்றுகிறது............ கட்சி சார்பில்லாத ஒரு நபரை தேர்ந்தெடுத்திருக்கலாம் பாஜக............

 • ganesha - tamilnadu,இந்தியா

  ஓடி வாங்க மாப்பூ........... வாங்க ஆப்பூ............. வழக்கம் போல நீங்க பிஜேபியை மோடியே இருக்கும் திட்டி எழுதுங்க. உங்க கிறுக்கு கருத்துக்களை கேட்காமல் இருக்க முடியவில்லை. சீக்கிரம் வாங்க மப்பூ

 • Thamarai Moorthy.C.V. - Pattukkottai,இந்தியா

  குட்டையை குழப்ப சு. சு. வை நியமித்து இருக்கலாம்,

 • Stephen Jawahar - Trivandrum,இந்தியா

  வாழ்த்துக்கள் ஆபீசர்....

 • ganesha - tamilnadu,இந்தியா

  வாங்க மாப்பு, வாங்க பாஸூ........... வெளுத்து வாங்குங்க.

 • Raman - kottambatti,இந்தியா

  ரப்பர் ஸ்டாம்ப் என்பதால் யாரை வேணா போடுறீங்களே.. அடுத்த தெரிதலில் பிரதமர் ஒரு தலித்தை போடுவீர்களா? காசு வரும் பதவின்னா உங்களுக்கு உப்புக்கு சப்பாணி பதவி, தலித்துக்கா ? என்னடா உங்க நியாயம் ?

 • Hm Join - Chennai,இந்தியா

  ஜனாதிபதி தேர்வு முடிந்தபின் தமிழக சட்டசபை கலைக்கப்படும்...

 • methavi - Kosu pattu,இந்தியா

  பாரதிய ஜனதாவின் ராஜதந்திரம். எதார்த்த அரசியல் என்ற ஒன்றை நாம் எப்பொழுதும் பார்க்கமுடியாது போல.

 • Suman - Mayiladuthurai ,இந்தியா

  மோடி அரசின் சிறப்பான தேர்வு...நுட்பமா ஏதாவது போராடாம எல்லோரும் பாராட்டுங்கள் வாழ்த்துக்கள் நன்றி

 • Prem Kumar - Bangalore,இந்தியா

  எவரும்-எதிர்க்கட்சிகள் தலைவர்கள் உள்பட அனைவரும் எதிர்பார்க்காத திரு ராம்நாத் கோவிந்த் அவர்களை குடியரசு தலைவர் வேட்பாளராக ஆளும் கட்சி அறிவித்துள்ளது. சட்டம் படித்த வயது அதிகமில்லாத, ஆனால் அரசியல் அநுபவமிக்க ஒரு தலித்தலைவரான இவரது தேர்வை பற்றி யாருக்கும் வேறுபட்ட கருத்து இருக்க வாய்ப்பில்லை. இரண்டாண்டு காலமாக ஆளுநராக இருந்த அனுபவமும் அவருக்கு ஒரு கூடுதல் சேர்ப்பு. ஆக, எதிர்கட்சிகளை ஒன்றாக வளைத்துப்போடும் வகையில் இவரை அறிவித்ததன் மூலம் அமித் ஷா-மோடியின் அரசியல் சாதுரியம் மீண்டும் தெரிகிறது

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  காங்கிரஸ் பிரதீபா பாடீல் போன்று எதாவது ஒரு சப்பையை தேர்தெடுக்கும்.

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  வேட்பாளர் அப்படின்னா கேண்டிடேட் ஆ? எலெக்சன் வைப்பாங்களா? எத்தனை நாள் லீவ் கொடுப்பாங்க?

 • PRAVEEN - Bangalore,இந்தியா

  எத்தனை ஜனாதிபதிகள் வந்தாலும் நம்ம DR APJ போல் யாருக்கும் தகுதி இல்லை

 • PandiKala -

  பா ஜ க வின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் எதிர்கட்சிகளை சிக்கலில் மாட்டி விடவேண்டும் என்ற எண்ணமும் பா ஜ க வின் எதிர்கால அரசியலும் அதிகம் உள்ளது.

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  டாக்டர் அப்துல் கலாமை வைத்து வாஜ்பாய் சிக்ஸர் அடித்தது போல் ராம்நாத் கோவிந்தை வைத்து மோடி சிக்ஸர் அடிக்க முயலுகிறார்.....காங்கிரஸ் மறுத்தால் ஒரு தலித் ஜனாதிபதி ஆவதை தடுக்கிறார்கள் என்று இவர்களே கிளப்பி விடுவார்கள்.

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  நாட்டிற்கு இரண்டாவது தலித் ஜனாதிபதி? வரவேற்போம் கீழ் ஜாதி மேல்ஜாதி என்று இனியும் அரசியல் பேசாமல், உழைப்பால் அனைவரும் உயரலாம். என்பதை புரிந்து கொள்வோம்.

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  என்னென்னமோ நினைச்சோம் என்னமோ நடந்திருச்சு. நாட்டுக்கு நல்லது செஞ்சால் நல்லது வெற்றி பெற வாழ்த்துக்கள். எதிர்கட்சிக்காரங்களையும் கேட்டு செய்யுங்கப்பா அப்புறம் தேர்தல்னு வந்துட்ட கஷ்டம், யோகம் யாருக்குவேனா எப்பவேணும்னா வரும்பா

 • Siva - Chennai,இந்தியா

  யாராவது ஒருவரை நிறுத்துவார்கள், பார்பனீயம், ஹிந்துத்வானு சண்டை போடலாம்னு பார்த்தால், இப்படி ஆயிருச்சே, இப்ப எப்படி அரசியல் செய்வது, எப்படி கட்சி நடத்துவது என்று யோசிக்கும் போராளீகளே, உங்கள் பருப்பு இனி வேகாது.

 • tamilselvan - chennai,இந்தியா

  பா.ஜ பதவியில் இருக்காரு பதவி கொடுக்கிறார்கள் பதவி இல்லாத்தவர்கள் பதவி தரமாட்டார்க்கள்

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Inthiyaa paavam.....

 • Siva - Chennai,இந்தியா

  இவர் சரியான தேர்வு இல்லை அப்படினு, பத்தே நிமிஷத்துல பதிவு போடறாங்க நெறய பேர். இவங்க அவரை பற்றி கேள்விப்படலயாம், அதனால. நானும் கேள்வி பட்டதில்லை, ஒத்துக்கறேன். ஆனால் இணையத்தில அவர் பற்றி படிச்சதுல அவர் மோசம் இல்லைனு சொல்லலாம். சட்டம் படிச்சவர், IIM நிர்வாக குழுவில் இருந்துள்ளார், ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தவர், பல பாராளுமன்ற குழுவில் இருந்துள்ளார், ஐநா மன்றத்தில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டுள்ளனர், பட்டியல் இன மக்களுக்காக தொண்டாற்றியுள்ளார், வேறு என்ன வேண்டும்?

 • kum - paris,பிரான்ஸ்

  யார் இவரு ? இவர் இதுவரைக்கும் என்ன நாட்டுக்காக செய்திருக்கிறார் என்பதை தெரிவிக்கவில்லையே .

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  ஒரு தலித்தை தேர்ந்து எடுத்தால் அவர் ஜாதிக்காக தான் தேர்ந்து எடுக்கப்பட்டார் என்று பிஜேபி ஆதரவாளர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர் . மற்ற ஜாதியில் இருந்து வந்தால் தகுதியில் வந்தார் என்பதும் இவர் வந்தால் ஜாதியினால் தான் தேர்ந்து எடுக்கப்பட்டார் என்ற ஜாதிய சிந்தனை தெளிவாக தெரிகிறது . ஒரு இந்தியனை தான் தேர்ந்து எடுத்தார்கள் என்று அமைதியாக போக வேண்டியது தானே ? ஒரு ஜாதியில் பிறந்தது குற்றமா ? இது போல சிந்தனை உள்ள வரை இட ஒதுக்கீடு தொடரும் .

 • kmish - trichy,இந்தியா

  தலித்து என்கிற போர்வையில் பா.ஜ.க நடத்தும் அரசியல் பகடை காய்

 • ganapati sb - coimbatore,இந்தியா

  பெயரிலேயே ராமரையும் கோவிந்தனையும் கொண்டுள்ள இவர் அடுத்த ஜனாதிபதி ஆவது உறுதி ஆகிவிட்டது. திருமா போன்றவர்கள் இனி தேவையில்லாமல் பாஜகவை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ராம்விலாஸ் பஸ்வான் உதித்ராஜ் கிருஷ்ணசாமி போல பாஜகவோடு இணைந்து செயல்படவேண்டும் . அத்வானிஜி இனி வாஜ்பாய் கருணாநிதி மன்மோகன் பிரணாப் போன்ற ஒத்த வயதுடையவர்கள் போல பூரண ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். ஆனாலும் பாஜக இன்னும் ஓரளவு துடிப்பாக செயல்படும் அத்வானியை அதிபராக்கி ராம்நாத்தை துணை அதிபர் ஆக்கி இருக்கலாம். காலம் இன்னமும் கடக்கவில்லை வேட்பு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் உள்ளது.

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  நல்ல தேர்வு..குறை சொல்ல முடியாத தேர்வு..பாஜக வுக்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்த உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்....தலித் பிரிவு... .படித்தவர்... எல்லா வகையிலும் சரியான தேர்வு..

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  நான் சொல்லல.... ஏதாவது வெத்துவேட்டாத்தான் இருக்கும்னு...??? காங்கிரஸ் பிரதிபாவை அறிவிச்சப்போ தேடுனமாதிரி... இந்த ரப்பார் ஸ்டாம்ப் எங்கே செஞ்சாங்கன்னு இப்போ தேடுவோம்... எப்பிடியும் போலி தேசபக்தர்கள் இவருக்குன்னு ஒரு ரெகார்ட் லிஸ்ட் எடுத்துக்கிட்டு வருவாய்ங்க... பார்ப்போம்.... நமக்கு வாய்க்கறதெல்லாம்..........என்னமோ போ...

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  ஒரு தலித் ஆதரிக்காமல் எதிர்க்கும் கட்சிகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்,

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  நல்ல தேர்வு.

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  valthukal

 • vasanthan - Moscow,ரஷ்யா

  காங்கிரஸ், திருடர் முன்னேற கழகம், உண்டியல் கட்சி, குருமா கட்சி, டம்ளர் கட்சி எல்லா கட்சியும் தலித் அரசியல் பண்ணமுடியாமல் கிறுகிறுத்து போக போகிறது...

 • kannan - riyadh ,சவுதி அரேபியா

  மிக மோசமா தேர்வு .இருந்தாலும் இந்திய நாட்டின் முதல் குடிமகன் என்பதால் என்னுடைய வாழ்த்துக்கள்

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  கான்கிராஸ் என்ன செய்யப்போகிறது என்று பார்க்கலாம். இதுவும் அரசியல் நெருக்கடிதான் கான்கிராஸிற்கு.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  தலித்துக்கள் எப்போதுமே இளிச்சவாயர்கள் அதிகாரமில்லாத வெட்டிப்பதவிகளுக்கு அவர்களைப் போட்டு பொம்மை போல அலங்காரமாக வைத்திருப்பர், இது மத்தியிலும் மாநிலங்களிலும் வழக்கமான நடைமுறை. அவர்கள் யூஸ் ஆண்டு துரோ வாக்கு வங்கியே (பணம் வாங்கி மாட்டிக்கொண்ட பங்காரு லக்ஷ்மண் பிற்பட்டவராக இருந்திருந்தால் தப்பித்திருப்பார்) ஆனால் மாநில உள்துறை நிதி பொதுப்பணித்துறை ஆகியவற்றை எப்போதும் கொடுக்க மாட்டார்கள் அப்படியே கொடுத்தாலும் ஆந்திரா காங்கிரஸ் முதல்வர் அஞ்சைய்யா போல அவமானப்படுத்தி ஓடவைப்பர் இதில் நமது திராவிடக் கட்சியினர் இன்னும் உறுதியாக இருப்பர் பிற்பட்ட சமுதாய சாதாரண எம் எல் ஏகூட ஹரிஜன மந்திரியை மதிப்பதில்லை முற்பட்டவர்களும் ஹரிஜனங்களும் தமிழ்நாட்டில் பிறப்பது முன்ஜென்ம பாவம் நாடு முழுவதும் இதே நிலைமை வரும் காலம் வெகுதூரத்திலில்லை

 • Siva - Chennai,இந்தியா

  பாஜக வேட்பாளருக்கு ஆதரவு என்று முலாயம் கட்சி அறிவித்துவிட்டது. பட்டியல் இன வேட்பாளரை அறிவித்துள்ளதால், இவரை எதிர்த்து மாயாவாதியும் வாக்களிக்க வாய்ப்பு குறைவு, அநேகமாக இவரை ஆதரிப்பதை தவிர்த்து காங் கட்சிக்கு வேறு வழி இல்லை என்றே தோன்றுகிறது.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஏன், சாமியாரு இல்ல மடாதிபதி யாரும் சிக்கலயா.....? மொத்தத்துல......... ஹம்ம்ம்ம்ம்..... வேணாம்....

 • kmish - trichy,இந்தியா

  மோசமான தேர்வு

 • karthikeyan -

  எல்லாத்துக்கும் தேவையா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement