Advertisement

இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத்

பாட்னா : தாஜ்மகாலுக்கும் இந்திய கலாச்சாரத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் தர்பங்காவில் நடைபெற்ற பா.ஜ., சாதனை விளக்க கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், உலக அதிசயங்கள் பட்டியலில் 7-வது இடத்திற்குள் உள்ள தாஜ்மஹால், இந்தியாவின் அடையாளமா? வெளிநாட்டுப் பயணத்தின் போது இந்தியாவின் முந்தைய பிரதமர்கள், ஜனாதிபதிகள் தாஜ்மஹால், அல்லது மினார் கலை பொருட்களை வெளிநாட்டு தலைவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி வந்துள்ளனர்.
ஆனால் இவற்றுக்கும் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்கும் தொடர்பில்லை. ஆனால் தற்போது பிரதமர் மோடி, வெளிநாட்டு தலைவர்களுக்கு கீதை மற்றும் ராமாயணம் ஆகிய புத்தகங்களை பரிசாக வழங்கி வருகிறார். இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (137)

 • Mara Maravan - ஜெக்கம்மாபேட்டை,இந்தியா

  வன்மம் அதிகரித்து விட்டது. அழிவில் தான் முடியும். துவேஷத்தை விட்டு வெளியே வாருங்கள். சகோதரம் போற்றுங்கள்.

 • Gnanam - Nagercoil,இந்தியா

  தாஜ்மஹாலைவிடவும் சிறந்த கட்டுமான திறன் கொண்ட பழங்கால கற்கோயில்கள் தமிழ்நாட்டில் ஏராளம் உள்ளன. இவைகளை இந்தியநாட்டு சின்னங்களாக வெளியுலகிற்கு கொண்டுவந்தால் உலகமக்கள் இந்திய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பற்றி அறிய வாய்ப்பு கிடைக்கும்.

 • Hari Sankar Sharma - Chennai,இந்தியா

  நியாயம் தானே நியாயத்தை திறந்து பேச அரசியல் தலைவர்கள் முன்வருவது ஒரு நல்ல எதிர்காலத்திற்கு ஒரு அடையாளம்.

 • Ajmal Khan - Dammam,சவுதி அரேபியா

  Start music ... 1.Ramar... 2. Beef...3. Tajmahal..... 4. ????. Mr.Yogi, What about RedFort?.

 • Akbar Muhthar - Madurai,இந்தியா

  யோகி ஆதரவு மக்கள் பலர் உண்ணும் கோதுமை இந்தியக் கலாச்சாரத்தில் இல்லை

 • Akbar Muhthar - Madurai,இந்தியா

  யோகி ஆதரவு மக்கள் பலர் குடிக்கும் காப்பி இந்தியக் கலாச்சாரத்தில் இல்லை

 • Akbar Muhthar - Madurai,இந்தியா

  இந்தியக் கலாச்சாரத்தில் மொட்டையடித்த காவி அணிந்த யாரும் நாட்டை ஆண்டது இல்லை

 • Bharatha Nesan - Chennai,இந்தியா

  தாஜ்மஹால் அடிமைகளால் பாவத்தால் கட்டப்பட்டது, தாஜ்மஹால் கட்டப்பட்டது ஒரு புராதன சிவன் கோவிலின் மேல் என்பதை முஸ்லிம் கொடுங்கோலர்கள் பூசிமறைத்து விட்டனர், அதனால் தான் இன்றுவரை தாஜ்மஹாலின் அடித்தளம் “பிரவேசதடை பிரதேசமாக” உள்ளது. தற்போதைய மதசார்பற்ற அரசும் இதனை கண்டுகொண்டதாக தெரியவில்லை.

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  காந்தியின் முட்டாள்தனத்தால் உருவான ஒரு ஸ்டெபினீ கூட்டம் நேரு பரம்பரை. காமராஜரின் முட்டாள்தனத்தால் உருவான கூட்டம் இந்திரா பரம்பரை. நேரு/ இந்திரா பரம்பரை கூட்டம் இந்த நாட்டை சூறையாடி தின்று விட்டு, நாட்டின் பீடைகளான கழகங்கள், மாயாவதி, தேவேகௌடா, கருணாகரன், அரவிந்த் வால், லல்லு, சீமான், யாதவ், அப்துல்லாக்கள், மற்றும் பல letter pad கட்சிகளுக்கு விளையாட்டு மைதானமாய் விட்டுச் சென்று விட்டது. குடித்து கும்மாளம் போட்ட நேரு பரம்பரையின் எச்சங்களை நாம் ஏன் நினைவு கொள்ள வேண்டும்? மகாத்மா காந்தியின் பெயரைத் தவிர, வேறு எந்த காந்தியின் பெயரும் நம் நாட்டின் மூலையில் இருக்கக் கூடாது.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  உண்மை தமிழக கோயில்களில் உள்ள ஆயிரம் கால் மண்டபங்களுக்கு கூட ஈடாகாது அந்நிய நாட்டு ஆக்கிரமிப்பாளர்கள் கட்டிய தாஜ்மஹால் பிரதமர் இதை அறிந்தே அயல்நாட்டு விருந்தினர்களை ஜப்பான் பிரதமரை காசி விஸ்வநாதர் கோயிலும் ஆஸ்திரேலிய பிரதமரை தில்லி அக்ஸர்தாம் கோயிலுக்கும் சீனா பிரதமரை குஜராத் சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்து செல்கிறார். மோடி மட்டுமல்ல ஆதித்யநாத் நமது பாரத மண்ணின் ஆன்மிக வேரை அறிந்த அதிரடி நாத் தான்.

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  ராமாயணமும் மகாபாரதமும் தர்ம நெறிகளை போதிப்பவை. எவனையும் கைய வெட்டு கழுத்த அறு என்று போதிப்பவை அல்ல . சாத்வீகத்தை போதிப்பவை. ராஜ ராஜன் கோவில் கட்டினான் என்றால் வேலை செய்பவர்கள் தொண்டாக கருதி கட்டினார்கள்.. சிற்பிக்கு வெற்றிலை மடித்து கொடுத்து கோவில் கட்டுவித்தான். என்பது சரித்திரம். போலி மத சார்பின்மைகாரர்கள் நாட்டை ஆண்டதினால் மக்கள் மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். உண்மையை சொல்ல யாருக்கும் மனம் வரவில்லை. ஆதித்யநாத் சரியாக சொன்னார். தாஜ்மகால் இந்தியாவின் அடையாளம் அல்ல. அவமானம். அந்நியர்கள் நம்மை அடிமை படுத்தியதின் அடையாளம். .

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Taj Mahal ல குடுத்தா showcase , reception மாரி எங்குன வேணா வெக்கலாம், எல்லாரும் பாத்து ரசிப்பாங்க...... இந்தெ ராமாயணம், மவாபாரத்த எல்லாம் குடுத்தா இந்தியாவுலயே ஒரு பொக்கையும் சீந்தாது.....கரயான்தான் அரிக்கும்...... இதுல வெளிநாட்டுக்கு export பண்ராய்ங்களாம்....., export ட்டு.....

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  சரியாக சொல்லியிருக்கிறார். தாஜ் மகால் ஒரு பாவத்தின் அடையாளம்.. ஆயிரக்கணக்கான அடிமைகளை கொன்று இதை மொகலாய மன்னன் கட்டினான் என்று சரித்திரம் கூறுகிறது.

 • Veeraiyah (இந்திய பிரதமராக ஆசை) - KUALA LUMPUR,மலேஷியா

  எத்தனையோ பணிகள் பிரச்சினைகள் இருக்கையில் தாஸ் மஹால் பத்தின பேச்சு முதல்வருக்கு தேவையா.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  பாகிஸ்தான்காரன் நாட்டுக்கு வெளியே இருந்து இங்கே குடைச்சல் கொடுக்கிறான். இவனுக உள்ளேயிருந்து கொண்டு குடைச்சலோ குடைச்சல். ரெண்டு பேருக்கும் என்ன கூட்டணியோ.......பாரம்பரிய பாரத தேசத்தவருக்கு தான் நிம்மதி போச்சு.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  இந்தியாவை பொறுத்தமட்டில், வந்தேறிகளுக்கு அடைக்கலமும், ஆதரவும் கொடுக்கும் நாடு. அவரவர்கள் இங்கே வந்து தங்களின் படைப்பை இங்கே உருவாக்கி விட்டு சென்றுள்ளனர். அது இன்று மிக பெரிய பிரச்சனைகளை உண்டுபண்ணிக் கொண்டு உள்ளது. சொந்த படைப்புகளும், சொந்த நாட்டு பிரஜைகளும் சீப்பட்டுக்கொண்டு இருக்கும் காலம்.

 • Sandru - Chennai,இந்தியா

  உ. பி இல் வெயிலின் தாக்கம் மிக அதிகம் என தெரிகிறது. முதல்வருக்கே இந்த கதியா?

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  இவங்க ஆட்சி முடியறதுக்குள்ள காங்கிரஸ் பரவாயில்லை என்ற நிலைமைக்கு கொண்டுவந்துவிடுவாங்க, இந்தியா முழுவதும் விவசாயிகள் பிரச்சனை , தண்ணீர் பிரச்சனை , GST வரி உயர்வது என்று இருக்கும் போது கொஞ்சும் மக்களை பற்றி கவலை படாமல் தேவை இல்லாத விஷயங்களை ஊத்தி பெரிதாக்குவது என்ன நியாயம் ?

 • Jaya Ram - madurai,இந்தியா

  அவருக்கு தெரிந்தது கீதையும், ராமாயணமும் தான், ஏன் உலக பொதுமறையாம் திருக்குறளை கொடுத்தால் அவர் இந்தியரில்லை என்று ஆகிவிடுமா எப்போ ஒரு பிரதமரானவர் அவர் ஆட்சிக்கு உட்பட்ட மாநிலங்களின் கலாச்சாரம் மொழி இவற்றின் மீது அக்கறை கொள்ளவேண்டும் இந்த நாட்டின் வரலாறு முழுமையும் தெரிந்திருக்கவேண்டும், சுதந்திர போராட்டத்தில் அந்தந்த மாநிலங்களில் முக்கியமாக போராடி உயிர் நீத்த தியாகிகளை பற்றி தெரிந்து இருக்க வேண்டும் எப்படி காந்தியினை நாங்கள் மதிக்கிறோமோ அதே போல் எங்களுடைய வ உ சி, திருப்பூர் குமரன், போன்றவர்களையும் மருதுபாண்டியர், வாஞ்சிநாதன் போன்றவர்களையும் மதிக்க வேண்டும் காங்கிரஸ் காரர்கள் தான் இந்திராவும், நேருவும், ராஜீவும்,சோனியாவும் தான் இந்த நாட்டின் தியாகிகள் போல் கருதுகிறார்கள் அதைவிட தியாகம் செய்தவர்கள் எத்தனையோ பேர் இந்த மண்ணில் உள்ளனர் அவர்கள் பெயர்கள் எல்லாம் வானூர்தி நிலையம், துறைமுகங்களுக்கு வைப்பதில்லை ஊழல் வம்சமான இந்திராவின் வாரிசுகளின் பெயர்கள் வைக்கபடுவதினை தவிர்க்க வேண்டும்

 • krishnan - Chennai,இந்தியா

  ஆப்பிரிக்காவுக்கு இந்தியாவுக்கும் நெறய சம்பந்தம் இருக்கு. ஆனா ஆரியனுக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு. இந்த தமிழர்க்கு சொந்தமானது அனைத்து ஆரியனும் ஐரோப்பாக்கு ஓடுங்கள்

 • VKP - TIRUCHIRAPALLI,இந்தியா

  அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  முதலில் ஹிந்தியில் எத்தனை உருது சொல் உபயோகிக்கிறீர்கள் என்று பாருங்க அப்புறம் இதெல்லாம் பேசலாம்

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  தாஜ் மெஹல் ஒரு அருமையான கட்டிடம் தான், ஆனால் அது காதல் சின்னம் இல்லை. ஒரு காட்டுமிராண்டி மக்களை கொடுமை படுத்தி கட்டிய கட்டிடம் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற வைத்து மனைவியை பிரசவத்தின் போது சாக வாய்த்த ஷாஜகான் கட்டிய அவமான சின்னம். அவள் பெற்ற அத்தனை பிள்ளைகளையும் அவூரங்கஸீப் சொந்த சகோதரன் கொன்றுவிட்டான் அவனும் ஒரு காட்டுமிராண்டி

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  காதலுக்கு அதுவும் வெளிப்படையான அன்புக்கு அர்த்தம் தெரியாத காவிகள் இயந்திரம் உதவியுடன் MLA ஆகாமல் அரியணை ஏறுவார்கள் என்று தெரிந்திருந்தால் இந்த அன்பு சின்னத்தை ஷாஜகான் வேறு எங்காவது கட்டியிருப்பார் , இங்கு கஜரோவ் காம சூத்திரா கோவில் மட்டும் இருந்திருக்கும் . மோடி அதை தான் பயணத்தின் போது பரிசாக எடுத்து சென்று கொடுத்திருப்பார் . ஆரியர்கள் , முகலாயர்கள் , ஆங்கிலேயர்கள் ஆண்டு இப்போது மீண்டும் ஆரியர்கள் இந்தியாவில் ஆள்கிறார்கள் . இந்தியா வீழ்கிறது .

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Aaggaaaa ..., வந்திட்டான்யா....., வந்திட்டான்யா...... (2019 துல BJP க்கி கண்டிப்பா சங்குதேன்..... இவென் ஒத்தனே போதும்......)

 • karthik - Chennai,இந்தியா

  இந்தியாவிற்கும் இஸ்லாத்திற்கு என்ன சம்பந்தம். ஏறத்தாழ அனைத்து இசுலாமிய தளங்களும் நமது கோவில்களை இடித்து கட்டப்படட்வையே.

 • Balaji - chennai,மத்திய ஆப்ரிக்க குடியரசு

  யோகி சொல்வது உண்மைதான், இது ஹிந்துக்களின் கலாச்சாரத்தி்ற்கு ஒரு அவமானம். இது ஹிந்துக்களின் சிவன் கோவில், ஆனால் முகலாயர்களின் ஆட்சியில் அபகரித்து சிறிது மாற்றங்களை செய்து நினைவுச்சின்னமாக மாற்றி அசிங்க படுத்தி்விட்டனர், பெருமபாலான இஸ்லாமியர்களுக்கு இது நன்றாக தெரியும்.

 • kuruvi - chennai,இந்தியா

  இஸ்லாமியர் காட்டும் சமாதி மத சம்மபந்த பட்டது, காதல் சம்பந்தப் பட்டது அல்ல, எனவே இது அகற்றப் பட வேண்டும் ...

 • Vmmoorthy Moorthy - hyderabad,இந்தியா

  இந்தியர்கள் சோத்துக்கு லாட்டரி அடிச்சாலும் வாய்கொழுப்புக்கு குறைவில்லை

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  "இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை".... உண்மைதான்.... அது ஒரு நினைவு சின்னம்... உலக புகழ் பெற்று விட்டது.... இங்கு எங்கே இருந்து அரசியல் வருது.... மதம் வருது?.... அதை யாரும் இஸ்லாமியர்களின் சின்னமாகவோ கூறியிருக்கார்களா?... ஏன் மதத்தை வம்புக்கு இழுக்கவேண்டும்.... தேவை இல்லாத பிரச்சனை... ஒரு ஹிந்துவாக இருந்தும் நான் குரல் கொடுகீறேன் அப்போ கஜுராகோவோவை நம்ம கலாச்சாரமா எடுத்துக்கலாமா?.... கலை என்பது வேறு.... அரசியல்... அரசியல்... சே...

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  மாட்டிறைச்சி சாப்பிடுகிறவன் தலையை வெட்டணும்.... இறைச்சி சாப்பிடுகிறவர்களை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடவேண்டும்... தாஜ்மகால் இந்தியாவின் அடையாளம் அல்ல.....பாஜக இதுபோன்ற கருத்துக்களை இன்னமும் அதிகம் சொல்லவேண்டும்....கலாசாரத்திலும், உணவு முறைகளிலும் கை வைத்தவன் எத்தனை பெரிய ராஜாவாக இருந்தாலும் அவன் தோற்கடிக்கப்பட்டுள்ளான் என்பது உலக வரலாறு....கோ அழியலாம்...அவன் தம் படை அழியலாம்... ஆனால், மொழி, கலாசாரம், நினைவு சின்னங்கள், உணவு பழக்கவழக்கங்கள் ஆகியவை நமது வரலாற்றின் பொக்கிஷங்கள்... அதனை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது... மாறாக அழிக்க நினைப்பவன் அழிந்து போவான்.... இது உறுதி... இன்று இறுமாப்புடன் பேசுகிறவர்கள், தாம் எதனை செய்கிறோம் என்று அறியாமல் பித்தத்தின் உச்சியில் நின்று உளறி கொட்டுகிறார்கள்... ஆனால், மக்கள் மன்றம் என்ற நீதி தேவதையின் முன்னர் இவர்களது கொட்டம் அடங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது தான் யதார்த்தம்....

 • HSR - Chennai,இந்தியா

  உண்மைதான் , ஒருவனுக்கு ஒருத்தி , ஆனால் இந்த பாவ சின்னத்தின் பிறப்போ மிகவும் கேவலாமானது, அருவறுக்கத்தக்கது,, இன்னொருவன் மனைவி , அவனை கொன்று அபகரித்து, அவள் இறந்ததும் ,,அவளுக்கு ஒரு கல்லறையை கட்டி அதை கட்டியவர்கள் விரலை வெட்டி ,, அப்பப்பா வாந்தி வருகிறது,, இதனை இந்தியாவின் கலாச்சாரச்சீரழிவாக கருதலாம் ஒழிய ஒருக்காலும் நமது பாரதத்தின் கலாச்சார அடையாளமாக இதை கொடுப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்,,இதை இடித்து விடலாம்,, பாபர் மசூதியைப்போலவே..

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  தாஜ்மகாலுக்கும் இந்திய கலாச்சாரத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது , அப்படி தொடர்பு இருப்பதாக கூறுபவனின் தலையை வெட்டுவேன் என்று அவர் சொல்லவில்லை. அந்த ஒரு விஷயத்துக்காக யோகியின் கருத்தை ஏற்றுக்கொள்ளலாம்.

 • Ravichandran Selliah - Nesna,நார்வே

  இங்கு தாஜ்மஹால் கட்டப்பட்டதா? அல்லது அபகரிக்கப்பட்டதா? என்பது தான் முதல் கேள்வி... தேஜா மஹாலயா என்ற ஹிந்து கோவில் (Hindu Temple) தான் என BBC இல் 20 வருடங்களுக்கு முன் பிரசுரிக்கப்பட்டிருத்தது. இதன் இடையே உள்ள மறைத்துக்கட்டப்பட்டுள்ள சுவரை இடித்தால் புதிர் வெளிவரும் என்பது என் நம்பிக்கை?

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  உண்மைதான் தாஜ் மஹால் இந்தியாவிற்கு ஒரு அவமான சின்னம். ஷாஜஹானின் உண்மை கதை தெரிந்தவர்களுக்கு அதன் கேவலம் புரியும். இந்த கேடுகெட்ட காங்கிரஸ் ஏன் இவ்வளவு நாட்களாக ஒரு முகலாய சமாதிக்கு குடை பிடித்தது என தெரியவில்லை. உலக அதிசயமாக கருத எவ்வளவோ நல்ல விஷயங்கள் இந்தியாவில் இருக்கிறது. ஆனால் தாஜ் மஹாலும் ஒரு ஓரமாய் இருந்துவிட்டு போகட்டும். இடிக்கவேண்டாம்.

 • anand - Chennai,இந்தியா

  உண்மையை சொன்னால் இஸ்லாமியர்கள் கூட தாஜ்மஹாலை ஏற்று கொள்ள மாட்டார்கள்...ஆனால் காங்கிரஸ் தாஜ் மஹால்-கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து விட்டது...அது நமது கலையும் அல்ல...அதில் வேலை செய்த பலரும் இறுதியில் படுகொலை செய்யப்பட்டார்கள்..

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்திய கலாசாரம்..மீனாக்ஷி கோயில், ஜெய்ப்பூர் அரண்மனை, தாஜ்மகால், அஜந்தா ஓவியம், எல்லோரா குகை சிற்பங்கள், புத்த கயா இவையெல்லாமே கலாசாரம் விட்டுச்சென்ற துளிர்கள்... இவைகளை பட்டுபோகாமல் பாதுகாப்பது நமது கடமை... விஷ விதையை விதைக்கும் பாஜகவின் கருத்தை, 90 % மக்கள் புறம்தள்ளுவார்கள்.. இப்படியே பேசிக்கொண்டிருந்தால் பாஜக அழிவின் விளிம்பில் நிற்கும் காலம் விரைவில் வரும்... ஆனால் , அப்போதும் தாஜ்மகால் கம்பீரமாக நிற்கும்... இதுதான் யோகி போன்றவர்களுக்கு 90 % இந்திய மக்களின் பதில்...

 • Jana - Chennai,இந்தியா

  முருகனை இந்து என்று சொல்பவர்களுக்கான பதிவு.. முருகன் இந்துவா?? நிரூபிக்க தயாரா??? குமரிக்கண்டம் முதல் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் கலியுலகம் வரை தமிழினத்தின் அடையாளமாக விளங்குபவன் முப்பாட்டன் முருகன். குமரிக்கண்டம் தொடங்கி பாரத கண்டம் முழுக்க தமிழனுக்கு சொந்தமானது.அதற்கு ஆதாரம் தமிழில் இயற்றப்பட்ட தொல்க்காப்பியம்,சிலப்பதிகாரம், அகநானூறு,புறநானூறு உட்பட 46 இலக்கியங்களில் அதற்கு ஆதாரம் இன்றும் காணப்படுகிறது.தற்போது, அறிஞர் குணா அவர்கள் எழுதிய தமிழரின்_தொன்மை என்ற புத்தகத்தில் ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது.தற்போது, இந்தியா முழுமைக்கும் உள்ள தமிழர்கள் முப்பாட்டன் முருகனை முன்னிறுத்துவதால் ஏறக்குறைய 2800 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு பஞ்சம் பிழைக்க வந்த ஆரிய பிராமணர்களுக்கும் நம்பூதிரிகளுக்கும் ஒரு அடையாளம் தேவைப்பட்டது.அதற்கென்று அவர்களால் உருவாக்கப்பட்ட ஓர் வழிபாட்டி முறை தான் விநாயகர் வழிபாடு. தாங்களும் இந்தியாவின் பூர்வ குடிகள் தான் என்று நம்ப வைப்பதற்காக விநாயகரும் முருகனும் சகோதரர்கள் என்று திரித்தார்கள். இதுகுறித்து நாங்கள் முன்னிறுத்தும் கேள்விகள் ? 1.முருகனும் விநாயகரும் அண்ணன் தம்பி என்றால், இந்தியா முழுவதும் விநாயகரை தூக்கி பிடிக்கும் ஆரிய பிராமணர்கள் ஏன் முருகனை தமிழகம் தாண்டி முன்னிறுத்தவில்லை?? 2.தமிழ்நாட்டில் ஏறக்குறைய 2800 வருடங்களுக்கு முன்பு முருகனுக்கு அறுபடை வீடுகள் அமைத்த தமிழர்கள் அவரது அண்ணன் என்று சொல்லப்படும் விநாயகருக்கு ஏன் அமைக்கவில்லை?? 3.முருகன், சிவன், பார்வதி, விநாயகர் ஆகியோர் ஒன்றாக இருந்தது போன்று 2500 வருடத்திற்கு முன்பு(ஆரியர்களின் வருகைக்களுக்கு முன்பு)தமிழர்கள் கோவில் கட்டியதாய் ஆதாரம் உண்டா? 4.கந்தனுக்கு கந்த புராணம் இருக்கும்போது ஏன் விநாயகருக்கு விநாயக புராணம் இயற்றவில்லை?? 5.ஆதியில் குறிஞ்சி நிலத்தில் தான் மனிதன் வேட்டையாடி வாழ்ந்தான்.அந்த குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த முதல் தலைவன் தான் முருகன்.நிலை இவ்வாறு இருக்கையில் 2500 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட விநாயகரை முருகனுடன் தொடர்பு படுத்தி பேசுவது நகைப்புக்குரியது..... 6. முருகனும் விநாயகரும் அண்ணன் தம்பி என்று சொல்லும் நீங்கள் ஏன் விநாயக சதுர்த்திக்கு கொண்டுக்கப்படு முன்னுரிமையை தைப்பூசத்திற்கு கொடுப்பதில்லை? தைப்பூசத்துக்கு நடைமுறையில் பொது விடுமுறை கூட இல்லையே?? 7.தமிழகத்தை தவிர இந்தியாவின் பிற பகுதிகளில் ஏன் முருகனுக்கென்று கோவில்கள் அமைக்கப்படவில்லை?? 8.தமிழர்களும் ஆரியர்களும் ஒன்றுதான் (இந்துக்கள்) என்றால் ஏன் ஈழத்தில் 85% முருகனை(உங்கள் பார்வையில் இந்து) வழிபடும் தமிழர்களை இலங்கை இனப்படுகொலை செய்யும்போது இந்தியா ஏன் தடுக்கவில்லை?? மாறாக ஏன் ஆயுதம் கொடுத்து அழித்தொழித்தது? 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் கோவில்களை இடிக்கும்போது, தமிழர்களை இந்துக்கள் என்று சொல்லும் இந்தியா ஏன் தடுக்கவில்லை?? 9.கீழடியில் தற்போது மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியை ஏன் இந்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தியது? காரணம் - கீழடியில் கிடைக்கப்பட்ட 5000த்திற்கும் மேற்பட்ட பொருட்களை ஆராயும்போது மதம் சார்ந்த எந்தவொரு ஆதாரமும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை.நடுகல் வழிபாடு தொடர்பான ஆதாரங்களே தொடர்ந்து கிடைக்கப்பட்டு வருகிறது. குறிப்பு - தமிழர்களின் வழிபாடு இயற்கை வழிபாடு, முன்னோர் வழிபாடு,குலதெய்வ வழிபாடு.அகழ்வாராய்ச்சி முழுவதுமாக நடைபெற்றிருந்தால் இந்தியாவே தமிழர்க்கு சொந்தமானது என்பது நிரூபணமாகிவிடும்.எனவே தான் கீழடி ஆய்வு நிறுத்தப்பட்டது.... 9.இந்து என்ற சொல் ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்பு கால்டுவெல் என்ற வெள்ளைக்காரரால் ஆரியரின் துணையோடு தமிழர்கள் உட்பட பூர்வ குடிகள் மீது திணிக்கப்பட்டதே.ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்பு உள்ள இலக்கியங்களிலோ கல்வெட்டுகளிலோ தமிழகத்தில் இந்து என்ற சொல் இருந்ததற்கான மரபியல் ஆதாரத்தை நிரூபித்துவிட்டால் முருகனை இந்து என்று நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். சீமான் தலைவர்: நாம் தமிழர் கட்சி

 • SIVA POLLACHI - POLLACHI,இந்தியா

  தாஜ் மஹால் இந்தியாவிற்கு அடிமை சின்னம். இதை சூடு சொரணை இல்லாதவன் வேண்டுமானால் மறுக்கலாம்

 • GREEN INDIA - COIBATORE,இந்தியா

  இவர்கள் ஆக்கபூர்வமாக எதையும் செய்யாமல், இதுபோல தேவையற்ற பிரிச்சினைகளிலேயே கவனம் செலுத்துகிறார்கள். வளர்ச்சி என்ற பெயரில் கிளர்ச்சிக்குரிய செயல்களையே செய்கிறார்கள்.

 • Ravi Manickam - சேலம்,இந்தியா

  இதிலென்ன தவறு? பாக்கிஸ்தான் கூறிக்கொண்டிருப்பதை இவரும் கூறுகிறார். Incredible India என்னும் டிவி விளம்பரத்தில் தாஜ் மஹாலை காண்பித்ததற்கு பாக் டிவியில் அதை in(dis)credible இந்தியா என்ற தலைப்பில் இந்தியாவிற்கும் தாஜ்மஹாலிருக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறி பட்டிமன்றம் வைத்த பொது ( மொகலரின் கதைகளை பெரிதாக ஆத்தினார்கள்) அப்போது எல்லா அறிவு ஜீவீகளும் மேதைகளும்,இஸ்லாமிய தலைவர்களும் நவதுவாரத்தை பொத்திக்கொண்டுதான் இருந்தார்கள், இப்பமட்டும் என்ன புது ஆவேசம் ஓ... காவி துணியா அப்ப இந்தியாவை பற்றி பேசவேகூடாது அப்படித்தானே

 • Raman - kottambatti,இந்தியா

  எதுக்கு பிரச்னை.. தாஜ்மஹால் , நாட்டில் உள்ள எல்லா சர்ச் மற்றும் மசூதிகளை இடித்து தள்ளிவிட வேண்டியதுதானே? நன்றாக இருக்குமே? அதுக்கு முன்னாடி.. உலகத்தில் உள்ள எல்லா நாட்டிலேயும் பிச்சை எடுக்கும் (அப்பப்ப இங்கே கருத்து சொல்லும்) மக்களை திரும்ப இந்தியாவுக்கு வர சொல்லுங்கள்.. குறிப்பாக அரபு நாடுகளிலும் கிறிஸ்துவ நாடுகளிலும் இருக்கும் மக்களை திரும்ப வர சொல்லுங்கள். ஹிந்துத்துவ நாட்டை உருவாக்கலாம் என்று சொல்லுங்க.. பிறகு வேண்டாதவற்றை இடித்து தள்ளலாம்

 • kum - paris,பிரான்ஸ்

  BOSS அப்பா நம்ப தல மோடிஜி , கீதை மற்றும் ராமாயணம் ஆகிய புத்தகங்களை பரிசாக வழங்க தான் tour போறாருன்னு சொல்லவரிங்களா . நீங்க சொன்னா எல்லாம் சரியாகத்தான் இருக்கும்

 • Sampath Kumar - chennai,இந்தியா

  ரைட்டு அடுத்து தாஜ் மஹால் இடிப்பு போல

 • Rajasekar K D - Kudanthai,இந்தியா

  தாஜ்மஹால் கண்ணை உறுத்துகிறது ஆதித்யநாத். இப்படி சொல்லணும் .

 • இந்து தமிழன்.. - Chennai,இந்தியா

  அது காமத்தின் சின்னம். அதை கட்டிமுடிப்பதற்கு பல ஹிந்துக்கள் தங்கள் உயிரைவிட்டுள்ளனர்.. மக்கள் வரிப்பணத்தில் மொகலாயர் போட்ட ஆட்டத்திற்கு (அதுவும் 23 வது மனைவிக்கு. அப்போ முதல் manaivikku...? ) சிறந்த உதாரணம் தாஜ்மகால்.. அடுத்தமுறை தமிழக நினைவு சின்னத்தை மோடி பரிசாக குடுக்கலாம்.. பெரியகோவில், கல்லணை, திருமலை நாயக்கர் தூண்.. இன்னும் பல

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  அக்காள் மும்தாஜ் இறந்தபிறகு அவளோட  தங்கச்சிய கட்றதுக்குப்பதிலா தாஜ்மஹாலைக் கட்டியதால் எவ்வளவு பிரச்னை? விவாதம்? ஷாஜஹான் இவ்வளவு அவசரப்பட்டிருக்கணுமா ?

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இந்தியா கலாச்சாரத்திற்கு தொடர்பில்லை என்றால் அதை இடித்துவிடலாமா, மகாபாரதமும், ராமாயணமும் தான் இந்திய கலாச்சாரத்தோடு தொடர்புடையவை என்பதற்கு என்ன ஆதாரம், உங்களுக்கு புடிக்குதுன்னா அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று என்ன அவசியம், வடஇந்திய தென்னிந்திய கலாச்சாரங்களே வேறுபடுகின்றன, கோயில்கள் சிற்பங்கள் வடிவமைப்புகள் போன்றவை வட/தென் இந்திய இடையே நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன, விழாக்கள், வணங்குதல், வாழ்க்கை முறை, திருவிழாக்கள், உறவு முறைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாமே இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன, எது இந்திய கலாச்சாரம் என்பதை முதலில் கண்டுபுடியுங்கள், மொகலாயர்களும், ஆங்கிலேயர்களும் ஆட்சிக்கு வரவில்லை என்றால் ஒன்றுபட்ட இந்தியா என்ற ஒன்றே இருந்திருக்காது

 • Rajan - Madurai

  பைத்தியம்- No. 2

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  அப்போ அதையும் ஓடிச்சு தல்லுங்கடா... தாஜ் மஹாலை பார்க்கவே மட்டும் எத்தனை வெளிநாட்டுகாரன் வாரான்.... அந்த காசு மட்டும் இனிக்குதா?....

 • Jeyaseelan Jawahar - Doha,கத்தார்

  அப்படியே கொஞ்சம் இந்திய கலாச்சாரத்தையும் பின் பற்ற சொல்லுங்க.முழுக்க முழுக்க ஆபாசம் காமம் கொண்டது இந்திய கலாச்சாரம்.பலதார\எ திருமணம் ,.... இது எல்லாம் இங்கு ஒரு காலத்தில கலாச்சாரமாக இருந்தது.

 • Mano - Madurai,இந்தியா

  Well Said, Yogi. Go ahead.

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  பாதி சரியா சொல்லியிருக்கார் ஆதித்யநாத் ... தாஜ் மஹால் ஒரு சமாதி அவ்வளவுதான்.. கலையை ரசிக்க லாயக்கு.. அது இந்திய கலாச்சாரப்படி கட்டிய ஒரு கட்டிடமல்ல... அதேபோல பன்முகம் கொண்ட இந்திய கலாச்சாரத்துக்கு கீதை, ராமாயணமும் அடையாளங்கள் அல்ல... இங்கே இந்தியா இந்துக்களுக்கே என கூறும் பலரில் எத்தனைபேர் இந்த இரண்டு காவியங்களையும் படித்திருப்பீர்கள்...விதண்டாவாதத்துக்கு என்ன வேணா சொல்லிக்கலாம் ... உண்மையை சொல்லுங்கள்... முக்கியமா தென் இந்தியாவில் இதை முழுமையாக கண்டவர்கள் மிக மிக குறைவு என்பதுதான் உண்மை...

 • Orion - Mount Shasta, California ,யூ.எஸ்.ஏ

  அப்படி போடு போடு போடு

 • Baalu - tirupur,இந்தியா

  ஆதி இது வேண்டாத வேலை. உருப்படியா மக்களுக்கு நாட்டுக்கு நல்லதா பண்ண பாரு. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் வாசனை உண்டு.

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  திரு மோடி ராமாயணம், பகவத் கீதை புத்தகங்களுடன் பழமை வாய்ந்த கோயில் கோபுரங்கள் மற்றும் சிற்பங்களை பரிசாக கொடுக்கலாம் நம் கலாசாரத்தின் சின்னம்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  உண்மைதான்... இதை இந்திய சரித்திரத்தின் மீது பெயிண்ட் அடித்த காங்கிரஸிடம் கேட்கவேண்டும்...

 • vns - Delhi,இந்தியா

  நமது தஞ்சை கோவிலுக்கும் கல்லணைக்கும் காசி விஸ்வநாத், கோனார்க் சூர்யா கோவில்களுக்கும் இந்தியா பாரம்பரியம் உண்டு. ஒருவரை இறந்தபின் புதைத்த இடத்திற்கும் இந்தியா கலாச்சாரத்திற்கும் என்ன சம்பந்தம் ?

 • Kalyani S - Ranipet,இந்தியா

  தமிழ் கலாச்சாரத்திற்கு தொடர்பு இல்லாத ஹிந்தியை எங்கள் மீது திணிக்க முயல்கிறீர்களே அது எந்த விதத்தில் நியாயம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement