Advertisement

பிராமணரான ஜெ., முஸ்லிம்களின் பாதுகாவலர்!

தி.மு.க., மட்டுமே, முஸ்லிம்களை பாதுகாக்கும் கட்சியாக தன்னை காட்டிக்கொள்ள முயற்சிக்கிறது. ஆனால், உண்மையை ஆழமாக ஆராய்ந்தால், அ.தி.மு.க., ஆட்சியில் தான், முஸ்லிம்கள் ஏராளமான நன்மைகளை பெற்றுள்ளதை அறியலாம். குறிப்பாக, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முதல்வர்களாக இருந்த, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா, முஸ்லிம்களுக்கு நிறைய நன்மைகளை செய்துள்ளனர்.
எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, முஸ்லிம் பெரியவர், காயிதே மில்லத்துக்கு மிகுந்த மரியாதை அளித்தார். 1972, ஏப்., 5ல், காயிதே மில்லத் மறைந்தார். அதை அறிந்ததும், அவர் உடல் வைக்கப்பட்டிருந்த, சென்னை, ராயப்பேட்டை புதுக்கல்லுாரிக்கு, எம்.ஜி.ஆர்., விரைந்தார்.
காயிதே மில்லத் உடலுக்கு, இறுதி அஞ்சலி செலுத்தியவர், இறுதி ஊர்வலம், திருவல்லிக்கேணி, பெரிய பள்ளிவாசல் நோக்கி செல்லப் போவதை அறிந்து, 'இறுதி ஊர்வலத்தில், நானும் கலந்து கொள்கிறேன்' என்று சொல்லி, உடல் அடக்கம் செய்யும் இடம் வரை நடந்தே சென்றார்.
இது, முஸ்லிம்களின் ஓட்டுகளை கவர்வதற்காக அல்ல; அந்த மதத்தினர் போற்றும் மனிதனாக வாழ்ந்தவர் மீது, எந்த அளவுக்கு அவர் மரியாதை வைத்திருந்தார் என்பதை, ஊருக்கு பறை சாற்றுவதற்காக, எம்.ஜி.ஆர்., இவ்வாறு செய்தார்.
எம்.ஜி.ஆர்., 1977ல் ஆட்சிக்கு வந்தார். அந்த ஆண்டிலேயே, ஜூன் 5ம் தேதி, காயிதே மில்லத் பிறந்த நாளை, அரசு விழாவாக கொண்டாட உத்தரவிட்டார். அந்த நாளில், காயிதே மில்லத் நினைவிடத்தில் நடந்த அரசு விழாவிலும் கலந்து கொண்டார். அதற்கு முன், எந்த முதல்வரும், காயிதே மில்லத் நினைவிடத்தில், அரசு விழாவில் கலந்து கொண்டதில்லை.
முதல் பொதுத் தேர்தலை, அ.தி.மு.க., 1977ல் சந்தித்தது. அப்போது, முஸ்லிம் லீக்குடன் கூட்டணி அமைத்து, முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்; 10 தொகுதிகளை முஸ்லிம் லீக் கட்சிக்கு கொடுத்தார். ஆனால், வாணியம்பாடியில் மட்டுமே, முஸ்லிம் லீக் வெற்றி பெற்றது.
முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் பிற தொகுதிகளில் கூட, முஸ்லிம் லீக் வெற்றி பெறவில்லை. ஆனாலும், முஸ்லிம்கள் மீது,
எம்.ஜி.ஆர்., கொஞ்சம் கூட வெறுப்படையவில்லை.
அடுத்து வந்த லோக்சபா தேர்தலில், ஏ.கே.ஏ.அப்துல் சமதுவுக்கு, வேலுார் தொகுதியில், 'சீட்' கொடுத்தார்; அவர் அங்கு வெற்றி பெற்றார்.
அதே, 1977ல், காயிதே மில்லத் மகன், மியாக்கானை, சட்ட மேலவை உறுப்பினராக்கி, காயிதே மில்லத் குடும்பம் மீது தான் கொண்டிருக்கும் பற்றை, வெளியுலகிற்கு பறை சாற்றினார்.
பள்ளிவாசல்களில் பணியாற்றி, ஊதியம் பெறும், லெப்பை முஸ்லிம் பிரிவினர் மட்டுமே, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். பிற முஸ்லிம்கள், ஏழ்மை நிலையிலேயே இருந்தனர்.
இந்த தகவல்,
எம்.ஜி.ஆரின் கவனத்துக்கு சென்றது. அடுத்த சில நாட்களில், அனைத்து முஸ்லிம்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார்.
முஸ்லிம்களின் நலன்களை பேண, எம்.ஜி.ஆர்., ஏராளமாக செய்தது போலவே, அவர் அடியொற்றி அரசியலுக்கு வந்து, ஆட்சி, அதிகாரத்தில் அமர்ந்த ஜெயலலிதாவும், அந்த இனத்தவருக்கு ஏராளமான சலுகைகளையும், உரிமைகளையும் வழங்கியுள்ளார்.
பிராமண ஜாதியைச் சேர்ந்த ஜெயலலிதா, முஸ்லிம்களுக்கு கடைசி வரை பாதுகாப்பாக இருந்தார்.
ரம்ஜான் மாதத்தில், அரசியல் நோக்கோடு, 'இப்தார்' விருந்து நிகழ்ச்சிகள் இன்றும் நடக்கின்றன. முஸ்லிம் இன மக்களின் ஓட்டுகளை குறி வைத்து, ஆண்டாண்டு காலமாக இந்த கலாசாரம் பின்பற்றப்படுகிறது. ஆனால், இப்தார் விருந்தின் தத்துவத்தை புரிந்து, அதன் படி அந்த நிகழ்ச்சியை நடத்திய, ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதா தான்!
கடந்த, 1977ல், மறைந்த, மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி நடத்திய, இப்தார் விருந்தில், ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பின், 'அ.தி.மு.க., சார்பில் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடத்த வேண்டும்' என உத்தரவிட்டு, இறக்கும் வரை, அதை தொடர்ந்து செய்து வந்தார், ஜெயலலிதா.
மற்ற அரசியல் தலைவர்கள், முஸ்லிம்கள் ஏற்பாடு செய்யும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். ஆனால், ஜெயலலிதா தன் சொந்த பணத்தை செலவு செய்து, இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். அது போல, இப்தார் விழாக்களில், ஒரு போதும் அவர், மறைமுகமாக கூட, அரசியல் பேசியதில்லை.
கடந்த, 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, தன் முதல் ஆட்சி காலத்திலேயே, நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு, 'காயிதே மில்லத் மாவட்டம்' என, பெயர் சூட்டினார். பொருளாதார ரீதியில் பின் தங்கியிருக்கும் முஸ்லிம்களை முன்னேற்றும் வகையில், சிறுபான்மையினர் நல வாரியம் அமைத்தார்; அதன் தலைவராக, ஏ.கே.ஏ.அப்துல் சமதுவை நியமித்தார்.
அது மட்டுமல்ல. முஸ்லிம் சொத்துகளை நிர்வகிக்கும், 'வக்ப்' வாரிய தலைவராக, முதல் முறையாக, முஸ்லிம் பெண், பதர் சயீத்தை நியமித்தார். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள முஸ்லிம் சொத்துகளை நிர்வகிக்கும், வக்ப் வாரியத்துக்கு, சொந்த கட்டடம் இல்லை. இதை அறிந்த அவர், வக்ப் தலைமை அலுவலகம் கட்ட, 52 லட்சம் ரூபாயை ஒதுக்கினார்.
'ஹஜ்' எனப்படும், இஸ்லாமியர்களின் புனித யாத்திரை, பணக்கார முஸ்லிம்களுக்கு மட்டுமே சாத்தியமானதாக இருந்தது. ஏழை முஸ்லிம்களும், மெக்கா சென்று தங்கள் இறுதி கடமையை பூர்த்தி செய்ய வேண்டும் என, விரும்பிய அவர், மானியம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.
பள்ளி வாசல்களில் பணி புரியும், 'உலமா'க்களின் ஓய்வூதியத்தை, 250 ரூபாயிலிருந்து, 1,500 ரூபாயாக உயர்த்தினார். நோன்பு மாதமான, புனித ரம்ஜான் மாதத்தில், பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சிக்கான, அரிசி, 1 கிலோ, ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என, அறிவித்தார்.
நாகூர் தர்காவில் நடக்கும், பிரசித்தி பெற்ற சந்தனக் கூடு விழாவுக்காக, ஒவ்வொரு ஆண்டும், ஆறு லட்சம் ரூபாய் சந்தனக் கட்டைகளை
இலவசமாக வழங்கினார்.
கடந்த, 2001ல் முதல்வராக வந்த ஜெயலலிதா, 1,000 முஸ்லிம் இளைஞர்களுக்கு தலா, 25 ஆயிரம் ரூபாய் வீதம், அரசு உதவித்தொகை அளித்து, சுய தொழிலில் ஈடுபட
துாண்டுகோலாக இருந்தார்.
இஸ்லாமியர்களின் மாண்பை போற்றும் வகையில், காயிதே மில்லத்துக்கு மணி மண்டபம் அமைத்தார். தேச விடுதலைக்காக போராடிய, திப்பு சுல்தானுக்கு, திண்டுக்கல்லில் நினைவு மண்டபம் அமைத்தார்.
கடந்த, 2001ல், மூத்த இஸ்லாமிய தலைவரான, அப்துல் லத்தீபை, தற்காலிக சபாநாயகராக நியமித்தார். 'புர்கா' எனப்படும், தலை முதல் கால் வரை மறைக்கும் கறுப்பு உடையை அணியும், முஸ்லிம் பெண், நிலோபர் கபிலை, அமைச்சராக்கினார்.
விஞ்ஞானி, அப்துல் கலாமை, ஜனாதிபதி ஆக்கியதில், ஜெயலலிதாவுக்கு பெரும் பங்கு உண்டு. கலாமின் பிறந்த நாளான, அக்., 15ஐ, இளைஞர் எழுச்சி நாளாக அறிவித்தார்.
இதெல்லாம், முஸ்லிம் சமுதாயத்துக்கு ஜெயலலிதாவால் கிடைத்த பலன்கள் என்றால், அந்த சமுதாயம் நீண்ட காலத்துக்கு பயன் பெறும் வகையிலும், நிறைய விஷயங்களை ஜெயலலிதா செய்துள்ளார்.
முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான ஆணையத்தை ஏற்படுத்தினார். அந்த ஆணையம், சட்ட ரீதியாக ஏற்படுத்தப்பட்டதால் தான், தி.மு.க., ஆட்சி காலத்தில், முஸ்லிம்களுக்கு, 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
காதர் மொய்தீன் தலைமையிலான, முஸ்லிம் லீக்கில் இருந்து, லத்தீப் பிரிந்து சென்று, தேசிய லீக் கட்சியை துவங்கினார். 2001 சட்டசபை தேர்தலில், இந்த இரு கட்சிகளையும், தன் கூட்டணியில் ஜெயலலிதா சேர்த்தார்; ஒற்றுமையுடன் செயல்பட அறிவுரை வழங்கினார்.
இஸ்லாமியர்களின் உணர்வுகள் காயம்பட கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அவரது ஆட்சி காலத்தில், வெளி வந்த படங்களில், இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தும் காட்சிகள் இருப்பதாக, சில இஸ்லாமிய அமைப்புகள் போராடின.
அதை, திரையுலகம் கண்டு கொள்ளவில்லை. ஆனால், அந்த படங்களில், முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் காட்சிகளை நீக்கும் வரை, திரையிட ஜெயலலிதா அனுமதிக்கவில்லை.
சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இதை செய்தார் ஜெயலலிதா; கமல்ஹாசன் போன்றவர்களின் எதிர்ப்புக்கும் ஆளானார்.
தந்திரத்தால் முஸ்லிம்களை ஆட்கொள்ளாமல், வெளிப்படையான நன்மைகளை, அந்த மக்களுக்கு செய்ததன் மூலம், இஸ்லாமியர்களின் இதயங்களில் வாழ்கிறார் ஜெயலலிதா.
இப்படியெல்லாம் தன் வாழ் நாள் முழுவதும், முஸ்லிம்களுக்கு பாதுகாவலாக இருந்த அவர், தற்போது இல்லை. அவரை இழந்ததால், தங்களை வெளிப்படையாக நேசித்த ஒரு தலைவரை இழந்து நிற்கிறது முஸ்லிம் சமூகம்.இ - மெயில்: pudumadamjaffar1968gmail.com பி.ஜாபர் அலி
- சமூக ஆர்வலர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (12)

 • Rajarajan - Thanjavur,இந்தியா

  குற்றம் சொல்வது எளிது, ஆனால், முதலில் நாம் அதை கடைபிடிக்கிறோமா என்று பார்ப்பது முதல் நலம். யார் செய்தினும், குற்றம் குற்றமே. பல தலைமுறைகள் இடவொதுக்கீடு மூலம் நன்மை பெற்றும், கோடீஸ்வரர்களாக இருந்தும், இடவொதுக்கீட்டை தொடர்ந்து அனுபவிப்பவர் யார் ?? தங்கள் பிரிவு ஏழைகளுக்கே, இடவொதுக்கீட்டை விட்டுகொடுக்காதவர் யார் ? ஜாதி பெயரில் கலவரம் செய்வது யார் ? என்னதான் உயர்பதவியை தூக்கி கொடுத்தாலும், ஜாதிப்பெயரை சொல்லி திட்டியதாக சொல்லி வழக்கு போடுபவர் யார் ??? அனைத்து பிரிவினரும் அர்ச்சகர் ஆவதில் எந்த தவறும் இல்லை. இது அவரவர் தனிப்பட்ட உரிமை. ஆனால், இதை குறிப்பிடுபவர் (இங்கே உட்பட) மற்றும், எத்தனை அரசியல்வாதிகள், தங்கள் வாரிசுகளை அர்ச்சகர்களுக்கு படிக்க வைத்துள்ளனர் ?? இடஒதுக்கீடு மூலம் சலுகை இருந்தும், அந்த இடங்கள் இன்றுவரை காலியாக இருப்பது ஏன்? சலுகைகள் பெறும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினர், தங்களுக்குள் பெண் கொடுத்து, பெண் எடுப்பதில்லையே ஏன்?? இருவருக்குள்ளும் என்ன உயர்/ தாழ்ந்த ஜாதி பிரச்சினை?? கலப்பு திருமணம் செய்தால், அவர்களை கொலை செய்வது யார்?? இவ்வளவு அடிப்படை குறைகளை தங்கள்வசம் வைத்துக்கொண்டு, பின்னர் மற்றவரை குறை கூறுவதை எப்படி சரி என்று எடுத்துக்கொள்வது?? பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட பிரிவினர் வீட்டு வேலையாட்களை/ ஓட்டுனர்களை படிக்கச்செல்லுங்கள் என்று கூறாமல், வேலைக்கு தொடர்ந்து வைத்துக்கொள்வது ஏன் ?? இது அடிமைத்தனம் இல்லையா ?? என்னதான் உதவி கலெக்டர் வேலைக்கு இடவொதுக்கீடு இருந்தும், அந்த இடத்தை எட்ட முயற்சிக்காமல், அர்ச்சகர் தட்டில் விழும் 5 க்கும்,10 க்கும் மனம் விரும்புவது ஏன் ?? அப்படியானால், உங்கள் உயரம் மற்றும் திறமை அந்த அளவுக்கு தானா ?? பின்னர் ஏன் வெறும் கூச்சல்?? ஏற்கனவே போதுமான இடவொதுக்கீடு இருந்தும், மீண்டும் மீண்டும் தங்கள் ஜாதியினருக்கு இடவொதுக்கீடு வேண்டும் என்று கூறும் அரசியல் தலைவர்களை என்னவென்று சொல்வது ?? ஆனால் ஜெயலலிதா, தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பிராமணருக்கு இடவொதுக்கீடு தருவேன் என்று எந்த நிலையிலும் கூறியதில்லை, எந்த பிராமணரும் அதை கேட்டதில்லை. பிராமணர்கள் தங்களின் தன்னம்பிக்கை ஒன்றே மூலதனமாக கொண்டு தான் எந்த சூழ்நிலையும் சமாளிக்கின்றனர். காலப்போக்கில், இதுவே இவர்களின் தரம் என்ற அளவுகோலாக மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்டது. இது மற்ற ஜாதி பிரிவினரை உறுத்துமாயின், அவர்களில் முன்னேறியவர்கள், தங்கள் இடவொதுக்கீட்டை முற்றிலும் துறந்து, பிராமணர்களுடன் பொது போட்டியில் ஈடுபட்டு, தங்கள் திறமையை நிரூபிக்கலாமே? திறமை என்பது பேசுவதில் இல்லை, அதை நிரூபிப்பதில் தான் உள்ளது. பிராமணர்கள் எப்போதோ தயார், ஆனால், நீங்கள் இப்போதாவது தயாரா? (இது எதிர் வாதம் அல்ல, பொதுவான கருத்துக்கள் மட்டுமே)

 • varagur swaminathan - Folsom,யூ.எஸ்.ஏ

  justice party had only alliance with Muslims in the Madras provincial election before Independence and not fielded candidates- Dravidian parties will have alliance with Muslim political parties only in few cases they filed Muslim candidates - Muslims believed only JJ - Normally they did not vote for DMK

 • kandhan. - chennai,இந்தியா

  திரு ராஜராஜன் அவர்களே இன்றைய காலகட்டத்தில் பிராமணர்கள் பழக்கவழக்கங்கள் முற்றிலும் மாறிப்போயின மேலும் எவரும் பிராமணியத்தை கடைபிடிப்பதில்லை அப்படி இருக்க இவர்களுக்கு எதற்கு பூணூல் என்ற அடையலாம்??? இவர்கள் சகமனிதர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை காஞ்சிபுரம் மற்றும் ராமானுஜர் பிறந்த ஊரான திருப்பெரும்புதூர் சென்று பாருங்கள் கீழ்த்தட்டு மக்களை இந்த பார்ப்பனக்கூட்டம் இன்றுவரை எப்படி ஏமாற்றுகிறது என்பதை பார்த்துவிட்டு இங்கே கருத்துக்கூறினால் நல்லது .எதற்கு மக்களை திசை திருப்புகிறீர்கள் மக்களை சிந்திக்கவிடுங்கள் பிறகு தானே சரியாகிவிடும் மேலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் காலம் வரும் வரையில் இந்த ஏற்றத்தாழ்வை இந்த கூட்டம் விடாமல் நடத்துவார்கள் பிறகு எதற்கு பொதுநலம் பற்றி பேசுகிறீர்கள் கந்தன் சென்னை

 • amaresan ganesan - melbourne,ஆஸ்திரேலியா

  அது போன தலைமுறை .இப்போ பிராமணர் இருக்குமிடம் அமைதி என்றால் மற்றவர்கள் இருக்குமிடம் என்ன சந்தையா? நீங்க போயி மேலே உக்கார்ந்து சொல்லுங்கள் கேட்கிறார்களா என்று பார்ப்போம்

 • murali - Chennai,இந்தியா

  முஸ்லீம் வீட்டில் பிரியாணி சாப்பிட்டு வீட்டிற்கு பார்சல் கட்டிக்கொண்டு வந்த தலைவர் ஒருவர் உள்ளார்.

Advertisement