Advertisement

ஊழல் நாடுகள் பட்டியல் முதலிடத்தில் இந்தியா:ஆனால் மோடி அரசு ‛ஓகே'

புதுடில்லி: ஆசிய கண்டத்தில் ஊழல் மலிந்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஊழல் ஒழிப்பில் திறம்பட செயல்பட்டுவருவதாக இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் சர்வே நடத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரான்பரன்சி இன்டர்நேசனல் எனும் சர்வதேச அமைப்பு, ஆசிய கண்டத்தில் அதிக ஊழல் மலிந்துள்ள நாடுகள் குறித்த கருத்துக்கணிப்பை மக்கள் மற்றும் ஊழல் - ஆசிய பசிபிக் - குளோபல் ஊழல் பாரோமீட்டர் என்ற தலைப்பில் அறிக்கையாக வெளியிட்டது.
2015ம் ஆண்டு ஜூலை முதல் 2017ம் ஆண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்தில் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகளில் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகள் பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதா என்பதனடிப்படையிலான கருத்துக்கணிப்பின்படி, ஊழல் பட்டியலில் இந்தியா (69 சதவீதம்) முதலிடத்திலும், ஜப்பான் (0.2 சதவீதம்) கடைசி இடத்திலும் உள்ளது.
இந்தியா ஊழல் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், மோடி தலைமையிலான மத்திய அரசு, ஊழல் ஒழிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு நேர்மாறாக, தென்கொரியா நாடு, ஊழல் பட்டியலில் பின்தங்கி இருந்தாலும், ஊழல் ஒழிப்பில் தங்கள் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்று அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (175)

 • Mano - Madurai,இந்தியா

  ஆனால் மோடி அரசு ஓகே. கேவலமா இருக்கு .

 • bal - chennai,இந்தியா

  இது இந்திய ரத்தத்தில் ஊறிய ஒரு விஷயம். இதை மாற்ற ஓர் நடு நிலை மக்கள் ஜனநாயகம் வேண்டும் அல்லது ராணுவ ஆட்சி வேண்டும்

 • Cheran - Kongu seemai,இந்தியா

  மாப்பிளை அவர்தான் ஆனால் போட்டு இருக்குற சட்டை என்னுது அப்படி இருக்கு இந்த செய்தி.

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  ஊழலுக்கு எதிரானவர்கள் என்ற கருத்தை விளம்பரமாகவே தான் பார்க்க முடியும். 500 1000 ருபாய் நோட்டுக்கள் பிடி பட்டவர்கள் அதிகம் பேர் பி ஜே பியினர், அந்த இருண்ட நாட்களில் பல நூறு கோடிகள் சிலவு செய்து தன் வீட்டு திருமணங்களையும் நடத்தியவர்களும் இவர்களே, இப்போதெல்லாம் நடக்க கூடிய ரைடுகளின் உண்மை நிலவரங்கள் வெளிவராமல் அதற்கானவர்களை மிரட்டி அடிபணிய வைப்பதுபோல் தான் நிகழ்வுகள் நடைபெறுகின்றது. அவர்களின் மன்ற உறுப்பினர்களின் சொத்து கணக்குகளை கேட்பதுபோல் விளம்பரம் ஆனது, அதில் எத்தனை உறுப்பினர்கள் கணக்கை காண்பித்தார்கள்?

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  இல்லை இதுமுட்டாள்தனமான் கணக்கு எடுப்பு? சில அரசியல் விக்ஷகிருகிகளால் ஏவபட்ட ஏவுகணை அவ்வளவுதான்?

 • Marshal Thampi - Nagercoil,இந்தியா

  ஊழலை ஒழிப்போம், கருப்பு பணத்தை வெளி நாட்டில் இருந்து கொண்டுவந்து ஒவொரு தனி மனிதனின் வங்கிக்கணக்கில் ரூ 15 லக்ஷம் போடுவேன் "அச்ச தின் ஆஏக " என்று சொன்னாரே திருவாளர் மோடி அவர்கள். இதுதானா அச்ச தின்ஆ. மக்களை அறியாமையில் இட்டு செல்கிறார். இதற்க்கு திரு மோடி பதில் சொல்ல வேண்டும்.

 • Krishna Iyer Bomkitchu - MUMBAI,இந்தியா

  இந்தியாவில் புதுச்சேரி தான் ஊழலில் முதலிடம் .

 • Sivaprakasam Manickam - Chennai,இந்தியா

  சில கருத்துக்களை தினமலர் பிரசுரிப்பது இல்லை அந்த கருத்து யாரையும் புண்படுத்ததாக இருந்தாலும் கூட.

 • Sivaprakasam Manickam - Chennai,இந்தியா

  மீடியாக்கள் என்றாவது ஒரு சாமானியனை பேட்டி எடுத்திருக்கிறதா? ஊழல் ஒரு சாமானியனை எப்படி பாடாய் படுத்துகிறது என்பதை அனுபவித்து உணர்ந்தவன்மட்டுமே நன்றாக விளக்கி சொல்ல முடியும். இந்தியா ஊழலில் முதலிடத்தில் இருக்கிறது என்பது நூறுசதவிகிதம் உண்மை உண்மை.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  வெளங்கிரும் . வளரும் நாடுகள் பட்டியலிலிருந்து மோடி வீழ்த்திவிட்டார் இந்தியாவை . இப்போது ஊழலின் உச்சத்தில் . அதுஎப்படி மோடி வேண்டும் ஊழல் வேண்டாம் ? மோடி என்றால் ஊழல் என்கிறது ஆய்வு . இப்படி இருந்தால் மோடியால் இந்தியா சீரழியும் . சீக்கிரம் மோடியை அமித்ஷா கழட்டி விட்டு உ பி சாமிக்கு பிரதமராக அபிஷேகம் செய்து மோடியை குஜராத் அளவில் அடக்கிவைக்க CM ஆக்கிடவேண்டும் . எல்லாத்துறையிலும் மோடியால் வீழ்ந்து கிடக்கும் நாடு ?

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  காங்கிரஸ், அ.தி.மு.க, தி.மு.க வுக்கு வாழ்த்துக்கள் நம் நாட்டை முதலிடமாக ஆக்கியதற்காக??????????????????

 • தேவி தாசன் - chennai,இந்தியா

  காசு கொடுத்து கணக்கு எடுத்தது பிஜேபி விளங்காத கட்சி

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் மீத்தேன் பணிகளை தொடங்கி கிராமத்தை விட்டு விரட்டும் மக்களை பற்றிய ஒரு செய்தியும் காணோம். ஊடகங்கள் எல்லாம் மத்திய அரசின் கைப்பாவைகளாக இருப்பது வருந்த தக்க செய்தி

 • mohan - chennai,இந்தியா

  அது தான் இங்கே பொருளே வாங்க வில்லை. பொருள் வாங்கியதாத கணக்கு காண்பிக்க படுகிறது. எப்பேர்ப்பட்ட மோசடி செயல்... எது எப்படி இருந்தாலும், அது மக்கள் தவறு... என்றைக்கு இலவசம் ஒழியுதோ அன்றைக்கு தான் விடிவுகாலம். தமிழ் ஆங்கிலம், துறை சார்ந்த அறிவு தெரிந்த நபர் தான் அரசியலுக்கு வர வேண்டும்...

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  அதிமுகவை பிளந்தது ஊழல் தான்... ரெட்டை இலையையை முடக்கியதும் ஊழல்தான்..தினகரனை பொய் கேஸ் போட்டு ஜெயிலில் அடைத்தது ஊழல்தான்.. பன்னீர்செல்வமும் சேகர் ரெட்டியும் கூட்டாளிகள் என்று தெரிந்தும் அவரை பிஜேபி ஆதரித்தது ஊழல் தான்...rk நகர் தேர்தலை இன்னமும் நடத்தாமலிருப்பது ஊழல்தான்.. தமிழக அரசை பயமுறுத்தி தமிழ் நாட்டின் உரிமைகளை நசுக்க பார்ப்பதும் ஊழல்தான்... உபியில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்து விட்டு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்ததும் ஊழல்தான்...ஹைட்ரொ கார்பன் திட்டத்தை மக்கள் எதிர்ப்பை மீறி கொண்டு வர நினைப்பதும் ஊழல்தான்...செல்லாத ரூபாய் நோட்டு எவ்வளவு வந்தது என்று இதுவரை சொல்லாதிருப்பதும் ஊழல்தான்.. மல்லையாவை தப்பிவிட்டதும் ஊழல்தான்...முடிகிள் ஒரு சட்டம் போட்டு விட்டு பின் அதில் மீண்டும் மீண்டும் திருத்தம் கொண்டு வருவதும் ஊழல்தான்.. இந்தனை ஊழலுக்கும் சொந்தக்காரர்கள் பிஜேபி தான்.....பிஜேபி தான்...

 • Snake Babu - Salem,இந்தியா

  ஒரு வகையில் காங் ம் திமுகாவையும் கண்டிப்பாக பாராட்டலாம், அதிக ஊழல், லஞ்சம் என்று இருந்தாலும் பணம் நன்றாக பரவி இருந்தது, நிறைய தொழில்களும் பெருகின, வேலையில்லா திண்டாட்டம் என்பது அவ்வளவாக இல்லை, எல்லாவற்றிற்கும் காரணம் பணம் நன்றாக வெளியே திரிந்துகொண்டிருந்ததால், பணத்தை அடிக்கனும்னே சில திட்டங்கள். இதனால் பலருக்கு வேலை சிலருக்கு கொள்ளை, மன்மோகன் சிங் பொருளாதாரம் வீழ்ந்திருந்த நேரத்திலும் பொருளாதாரத்தை இந்தியாவில் நிலைநிறுத்தினார். தற்போதைய ஆட்சியில் அவனவன் பயப்படுறான், பணத்தை வெளியில காண்பிச்சா போதும் உடனே நாலாப்பக்கத்திலிருந்து ஓடி வருகிறார்கள். எதனா திட்டமான கமிஷன் எவ்வளவு என்று அதிகாரிகளும் அரசியாவாதிகளும் ஓடி வருகிறார்கள் திட்டத்தை கொண்டு வருவாங்க ஓடியே போறாங்க. அய்யா நிர்வாக திறமை என்ற ஒன்று வேண்டும் அதை கொண்டு நாட்டில் பொருளாதாரத்தை பெருக்கவேண்டும் அதை விடுத்து வரியை மட்டுமே அதிகரிக்க செய்து இருக்கும் நடுத்தர மற்றும் ஏழை பாழைகளிடம் அதிரடியாய் புடுக்குறது. மேலேகிறவம் அப்படியே வைத்துக்கொண்டு என்ஜோய் பண்ணுகிறான். அடுத்த நம்ம விளம்பர பிரியர், செலஃபீ பிரியர், இருக்கவங்களுக்கு சொத்து சுகம் மேல் ஆசை இருக்கும் போது இவருக்கு ஊர் சுற்றவேண்டும், வித விதமாக ஆடை உடுத்தி செலஃபீ எடுத்துக்கொள்ளவேண்டும் இது ஒரு கூட்டமே ஆதரவே இதை யாரவது கேள்வி எழுப்புவார்கள் என்று பார்த்து மாட்டிறைச்சி என்பார்கள் பயங்கரவாதம் என்பார்கள் இல்லேன இருக்கவே இருக்கு பாகிஸ்தான் காழமீர் இப்படிப்பேசியே குறைக்காலத்தையும் ஓடிவிடுவார்கள், உடனே அவனவன் பரபரப்பை பேசவந்துடுவாங்க ............... வாங்க வந்து மூர்க்கன் இத்தாலிக்காரன் புதுசா ஒன்னு பாவாடை இப்படி திட்டிவிட்டு Samantha சம்மந்தம் இல்லாமல் ஒரு வாந்தி எடுத்துவிட்டு போங்கள், யாருக்காவது விவாதம் செய்யவேடும் என்று இருந்தால் எரிபொருள் விலை -( கஜ்ஜா பொருள் விலை குறைந்தபோதும்) . வேலையில்லா திண்டாட்டம் (கொஞ்சம் உங்கள் அலுவலக ஆட்கள் எண்ணிக்கையி மாறியிருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்துவிட்டு ) விலைவாசி - உடனே வருடாவருடம் சம்பளம் இருக்கிறது என்று கூறாதீர்கள் இங்கு நிறைய பேருக்கு பல வருஷமா சம்பளம் ஏறவில்லை, எப்படி பல விஷயங்கள் இருக்கிறது இதை பற்றி விவாதிக்க விரும்பினால் விவா திக்க நான் தாயார். நன்றி வாழ்க வளமுடன்

 • Arjun - Chennai,இந்தியா

  'மூன்றாண்டு சாதனை' - தினமலர் இதை சொன்னால், ndtv நிலைமைதான்...அதனால் தான், இப்படி ஒரு 'பின் குறிப்பு' :-)

 • santha kumar - ruwi,ஓமன்

  நான் பலதடவை என் கருத்தை பதிவு செய்தேன். இவர்கள் கமலஹாசனை யும் மிஞ்சிய நடிகர்கள் என்று. உண்மையில் மன்மோகன் ஆட்சிதான் சிறந்தது. சிறு எடுத்துக்காட்டு.: அவர் ஆட்சியில் உலக பொருளாதாரம் படு மோசமாக இருந்தது , அந்த சமயத்தில் Dubai , America உள்பட பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நடுகல் பல கஷ்டங்களை அனுபவித்தது. இன்னும் துபாய் இல் பல பெரிய கம்பெனி, பேங்க் மூடியே விட்டார்கள். கச்சா என்னை அதிகம் இருந்தது. இப்பொழுது நிலைமை பாருங்கள். அந்த சமயம் இருந்த உலக பொருளாதார நெருக்கடியோ, இல்லை கச்சா எண்ணெய் விலை என்றமோ இப்பொழுது வந்தால் , அயோ நினைக்கவே பயமாக உள்ளது. 2014 பின் பிஜேபி ஆதரவாளர்கள் சொல்லும்படி எதாவது ஒரு நல்ல செய்தியை சொல்ல முடியுமா.

 • Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா

  மக்கள் லஞ்சம் வாங்கி ஒட்டு போடும் வரையிலும், மேலும் அரிச்சுவடி பள்ளி காலம் தொட்டு கடைசி காலம் வரையிலும் இலவசங்களை எதிர்பார்த்து போய்க்கொண்டே இருந்தால் நாம்தான் முதலிடத்திலேயே இருப்போம். இயலாதவர்கள் இலவச சலுகை பெறுவதில் தவறில்லை ஆனால் எல்லாம் உள்ளவர்களும் கையேந்துவதில்தான் தவறு உள்ளது.

 • velan - california,யூ.எஸ்.ஏ

  வாயில வடை சுடுகிறார் திரு ஜி. கடைசியில காங்கிரசை போல இவர்களும் ஒரு ஆணியும் புடுங்கள சும்மா எல்லா கட்சிகளும் வாய்பேச்சுதான் கம்யூனிஸ்ட் தானும் வாழ மாட்டார்கள் அடுத்தவர்களையும் வாழ விட மாட்டார்கள். எதையுமே தவறு என்பார்கள் காங்கிரஸ் இடது பக்கம் என்றால் பி.ஜே.பி., வலது பக்கம் இந்திய மக்கள் எழுச்சி வராதவரை ஒன்றும் மாறாது

 • hasan - tamilnadu,இந்தியா

  கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் உள்ளது தினமலரின் கூற்று.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  முதல் இடம்னு சொன்னால் மக்களுக்கு எப்போதுமே சந்தோஷம்தான்.

 • A shanmugam - VELLORE,இந்தியா

  ஊழல் பட்டியல் இந்திய முதல் இடத்தை வகிக்கவில்லை என்றாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு கொலை ஆகிய கொடூர செயலயில் இந்தியா என்றுமே "முதல்" இடத்தில் வகிக்கிறது. கின்னஸ் புத்தகத்தில்தான் இன்னும் இடம் பெறவில்லை.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  60 வருடங்களாக தீனி போட்டு வளர்த்த ஊழலை ஒன்றிரண்டு ஆண்டுகளில் ஒழிக்க முடியும் என்பது பகல் கனவு , அப்படி ஒழிப்பதற்கு இது சர்வாதிகார நாடு அல்ல , சட்ட திட்டத்தை தானிச்சையாக மாற்ற. ஊழலை முழுவதுமாக ஒழிப்பதற்குரிய நடைமுறைகளை வேகமாக செயல்படுத்தி கொண்டிருக்கிறது மோடி அரசு. மத்திய அரசு சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டன , RTI கூட ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் , அதற்குரிய கட்டணமும் ஆன்லைனிலேயே கட்டலாம் , பாஸ்போர்ட் , பான் கார்டு , வாக்காளர் அடையாள அட்டை அனைத்தும் வலைத்தளத்தில் விண்ணப்பித்து பெற்று கொள்ளும் முறையில் ஊழல் ஒழிக்கப்பட்டிருக்கிறது , அதேபோல மாநில அரசும் தங்களின் சேவைகளை உடனடியாக டிஜிட்டல் முறையில் மாற்றவேண்டும் , இன்னமும் அரசு அலுவலகம் சென்று அவர்களின் தயவை நாடி , பணம் கொடுத்து சேவை பெறும் முறைதான் இருக்கிறது தமிழ்நாட்டில் , வெட்கக்கேடு, நிலப்பத்திர அலுவலகத்தில் தான் அதிகமான ஊழல் நடக்கிறது.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  ஊழல் என்பது முறைகேடாகப் பணம் அல்லது நிலம் அல்லது பொருட்களாக "அன்பளிப்புகள்" பெறுவது அல்லது சம்பாதிப்பது, இவைதான் .... செய்தியிலும் சரி வாசகர்கள் பலரின் புரிதலிலும் சரி ..... ஊழல் என்றாலே லஞ்சம் என்று எண்ணிக்கொண்டுள்ளார்கள் ..... லஞ்சம் என்பதை ஊழலின் ஒரு அங்கமாக வேண்டுமானால் சொல்லலாம் ....

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  இப்படி ஒரு பட்டியல் வரும் அப்டின்னு தெரிஞ்சிருந்தா , அவங்களுக்கும் காசு கொடுத்து , பட்டியல் வரிசைய மாற்றி போடா சொல்லி இருப்பாங்க

 • ChittoorRamanathanKrishnamurthy -

  It is not clear as to the period to which it relates. Since the ranking is no.1 it should be for the period 2009-14 of UPA. If it is for the later years the ranking lacks in credibility.

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  டிஜிட்டல் இந்தியாவில் ஊழலா? அது எப்படி சாத்தியம்

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  லஞ்சம், தொழில் முடக்கம், வேலையில்லா திண்டாட்டம்... ஆகியவையே மோடி அய்யாவின் சாதனை... 3 வருடத்தில் ஒரு கட்டடம் கூட கட்டப்படவில்லை... அடிப்படை கட்டுமான வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை..2G ல , நிலக்கரியில பல லட்சம் கோடி ஊழல் காங் ஆட்சில , நாங்க வந்தா வருமானம் பிச்சிக்கும்ன்னு சொன்னாங்க... வந்து 3 வருஷம் ஆகுது?.. என்ன வருமானம் வந்தது?.. என்ன செலவு பண்ணினீங்க?.. தொழில்சாலை ஒண்ணாவது தொடங்கியுள்ளீர்களா?.. விவசாயம், கல்வி, மருத்துவ சேவை , ரயில்வே துறையில் எதனை கிழித்தீர்கள்?.. ரூபாய் நோட்டு முடக்கம் மூலம் வந்த கருப்பு பணம் எவ்வளவு?.. அதில் மக்களுக்கு என்ன செய்தீர்களா? நதிகளை இணைத்தீர்களா?.. வெளிநாட்டு கருப்பு பணத்தை மீட்டு ஆளுக்கு 15 லட்சம் கொடுக்கலாம் என்று பீத்தினீர்களே ? ஒரு பைசா , வெளிநாட்டு கருப்பு பணத்தை , இந்தியாவுக்கு கொண்டு வந்தீர்களா.. ?/?/

 • மன்னைபாரதி - காட்டுமன்னார்கோயில்,இந்தியா

  ஊழலில் முதலிடம், இந்த செர்வே இந்த ஆண்டில் எடுக்கப்பட்டது என்றால் இந்த ஆண்டில் யார் பிரதமரோ அவர்தான் பொறுப்பேற்கவேண்டும், ஏனெனில் 3 ஆண்டு முடிந்தாகிவிட்டது , இனியும் இப்போதான் ஆட்சிக்கு வந்தோம் சரிசெய்துவிடுகிறோம் என்று சொல்வதும், மோடி முயற்சிக்கிறார் என்று தினமலர் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது.. சந்திராயன் திட்டம் மன்மோகன் காலத்தில் தொடங்கப்பட்டு மோடி வந்ததும் அனுப்ப பட்டபோது ஏதோ நாங்கள்தான் செய்தோம் என்று மார் தட்டும் பா.ஜ.க மற்றும் மோடி ஆதரவு பத்திரிகைகள், இதையும் தம்பட்டம் அடித்துக்கொள்ள வேண்டும் சாதனையாக..

 • Ravindran Gururajan - Chennai,இந்தியா

  அரசாங்க வேலை நடக்க ஒவ்வொரு துறையிலும் இவ்வளவு லஞ்சம் தரவேண்டும் என்று பலகை வைத்துவிட்டால் வேலை சுலபமாக முடியும். பட்டா பெற ஐநூறு, ஜாதி சான்றிதழ் பெற இருநூற்று ஐம்பது, வில்லங்க சான்றிதழ் பெற எழுநூற்று ஐம்பது, ரோடு ஒப்பந்தம் பெற பத்தாயிரம், கவுன்சிலர் சீட்டு பெற இருபது லக்ஷம், சட்டமன்ற உறுப்பினராக இருபது கோடி, நாடாளுமன்ற உறுப்பினராக ஐம்பது கோடி என்று ரேட் வைத்தால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும், மக்களுக்கும் நேரம் மிச்சப்படும், வேலையும் சீக்கிரமாக முடியும். லஞ்சத்தை யாராலும் ஒழிக்கவே முடியாது.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  1000ஐ முடக்கி 2000 கொண்டுவந்த பின்னர் , சின்ன விஷயத்துக்கு கூட முன்னாடி 1000 லஞ்சம் வாங்கினவங்க எல்லாம், இப்போ 2000 கேட்கிறான்... மோடி அய்யாவின் மகத்தான சாதனை இது...

 • jey - Bangalore,இந்தியா

  ஊழலில் முதலிடம் அப்டிங்கிறதா மாத்தி சொல்லிருப்பிங்க........

 • jey - Bangalore,இந்தியா

  நம்ப முடியலையே...........

 • S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா

  ஆனால் மோடி அரசு ‛ஓகே' இது தினமலர் கொடுத்த சர்டிபிகேட்

 • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

  ////ஊழல் நாடுகள் பட்டியல் முதலிடத்தில் இந்தியா/// ஹைய்யா.... இந்தியாவுக்கு முதலிடம்... பாருப்பா... நம்ம இந்தியாதாய்யா... எல்லாத்துலேயும் முதலிடம்...? ஏன்னா..? படிச்சவங்க அதிகமாகிகிட்டே வராங்கள்ளே... அதுதான்..? “மகிழ்ச்சி”...? “இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்”...?

 • KrishnaMurthy -

  மோடி அரசு காலி அடுத்த தேர்தலில்

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  வரவர இங்கு கருத்து பகுதிகளில், பாஜகவுக்கு. மோடிக்கு எதிர்மறையான கருத்துக்கள் அதிகமாகியுள்ளன... தேஷ் நேஷ் ,இடவை, மேவரிக்கன், அண்ணாமலையான், மாரப்ப கவுண்டன் ... இப்படி விரல் விட்டு என்ன கூடியவர்கள் தான் , இன்னமும் தூக்கி பிடித்து கொண்டுள்ளனர்.... இது மோடியின் 3 ஆண்டுகால தோல்வியை பட்டவர்த்தனமாக எடுத்துச் சொல்கிறது...

 • Prabaharan - nagercoil,இந்தியா

  தமிழ்நாடே ஊழலில் மிதக்கிறது . நடவடிக்கை இல்லை. இப்படி இருந்தால் முதலிடம் கிடைக்காதா?

 • saleem kathar - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்

  மாப்ப்பிள்ளை இவருதான் ஆனால் அவரு போட்டிருக்கிற சட்டை என்னதில்லை

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  ஆய்வு முடிவு வைகோ அவர்கள் "ஊழலற்ற ஆட்சி" என்று சமீபத்தில் மத்திய பாஜக ஆட்சிக்கு சர்ட்டிபிகேட் கொடுத்ததற்கு மாறாக உள்ளதே ?????

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று கூவ முடிந்த மோதியால் ஊழல் இல்லாத இந்தியா என்று கூவ முடியலையே

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  \\\\ தென்கொரியா நாடு, ஊழல் பட்டியலில் பின்தங்கி இருந்தாலும், ஊழல் ஒழிப்பில் தங்கள் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்று அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். //// என்னைக் கவர்ந்தவை இந்த வரிகளே .... தென்கொரிய மக்களே மக்கள் .....

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  ஒண்ணுமே புரியலை. மூணு வருசத்துல ஊழலை மொத்தமா விரட்டி அடிச்சு ஒழிச்சுப்புட்டோம்ன்னு பத்து நாளைக்கு முன்னாடிதான் எல்லா பேப்பர்லேயும் போட்டு இருந்தாங்க. இன்னிக்கு என்னடான்னா முதலிடத்துல நாங்க இருக்கோம்ன்னு பெருமையா சொல்றாங்க. எப்படியோபங்களாதேஷ் பாகிஸ்தானை விஞ்சிட்டோம். அது உண்மையான மூன்றாண்டு சாதனை.

 • DHASARATHAN - queenstown,சிங்கப்பூர்

  இங்கே ஊழல் என்பது மத்திய அரசின் மீதானதல்ல. மாநில அரசுகளின் மீதானது. கல்வி, சுகாதாரம் எல்லாம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் தானே வருகிறது? எல்லாவற்றிற்கும் மோடி மீது தான் பழி சுமத்துவீர்களா? நீங்கள் காசு வாங்கி கொண்டு ஒட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் மாநில அரசுகள் ஊழல் செய்வதில்லையா? அரசு அதிகாரிகள் எல்லாம் உங்களில் ஒருவன் தானே? அவன் லஞ்சம் வாங்கினாலும் அது மோடியின் குற்றமா?

 • anvar - paramakudi,இந்தியா

  ஊழல் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா. இந்தியாவை ஆள்வது என்ன காங்கிரஸா????

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  என்ன பண்ண பேராசை பிடித்த மக்கள் இருக்க வரைக்கும் , ஊழலை கட்டு படுத்த முடியாது , அப்படியா யாரவது நல்லது செய்ய வந்துவிட்டா அவர்களே நசுக்கி விடும் இப்பொழுது உள்ள சமூகம் ஊழல் பெருச்சாளிகளை பிடிக்க IT ரைட் நடத்தினால் அதையும் அரசியலாக்கி அவர்களை உத்தமர் ரேஞ்சிக்கு தூக்கி வெச்சு பேசும் சமூகம் இருக்க வரைக்கும் ஒன்னும் செய்யமுடியாது

 • SK Kumar - Chennai,இந்தியா

  Being Good PM is not sufficient for nation .he should have capability to control this. Otherwise he is not sui for being a PM. Implementation must start with A B C D not directly to X Y Z. First Being an Indian PM he as to use Indian made product. Equipment, & Cars etc... Now our PM is controlees & Powerless. Only giving importance to Political party & Designation.

 • Karuppu Samy - MRT,சிங்கப்பூர்

  அது எப்படி? கல்வி, சுகாதாரம் துறையா? அட கொய்யாலே அந்த துறைகள்தான் மிக மிக மோசமாக லஞ்சம் கொடி கட்டி பறக்கிறது.அப்புறம் மோடி ஒகே யா? என்னா ஒகே? ஆமா இந்த அறிக்கைக்கு எவ்ளோம் பணம் கொடுத்தாக? அடிப்படையில் எந்த மாற்றமும் வரலே ஊழல் இப்போ வணிக ரீதியா வெளிப்படையா நடக்குது அதன் ஒரு பகுதி எந்த ATM க்கு போனாலும் PerTransக்கு Rs25 பிடித்தம்.பெட்ரோல் போட கார்டை பயன்படுத்தினா 2.8% cut

 • Jayaraman Ravichandra - CHENNAI,பஹ்ரைன்

  இது போங்கு, வட நாட்டு ஊடகங்களும், தினமலர் போன்ற மோடியின் அடி வருடிகளும் விடும் கப்ஸா,ஜீ டீ பீ மதிப்பு சரிந்து விட்டது.

 • thiruve - ,

  அடுத்தவாட்டி transparency international president ஐப்பார்த்து காசு கொடுத்துருவம்லா....அப்டிேய புடிச்சாலும் சாமீன்லயும் வெளிலவந்துருவோம்.நாங்க உண்மையான சனநாயக வாதிங்கள்ள

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  ஊழல்வாதிகளுக்கு மரண தண்டனை ஒன்றே ஊழலை ஒழிக்க ஒரே தீர்வு. நிறைவேற்றுமா அரசுகள்?

 • Mja Mayiladuthurai - chennai,இந்தியா

  பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பதுபோல உள்ளது உங்களின் தலைப்பு. வளரும் நாடுகளின் பட்டியலிலிருந்து நம் நாடு இந்தியா நீக்கப்பட்டதற்கு மோடி அரசுதான் காரணம். இங்கே நிர்வாகம் சரியில்லை என்பதால்தானே வளர்ச்சி குறைந்துள்ளது அப்படியிருக்க மக்கள் எப்படி மோடி நிர்வாகம் ஓகே என்று சொல்லுவார்கள் அவர்கள் என்ன முட்டாள்களா. தினமலர் எப்படியாவது மோடி அரசுக்கு வக்காலத்துவாங்க நினைப்பதில் தப்பில்லை ஆனால் நிலைமை நாளுக்கு நாள் மோசமாக ஆகிறது. உலக பிரசித்தி பெற்ற 100 தலைவர்களில் முதல் பத்து இடத்தில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மோடி நூறு பேர் லிஸ்டிலேயே இல்லாமல் போன பிறகும் மக்கள் அவரை விரும்புகிறார்கள் என்று கூறுவது வேடிக்கையானது. பிஜேபியினரே இப்ப அவரை விடுத்து அத்வானிக்கு தாவுவதாக தகவல் வந்து கொண்டிருக்கின்றன அவ்வாறிருக்க உங்களின் இந்த சமாளிபிகேஷன் நகைப்பிற்கு உரியது.

 • thiruve - ,

  மக்கள் காசு கொடுக்கும்வரை வாங்குபவர்கள் மறுப்பார்களா என்ன?குடி எவ்வழியோ கோன் அவ்வழி।

 • Rockie-பாலியல் ஜனதா கட்சி - Nellai,இந்தியா

  நல்ல நிர்வாகமும் ஊழலில் முதலிடத்திலும் எப்படி இருக்கமுடியும்? புரியவில்லை

 • Rockie-பாலியல் ஜனதா கட்சி - Nellai,இந்தியா

  மோடிஜியோட லெவெலே வேற அவரோட dealing எல்லாமே அம்பானிகளோடும் அடானிகளோடும்தான்.

 • kuruvi - chennai,இந்தியா

  ஊழலை ஒழித்தால் இந்தியா ஏழை நாடாகிவிடும் ....

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  பிஜேபி ஆளாத மாநிலங்களின் ஊழலை ஒழிப்பதில் பிஜேபி அரசு முனைப்பு காட்டுகிறது...பிஜேபி ஆளும் மாநிலங்களின் ஊழலை ஒளிக்க(மறைக்க) முயல்கிறது .. பிஜேபி ஆளும் மாநிலங்களில் புத்தரும் அவர் சீடர்களும் ஆட்சி செய்யவில்லை...அவர்களும் களவாணிகள்தான்...

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  மோடி அரசு IT ரைடில் ஆர்வம் காட்டுவதைப்போல் ஊழல் தடுப்பில் காட்டுவதில்லை என்று தான் மக்கள் பேசிக்கொள்கிறார்கள்., முதலிடம் இருக்க காரணம் காங்கிரஸ் தான் என்று சொல்லிக்கொண்டிருக்கும் அலப்பறைகள் 3 ஆண்டில் எத்தனை வழக்குகள் பதியப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டது என்று சொல்லுங்கள்.கல்வியும் சுகாதாரமும் மாநிலப்பட்டியலில் என்று சொன்னாலும் பெரும்பாலான மாநிலங்களில் பிஜேபி அரசு தானே உள்ளது., இனி புது சர்வே வரும் அதில் தமிழகம் தான் முதலிடம் என்று சொல்லுவார்கள் அப்படி சொல்லியாவது மோடிஅரசு தப்பித்து கொள்ளும்.

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  மோடி அவர்கள் தனிப்பட்ட முறையிலும், அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் அமைச்சரவை செயல்பாடுகளில் லஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுகிறார்..பார்த்துக் கொள்ள முடியும்..அவரது குடும்பத்தார் என்று சொல்லிக் கொண்டு யாரையும் ஆட்சி அதிகாரத்தில் சேர்ப்பதில்லை......மற்றபடி, அதிகாரிகள் மத்தியில் இருக்கும் லஞ்சம் தங்கு தடை இன்றி தொடருகிறது...மக்களும் இந்த லஞ்ச லாவண்யத்தையே விரும்புகிறார்கள்....தனி மனித ஒழுக்கம் இருந்தால் ஒழிய இந்த லஞ்ச அசிங்கத்தை ஒழிக்க முடியாது....

 • jaikrish - LONDON,யுனைடெட் கிங்டம்

  துட்டுக்கு ஓட்டை விற்றவர்கள்...என்ன கொடுமைகள் நடந்தாலும் ஏற்று கொண்டுதான் ஆகவேண்டும்.

 • Prabaharan - nagercoil,இந்தியா

  மோடி அரசு திறம்பட செயல்படுகிறது. ஆனால் ஊழலில் முதல் இடம். இது எப்படி? ஆபரேஷன் சக்ஸஸ். நோயாளி அவுட் மாதிரியா?

 • tamilan -

  dinamalar u r loosing your reputation

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  தினமலர் தன் சின்னத்திற்கு ஏற்றாற்போல் செய்தி வெளியிடுகிறது , இதற்கு பெயர் தான் பத்திரிக்கை தர்மம் , மக்களை எப்படி எல்லாம் ஊடகம் திசை திருப்புகிறது என்பதற்கு இந்த ஒரு கட்டுரையே சான்று

 • venkatesh -

  congrats for taking our country to great heights the number one rank in Asia.it is a day to rejoice for the people who have made our country proud with such a dubious distinction.let those men and women who take bribe understand that they are worse than pimps and whores.

 • senthil - chennai,இந்தியா

  மூன்று வருடம் ஆண்டு ஒன்றையும் கிழிக்காத மோடி மீது எப்படி திருப்தி.....தினமலரின் ஜால்ரா

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  060 0 வருடம் வளர்த்த ஊழல் மூன்று வருடத்தில் ஒழிப்பது கடினம் .மோடி தலைமையிலான மத்திய அரசு, ஊழல் ஒழிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு நேர்மாறாக, தென்கொரியா நாடு, ஊழல் பட்டியலில் பின்தங்கி இருந்தாலும், ஊழல் ஒழிப்பில் தங்கள் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்று அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மோடி தலைமையிலான மத்திய அரசு, ஊழல் ஒழிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு நேர்மாறாக, தென்கொரியா நாடு, ஊழல் பட்டியலில் பின்தங்கி இருந்தாலும், ஊழல் ஒழிப்பில் தங்கள் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்று அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 • arudra1951 - Madurai,இந்தியா

  நாம் இந்தியர் என்று பெருமை கொள்வோம்

 • venkatesh -

  congrats at least in one field we stand first.....in corruption.every Indian must hang his head in shame .a man who takes bribe is worse than a pimp and a woman who takes bribe is no less than a whore.let those who take bribe decide who they are.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  லஞ்சம் கொடுப்பதை முழுவதும் தவிர்ப்பது நலம். கொடுத்துவிட்டு காட்டிக்கொடுப்பது அதைவிட நல்லது.

 • Selvam Palanisamy - Thiruthangal,இந்தியா

  அதிருப்தி என்று போடுவதற்கு பதிலாக தலைப்பில் திருப்தி என்று போடப்பட்டுள்ளது. முதலில் அதனை மாற்றுங்கள்.

 • Sampath Kumar - chennai,இந்தியா

  மோடி அரசு திறம்பட ????? அப்புறம் எப்டி முதல் இடம் ???? எங்கயோ இடிக்குது

 • Sandru - Chennai,இந்தியா

  மோடி ஊழல் செய்யவில்லையா? அல்லது இது வரை அவர் செய்த ஊழல்கள் வெளிவரவில்லையா? மோடி அரசு விவசாயிகளை புறக்கணித்து சாகடித்து அதானி, அம்பானிகள் செல்வம் பெருக்க துணை போவது ஊழல் இல்லையா? பிஜேபி கட்சியினருக்கு மாத்திரம் முன்கூட்டியே ரூபாய் நோட்டு மாற்றம் பற்றி தகவல் கொடுத்தது அரசாங்கம் செய்த மாபெரும் ஊழல் இல்லையா? இது நான் மக்களுக்காக தவ வாழ்க்கை வாழ்கிறேன் என்று ஜெயா அறிவித்தது போல் இருக்கிறது.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  அரசும் மக்களும் ஒரே பாதையில் பயணிக்கின்றனர்.. ஜெய் ஹோ.. வந்தே மாதரம்.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  "ஊழல்நாடு பட்டியலில் முதலிடம்,அரசும் மக்களும் திருப்தி" என தலைப்பு செய்தி இருக்கவேண்டும்..

 • Danger dani - madurai,இந்தியா

  மக்கள் திருப்தியா? என்ன கொடுமைடா சாமி . headline அ கொஞ்சம் correct ஆ போடுங்கப்பா ....

 • balakrishnan - coimbatore,இந்தியா

  எப்படியோ ஊழல் செய்வதிலாவது முதலிடம் கிடைத்ததே, மந்திரிகள் மட்டத்தில் ஊழல் இல்லை, அது நமக்கு பெருமை தான், ஆனால் அடுத்தடுத்த நிலையில் இருந்து அடித்தட்டு நிலை வரையிலும் ஊழல் வியாபித்திருக்கிறது, அதற்கு சிறந்த தொழில்நுட்பம் தேவை, மற்றும் மக்களிடம் ஒழுக்கம் வளரவேண்டும், மக்கள் ஒத்துழைப்பு அவசியம் வேண்டும்

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  ஊழல் நாடுகள் பட்டியல் - முதலிடத்தில் இந்தியா, கேடி அரசு மீது மக்கள் அதிருப்தி

 • Ramaswamy Sundaram - Mysore,இந்தியா

  இப்படி பேசிக்கிட்டே இருங்க மோடிஜி விளங்கிடும்..... உருப்படியா நாட்டுமக்கள் பசி தீர வழி தேடுவதை விட்டு விட்டு தத்துவ விசாரம் மதத்தின் கோட்பாடு மொழிகளின் திணிப்பு இப்ப்டி உருப்படியில்லாத விஷயங்களில் கவனத்தை செலுத்துவது விடுங்கள் ஐயா....தீர்க்கவேண்டிய தலையாய பிரச்சனைகள் எவ்வளோ உள்ளன.... முதலில் இந்திய மக்கள் அனைவருக்கும் மூன்று வேளை உணவை உறுதி செய்யுங்கள்...இல்லை என்றால் உங்கள் கதை கந்தல் தான்

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  கதவுடாதிங்க....கருப்பு பணம் அஞ்சிபைசா கொண்டுவர துப்பில்லை வந்துட்டான்னுங்க......

 • Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ

  இதுவரை எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இதற்க்கு காரணம் நமது சட்ட அமைப்பு. பணபலம், அதிகாரபலம் படைத்தவர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும்.

 • A R J U N - ,இந்தியா

  .......இந்தியா ஊழல் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில்.....இதை புளி போட்டு விளக்குவானேன்.. உலகுக்கே தெரிந்தது தானே... 50 ,60 களில் பக்தவத்சலம் என்றால் ஒருவருக்கும் தெரியாதாம்... பத்து லக்ஷம் என்றால் தான் தெரியுமாம்.. அந்த லக்ஷணத்தில் இந்தியா பேர்போனது... பாரம்பரிய புகழ்...இன்னமும் தொடர்கிறது...

 • thiru - Chennai,இந்தியா

  Thanks for publishing the Truth

 • kattan - Doha,கத்தார்

  ஜால்ரா கொஞ்சம் நிறுத்துமாய்யா. இதுல என்ன பெருமை. ஆட்சிக்கு வந்து எத்துணை வருஷம் ஆச்சு.

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  உண்மை நிலைமை... மத்திய அரசை குறை கூற முடியாது... அங்கேயும் ஊழல் உண்டு தான் ஆனால் நம்பர் ஒன்னு நிலைமைக்கு அல்ல.... பிரச்சனை மாநிலத்தில் தான்.... மாநில அரசுகள் கட்சி பாகுபாடு இன்றி பூந்து விளையாடுகிறார்கள்.... உதாரணத்திற்கு ... உங்க வீட்டு சந்துக்கு அஞ்சு வருஷத்துக்கு ரோடே போட்டேருக்க மாட்டாங்கோ... ஆனால் கணக்கில் ஒரு வருஷத்திற்கு 5 தடவை ரோடு போட்ட மாதிரி வரும்.... நமது சட்டமைப்பு அப்படி... சில நேரங்களில் மத்திய அரசு கண்டும் காணாமல் இருக்க வேண்டிய நிலைமை.... மோடி அரசையும் குறை கூற முடியாது மன்மோகனையும் குறை கூற முடியாது..... மாநில கட்சிகள் ( மற்றும் மாநில பலம் பொருந்த அரசியல்வாதி) பலம் பொருந்தி இருக்கிறவரைக்கும் அவர்களை அட்ஜஸ்ட் செய்துதான் வண்டி ஓட்ட வேண்டிருக்கிறது.... என் தனிப்பட்ட கருத்து... 'அடுத்தவனை ஏச்சு பொழைப்பது நம்ம ரத்ததிலேயே ஊறி விட்டது போல.... அது ஏன் என்று தெரியவில்லை...... '

 • varagur swaminathan - Folsom,யூ.எஸ்.ஏ

  please read mu book on corruption and its control -Himalaya publishing house

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  கல்வியும் சுகாதாரமும் பெரும்பாலும் மாநிலப் பட்டியலில் உள்ளவை . வரிஏய்ப்பில் முன்னணியுள்ளதோ டாக்டர்களும் கல்வித்தந்தைகளும் தான் ஓர் குறிப்பிட்ட மாநில அரசு எத்தனை ஊழல்களில் ஈடுபட்டாலும் ஆதாரங்களே இருந்தாலும் அதனைக் காரணம் காட்டி டிஸ்மிஸ் செய்யமுடியாத அளவுக்கு ( பொம்மை வழக்கு) சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உள்ளது . மெஜாரிட்டி உள்ள மாநில அரசுகளை எக்காரணத்துக்காகவும் கலைக்கவே முடியாது என்றால் அரசியல் சட்டம் 356 பிரிவு எதற்கு? வியாபம் ஊழலின் முக்கிய குற்றவாளிகள் பலர் பீஹாரிகள் அவர்களுக்கு அம்மாநில அரசே பாதுகாப்புக் கொடுக்கிறது கருப்புப்பண முதலைகளை கைது செய்யமுயன்றால் உடனடியாக முன்ஜாமீனும் எளிதாகக் கிடைக்கிறது அமலாக்கத்துறைக்கும் சி பி ஐக்கும் நேர்மையான அதிகாரிகள் கூட எளிதில் கிடைப்பதில்லை .தமிழகம் போன்ற பல மாநில அரசுகள் ஊழலே வாழ்வு என இருந்தாலும் ஒன்றும் செய்ய முடிவதில்லை என்ன செய்ய/ ஜனாதிபதி தேர்தலுக்கும் ஊழல்வாதிகளின் வாக்குகளும் தேவைப்படுகிறதே .இவற்றையெல்லாம் மீறி மக்களின் பேராதரவு நம்பிக்கையும் இருப்பதால் பாஜக தைரியமாக ஊழல் ஒழிப்பில் இறங்கலாம் கடத்தல் ஹவாலா இனத்தை பூண்டோடு அழிக்க தயங்கவே கூடாது

 • Uyirinam - Frankfurt,ஜெர்மனி

  நம்ம மக்கள் தான் ஊழல் செய்வதற்கு உடந்தை. நாம் தான் ஊழல் பேர்வழிகள். நாம் நல்லவர்களாக இருந்தால் அரசாங்க அதிகாரிகளோ, அரசியல்வாதியோ, ஊழல் செய்றப்ப கோபம் வரணுமே, நமக்கு வரலையே. யாரு எக்கேடு கெட்டா என்ன, நாமளும் நம் குடும்பம் மட்டும் நல்லா இருந்தா போதும். ஊரெங்கும் குப்பை, ஆத்துல மணலை காணோம், குடிக்க தண்ணி இல்ல, எங்க பாத்தாலும் சாக்கடை, கோவம் வந்திருந்தா, தொகுதி MLA வீட்டுக்கு முன்னாடியோ , counserllor வீடு முன்னாடியோ குப்பையை போட்டு போராட்டம் நடத்தணும் . நமக்கு அந்த த்ராணி இல்ல. புதுசா ரயிலை விட்டா, அத பத்திரமா வச்சிக்க தெரியல, ரோட்டுல அடிபட்டவனுக்கு உதவி பண்ண நேரம் இல்ல, பிச்சைஎடுக்கற ரோட்டு ஓர குழந்தைங்க கடத்தப்பட்டவங்களான்னு நம்ம மனசு பதறல, இப்படி எத்தனையோ நம்மோட லட்சணத்துக்கு உதாரணம் .. ஒன்னுரெண்டுபேர் அங்க இங்க நல்லவர்கள் பாக்கமுடியுது.

 • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

  வாழ்த்துக்கள் அரசுக்கும் மக்களுக்கும்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  கருவறை ( மருத்துவமனை )முதல் கல்லறை வரை ( சுடுகாடு ) வரை காசுதான் வேலை செய்யும்...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நூத்துக்கு நூறு சதவிகிதம் உண்மை.. உண்மை.. உண்மை.. உண்மை... உண்மை...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement