Advertisement

நாடகம்...சினிமா...நடிப்பு... : வினோத்தின் நாடி துடிப்பு...

கண் அசைவுக்கும், கருத்தின் செறிவுக்கும் ஏற்ப நளினத்தை நவரசங்களில் வழங்கும் கலைஞர்கள் மக்கள் மனதிலும், திரையுலகிலும் நிலைக்கின்றனர்.''சிறப்பு வாய்ந்த சினிமா துறைக்குள் நுழையும் முன்பு, கற்றல் பட்டறையாக விளங்குவது நாடக மேடை. ஜாம்பவான்களை உருவாக்கிய இந்த நாடக மேடை தன்னை கைவிடவில்லை,'' என்கிறார் குணசித்திர நடிகர் 'கல்லுாரி' வினோத்.நாடக பட்டறை மூலம் பட்டை தீட்டப்பட்டவர். கல்லுாரி படத்தில் ''கேட்கிறாப்பில இல்ல சொல்லுங்க... நாங்க சொல்றது இருக்கட்டும், நீங்க சொல்லுங்க,'' என அறிமுக காட்சியிலேயே காமெடியில் கலக்கியிருப்பவர். 10 ஆண்டு நம்பிக்கையுடன் போராடியவர் கையில் இன்று பெயர் சொல்லும்படி ஏராளமான படங்கள்.சண்டே ஸ்பெஷலுக்காக வினோத் வாய்ஸ்...*சினிமா அறிமுகம்?சென்னை சொந்த ஊர். அப்பா தாமஸ் நாடக நடிகர், பாட்டும் எழுதுவார். அவருடைய பாடல்களை கல்லுாரிக்கு செல்லும் பஸ்சில் பாடி கொண்டு அரட்டை அடித்து செல்வோம். இது வழக்கமான ஒன்று. எங்கள் கல்லுாரியில் இயக்குனர் பாலாஜி சக்திவேலின் மனைவி, பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவர் நான் பாடுவதை கேட்டு, ஒருநாள் பாலாஜி சக்திவேலின் படத்தில் நடிக்க பரிந்துரை செய்தார். அப்படி வந்தது தான் சினிமா பிரவேசம். ஆரம்ப படத்திலேயே காமெடி ரோல் கிடைத்தது.* நீங்க பளு துாக்கும் வீரராமே?சிறுவயதிலிருந்தே பளு துாக்குவதில் ஈடுபாடு உண்டு. பிளஸ் 2 படிக்கும்போது, நெல்லையில் தேசிய அளவில் நடந்த பளு துாக்கும் போட்டியில் கோல்டு மெடல் வாங்கினேன்.* ஏன் அந்த பீல்டு பிடிக்கவில்லையா?அப்படி கிடையாது. அப்பா நாடக கலை தொடர்புடையவர். அதன் தாக்கமோ என்னவோ, கல்லுாரி காலங்களில் நாடகத்தின் மீது ஈடுபாடு கொண்டு நடிக்க ஆரம்பித்தேன். பளு துாக்கும் போட்டியில் சாம்பியன் ஆனதால் ரயில்வேயில் வேலை கிடைத்தது. அதை வேண்டாம் எனக் கூறி விட்டு, கல்லுாரிக்கு சென்று படிக்க ஆரம்பித்தேன். எங்கள் பரம்பரையில் நான்தான் முதல் பட்டதாரி.* உங்களின் திரை நம்பிக்கை?மாரி படம் நடிக்கும்போது, அந்த கேரக்டருக்குஉரிய நடிப்பு எனக்கு வரும் என்று நான் துளி கூட நம்பவில்லை. தனுஷ் தான் உற்சாகம் தந்து நடிக்க வைத்தார். 2007ல் ஆரம்பித்த பயணம் 10 ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதில் நான் பட்ட கஷ்டம் அளவிட முடியாதது. எனக்கு உற்சாகமும், நம்பிக்கையும் தந்தது என் பெற்றோர் தான். ''நான் தான் சினிமாவில் நடிக்க முடியவில்லை. நீயாவது சாதித்து காட்டு. உன் விருப்பம் எதுவோ அதை மட்டும் செய்'', என அப்பா ஊக்களித்தார். இது எனக்கு நம்பிக்கையை தந்தது.* திருமணம் எப்போது?ஏன்? 'லாக்' பண்ண பாக்கிறீங்களா...* சினிமாவில் நீடிக்க?நேரம் கிடைக்கும்போதெல்லாம் நடித்து பயிற்சி பெற வேண்டும். அனுபவத்தை கற்று கொள்ள வேண்டும். சாப்பிட்டியா? என்ற வார்த்தையை நண்பன் சொல்லும்போது, தந்தை சொல்லும்போது, தாய் சொல்லும்போது, மற்றவர் கேட்கும்போது? என்ன மாதிரியான வித்தியாசத்தை காட்ட வேண்டும், என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.* தற்போதைய படங்கள்?விக்ரமுடன் ஸ்கெட்ச், சந்தானத்துடன் சர்வர் சுந்தரம், அதிமேதாவி என்ற படத்திற்கு வசனம் எழுதி, நடித்துள்ளேன். மாரி 2-வில் நடிக்க உள்ளேன். எந்த ஒரு விஷயத்துக்காகவும் உண்மையாக உழைத்தால் பலன் உறுதி. வாழ்க்கை என்பது சீட்டு இல்லாத சைக்கிள் மாதிரி. எவ்வளவு ஸ்பீடு வேண்டுமானாலும் போகலாம். ரெஸ்ட் எடுக்க உட்கார்ந்தால், நம்மையே குத்தி கிழித்து விடும், இது நான் சொன்னது இல்லை. பிறர் சொல்லி நான் வாழ்க்கையில் கடைபிடிப்பது, என்றார். இவருடன் பேச... 98840 24480.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement