Advertisement

ஒல்லிக்குச்சி தேகம்...ஓரவிழிப்பார்வை... : ஆர்ப்பரிக்கும்...ஆர்த்தனா பினு

'ஒல்லிக்குச்சி தேகம்... ஓரவிழிப் பார்வையுடன்... மலையாள மனங்களை 'துவம்சம்' செய்தவர், காமெடி படத்தில் கலாய்த்து கலாட்டா பண்ணியவர்; தமிழில் வெண்ணிலா கபடிக்குழுவுடன் களமிறங்கி, 'தொண்டன்' படத்தில் நடிகர் விக்ராந்த் ஜோடியாக இளசுகளை பின் தொடர செய்தவர், ஆர்த்தனா பினு.குடும்ப பின்னணியில் திரைத்துறை இருப்பதால், நடிக்க 'மேக் அப்'புடன் ஸ்டூடியோவை தேடும் அவர், 'ஐ.ஏ.எஸ்., லட்சியம்' மனதில் எழும்போது நுாலகங்களுக்கு 'பேக் அப்' ஆகிவிடுகிறார். தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவருடன் உரையாடிய இனிய பொழுதில்....* உங்களை பற்றி..?பிறப்பு, வளர்ப்பு தானே... நானே சொல்லிவிடுகிறேன். எல்லாம் கேரளம் தான். திருவனந்தபுரம் புனித தாமஸ் பள்ளிப்படிப்பு. பி.ஏ.,வில் மாஸ் கம்யூனிகேஷன் அண்ட் வீடியோ புரடொக்ஷன் படிப்பு.* சினிமா அனுபவம்...பிளஸ் 2 முடிக்கும்போது கேரள 'டிவி' ஷோக்களில் பங்கேற்றேன். கொஞ்ச காலம் வீடியோ ஜாக்கியாகவும் இருந்தேன். 'டிவி'யில் சுரேஷ்கோபி சாரின், 'நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரன்' நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. பின் தோழிகளின் முகநுால் பக்கத்தில் இருந்த என்னோட படத்தை பார்த்துட்டு தெலுங்கு படமான 'சீத்தாம்மா ஆண்டலு ராமையா சித்ரலு' படத்துல நடிக்க வாய்ப்பு கிடைத்தது. டிகிரி முடிக்கறப்ப மலையாளம், தெலுங்கு, தமிழ்ன்னு ஏகப்பட்ட வாய்ப்பு. ஆனா, படிப்பு முக்கியம்னு என்னால எல்லாத்தையும் ஒப்புக்கொள்ள முடியல.* மலையாளத்தில் 'மதுகவ்' பட அனுபவம்?சுரேஷ்கோபி அங்கிளோட ஏற்கனவே 'டிவி ஷோ' பண்ணி பழக்கம் இருந்ததால, பெரிசா வித்தியாசம் தெரியல. இருந்தாலும்... புகழ்பெற்ற அவரோட மகனுக்கு ஜோடியா நடிச்சது ரொம்ப பெருமை. இது 'செம' காமெடி படம். கேரளத்துல நினைத்ததை விட அதிக வரவேற்பு இருந்தது.* சமுத்திரகனியின் 'தொண்டன்' பட அனுபவம்?முதல்ல, ஒரு மனிதனாக சமுத்திரக்கனி சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏனெனில், உயரத்திற்கு சென்ற பின்னும், யாரிடமும் பணிவு மாறாமல் இருக்கிறார். அவரிடம் அற்புத திறன்கள் உள்ளன. அவற்றை ஆசிரியரிடம் இருந்து கற்பதை போல கற்றுக்கொண்டே இருக்கலாம். எல்லோரையும் சமமாக மதிக்கும் குணமும் அவரிடம் உண்டு. அவர் கற்றுத்தரும் 'ஷூட்டிங் ஸ்பாட்'களை ஒரு வகுப்பறையாகவே பார்க்கிறேன். சிலர் கதையம்சம்; தனது ரோல் எதுவென கேட்டு நடிப்பதை முடிவு செய்வர். நான் அப்படி அல்ல. 'கதை'தான் ஹீரோ. சமுத்திரக்கனி சார் இயக்கம் என்றதும் உடனே ஒப்புக்கொண்டேன்.*சக நடிகர் விக்ராந்த்?நல்ல நட்பு பாராட்டுபவர். சிறந்த நடிகர். ஷூட்டிங் இல்லாட்டியும் 'ஸ்பாட்'டுக்கு வந்து ஏதாவது சொல்லி கொடுப்பார். சட்டென்று புரிந்து நடிப்பை வெளிப்படுத்துவார். எதையும் அர்ப்பணிப்போடு செய்வார்.*அம்மா பினுதான் இன்ஸ்பிரேஷனா ?ஆமாம். அவங்களோட அர்ப்பணிப்பு பிடிக்கும். அவரது தியாக உணர்வை மதிக்கிறேன்.* உடம்பை எப்படி 'கிச்'சுனு வச்சிருக்கீங்க?அதெல்லாம் ஒன்றும் இல்லீங்க. நல்லா செமத்தியாவே சாப்பிடுவேன். திண்டுக்கல் பிரியாணின்னா திகட்டும்வரை ஜமாய்ப்பேன். அப்புறம் நல்லா துாங்குவேன். அப்பப்ப 'ஜிம்'. இதுக்குன்னு பெரிசா மெனக்கெடல் எதுவும் கிடையாது. அடிக்கடி யோகா செய்வேன்.* கைவசம் உள்ள படங்கள்?தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் நிறைய வாய்ப்புகள் வருது. நான் முதுநிலை பட்டம் படிக்க போறேன். சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி சமூகத்திற்கு சேவையாற்ற ஆசை. அதனால் இப்போதைக்கு நடிப்பது குறித்து முடிவு எடுப்பது கடினம். ரொம்ப நல்ல கதையம்சம் கிடைத்தால் 'பினு'விடம் ஆலோசனை பண்ணி முடிவெடுப்பேன்.இவரிடம் நட்பு பாராட்ட... Arthana Binu/FB.comல் தொடர்பு கொள்ளலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement