Advertisement

'திறமை இருந்தால் மிரட்டலாம்' : சீறும் சித்ரா

கனவில் மிதக்கும் காந்த கண்கள், கருங்கூந்தல் அலை பாயும் கவர்ச்சி மேனி, செர்ரி நிறத்தில் சிவந்து கனிந்த உதடுகள், மயில் நடனமும் தோற்கும் மெல்லிடை, குயிலிசையை குரலாய் கொண்ட தொலைக்காட்சி தொகுப்பாளர் சித்ரா மனம் திறக்கிறார்...* உங்களை பற்றி?நான் சென்னைக்கார பொண்ணு. எம்.எஸ்சி., சைக்காலஜி முடிச்சிருக்கேன்.* முதல் வாய்ப்பு?'டிவி'யில் தொகுப்பாளராக முதல் வாய்ப்பு கிடைத்தது. தற்போது பல சீரியல்களில் நடிக்கிறேன். சினிமா வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.* விரும்பும் 'கேரக்டர்'?கிராமத்து பெண்ணாக நடிக்க விருப்பம். பெண்களின் மனதில் இடம் பிடிக்க இதுதான் 'பெஸ்ட் சாய்ஸ்'.* தொகுப்பாளராக என்ன தேவை?'நகைச்சுவை' உணர்வு கண்டிப்பா வேணும்; 'துறுதுறு'ன்னு இருக்கணும்; பார்க்க அழகா இருக்கணும். இதெல்லாம் இருந்தா, நம்மை ரசிக்கிறதுக்காகவே ஒரு பட்டாளம் உருவாகிடும்.* உங்களுக்கு பிடித்தது?நடிக்கிறதை விட, தொகுப்பாளரா இருக்குறது எனக்கு ரொம்ப பிடிக்கும். நடிக்கும் போது அந்தந்த சீன்களில் மட்டுமே வரமுடியும். தொகுப்பாளரா இருந்தா 'புரோகிராம்' முழுக்கவே நாம வரலாம்.* பிடித்த தொகுப்பாளர்கள்?சிவகார்த்திகேயன், திவ்யதர்ஷனி.* நடிப்பு கத்துக்கிட்டது?நடிகை நளினியிடம் இருந்து காமெடி, கலாட்டா, நயன்தாராவிடமிருந்து நடிப்பு கத்துக்கிட்டேன்.* உங்க கனவு?டாக்டர் ஆகணுங்குறது தான். ஆனா, இப்போ நானே நினைச்சு பார்க்காத 'மீடியா பீல்டுல' இருக்கேன். இதுவும் பிடிச்சிருக்கு.* ரொம்ப நாள் ஆசை?அஜித் படங்களில் 'தல' காட்டணும்.* மீடியாவில் பெண்களுக்கு...?நிறையவே பாதுகாப்பு, சுதந்திரம் இருக்கு. திறமை இருந்தா மீடியாவில் மிரட்டலாம்...பெரிசா சாதிக்கலாம்.* பாராட்டுகள்..?நடிகை ராதிகா, 'நீ சிக்கிரமே லேடி சிவகார்த்திகேயன் மாதிரி வரணும்னு' வாழ்த்தினாங்க. எனக்கும் அவரைப் போல எல்லாருக்கும் பிடிச்ச தொகுப்பாளாராக இருக்க ஆசை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • VELAN S - Chennai,இந்தியா

    பார்த்து பார்த்து

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement