Advertisement

'சர்ப்ரைஸ் கேர்ள்' கீர்த்தி - மேனகா சுரேஷ்

நீ நடக்கையில் ஒரு நீரோடை தான்... நீ சிரிக்கையில் ஒரு மலர் கூடை தான்... பார்த்தாலே மயக்கும் உன் கண்ஜாடை தான், இதழ்களில் தித்திப்பது தேன் தான், உன் வெண்ணிறத்தின் முன் அந்த வெண்ணிலாவும் வீண் தான்...என்று கற்பனை கலக்காமல் கவிஞர்கள் வர்ணிக்க தகுதியானவர். இவர் நடிப்பில் நேர்த்திக்கு, அழகே வந்து எடுக்கும் ஆரத்தி... நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து, அம்மா மேனகா சுரேஷ் மனம் திறக்கிறார்...* கீர்த்தி சுரேஷ் யார் செல்லம் ?அப்பா செல்லம் தான்... என்கிட்ட எப்பவுமே 'சீரியஸ் மேட்டர்' தான் பேசுவாங்க. அவர் கூட இருக்கும் போது குழந்தை மாதிரி மாறிடுவாங்க. என்றாலும் என் அன்பிற்கு அவள் என்றும் கட்டுப்பட்டவள். அம்மா என்றால் உயிர்.* வீட்டில் நடிப்பாங்களா ?கீர்த்தி ஒரு 'சர்ப்ரைஸ் கேர்ள்' இதுவரை என்கிட்ட நடித்து காட்டியது இல்லை. அவங்க நடிப்பு திறமையை படம் பார்த்து தெரிஞ்சுக்கணும்னு தான் விரும்புவாங்க.* சர்ப்ரைஸ் சாம்பிள்...என் பெரிய பொண்ணு ரேவதி பிறந்தநாளுக்கு, வெளியூர் ஷூட்டிங்கில் இருந்த கீர்த்தி திடீர்னு கேக்கும், கையுமா இரவு 12 மணிக்கு வந்து ஷாக் கொடுத்தது பெரிய சர்ப்ரைஸ்.* பிளஸ், மைனஸ்...பெருசா மைனஸ் எதுவும் இல்லை. ஆனால், துாங்கினா கும்பகர்ணன் துாக்கம் தான் எழுப்புறது ரொம்ப கஷ்டம்...* மறக்க முடியாத சிரிப்பு ?2வது படிக்கும் போது என்னோட சொந்த தயாரிப்பான 'குபேரன்' படத்தில் நடிச்சாங்க. ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்ல ஒரு காட்சியை பார்த்துட்டு ஓடி வந்து 'அம்மா பில்லியாடு'ன்னா என்னான்னு கேட்டாங்க. டயலாக் பேப்பரை வாங்கிட்டு வரச் சொல்லி பார்த்தா, அதுல 'பலி ஆடு'ன்னு இருந்தது, எனக்கு ஒரே சிரிப்பு...* முதல் படம்...மலையாளத்தில் ஹீரோயினா அறிமுகமான 'கீதாஞ்சலி' படத்தில் இரண்டு வேடம், எல்லா காட்சிகளும் ஒரே டேக்ல நடிச்சு கலக்கிட்டாங்க.* கீர்த்தி சமையல்...சூப்பரா சமைப்பாங்க... காளான், வெண்டைக்காய் மசாலா செஞ்சா செம டேஸ்ட்டா இருக்கும். வீட்ல இருக்கும் போதெல்லாம் அவங்க சமையல் தான்...* நடிப்பு டிப்ஸ்...மலையாளத்தில் 'ரிங் மாஸ்டர்' படத்தில் கண் தெரியாத கேரக்டரில் நடிக்கும் போது என்கிட்ட டிப்ஸ் கேட்டாங்க. அதுக்கு அப்புறம் ஒரு முறை கூட டிப்ஸ் கேட்டதே இல்லை.* சென்டிமென்ட் ?பெரிய பொண்ணு ரேவதி ஓவர் சென்டிமென்ட், கீர்த்திக்கு அதெல்லாம் இல்லை. ரொம்ப போல்டு, 'பிராக்ட்டிகல்' கேரக்டர்.* அக்காவுடன் சண்டைரேவதியும், கீர்த்தியும் ஒரே ஸ்கூலில் தான் படிச்சாங்க. ரேவதி ஹிந்தி சரியா படிக்கலைன்னு, இவங்க முன்னாடியே மிஸ் திட்டினப்போ, என்கிட்ட வந்து 'என் முன்னாடி என் அக்காவை எப்படி திட்டலாம்னு' கோவிச்சுகிட்டாங்க, ரொம்ப பாசக்கார பொண்ணு.* ரஜினி முருகன்...தமிழில், மதுரைக்கார பொண்ணா பக்காவா 'ரிஜிஸ்டர்'ரான ஒரு படம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement