Advertisement

அரசியல் பிரவேசம்: அடியெடுத்து வைக்கிறார் ரஜினி! 'சம்பாதிக்க நினைத்தால் ஓடி விடுங்கள்' ரசிகர்கள் சந்திப்பில் திட்டவட்டம்

சென்னை: கோடம்பாக்கம், ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை, நடிகர் ரஜினி, நேற்று துவங்கினார். ஐந்து நாள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், நேற்று கன்னியாகுமரி, திண்டுக்கல், கரூர் மாவட்ட ரசிகர்களை, ரஜினி சந்தித்தார். அதில், சினிமா இயக்குனர், எஸ்.பி.முத்துராமனும் பங்கேற்றார்.
ரசிகர்கள் மத்தியில், ரஜினி பேசியதாவது:

எஸ்.பி.முத்துராமனிடமிருந்து நேர்மை, ஒழுக்கம் உள்ளிட்ட பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஆரம்பத்தில், எனக்கிருந்த குடிப் பழக்கத்தால், படப்பிடிப்புக்கு தாமதமாக போவேன்; அதை, முத்துராமன் கண்டித்தார். அதன்பின், நான் தான் முதல் ஆளாக செல்வேன். அதையே வழக்கமாக்கிக் கொண்டேன். புகை மற்றும் மது பழக்கத்தை, ரசிகர்கள் படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும்.

நான், ரசிகர்களை முன்பே சந்தித்திருக்க வேண்டும். 12 ஆண்டுகளுக்கு பின், இப்போது சந்திக்கிறேன். 'ரஜினி நிலையான முடிவு எடுக்க மாட்டார்; பின்வாங்குவார்; தயங்குகிறார்' என, சிலர் கூறுகின்றனர்.எந்த முடிவு எடுத்தாலும், நான் கொஞ்சம் யோசிப்பேன்.
சிலவற்றில் முடிவு எடுத்த பின் தான், பிரச்னைகள் இருப்பது தெரிகிறது. தண்ணீரில் கால் வைத்த பின் தானே, உள்ளே முதலைகள் இருப்பது தெரிகிறது. அதற்காக, முன்வைத்த காலை, பின்வைக்க மாட்டேன் என்றால் எப்படி? முரட்டு தைரியம் இருக்கக் கூடாது. பேசுபவர்கள் பேசியபடியே தான் இருப்பர்.

ஏமாற்றி விட முடியாது.நல்ல படங்களை தருவது தான், என் வேலை; அதில், ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன். படம் ஓடுவதற்காக, ரஜினி ஏதாவது சொல்வார் என, சிலர் கூறுகின்றனர். இறைவனின் ஆசியால், உங்களின் அன்பால், அப்படி செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை. தமிழக மக்களையும், என் ரசிகர்களையும் ஏமாற்றி விட முடியாது. அவர்கள் ஏமாறுவது, ஒரு விஷயத்தில் மட்டுமே; அதுபற்றி, இப்போது பேச விரும்பவில்லை.
கடந்த, 21 ஆண்டுகளுக்கு முன், ஒரு அரசியல் விபத்து எனச் சொல்லலாம். அப்போது, ஒரு அரசியல் கூட்டணிக்கு ஆதரவு தருவது போன்ற சூழ்நிலைஉருவானது. அந்த கூட்டணி, தேர்தலிலும் வெற்றி பெற்றது. ரசிகர்களும், அரசியலில் ஆர்வம் காட்டினர்.

ரசிகர்கள் சிலர் எனக்கு கடிதம்அன்று முதல், தேர்தல் சமயங்களில், சிலர் ஆதாயத்திற்காக, என் ரசிகர்களை தவறாக பயன்படுத்த துவங்கினர். ரசிகர்கள், தவறான வழியில் செல்வதை தடுக்க, ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும், 'நான் எந்த கட்சிக்கும் ஆதரவு தரவில்லை' என, பதிவு செய்யும் நிலை ஏற்பட்டது.
அரசியல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து, ரசிகர்கள் சிலர் எனக்கு கடிதம் எழுதினர். 'நமக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம், காரில் பறக்கின்றனர்' எனக் கூறுவர். எம்.பி., - எம்.எல்.ஏ.,வாக ஆசைப்படுவது தவறில்லை. ஆனால், அதை வைத்து, பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை, என்ன சொல்வது?
என் வாழ்க்கை, அந்த ஆண்டவன் கையில் உள்ளது. இப்போது, நடிகனாக இருக்க வேண்டும் என்பது, கடவுளின் ஆணை. நாளை, நான் என்ன செய்ய வேண்டும் என்பதை, கடவுள் தான் தீர்மானிக்க வேண்டும். எந்த பொறுப்பானாலும், நேர்மையாக, உண்மையாக செய்வேன்.
ஒரு வேளை, நான் அரசியலுக்கு வரும் சூழல் உருவானால், பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை, என் அருகே கூட சேர்க்க மாட்டேன். அவ்வாறான தவறான எண்ணம் உடையவர்கள், இப்போதே என்னை விட்டு சென்று விடுங்கள். இல்லையென்றால், நானே ஒதுக்கி விடுவேன்.இவ்வாறு ரஜினி பேசினார்.

முன்னதாக, எஸ்.பி.முத்துராமன் பேசுகையில், ''முதல் சந்திப்பில், ரஜினியை எப்படி பார்த்தேனோ, அப்படியே இப்போதும் உள்ளார். புகழை தலையில் ஏற்றிக் கொள்ளாதவர். ரஜினி புகைப்படத்தை, வீட்டில் வைத்திருப்பவர்கள், அவரைப் போலவே ஒழுக்கமாக இருக்க, எண்ண வேண்டும்,'' என்றார்.

ரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை, நடிகர் ரஜினி, நேற்று துவங்கினார். ஐந்து நாள் நடக்கும் நிகழ்ச்சியில் நேற்று கன்னியாகுமரி, திண்டுக்கல், கரூர் மாவட்ட ரசிகர்களை சந்தித்தார். அதில், சினிமா இயக்குனர் எஸ்.பி.முத்துராமனும் பங்கேற்றார்.
ரஜினி பேசியதாவது: எஸ்.பி.முத்துராமனிடமிருந்து நேர்மை, ஒழுக்கம் உள்ளிட்ட பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஆரம்பத்தில், எனக்கிருந்த குடிப் பழக்கத்தால், படப்பிடிப்புக்கு தாமதமாக போவேன்; அதை, முத்துராமன் கண்டித்தார். அதன்பின், நான் தான் முதல் ஆளாக செல்வேன். அதையே வழக்கமாக்கிக் கொண்டேன். புகை மற்றும் மது பழக்கத்தை, ரசிகர்கள் படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும்.
நான், ரசிகர்களை முன்பே சந்தித்திருக்க வேண்டும். 12 ஆண்டுகளுக்கு பின், இப்போது சந்திக்கிறேன். 'ரஜினி நிலையான முடிவு எடுக்க மாட்டார்; பின்வாங்குவார்; தயங்குகிறார்' என, சிலர் கூறுகின்றனர்.
எந்த முடிவு எடுத்தாலும், நான் கொஞ்சம் யோசிப்பேன். சிலவற்றில் முடிவு எடுத்த பின் தான், பிரச்னைகள் இருப்பது தெரிகிறது. 'படம் ஓடுவதற்காக, ரஜினி ஏதாவது சொல்வார்' என, கூறுகின்றனர்.
தமிழக மக்களையும், என் ரசிகர்களையும் ஏமாற்றி விட முடியாது. அவர்கள் ஏமாறுவது, ஒரு விஷயத்தில் மட்டுமே; அதுபற்றி, இப்போது பேச விரும்பவில்லை. இவ்வாறு ரஜினி பேசினார்.
- நமது நிருபர் -

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து (151)

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  இந்த கூத்தாடி இப்பவே உண்மையாக பேசுகிறார். அதாவது இவருடன் அரசியலுக்கு வந்து பணம் சம்பாதிக்கணும் என்ற எண்ணம் படைத்தவர்கள் ஓடிவிடுங்கள். இதன் உட்கருத்து இவர் ஒருவர் மட்டும் அரசியலில் வந்து சம்பாதிக்க வேண்டும் என்பதே. தமிழ்நாட்டை பற்றி ஒன்னும் தெரியாத கூத்தாடிக்கெல்லாம் எல்லாம் தமிழ் நாட்டுக்கு CM ஆகிவிடலாம் என்ற ஆசையே தவறு.

 • Royapuram Chandru - Dallas,யூ.எஸ்.ஏ

  அரசியலில் இவரால் தாக்கு பிடிக்க முடியாது. அரசியலுக்கு வந்து விட்டால் நிம்மதி போய் விடும். இவர் நிம்மதியை விரும்பும் மனிதர். மேலும் இவர் ஒரு தெளிவான சிந்தனை, மனதிடம் இல்லாதவர். இந்த குணங்கள் எல்லாம் அரசியலுக்கு சரி பட்டு வராது . இவையெல்லாம் இவருக்கு நன்கு தெரியும். இருந்தாலும் இவர் நடிக்கும் படங்களின் லாப நோக்கத்துக்காகவே இப்படி பேசி காலத்தை ஓட்டுகிறார். எல்லாத்துக்கும் ஆண்டவன் மேல் பழியை போட்டு தப்பிக்கிறார் . நாளையே "ஆண்டவன் அரசியலுக்கு வர வேண்டாம்" என்று சொன்னார் என்றும் சொல்லுவார்.

 • C Suresh - Charlotte,இந்தியா

  அரசியலுக்கு வருவதை விட்டு.. முதலில் பேசிய நதி நீர் இணைப்பில் முழு கவனம் செலுத்தினார் என்றால்.., அவர் புகழ் என்றென்றும் நிலைத்து இருக்கும்... இல்லையேல் பத்தோடு பதினொன்று...

 • Richie Rich SYD - Penalty not for others,ஆஸ்திரேலியா

  புலி வருது புலி வருது .. சொல்லி சொல்லி Ella படம் ரிலீஸ் ஆனது. இப்ப்போ புலி வந்தால் enna நரி வந்தால் என்னவாம் ? தமிழ் மக்களுக்கு இதுவும் வேணும்.

 • Richie Rich SYD - Penalty not for others,ஆஸ்திரேலியா

" "
Advertisement