Advertisement

ஐஸ் ஐய்ரா

அழகின் எல்லை தொட்டு மெல்ல நடக்கும் முல்லை... தேய்பிறை நிலவில் பாதி கூட உனக்கு இடை இல்லை, பனி மலைகளை உருக்கி பிரம்மன் படைத்த தேகம், கோடையை கொளுத்தும் உன் பார்வை குளிர் காற்றின் வேகம், துருவங்கள் இரண்டாய் வளைந்து நிற்கும் புருவங்கள், நீ பார்க்கும் கண்ணாடியில் கூட தேவதையின் உருவங்கள்... ஐய்சாய், நைசாய் நளினம் காட்டி 'ஐ' என நடிப்பில் வியக்க வைக்கும் நடிகை 'ஐய்ரா' ஜில்லென பேசுகிறார்...
* புதுமுகம் அறிமுகம்...
நான் ராஜஸ்தான் பொண்ணு... பிறந்து, வளர்ந்தது எல்லாம் சென்னை தான். 'மாடலிங்' பண்றேன், 'பேஷன் டிசைனிங்' படிச்சுகிட்டு இருக்கேன்.
* மாடலிங் பட்டம்...
2014ல் 'மிஸ் சவுத் இந்தியா' போட்டியில், 'மிஸ் தமிழ்நாடு' பட்டம் எனக்கு கிடைத்தது.
* முதல் படம்...
தமிழில் இயக்குனர் கண்ணன் ரங்கசாமியின் 'தாயம்' என் முதல் படம். ஒரே அறைக்குள் எடுத்த திரில்லர் மூவி.
* மாடலிங் - சினிமா ?
மாடலிங் பண்ணும் போது முகத்தில் எந்த அசைவுகளும் இல்லாமல் 'ரேம்ப் வாக்' போகணும், சினிமாவில் முகத்தில் நிறைய அசைவுகளை காட்டி நடிக்கணும்.
* ரேம்ப் வாக்?
இதில், 'மாடலிங் ரேம்ப் வாக்', 'மீடியா ரேம்ப் வாக்' என, ரெண்டு வகை உண்டு. விளம்பரங்களுக்காக நடப்பது தான் 'மீடியா ரேம்ப்' இதுல கொஞ்சம் நடிக்க வேண்டியிருக்கும்.
* சினிமா கேமரா?
மாடலிங் துறையில் 'கேமரா' தான் ஹீரோ, கேமரா முன்னாடி நடந்த நான், இப்போ நடிக்கிறேன்... பெரிய வித்தியாசம் இல்லை.
* நடிப்பு பயிற்சி...
அதுக்கெல்லாம் நேரம் கிடைக்கலை, ஸ்பாட்ல டைரக்டர் சொன்னபடி 'ஆக்ட்' பண்ணினே
அவ்வளவு தான்... 'தாயம்' கதை கூட படம் வெளியான பின் தான் தெரியும்...
* இன்றைய ஹீரோயின்கள்...
இன்றைய ஹீரோயின்களுக்கு நல்லா நடிக்குற மாதிரி கேரக்டர்கள் கிடைக்குறதில்லை.
எனக்கு, பாலிவுட் - கரீனா கபூர், கோலிவுட் - ஸ்ரீதேவி நடிப்பு பிடிக்கும்.
* மாடலிங் டிப்ஸ்...
மீடியம் வெயிட், நல்ல உயரம், ஸ்கின் கலர், டிரஸிங் ஸ்டைல், நம்பிக்கை இருந்தால் போதும் 'மாடலிங்'கில் சாதிக்கலாம்.
* நீங்க எப்படி ?
உயரம் 5.3, வெயிட் 45 கிலோ... எப்பவுமே வித்தியாசமான டிசைனிங் டிரஸ்ல தான் இருப்பேன். ஓவர் மேக்கப் பிடிக்காது, வெளியே போகும் போது 'ஒன்லி லிப்ஸ்டிக்' மட்டும் தான்...
* சினிமா லட்சியம்...
பிரபல ஹீரோயினா ஆகணும், நிறைய அவார்டு வாங்கணும், பெரிய ஹீரோக்களுடன் நடிக்கணும்...
* ஹீரோயின் அனுபவம்...
'மாடலிங்' ஷூட்டிங் ஒரே நாளில் முடிஞ்சுடும், சினிமா ஷூட் முடிய குறைஞ்சது ரெண்டு மாசம் ஆகும், சில நேரங்களில் 'டபுள் கால்ஷீட்' கூட கொடுத்து நடிக்கணும்.
* ஐய்ரா ரகசியம் ?
இயற்கை ரொம்ப பிடிக்கும், மனசுக்கு கஷ்டமா இருக்கும் போதெல்லாம் மரம், செடிகளுடன் மனம்விட்டு பேசுவேன். 'பேஸ்புக்', 'டிவிட்டர்'ல நோ அக்கவுண்ட், எனக்கு நண்பர்கள் கூட இல்லை...
* நோ பிரண்ட்ஷிப் ?
தினமும் அதிகாலை 4 மணிக்கு எந்திரிச்சு ஜிம், டான்ஸ், தியானம், ஹார்ஸ் ரைடிங் பண்ணுவேன். கிடைக்குற கேப்புல குடும்பத்துடன் இருப்பேன். 'ஆல் டைம் பிஸி'... இதுல, எங்கிருந்து பிரண்ட்ஷிப் பிடிக்குறது.
* அடுத்த படம்...
ஹீரோயின் முக்கியத்துவம் உள்ள இரண்டு படங்களில் நடிக்கிறேன், ஒரு படத்தை இயக்குனர் யுரேகா இயக்குகிறார்.
jaazzgmail.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement