Load Image
Advertisement

லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பொறி

வேலூர்: சென்னை சென்ற லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில், தீப்பொறி வந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. பெங்களூருவில் இருந்து சென்னைக்கு செல்லும், லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று காலை, 6:45 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயில், வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே, மகேந்திர வாடியை, காலை, 10:45 மணிக்கு கடந்து சென்றது. அப்போது ரயில் ஏ.சி., பெட்டியின் அடியில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பொறி வந்தது. உடனே ரயில்வே ஊழியர்கள், சித்தேரி ரயில்வே ஸ்டேஷன் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதனால், சித்தேரியில் ரயில் நிறுத்தப்பட்டது. ரயில்வே பொறியாளர்கள் விரைந்து வந்து, ஏ.சி., பெட்டியின் அடியில் சோதனை செய்தனர். அப்போது ரயில் சக்கரம் தண்டவாளத்தில் உராய்ந்து செல்லும் போது, அடிக்கடி பிரேக் பிடிப்பதால் ஏற்படும் அழுத்தத்தினால் புகை, தீப்பொறி வந்தது தெரிய வந்தது. இதனால் உராய்வு வந்த ரயில் சக்கரத்தை பொறியாளர்கள் சரி செய்தனர். இதனால், 20 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது. இதுகுறித்து, அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement