dinamalar telegram
Advertisement

சரியான பாதையில் யோகி: மக்கள் அமோக ஆதரவு

Share
Tamil News
புதுடில்லி: 'உத்தர பிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத், தான் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளின் மூலம், சரியான பாதையில் செல்கிறார்' என, அம் மாநில மக்கள் அமோக ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
உத்தர பிரதேசத்தில், சமீபத்தில் நடந்த சட்ட சபை தேர்தலில், மொத்தமுள்ள, 403 தொகுதி களில், 325 தொகுதிகளில் வென்று, பா.ஜ., ஆட்சி அமைத்தது. சர்ச்சை பேச்சுகளால் கடும் விமர்சனங்களை சந்தித்த, யோகி ஆதித்யநாத், முதல்வராக பதவியேற்றதை, எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. சட்டவிரோத இறைச்சி கடைகள் மூடல் உட்பட, பல்வேறு அதிரடி நடவடிக் கைகள் மூலம், ஒரு மாதமாக, பலரது பாராட்டு களை யோகி ஆதித்யநாத் பெற்று வருகிறார். இது தொடர்பாக, உத்தரபிரதேசத் தைச் சேர்ந்த பத்திரிகை, மக்களிடையே கருத்துக் கணிப்பை நடத்தியது

அதன் முடிவுகள்:



முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசின் செயல்பாடு திருப்தி அளிப்பதாக, 62 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். ஹிந்து கொள்கை வாதியாக கருதப்பட்ட யோகி ஆதித்யநாத், முதல்வ ராக எடுத்த நடவடிக்கைகளின் மூலம், சரியான பாதையில் செல்கிறார் என, 71 சதவீதமக்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத இறைச்சிக் கடைகள் மூடல், பெண் களை கிண்டல் செய்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும், 'ரோமியோ' படைப் பிரிவு, வி.ஐ.பி., கலா சாரத்தை ஒழிக்கும் நடவடிக்கை, அரசு அலுவலகங் களில் பான், குட்கா பயன்படுத்த தடை போன்ற நடவடிக்கை களை மக்கள் பாராட்டிஉள்ளனர். இறைச்சிக் கடைகளுக்கு எதிரான நடவடிக் கைக்கு, 38.1 சதவீதம் பேரும், ரோமியோக் களுக்கு எதிரான நடவடிக்கைக்கு, 25.4 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ரோமியோக்களுக்கு எதிரான நடவடிக் கைக்கு, 37 சதவீத பெண்கள் ஆதரவு தெரி வித்து உள்ளனர்.இவ்வாறு கருத்துகணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (45)

Advertisement