Advertisement

இட ஒதுக்கீடு ரத்து; உ.பி., முதல்வர் அதிரடி

லக்னோ: உ.பி.,யில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி.,க்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதிரடி உத்தரவுகள்:உ.பி.,யில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு ஆட்சி செய்து வருகிறது. முதல்வராக பொறுப்பேற்றது முதல், யோகி ஆதித்யநாத், மாட்டிறைச்சிக்குத் தடை, பெண்களை கேலி செய்வோரை பிடிக்க தனிப்படை, பள்ளிகளில் கட்டாய யோகா உள்ளிட்ட பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

இட ஒதுக்கீடு ரத்து:இந்நிலையில் மாநில மேம்பாட்டு மற்றும் ஊழலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவமனைகளில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி.,க்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக அதிரடி அறிவிப்பை ஆதித்யநாத் வெளியிட்டுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (160)

 • Seetharaman Kalyan - chennai,இந்தியா

  தனியார் கல்லூரிக்கு எதற்கு இந்த சலுகை? ஊழல் இல்லாமல் இட ஒதுக்கீடு செய்வது தானே?

 • raghu - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  எனக்கு தெரிந்த ஏழை ப்ராமண மாணவன் 1188 / 1200 மதிப்பெண்கள் பெற்றான் +2 தேர்வில். . அவனுடைய குடும்பம் 3 வேளை உணவுக்கு கூட கஷ்டப்படும் குடும்பம். . அவன் படிக்க விரும்பியது B .E மெக்கானிக் .. ஆனால் 1188 மதிப்பெண்கள் போதாது என்றார்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் .. ஒரு திறமைசாலியை இழந்தது நாடு. இது போல் இன்னும் எத்தனை பேர் உள்ளார்களோ தெரியாது நம் நாட்டில்.

 • K,kittu.MA. - Anna Nagar,இந்தியா

  உரிமை என்று போராடி பட்டியல் இன மக்கள் பொது மக்களிடம் இருந்து பிரிந்து விட்டனர்.. ஒதுக்கீடு அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளது இந்த நிலை மாற வேண்டும்...பட்டியல் இன மக்களுக்கும் ஒதுக்கீடு தரணும் அதே நேரம் அவர்களில் நல்ல மார்க் வாங்குவோருக்கே அந்த ஒதுக்கீடு போகணும் எல்லாருக்கும் அல்ல, மார்க் தான் அடிப்படை என்பது நல்லா இருக்கும்.. சமுதாயம் வளரும்.. அவர்களும் நன்கு படிப்பார்கள்..

 • Marshal Thampi - Nagercoil,இந்தியா

  இட ஒதுக்கீடு வேண்டாம் தான். கீழ் சாதி மக்கள் முன்னேறிவிட்டார்களா ?

 • m.viswanathan - chennai,இந்தியா

  சபாஷ் நல்ல வரவேற்கத்தக்க செயல் . இதை அரசு கல்லூரிகளிலும் நடைமுறை படுத்த வேண்டும்

 • Vasanth Saminathan - Trivandrum,இந்தியா

  தாழ்த்தப்பட்டவர் ஏழை என்று சொல்லிக்கொள்வோர்தான் 4-5 பிள்ளைகளை சரமாரியாக பெற்றுக்கொள்கின்றனர். கட்டுப்பாடின்றி இனப்பெருக்கம் செய்வது, பின்னர் கல்விக்கு பணமில்லை மருத்துவத்திற்கு வழியில்லை என அனுதாபம் தேடுவது. இட ஒதுக்கீட்டின் மூலம் வசதி அடைந்தவரும் அதை விட்டுக்கொடுப்பதில்லை. பொங்குவோர் நிற்க அம்பேத்கார் தனது குடும்பத்தாருக்கு 14 ஆவது பிள்ளை. இன்றளவும் சேரிக்கு போய் பாருங்கள், மூத்த பிள்ளைகள் வேலைக்கு செல்ல 2 -3 குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும். ஊனமுற்றோர் தவிர எவருக்கும் இட ஒதுக்கீடு தேவையில்லை. திறமைக்கு மட்டுமே மதிப்பு, பிறப்புக்கு அல்ல. இதனால் தான் தனியார் நிறுவனங்கள் கோலோச்சுகின்ற அதே சமயம் அரசு நிறுவனங்கள் திவாலாகின்றன. அம்பானிகள் சர்மாக்களை கேப்டனாக நியமிப்பதில்லையா? பார்சி இனத்தை சேர்ந்த டாடா குழுமத்தை தமிழக கிராமத்து சந்திரசேகரன் நிர்வகிக்கவில்லையா?

 • ravichandran - avudayarkoil,இந்தியா

  துணிச்சல் மிக்க முதல்வர், பற்றற்ற துறவியால் தான் அணைத்து மக்களையும் ஒன்றாக பார்க்க முடியும் , ஆக நல்லது செய்ய சந்நியாசியால் தான் முடியும் , தற்போது நாட்டுக்கு சேவை செய்ய சந்நியாசிகள் தான் தேவை

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  பிற்படுத்த பட்ட தாழ்த்த பட்டவர்கள் இனி ஒரு ருபாய் கூட கோவில் பண்டிகை என்று செலவு செய்யாதீர்கள். அந்த பணத்தை சேர்த்து உங்கள் குழந்தைளுக்கு கல்வி சரஸ்வதியை விலை கொடுத்து வாங்குகங்கள்.

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  ஜாதி வேண்டாம் என்று சொல்லுபவர்கள் எத்தனை பேர் உங்கள் குடும்பத்தில் கலப்பு திருமணத்தை ஆதரிப்பீர்கள் ?

 • K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா

  ஒரு தேச பக்த்தானாக இந்த நல்ல முடிவை எடுத்த உ.பி., முதல்வர் பாராட்டுக்குரியவர். பாரதத்தின் மேம்பாட்டுக்கும், மற்றும் ஊழலை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது அவசியமே.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  (1947 -2017 )70 வருடம் ஆகி விட்டது. 3 தலை முறை உருவாகிவிட்டது இந்துக்களுக்கு, கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கு பல தலைமுறை உருவாகிவிட்டது. இன்னும் எதற்கு இந்த கேடு கெட்ட இட ஒதுக்கீடு. 1 ) இட ஒதுக்கீடு ஒரு தடவை தான் கொடுக்க வேண்டும். 2 ) முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு நிறுத்தவேண்டும் அவர்கள் மைனாரிட்டியிலிருந்து இப்பொழுது மெஜாரிட்டி ஆகிக்கொண்டு வருகின்றார்கள் (உதாரணம்-ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹைதெராபாத, லக்னோ போன்ற நகரங்கள்....) 3 ) இட ஒதுக்கீடு கல்வி நிலையங்களில் எதற்கு, மிகவும் நன்றாக பயிலும் தலைமுறை தான் நமக்கு அவசியம். இந்த ஒதுக்கீட்டினால் கேவலமான சமுதாயம் தான் உருவாகும். 4 ) இட ஒதுக்கீடு சுதந்திரம் அடைந்த போது கொடுத்தது, மற்றும் 30 ஆண்டுகளில் அதாவது ஒரு தலைமுறை உருவானதும் அதை நிப்பாட்ட வேண்டும் என்ற கோட்பாட்டுடன். ஆனால் இப்போது நடப்பது என்ன மைனாரிட்டி என்று இட ஒதுக்கீடு, எஸ்.சி.எஸ்.டி என்று இட ஒதுக்கீடு. பி.சி. யில் எம்.பி.சி., ஓ.பி.சி என்று இட ஒதுக்கீடு............ஒரு வரைமுறை இல்லாமல் இது தினத்தந்தி சிந்துபாத் கதை போல் தொடர்ந்து கொண்டே இருப்பது எவ்வளவு கேவலமாக மனிதன் மாறிவிட்டான் என்பதை தெளிவாகத் தெரிகின்றது. சம்ஸாரம் என்ற சாகரத்தில் நாமே தான் நீச்சலிட்டு மேலே வரவேண்டும் ஒரு மோட்டார் போட் (இட ஒதுக்கீடு) துணையுடன் அல்ல.

 • Meenu - Chennai,இந்தியா

  இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் ஜாதி என்கிற ஒன்றை மட்டும் சொல்லி சொல்லி அரசிடமிருந்து எல்லா சலுகைகளையும் பெற்று அனுபவிப்பது. இதனால் நாட்டின் வளர்ச்சியை பாருங்கள்? ஜாதி அடிப்படியில் கொடுப்பதை நிறுத்தி, இனி அனைவரும் போட்டிபோடவேண்டும், படிப்பிலோ, வேலையிலோ திறமை உள்ளவர்கள் வென்று வரட்டும். வெளிநாடுகளை, ஒரு வேலைக்கு ஆள் வேணுமென்றால், அந்த வேலைக்கு இருப்பதிலேயே யார் திறமையானவரோ அவரை தான் அந்த வேலையில் அமரவைக்கின்றனர். ஜாதி அடிப்படை என்று ஒன்று கிடையாது. ஜாதி என்பதை நாம் எல்லோரும் இனி மூட்டை கட்டி வைத்துவிட்டு, நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல, அடுத்த நாடுகளையாவது நாம் பார்த்து வாழ முயற்சி செய்வோம். ஜாதியை வைத்து காலம் பூரவும் சண்டை போட்டுகொண்டு இருப்பதில் அர்த்தமில்லை.

 • Meenu - Chennai,இந்தியா

  கண்டிப்பாக ஜாதி அடிப்படியில் படிப்பில், வேலையில் ஒதுக்கீடு செய்வதை இனிமேல் தொடர வேண்டாம். ஏன் ஓட்டப்பந்தயத்தில், முதல் பரிசு இன்ன ஜாதிக்கு, இரண்டாம் பரிசு இன்ன ஜாதிக்கு என்று வைக்கமே. இதை ஒலிம்பிக்கில் செயற்படுத்த வேண்டும் என்று கேட்கலாமே. அறிவுள்ள, திறமையுள்ள, புத்திசாலிகளுக்கு மட்டும் படிப்பிலும், வேளையிலும் சேர்க்க வேண்டும். எல்லோரும் விமானம் ஓட்ட வேண்டும் என்றால் யார்தான் பயணம் செய்பவர்? அதுபோல், ஜாதியை ஒரு காரணம் காண்பிச்சு படிப்பிலும், வேளையிலும் சலுகை வேண்டும் என்பதை இனியும் அனுமதிக்க கூடாது. அரை நூற்றாண்டுக்கும் மேல் சலுகை கொடுத்து போதும். சிங்கப்பூர், துபாய், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ரஷ்ய போன்ற நாடுகளை பாருங்கள். அங்கெல்லாம் ஜாதி என்று ஒரு முத்திரையை குத்தி, அதன் அடிப்படையில் எந்த படிப்பிற்கும் வேலைக்கும் சேர்ப்பது கிடையாது. அந்த நாடுகள் முன்னேறிக்கொண்டே போகிறது. நம் அரசியல் வாதிகள் தான் இந்த ஜாதி அடிப்படையில் படிப்பு தருவோம் வேலை தருவோம் என்று தன சுய நலத்துக்காக, நாட்டையே குட்டிசுவராக்கி வைக்கிறாங்க. யாராவது ஒரு நல்ல மனிதன் நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டவர் வரவேண்டும். இந்த பழைய உளுத்துப்போன சட்டத்தை மாற்ற வேண்டும். நாடு சுபிட்சம் அடையவேண்டும். சாதி மதம் பார்க்காமல், திறமை, அறிவை பார்த்து, ஒழிபிக்கில் எப்படி திறமை உள்ளவர்க்கு பரிசு கொடுக்கிறார்களோ அதோபோல் திறமை உள்ளவர்க்குதான் படிப்பு, வேலை என்கிற மந்திரத்தை கொண்டு வரவேண்டும். எனக்கு எந்த ஜாதியும் எதிரானவர் அல்ல. எல்லோரும் மனிதர்கள் தான். உழைப்பவன் தான் பலன் அடையவேண்டும், உழைக்காமல் கஷ்டப்படாமல் ஒதுக்கீடு அடிப்படையில் வாழும் முறையை ஒழிக்க வேண்டும்.

 • M U SHANKAR - BANGALORE,இந்தியா

  இவர்களின் கூட்டணி கட்சி தலைவர் ரேம் விலாஸ் பஸ்வான் தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு கேட்கிறார்களே. இந்திய முழுவதும் இட ஒதுக்கீடை ரத்து செய்யவேண்டும். இட ஒதுக்கீட்டால் 3 / 4 தலைமுறை பயன் அடைந்துள்ளது. இனியும் இட ஒதுக்கீடு தேவையா

 • Ramaswamy Sundaram - Mysore,இந்தியா

  .இட ஒதுக்கீடு என்பது உண்மையிலேயே வறுமையில் வாழும் மக்களுக்கு ...அவர்கள் எந்த குலத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் மட்டுமே கிடைக்கவேண்டும்...சபாஷ் யோகி....அடி பின்றீங்க

 • Indian - Bangalore,இந்தியா

  இடஒதுக்கீடு பற்றிய சரியான புரிதல் வேண்டும். அம்பேத்கர் அரசியல் சட்டத்தில் இடஒதுக்கீடு கொண்டு வரும் பொது இடஒதுக்கீடு தற்காலிகமான ஒன்று மற்றும் 10 வருடங்களுக்கு மேல் தொடர கூடாது என்றும் சொன்னார். தற்பொழுது இடஒதுக்கீடு இளைநிலை கல்வி, மேல்நிலை கல்வி, வேலை, பதவி உயர்வு என்ன 16 இல் ஆரம்பித்து 60 வரை தொடர்கிறது. இத்தனை நிலைகளில் பயன்பெற்றோர் அதை தாங்கள் ஒருமுறை அனுபவித்த பின் விட்டுதந்தால் தான் மற்றவர்களும் பயன்பெற முடியும். ஆனால் தற்பொழுது பயன்பெற்றவரும் அவரின் சந்ததியுமே மீண்டும் மீண்டும் பயன்பெறுகிறார். இதனால் அவர்களின் சமூகத்தில் மற்றவரும் பயன்பெறுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இடஒதுக்கீடு தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றும் சாதனமாய் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கவேண்டுமென்றால் ஒருமுறை பயன்பெற்றவர் மேலும் பயன்பெற கூடாது. SC , ST மட்டுமே இடஒதுக்கீடு வேண்டும். BC , OBC இக்கு இடஒதுக்கீடு கூடாது. கல்வி அனைவருக்கும் சமமாய் கிடைத்தாலே போதும். 2050 இல் இடஒதுக்கீடு நிறுத்தப்படும் என்பதை தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும். ஜாதி கொடுமை செய்வோர்க்கு கடுமையான தண்டனை தரப்படவேண்டும். தனியார்துறையில் இடஒதுக்கீடு கூடவே கூடாது. அது நாட்டின் எதிர்காலத்தையும் போட்டித்தன்மையையும் சிதைத்து விடும்.

 • சிந்திக்கும் வடிவேலு - Bangalore,இந்தியா

  சபாஷ். சரியான முடிவு. அதே மாதிரி இந்த சிறு பான்மையினர் ஐடா ஒதுக்கீட்டையும் நிறுத்துங்கள். சுதந்திரம் அடைந்து 70 வருஷம் ஆகியும் இன்னும் என்ன ரிசர்வேஷன் ?

 • Bharath - Puducherry ,இந்தியா

  இட ஒதுக்கீடு கண்டிப்பாக வழங்க வேண்டும். ஏனென்றால் நமது நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இடையே ஏற்ற தாழ்வு நிலை உள்ளது. இந்த இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால் அந்த நிலை மாறவேண்டும் என்று அரசாங்கம் நினைத்தால் சமூக வேறுபாடு பாட்டை நீக்க வேண்டும்.

 • Anbu - Fremony,யூ.எஸ்.ஏ

  சாதி அதிகமாக பாராட்டப்படும் மாநிலங்களில் naxalism தலை விரித்து ஆடுகிறது. தமிழ்நாட்டில் ஓரளவு சமூக ஏற்ற தாழ்வு குறைவாக இருப்பதற்கு காரணம் இட ஒதிக்கீடுதான், அதே காரணத்தினால் naxalism எடுபடாமல் போனது. வாழ வழி கிடைக்காதவன் தான் வன்முறைக்கு போகிறான். இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்டவர்களின் வரப்பிரசாதம். தமிழ்நாடு சமூக பொருளாதாரத்திலும் சரி GDP யிலும் நாட்டில் தலை சிறந்த மாணிக்கமாக இருக்க மறைமுக காரணன் 69 % ஒதுக்கீடு. சில குறைகளை நீக்கி, பிராமணர்களுக்கும் உள் ஒதுக்கீடு செய்தால் இன்னும் பலம் பெரும்.

 • Snake Babu - Salem,இந்தியா

  ஜாதிய ரீதியில் இடஒதுக்கீட்டை எதிர்க்கிறேன் , அனால் இடஒதுக்கீடு வேண்டும். உண்மையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்போர் இந்திய முழுவதும் உள்ளார்கள். வேண்டுமென்றால் பொருளாதார அடிப்படையில் கணக்கெடுங்கள். அவர்களுக்கு இடஒதுக்கீட்டை தாருங்கள். ஒட்டுமொத்தமாக நீக்காதீர்கள். . அனைவரும் சமமாக வரும் பொது இடஒதுக்கீட்டை நீங்கள் நீக்கலாம். சமமாவதற்கு வழி வகை செய்யுங்கள். அப்புறம் இட ஒதுக்கீட்டை யோசிக்கலாம்.

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  இட ஒதிக்கீட்டில்னால் தான் ஜாதி அமைப்பு வந்தது போல் பேசுகிறார்கள். தகு தான் முக்கியம் என்றால் உங்கள் வீடு பெண்களுக்கு ஜாதி வித்தாயசம் பார்க்காமல் சிறந்த ஆன் மகனுக்கு திருமண செய்து வைப்பேர்களா ? அல்லது நீங்கள் தான் எல்லா ஜாதியும் சமம் என்று பார்த்து திருமண செய்து கொண்டீர்களா ?

 • R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா

  When the Reservation was introduced, it was with the very main intention of "Upliftment of downtrodden" only for a certain period. But, subsequently, it has become a vote bank politics. In this process, what had happened, even if a downtrodden student achieves excellent academic records and get placement, rest tend to feel that he got it through reservation only. Hence, the inequality bound to widen only. Only way is "Compulsory and common education to one and all", and imparting knowledge to all rests with the teachers. Teachers performance need to be assessed annually, and if required, show the door, so that they can look for a better livelihood. Teaching is such a pious profession that requires certain degree of self - discipline combined with thorough knowledge, which we totally lack these days. Hope present PM take remedial measures for inclusive growth of all.

 • pmrani - Delhi,இந்தியா

  நேற்றுவரை இந்தி ஒழிக வடக்கு வாழ்கிறது என்று கூவியவர்கள் இன்றைக்கு ஒன்றும் இல்லாத தவறான செய்திக்காக இவ்வாறு கருத்து கூறுவது ஏன் ? அப்புறம் எத்தனை வருடங்கள் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும்? ஒரு கிராமத்தில் படிக்கும் 100 பேருக்கும் ஒரே மாதிரியான படிப்புதான் கிடைக்கிறது அதில் 60 பேர் தேர்வுகளில் 20 விழுக்காடு மதிப்பெண் வாங்கினாலும் மேல் வகுப்பிற்குச் செல்லலாம் ஆனால் மீதி உள்ள 40 பேர் 95 விழுக்காடு மதிப்பெண் பெற்றாலும் மேல் வகுப்பிற்குச் செல்ல முடியாது இது எப்படி நீதியாகும் ? இங்கே கருத்த்துகூறியிருக்கும் அத்தனை பேரும் இட இதுக்கீடு மருத்துவரிடம் தங்களது சிகிசிச்சைக்காக போவார்களா ? ஏன் சிலர் வடஇந்தியா சென்று தங்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர் ? இட ஒதுக்கீடு சலுகைகள் பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும்தான் கொடுக்க வேண்டும். அம்பேத்கர் 10 வருடம் என்று ஆரம்பித்த சலுகை அரசியல் வாதிகளால் என்றஎன்றைக்கும் என்று ஆகி விட்டது. தகுதி உள்ளவர்கள் முன்னேறினால் நாடு முன்னேறும் இல்லாவிட்டால் அரசு நிறுவனங்களை போன்று ஊழல் மலிந்து, தகுதி இல்லாத நாடாக இந்திய முழுவதுமே மாறிவிடும்..

 • Raajan - Mumbai,இந்தியா

  ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது என்று அலறுகிறார்களே, ஏன் சென்னையில ஜாதி கேக்காம வாடகைக்கு வீடு கொடுக்கட்டும் பார்போம். ஒரு நல்ல வேலையில நல்ல குடும்பமாக இருந்தாலும் நீங்க என்ன ஜாதி என்றுதான் கேட்க்கிறார்கள். தாழ்த்தப்படடவர் தன்னுடைய சமூகத்தை மறைத்துதான் hotel தொழில் செய்யவேண்டிஉள்ளது. ஆந்திராவில் ஒரு தாழ்த்தப்பட்ட பொண்ணு சமையல் செய்றாருன்னு, குழந்தைகள பள்ளிகூடுத்துக்கு அனுப்ப மாட்டோம்னு சொல்லும்போது என்ன செய்தார்.

 • mindum vasantham - madurai,இந்தியா

  கிரீமி லேயர் என்று பிற்படுத்த பட்டவர்களுக்கு கொண்டு வந்தது போல் அணைத்து பிரிவுக்கும் கொண்டு வர வேண்டும் .....

 • தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா

  இட ஒதுக்கீடு என்பதின் முழு அர்த்தம் தெரியாமல் கருத்து கூறும் நண்பர்கள் முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் நாடார் , கள்ளர் , வன்னியர், முஸ்லிமோ இதுபோல் தனி சாதி மத சேர்ந்த வர்கள் நடத்தும் கல்லூரிகளில் அவர்கள் தன சாதி சனத்துக்கு மட்டும் ஸீட் கொடுத்து படிக்கவைத்தால் ஏனைய இன மக்களுக்கு யார் வாய்ப்பு கொடுப்பார்கள் மேலும் அவ்வளவு பேருக்கும் வாய்ப்பு அளிக்க அரசால் முடியுமா அதனால் தான் கல்லூரி நடத்த தனியாருக்கு வாய்ப்பளித்து அதில் சமூகத்தில் பிற்படுத்த பட்டமக்களுக்கும் வாய்ப்பு அளிக்க உதவத்தான் இந்த ஒதுக்கீடு புரிந்து கருத்து சொல்லுங்கள் மக்களே

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  Thanks adiyanath Insha Allah good news for Muslims

 • குண்டலகேசி - chennai,இந்தியா

  சூப்பர் சூப்பர் சூப்பர் சார். கலக்குங்க.

 • Anbu - Fremony,யூ.எஸ்.ஏ

  எங்கெல்லாம் ஜாதி வெறி உள்ளதோ அங்கே naxalite உள்ளார்கள்.இன்று தமிழ்நாடு பல விஷயங்களில் முன்னோடியாக இருக்க காரணம் ஓரளவு சமூக நீதியும் சமத்துவமும் தான் காரணம். அதற்கு ஐடா ஒதுக்கீடு மிக பெரிய காரணம். ஒரே ஒரு நாள் கிராமங்களில் வாழும் தலித்துகள் வேலையை செய்து பாருங்கள், பின்னர் உங்களுக்கு புரியும் இடஒதுக்கீட்டை பற்றி. வாழ்வில் விரக்தி அடைந்தவர்கள் naxalite என்ற போர்வையில் வன்முறையை கையில் எடுக்கிறார்கள். இட ஒதுக்கீட்டை அழித்து நாட்டை சுடு காடாக்காதீர்கள். இட ஒதுக்கீட்டில் பிரச்சினையைகள் இல்லாமல் இல்லை. அதை சரி செய்ய வேண்டுமோ ஒழிய வாய் புளித்தகாதோ மாங்காய் புளித்தது என்று பேச கூடாது.

 • Unmai Vilampi - Noida,இந்தியா

  எதிர்பார்த்த .....மான முடிவு. ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது தனியார் கல்லூரிகளின் 50 -100 சீட்டுகளை ரத்து செய்தால் மட்டும் வந்து விடாது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது உ.பி யில் படிப்பறிவு குறைவு, வேலைவாய்ப்பு குறைவு, தனி நபர் வருமானம் குறைவு. தோல் தொழிற்சாலைகளின் கழிவுகளால் கங்கை மாசு பட்டு பயன்படுத்த முடுயாத அளவுக்கு போய் விட்டது. குற்றங்கள் அதிகம். இதையெல்லாம் செய்ய துப்பில்லை. மனுதர்மத்தை நிலை நிறுத்தி மதத்தை ஆதிக்கம் செய்யும் இந்துத்துவா சக்திகளின் வேலை. இவர்களிடம் வேற என்ன எதிர் பார்க்க முடியும்

 • Tamilsudar - Tamilnadu,இந்தியா

  இட ஒதுக்கீட்டால் பயன்பெற்ற குடும்பம் மீண்டும் மீண்டும் பயன்பெறுவதை தடுத்துவிட்டாலே சில ஆண்டுகளில் பொருளாதாரம் பரவல் ஏற்படும். பயன்பெற்றோர் தான் சார்ந்த சமூகத்தினருக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். எல்லா நிலையிலும் சில காலம் தொடர்ந்தால் இடஒதுக்கீடை மறு பரீசிலனை செய்யலாம். கற்றல் வாய்ப்பு சமமாக இருக்க வேண்டுமே...பணக்காரன் படிப்பும், ஏழையின் படிப்பும் இந்த தேசத்தில் ஒன்றென்றால் இடஒதுக்கீட்டை குறைக்கலாம். இதை அரசுப் பள்ளிகளில் படிப்போருக்காவது சில காலம் தொடர்ந்து இருக்க வேண்டும்.

 • Anbu - Fremony,யூ.எஸ்.ஏ

  இது தவறான முடிவு. இங்கே யோகியை ஆதரிக்கும் அன்பர்களுக்கு பல கேள்விகள் உண்டு. தலித்துகள் அங்கே மிருகத்தை விட கேவலமாக நடத்த படுகிறார்கள். தலித் பெண்கள் நிர்வாணமாக பொது இடத்தில நிறுத்துவது, கற்பழிப்பு, மாட்டை காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று தலித்துகளின் வாழ்வாதரத்தை அழித்து பல கொலைகள் செய்வது போன்ற செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தலித்துகள் 90 % சேரிகளில் வாழ்கிறார்கள். இங்கே இட ஒதுக்கீடு வேண்டாம் என்பவர்கள் எதனை பேர் சேரியில் வாழ்ந்தவர்கள் அல்லது வாழ்கிறவர்கள். AC அறையில் உட்காரர்ந்து கொண்டு தீண்டாமையை ஆதரிப்பவர்கள் இட ஒதுக்கீட்டை பற்றி பேச கூடாது.

 • deepan - chennai,இந்தியா

  Bad decision.

 • velimalaya - Chennai,இந்தியா

  எல்லாருக்கும் எல்லாம் எண்ட முனைப்பில் ஆட்சி நடத்துகிறார் யோகி.இங்கு மொத்த தமிழ் நாடே எங்களுக்கு தான் என்று ஆட்சி நடத்துகிறார்கள். விதி யாரை விட்டு போகும்,நமக்கு வாட்சத்து இப்படி.

 • Enrum anbudan - dammam,சவுதி அரேபியா

  இப்பொழுது உள்ள இடா ஒதிக்கீட்டினால் ஓராயிரம் கர்ணன்கள் தான் உருவாவார்கள்.

 • marine blue - Delhi,இந்தியா

  அது என்ன தனியார் கல்லூரிகளுக்கு மட்டும் ? அரசு கல்லூரிகளில் இட ஒதுக்கீடு தொடருமா ?

 • Meenu - Chennai,இந்தியா

  அருமையான முடிவு. இது போல் எல்லா துறைகளிலும் எல்லா மாநிலத்திலும் கொண்டு வந்தால், அரசு துறைகளில் லஞ்சம் குறையும், அறிவுள்ளவர்கள், புத்திசாலிகள் இருப்பர். அரசு எந்திரம் நன்கு செயல்படும்.

 • mathan - chennai,இந்தியா

  இங்கே நியாயம் பேசுபவர்களிடம் எனது கேள்வி ஒன்று தான் ... கல்வி நிலையங்களில் ஜாதியும் இட ஒதுக்கிடும் வேண்டாம் சரி அப்ப கோவில்ல என்னடா நடக்குது அங்கேயும் ஜாதி பாராமல் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் துணிவு உண்டா?

 • Rams -

  Oh! Great. At last good sense prevailed. May this tribe grow!!

 • Rajarajan - Thanjavur,இந்தியா

  மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் தவிர, மற்றவர்கள் இடவொதுக்கீட்டுக்கு தகுதி அற்றவர்கள். போகிற போக்கை பார்த்தால், பொது கழிப்பறையை உபயோகப்படுத்த கூட, இடவொதுக்கீடு கேட்பர் போல உள்ளது. ஜாதியைவைத்து இடவொதுக்கீடு கோட்போர் இருவர் மட்டுமே. ஒன்று, ஜாதிய அரசியல்வாதிகள். எங்கே தங்களது தனி தொகுதி என்ற ஒதுக்கீடு பறிபோய்விடுமோ என்ற பயம். இரண்டாவது, கல்வி மற்றும் அனைத்து துறைகளிலும், பொது போட்டி திறனுக்கு தங்களது தகுதியை வளர்க்காத சோம்பேறிகள் / முட்டாள்கள் மற்றும் நோகாமல் நொங்கு தின்ன நினைப்போர்.

 • sivaram - singapore,சிங்கப்பூர்

  முதலில் sc st சலுகைகளை ரத்து செய்யுங்கள் இன்னும் எத்துணை வருடம் இலவச சலுகை கொடுப்பீர்கள்

 • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

  “பேய் அரசாண்டால்... பிணம் தின்னும் சாத்திரங்கள்” சொன்னது... மகாகவி சுப்பிரமணிய பாரதி அய்யர்... அதைப்போலவே... “ஆடுவோடுவோமே... பள்ளு பாடுவோமே... ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று.... ஆடுவோமே”ன்னு பாட்டு பாடி... ஆட்டம் போடுவது மேல்சாதி கும்பல்.... ஏற்கனவே உ.பி.-ல என்ன “சமதர்ம சமுதாயமும்... சமூகநீதியுமா” வாழுது... போன மாதம் கூட வைரலா ஒரு வீடியோ வாட்ஸ்அப்-லேயும்... பேஸ்புக்லேயும் பரவுச்சே... ஊருக்குள் குடிதண்ணீர் பிடிக்க வந்த பெண்களை நிர்வாணமா நடுரோட்ல அடிச்சு... அதையும் படம் பிடித்து வெளியிட்ட “மிருகங்கள்”... தானே இன்னும் வடநாட்டிலேயும்... உ.பி.லேயும் சுத்திகிட்டு இருக்கு...

 • chails ahamad - doha,கத்தார்

  ஊழலில் கொழுத்து இருக்கும் அரசியல்வாதிகளை கண்காணிப்பதில் அக்கறை கொள்ளாது , பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் பிள்ளைகள் தடையற்ற மருத்துவ கல்வியும் பெற்றிட நம்மை ஆண்டு சென்றவர்கள் வகுத்து வைத்த வழி முறைகளில் தற்போது உ. பி முதல்வர் அவர்கள் கை வைத்துள்ளார் , இட ஒதுக்கீடு உள்ள போதே பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் அத்தனை எளிதாக மருத்துவ கல்வியை பெற்றிட இயலாது , அவர்களை எந்த வகையிலாவது தகுதி நீக்கம் செய்து அந்த மாணவருக்கு உரிய இடத்தை வேறு மாணவருக்கு ஒதுக்கிடவே ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகளும் , கல்லூரி நிர்வாகிகளும் , அதிகாரிகளும் கையூட்டாக பெரும் தொகைகளை பெற்றே ஊழலில் திளைத்தார்கள் , தற்போது இட ஒதுக்கீடு ரத்து செய்ததின் மூலம் பிற்படுத்தபட்ட சமுதாய மாணவர்கள் மருத்துவ கல்வி பெறுவது கனவில் தானே எண்ணி பார்க்க முடியும் என்பதை எண்ணி நம் மனது வேதனையடைகின்றது , காசு உள்ளோருக்கே கல்வி என்ற நிலைகளை உருவாக்கிட இன்றைய உ பி முதல்வர் யோகி அவர்கள் முயற்சிக்கும் வேளையில் , நாம் ஒன்றை நினைவு கொள்ள வேண்டியது அவசியமாகின்றது , ஆமாம் உயர் சாதியினருக்கு அடிமைகளாய் கை கட்டி , வாய் பொத்தி சேவகமாற்றிட பள்ளர்களும் , பறையர்களும் , இன்னும் பிற்படுத்தப்பட்ட வகையினர்கள் அனைவரும் உயர் கல்வி கற்றிட கூடாது என்ற வர்ணாசிரம முறைக்கு கட்டுபடுத்த முயற்சிக்கின்றார்கள் என்பதை நினைவில் கொள்வது அவசியமாகின்றது.

 • Laser Eyes - Chennai,இந்தியா

  (தனியார்) மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவமனைகளில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி.,க்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக அதிரடி அறிவிப்பை ஆதித்யநாத் வெளியிட்டுள்ளார். தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கொண்டாட்டம்தான். இனி டொனேஷன் தலை தூக்கும்.

 • Sundar - Madurai,ஐக்கிய அரபு நாடுகள்

  சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் ஆன பின்னும் இனி ஒதுக்கீடுகள் தேவை இல்லை. For sixty years oppertunities are given to those SC, BC etc., resulting generation corruption, bad administration, fittest persons are nt ed dueto thisquota tem. தகுதி எல்லோருக்கும் ஒன்றாக இருக்கவேண்டும்...பூனைக்கு மணி கட்ட ஒருத்தன் வந்துள்ளான். இந்த துணிச்சல் இதுவரை ஒருவனுக்கும் வந்ததில்லை. This quota tem in employment and in educational institutions in private and government should be stopped to implement the dream of Clean India

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  ஆணழகன். சிக்ஸ் பாக்ஸ் காட்டுபவன் ஆணழகன் இல்லை..தைரியத்தை காட்டுபவன் தான் ஆணழகன். இந்தியாவின் மூன்றே மூன்று பேர்கள் தான் ஆணழகன் தகுதி பெற்றவர்கள்...உலக எதிர்ப்பையும் மீறி வெடிகுண்டு சோதனை நடத்திய, கார்கில் போரில் பாக்கியின் முதுகெலும்பை முறித்த வாஜ்பாய், பக்கிற்குள் அதிரடியாக ராணுவத்தை அனுப்பி அங்கிருந்த 28 ற்கும் மேற்பட்ட மூர்க்க பயங்கரவாத முகாம்களை துடைத்தெறிந்த , அதிரடியாக பண நோட்டு தடை செய்த மோடி அவர்கள், மற்றும் உத்தர பிரதேசில் கலக்கி கொண்டு இருக்கும் இந்த யோகி இந்த மூவரும் தான் ஆணழகன்கள். வீரம் நிறைந்தவர்கள் என்று காண்பித்திருக்கிறார்கள். நினைத்து பார்க்க முடியாத செயல்களை சாதித்து காட்டி கொண்டு இருக்கிறார்கள். இந்தியா இதுவரை பார்த்தறியாத பணிகள் இவைகள். தொடரட்டும் இந்த அதிரடிகள் அடுத்த 10 ஆண்டுகளுக்காகவது. இதற்கு மேலும் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக முன்னேற வில்லையென்றால் அது கொடுமையிலும் கொடுமை. கான் கிராஸ் என்ற தேசத்துரோக ஆட்சியினால் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தியா தனது அற்புத தருணங்களை இழந்தது போதும். காற்று வரட்டும்..நரிகளே ஒதுங்குங்கள்..

 • nalavirumbi - SGP,சிங்கப்பூர்

  எந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு ரத்து ? இவர்களிடம் ஏதும் சென்சஸ் /சர்வே இருக்கா .எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒரு பன்முகம் கொண்ட நாட்டில் செய்தால் எதிர்ப்பு தான் வரும் சமூகத்தில் பின் தங்கிய நிலையில் இருக்கும் மக்களுக்கு என்ன தீர்வு ? முதலில் இந்தியாவில் இந்தியாவை விடுங்கள் UP இல் பழங்குடியினர் மற்றும் சமூகத்தில் மிகவும் பின் தங்கிய மக்களுக்கு என்ன தீர்வு ? இந்த அரசு முதலில் ஒரு அரசாங்க மற்றும் தன்னார்வ குழு வைத்து சர்வே செய்து அதன் மூலம் தெளிவாக திட்டம் தீட்டி செய்து இருந்தால் வரவேற்க வேண்டிய விடயம் முதல் அமைச்சர் பதவி வந்தவுடன் அதிகார சர்வாதிகார நிலை நீண்ட நாள் நீடிக்காது .இது பன்முகம் பல கலாச்சார (Diversity in Integrity ) கொண்ட நாடு . யாரும் இதை மறந்து விட வேண்டாம் . ஒதிக்கீடு முறை ஏன் கொண்டு வந்தார்கள் என்ற பின் புலத்தை படித்த அறிவாளிகள் புரிந்து கொள்வர் .. 25 கோடி மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளார்கள் ? -World Bank official Report . வறுமை ஒழிக்க இந்த முதல்வரிடம் பதில் உண்டா. முதல்ல வறுமை ஒளித்து தலைமை மாநிலம் உயர்த்தி காட்டி விட்டு பின்னர் ரத்து செய்தால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் .பத்திரிகைகளும் நாடு நிலை வகிக்க தவறி விடுகின்றன .புலி வால் புடித்த கதை தான் மிஞ்சும் இந்த உலகில் இந்த உலகம் எல்லோரும் வாழ ,மகிழ்ச்சியாக வாழ இறைவனால் /கடவுளால் /இறை ஆற்றலால் படைக்கப்பெற்றது . இதை வீண் செய்யாமல் , எல்லா மக்களும் நிறைவுடன் வாழ உண்டான வழிவகைகளை அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய கடமை .இதை விடுத்து மதம் கடவுள் /பணம் என்ற புலி வாலை பிடித்தால் ..இந்த சமூகம் சீர் கேடு தான் மிஞ்சும் இது நிதர்சனம் படித்த ..பணம் உள்ள மக்கள் வேறு நாடுகளுக்கு புலம் பெயர 14 வருடமாக வெளி செல்ல ஆரம்பித்து விட்டார்கள் .... நீதி மன்றம் சாட்டை தான் கிடைக்கும் .கிடைத்து இருக்கும் வாய்ப்பினை பயன் படுத்த தவறி விட வேண்டாம் ..வருடம் ஓடி விடும் இவர் ரத்து செய்வது அதனை அரசியல் காட்சிகள் எதிர்ப்பது இப்படியே ஓடி விடும் நேரம் வீண் விரயம் தான் ஆகும் முதல்ல அந்த மாநில மக்களின் வறுமை மற்றும் வாழ்வாதாரம் போன்ற முக்கியவற்றில் கவனம் இருந்தால் செய்தால் காலம் போற்றும் இல்லையேல் தூற்று தான் மிஞ்சும்

 • a.ganesan - tirnelveli,இந்தியா

  அது ஏன் தனியார் கல்லூரிகளில்மட்டும் அரசு கல்லூரிகளை இட ஒதுக்கீடு உண்டோ

 • krishnamoorthy -

  wow . it should be followed throughout India. No community discrimination. But most importantly he has to streamline education and employment throughout UP to make this law a Super Success. So that people shouldnt think this law has grabbed the basic rights of sc and st.

 • Jayaram - Tirupur,இந்தியா

  Very good decision.No reservations needed for education.smart intelligent person may affect by reservation policy. Implement to the entire nation

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  அனைவருக்கும் தரமான கல்வியை கொடுத்தால் இட ஒதுக்கீடு என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய் விடும்...

 • Jayaram - Tirupur,இந்தியா

  Good.appreciate it.In education it's must.

 • "????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா

  அங்கே செய்வது போகட்டும் அதுபற்றி அந்நாட்டு மக்கள் பார்க்கட்டும் முடிந்தால் தமிழ்நாட்டில் கைவைத்துப்பார்

 • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

  "இந்நிலையில் மாநில மேம்பாட்டு மற்றும் ஊழலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவமனைகளில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி.,க்கான இட ஒதுக்கீட்டை ரத்து " inimel ulal indri manilam valarchi perum??????

 • Sampath Kumar - chennai,இந்தியா

  அக்கா ஒட்டு மொத்த சீட் பெரமும் பிஜேபி கையில் நல்ல வசூல் வேட்டை

 • karthikeyan -

  எலல ஸடேட்ஸிலேயும் செய்ய வேண்டும் . மோடி தான ஜெயிப்பார்

 • Madhav - Chennai,இந்தியா

  முதலில் ஆயிரமாயிரண்டு கருவறை இட ஒதுக்கீட்டை இரத்து செய்யுங்கள். தேச நேசன் கருத்துக்களை வரவேற்கிறேன்.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  வெல்டன் யோகி .....இங்கு பாஜக க்கு ஆதரவா கருத்து எழுதும் தேச நேசன் போன்ற பலகோடி பேரை பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடை எடுப்பதற்கு, உங்களை போன்ற ஒரு தலைவர் தான் நாட்டுக்கு தேவை... விரைவில் மோடியின் இடத்தை பிடிக்க வாழ்த்துக்கள்...

 • kuppuswamykesavan - chennai,இந்தியா

  இந்த விசயத்திற்கு, சம்பந்தப்பட்ட துறைகளை சார்ந்த , அதை பற்றி நன்கு அறிந்த, அனைத்து தரப்பு மக்களைச் சேர்ந்த நிபுணர்களும் மூத்தோர்களும் அளிக்கும் ஒப்பீனியன்கள்தான் மிகவும் சரியாக இருக்கும் என நான் நினைக்கிறேன். இது அனைத்து சமுதாய மாணவர்களின் எதிர்கால வாழ்கை முறையை உருவாக்கப்போகும் விசயமாகும்.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  Very good decision and will be appreciated by all of our country and intelligent people.All states must follow this and encourage the merit tems .By this tem the real ,eligible ,dynamic and intelligent students will get benifits and the lost glory of our educational tems may regain again and our country will be again on the top of the Globe once again in future.

 • K.Palanivelu - Toronto,கனடா

  நான் பிற்பட்ட ஜாதியை சேர்ந்தவன் என சொல்லியே மக்களை ஏமாற்றி லஞ்சஊழல் செய்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்து ஜாதி அரசியல் செய்யும் முறை இதுபோலவே ஒதுக்கீடு அமுல் செய்யும் மாநிலங்களில் நாளடைவில் மறையும்.

 • R. Ganesan - CHENNAI,இந்தியா

  It is a good move by UP CM. To be appreciated. Benefits and facilities can be given to those who are eligible. But ion process must be purely on merit basis and subject to passing out of required entrance exams too. (considering our future). Quality is very important to sustain and grow in each and every area/field.

 • சீனியம்மாள் -

  இதை இந்தியா முழுவதும் அமுல் படுத்தினால் இந்தியா வல்லரசு ஆகும் நமதுபிரதமர் காலத்தில் அதை அடைவோம்

 • Yuva -

  Enough for SC ST OBC. Stop it all over India

 • Balaji - chennai,மத்திய ஆப்ரிக்க குடியரசு

  very good decision, மிகவும் வரவேற்கத்தக்கது, படிப்பில் எதற்கு ஜாதி் மத பாகுபாடு ? நன்கு படித்து மதி்ப்பெண் வாங்குபவர்கள் எந்த ஜாதி்யாக மதமாக இருந்தாலும் இடம் கிடைக்க வழிவகை செய்யும். அரசியல் வாதி்கள் இந்த விஷயத்தை பயன்படுத்தி் இனிமேல் மக்களிடம் பணம் பிடுங்க முடியாது.

 • Natarajan -

  Modiji please go and learn UP chief minister

 • கூமுட்டை - Panchgani,இந்தியா

  நான் இதை வரவேற்கிறேன். இந்தியாவில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை மனித உரிமைக்கு எதிரானது. இதை மறு ஆய்வு செய்யும் நேரம் வந்து விட்டது.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நல்ல ஆரோக்கியமான நடவடிக்கை... சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் ஆன பின்னும் இனி ஒதுக்கீடுகள் தேவை இல்லை...

 • Body soda - Bishan,சிங்கப்பூர்

  இவரு மாதிரி தமிழ்நாட்டுக்கு ஒருவர் கிடைக்க மாட்டாரா?

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  வினையின் ஆரம்பம் தொடங்கி விட்டது.... இனி அங்கு அல்லோகலப்படும்... ஸ்டார்ட் ம்யூசிக்.... [ ஆமா அப்படின்னா , இந்த யோகி , மோடியை விட அதிரடி மன்னன் என்றால், மோடியை நீக்கிவிட்டு, யோகியையே பிரதமராகி விடலாமே... அதிரடி அதிரடியா செய்வாரே?... இப்போதெல்லாம் மோடி கையில் அதிகாரம் இல்லை என்று நமக்கு புலப்படுகிறது...RSS கையில் தான் அனைத்து அதிகாரமும் உள்ளது... நாலு நாட்களுக்கு முன்னர் மோகன் பகவத், இடஒதுக்கீட்டை ரத்து பண்ணனும்ன்னு பேசினாரு... மோடி செய்யல...ஆனா யோகி செஞ்சிட்டாரு...ஆக, யோகியை பிரதமராக்கினால் தான் RSS இன் கனவுகள் நிறைவேறும்... செய்வார்களா?. ]

 • தமிழரசன் - பாளையங்கோட்டை ,இந்தியா

  பூனைக்கு மணி கட்ட ஒருத்தன் வந்துள்ளான். இந்த துணிச்சல் இதுவரை ஒருவனுக்கும் வந்ததில்லை.

 • Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  சரியான முடிவு , இதையே இந்தியா முழுவதும் கொண்டு வரவேண்டும். கல்வியில் எதற்கு ஜாதி மத அடிப்படையில் ஒதுக்கீடு ? நன்கு படிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் இடம் பெறட்டும் - அது யாராக இருந்தாலும் வரவேற்போம். இதையும் வழக்கம்போல் பிஜேபி , இந்துத்வம் என்று எதிர்ப்பவர்கள் இருப்பார்கள் - அம்மா பாணியில் "திராணி இருந்தால் படித்து சீட் வாங்குங்கள்".

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  நல்ல முடிவு... பின்தங்கியவர்களுக்கு தகுதி பெற அரசு எல்லா உதவிகளையும் வழங்கலாம்... தகுதி எல்லோருக்கும் ஒன்றாக இருக்கவேண்டும்...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  மிகப்பெரிய தவறு அங்கு அரசு மருத்துவக்கல்லூரிகளே குறைவு உபியில் இன்றுவரை பல மிகவும் புறப்பட்ட சமுதாயங்கள் ஹரிஜன்கள் மருத்துவக் கல்வி பக்கமே வந்ததில்லை பணத்திற்கு மெடிக்கல் சீட் விற்கும் கடைகளில் சில ஏழைகளுக்காவது இடம் கிடைத்து வந்தது இப்போது அதற்கு வேட்டு உண்மையில் இவர் செய்யவேண்டியது சாதி சான்றிதழ் மோசடிகளை தடுப்பதுதான் முலாயம் மேலுள்ள கடுப்பில் இதுபோல செய்யவே கூடாது சுப்ரீம் கோர்ட்டில் வறுத்து எடுத்துவிடுவார்கள் ஹரிஜனங்களுக்கும் மிகவும் கேடு செய்யும்

 • சென்னை பாலன் - Chennai,இந்தியா

  அருமையான முடிவு. பாராட்டுக்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement