Advertisement

ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் ரத்து: மந்திரி வீட்டில் சோதனையை அடுத்து அதிரடி

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை, தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளதாக, நேற்றிரவு தகவல் வெளியானது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, நேற்றிரவு, 11:30 மணிக்கு வெளியானது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில், ஓட்டுக்கு பணம் வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியதால், தேர்தல் கமிஷன், ரத்து முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், பணத்தை வாரி இறைத்த, அ.தி.மு.க., அம்மா அணி வேட்பாளர், தினகரன்
கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி, எம்.எல்.ஏ., வாக இருந்த ஜெயலலிதா காலமானதை
அடுத்து, இத்தொகுதிக்கு, ஏப்., 12ல் இடைத் தேர்தல் நடத்தப்படும் என, தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.

தேர்தலில், அ.தி.மு.க., அம்மா அணி சார்பில், அக்கட்சியின் துணை பொதுச் செயலராக அறிவிக்கப்பட்டுள்ள தினகரனும், அ.தி.மு.க., புரட்சி தலைவி அம்மா அணி சார்பில், முன் னாள் அமைச்சர் மதுசூதனனும் வேட்பாளர் களாக களம் இறங்கினர். தி.மு.க., சார்பில், மருதுகணேஷ் உட்பட, மொத்தம், 62 பேர் களமிறங்கினர்.

எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக, தினகரன் பணத்தை வாரி இறைத்து வந்தார். தேர்தல் கமிஷன் கெடுபிடி களை மீறி, ஓட்டுக்கு, 4,000 ரூபாய் பணத்தை, தன் ஆதரவாளர்கள் மூலம், வாக் காளர்களுக்கு வழங்கிய, 'வீடியோ' காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவின.

இதையடுத்தும், மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும், இரு தினங்களுக்கு முன், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள்
மற்றும் தொழில் நிறுவனங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. குறிப்பாக, ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர் களுக்கு, ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வழங்கியது தொடர்பான ஆவணங்களும் கிடைத்தன.
இந்த ஆவணங்கள், நேற்று முன்தினம் வெளியாகின. அதில், அ.தி.மு.க., அம்மா அணி, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களான, முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் மற்றும் வைத்தி லிங்கம் எம்.பி., மூலம், 85 சதவீத வாக்காளர் களுக்கு, 89.65 கோடி ரூபாய் வினியோகம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த அமைச்சர்கள், ஜூனியர் அமைச்சர்கள் மற்றும், எம்.எல்.ஏ.,க்கள் மூலம், பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங் களும் சிக்கி உள்ளன. ஒவ்வொரு வரும், எவ்வளவு வாக்காளர்களுக்கு, எவ்வளவு பணம் கொடுத்தனர் என்ற விபரமும் இடம் பெற்று இருந்தது.

இதையடுத்து, மாநில தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சிறப்பு தனி தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா ஆகியோர் டில்லிக்கு விரைந்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் வழங்கியது குறித்து, தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில், நேற்று நடந்த ஆலோசனையில் இவர்கள் பங்கேற்றனர்.

நேற்று காலை துவங்கி, இரவு வரை நடந்த நீண்ட ஆலோசனைக்கு பின், தேர்தலை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்றிரவு, 11:30க்கு வெளியானது.

- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (260)

  • Visu Iyer - chennai,இந்தியா

    தேர்தல் ரத்து நீதி விசாரணை நடத்துமா?

  • Visu Iyer - chennai,இந்தியா

    இந்த பணம் கணக்கில் காட்டப்பட்டதா இந்த பணம் எந்த கணக்கில் இருந்து வந்தது.. இவர்களுக்கு இத்தனை பணத்தை தந்தது யார் நமக்கு சில ஆயிரம் வாங்க எத்தனை நாள் காத்து இருந்தோம். இத்தனை கோடியை இவர்களுக்கு தந்தது யார் மோடி அரசு என்ன செய்யும்.. இது தான் கருப்பு பண ஒழிப்பா அல்லது டிஜிட்டல் இந்தியாவா

  • Sivan Mainthan - Coimbatore,இந்தியா

    தினகரனுடன் சேர்ந்து வெடிங் ஒர்க்கஸாப் வச்சிருந்தவர், அய்யய்யோ என்கூட இருந்த வெல்டிங் குமாரு இப்போ பெருங்கோடீஸ்வரன் நான் மட்டும் இன்னும் இத்தைகட்டீட்டு அழறேன் என்று பலபேரிடம் வருத்தப்படுவதாக செய்தி. சினிமாவுல ஒரே சீன்ல கோடீஸ்வரன் ஆனா ஒத்துப்பீங்க, எங்கண்ணன் ஆனா எகிறுவீங்க. அவரு மொகத்த பாருங்க பால்வடியற முகமா சிரிக்கிறார். டேய் எவண்டா அவன் இஞ்சித்தின்ன கொரங்காட்டம்னு சொன்னவன்......

  • Visu Iyer - chennai,இந்தியா

    லட்சத்தில் சொத்து உள்ளவருக்கு கோடியில் அபராதம் போட்டு இருக்காங்க.. இப்போ இத்தனை கோடி கொடுத்து இருக்காங்க.. இந்த புதிய ருபாய் எங்கிருந்து வந்தது.. இது பற்றி மோடி அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்.

  • Visu Iyer - chennai,இந்தியா

    தேர்வு விதிகளை மாணவர் கடைபிடிக்கவில்லை என்றால் மாணவரை தானே தண்டிக்கணும் தேர்வையா ரத்து செய்யனும் போன் சரியா வேலை செய்யலைனா போனை தானே மாத்தணும் போன் கம்பெனியை யா மூடனும் ⁠⁠⁠வங்கி ஊழியர் தப்பு செய்தால் அவரை தானே வேலையில் இருந்து நீக்கனும் வங்கியை யா இழுத்து மூடனும். கோட்டைக்குள் கொசு வந்தால் கொசுவை தானே விரட்டனும் கோட்டையையா இடிக்கனும் கட்சிகள் பணம் தந்தால் கட்சியை தானே தடை செய்யணும் தேர்தலையா ரத்து செய்யணும்

  • ரங்கன் -

    . வாழ்த்துக்கள்....ஆர்.கே நகர் தொகுதி மக்களே...எப்பிடியோ பணம் கைக்கு வந்தது....தப்பும் பண்ணலெ...

  • மூ. மோகன் - வேலூர்,இந்தியா

    இது தேர்தல் ஆணையம் செய்த மிகப் பெரிய தவறு. பணம், பரிசுப் பொருள் பட்டுவாடா செய்து பிடிபட்ட அத்தனை வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்திருக்கணும். அது தவறு செய்ய நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு பாடமாய் அமையும்.

  • Balagan Krishnan - bettystown,அயர்லாந்து

    இந்தியா ஜனநாயகத்திற்கு ஏற்ற நாடு இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது (பார்க்கவும் ராமச்சந்திர குஹா புத்தகம்) மேலும் இந்திய அரசியல் சட்டம் வரையறுக்கும் போது மரியாதைக்குரிய ராஜாஜி ஐயா வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை இப்போது வேண்டாம் என்றதை நினைவு கூற விரும்புகிறேன் (இவர்களை போன்ற அரசியல் முதிர்ச்சி உள்ள தலைவர்கள் தியாகம் உள்ளவர்கள் தலைவர்களாக வரவேண்டும்,நடக்கக்கூடிய காரியமா) இது போன்ற காரியங்களை எதிர்த்து மாணவர்கள் மக்கள் போராடலாம்.0

  • Rajagopal P - coimbatore,இந்தியா

    தினகரன் உழைத்து சம்பாதித்த பணத்தை வாரி இரைக்கவில்லை. மக்களிடம் ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தி கொள்ளை அடித்த பணத்தில் சிறு துளியே இரைத்துள்ளார்.

  • Ganapathy - Bangalore,இந்தியா

    தேர்தலை நிறுத்தி மாபெரும் தவறை செய்த்துவிட்டார்கள். இப்போது உள்ள எதிர்ப்பு அலையில் நிச்சயம் தினகரன் தோற்பது உறுதி . சென்ற முறை ஜெயலலிதாவிற்கு கிடைத்த வாக்கு 97000 . திமுகவிற்கு கிடைத்த வாக்கு 57000 . இதில் அதிமுக தினகரன் அணி உறுதியை இருந்தால் எதற்காக இரண்டு லட்சம் பேருக்கு பணம் கொடுக்கவேண்டும் . கட்சி ஓட்டு இதனை அவ்விற்கு இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் அதிமுகவில் செல்வாக்கு இருந்தால் அறுவது ஆயிரம் வாக்காவது கிடைக்கும். தினகரனுக்கு நன்றாக தெரியும் தன தோற்பது உறுதி என்று.அதற்காகத்தான் இப்படி தில்லு முள்ளு .இந்த் தேர்தலில் தினகரன் தோற்றால் இத்துடன் கதை முடிந்தது என்று இருக்கலாம் .இனி அப்படி இல்லை .இனி கிடைத்துள்ள கால அளவில் என்ன என்ன கன்றாவியை காண வேண்டுமோ தெரியவில்லை. பிஜேபி ஒருவேளை திமுக வந்துவிட்டால் என்ன செய்வது என்று பதறி இருக்கலாம் .நேற்று அவர்களுடைய பொறுப்பாளர் திமுக வரக்கூடாது என்று உறுதியை இருக்கிறார் .ஒரு பக்கம் பணம் வைத்து அரசியல் மறுபக்கம் பிணம் வைத்து அரசியல் . அக்கினி கொடுமையை காட்டிலும் கோரமாக உள்ளது . அதிமுக வாக்கு இரண்டு பட்டாள் வெற்றி பெறுவது திமுக தன . இதை உணர்ந்து தான் தேர்தலை நிறுத்தி உள்ளனர் . நட்டம் தினகரனுக்கு அல்ல திமுகவிற்கு . என்பது கோடி எல்லாம் ஒரு எறும்பு கடி மாதிரி .நேற்று இன்று நாளை என்று அடிக்கும் குடிமகன்களின் லார்ஜில் இந்த என்பது கோடி சுலபமாக வசூல் செய்யப்படும் .

  • Bala Sreenivasan - Singapore,சிங்கப்பூர்

    தீபா முதல் அமைச்சராவது பிடிக்காத மோடியின் மத்திய அரசு செய்த சதிதான் இப்படி தேர்தலையே ரத்து செய்திருக்கிறார்கள்- இப்படி ஏதாவது கருத்து சொல்லி எதற்கெடுத்தாலும் மோடியை குற்றம் சொல்பவர்கள் சந்தோஷத்துக்காக அபத்தமாக இந்த பதிவு

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    அப்போ.... சென்ற சத்தசபைத் தேர்தலில் எவ்வளவு செலவு பண்ணி இருக்கனும் ?

  • arumugam subbiah - Tirunelveli,இந்தியா

    ithu thavaraana munnuthaaranam thavaru seithavaraiyum antha katchikkume thadayo, thandanaiyo vithikka vendum nermayaaka kalam kaanum vetpaalargal enna thavaru seithaargal.

  • தாழ்ந்த தமிழகமே - Chennai,இந்தியா

    சரி சரி இன்னைக்கு கடை உண்டு தானே

  • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

    தேர்தல் பரப்புரை நேரத்தில் கூவியவர்கள் இப்போது செயல்படுத்தவேண்டும் , 57 ,000 வீடுகள் கட்டித்தரப்படவேண்டும் அடுத்த தேர்தல் தேதி அறிவிக்கும் முன் . இல்லாவிட்டால் அடுத்தமுறை தொப்பி போட்டுகொண்டு தொகுதிக்குள் செல்ல முடியாது .இதுல ஒரு விஷயம் , தினகரன் அண்ட் சசிகலா அடித்த கொள்ளையில் RK நகர் தொகுதி மக்களுக்கு பங்கு கொடுக்கவேண்டிய கட்டியும் ஏற்பட்டு போனதுதான் . இப்படி அடிக்கடி தேர்தல் அறிவித்து கடைசி நேரத்தில் ரத்தானால் தொகுதி மக்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் . நல்ல தேர்தல் கமிஷன் ,நல்ல தேர்தல் முறை. வாக்காளர்கள் பேரில் கள்ளவோட்டு போடுது வடக்கில் ஓட்டுப்போடும் இயந்திரம் . இங்கு காசுகொடுத்தால் ஓட்டுப்போடும் வாக்களர் . இதுல இப்போது ரூ 2000 தனிநபர் நன்கொடை கொடுத்தால் ரசீது கொடுத்து முறையாக அறிவிக்கவேண்டும் கணக்கை . ஆனால் எவ்ளவு கொடுத்தாலும் யாருக்கு எந்த கட்சிக்கு கொடுத்தோம் என்று பெரும் நிறுவனம்கள் சொல்லவேண்டாமாம் . ஆக ஒருபக்கம் இப்படி மறுபக்கம் அப்படி , ஆப்படிக்குது பிஜேபி அரசு ஜனநாயகத்திற்கு .

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    1 ) தமிழ்நாடு என்றால் ஏதோ வேட்டி கட்டிய வெட்டி தமிழர்கள் என்று வட இந்தியாவில் நினைப்பு மாறி ஒரு சிறு தேர்தலுக்குக்காக 89 கோடி செலவு செய்யும் மிக பணக்கார மாநிலம் தமிழ்நாடு என்ற நினைப்பு வந்து விடும். 2 ) அம்மா உணவகம் போல் இப்போது கர்நாடகாவில், உத்தர பிரதேசத்தில் விலை மலிவு உணவகங்கள் ஆரம்பம். இந்தியாவே தமிழகத்தின் விரல் பிடித்து நடப்பது போல் இருக்கின்றது இந்த நல்லதிலும் கெட்டதிலும். நல்லதை வெகு சிலரே அறிந்து செயல்படுவர். கெட்டதை பலரும் அறிந்து செயல் படுவர். இந்தியா நாசமாவதற்கு தமிழ்நாடு "குடி" (டாஸ்மாக்) மகன்கள் காரணமாக இருப்பர்? இதற்கு முடிவு எங்கே?????. 3 ) தேர்தல் ரத்து தவறான நடவடிக்கை-அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தல் ரத்து, பிறகு தேர்தல் நடந்தது அதே வழியில் தான் அவர்கள் சென்று வெற்றி பெற்றனர். ஆகையால் இந்த தேர்தல் ரத்து ஒன்றும் படிப்பினையை கொடுக்காது யாருக்கும். தேர்தல் நடத்தி தினகரன் பல ஆயிரம் ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் அதில் 2 ஆவதாக வந்தவரே வெற்றி பெற்றதாக (தினகரன் பணம் கொடுத்து ஒட்டு வாங்கினார் ஆகவே அவர் வெற்றி செல்லுபடியாகாது என்று அறிவித்து) அறிவித்து விட்டால் அது ஒரு பேரிடியாக எல்லா வேட்பாளருக்கும் இருந்திருக்கும். கேட்டால் அப்படி எல்லாம் சட்டத்தில் இடம் இல்லை என்று சொல்லி ஜகா வாங்குவார்கள். எந்த ஒரு அரசியல்வாதியும் இந்த மாதிரி சட்டம் கொண்டு வர இடம் கொடுக்க மாட்டான்.

  • Saravanan stalin - Kuwait city,குவைத்

    அருமையான முடிவு தினகரனுக்கு ஆப்பு பணத்தால் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என தவறாக கணக்கு போட்டதற்கு செமத்த அடி அருமை.

  • karunchilai - vallam,இந்தியா

    நினைத்ததை சாதித்து விட்டார்கள். வெற்றிபெறமாட்டோம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெள்ள தெளிவாக தெரிந்தததால் முறைகேடுகளில் - அதீதப் பணப் பட்டுவாடா, எதிர் அணியினரைத் தாக்குதல், போன்ற முறைகேடுகளில் ஈடுபாட்டார்கள். தமிழகத்து தேர்தல் ஆணையமும் முழு ஒத்துழைப்பை வழங்கியது.

  • Solvathellam Unmai - Chennai,இந்தியா

    உபி, மனிப்பூர் மற்றும் கோவா வில் ஏன் வருமான வரித்துறையே இல்லையா?

  • SPB - Chennai,இந்தியா

    My Question to Election commission do you accept your sincere apologize of stopping the Election in R.K Nagar?

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    யாருக்கெல்லாம் கொடுத்தோம் என்பதற்கு ரெக்கார்ட் வைத்துள்ளார்கள் (என்ன, இதுக்கெல்லாம் காசைக் கொடுத்துட்டு கையெழுத்தா வாங்க முடியும்) ..... திரும்ப வசூலித்து விடுவார்கள் .....

  • மோகன் - லண்டன்,யுனைடெட் கிங்டம்

    பணம் கொடுப்பவர்களை ஆறு ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை செய்வதோடு, பணம் வாங்கியவர்கள் ஓட்டு உரிமையை ஆறு வருடங்களுக்கு பறிக்க வேண்டும். (ஆதார் அட்டையை ரத்து செய்ய வேண்டும்). பணம் வாங்கிய வாக்காளர்களுக்கு இந்த குற்றத்தில் சம பங்கு உள்ளது.

  • Saravanan - madurai,இந்தியா

    1000 2000 போய் இப்போது 4000 வந்து நிற்கிறது. நாளை 10000 20000 ஆகலாம். அப்போது ஒரு குடும்பத்தில் 5 பேர் என்றால் பல்லாயிரம் ரூபாய் தேறும்.

  • MUTHU - chennai,இந்தியா

    This is not going to end , that guy got some time to give more to the voters, government will not be able to take any action against those VIP's , ultimate Tamilnadu and its development is no more...

  • Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    அடுத்தது மாநில அரசை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. பட்டுக்கோட்டையில் பாடலைகளை எம் ஜி ஆர் திரையில். ஆனால் தற்போது நடந்திருப்பது ஒரு வித்தியாசமான திருட்டு. திருடன் திருடர்களுக்கு பணம் கொடுத்திருக்கிறான் என்று சொல்கிறார்கள். யார் பணத்தை எடுத்து கொடுத்தான் என்றால் வாங்கியவர்கள் பணத்தை அவர்களுக்கு தெரியாமல் கொள்ளை அடித்த பணம் அவர்களுக்கு கொடுத்து அவர்களிடம் நல்ல பெயரை பெற்றிருக்கிறான். தி என்ற இனிஷியல் யாரை குறிக்கும். தி என்பது திருடனின் முதலெழுத்து. திருவாளர் பொதுஜனத்தின் முதலெழுத்து.

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    87 கோடி பணம் வெளியே வந்திருக்கிறது, ஒரு திருடனிடம் இருந்து பல திருடர்களின் கைகளுக்கு மாறியிருக்கிறது என்பேன். அடித்த கொள்ளையில் பங்கு கொடுத்திருக்கிறான் உலகறிந்த திருடன். நல்லவர்களாக வெளியில் நடமாடும் சாதாரண திருடர்கள் அந்த பாக்தாத் திருடனிடமிருந்து ஆளுக்கு நாலாயிரம் பெற்று கொண்டிருக்கிறார்கள். அவன் முழு திருடன், இவர்கள் கால் திருடர்கள். வேறென்ன சொல்வது. இது பரமார்த்த குரு கதை. மற்றபடி பொதுமக்களையே அரசியலையே குறிப்பது அல்ல.

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    ஒரு பத்து பேர் இணைந்து கொண்டு கூட்டாக தீமை செய்யலாம் அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று என்னும் வகையில் அரசியல் ஆட்சி உள்ளது. தண்டனைகள் இல்லாமல் தப்பிவித்து விடுகிறார்கள். அதீத தண்டனை உடனடியாக இருக்க வேண்டும். அந்த வீட்டை விட்டு வெளியே போகாமல் அங்கேயே முழு போல்ஸ் பாதுகாப்புடன் இருந்தவர்கள் அந்த வீட்டில் தோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பணத்தை பதுக்கி வைத்ததனால் தான் என்கிறார்கள். அனைத்தையும் ஆந்திர கர்நாடகாவிற்கு மறைத்து விட்ட பின்னரே அந்த வீட்டை காலி செய்தனராம். அப்படியா?

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    தமிழனென்று சொல்லடா தலை குனிந்து செல்லடா. புதிய புரட்சியே செய்திருக்கிறார்கள். தேர்தலில் போட்டியிட அந்த மந்திரிகளுக்கு, டீ டீ வி டி கும் அடுத்த மூன்று பொது தேர்தல்களுக்கு அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு இதில் எது அதிகமோ அதுவரை தடை விதிக்க வேண்டும். மந்திரிகளின் பதவியை உடனைடியாக பறிக்க வேண்டும்.

  • புதுகை வானம்பாடி - புதுக்கோட்டை,இந்தியா

    பணம் கொடுக்க காரணமான அமைச்சர்கள் பட்டியலை வைத்து அமைச்சர்கள் அனைவரையும் தகுதி நீக்கம் செய்து விசாரணையை தொடர வேண்டும் .......ஒரு மங்கா திருடுனா, ஒரு செல் போன் திருடுனா அவனை புடிச்சு உள்ளே போடும் போலீஸ் .... நுறு கோடி திருடி தானம் பண்ணும் அரசியல் வாதிகளை என்ன செய்ய போகிறது ????

  • புதுகை வானம்பாடி - புதுக்கோட்டை,இந்தியா

    அந்த தொகுதி கட்சி பிரமுகர்கள் கட்சி தலைவர் மட்டுமே பிரச்சாரத்துக்கு அனுமதிக்க வேண்டும்..... மற்ற மாவட்ட தலைவர் அமைச்சர் தொண்டர்களை தொகுதி உள்ளே விட கூடாது

  • Nancy - London,யுனைடெட் கிங்டம்

    Election commsione failed to do their duty, President has to take action against EC

  • Prabaharan - nagercoil,இந்தியா

    அஞ்சா நெஞ்சனின் சாதனை ம்முறியடிக்கப்பட்டது . அவருக்கு வருத்தமாக இருக்கும்?

  • samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா

    கூவத்தூர் இல் கூத்து நடக்கும்போதே அதிரடி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எடுக்கவில்லை பன்னீர் பதவி போன பின்பு ஜெயாவின் மரணம் பற்றி நீதி விசாரணைக்கு ஏற்பாடு செய்வேன் என்று கூறுகிறார் ஸ்டாலின் அவர்கள் ஏற்பாடும் தனக்கு வாய்ப்பு வரும் என எண்ணி தேவையின்றி சடடசபையினை நடத்தவிடாதபடி விதிகளுக்கு முரணாக சரியான ஆலோசனையின்றி செய்துவிடடார் எம் எல் ஏக்கள் எல்லாம் மயிலை தொகுதி எம் எல் ஏவும் முன்னாள் டி ஜி பி யான நடராஜனை முதல்வராக தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் ஏதோ ஓரளவிற்காவது நிர்வாகம் சரிப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமியாவது பதவியில் இருக்கும் வரை தைரியமாக துணிச்சலாக செயல்படவேண்டும் எந்த முறையிலும் எவரும் சரி இல்லாததால் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியினை ஓர் ஆண்டுகாலமாவது நடப்பிக்கவேண்டும் வருமான வரி துறையினரும் கூவத்தூர் கூத்து நடைபெறும்போது கைகள் கடத்தப்பட்டு விட்ட்னர் என்ற நிலைக்கு வந்துவிட்ட்னர் முன்னாள் தலைமைச்செயலர் திரு ராவ் மீது ஏன் நடவடிக்கை எடுத்தனர் தற்போது எப்படி அவருக்கு மீள பதவி கொடுக்கப்பட்ட்து எனவே சடட சபையினை உடனடியாய் கலைக்க வேண்டும் இல்லையெனில் லஞ்சம் இன்னும் தலை விரித்து ஆடும் தவறு செய்யும் அதிகாரிகள் உடனடியாய் வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும்

  • R Sanjay - Chennai,இந்தியா

    எதற்கு இந்த ஜனநாயகம்? இந்த ஜனநாயகத்தில் கொலை கற்பழிப்பு ஆட்கடத்தல் கொள்ளை/திருட்டு இதற்க்கு மட்டும் தான் நீதிமன்றத்தின் மூலம் சாதாரண பொது மக்களுக்கு தண்டனை வழங்க முடியும். மத்திய மாநில ஆதரவு உள்ள பணக்காரர்களுக்கு/ அரசியல்வியாதிகளுக்கு எந்த ஒரு தப்பிற்கும் தண்டனை கிடையாது

  • Raj - Chennai,இந்தியா

    கிடைத்த ஆதாரங்களை வைத்து சட்டப்படி நடவடிக்கை என்பது கூட சிரமமாக இருக்கலாம். ஆனால், மந்திரியின் வீட்டில் வருமானவரித்துறை சோதனையின்போது அடாவடியாக சட்டத்தை மீறி வீட்டிற்குள் நுழைந்து ரகளை செய்து பெண் அதிகாரியை மிரட்டிய இரண்டு மூன்று மந்திரிகளையும் மற்றும் ரகசிய ஆவணத்தை பிடுங்கி வெளியே வீசிய ரௌடி I- இவர்களை உடனே கடுமையான சட்ட பிரிவுகளின் படி ஏன் இன்னும் வருமானவரி துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து கைது செய்ய வில்லை ? இதே குற்றங்களை சாதாரண மனிதன் செய்திருந்தால் இதுவரை விட்டுவைத்திருப்பார்களா ?

  • Amma_Priyan - Bangalore,இந்தியா

    சேஷன் காலத்தில் போடப்பட்ட வித்து இப்போது மரமாகி செயல்படுகிறது

  • நண்பா - kudamook,இந்தியா

    நாற்காலி கனவு எல்லாம் வேஸ்ட்டா... சென்பகமே சென்பகமே.....

  • Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா

    பணம் பட்டுவாடாவை தவிர்க்க பணம் பெறுபவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில் இந்த அரசியல்வாதிகள் ஓட்டுக்கு துட்டு (லஞ்சம்) கொடுக்கிறார்கள். பின்னர் வெற்றி பெற்று பதவிக்கு வந்ததும் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் செய்கிறார்கள். பண பலம் படைத்த அரசியல்வாதிகளுக்கு அதிக தண்டனையும் லஞ்சம் பெறும் வாக்காளர்களுக்கும் தண்டனை வேண்டும். அப்பொழுதுதான் கொஞ்சமாவது நேர்மையான வாக்களிப்பு நடைபெறும். தகுதியானவர் பதவிக்கு வர சாத்தியப்படும். ஏழ்மையின் காரணமாக பணம் பெற்றாலும் இது தேர்தல் கலாச்சாரமாக பரவி வருகிறது. தேர்தல் ஆணையம் இதை அரசியல் சட்டம் மூலம் சீரமைத்தல் வேண்டும். இந்தியாவின் பலமே ஜனநாயகம்தான்.

  • Larson - Nagercoil,இந்தியா

    இது தமிழ்நாட்டுக்கு அவமானம், தமிழக மக்களுக்கு அவமானம்.... இந்த அரசியல்வாதிகள்தான் அனைத்திற்கும் காரணம். ஆட்சி செய்யும்போது மக்களை முட்டாள்களாக வைத்து, இலவசத்தை கொடுத்து, சாராயத்தை கொடுத்து, பிச்சைக்காரர்களாக ஆக்கிவிடவேண்டியது, பணத்துக்கு மக்கள் லோலோ அன்று அலையும் நேரத்தில் அடுத்த தேர்தல் வரும், இந்த அரசியல்வாதிகள் கொள்ளையடித்த பணத்தை திரும்ப மக்களுக்கு கொடுத்து, இதேதான் திரும்ப திரும்ப... மக்கள் திருந்தவேண்டும்...

  • Brindha Sundar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    இது மாதிரியான முறைகேடுகளை தடுக்க வேண்டுமானால் கண்டிப்பாக முறைகேடு செய்பவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும். அதை விடுத்தது தேர்தலை ரத்து செய்வதினால் தவறுகளை திருத்த முடியாது.

  • Mannan - chennai,இந்தியா

    இந்த பண பட்டு வாடாவை தடுக்க ஒரே வழி மின்னணு பண பரிவர்த்தனை மட்டுமே வேறு வழியே கண்ணுக்கு எட்டிய வரை தெரிய வில்லை ........

  • Lt Col M Sundaram ( Retd ) - Thoothukudi,இந்தியா

    cONGRATULATIONS TO THE DRAVIDAN PARTIES. THEY EARN GOOD AWARD FOR TN. Election can be conducted by disallowing the candidates who indulged in illegal activities and instituted legal action against them

  • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

    மணல் மாபியா, அலைக்கற்றை மாபியாக்கள், EVM தில்லுமுல்லு கோஷ்டிகள் எல்லாம் நல்லவர்களாம்...தினகரன் மட்டும் கெட்டவராம்... ஜெ , சசி, தினகரன் ஆகியோர் மீது வெறும் 69 கோடி மற்றும் 25 கோடி அளவிலான வழக்குகள் தான் உள்ளது... ஆனால் இவர்கள் மதுபான ஆலைகள் மூலம் சம்பாதித்து இருக்கலாம்...ஆனால் அலைக்கற்றை மாபியாக்களுக்கு அவர்களை விட நிறைய பினாமி மதுபான ஆலைகள் உள்ளனவே.... மணல் மாபியாவின் மகன், கர்நாடகாவின் மேகதூது அணை கட்ட மணல் சப்பிளை பண்ணிய செய்திகளை ஊடகங்கள் பெரிய அண்ணன் பாஜகவுக்கு பயந்து இருட்டடிப்பு செய்துவிட்டன... தேர்தல் EVM இல் தில்லுமுல்லு பண்ணும் கட்சியின் முதல்வர்கள் எல்லாம் யோக்கிய சிகாமணிகளா?...

  • Mahendran TC - Lusaka,ஜாம்பியா

    தேர்தல் ரத்து எதிர்பார்க்கப்பட்டதுதான் .

  • Rajasekar K D - Kudanthai,இந்தியா

    பணத்தை வாரி இறைத்த, அ.தி.மு.க., அம்மா அணி வேட்பாளர், தினகரன் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.- அவரு கூலா இருக்கிறார்.

  • Mani Ayyal - salem,இந்தியா

    மிக மோசமான நிலைமையில் தமிழகம் இருக்கிறதா....தேர்தல் ஆணையத்திற்கு ஏன் முழுமையான அதிகாரம் வழங்கப்படவில்லை.... ஒரு வேட்பாளர் அதுவும் வெளிப்படையாக பணம் பட்டுவாடா செய்கிறார்கள்..தமிழ்நாட்டை இன்னும் ஏன் தலை குனிய வைக்கிறீர்கள் ....தயவு செய்து தினகரன் போன்ற ஒரு வேட்பாளரை மீண்டும் நிறுத்துவார்கள் ஆனால் நிச்சயம் தேர்தல் நேர்மையாக நடத்த முடியாது....ஒரு சாமானியன் பத்து ரூபாய் சம்பாதிக்க திண்டாடும் போது எப்படி அத்தனை அமைச்சர்கள் கையில் மட்டும் இத்தனை கோடிகள் ...அதுவும் எல்லாம் புது நோட்டுகளாகவே இருக்கின்றன....எதற்காக அமைச்சர்கள் எல்லாம் பிரச்சாரத்திற்கு வருகிறார்கள்..எதற்காக அரசாங்க அதிகாரிகள் வருகிறார்கள்.... தமிழக ஆளுநர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எப்பொழுது எடுக்க போகிறார்கள் ...... இன்னும் அசிங்கம் இந்த தமிழ்நாட்டிற்கு தேவையா....மாற்றம் வேண்டும்...புதிய தலைமுறை பிறக்க வேண்டும்....புதிய தமிழ்நாட்டை பார்க்க ஆசைப்படுகிறார்கள் இளைஞர்கள்.....

  • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

    சரத் தினகரனுக்கு ஆதரவு அளித்தது தான் அங்கு நடந்த டுவிஸ்ட்...

  • Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா

    இது எதிர்பார்த்ததுதான். பன்னீரும் தேறவில்லை. கங்கை அமரனும் கால் காசுக்கு பிரயோஜனமில்லை. திமுகவும் மிகவும் பின் தங்கி இருந்தது. தினகரன் வெற்றி உறுதி செய்யப்பட நிலையில் அவர் வெற்றி பெற்றால் அதிமுக ஒழிப்பு என்பது முடியாத கனவு என்று மத்திய அரசு திட்டமிட்டு இந்த தேர்தலை நிறுத்திவிட்டது .

  • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

    தினகரன் 3 ஆம் இடம் தானே பெறுவார் என்று சொன்னீர்கள்...அப்புறம் அவர் மீது எதுக்கு இவ்வளவு பயம்?.. தேர்தலை ரத்து பண்ணும் அளவுக்கு? ,....தேர்தலை நடத்தியிருந்தால், 3 ஆம் இடத்துக்கு போகும் தினகரனை , அரசியலில் இருந்தே துரத்தி இருக்கலாமே... திமுக, பாஜக, OPS அணி சொம்புகளின் பதில் தேவை.....

  • அம்பை சுதர்சனன் - கொடைக்கானல் ,இந்தியா

    அதிகம் படிச்ச மூஞ்சூறு கழனி பானையில் விழுந்ததாம்

  • Vichu -

    ஒரு MLA க்காக, இவ்வளவு செய்தவர்கள், கூவத்தூரில் ஒரு ஆட்சி / CM க்காக என்ன செய்திருக்க மாட்டார்கள்!!!

  • Rangarajan Pg - CHENNAI,இந்தியா

    தேர்தலை ரத்து செய்வது மட்டுமல்லாது முறைகேட்டில் ஈடுபட்ட வேட்பாளரையும் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். மூன்று வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட தகுதி இல்லை என்று அறிவித்திருக்க வேண்டும்.

  • Vaduvooraan - Chennai ,இந்தியா

    ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். பெட்டியில் இருக்கும் சக பயணிகளில் ஒருவர் மட்டும் டிக்கெட் இல்லாது திருட்டு ரயில் ஏறி இருக்கிறார் என்பது பரிசோதகரால் கண்டு பிடிக்கப்படுகிறது. அவரை ரயிலை விட்டு இறக்கி விடுவதை விட்டு விட்டு ரயிலை மேலே போக விடாது தடுப்பது போலத்தான் இருக்கிறது இந்த தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருப்பதும். உண்மையில் ஜெயித்தது தினகரன் கும்பல்தான். இதே மாதிரி எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு கூவத்தூர் அரசியல் இன்னும் பல வருடங்களுக்கு ஓட்டலாம். தோற்றது ஒட்டு மொத்த தமிழ் மக்கள் தேர்தல் ஆணையம் செய்திருப்பது பெரிய உதவி தினகரன் கும்பலுக்கு

  • A.S.GANESH BABU - Madurai,இந்தியா

    தேர்தல் கமிஷன் தினகரனுக்கு ஆதரவா செயல்படுது என்ற சந்தேகம் எழுகிறது அடுத்து தேர்தல் நடத்தினால் தினகரன் ஜெயிப்பார் இது உறுதி

  • ASDSSN - sss,கனடா

    நீங்கள் புலம்பி என்ன பயன். இது தமிழத்தின் தொடர் கதை.

  • செந்தில் - சென்னை,இந்தியா

    என்னோட பயமெல்லாம் இவங்களுக்கு விட்டத புடிக்கணுங்கிற வெறி வரும். அந்த வெறில ஆட்சி கைல இருக்கிறதால இன்னும் வெறித்தனமா ஊழல் பண்ண தோணும். ஜெயிச்சாலும் ஜெயிச்ச தெம்புல ஊழல் பண்ணுவாங்க. சட்டசபையை கலைச்சி மறு தேர்தல் நடத்த வேண்டும்

  • A.S.GANESH BABU - Madurai,இந்தியா

    ஆர் கே நகர் இடை தேர்தலை ரத்து செய்ததால் பிரயோஜனம் இல்லை தினகரனுக்கு அனுதாப அலை ஏற்படும் கண்டிப்பாக அடுத்து தேர்தல் நடந்தால் தினகரன் ஜெயிப்பார் தினகரனை கைது செய்ய வேண்டும் அப்போது தான் அரசியல்வாதிகள் திருந்துவார்கள்

  • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

    எடுபுடி ப சாமி மைண்ட் வாய்ஸ் - ஐ ஆம் எஸ்கேப்... பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா தங்கமணி என்ஜாய்... தேர்தல் நின்னு போச்சு எடுபுடி ப சாமி எஞ்சாய்..

  • BALAJI.J - Virudhunagar,இந்தியா

    ஒரு கல்லூரி அல்லது பள்ளி தேர்வின் போது காப்பியடிக்க ஏதோ ஒரு மாணவன் கொண்டுவந்த பிட் தேர்வு அறையில் கிடந்தால் மொத்த மாணவர்களும் முறைகேடடாக பரீட்சை எழுத நினைத்தனர் என மொத்த தேர்வையும் ரத்து செய்வது நியாயமா? அதே நிலை தானே RK நகரிலும். முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதை விட்டு விட்டு அனைவரையும் தண்டிப்பது நியாயம் இல்லை.

  • Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்

    மிகச் சரியான முடிவு. எந்த கட்சியால் பணம் விநியோகம் செய்யப்பட்டதோ அந்த கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்து இருந்தால் இன்னமும் பாரட்டப் படக் கூடிய விஷயமாக இருந்திருக்கும். அடுத்த கட்ட நடவடிக்கையாக நாம் கீழ் கண்டவற்றை எதிர்பார்க்கலாம் - INCOME TAX ரைடில் மாட்டியவர்களின் அர்ரெஸ்ட் - ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளில் தீர்ப்பு (ஏமாற்று வழக்கு மற்றும் கட்சி யாருக்கு சொந்தம் என்கிற வழக்கு) - தீர்ப்பை பொறுத்து AIADMK மறுபடியும் ஒன்று சேருமா அது BJP க்கு சாதகமாக மறைமுகமாக ஆதரவு கொடுக்குமா என்பதை பார்க்க முடியும்

  • Rajathiraja - Coimbatore,இந்தியா

    கடல் எப்ப வத்துறது தமிழ் எப்போ மீனை பிடிக்கிறது.

  • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    தேர்தல் ரத்து , வரவேற்கத்தக்கது அடுத்த தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன் சில காரியங்கள் நடந்தால் இன்னும் சிறப்பாக இருக்கம், Mr. உத்தமர் உடைய FERA மற்றும் இதர கேஸ் சீக்கரம் முடிச்சி தீர்ப்பு கொடுக்கணும் , வருமான வரி சோதனை அனைத்து கூவத்தூர்/மற்றும் இதர கும்மல் இடம் நடத்த பட்டு மொத்த பண புழக்கத்தையும் முடக்க வேண்டும். எல்லாம் IT raid அரசியல்யுடன் லிங்க் பண்ண வேண்டாம். எப்படி அல்லது எப்பொழுது நடந்தால் என்ன? திருடர்கள் கையும் களவுமாய் பிடிபட்டால் போதும் என்னை போன்ற பொது ஜன மக்களுக்கு

  • kumar - chennai,இந்தியா

    The actions of Election Commission is very very correct. What Tamilnadu people could not do they have done it. (1) Freezing of Two leaves symbol of AIADMK. until RK Nagar Election. (2) RK Nagar election is cancelled, so no two leaves to any AIADMK faction,this is good for Tamilnadu. (3) Till 2019 no bye-election should be held in Tamilnadu.(4) People will forget AIADMK"s two leaves.(5) All other major parties should take advantage of this situation (6) Dinakaran should be once for all banned for election and he should be punished by Existing laws.(7) in 2019,along with parliament election Tamilnadu assembly election should be conducted. (8) As present AIADMK GOVT is looting Tamilnadu like a "KARAIAN CELL" state govt to be dissolved and President Rule should be implemented. Above are all put up in the Interest of Tamilnadu People. .

  • Vasanthan Rp - Madurai,இந்தியா

    குற்றவாளிக்கு தண்டனை என்ன?

  • Stalin - Kovilpatti,இந்தியா

    தேர்தல் ரத்து சரி .. தவறு செய்த கட்சி மற்றும் அதன் உறுப்பினர்கள் மீது என்ன நடவடிக்கை ?

  • Shiva - Bangalore,இந்தியா

    பணம் கொடுத்தவர்கள்.. பணம் வாங்கியவர்கள் அனைவரும் தண்டிக்க பட வேண்டும் ....

  • மந்தணைசில்லசெவனன் -

    ஜனநாயத்தின் தலைக்குனிவு. தமிழகத்தின் பேரவலம்!

  • Meenu - Chennai,இந்தியா

    தேர்தலை தள்ளி வைத்து விட்டால்? இப்படி ஒரு நிலைமையை உருவாக்கிய துரோகிகளை வாழ் நாள் முழுதும் தேர்தலில் நிற்கவோ, தேர்தலில் ஓட்டு போடவோ தடை விதிக்க வேண்டும். அப்பத்தான் இவங்களாட்டமே தேர்தலில் மக்களுக்கு பணம் கொடுக்கும் மற்ற கட்சிகாரனுக்கும் இது ஒரு பாடமா இருக்கும். இப்பல்லாம் எந்த தேர்தல் வந்தாலும், பணம் கொடுத்ததே ஜெயிப்பது ஒரு வழக்கமாச்சு. இந்த வழக்கத்தை ஒழிக்க இந்தியர்கள் அனைவரும் ஒன்று பட வேண்டும்.

  • syed yaship - RAMANATHAPURAM,இந்தியா

    பைசா குடுத்தவனா மட்டும் பிடிக்கிறானுங்க வாங்குனவனுக்கும் தண்டனை குடுக்கணும்ல

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

    " ஆர்கே நகர் இடை தேர்தல் நிறுத்தப்படும். இந்த புகாரின் மீது மேலும் விசாரணை நடப்படும். தேர்தல் கமிஷன் மற்றும் வருமானவரி துறை இரண்டும் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். தமிழனின் அடிமை சாசன விலை 4000 ஆயிரத்திற்கு எகிறியிருப்பது அவனுக்கு உலக அளவில் மரியாதை கூடியிருப்பதையே காட்டுகிறது. டெல்லியில் கூட 100 ரூபாய் கூட விலை பெறமாட்டார்கள் அங்குள்ள வாக்காளர்கள். தமிழகம் முன்னேறிய மாநிலம் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

  • karthikeyan -

    பழனிசாமியின் முதல்மந்திரி பதவி பிழைத்தது

  • Vakkeel VanduMurugan - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ

    சர்வே முடிவுகளை பார்க்கும்போது என்னதான் பணத்தை வாரி இறைத்திருந்தாலும், தினகரனுக்கு இரண்டாமிடமே என்றிருந்தது. இப்போது அவர்கள் ஆற அமர பணம் கொடுக்கலாம். சில மாதங்கள் கழித்து தேர்தல் வந்தால், தினகரன் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது. இதனால் தினகரனுக்கு சந்தோசமே.

  • Ganesh - chennai,இந்தியா

    Plz impose President's rule. We hate this VKS and Dinakaran.

  • "????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா

    இந்த இடைத் தேர்தலில் பணம் விளையாடுகிறது என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, மாநிலங்கள் மீதான மத்திய அரசின் சர்வாதிகாரத்தையே காட்டுகிறது. ஒரு மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அந்த மாநில அரசின் நிர்வாகத்தில் இஷ்டம் போல தலையிட்டு விளையாடுகிறது மோடி அரசு.

  • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    மொரத்தால் புலியை விரட்டிய வீர மங்கை பிறந்த மண்ணில் இந்த கயவர்களை ஒருவரும் ஏன் விரட்ட முன்வரவில்லை ? ஒரு விதத்தில் RK நகர் மக்களும் குற்றவாளிகளே

  • P.Rengaraj - maduai,இந்தியா

    பணம் வாங்கியவர்களை இந்த விசாரணை எதுவுமே செய்யாதா? வோட்டுக்கு பணம் கொடுத்தது தவறு என்றால் பணம் வாங்கியதும் குற்றம்தானே பணம் வாங்கியவர்களை தண்டிக்க வழியே இல்லையா? இந்த தொகுதி இந்த விஷயத்துக்கு ஒரு முன்மாதிரியாக அமைய வேண்டும். பணம் வாங்கியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். மற்ற தொகுதிகளுக்கு ஒரு பாடமாக விளங்கவேண்டும்.

  • Venkatachalam Rangasamy - erode,இந்தியா

    The election commission if a huge force of official machinery. With such a huge force , unable to control crime in a single constituency is shame on part of state election commission.Will they close a police station stating that the are unable to control crime?.

  • saro - rk nagar,மத்திய ஆப்ரிக்க குடியரசு

    both aiadmk and dmk must be punished and removed from Indian politics forever.

  • Balaji - chennai,மத்திய ஆப்ரிக்க குடியரசு

    the respective party must be removed from Indian politics forever, and the leaders whoever involved in cash distributions should be send to jail for 10 years, and they must be disqualified in joining with any party for their life time across india.

  • Chidambaranathan Ramaiah - usilampatti,இந்தியா

    உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடுமிகப் பெரிய தேர்தல்களை நடத்திய நாடு மிகப் பெரிய படை பலம் கொண்ட நாடு கேவலம் கீரை பாத்தி அளவுள்ள ஒரு சட்டமன்ற இடை தேர்தலை நடத்த முடியவில்லை வெட்க்கக்கேடு

  • RajeshSingaravelu -

    The whole TN Govt., including CM involved in this heinous action. It is more appropriate to dissolve TN Govt., and seek fresh mandate or conduct an online referendum with Aadhar Biometric authentication.

  • specialvoice65 - Coimbatore,இந்தியா

    இடைத்தேர்தலை மட்டுமல்ல, இந்த இடைத்தேர்தல் தடைசெய்யப்படுவதற்கு காரணமான அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை இரத்து செய்வதோடு, அந்த கட்சி இனிமேல் தேர்தலில் நிற்கக்கூடாது என்றும் அறிவித்தல் நல்லது. தொடர்ந்து, தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை, வாக்காளர்களை ஏமாற்றி வாக்குவாங்கி தவறு செய்யும் இவர்களை, திரும்பப்பெறும் உரிமைகளையும் வாக்காள பெருங்குடி மக்களுக்கு கொடுத்தால் நல்லது.

  • Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ

    எவ்வளவு ரூபாயை ஓட்டுக்கு கொடுத்தாலும் அது டாஸ்மாக் மூலமாக திரும்ப சசி கூட்டத்துக்குதான் வரும் அல்லது கட்டுமர கூட்டத்துக்கு போகும்.

  • A shanmugam - VELLORE,இந்தியா

    இனி எந்த காலத்திலும் தேர்தல் ஆணையம் ஆர் கே தொகுதியில் தேர்தல் நடத்தமுடியாது ஏனெனில் எப்போ தமிழ் நாட்டில் ரௌடிகள் ஆதிக்கம் கைஓங்கியுள்ளதோ, பணம் பரிவர்த்தனை தாண்டவமாடுதோ, வெட்டு குத்து ரத்தம் ஆறாக ஓடுகிறது, போலீஸ் துறை கண்முடித்தனமாக செயல்படுகிறது, அரசு ஆணையம் கைக்கூலி வேலை பார்கிறதோ, தேர்தல் நடைபெற என்றுமே வாய்ப்பில்லை. ஒரு மாதகாலமாக தமிழ்நாட்டில் ஒரு MLA தேர்தலுக்காக ஒட்டுமொத்த தமிழக அரசே RK தொகுதி பிரச்சாரத்திற்கு "தாரை" வார்த்தது. இதனால் மக்களின் அன்றாட பணிகள் எல்லாம் எடுப்பார் கைப்பிள்ளை போல் சின்ன பின்னமாக சிதறிக்கிடக்கிறது. ஐயோ பாவம் தமிழக மக்களுக்கு இதுபோன்ற சோதனையா?

  • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

    'Demonetisation '...... இந்த கோணத்தில் இந்த விஷயத்தை கொண்டு சென்றால் நான் மத்திய அரசை பாராட்டுவேன்..... வெறும் தேர்தல் முறைகேடு என்றால்... அது ஏமாற்றும் வேலை ஆகிவிடும்..... அவர்கள் கையில் இத்தனை கோடி ருபாய் புழக்கத்தில் எப்படி வந்தது?.... இந்த கோணத்தில் விசாரணை சென்றாதான் ... தவறு செய்தவர்கள் மாட்டுவார்கள்... இல்லையென்றால் இது ஒரு கண்துடைப்பு நாடகம் ஆகிவிடும்......

  • SYED IBRAHIM A - MADURAI,இந்தியா

    பணம் விநியோகிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. சரி. சம்பந்த பட்ட வேட்பாளர் வாழ்நாள் முழுக்க தேர்தலில் நிற்க தடை விதிக்கவேண்டும். பணம் பெற்ற நபரின் குடும்பத்தலைவரின் ஓட்டு உரிமையை ரத்து செய்யவேண்டும். அடுத்த தேர்தலிலும் பணம் பெற்றால் மொத்த குடும்பமும் ஓட்டு அளிக்க அனுமதிக்க கூடாது

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று அதனாலே முழிக்குதே அம்மாக்கண்ணு...

  • chandra - london,யுனைடெட் கிங்டம்

    விளையாட்டு வீரர் பணம் வாங்கினால் அவர்கள் வாழ்கை முழுவதும் விளையாட முடியாது, அது போல அரசியல்வாதிகள் பணம் கொடுத்தால் அவர்கள் எலெக்ஷனில் நிற்க்க தடை விதிக்க வேண்டும். பணம் கொடுக்க ஆசை தூண்டி இந்த ஏழை மக்களை பகடை காயாக உபயோகம் பண்ணுகிறார்கள். பணம் விற்க மற்றும் வாங்க அணுகவும் அதிமுக மினிஸ்டர்ஸ்

  • K.Sugavanam - Salem,இந்தியா

    தரகுடன் சேர்ந்த உள்ளடி வேலையோ? சின்னாம்மா வுக்கு வெற்றி போல. ஒரே கல்லில் பல மாங்காய்கள்..

  • suresh - chennai,இந்தியா

    தினகரனை தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்க வேண்டும், தேர்தலை தள்ளி வைப்பது சரி அல்ல, ஒரு வேளை தகுதி நீக்கம் செய்து இருந்தால், நீதிமன்றம் சென்று, பணப்பட்டுவாடா செய்தவருக்கும், எங்கள் கட்சிக்கோ, எனக்கோ எந்த தொடர்பும் இல்லை என வாதிடுவார். காரணம், மக்கள் கையில் பணத்தை ஒப்படைப்பது கூலி படையே பயன்படுத்தப்படுகிறது, ஒருவர் கொலை செய்யப்பட்டால், அந்த கொலையை செய்தவர், அந்த கொலைக்கு உதவியவர், அந்த கொலைக்கு காரணமானவர் என ஒட்டு மொத்த ஆதாரங்கள் திரட்டப்பட்டு, விசாரிக்கப்பட்டு, ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. ஜனநாயக படுகொலையை செய்த இந்த தினகரனுக்கு எதிராக ஏன் ஆதாரங்களோடு தகுதி நீக்கம் செய்ய முடியவில்லை ?, ஆர்.கே நகரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தமிழக தலைமை தேர்தல் ஆணையர், இந்த பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என்றால், தமிழகமெங்கும் நடக்கும் தேர்தல்களை எவ்வாறு நியாயமாக நடத்த போகிறது ?, தேர்தல் நிறுத்தப்பட்டு விட்டது, தேர்தல் நிறுத்தப்படுவதற்கு காரணமானவர்கள் மீது விசாரணைக்கு ஏன் உத்தவிடவில்லை ? அதிகாரங்களை குவியலாக வைத்து இருக்கும் தேர்தல் ஆணையம், பணப்பட்டுவாடா செய்த கட்சியை, அந்த தொகுதியில் ஒரு முறை தகுதி நீக்கம் செய்து அதன் நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டும்.

  • ரத்தினம் - Muscat,ஓமன்

    அழிச்சு கிழிச்சு இன்னொரு தடவை தேர்தல் வைங்க. மொத்தம் பக்கத்து மாநிலத்தில் இருந்து போலீஸ் அல்லது ராணுவத்தை வைங்க. அப்படியே புது லத்தியா ஒரு வண்டி ஆர்டர் பண்ணுங்க. யாராவது பணம் கொடுத்தா நாலு போடு போடுங்க. எல்லாம் சரியா நடக்கும்.

  • Rajendran - chennai,இந்தியா

    Well & Good Decision...... All people expected the same....... Waiting for New General Election.... Jai Hind..... Government of the people, by the people, for the people, shall not perish from the Earth.....

  • Manian - Chennai,இந்தியா

    தொப்பி, காசு கொடுத்து ஏமாத்தி ஒட்டு வாங்க போனா , தொப்பி வெயிலுக்கு நல்லது, காசு பால் கணக்குக்கு கொடுக்க நல்லதுன்னு வெசிகிட்டானுக. இப்போ ஓட்டும் போச்சு, தொப்பி பறந்தது, காசும் காலி. கலி காலம்னு இதை தான் சொன்னங்களோ சின்னம்மா? பணத்தை எங்கே தேடுவேன், கொடுத்த பணத்தை எங்கே தேடுவேன்? பாவிங்க நன் ஜெய்சாப்புறம் எலக்ஷன் செல்லதுன்னாலும், ஒரு நாள் எம். எல்.ஏ என்று இருந்து வாழ் நாள் பூரா கிங் மேக்கரா இருந்திருப்பேன் அதுக்கும் வழி இல்லாம பண்ணி போட்டாக. கூலி படை கூட நம்மை மதிக்காதே சின்னமா

  • Paran Nathan - Edmonton,கனடா

    இந்தியாவை ஆளுகின்ற ஒரு தேசியக்கட்சி, தமிழகத்தின் முக்கிய திருப்புமுனையாக இருக்கப் போகின்ற தேர்தலில், தனது கட்சியைச் சாராத அமரனை களமிறக்கிய போதே இந்த தேர்தல் முடிவு தெரிந்து விட்டது. ஊடகங்கள், நீதித்துறை, வருமான வரித்துறை, ஆளுனர், இறுதியில் தேர்தல் கமிஷன் மூலம் ஒரு பிரந்திய கட்சியை உடைத்துவிடலாம் என்ற கனவு தகர்ந்தது. மோடியை தமிழகத்தில் தான் முதன்முறையாக சோ அவர்கள் பிரதமர் வேட்பாளராக அறிவித்தார். இதே தமிழகத்தில் தான் பிஜேபிக்கான முடிவுரை காத்திருக்கின்றது.

  • நிலா - மதுரை,இந்தியா

    இது மட்டும் இல்லாமல் மொத்த தமிழக அரசும் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது அரசை கலையுங்கள் மறுபடியும் பொது தேர்தல் மட்டுமே மாற்று வழி 6 மாதங்கள் கழித்து தேர்தலை நடத்தவேண்டும் அதற்குள் அனைத்து தமிழக அமைச்சர் வீடுகளில் அரசு அதிகாரிகள் மற்றும் அதிமுக சட்டச்சபை உறுப்பினர்கள் வீடுகளில் சோதனை செய்யவேண்டும் உடனே

  • John I - Yanbu,சவுதி அரேபியா

    இது தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத்தனம், தண்டனை என்பது தவறு செய்த வேட்பாளருக்கு மட்டும் இருக்க வேண்டும். தவறு செய்த வேட்பாளருக்கு ஆயுட்கால தடை விதிக்கவேண்டும்

  • www.tamilxp.com - Chennai,இந்தியா

    ஒரு ஓட்டுக்கு 4000 ரூபா கொடுத்தது எல்லாம் வேஸ்டா போச்சே..

  • ஜீவன் -

    மறு தேர்தல் நடத்தும் போது.. கட்சிகளின் சின்னங்களை மாற்றியமைக்க வேண்டும்

  • ANAND - Chengalpattu,இந்தியா

    கவர்னர் ஆட்சியை கொண்டுவந்து ஆறு மதம் கழித்து பொது தேர்தல் நடத்த வேண்டும்

  • M.S.Badrinarayanan - bangalore,இந்தியா

    இது ஒரு கையாலாகாத்தனம். தண்டிப்பு அந்த வேட்பாளருக்கு மட்டும் இருக்க வேண்டும். தகுதி நீக்கம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வேட்பாளர் முடிவை கோர்ட் முடிவு செய்யும் வரை அறிவிக்காமல் இருக்க வேண்டும்

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    அதிகாரம் பெற பணச்செலவு, அதிகாரம் பெற்றபின் பண வரவு. இதுதானே தமிழ்நாட்டில் காலம் காலமாக நடக்கிறது?

  • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

    மதுசூதனன் சொல்றாரு இவ்வளவு பணமும் ஜெயலலிதாகிட்டே இருந்து திருடியதுன்னு.. ஜெயலலிதாகிட்ட ஏது இவ்ளோ பணம்? மக்களிடமிருந்து அவங்க திருடியது.. ஜெயலலிதா, சசிகலா, OPS, எடப்பாடி, நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர், தினகரன், நடராஜன், திவாகரன் இவனுங்க மொத்த கும்பலும் சேர்ந்து கொள்ளையடிக்கிறதையே முழு நேர வேலையா செய்திருக்கானுங்க... இந்த திருட்டு பயக கூட்டத்தை ஒட்டுமொத்தமா என்னைக்கு துரத்துயடிக்கிறோமோ அன்னைக்கு தான் தமிழ்நாட்டுக்கு விடிவு காலம்...

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    ரெய்டு நடக்கும்போதே ஆர் கே நகரில் வருமானவரித்துறையும் பணம் வாங்கியவர்களிடம் (ஆதாரங்களைக் காண்பித்து விசாரித்தது எவனோ மகராசன் கொடுத்தான் வாங்கினோம் நீ யாருய்யா அதைக் கேட்க என விரட்டினர் இதுதான் நடந்தது 85 % மக்கள் பணம் வாங்கினர் என்றால் நாட்டில் அத்தனை விழுக்காடு கிரிமினல்கள் உல்ளனர் என்று தானே பொருள்? இவர்களுக்கு தேர்தலும் ஜனநாயகமும் எதற்கு?

  • Jagath Venkatesan - mayiladuthurai ,இந்தியா

    நல்ல காரியம் தான். ஊழலில் விளைந்த பணம் ...வருமான வரித்துறை.... கண்டுபிடிக்க திணறிக்கொண்டிருந்தது...எப்படியோ மக்களுக்கு அவர்களுடைய நித்திய வாழ்க்கைக்கு பயனாய் போனது ..ஊழல் பணம்...பணம் வாங்கியவனுக்கு எப்படி வந்தது என்ற ஆராய்ச்சி தேவை இல்லாதது ...பணம் எதோ ஒரு காரணத்திற்காக புழக்கத்திற்கு வந்தது...ஆனால் ஒவ்வொரு முறையும் இப்படி தேர்தல்களை ரத்து செய்து கொண்டு இருப்பதை தவிர்த்து நிரந்தர தீர்வு ..காண தேர்தல் கமிஷன் முனையவேண்டும்....ஒன்று செய்யுங்கள்....ஆட்சி முடிவுக்கு வரும்போது....ஆட்சியை கலைத்து விட்டு ...மூன்று மாத காலத்திற்கு கவர்னர் ..ஆட்சி நிர்வாக பொறுப்பில் இருந்தால்....கட்சிகளின் பணப்பட்டுவாடா ஒழியும்....இதற்கு சட்டம் இல்லையென்றால்... .கொண்டுவரலாமா என்று சட்ட வல்லுநர்களை கொண்டு தீர்மானம் செய்யுங்கள் ... புதிதாக சட்டம் கொண்டு வரவேண்டும்.,வந்தாலொழிய மாற்று வழி இல்லை.

  • Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ

    இதெல்லாம் அரசியலில் சகஜம் ஆர் கே நகர் தொகுதி வாக்காளர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

  • ARUN - coimbatore,இந்தியா

    பணம் விநியோகிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. சரி. சம்பந்த பட்ட வேட்பாளர் வாழ்நாள் முழுக்க தேர்தலில் நிற்க தடை விதிக்கவேண்டும். பணம் பெற்ற நபரின் குடும்பத்தலைவரின் ஓட்டு உரிமையை ரத்து செய்யவேண்டும். அடுத்த தேர்தலிலும் பணம் பெற்றால் மொத்த குடும்பமும் ஓட்டு அளிக்க அனுமதிக்க கூடாது

  • TamilReader - Dindigul,இந்தியா

    Election shouldn't have been called-off. Instead the offending candidate and other culprits should have been disqualified EC should has asked center to impose the Governors' rule in the state This is happened in this shameless state twice in a year

  • sugumaran - chennai,இந்தியா

    இந்த கொள்ளை கும்பலிடமிருந்து தமிழ்நாட்டை மத்திய அரசு மற்றும் உச்ச,உயர் நீதி மன்றங்கள் தான் காப்பாத்தவேண்டும். எங்கும் ஊழல் எதிலும் ஊழல். மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பிலும் ஊழல் நடந்திருப்பதாக ஆவணங்கள் வெட்டவெளிச்சமாகி விட்டன. இனியும் தாமதிக்க வேண்டாம். எல்லா அமைச்சர், MLA களிடம் வருமான வரி சோதனை செய்ய வேண்டும்.

  • Nishanthan Sathanandasivan - luhansk ,உக்ரைன்

    ஓ காட் அப்படின்னா கங்கை அமரன் எம் எல் ஏ வாக முடியாதா.....

  • Nishanthan Sathanandasivan - luhansk ,உக்ரைன்

    ஆர்.கே நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டால், தினகரனை பார்த்து பாஜக பயந்து விட்டது என்றே அர்த்தம். இவ்வளவு பலம் பொருந்திய மத்தியில் ஆளும் பாஜக, இத்தனை குடைச்சல் கொடுத்தும், பின்வாசல் வழியாக பன்னீர்செல்வத்திற்கு உதவி செய்தும், தினகரனை எதிர்கொள்ள முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் பாஜக

  • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

    பணம் கொடுத்தது உண்மையெனில் தினகரனை கைது செய்யலாமே , அவருக்கு பணம் எப்படி வந்தது என அமலாக்க பிரிவு மற்றும் வருமான வரித்துறை கைது செய்யலாமே

  • t.v.mathavan -

    அனைவரையும் கைது செய்ய வேண்டும். சனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்

  • v.sundaravadivelu - Tiruppur,இந்தியா

    ரத்து செஞ்சா எண்பத்து ஒன்பது கோடியை தேர்தல் ஆணையம் திரும்ப வழங்கணும் யுவர் ஆனர்.. அப்டி இல்லேன்னா மறுபடி இதே தொகையை செலவு செய்ய ஸ்டாலின் உதவுவார்னு நம்பறோம்.. .. அவுரு கூட சேர்ந்து எங்க அண்ணன் விஜயகாந்த் ஒரு நூறு கோடி கொடுப்பார் என்பதில் எங்களுக்கு கடுகளவு சந்தேகம் கூட இல்லை.. .. இவுக எல்லாம் முடியாதுனு கையை விரிச்சா இருக்கவே இருக்கார்.. எங்க தானை தலைவர். கரகாட்ட ராமராஜன்.. எங்களுக்கு இன்னாயா கவலே?

  • Tamilselvan - Chennai,இந்தியா

    நல்ல முடிவு. ஊழல் செய்தவர்களை உடன் கைது செய்து உள்ளே தள்ள வேண்டும், கையும் களவுமாக பிடி பட்டவர்களை உடன் பிடித்து விசாரித்தால் பல உண்மைகள் வெளி வரும். இதை தூண்டியவர் இனி தேர்தலில் நிற்க முடியாத படி தண்டனை கொடுக்க வேண்டும். பணம் கொடுத்தவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தால் இனி எவனும் பணம் கொடுத்து வெல்லலாம் என நினைக்க மாட்டான்.

  • Prakash - New York,யூ.எஸ்.ஏ

    Election shouldn't have been called-off. Instead the offending candidate should have been disqualified and election should have been conducted as planned.

  • Amirthalingam Sinniah - toronto,கனடா

    தமிழ் நாட்டு . தேர்தல் படும்பாடு , என்ன சொல்வதென்றே விளங்கவில்லை.

  • Manian - Chennai,இந்தியா

    இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது? தினகரன் கூலி வேலை செய்து சம்பாதித்தா? அக்காகாரி டாஸ் மார்க் மூலம் ஏழைகளிடம் கொள்ளை அடித்த பணம் தானே.? அத்தோடு, ஒசி வாங்கி ஓட்டு போட்டவங்க வரி கொடுக்கவில்லை. இப்போ இந்த மாதிரி வரி கொடுக்கிறார்கள். பணம் ஒரே இடத்தில நிக்காதே. என்ன, பரப்பன அக்ரஹாரத்தில் சதி-கலாவுக்கு கொஞ்சம் கொசு கடிச்சா மாதிரி தெரியும். சட்டம் எலக்சன் கமிஷனை வேகமாக செயல் பட விடாது. மருந்தும், சட்டமும் நாள்பட்ட பின்னர் தான் பலன் தரும். எலக்சன் கமிஷன் கோர்ட்டுக்கு பயப்படும். அரசியல்வாதி கடவுளுக்கும் பயப்படமாட்டான் (அதுக்குத்தான் முந்திகிட்டு கடவுள் மறுப்பு, பகுத்தறிவு வாதம் என்று பிரச்சாரம் முதலில், மக்களை முட்டாளாக்கி கொள்ளை அடிப்பது அதன் பின்). பாஜகாவை இழுப்பது ஜோசியம் பார்ப்பது போலவே. தன் தந்தையின் மரபணுவும், தன்னுதும் அதே என்று முதலில் நிச்சயம் செய்து,, பின் இதுபோல் இந்த ஜோசியம் சொல்லலாம்.

  • G.Prabakaran - Chennai,இந்தியா

    இனியும் இந்த ஆட்சி தொடர வேண்டுமா. அனைத்து எம் எல் ஏக் க்கள் மந்திரிகள் வீட்டிலும் சோதனை நடத்தி பல லட்சம் கோடி பணத்தை வெளி கொணர வேண்டும். முன்பு நெருக்கடி நிலை காலத்தில் கவர்னரின் ஆலோசர்கள் ஆர். சுப்பிரமணியம் மற்றும் தவே அவர்கள் மேற்பார்வையில் அதிகாரிகளின் கவர்னர் ஆட்சி நடந்ததை போல் இப்போதும் கவர்னர் ஆட்சியே நடக்க ஜனாதிபதி உத்திரவிட வேண்டும். தமிழகம் இந்த ஊழல் ஆட்சியாளர்கள் பிடியிலிருந்து காப்பாற்றப் பட இது ஒன்றே சிறந்த வழி.

  • G.Prabakaran - Chennai,இந்தியா

    நல்ல செய்தி எப்படியோ மக்கள் பணத்தின் சிறு பகுதி ஆர் கே நகர் மக்களிடம் சென்று விட்டது.

  • jay - toronto,கனடா

    எமி ஜாக்சன் வரமாட்டாங்களா ,,, ???

  • Siva Subramaniam - Coimbatore,இந்தியா

    இன்றய நாளின் மிக மிக நல்ல மகிழ்ச்சியான செய்தி .வாழ்க தேர்தல் கமிஷன் வளர்க வோட்டுக்கு கமிஷன் ( விலை)

  • Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா

    ஆர் கே நகர் தொகுதி வாக்காளர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் .மீண்டும் ஒருமுறை ஒரு வோட்டிற்கு ரூபாய் 5000 அல்லது அதற்கு மேலும் அறுவடை செய்ய வாய்ப்பு தேர்தல் கமிஷன் கொடுத்துள்ளது .

  • vinoth kumar - paris,பிரான்ஸ்

    பணம் கொடுத்தது நிரூபிக்கப் பட்டால் அவர்களுக்கு ஏன் தண்டனை அளிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்யவில்லை ?

  • kum - paris,பிரான்ஸ்

    மக்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள், கொடுத்த பணத்தை திரும்ப கேட்பார்களோ என்று ?

  • Raja segaran - bhopal, madhya pradesh.,இந்தியா

    தமிழ்நாட்டு மனிதர்களுக்கு மானமரியாதை, சூடுசுரணை என்பது இல்லாமல் போய்விட்டதை நோக்கி, என்னைப் போல உள்ள தமிழர்களுக்கு வெட்கம் வருகிறது. நல்ல அயோடின் உப்பு கிலோ பதினெட்டு ரூபாய் தான். கழைக்கூத்தாடிகளை, உயிரோடு கொல்ல வேண்டும்.

  • raj - salem,இந்தியா

    தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது .தேர்தல் ஆணையம் செய்திருப்பது சரி . மேலும் தேர்தலில் பணம் பட்டுவாடா செயதால் அந்த வேட்பாளர் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க தடை செய்ய சட்டம் உடனடியாக கொண்டு வர வேண்டும் .

  • Mohan D - Boston,யூ.எஸ்.ஏ

    86 கோடியெல்லாம், அவங்க டி சாப்பிடுற செலவுதான். அது என்ன சொந்த பணமா அதிர்ச்சி அடைய. போங்க பாஸ் , அடுத்த தடவை எப்படி பண்ணுறான்னு பாருங்க .

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    அடுத்த தேர்தலில் சென்றமுறை அரவக்குறிச்சி தஞ்சை தேர்தலில் அதே வேட்பாளர்களை அனுமதித்தது போன்ற தவறை திரும்பவும் செய்துவிடக் கூடாது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப் பட வேண்டும்.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    89 கோடி விநியோகிக்கப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டதால் அந்த "பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் மற்றும் வைத்திலிங்கம் " கும்பலை பதவி நீக்கம் செய்வதுடன் உடனடியாக கைது செய்யவேண்டும்.

  • varun - tamilnadu,இந்தியா

    ஐயோ , எங்கள் புது பொன்மன செம்மல் , புது புரட்சி தலைவர் சிங்கப்பூர் சிங்கம் தினகரன் முதல்வராவதை பொறுக்காத எதிர்க்கட்சிகளின் சதி திட்டம் நிறைவேறிவிட்டதா? அய்யகோ தமிழ்நாட்டில் இனி எப்படி மழை பெய்யும் ......? பிப்ரவரியில் ஒப்பற்ற ஒரு தலைவி முதல்வராகும் தகுதியை இழந்தது தமிழ்நாடு , இப்பொழுது இன்னுமொரு வரலாறு காணாத இழப்பா தமிழ்நாட்டுக்கு ? 57,000 வீடுகள் ஆர் .கே நகருக்காக கட்ட மன்னார்குடியில் வாங்கிய இடங்கள் வீணாய் போகுமே . தேர்தல் துறையே உனக்கு கருணை இல்லையா ?

  • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

    ஒரு வெத்து காகிதத்தை வைத்து, முதல்வர் மற்றும் 7 அமைச்சர்களுக்கு சம்மன் என்று சொன்னால், இதுபோலவே ஒரு வெற்று காகிதத்தை அன்று சஹாரா நிறுவனத்தின் IT ரைடில், அன்றய குஜராத் முதல்வர் மோடி 55 கோடி பெற்றார் என்று அவரது பெயர் இடம் பெற்றிருந்ததே ? அதற்க்கு என்ன பதில்?....

  • அன்பு - தஞ்சை,இந்தியா

    வெரி குட்.

  • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

    குஜராத் முதல்வராக மோடி இருக்கும்போது இதுபோல தேர்தல் நேரத்தில் சஹாரா விடம் இருந்து பணம் பெற்றதாக, IT ரைடில், மோடியின் பெயரும் இடம் பெற்று ஒரு காகிதத்தை கைப்பற்றினார்கள்..[ அப்போது மத்தியில் காங் ஆட்சி ] .. ஆனால் அது என்னவாயிற்று என்றே இன்றளவும் தெரியவில்லை... ஆனால் இப்போது கிடைத்த வெற்றுத்தாளை வைத்து தையதக்கா என்று குதிக்கிறார்கள் பாஜகவினர்......அன்று IT துறையால் கைப்பற்றப்பட்ட காகிதம் பற்றிய பாஜக அபிமானிகள் பதில் என்ன ?/ அன்று கைப்பற்றப்பட்டது கசக்கும் போலி என்றால் இன்று கைப்பற்றியது உங்களுக்கு இனிக்கும் போளி யா ?

  • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

    85 % மக்களுக்கு பணம் 89 கோடி கொடுத்தாகிவிட்டதாம்.. அப்படின்னா 10 இல் 9 பேருக்கு 4000 கிடைத்து விட்டது என்றால் ஒரு குடும்பத்துக்கு 25000 கிடைத்திருக்கும்...ஆனால் RK நகர் மக்கள் பரிதாபமாக அல்லவா உள்ளனர்?... பொய் சொல்வதையும் பொருந்த சொல்ல வேண்டும்.. RK நகர் மக்களிடம் விசாரித்து பார்த்தால் பணம் கிடைத்ததா என்று தெரிந்துவிடும்... ஒரு வெத்து பேப்பரை வைத்து, தேர்தலை முடக்கி விட்டார்கள்..

  • jojojo - chennai,இந்தியா

    ரத்து செய்ததோடு ,பணம் தந்த அனைத்து வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்திருந்தால் ,அடுத்த தடவை பணம் தர பயப்பட்டு இருப்பார்கள்

  • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

    வெறும் 6 % வாக்குப்பதிவு நடந்துள்ள, 94 % மக்கள் புறக்கணித்துள்ள ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலையும் தேர்தல் கமிஷன் ரத்து பண்ணுமா?... அறிய ஆவல்...

  • Rajan - chennai,இந்தியா

    தஞ்சாவூர்., அரவக்குருச்சியே தேர்தல் ஆணையத்திற்கு ஒரு பாடம்.அதில் எந்த படமும் கற்றுக்கொள்ளாமல்., மீண்டும் ஒத்திவைப்பு ரத்து என்பது உங்கள் பலவீனத்தை வெளிப்படுத்தும் செயல்., உங்கள் கையால் ஆகத்தனத்தை ஒப்பு கொள்கிறீர்களா? .. அப்படி தேர்தல் ரத்து செய்தால் வெகுஜன மக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது உள்ள நம்பிக்கை பொய்த்துவிடும் (அது இப்பொழுதே கிட்ட தட்ட அப்படித்தான்)., ஏன் இவ்வளவு நேரம், பணம்., அரசு ஊழியர்களை (சிறப்பு தலைவர் உட்பட) செலவு செய்தது மட்டும் இல்லாமல், நம் நாட்டின் சட்டம் இந்தளவிற்கு ஓட்டையா? பலவீனமா? குறிப்பிட்ட அந்த வேட்பாளர்கள்., கட்சியினர் மட்டும் தான் இதற்கு காரணம்., எனவே, அந்த களவாணிகளை மட்டும் தகுதி நீக்கம் செய்துவிட்டு மற்ற வேட்பாளர்களை வைத்து தேர்தல் நடத்த வேண்டும்., எல்லாரும் திரும்பவும் பணம், நேரம், சக்தி செலவு பண்ணவேண்டுமா (மீண்டும் தேர்தல் அறிவித்தால்)?? பாவம் தவறு செய்யாத., மீண்டும் பணம் நேரம் விரயம் பண்ணமுடியதாக சுயேச்சை மற்றும் மார்க்சிஸ்ட் போன்றவர்களின் நிலை என்ன?? தேர்தல் ஆணையமோ, அரசோ நஷ்ட ஈடு கொடுக்குமா?? இல்லை மற்றும் ஒரு முறை நடக்கும் பட்சத்தில் மீண்டும் பணம் விளையாடாது என்பது என்ன நிச்சயம்?? எனவே முறைகேட்டில் ஈடு பட்ட அந்த (சில) வேட்பாளர்களை (குறிப்பாக தினகரன்) தகுதி நீக்கம் செய்துவிட்டு தேர்தலை நடத்துங்கள்... இது மற்ற அப்பாவி வேட்பாளர்கள் மீது நடத்தப்படும் அநீதி... உண்மையான கையாலாகாத இயந்திரம் என்றால் அது தேர்தல் ஆணையம் தான்...ரத்து செய்தால் உங்கள் தோல்வியை (அராஜகம், அநீதி புரியும் அந்த கூட்டத்திடம்) நீங்கள் சரண் என்று ஒப்புக்கொண்டீர்கள் என்பது அர்த்தம்.,...

  • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

    தினகரன் ஜெயித்தால், அதிமுகவுக்கு சிறந்த தலைமை கிடைத்துவிடுவதை பொறுக்கமாட்டாமல், பாஜக அறிவுரைப்படி தேர்தலை ரத்து பண்ணியிருக்க கூடும்...தஞ்சை அரவக்குறிச்சி போல மீண்டும் அதிமுக அம்மா அணி ஜெயிக்கும்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement