Advertisement

சேகர் ரெட்டி 'போட்டு' கொடுத்ததால் அமைச்சர் விஜயபாஸ்கர் மாட்டிக்கிட்டார்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி கொடுத்த தகவல் காரணமாகவே, அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரித்துறை வலையில் வசமாக மாட்டியுள்ளார். குட்கா அதிபரிடம் பறிமுதல் செய்யப்பட்ட, பல கோடி மாமூல் பட்டியலில், அமைச்சர் பெயர் இருந்ததும், வருமான வரித் துறை அதிரடிக்கு ஆதாரமாகி உள்ளது. அமைச்சருக்கு வைத்த குறியில், அவரது துறையைச் சேர்ந்த மருத்துவ பல்கலை பெண் துணை வேந்தரும் தப்பவில்லை.அதேநேரத்தில், தினகரனுக்கு ஆதரவாக அணி மாற, பணம் கைமாறியதால், ச.ம.க., தலைவர் சரத்குமார் வீட்டிலும், 'ரெய்டு' நடத்தப்பட்டு உள்ளது. இவர்கள் பதுக்கிய பணத்தை கண்டறிய, மாநிலம் முழுவதும், 38 இடங்களில் விடாப்பிடி சோதனை நடந்து வருகிறது.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை, சசிகலா அணியினர், கூவத்துாரில் அடைத்து வைத்திருந்த போது, அமைச்சர் விஜயபாஸ்கர் தான் அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட்டார். அப்போது, விஜயபாஸ்கருக்கு எதிராக, அவரது சொத்து குவிப்பு பட்டியலை, பன்னீர் அணியினர் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தினர்.

காலை 6 மணிதற்போது, ஆர்.கே.நகரில் போட்டியிடும், தினகரனின் வலது கரமாக, விஜயபாஸ்கர் செயல்பட்டு வருகிறார். அங்கு நடந்த தாராள பணம் பட்டுவாடாவை பார்த்து, தேர்தல் ஆணையம் அதிர்ந்து போய், சிறப்பு தேர்தல் அதிகாரியை நியமித்துள்ளது.அதைத் தொடர்ந்து, தினகரனுக்கு பக்கபலமாக செயல்படும் விஜயபாஸ்கரின், சென்னை, கிரீன்வேஸ் சாலை இல்லம் உட்பட, அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று காலை, 6:00 மணியளவில், அதிரடி சோதனையை துவக்கினர்.
வழக்கத்துக்கு மாறாக, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை, பாதுகாப்புக்கு அழைத்துச் சென்றனர். அவர்களின் உதவிக்கு, தமிழக போலீசாரும் வந்திருந்தனர்.சென்னை - பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே, கெங்கு ரெட்டி தெருவில் உள்ள, விஜயபாஸ்கரின் சகோதரி வீடு, திருவொற்றியூரில் உள்ள மற்றொரு சகோதரி வீடு, சேப்பாக்கம் எம்.எல்.ஏ.,க்கள் குடியிருப்பில் உள்ள, ஐந்து அறைகளிலும் சோதனை நடந்தது. இதில், விஜயபாஸ்கர் அறையில் இருந்து, 1.8 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரூ. 85 கோடிஅமைச்சரின் கணக்கு வழக்குகளை கவனிக்கும் சீனிவாசன் என்பவரின், வளசரவாக்கம் வீட்டில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான, 89 கோடி ரூபாய்க்கான ஆதாரங்கள் சிக்கின.இதற்கிடையில், அமைச்சர் வீட்டில் இருந்த சில ஆவணங்களை, ஒரு கும்பல், புதுக்கோட்டை நிர்வாகிகள் தங்கியிருந்த, எழும்பூர், கென்னட் லேன், லட்சுமி லாட்ஜிக்கு கடத்தியது. அந்த தகவல் தெரிந்ததும், அந்த லாட்ஜிலும், அதிகாரிகள் புகுந்தனர். அங்கு, ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆதரவு வாக்காளர்கள் பட்டியலும், அவர்களுக்கு பணம் தந்ததற்கான ஆவணங்களும் சிக்கின. இது தவிர, திருவல்லிக்கேணியில் வசிக்கும், அமைச்சருக்கு நெருக்கமான நயினார் முகமது வீட்டில், மூன்று கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மேலும், அமைச்சருக்கு நெருக்கமான தரகர்,கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த கல்பேஷ் ஷா என்பவரின் வீட்டில், 1.1 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நேரத்தில், விருகம்பாக்கம் - ஆற்காடு சாலையில் உள்ள, தமிழக மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி வீடு, முன்னாள் அ.தி.மு.க., - எம்.பி., ராஜேந்திரன் வீடு உட்பட,சென்னையில், 26 இடங்களில் சோதனை நடந்தது.

ஸ்ரீரங்கம், தேவகோட்டைபுதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர், சவுராஷ்டிரா தெருவில் உள்ள, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான, இரண்டு வீடுகள்; திருவேங்கைவாசல் பகுதியில், பினாமி நிறுவனமான, 'ராசி புளூ மெட்டல்ஸ் குவாரி' ஆகிய இடங்களிலும் சோதனைநடந்தது.மேலும், நச்சாந்துப்பட்டியில் உள்ள, அமைச்சரின் டிரைவர் அப்துல்லா வீட்டிலும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான அன்னை தெரசா கல்வி நிறுவனங்களிலும், இலுப்பூர் ராசி லாட்ஜிலும் சோதனை நடந்தது.மேலும், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், மணப்பாறையிலும், நாமக்கல்லில் உள்ள அமைச்சரின் உறவினரான, கான்ட்ராக்டர் சுப்பிரமணியன் வீட்டிலும் என, மாநிலம் முழுவதும், 38 இடங்களில் சோதனை நடந்தது. இதில், 89 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டுவாடா ஆவணங்கள் மற்றும், 4.2 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சோதனையில், சென்னை, திருச்சி, கோவை, சேலத்தைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள், 30 க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து செயல்பட்டனர்.

போட்டுக் கொடுத்த சேகர் ரெட்டி'அமைச்சர் விஜயபாஸ்கர், என் மறைமுக தொழில் கூட்டாளி' என, சேகர் ரெட்டி கொடுத்த வாக்குமூலம் தான், அவரது வீட்டில் சோதனை நடத்த காரணமாகி உள்ளது.தமிழக வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:அரசு மணல் குவாரிகளை நடத்தும் உரிமம் பெற்றிருந்த, கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி வீட்டில், 2016 டிசம்பரில் வருமான வரி சோதனை நடந்தது. அதில், 132 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும், 177 கிலோ தங்கம் சிக்கியது.அவரது வீட்டில் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில், தலைமைச் செயலராக இருந்த ராமமோகன ராவ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. பின், சேகர் ரெட்டி மற்றும் அவரது தொழில் பங்குதாரர்கள், சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். முன்னதாக, சேகர் ரெட்டியிடம், டிசம்பர், 8ல் வாக்குமூலம் பெற்றோம். அப்போது, 'எஸ்.ஆர்.எஸ்., மைனிங்' என்ற மணல், கிரானைட் சாம்ராஜ்ஜியத்தில், நான், சீனிவாசலு, ரத்தினம் ஆகிய மூவருடன், அமைச்சர் விஜயபாஸ்கர், சைலன்ட் பார்ட்னராக இருக்கிறார்' என்ற அதிர்ச்சி தகவலை, சேகர் ரெட்டி கூறினார். இந்தத் தகவல், அவரின், ௧௨௪ பக்க வாக்குமூலத்திலும் இடம் பெற்றுள்ளது. அப்போதிருந்தே விஜயபாஸ்கரை கண்காணித்து வருகிறோம். தேர்தல் பணம் பட்டுவாடாவுக்காக மட்டும், இந்த சோதனை நடைபெறவில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மணல் சாம்ராஜ்ஜியம்!அமைச்சர் விஜயபாஸ்கர், எஸ்.ஏ.சுப்பையா என்பவரின் பெயரில், இலுப்பூரில் மணல் குவாரி நடத்தி வருகிறார். இங்கு, ஜல்லி, கிராவல் மண் ஆகியவை எடுக்கப்படுகின்றன. வருமான வரித்துறையினர் கூறியதாவது:நடிகர் சரத்குமாரை,தினகரனுக்கு ஆதரவாக இழுக்க, விஜயபாஸ்கர் கடுமையாக முயன்றுள்ளார். இதில், ஏழுகோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக தெரிகிறது.சரத்குமாரை, தினகரனிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் தான் அழைத்து வந்துள்ளார். அதனால், சரத்குமாருக்கு தரப்பட்டதாக கருதப்படும் ரொக்கப் பணத்தை, அவரது வங்கி லாக்கர்களில் தேடி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

குட்கா அதிபரிடம் பல கோடி மாமூல்!வருமான வரித்துறையினர் கூறியதாவது: தமிழகத்தில் பான், குட்கா போதை பொருட்கள் விற்பனைக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தடை விதித்திருந்தார். ஆனால், மாநிலம் முழுவதும், அவை தங்கு தடையின்றி விற்பனையாகின. அந்த ஆலை அதிபர்கள் கோடிக்கணக்கில் பணம் குவித்தனர்.அதனால், நாங்கள், 2016 ஜூலை மாதத்தில், சென்னை, திருச்சி மற்றும் ஆந்திராவில் உள்ள, குட்கா ஆலைகளில் அதிரடி சோதனை நடத்தினோம். அதில், அண்ணா நகரைச் சேர்ந்த ஆலை அதிபர் மற்றும் கூட்டாளிகளிடம், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது.அப்போது பறிமுதல் செய்யப்பட்ட, 'டைரி' மூலம், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பணம் கொடுத்தது தெரிய வந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் என்ற முறையில், தடை விதிக்காமல் இருப்பதற்கு, மாமூல் தரப்பட்டிருக்கலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கீதாலட்சுமி சிக்கியது எப்படி?தமிழக அரசின் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி, மருத்துவக் கல்வி இயக்குனர் மற்றும் அரசு பொது மருத்துவமனை டீன் போன்ற பதவிகளை வகித்தவர்.சில பணி நியமனங்கள் மற்றும் மருந்து கொள்முதல்களுக்கு, விஜயபாஸ்கருக்கு தரகர் போல் செயல்பட்டதால், அவர் வீட்டில் சோதனை நடத்தியதாக, வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

அரசியல் பழிவாங்கல்!வருமான வரி அதிகாரிகள், நேற்று காலை, 6:00 மணிக்கு, வீட்டுக்கு வந்ததும், அமைச்சர் திடுக்கிட்டார். அப்போது, குழந்தையை பள்ளிக்கு அனுப்புவது, சமைப்பது போன்ற பணிகள் தொடரட்டும் என, அதிகாரிகள் கூறினர்.ஆனால், தன் மகளை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை என, அமைச்சர் பேட்டி கொடுத்ததால், வருமான வரித்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில், அமைச்சர் அளித்த பேட்டியில், ''தினகரன் வெற்றியை தடுக்கும் திட்டத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதையெல்லாம் மீறி, அவர் மிகப்பெரிய வெற்றி பெறுவார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத் தான், இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளதே தவிர, வேறெந்த காரணமும் இல்லை,'' என்றார்.

சரத்குமார் வீட்டில்நடந்த பரபரப்புசென்னை, கொட்டிவாக்கத்தில், சரத்குமார் வீடு உள்ளது. நேற்று காலை, 6:00 மணி முதல், வருமான வரித்துறையினர், இந்த வீட்டில் சோதனை நடத்தினர். வீட்டு வாசலில் நின்ற, இரண்டு பிரசார வாகனத்தை சோதனையிட்டனர்.வீட்டில், சரத்குமார், அவரது மனைவி ராதிகா இருந்தனர். சிறிது நேரத்தில், அங்கு கூடிய ரசிகர்கள், மோடி மற்றும் பன்னீர்செல்வத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.மாலை, 3:00 மணிக்கு, வீட்டுக்குள் நுழைய முயன்ற ரசிகர்களை, போலீசார் தடுத்தனர். அப்போது, போலீசார் மற்றும் ரசிகர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.சரத்குமார் கூறியதாவது :தினகரனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவதை தடுக்க, என் வீட்டை சோதனையிட்டு உள்ளனர். மனைவி ராதிகா குளித்துக் கொண்டிருந்த போது, குளியலறை கதவை தட்டி, சாவி கேட்டனர். மருந்து வாங்கக் கூட வெளியே அனுப்பவில்லை. அதிகாரிகள், நாகரிகம் இல்லாமல் நடந்தனர்.நான், தினகரனை சந்தித்த பின், என் வீட்டை சோதனையிட்டது போல், பன்னீர்செல்வத்தை சந்தித்த வாசன் வீட்டை, ஏன் சோதனையிடவில்லை?இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (190)

 • rmr - chennai,இந்தியா

  இந்த சரத்குமார் போன்ற கூத்தாடிகளுக்கு ஆதரவு தரவே கூடாது ஊரே வில்லங்கமா போய்டும்

 • VELAN S - Chennai,இந்தியா

  தினகரனை சந்தித்த பின், என் வீட்டை சோதனையிட்டது போல், பன்னீர்செல்வத்தை சந்தித்த வாசன் வீட்டை, ஏன் சோதனையிடவில்லைன என சரத் கேட்கிறார் , பதில் ரொம்ப சிம்பிள் , நீ தினகரனிடம் கோடி கணக்கில் காசு வாங்கியிருக்கிறாய் , அவர் வாங்கவில்லை ,ஒரு ஓட்டை கட்சியை வச்சிக்கிட்டு உழைக்காமல் , நோகாமல் கோடி கணக்கில் சம்பாதித்து விட்டாயே ,

 • jagadeesan - Hosur,இந்தியா

  முட்டாள் ஜனங்கள் இருக்கும் வரை நாடு உயராது.அறிவாளிகளாக இருந்த மக்களை முட்டாளாக்கிய பெருமை திமுகவை சேரும்.1967 சட்டசபை தேர்தலில் கள்ள ஒட்டு போட்டு ஆட்சிக்கு வந்தவர்களின் வாரிசுகள் இன்றை நிலையில் ஆட்டம் போடுகிறார்கள் கள்ள ஓட்டுக்கு எடுத்துக்காட்டு திமுக.ஓட்டுக்கு பணம் கொடுத்தது திமுக எதையெல்லாம் மறந்து விட்டு காங்கிரஸ் கட்சிக்காரன் திமுக, அதிமுக,இவர்களின் சட்டியி தூக்குகிறார்கள்.பணத்தை கொள்ளை அடிப்பது இவர்களுக்கு நன்கு தெரியும் அதை விட பணத்தை பதுக்க தெரியும் எத்தனை அதிகாரிகள் வந்தாலும் நாங்கள் ஆதரமாட்டோம்

 • aanandathandavan - Thoothukudi,இந்தியா

  "ஓட்டுக்கு லஞ்சம் "விநியோகம் ஓட்டுக்கு லஞ்சம் வாங்கிய வாக்காளர் " - என்று பத்திரிகைகள் ஏன் குறிப்பிட தயங்குகின்றன ? பணம் பட்டுவாடா வாம் பரிசுப் பொருட்களாம் - என்னே வெட்கம் கெட்ட கௌரவமோ ?

 • vedru.varada - vannarapettai.. ,பெலாரஸ்

  மாட்டிக்கிட்டார் விஜய பாஸ்கர்.. ஆனா ஒரு ஆணியும் புடுங்க முடியலே.. மஸ்தானை பகைச்சிட்டா இந்த கதி தான்.. ஆனா ஒன்னும் ஆவாது.. சும்மா படம்..

 • Sayee Manohar - chennai ,இந்தியா

  அப்படி மாட்டியிருந்தால் முதல்ல வழக்க போட்டு குறைந்தது 3 வருடத்தில வழக்க முடித்து தண்டனை வாங்கி கொடுங்க பார்ப்போம். சும்மா முதல் பக்கத்துல பெரிசா நியூஸ் போட்டு பின் மறந்து விடுவதும் பின் அப்படி வழக்கு போட்டு 20 வருடம் கழித்து மாட்டியிருப்பவருக்கு தண்டனை கொடுத்திருந்தால் உச்ச நீதிமன்றத்தில் அதை உறுதி செய்யும் போது அவரை போட்டோவில் மாட்டி மாலை மரியாதை செய்திருப்பார்கள். இதுதான இங்கு நடக்கிறது. போங்கய்யா உங்க வேலைய பார்த்துகிட்டு.

 • vnatarajan - chennai,இந்தியா

  இவர்கள் எல்லாம் எப்படி மக்களை காப்பாற்ற போகிறார்கள்

 • vnatarajan - chennai,இந்தியா

  ஊழல் செய்து மக்கள் பணத்தையும், நாட்டின் கனிம செல்வங்களையும் கொள்ளையடித்து சுக போகங்களை தானும் தன் சுற்றத்தாரையும் அனுபவிக்கிற செயலை யார் செய்தாலும் அந்த ஆள் எந்த கட்சியை சேர்ந்தவனாக அல்லது சேந்தவளாக இருந்தாலும் அவர்களுக்கு நீதி மன்றத்தில் தக்க தண்டனை வாங்கிக்கொடுக்கும் வரை அரசாங்கத்து அதிகாரிகள் முழுவீச்சில் செயல் படவேண்டும் ஆவணங்களையும் சொத்துக்களையும் பணத்தையும் பறிமுதல் செய்வதோடு நின்றுவிடக்கூடாது

 • suresh - chennai,இந்தியா

  ராதிகா குளித்துக் கொண்டிருந்த போது, குளியலறை கதவை தட்டி, சாவி கேட்டனர் வருமானவரித்துறையினர் சோதனைக்கான இலக்கை அடைந்த உடன் துரிதமாக செயல்படுவார்கள், அவர்களுக்கு முதல் சில நிமிடங்கள் மிக மிக முக்கியமானது. வருமானவரித்துறையினர் அதிகாலையில் கேட்டை தட்டியதும் அங்கிருக்கும் காவலாளி யார் என்பதை விசாரித்து தன் முதலாளிக்கு தகவல் சொன்ன பின்பே கதவை திருந்து விட்டு இருப்பார், இடைப்பட்ட நேரத்தில் சந்தேகத்துக்கு இலக்கானவர் ஏதேனும் ஆவணங்களை அழித்து விட கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள், சந்தேகத்துக்கு இலக்கானவரின் இல்லத்தில் யார் இருந்தாலும், அவர்களை தங்கள் கண்காணிப்பில் கொண்டு வருவார்கள், இந்த நிலையில் , ஒருவர் குளியலறையில் இருப்பதாக சொன்னால், சரி அவர் வெளியே வரும் வரை காத்திருக்கிறோம் என அமைதியா இருக்க மாட்டார்கள், காரணம், இடைப்பட்ட நேரத்தில் தன் செல்போன் மூலம் எழுத்து மூலமாகவோ அல்லது வாய்வழி மூலமாகவோ யாருக்கேனும் தகவல் சொல்ல வாய்ப்புண்டு. மேலும் பணத்தையோ அல்லது ஆவணங்களையோ கிழித்து டாய்லெட்டில் போட்டு FLUSH செய்யவும் வாய்ப்புண்டு, சந்தேகத்துக்கு இலக்கானவரை சந்தேக பார்வையில் தான் வருமானவரித்துறையினர் பார்ப்பார்கள், உண்மையில் அவ்வாறு எந்த எண்ணமும் இல்லாமல் உண்மையான காரணங்களுக்காவே ஒருவர் குளியறையில் இருந்தாலும், இது போன்று கதவை தட்டுவதை தவறு என சொல்ல முடியாது. அது அவர்களின் கடமை, அவ்வாறே அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு இருக்கும்.

 • Mahendran TC - Lusaka,ஜாம்பியா

  இந்த விஜயபாஸ்கர்தான் அம்மாவின் மரணத்திற்கு மாஸ்டர் பிளான் போட்டுக்கொடுத்த கயவன். கடவுள் இவனை மன்னிக்கவேமாட்டார்.

 • Parthasarathy Ravindran - Chennai,இந்தியா

  கையும் களவுமாக மாட்டிக்கொண்டாலும் இவர்கள் குற்றத்தை ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  சேகர் ரெட்டி போட்டு கொடுத்தால்தான் ரைட் என்றால் மத்திய அரசின் CBI , உளவு பிரிவு , தடைய பிரிவு லொட்டு லொசுக்கு எல்லாம் எதுக்கு இருக்கு . ஜெயா என்ற பூலான் தேவி இருக்கும் வரை இந்த ரைட் இங்கு எடுபடவில்லை . மக்களுக்கு வறுமையும் அதுக்கு கூழும் ஊத்தி ஏமாற்றி வைத்திருந்தார் . இப்போது திடீர் என்று மோடிக்கு வீரமா வந்துகிட்டு இருக்கு . இந்த வீரம் உண்மை எனில் AIADMK , கொன்சிலர் ,பஞ்சயத் தலைவர் , வார்ட் மெம்பெர் , மேயர் , MLA ,MP ,சசிகலா வீடு ,உறவுகள் வீடு ,பன்னீர் பன்னீர் உறவுகள் வீடு என்று களம் இறங்கினால் மோடி வீரம் தெரியும் .அதை விட்டுபுட்டு நேரம் போகாமல் சும்மா ரைட் அப்புறம் வாங்கியதை வாங்கிப்புட்டுய் விட்டுறாங்க . இது ஒருவித அரசியல் கொள்ளை .மக்களை ரைட் நடத்துவதாக நாடகம் போட்டு , சும்மா திருப்தி படுத்தி பதுக்குவோரிடம் காசு பிடுங்குவது .

 • Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ

  பணத்தை பதுக்கும் பன்னாடைகளை உத்தமன் என்றா சொல்ல முடியும்???? முறைப்படி சம்பாதித்தால் வருமானத்தை காட்டிவிட்டு போக வேண்டியது தானே? ஒரு ரூபாய் திருடினாலும் நீ திருடன் தான். எதுக்கு அலப்பறை? உன் வீட்டுக்கு வெளியில் நிற்கும் அல்லக்கைகளை உதைத்தால் எல்லாம் சரியாகி விடும்.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  இது பிஜேபி க்கு எதிரியை அமுக்க கைவந்த கலை,,

 • K.Sugavanam - Salem,இந்தியா

  ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா...பிஜேபி யா கொக்கா..

 • christ - chennai,இந்தியா

  இவனுங்களுக்கு காசவாங்கிட்டு ஓட்டு போட்ட மக்களை சொல்லணும். மக்களே இனியாவது திருந்துங்கள் ஆயுள் முழுவதும் உழைத்தும் கூட நமக்கு சேமிப்பு என்பது எட்டா கனியாக உள்ளது .இவனுக அரசியலில் நுழைந்தவுடன் கோடிகளில் புரளுகின்றனர் . எதிர் அணிகளிடம் கட்சிமாற கோடிகளை கையூட்டல் பெற்றுக்கொண்டு தங்களை தேர்ந்து எடுத்த மக்களுக்கு நாமம் போடுகின்றனர் .

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  ஓவரா பேசும்போதே தெரியும், இவர் ஏதோ பண்ணியிருக்கிறார், மாட்டிக்கப்போகிறார் என்று. காமராஜர் காலத்தில், ஒழுக்க சீலர்களும், யோக்கியர்களும் அரசியலுக்கு வந்தார்கள், மக்களுக்கு தொண்டாற்றவேண்டும் என்று. ஆனால் இன்று அயோக்கிய சிகாமணிகள் அரசியலுக்கு வருகிறார்கள், சம்பாதிக்க வேண்டும் என்று. பின் நாடு எப்படி உருப்படும்?

 • SSTHUGLAK - DELTA,இந்தியா

  அகப்படாதவரை எல்லோரும் யோக்கியர் வேடம் போடலாம்

 • SSTHUGLAK - DELTA,இந்தியா

  agapadat

 • SSTHUGLAK - DELTA,இந்தியா

  அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி ஓடி போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு என்று கிராமத்து சொலவடைதான் நினைவுக்கு வருகிறது

 • kandhan. - chennai,இந்தியா

  இதை எல்லாம் பார்க்கும் போது ஜெயலலிதாதான் முக்கிய காரணம் போல தெரியவில்லையா ???மேலும் அ தி மு க சொம்புகள் எல்லாம் இப்போ எங்கே போனார்கள்,இவ்வளவு ஊழலும் எப்படி நடந்து??? தலைமையை கையில் வைத்திருந்த அம்மையார் இறந்துவிட்டார் என்றகாரணத்திற்காக அவரைக் நிரபராதி என்று சொல்லமுடியுமா ??இவ்வளவு காலம் ஊடகங்கள் எங்கே போயின ??அப்போதெல்லாம் உங்களுக்கு இந்த சேகர் ரெட்டியை தெரியாதா?? மோகன்ராவை தெரியாதா ???எல்லாம் பணம் பணத்திற்காக வேலைசெய்யும் இந்த கூட்டம்தான் காரணம் என்பது இப்போதாவது மக்களுக்கு புரிகிறதா??? எல்லாம் திமு க செய்தது என்று சொல்லி மக்களை ஏமாற்றிய சூழ்ச்சியை மக்கள் இப்போது தெரிந்து கொண்டிருப்பார்கள் இனியாவது உங்கள் தொகுதி வேட்பாளரை ஒரு நல்ல மனிதரை தேர்ந்தெடுத்து அனுப்புங்கள் அப்போதாவது நம் நாடு உருப்படுமா என்று பார்ப்போம் கந்தன் சென்னை

 • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

  இங்க இருக்குற நிறைய பேரு...? ஜெயலலிதா ஊழலே பண்ணாதவங்க மாதிரியும்... அந்தம்மா நேர்மையின் சிகரம், ஊழலற்ற சிகாமணி அப்படீன்னு அன்னைலந்து... இன்னைக்கு வரையும் தூக்கி தலைல வச்சி கொண்டாடிட்டு இருக்காங்களே... அவங்கள கேக்குறேன்..? ஜெயலலிதாவின் அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சரே இந்த அளவுக்கு ஆட்டய போட்டிருந்தா... அந்தம்மா கட்சியில இருந்த... இருக்குற அமைச்சர்கள் எவ்வளவு ஆட்டய போட்டிருப்பாங்க...? அத்துடன்... அந்தம்மாவின் அமைச்சர்களின் கூட்டத்திலே உள்ள ஒரே ஒரு அமைச்சரே இவ்வளவு ஆட்டய போட்டிருந்தா... தலைமையேற்று முதலமைச்சராக இருந்த அந்தம்மா எவ்வளவு ஆட்டய போட்டிருப்பாங்க..? இதப்பத்தி ஏன் யாரும்... அந்தம்மாக்களின் சொம்புகளும்... அல்லக்கைகளும் ஏன் பேசுறதே இல்ல...? சசிகலாவும், தினகரனும், விஜயபாஸ்கரனும் புதுசா கட்சி ஆரம்பிச்ச மாதிரியும், புதுசா ஆட்சிக்கு வந்த மாதிரியும், அமைச்சர் ஆன மாதியும் கமெண்ட் போடுறாங்களே...? விஜயபாஸ்கரனே இவ்வளவு ஆட்டய போட்டிருந்தா... இவரோட தலைவி எவ்வளவு ஆட்டய போட்டிருப்பாங்க..?ன்னு நினைச்சு பார்த்தேன்...? “அப்படியே... ஷாக் ஆயிட்டேன்....?”.... இதுல வேற... இங்க இருக்குற சில அதிமேதாவிகள்.. படித்த அறிவாளிகள்... அந்தம்மாவ “ரொம்ப நல்லவங்க”ன்னும்... “நேர்மையின் பிறப்பிடம்”னும்... மற்றவர்களெல்லாம் திருடங்கன்னும் சொல்றது என்ன நியாயம்னு கேக்குறேன்...?

 • ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா

  இப்புடி கொள்ளையடிக்கும் இவர்கள் எல்லாம் வெளங்காம தான் போவாங்க..

 • Balaji - Khaithan,குவைத்

  இன்றைய தேதியில் அரசியலில் உத்தமர்கள் என்று அரிதிலும் அதிதாகத்தான் இருக்கிறார்கள்....... அதனால் இதுபோன்ற சோதனைகள் விரிவுபடுத்தப்பட்டு வேண்டிய கட்டாயம் இருக்கிறது...... பாஜக உந்துதல் இந்த சோதனையில் இருந்திருக்கலாம் என்ற அதிமுகவினரின் கேள்விக்கு பதில் அனைவருக்கும் தெரிந்தது தான்....... எப்போதுமே ஆளும் கட்சியாக இருக்கும் மத்திய அரசு தங்களுக்கு எதிரானவர்களின் மீது இதுபோன்று செய்வது இயல்பு தான் என்றாலும் (இதற்கு கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஆந்திராவின் YSR காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கியவுடன் அவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதை மிகச்சிறந்த உதாரணமாக சொல்லலாம்), விஜய பாஸ்கர் வீட்டில் மற்றும் அவர் உறவினர்கள் வீடுகளில் நடத்தப்பட்டது ஏதோ திடீரென நடத்தப்பட்டதாக நான் கருதவில்லை........ ஏனெனில் இவர் தொடர்புடைய அவர்களது உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் என்று மொத்தம் 38 இடங்களில் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று அடையாளம் காண்பதற்கே சுமார் 1 மாதமாவது ஆகியிருக்கும்......... இதற்காக பாஜக அரசியல் உள்நோக்கம் இல்லை என்று அர்த்தமல்ல........... அப்படியும் இருக்கலாம்......... எதுவாக இருந்தாலும் ஊழல் செய்பவர்களை பிடித்து உள்ளே வைத்தால் சரிதான்........

 • Tamizhan SINGAI - Batam,இந்தோனேசியா

  விஜய பாஸ்கர் சொத்துக்களை பறித்தால் தமிழக பட்ஜெட்டில் இரண்டு அல்லது மூன்று துறைகளை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்லலாம் செய்வார்களா வருமான வரித்துறை அதிகாரிகள் ?

 • Rajan - chennai,இந்தியா

  என்னை பொறுத்தவரை வெறும் விஜயபாஸ்கர்., சரத் மட்டும் இல்லை...கிட்ட தட்ட எல்லா அமைச்சர்கள்., சில நடிகை நடிகர், இயக்குனர்கள், வீட்டிலும் சோதனை பண்ணவேண்டும்..இதற்கு மேல் என்ன நடவடிக்கை என்பது தான் கேள்வியே...சேகர் ரெட்டியை போல் கைது?? முடியுமா? அதுதான் 89 கோடிகளுக்கு ஆவணம் ., 85 % மக்களுக்கு பணம் விநியோகம் பண்ண வேண்டிய சாட்சியங்கள் சிக்கிருக்கே...போதாதா?? இதற்கு மேலும் விஜயபாஸ்கரை கைது செய்யாமல்., தினகரனை தகுதி நீக்கம் செய்யாமல் இருப்பதுதான் நம் சட்ட பலவீனமானது என்று தோன்றுகிறது..பணம் உள்ளவனுக்கு நோட்டீஸ் ., இளைத்தவனுக்கு கைது., என்ன நியாயம்??

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  திகில் சினிமா படம் பார்ப்பது போல இருக்கிறது. இந்த தமிழக நாதாரிகளுக்கு ஊழல் தான் உயிர்..ஊழல் தான் உணவு..ஊழல் தான்..உடை..ஊழல் தான்..மனைவி...ஊழல் தான்..பிள்ளைகள்..ஊழல் தான் உறவினர்கள்....ஊழல் தான்..அரசியல்...ஊழல் தான்...அம்மா..ஊழல் தான்...அப்பா..ஊழல் தான் கடவுள்....ஊழல் தான்...தமிழ்...ஊழல் தான்..உறங்கும் படுக்கை..ஊழல் தான் எல்லாமே...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  போட்டு கொடுப்பது...காட்டிக்கொடுப்பது...துரோகம் செய்வது எல்லாம் எட்டயப்பன் காலத்தில் இருந்து நமது ஆள்களுக்கு கை வந்த கலை...

 • karthick - qatar,கத்தார்

  இதற்கெல்லாம் தமிழக முட்டாள் மக்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள் ? வெறுப்புடன் தமிழன்.........

 • Mohamed Riswan - chennai,இந்தியா

  தினமலர் சொல்லியுள்ள காரணங்கள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையிலானவை. இவை எவற்றிற்குமே ஆதாரம் கிடைக்கப்போவதில்லை.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  முன்பெல்ல்லாம் கருணா அறிக்கை விட்டால், " யோக்கியன் வாரான் சொம்ப எடுத்து உள்ளவை " என்பது போல ஒரு பீலிங்கு வரும்... ஆனால் இப்போது பாஜக நடவடிக்கைகளை பார்க்கும்போது, " யோக்கியன் வாரான், தாலியை மறைக்க முந்தானையை இழுத்துப் போட்டு மூடிக்கோ " என்ற பீலிங்கு தான் வருது... பாஜக யோக்கியமான கட்சி என்றால் ஜெ ஆட்சியில் ஊழலில் திளைத்த பன்னீர், மாபா, மற்றும் நாத்தம் வீடுகளில் எதுக்கு நேற்று ரைடு செல்லவில்லை?... துரோக கூட்டணியுடன் , பாஜகவுக்கு உள்ள கள்ளத்தொடர்பு அம்பலமாகிவிட்டது...

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  தமிழக பாஜகவினர் குறிப்பாக H ராஜா, பொன் ராதா, TV விவாதங்களில் கலந்துகொண்டு பேசும் நாராயணன் , ராகவன் ஆகியோர் இப்பதெல்லாம் ஆணவத்தில் , மமதையில் உச்சக்கட்டத்தில் பேசுகிறார்கள்... ஆனால் இவர்கள் ஆட்டம் எல்லாம் இன்னும் ஒரு வருடத்துக்கு தான்... 2018 இதே ஏப்ரல் மாதத்தில் இருந்து, 2019 தேர்தலுக்கான பிரச்சாரம் ஆரம்பித்துவிடும்... அப்போது, வரும்பாருங்க, CAG அறிக்கை, நோட்டு முடக்கத்தில் நடந்த ஊழல்கள்... போன்றவை.....மேலும் நிலக்கரி ஏலத்தில் பல லட்சம் கோடி காங் காலத்தில் ஊழல் என்று சொன்னார்கள்...ஆனால் பாஜக நிலக்கரி ஏலத்தில் இந்த ஆட்சியில் எவ்வளவு வருமானம் என்று இதுவரை தெளிவாக சொல்லவில்லை... 3G யில் எவ்வளவு வருமானம் என்றும் தெளிவாக சொல்லவில்லை... இதெல்லாம் CAG அறிக்கையில் விரைவில் வரும்... அப்போது பாஜகவின் டங்குவாரு அறுந்துவிடும்... EVM மிஷின் இல்லாமல் காகித ஓட்டுபதிவுக்கு மாறினால், பாஜக 2019 தேர்தலில் டபுள் டிஜிட் எண்ணிக்கை தான் பெறும்... EVM மிஷினில் ஊழல் பண்ண பாஜக கைதேர்ந்து விட்டது... தேர்தல் கமிஷன் பாஜகவின் ஊதுகுழலாக வெளிப்படையாக செயல்படுகிறது... UP யில் கூட, EVM இல் கோளாறு பண்ணிதான், பாஜகவால் வெற்றிபெற முடிந்தது.... இல்லையென்றால், அங்கு தொங்குசட்டசபை தான் இன்று வந்திருக்கும்.. பாஜக துரத்தப்பட்ட வேண்டிய கட்சி... ஊழலுக்கு இவர்கள் எதிரானவர்கள் என்றால், பாஜக வினர் செய்யும் ஊழல்களை எதுக்கு கண்டுகொள்ளவில்லை?... பாஜக ஆளும் மாநிலங்களில் பாலாறும், தேனாறுமா ஓடுகிறது?... பாஜக சொம்புகளின் பதில் தேவை....

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  கடலை மிட்டாய் ஊழல் முண்டே, ரேஷன் பொருள்கள் ஊழல் ராமன், வியாபம் ஊழல் சவுகான், சுரங்க ஊழல் ரெட்டிக்கள், 2 G ஊழலில் 80 % உள்ள மர்ம கூட்டம், எடியூரப்பா, கட்கரி, மல்லையா தொடர்புடைய ராஜே, மற்றும் சுஷுமா, ஜெகன்மோகன் ரெட்டி, பன்னீர், நாத்தம், மாபா, இவர்கள் எல்லாம் ஊழலே செய்யாத உத்தமர்களா?... இவர்கள் மீது எதுக்கு நடவடிக்கை இல்லை?.. IT ரைடு இல்லை... ?..அதாகப்பட்டது பாஜகவை ஆதரித்தால் அவ்வளவு ஊழல் வேண்டுமானாலும் செய்யலாம், ....எதிர்த்தால், பழி வாங்குவோம்....இது தான் தேசபக்த கூட்டத்தின் தேசபக்தி?.... பாஜக சொம்புகள் பதில் சொல்லட்டும்....

 • balasubramanian - coimbatore,இந்தியா

  பழிவாங்கும் நடவடிக்கை என்று மக்கள் கண்டிப்பாக நினைக்கமாட்டார்கள் .வருமான வரித்துறையினர் ஒன்றும் தவறு செய்யவில்லையே .

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  தேர்தல் ரத்து என்று இன்று செய்திகள் வர வாய்ப்புள்ளது.... ஒரு தொகுதிக்கு கூட தேர்தல் நடக்கமுடியாத, தேர்தல் கமிஷனை கலைத்துவிட மத்திய சர்க்கார் தயாரா?...

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  விஜயபாஸ்கர் ஊழல்வாதி தான்.. ஒத்துக்கொள்கிறோம்,....அனால் இவர் எப்போது ஊழல் செய்தார்?....ஜெ ஆட்சியிலா?.. அல்லது எடப்பாடி ஆட்சியிலா?... ஆக ஜெ ஆட்சி என்றால் ஊழல் செய்யலாம்.. ஆனால் எடப்பாடி ஆட்சி நடக்கக்கூடாது.... ஜெ ஆட்சியில் ஊழல் செய்தவர்களை எடப்பாடி ஆட்சியில் தான் பிடிப்பார்களாமா?.. இதுக்கு பாஜக சொம்புகள் பதில் சொல்லவேண்டும்...

 • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

  மன்னார் குடி மாபியா கும்பல்கள் ஒரு இடை தேர்தலிலே இவ்வளவு பணம் வாக்காளர்களுக்கு அள்ளிக்கொடுக்கிறது என்றால் ,இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்னாகும் ? இன்று தமிழகம் எதிர்கால நலன் குறித்த தொலைநோக்கு பார்வையில் திட்டங்கள் தீட்டி அதனை ஊழலற்ற முறையில் அமுல்படுத்தும் பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் முதல்வர் இல்லாமல் தடுமாறுகிறது .ஆந்திராவில் பத்து மாதங்களில் இரு நதிகள் இணைக்கப்பட்டு விவசாயம் பெருக்கப்பட்டுள்ளது ,மத்திய அரசின் உதவி இல்லாமால் .ஆனால் தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஒருபுறம் ,மறுபுறம் மடை திறந்ததன கரன்சி வெள்ளம் பாய்கிறது .இக்கட்டான இந்தவேளையிலும் ஒரு கூட்டம் போலிமதச்சார்பின்மை பேசி தமிழக மக்களை முட்டாளாக்கி கொண்டிருக்கிறது .அது சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் மற்றும் கருப்பு தாலிபான் திக வீரமணி மற்றும் சாதீய கட்சிகள் தான்.இந்த கட்சிகள் தான் போன வாரம் ஓன்று கூடி தமிழகத்தில் ஹிந்து மதவாதம் தலை தூக்கி விட்டது .ஆதலால் அதை எதிர்க்க மதசார்பின்மை கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று தீர்மானங்கள் போட்டனர் . இவர்கள் ஹிந்து மதவாதம் என்று குறிப்பிடுவது பிஜேபியை தான் . முஸ்லீம் லீக் ,மனித நேய மக்கள் கட்சி ,கிருஸ்துவ ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளும் இந்த மதசார்பின்மை இயக்கத்தில் ? சேர்க்கப்பட்டன .வழக்கம் போல தமிழகத்தில் கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக நடக்கும் ஊழல் ,மணல் கொள்ளை ,தாது மணல் கொள்ளை ,மற்றும் அனைத்து சீர்கேடுகளுக்கு வட இந்திய பார்ப்பனர்களின் சதி/RSS சதி /ஆரியர்களின் சதி /பிஜேபி சதி என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .இந்த போலி மதசார்பின்மை கட்சிகளை பற்றி இனம் கண்டுகொள்ளவேண்டும் என்றால் இவர்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்டால் போதும் - இன்றய RK நகர் இடை தேர்தலில் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் பிஜேபி சார்பாகவும் ,மற்றும் ஒன்றுபட்ட அதிமுக சார்பில் மன்னார் குடி மாபியா தினகரன் போட்டியிட்டால் , இந்த போலி மதசார்பின்மை மனிதபதர்கள் - மதசார்பின்மை தினகரனை ஆதரிப்போம் என்று தான் கூறுவார்கள் .இது தான் இந்த கருப்பு தாலிபான் திக மற்றும் சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கட்சி புல்லுருவிகள் கொண்டுள்ள போலி மதசார்பின்மை வாதம் .ஏற்கனவே .திருமாவளவன் தமிழக டிவி விவாதத்தின் போது இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்களை நான் தலித் /தாழ்த்தப்பட்டவர் என பார்க்க மாட்டேன் .எப்போது கங்கை அமரன் பிஜேபி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாரோ ,அதன் பின்பு அவரை நான் தலித்தாக பார்க்க மாட்டேன்.அவரை பிஜேபிக்காரராக தான் பார்ப்பேன் என்றார்.இதன் விளக்கம் பிஜேபியில் சேரும் தலித்துக்கள் சாதியில் இருந்து விலக்கம் செய்யப்பட்டவர்களாக ஆம் சாதியில் இருந்து விலக்கம் செய்யப்பட்டவர்களாக கருதப்படுவார்கள் என்பது தான். காரணம் பிஜேபி மதவாத கட்சியாம்.இதே திருமாவளவன் பிஜேபியுடன் இருக்கும் ராம்விலாஸ் பாஸ்வான் ,மற்றும் பிஜேபி ஆதரவுடன் ஆட்சி நடத்திய பகுஜன் கட்சி தலைவர் மாயாவதி மற்றும் வாஜ்பாய் அமைச்சரவையில் பதவி வகித்த ஆண்டிபட்டி ராசா 2G புகழ் ராசா ,ஆகியோரை பிஜேபியுடன் கூட்டு வைத்ததற்காக ,அவர்களை தலித் இல்லை என்று சொல்ல தயாரா ? சொல்ல மாட்டார் . மேலும் சசிகலாவை தீவிரமாக ஆதரிக்கும் இந்த திக வீரமணி,- சசி கலா ஊழல் குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட போது பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ - ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பது ஏன்? - பதில் -என்ன காரணத்துக்காக சசிகலா எதிர்க்கப்படுகிறாரோ, அதற்காகவே அவரை திராவிடர் கழகம் ஆதரிக் கிறது. எம்ஜிஆருக்கும், ஜெயலலிதா வுக்கும் கடவுள் நம்பிக்கை இருந்தது. ஆனாலும், திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக அவர்கள் ஒருபோதும் செயல்பட்டதில்லை. இந்த இருவரின் ஆட்சியில்தான் 31 சதவீத இட ஒதுக்கீடு 69 சதவீதமாக உயர்ந்தது. ஜெயலலிதாவின் நிழலாக அவரது வாழ்விலும், தாழ்விலும் 33 ஆண்டுகள் உற்ற துணையாக இருந் தவர். 'இந்தியாவில் என்றுமே அரசி யல் போராட்டங்கள் நடைபெற்றதே இல்லை. நடப்பவை அனைத்தும் ஆரிய - திராவிட இனப் போராட்டமே' என்பார் பெரியார். இப்போதும் அது தான் நடக்கிறது. ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட சூழலைப் பயன்படுத்தி குறுக்கு வழியில் தமி ழகத்தில் காலூன்ற பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் திட்டமிடுகின் றன. இதை முறியடிக்கவே சசி கலாவை ஆதரிக்கிறோம். பார்த்தீர்களா ? தினமலர் வாசகர்களே இது தான் தன்மான பகுத்தறிவு தலைவர் திக வீரமணியின் அறிவு .சுய மரியாதை ,இனமானம் வகுத்த பாதை இது . இது ஒன்றும் தமிழகத்துக்கு புதிது இல்லை அந்த திக இயக்கத்தின் தலைவர் வெள்ளையர்களிடம் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தியவர் .தமிழை காட்டு மிராண்டிகளின் பாஷை என கொச்சைப்படுத்தியவர் .பிரதமர் மோடிஜி அவர்களையும் /ஹிந்து மத சம்பிரதாயங்களையும்/ ஹிந்து மத சம்பிரதாயங்களையும் இழிவு செய்வது தான் இவர்களின் உடல் வளர்க்கும் தொழில்.இத்தகையோரால் மதத்தின் பேரால் தமிழன் ஏமாற்றப்பட்டான். .மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்தது முதல் மோடிஜி அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளை இழிவு செய்ய வேண்டி - அது சேது சமுத்திர திட்டம் ஆகட்டும் ,சம்ஸ்கிருதம் படிப்பு அறிமுகம் ,புதிய கல்வி கொள்கை மற்றும் முல்லை பெரியார் , மீத்தேன், காவேரி விவகாரம், பண மதிப்பு நீக்க விவகாரம் ஆகிய அனைத்து விசயங்களுக்காகவும் மத்திய அரசை எதிர்க்கும் திக திராவிட போராட்டங்களில் தவறாமல் ஹிந்து கடவுள் ராமர் கொடும்பாவி எரிப்பு உண்டு . .இந்த ராமர் கொடும்பாவி எரிக்கும் பழக்கம் கி பி 1971 ம் ஆண்டு சேலத்தில் நடந்த திக திராவிட மாநாட்டில் தொடங்கியது .அந்த மாநாட்டில் தான் அயோத்தி ராமருக்கு செருப்பு மாலைகள் போடப்பட்டு ராமர் கொடும்பாவி கொளுத்தப்பட்டது .அன்று தொடங்கி ,இன்று வரை நூற்றியெட்டு வைணவ தளங்களில் குடி கொண்டுள்ள ஹிந்துக்களின் கடவுள் ராமருக்கு கடுமையான சோதனைகள் தொடரத்தான் செய்கிறது .எந்த போலி மத சார்பின்மை கட்சிகளும் இதனை கண்டு கொள்ளவில்லை மேலும் தீபாவளி தமிழன் பண்டிகை கிடையாது ஆதலால் ஹிந்துக்கள் தீபாவளி வெடி வெடிக்க கூடாது மீறி வெடித்தால் அதன் மீது திக திராவிட கட்சியினர் சிறு நீர் கழித்து அதனை அணைக்க வேண்டும் என வெறிபிடித்து எக்காளமிட்டார். அதனை கூட வழக்கம் போல் எந்த போலி மத சார்பின்மை கட்சிகளும் கண்டு கொள்ளவில்லை.இப்படிப்பட்ட திக வீரமணி - சசிகலா குடும்பத்தினர் ஊழல் மூலம் தமிழகத்தை கடந்த 25 ஆண்டுகளாக சுரண்டியதை கண்டுகொள்ள மாட்டார் ஆம் சுரண்டியதை கண்டுகொள்ள மாட்டார்..இது தான் பச்சோந்தித்தனம் . பிறழ் முரண் வாதம் .ஊழல் பேர்வழிகளை கண்ணை மூடி கொண்டு ஆதரிக்கும் இந்த கேடு கெட்டஎண்ணம் கொண்ட திக திராவிட கும்பல்களை மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை - போன்ற போலி மதச்சார்பின்மை புல்லுருவிகள் குறித்து தமிழக மக்கள் என்று விழிப்புணர்வு கொள்கிறார்களோ அன்று தான் தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்கும் .தமிழகம் சிறப்புற முன்னேறும் .இது உறுதி

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  சரத்குமார் தினகரனுக்கு ஆதவளித்த மறுநாளே எதுக்கு ரைடு?... அப்படினா, பன்னீர் க்கு ஆதரவளித்த தென்னத்தோப்பு வாசன் வீட்டில் எதுக்கு ரைடு பண்ணவில்லை?... பாஜக சொம்புகள் பதில் சொல்லோணும்....

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு... ஆவணம் கைப்பற்றல்.. ரொம்ப சந்தோசம் தான்... ஆனால பன்னீர் , நாத்தம் , மாபா வீட்டில் இதுவரை எதுக்கு ரைடு செல்லவில்லை ?,.......பாஜக சொம்புகள் பதில் சொல்லுவார்களா?....

 • sam - Doha,கத்தார்

  sarath kumar iku yellam 7 kodi kodukum allauvu panam irundhal, innum indha mafia kumbalidam yevalvu panam ullathu yenpadai makkal sindhithu vote poda vendum. makkalai suranda ulla indha kumbalai makkalai olithu katta vendum

 • Raja Seb - Chennai,இந்தியா

  Seeman maathiri nalla manithargal varanum....

 • sam - Doha,கத்தார்

  indha mafia group yidam panathai petru, pavapatta vivasaiygal kadangalai adaiyungal.

 • Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா

  முதலில் அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டிலோ , இல்லை அவரது அலுவலகத்திலோ எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை. அதே போன்று சரத்குமார் வீட்டிலும் எதுவும் கிடைத்தாக தெரியவில்லை. .5 முக்கிய ஆவணங்கள் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரியில் சிக்கியதாக ஊடகங்கள் தான் தெரிவித்தன. வருமான வரி துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. எனக்கு தெரிந்து 2 பத்திரிகைகள் இந்த வருட தேசிய விருதை மத்திய அரசிடம் பெற கடுமையாக போராடி வருகிறார்கள் ,செய்திகளை கடுமையாக திரித்து தங்கள் விசுவாசத்தை தெரிவித்து கொள்கிறார்கள். என்ன செய்வது நாடு ஒரு சைக்கோ விடம் மாட்டிக்கொண்டுள்ளது. இவர்கள் உண்மை செய்திகளை வெளியிட்டால் இவர்கள் அலுவலகத்திற்கும் வருமானவரித்துறை அதிகாரிகள் வருவர். அமலாக்கப்பிரிவு ,சிபிஐ சோதனை மற்றும் தகவல் தொடர்பு ஒளிபரப்பு துறை இவர்கள் ஊடகங்களுக்கு பல தடைகளை விதிக்கும். என்ன செய்வது ஊழல் காங்கிரசை ஒழிக்க மக்கள் இந்த சர்வாதிகார துக்ளக்கிடம் மாட்டிக்கொண்டனர். .

 • Ganesan - Bangalore,இந்தியா

  இவன் மிகப்பெரிய கொள்ளையன் என்று எல்லோருக்கும் தெரியும். அதனால் தான் ஜெயா கொள்ளை கும்பலின் ஆணிவேராகவும், அந்த ஜெயாவையே கொலை செய்த கும்பலுக்கு பாதுகாவலனாகவும் இருக்கிறான். இவனை போன்ற கொள்ளைக்காரர்களை, சட்டம் தண்டிக்கட்டும் என்று விட்டு விட்டோமென்றால், நாம் மனிதராக இருப்பதில் அர்த்தமில்லை, சிலவற்றை அறுவை சிகிச்சை மூலம் தான் குணம்படுத்த முடியுமென்றால், அதை தானே செய்ய வேண்டும், அந்த சிகிசிச்சைக்கு மக்களாகிய நாம் தான் டாக்டர்கள். சட்டத்தை மதிப்பவர்களுக்கு, சட்டப்படி விசாரணை, தண்டனை. சட்டத்தை குற்றுயிரும் கொலையிருமாக ஆக்கும் விஜயபாஸ்கர் என்ற கொள்ளையனுக்கு, மக்களே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இப்படியே விட்டு வைத்தால், நாடு தாங்காது. ஒரு சசிகலாவோ, ஒரு தினகரனோ நமக்கு பிரச்சினையில்லை... ஆனால் இந்த் மாதிரி அடிமை கொள்ளையன் இருந்தால், தங்கள் சுயநலத்துக்காக பல தீயகாரங்களையும் பல ஊழல் தலைவிகளையும் உருவாக்குவார்கள். இவர்களுக்கு சட்டப்படி தண்டனை என்பது நிச்சயம் தீர்வாகாது. மக்களே அறுவை சிகிச்சை செய்து ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். சரத்மார் போன்ற அன்றாடம் காய்ச்சிகளை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். எத்தனையோ வருமானவரி சோதனை நடந்திருக்கிறது. எங்கேயும் இந்த அளவுக்கு அலம்பல்கள் இல்லை.. தளவாய் சுந்தரத்தை உள்ளே அனுமதித்தது யார்? அவன் ஆவணங்களை எடுத்து கொண்டு வெளியேற அனுமதித்தது யார்? அவன் கையில் இருந்த ஆவணங்களை விஜயபாஸ்கரின் ட்ரைவர் எடுத்து கொண்டு ஓடியது என்? அதை வெளியில் வீசி கிழித்து போட செய்தது யார்? தவறு செய்யவில்லை என்றால், ஏன் இதை செய்ய வேண்டும்? மடியில் கனமில்லை என்றால், ஏன் கத்தி கூப்பாடு போட வேண்டும். தீயகரனுக்கு தேர்தல் வேலையை தடுப்பது என்றால், 100 எம்.எல்.ஏ.க்களையும், மங்குனி மந்திரிகள் அத்தனைபேரையும் சோதனை செய்திருக்க வேண்டுமே.. அப்படியில்லாமல் ஒரு முந்திரியையும், ஒரு கூலிக்கு மாரடிக்கும் சரக்குமாஸ்டரையும் தானே சோதனை செய்கிறார்கள்? இதில் என்ன தவறு? மொத்தத்தில், ஜெயாவின் கையாலாகதா தனத்தினால், மொத்த தமிழ்நாடே கொள்ளை கூடாரமாக மாறிவிட்டார்கள். தற்போது நடைபெறும் சண்டை, கொள்ளை கும்பலுக்கு யார் தலைமை என்பதே. இந்த கொள்ளை கும்பலிடம் இருந்து நாட்டை காப்பாற்ற ஒரே வழி, நல்லாட்சி மலர வேண்டும், விடியட்டும் தமிழகம், முடியட்டும் கொள்ளை ஆட்சி. விடியட்டும் முடியட்டும். உச்சத்தில் உதிக்கட்டும் உதயசூரியன்.

 • Shree Ramachandran - chennai,இந்தியா

  ராதிகாவை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது.சாவியைத்தராமல் இருக்க அவர் இருபத்திநாலு மணி நேரமும் கூட குளிப்பார். ஆதரவு தர பேரம் பேசி பணம் வாங்கியது. மேலும் சரத்குமார் நடிகர் சங்கத்தில் எப்படி கல்லா கட்டினார் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.தனது சீரியல்களில் நடிப்பவர்களுக்கு பணமே தராதவர் தானே ராதிகா என்று கூறுகிறார்கள். ஊராரின் சாபம் ராதிகாவின் வாரிசுகளுக்கு தான் கேடு.

 • venkatesh -

  Tamilnaadu has reached a low.there is no governance.it has become the hub of corruption.the only way out now is sack the incumbent government, introduce president's rule and then conduct a fair general election.in the meanwhile The centre may initiate steps to NAB and purge the corrupt politicians and bureaucrats.this is the only way forward.the present set up has no moral right to continue in office.mafia government being run by a convict in jail.

 • Gnanam - Nagercoil,இந்தியா

  இப்படி கோடி கோடியாக பிடித்த பணத்தை கொண்டு நமது அரசாங்க கடன்களை தீர்த்துக்கட்டிவிடுங்கள். மக்களுக்கு சேவை செய்யவேண்டிய தலைவர்கள் கோடியில் புரளுகிறார்கள், நாடு கடனில் மூழ்குகின்றது. விழிப்புணர்வோடு களத்தில் இறங்கி செயல்படும் அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்.

 • raja - Kanchipuram,இந்தியா

  தமிழகம் கயவர்களின் கோட்டை. இதை மாற்ற சிவ பெருமானே முயன்றாலும் முடியாது. ஒரு வேளை சிவன் வெகுண்டு தமிழ்நாட்டை அழித்தால் தான் பின் வரும் சமூகமாவது மனிதர்களாக வாழ்வர். இப்போதைக்கு மக்களிடம் நடிப்பது. ஏமாற்றுவது, ஆக்கிரமிப்பது போன்ற தீய குணங்கள் தான் உள்ளது. உழைப்பு இல்லை. ஆனால் பகட்டாக வாழ்கிறார்கள். எனவே இவர்களுக்கு நியாய தர்மம் தெரிவதில்லை. எனவே இத்தகைய தலைவர்களை தான் மக்களும் விரும்புகின்றனர்.

 • பிரேமானந்தா சாமியார் - perth,ஆஸ்திரேலியா

  தமிழக சுகாதார துறை அமைச்சர் , ஜெயா ஆட்சியின் போதே பாண் மற்றும் குட்கா அதிபர்களுடன் மறைமுக கூட்டாளியா ஜெயாவிடம் எல்லாவற்றையும் கூறும் உளவு துறையையே ஒரு அமைச்சர் ஏமாற்றி இருக்கிறார் , ஜெயா ஆட்சியின் போதே அப்படி என்றால் இந்நேரம் தமிழகம் முழுக்க கிட்னி திருடும் மருத்துவமனை / இருதயத்திற்காக , சாலை விபத்தை நடத்தி மூளை இறப்பு நாடகம் நடத்தும் மருத்துவமனை , கன்ஜா , அபின் மற்றும் BROWNSUGAR விற்கும் கும்பல்களுடன் அதிக தொடர்புகள் இருக்கணுமே இதற்க்கு பின்னால் காவல் துறை அதிகாரிகளும் கண்டிப்பாக இருப்பார்கள்

 • sivan - Palani,இந்தியா

  எதுகை மோனை பேசி , காலத்தின் கட்டாயம் அது இது என்று பேசி ...நம்மை முட்டாளாக வைத்திருந்தன திராவிட கட்சிகள் அதனால்தான், ஓட்டுக்கு துட்டு வாங்குவது மானக் கேடு என்று கூட உணராமல் , எனக்கு துட்டு வரலையே என்று தினகரன் வீட்டுக்கு படை எடுத்தனர் மக்கள் இதை விட ஒரு கேவலம் இருக்குமா? இனி வரும் பல வருடங்களுக்கு கூவத்தூர் சொகுசு விடுதியில் நம்மால் தெரிவு செய்யப் பட்ட எம்.எல்.ஏக்கள் தங்கி கூத்தடித்தது ..மிகப் பெரும் இழுக்காக ... ஒரு அவமானச் சம்பவமாக இருக்கும். நம் பிள்ளைகளும் பேரன்களும் நம்மிடம் கேட்பார்கள் அந்த காலக் கட்டத்தில் அப்படி ஒரு கேவலம் நடந்ததாமே எப்படி அப்பா இந்த கேவலத்தை சகித்துக் கொண்டீர்கள் ? படிக்காதவராக இருந்தாலும் விஷயம் தெரியவில்லை என்று சொல்லலாம் : நீங்கள் படித்தவர்தானே எப்படி இது போன்றதொரு அரசாங்கத்தை பல வருடங்களாக சகித்துக் கொண்டிருந்தீர்கள் என்று நம் குழந்தைகள் கேட்டால் என்ன சொல்வீர்கள்? எங்கள் காலத்தில் அப்படித்தான் மானமிழந்தவர்களாக இருந்தோம்.. எந்த ஊழல் பெருச்சாளி பணம் கூட கொடுக்கிறாநோ அவனுக்கே ஒட்டு போடுவோம் என்று சொல்வீர்களா? ஐநூறுக்கும் ஆயிரத்துக்கும் , ஆசைப் பட்டு தட்டில் எதை வைத்தாலும் சாப்பிட தயாராக இருந்தோம் என்று மானமிழந்த்து சொல்வீர்களா? என்று திராவிடம் பேச ஆரம்பித்தோமோ அன்றே தமிழன் மானம் மரியாதை சுய கவுரவம் எல்லாவற்றையும் இழந்தான். இனியாவது நேரமையான தலைவர்களிடம் ஆட்சியை ஒப்படைப்போம் . நேர்மை, சுயமரியாதை போன்றதெல்லாம் மரத்துப் போய் மானம் இழந்து நிற்கும் நமக்கு சுதாரிக்க சிறிது அவகாசம் தேவை . அந்த அவகாசத்தை கவர்னர் ஆட்சி தரும். சாவகாசமாக யோசித்து ... ஒரு நல்ல முடிவு எடுக்கலாம்.

 • S.balasubiramaniansamuel -

  TN political and government ministers and officers very low levels some not all R.K.Nagar election now this days money make many things play IT ride is not clean public honest vote poling choose honest persons elect

 • balakrishnan - coimbatore,இந்தியா

  ஏதாவது தகவல் கிடைத்திருக்கும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது, சோதனை எதுக்கு, எல்லா மந்திரிகளும் நிச்சயம் கோடி கோடியாக கொள்ளை அடிக்கிறானுக, இது ஊரே அறிஞ்ச விஷயம், ஓ.பி.எஸ் மட்டும் யோக்கியம் இல்லை, இன்றைய சூழலில் சோதனை நடந்தது, இது ஒரு பழி வாங்கும் நடவடிக்கை என்று சொல்வதற்கு ஏற்றதாய் அமைந்துவிட்டது

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  "மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லுவார், தம் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார்" பேராசை பெருங்கேடு என்று சும்மாவா நம்மவர்கள் சொன்னார்கள். கூச்சமின்றி மேடைகளில் பொய் சொல்லும் கூட்டம்.

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  அதெப்படி மாமா போல செயல்படுபவர் டாக்டராக இருக்கிறார்....ஆச்சரியமாக இருக்கிறது...ஆளை பார்த்தால் ரவுடி போல இருக்கிறது ...ஆனா டாக்டர் என்று சொல்கிறீர்கள்...சந்தேகமாக இருக்கிறது...ஒரு வேளை ஓபன் யூனிவர்சிட்டி ல பட்டம் வாங்கி இருப்பாரோ? நாட்டாமை நடிகர் சங்கத்தை மோகம் போட்டுட்டு அதுக்கே ஒரு கேஸை சந்திக்க வேண்டி இருக்கு இப்போ மாபியாகிட்ட ஒரு அமவுண்டை கரெக்ட் பண்ண இங்க மூக்கு வேர்த்துடுச்சு....விஷாலுக்கு பொண்ணு கொடுக்கலைங்கற காரணத்தால அருண் ஜெட்லீயை சந்திச்ச விஷால் போட்டு கொடுத்து இருக்கலாம்..........தானா போயி தலையை கொடுத்த நாட்டாமை ...............

 • மலர்மன்னன்சிங்கப்பூர் -

  பினாமி பயலுக காசு கொடுத்து ஓட்டு கேட்கிறது மகா கேவலமான செயல். ஒரு டாக்டர் (அமைச்சர்) இப்படி செய்வது மிக மிக கேவலமான செயல். உடனே பதவியில் இருந்து அகற்றி விட வேண்டும். அல்லது குடும்பத்தோடு நாண்டுகிட்டு சாக வேண்டும்

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  ஒரு விதத்தில் லஞ்சம் பெற்றவர்களும் திருடர்கள் தானே. உண்மையான சம்பாத்தியம் இல்லாமல் மற்றவர்கள் எதற்காக கொடுத்திருந்தாலும் அந்த பணத்தை வாங்கியவர்கள் திருடர்கள் தானே. ஆகா இன்று நான்கு திருடர்கள் வீட்டில் ஒரு பெண் உட்பட அதிகாரிகள் சென்றிடுக்கிறார்கள். அவர்களை உள்ளே தள்ள வேண்டும். அது என்ன முட்டிக்கு முட்டி, அடஹி தட்ட வேண்டும். அதாவது முட்டிகள் உடை பட்டு மாற்று முட்டி வைக்க முடியாமல், நிரந்தர ஊனமாக்கப் படவேண்டும்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  மந்திரி சொல்வது போல இது என்ன அரசியல் பலிவாங்கல்? நெருப்பில்லாமல் புகையுமா? ஒரு சில நாட்கள் பள்ளிக்கு செல்ல வில்லை என்றாலோ அல்லதுஒரு நாள் சமையல் நடக்க வில்லை என்றாலோ ஒன்றும் குடி முழுகி விடாய் போவதில்லை. இவர்களின் கொள்ளையால் எத்தனை குடும்பங்களில் அடுப்பு erivathillai. makkal panaththai kollai adiththu thinpavargal anaiththaiyum இழந்து சிறை வாசம் அனுபவிக்க வேண்டும். அது தான் மினிமாவை உள்ளே vaiththirukkiraargale அப்படி இருந்தும் இவர்கள் திருந்தவே மாட்டார்கள். மோடி அங்கிளுக்கு ஒரு வேண்டுகோள். இனி ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநில திட்டம் கொண்டு வந்து அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள் மந்திரிகள் வீட்டில் தொடர்ந்து ரைடு செய்து அவர்களை தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும். ஐந்தாண்டு திட்டம் போல், ஊழலை ஒழிக்க ஓராண்டு ஒரு மாநிலம் என்று திட்டம் செயல் படுத்த வேண்டும். முதலில் தமிழ் நாடு கர்நாடக, மகாராஷ்டிரா ஆந்திர என்று தொடர வேண்டும்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  ராதிகா குளிக்கும்போது கதவை தட்டி சாவி கேட்டார்கள் என்று என்ன சொல்ல வருகிறார். இது நம்ப தகுந்ததாக இல்லை. ஒரு நல்ல குடும்பத்தினராக இருந்தால் அப்படியே நடந்திருந்தாலும் அதை எல்லாம் வெளியில் சொல்ல மாட்டார்கள். பணத்திற்காக எந்த அளவு கேவலமாகவும் செல்வார்களா என்ன?

 • Santhosh Gopal - Vellore,இந்தியா

  வருமான வரித்துறையினர் விஜய பாஸ்கரிடம், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு சரத் குமாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்ற கேள்வி ஏன் கேட்கவேண்டும்? அப்படி என்றால் சுடலைக்கு காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் ஆதரவு கொடுத்துள்ளதே, அதற்கு எவ்வளவு பணம் கை மாறி இருக்கும்? OPS க்கு GK வாசன் ஆதரவு கொடுத்துள்ளார், GK வாசன் வீட்டில் ரைடு நடத்தினார்களா? அப்படி என்றால் இனிமேல் இந்தியாவில் யாரும் யாருக்கும் ஆதரவு கொடுக்க கூடாது என்று பாஜக கூறுகிறீர்களா? பாஜகவுடன் கூட்டு வைக்க உ.பி யில் எவ்வளவு கொடுத்தார்கள்? மணிப்பூர் மற்றும் கோவாவில் இரண்டாவதாக வந்த பாஜக ஆட்சி அமைக்க சுயேட்சைகளுக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள்? அந்த இரு மாநிலங்களில் உள்ள சுயேச்சை MLA க்கள் வீட்டில் ரைடு நடத்தினார்களா? இது மாநில கட்சிகளை அழிக்க நடத்தப்படும் ரைடு.

 • ranga -

  அமைச்சர் விஜயபாஸ்கரை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ops சொத்துக்களையும் கனக்கிட்டால் இனிமேல் தவறு செய்ய தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பயப்படுவார்கள்

 • Santhosh Gopal - Vellore,இந்தியா

  அணி மாறியதால் சரத் குமார் வீட்டில் ரைடு. அதாவது தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால் பணம் கை மாறி இருக்கலாம் என்று ரைடு நடத்தியுள்ளார்கள். அப்படி என்றால் OPS ஐ சந்தித்து ஆதரவு அளித்த GK vasan வீட்டில் ரைடு நடத்தவில்லையே ஏன்? பாஜக விற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் வீட்டில் ரைடு நடத்தப்பட்டதா? பாஜக OPS உடன் சேர்ந்து மாநில கட்சிகளை அழிக்க பார்க்கிறது. RK நகர் தேர்தலில் இரண்டாம் கட்ட நிலவரப்படி தினகரன் முந்துகிறார் என்ற செய்தி கேட்டு இவ்வாறு செய்கிறார்கள். ஏன் OPS வீட்டிலும், மது சூதனன், மைத்ரேயன், மாபோய் பாண்டியராஜன், மருது கணேஷ், கங்கை அமரன், பொன்.ராதா, தமிழ் இம்சை, வானதி சீனிவாசன், H ராஜா, சுடலை வீட்டில் ரைடு நடத்தவில்லை? ஏன் இவர்கள் ஒருவரும் RK நகர் தேர்தலில் பணம் கொடுக்கவில்லையா? இவர்கள் அனைவரின் பயத்தை வைத்து பார்க்கும் போது தினகரன் தான் வெற்றி பெறுவாரா என்று என்ன தோன்றுகிறது. இது தான்ஆ காலத்தின் கட்டாயம். OPS ஒரு வேலை வெற்றி பெற்றால் அதிமுக என்கிற கட்சியை கைப்பற்றி பாஜகவிடம் விற்றுவிடுவார். காவி பண்டாரம் பாஜகவின் கணக்கு OPS ஐ வைத்து கட்சியை கைப்பற்றி, பிறகு OPS ஐ டம்மி ஆக்கி, கட்சியை உடைத்து, பிறகு சுடலை கட்சியை பிரித்து அவர்களையும் டம்மி ஆக்கி தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே. இந்த விஷயத்தில் சுடலை சந்தோஷப்பட கூடாது, ஏன் என்றால் அடுத்து அவர்களுக்கும் இந்த காவி பண்டாரம் இதே போன்று செய்யும், ஏன் என்றால் பாஜகவில் உள்ள ஒவ்வொரு தலைவரும் திராவிட கழகங்கள் இல்லாத தமிழகம் உருவாகும் என்று கூறி வருவதை பார்த்தல் அவர்கள் ஏதோ மிக பெரிய சதி செய்கிறார்கள் என்று தான் அர்த்தம். முதலில் ஒரு கட்சியை அழித்து பிறகு அடுத்த கட்சியை அழித்து விடலாம் என்பதே. ஏன் பாஜகவில் ஒருத்தரும் சொத்துக்களை குவிக்கவில்லையா? எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல திமுகவும் உஷாராக இருக்க வேண்டும் இல்லை என்றால் அந்நிய சக்திகள் நாட்டை நாசம் செய்துவிடும்.

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  பணத்தை பறித்து, உண்மையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மட்டும் கொடுங்கள்.

 • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

  கைக்கூலி பன்னீர்செல்வதால்தான் பிஜேபி இப்படி தமிழனுக்கு அட்டகாசம் செய்கிறது ..பிஜேபி கும் காங்கிரசும் தி. முன்னேற்றக்கழகமும் தமிழர்களையும் தமிழையும் அழிக்கும் கொம்பேறிமூக்கன்கள்.தினகரனை வெல்லாமல் பிஜேபி இந்த உளவாளி பண்ணீரை வெல்லவைப்பதுதான் பிஜேபி யின் ரகசிய திட்டம் .இந்த ரெய்டுகள் எல்லாம் மற்றமாநிலங்களில் நடக்கவில்லை .இப்படித்தான் பிஜேபி அரசியல் செய்வது.கருணாநிதி , கனிமொழி எடியூரப்பா ,லாலு பிரசாத் ,நிதின்கட்டாரி போன்றவர்களின் வீடுகளிலும் கட்டாயம் ரெய்டு செய்யவேண்டும் .

 • @a_Vailankanni - Mumbai ,இந்தியா

  ஆர்.கே.நகர்ல மரம்வச்சி பணத்தண்ணி தண்ணியா பாய்ச்சினாங்க ஏன் மரம் கனி கொடுக்குமுன்னு அது கனி கொடுக்கல பதிலா தலையில பேரிடியை போடவச்சிட்டது துணையா போனவங்களுக்கும் தான் இதுக்கெல்லாம் அவுங்க சரிபட்டு வரமாட்டாங்க பேசாம கலைச்சிட்டு கவர்னர் கையிலெடுக்க வைக்கலாம்

 • மண்ணாந்தை - Raichur,இந்தியா

  அநேகமா ஏப்ரல் 10 ம் தேதி ஆர் கே நகர் தேர்தலுக்கு ஆப்பு வைச்சிடுவாங்க ன்னு நினைக்கிறேன். அப்புறம் பொதுச்செயலாளர் இல்லாமல் கட்சி எப்படியிருக்க முடியும்னு சொல்லி சட்டசபை கலைந்துவிடும். அப்புறம் கொஞ்சகாலம் (அதாவது ஒரு வருஷம் பக்கமா) ஜனாதிபதி ஆட்சி. அப்புறம் NEET , மணல், மீத்தேன், ... எல்லாத்தையும் சரி பண்ணிட்டு... தேர்தல். பாஜக ஜெயிச்சாலும் ஆச்சரியம் இல்லை.

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  இதேமாதிரியான IT ரெய்டுகளை தி.மு.க தலைவர்களின் வீடுகளில் பண்ணினால் பலவித மறைக்கப்பட்ட பயங்கரமான உண்மைகள் வெளிவரும் இதுதான் மக்களின் வேண்டுகோளும்கூட

 • Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  சரத்குமார் - நடிகன் நன்றாக நடிக்கிறார் பணத்திற்க்காக

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  சேகர் ரெட்டிக்கு நெருக்கமாக இருந்து பொதுப்பணித்துறை அமைச்சராக நெடுங்காலமாக பணியாற்றிய பன்னீரின் மீது, இதுவரை சிபிஐ பாயவில்லை. மத்திய அரசிற்கு வேண்டாதவர்கள் மீது, அவ்வப்போது சிபிஐ வேட்டை நாய்கள் பாயும். மாட்டுபவர்களை பிடித்து, பயமுறுத்தி, அதன் வேலைகளை காட்டும். இது புது விளையாட்டா என்ன? காலம் காலமாக நடப்பது தான். ஏற்கனவே பணமாற்று ஊழலில் சிக்கியுள்ள தினகரனின் வால் மத்திய அரசின் கையில் தான் உள்ளது. இப்போது மேலும் கொஞ்சம் இறுக்கி பிடித்துள்ளது. இங்கே ஆள்பவனும் யோக்கியன் அல்ல. மாட்டுபவனும் யோக்கியவான் இல்லை.

 • Karuppu Samy - MRT,சிங்கப்பூர்

  புதுக்கோட்டைக்காரன் வெறும் Rs10,000க்கு சிங்கப்பூரில் கிடந்து சாகுறான் இவர பாருங்க கோடிக்கணக்கில் ஊழல்...இதுபோல ஆட்களை இதுவரை நம்ம அரசு என்னதான் பண்ண போகுது? போனமுறை தேர்தலில் தோற்கடிக்கப்படவேண்டிய இந்த ஆள் பணத்தை வாரி இறைத்து பணநாயமாக மாற்றி புதுக்கோட்டையில் அடுத்த தொண்டைமானான மாறுவதற்கும் அகப்பட்டவரைக்கும் ரொம்ப சந்தோசம்.அப்புறம் புதுகை கலெக்டரையும் கொஞ்சம் விசாரிங்க அவரும் இவரும் கோயில்லே காவடி எடுத்ததில் கூட்டு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement