Advertisement

சினிமாவில் யாரும், யாருக்கும் நண்பர்கள் இல்லை - நடிகர் வேல்முருகன்

இயக்குனராக 'நேசம் புதுசு' படத்தில் நகைச்சுவை விருந்து படைத்தவர். நடிகராக ஆட்டோகிராப்பில் அறிமுகமாகி 100 படங்களை தொட்டு குணச்சித்திரம், காமெடியிலும் கலக்கிக் கொண்டிருப்பவர்.இவர் இயக்கிய சினிமாக்களின் எண்ணிக்கை குறைவு தான் என்றாலும், பல படங்களில் காமெடி காட்சிகளில் இவர் எழுதிய வசனங்கள் தான், இன்று மீம்ஸ்களாக 'பேஸ் புக்', வாட்ஸ் ஆப்'பிலும் வலம் வந்து கொண்டிருக்கிறது. 27 ஆண்டு கால சினிமா பயணத்தில் எத்தனையோ ஏற்ற, இறக்கங்களை பார்த்தாலும் சினிமா மீது இவர் கொண்டுள்ள காதல் என்றும் மாறாது என்பதை இவரின் பேச்சின் வழியே தெரிய முடிந்தது.வேல்முருகன் நேர்காணல்...* சினிமாவில் எப்படி?இயக்குனர் பாக்யராஜ் தான் காரணம். திருப்புவனம் தான் ஊர். படிக்கும் காலங்களில் சினிமா கொட்டகைகளில் பாக்யராஜ் படம் ரீலிஸானால் போதும், அங்கேயே குடியிருப்பேன். அவர் படங்கள் தான் என்னை சென்னைக்கு வர வைத்தது.* முதல் படம்?1990 ல் சென்னை வந்தேன். 1999 ல் 'நேசம் புதுசு' படத்தை இயக்கினேன். அந்த படத்தில் வடிவேலுக்கு காமெடியில் பெயர், புகழ், விருது என எல்லாம் கிடைத்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. 'ஏன்டா கையப் புடிச்சு இழுத்த' என, சங்கிலி முருகன் கேட்க, வடிவேல் 'என்னத்த கையப் புடிச்சு இழுத்தாய்ங்க' என பேசும் காமெடி இன்று வரை பேசப்படுகிறது.* அடுத்து நடிப்பில் எப்படி?அதன்பின் இயக்கிய இரண்டு படங்கள் சில காரணங்களால் டிராப் ஆகி விட்டது. அதனால் இயக்கத்திற்கு இடைவெளி விழுந்தது. ஆனால் 'நேசம் புதுசு 'படம் பார்த்து பிடித்தபோன இயக்குனர் சேரன், 2004ல் ஆட்டோகிராப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். அதன்பின் கமல் நடிப்பில் 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.,', சத்யராஜ் நடிப்பில் 'மகா நடிகன்' படத்தில் அவரிடம் கதை சொல்லும் காமெடி காட்சியில் துப்பட்டா...துப்பட்டா...உன் கன்னத்துல அப்பட்டா... அப்பட்டா...என்ற வசனம் ரசிகர்களிடையே என்னை கொண்டு சேர்த்தது. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், தர்மதுரை மாதிரி 100 படங்களை தொட்டு விட்டேன்.* மீண்டும் இயக்குனராக?நான் படங்கள் இயக்கவில்லை என்றாலும், பல இயக்குனர்களின் கதை விவாதங்களில் கலந்து கொள்வேன். பெரும்பாலான படங்களில் வடிவேல் பேசும் காமெடி காட்சிகள் , வசனங்கள் எல்லாம் நான் எழுதியவை தான். வின்னர், கிரி, தவசி , மிடில்கிளாஸ் மாதவன், என்னம்மா கண்ணு, கண்ணத்தா போன்ற படங்களில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகள் எல்லாம் என்னுடையது தான். 'எவன்டி உன்ன பெத்தான்' என்ற படத்தை புதுமுகங்களை வைத்து எடுத்தேன். மீண்டும் படங்கள் இயக்கும் முயற்சியில் உள்ளேன்.* சினிமா கற்றுக் கொடுத்த பாடம்?19வது வயதில் சினிமாவுக்கு வந்தேன். பாரதிராஜா, சீமான், சுந்தர்.சி என பல இயக்குனர்களிடம் வேலை பார்த்துள்ளேன். இங்கு யாரும், யாருக்கும் உண்மையான நண்பர்கள் இல்லை. தேவைக்குப் பயன்படுத்துபவர்களே அதிகம். இயக்குனர்களில் சீனுராமசாமி நல்ல மனிதர். நடிகர்களில் உதயநிதி ஸ்டாலின் அற்புதமானவர். ஒரு படம் நடித்தாலே இங்குள்ள நடிகர்களுக்கு தலையில் கொம்பு முளைத்து விடும். ஆனால் அவரின் அடக்கம், இன்னும் உயரத்திற்கு அவரை கொண்டு செல்லும்.* நடிகர் அவதாரம் ரகசியம் ?ரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை. இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் எல்லாம் நடிக்க முயற்சித்து இருப்பார்கள், முடியாமல் வேறுதுறைக்கு சென்று இருப்பார்கள். தற்போது வாய்ப்பை உருவாக்கி நடிகராகி இருப்பார்கள். எல்லோரும் நடிகர்கள் தானே.* சினிமாவுக்கு வரவேற்பு குறைகிறதா...சினிமாவை என்றைக்கும் அழிக்க முடியாது. தொழில்நுட்பம் வளர சினிமாவும் வளரும். இன்று தியேட்டரில் படம் பார்க்கிறோம், நாளை வீட்டுகே சினிமா வரும் அவ்வளவு தான். கைக் கடிகாரத்தில் கூட சினிமா பார்க்கும் காலம் வரும்.* நடிக்கும் படங்கள் ...எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'சரவணன் இருக்க பயமேன்', இசையமைப்பாளர் சிற்பி மகன் நடிக்கும் 'பள்ளிப் பருவத்திலே', 'வர்க்கம்' என பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement