Advertisement

அழகுடன் அதிர்ஷ்டமும் உண்டு - மனம் திறக்கிறார் பவித்ரா

வங்கக் கடலில் நீந்தும் தங்கத் தேர். வானத்தில் நீந்தும் சூரியன் வரம் கேட்டு வடித்த வானவில். கானகத்தின் நடுவில் பூத்துச் சிரிக்கும் கனகாம்பரம். துாறலாய் பொழிந்த துளிகளில் நனைந்த மல்லிகை. கம்ப ரசமும், இன்ப ரசமும் கலந்த பஞ்சாமிர்தம். மொத்தத்தில் இளசுகளின் நெஞ்சத்தில் ஒரு யுத்தத்தை உருவாக்கும் எழில் சித்திரம் 'பவித்ரா'. 'ஆளுக்கு பாதி' உட்பட பல படங்களில் நடித்த இவர், தென் மாநில அளவிலான அழகி போட்டியில் முடி சூட்டியவர். படப்பிடிப்பில் இருந்தபோது தினமலர் வாசகர்களுக்காக பேசியது* நீங்கள் ?பிறந்து வளர்ந்தது சென்னை, எம்.பி.ஏ., முடித்துள்ளேன்.* சினிமா உங்களை தேடியதா?அடிப்படையில் நான் ஒரு 'மாடலிங்'. ஆரம்பத்தில் முன்னணி நிறுவனங்களின் விளம்பர படங்களில் வாய்ப்பு கிடைத்தது. மேடை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்தேன். பின், 'ஆளுக்குப் பாதி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.* அழகிப் போட்டி?கேரளாவில் நடந்த தென் மாநில அழகி போட்டியில் நானும் பங்கேற்றேன். அழகுடன், அதிர்ஷ்டமும் இருந்ததால், முதலிடம் பெற்றேன். 'மேக் அப்' போட்டால் யார் வேண்டுமானாலும் அழகாக தெரியலாம். ஆனால், போட்டியில் வெற்றி பெற அழகு, அறிவு, துணிச்சல், தன்னம்பிக்கை தேவை. நான், தெரிந்த கேள்விகளுக்கு தெளிவாக பதிலளித்தேன். தெரியாதவற்றுக்கு தைரியமாக தெரியாது என்றேன்.* விரும்பும் 'கதாபாத்திரம்'?காதல், குடும்ப கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம். * யாருடன் நடிக்க ஆசை?விஜய், அஜித், விஜய்சேதுபதி மற்றும் அனைத்து 'ஹீரோ'க்களுடனும் நடிக்க ஆசை.* 'காமெடி' பண்ண ஆசை?பிறரை சிரிக்க வைப்பது ஒரு கலை. அது நமக்கு வரணுமே... கதாநாயகியாக நடிப்பது தான் எனக்கு 'ஈசி'.* மற்ற நடிகைகள் எப்படி?சில நடிகைகளை போல என் குடும்பத்தில் சினிமா பின்னணியில் யாருமில்லை. நானே தான் கஷ்டப்பட்டு முன்னேறி வருகிறேன்.* பிற மாநிலத்தவர் ஆதிக்கம்?தமிழகத்தில் என்னை போன்ற பல தமிழ் நடிகைகள் உள்ளனர். ஆனால், அதிகம் வாய்ப்பு கிடைப்பதில்லை. பழைய படங்களில் தமிழ் நடிகைகளுக்கே முக்கியத்துவம் தந்தனர். தமிழ் ரசிகர்கள் அதையே விரும்புகின்றனர்.* நடிப்பில் கவர்ச்சி?தமிழ் சினிமாவில் கவர்ச்சி ஒரு ஊறுகாய் மாதிரி தான். கதை அம்சம் இல்லாத எந்த படமும் ஓடுவதில்லை. 'துருவம் 16' படம் கதாநாயகனே இல்லாமல், கருத்திற்காக ஓடியதே.* உங்கள் 'டயட்'?நீச்சலில் அதிக ஆர்வம் உண்டு. உடற்பயிற்சியும் செய்வேன். சைவ உணவுகள் தான் சாப்பிடுகிறேன்.* பாடுவீங்களா?பாத்ரூமில் மட்டும்தான் பாடுவேன். pavithra0391gmail.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement