Advertisement

என் டான்ஸ்...என் டயட் ! -மயக்கும் மகிமா

தேவதை தேசத்து அதிசயத் தீவில் நடமாடும் பூவே... கிறங்கடிக்கும் உன் கருந்திராட்சை கண்களில் வற்றாத கவர்ச்சி, முள்ளில்லா உன் மெல்லிதழ் மொட்டில் ரோஜாக்கள் மோதும் முயற்சி, வில்லென வளையும் உன் வளைவுகளில் நீந்தும் குளிரும் நதிகள், பார்த்ததும் பளிச்சென பிடித்து இழுக்கும் உன் வழுக்கும் தேகம், ஈர்ப்பு விசையின் விதிகள்... இப்படி, ஆளை கவிழ்க்கும் அழகின் மகிமையால் மயக்கும் நடிகை 'மகிமா' ஜில்லென சிலிர்க்கும் புன்னகையுடன் பேசுகிறார்...* மகிமா அறிமுகம் ?தமிழில் 'சாட்டை' தான் எனக்கு முதல் படம். இதில், ஆசிரியராக நடித்த இயக்குனர் சமுத்திரக்கனியின் மாணவியாக நடித்தது மறக்க முடியாத அனுபவம்.* நடிப்பு - படிப்பு...ஆமா, நடிச்சுகிட்டே எம்.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். என் அம்மா ஆங்கில ஆசிரியராக இருப்பதால், நடிப்புடன் படிப்பையும் விடாமல் தொடர்கிறேன்...* சமுத்திரக்கனி ?முதல் முறை கேமரா முன்னாடி நிக்கும் போது எனக்கு 'டயலாக்' பேசவே வரலை, இவர் தான் எனக்கு பேச சொல்லிக் கொடுத்தார். இப்போது கூட இவரிடம் ஆலோசனை கேட்டு தான் படங்களை முடிவு செய்கிறேன்.* சினிமாவில் கற்றது...கேரளாவில் பிறந்து, வளர்ந்த எனக்கு மலையாளம் மட்டும் தான் தெரியும், 'சாட்டை' படத்தில் நடித்த பின் தமிழில் பேச, எழுத தெரிஞ்சுகிட்டேன்.* 'பேஸ்புக்', 'டுவிட்டர்' ?ஒரு நடிகையாக இல்லை, ஒரு பெண்ணா பயம் இருக்கு. நடிகைகளின் 'மார்பிங்' படங்கள் அதிகம் 'ஷேர்' செய்றாங்க, மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...* இமிடேட் ஆக்டிங் ?யாரை மாதிரியும் இமிடேட் பண்ணி நடிக்குற 'ஐடியா' எனக்கு இல்லை. ஆனால், நான் நடிகை 'ஹீரா' மாதிரி இருக்குறதா நிறைய பேர் சொல்வாங்க...* அழகு - கிளாமர்...ஒவ்வொருத்தரும் பார்க்கும் விதத்திலே தான் இருக்கு, தோல் தெரிஞ்சா மட்டும் கிளாமர் இல்லை, அழகா டிரஸ் பண்றது கூட கிளாமர் தான்.* 'குற்றம் 23' அருண்?அருண் விஜய் வில்லனாக நடித்த அஜித்தின் 'என்னை அறிந்தால்' படம் பார்த்திருக்கேன். அதே மாதிரி டெரர்ரா இருப்பார்னு நினைச்சேன். இவருடன் 'குற்றம் ௨௩' படத்தில் நடிக்கும் போது தான் தெரிஞ்சது 'ரியல் லைப்'ல இவர் ஒரு ஹீரோன்னு...* நடிப்பில் ஈஸி...அதென்னமோ தெரியல... அழுகுற காட்சிகளில் நான் ஈஸியா நடிச்சிடுவேன்; காமெடி கொஞ்சம் கஷ்டம் தான்...* சிலிம் சீக்ரெட்...நான் ஒரு கிளாசிகல் டான்சர், ஷூட்டிங் இல்லாத நாளில் தினமும் டான்ஸ் ஆடுறதால சிலிம்மா இருக்கேன். என் டான்ஸ் தான், என் டயட்...* மலையாளத்தில் வாய்ப்பு ?நான் நினைக்குற மாதிரி கேரக்டருக்காக காத்திருக்கிறேன்.* ரசிகர்களுக்கு...தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்திருக்காங்க, எந்த ஊர்ல ஷூட்டிங் போனாலும் தேடி வந்து பாராட்டுறாங்க.* அடுத்த படங்கள்...அட்டக்கத்தி தினேஷ் உடன் 'அண்ணணுக்கு ஜே', ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'ஐங்கரன்' படங்களில் நடிக்கிறேன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • murasu - madurai,இந்தியா

    பெண்களை இப்படி வர்ணித்தே அவர்களை போக பொருளாக பார்க்கும் கேடுகெட்ட மனப்பான்மை புற்று நோய் போல் புரையோடி விட்டது . பெண்களை சக மனுஷியாக பார்க்கும் பணியில் பத்திரிக்கைகள் இறங்கட்டும் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement