Advertisement

'கானா' பாடல் ஒரு தனி ராகம்!- மியூசிக் டைரக்டர் ஜஸ்டின் பிரபாகரன்

உலகெங்கும் காற்று இருக்கும் வரை இசையும் இருக்கும். இசையின் அடிப்படையே அதுதானே. கொட்டும் மழை, குழந்தையின் அழுகை, கூவும் குயில், ஓடும் ரயில் என எல்லாவற்றிலும் ஒரு ராகம், தாளம் கலந்து இனிக்கவே செய்கிறது. எல்லாவற்றையும் நாம் இசையாக கருதிப் பார்த்தால் எதில்தான் இல்லை அது. அந்த இசையை தன்வசப்படுத்தி 'பண்ணையாரும் பத்மினியும்' திரைப்படம் மூலம் அறிமுகமானவர்; 'அடியே அழகே' பாடல் மூலம் ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். அவரிடம் பேசியது:* ம்... சொல்லுங்க மியூசிக் டைரக்டர், ஒங்களப்பத்தி...?சொந்த ஊர் மதுரை. படிப்பு அமெரிக்கன் கல்லுாரியில் பி.எஸ்சி. சின்ன வயசுல இருந்தே பாட்டு, பின்னணி இசையில் தனி ஆர்வம் இருந்துச்சு. ஸ்கூல், காலேஜ்ல போட்டிகள்ல பாட்டெல்லாம் பாடியிருக்கேன்.* 'இசை'க்கும் வாய்ப்பு... ?சென்னையில் சவுண்ட் இன்ஜினியரிங் கோர்ஸ் முடிச்சேன். அப்படியே, குறும்படங்கள், 'டிவி' விளம்பரங்களுக்கு இசையமைச்சு கொடுத்தேன். அப்புறமா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் அசிஸ்டென்டா சேர்ந்து, நிறைய கத்துக்கிட்டேன்.* முதல் படம்...?இசையமைப்பாளர் ஆகணுங்குறது என்னோட கனவு. மியூசிக் இல்லாம என்னால இருக்க முடியாதுங்க. முதல் படம் 'பண்ணையாரும் பத்மினியும்'. என் நண்பர் தான் அதன் டைரக்டர்.* இசையமைத்த படங்கள்?பண்ணையாரும் பத்மினியும், ஆரஞ்சு மிட்டாய், ஒரு நாள் கூத்து, ராஜா மந்திரி, காலக்கூத்து, உள்குத்து, தொண்டன், ஒத்தைக்கு ஒத்த. மலையாளத்தில் 'குஞ்ஞி ராமாயணம்'.* உங்களுக்கு பிடிச்ச இசையமைப்பாளர்கள்?இளையராஜா; ஏ.ஆர்.ரஹ்மான்.* எப்போ மியூசிக் கம்போஸ் பண்ணுவீங்க?நள்ளிரவு அல்லது அதிகாலை. அப்போதான் எந்த இடைஞ்சலும் இல்லாம அமைதியா இருக்கும்.* 'கானா' பாடல் பற்றி?கானா பாடல்களுக்கென்றே மக்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கு. அதனால தான், ரிலீஸ் ஆகுற படங்கள்ல ஒரு பாட்டாவது கானா பாடல் இருக்கும். அது ஒரு தனி ராகமுங்க.* பெண்களை திட்டி பாடல்கள் வருதே?படத்துக்கும், கதைக்கும் தேவைன்னா வைச்சுக்கலாம். என்னை கேட்டால் மற்றவர்களை கஷ்டப்படுத்துற மாதிரி பாடல் எதுக்குங்கனு கேட்பேன்.* நீங்க பாடியவை...?பண்ணையாரும் பத்மினியும் 'பேசுறேன் பேசுறேன்', உள்குத்து 'குறு கறு கண்ணால்'.* படங்கள் நடிக்கிற ஐடியா?அட நீங்க வேற. மற்ற மியூசிக் டைரக்டர்ஸ்க்கு நடிக்கிற திறமை இருக்குது. அவங்க நடிக்கிறாங்க. அதுக்காக எல்லாரும் நடிச்சுற முடியுமா. அவங்க நடிக்கிறதை பார்த்துட்டு நானே 'ஷாக்' ஆயிட்டேன்.* 'அடியே அழகே'வுக்கு வரவேற்பு அதிகமோ?பாட்டு தானா அமைஞ்சதுங்க. அந்த பாட்டு நிறைய பேரோட காலர் டியூன்ஸ், 'ரிங்க்' டோனா இன்னும் இருக்குது. ரொம்ப சந்தோஷமா இருக்கு.* தினமும் நிறைய...?நிறுத்துங்க நிறுத்துங்க...நீங்க கேட்க வர்றது புரியுது. நானே சொல்றேன். டெய்லி, சினிமாவில மட்டுமில்லாம பேஸ்புக், 'வாட்ஸ் ஆப்'பிலும் புதுப்புது மியூசிக் டைரக்டர்ஸ் வர்றாங்க.அதுதப்பில்லே...திறமைக்கு கண்டிப்பா அங்கீகாரம் கொடுக்கணும்.* உங்களுக்குன்னு ஒரு ஆசை இருக்குதாமே?ஆமாங்க. இசைப்பள்ளி ஆரம்பிக்கணும். இசை மேல ஆர்வமுள்ளவங்களுக்கு இசையை கற்றுக்கொடுக்கணும். ஏன்னா... இசையை பிடிக்காதவங்க இந்த உலகத்துலயே இருக்க முடியாதே.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement