Advertisement

இரட்டை இலை யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்

புதுடில்லி: இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இரட்டை இலை:சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க.வில் சசி அணியில் தினகரனும், பன்னீர் அணியில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். கட்சியின் சின்னமான இரட்டை இலை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என இரு தரப்பினரும், டில்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.

ஆலோசனை:சசி அணி மற்றும் பன்னீர் அணி ஆகியோரின் தரப்பு வாதங்கள் நடந்து நிறைவடைந்தன. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி , ஆலோசனை நடத்தினார்..
இதையடுத்து நஜிம் ஜைதி இன்று இரவு (மார்ச், 22) 11 மணியளவில் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதில், இரட்டை இலை யாருக்கும் இல்லை என அறிவித்து அச்சின்னத்தை முடக்கி வைத்து உத்தரவிட்டார். இதனால் இரு தரப்புக்கும் இரட்டை இலை இல்லை என்றாகிவிட்டது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இரட்டை இலை சின்னம் இருதரப்பிற்கும் இல்லாமல் முடக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் சின்னத்தையோ, கட்சியின் பெயரையோ எங்கும் பயன்படுத்தக்கூடாது. இரட்டை இலை சின்னம் முடக்கம் என்பது இடைக்கால உத்தரவுதான். இருத்தரப்பினரும், நியாயமாக நடந்து கொள்ளவே இப்படியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (195)

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்புன்னு தெரியாதவங்க தான் இதுக்கு காரணம் பா.ஜ தான்னு சொல்லி அவுங்களோட வக்கிர புத்தியை காட்டிக்கிறாங்க... என்ன சார் தன்னாட்சி எல்லாம் அரசாட்சி சார் நீதிமன்றம் முதல் நம் ஊர் தெருக்கோடி குப்பை தொட்டிவரை தன்னாட்சி என்று தான் சொல்லுவார்கள் எல்லாரும் அரசு கஜானாவில் இருந்து சம்பளம், பஞ்சபடி, பயணப்படி என்று படி படி யாக சுருட்டும் அரசு ஊழியர்கள் தான் ஆகவே தன்னாட்சி எல்லாம் வெறும் பெயருக்கு தான்

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்புன்னு தெரியாதவங்க தான் இதுக்கு காரணம் பா.ஜ தான்னு சொல்லி அவுங்களோட வக்கிர புத்தியை காட்டிக்கிறாங்க...

 • அமுதவாணன் - chennai,இந்தியா

  1984 முதல் அமைச்சர்கள் மகாநாடு டெல்லியில் நடந்தது. அப்போது இந்தியாவில் அணைத்து மாநிலங்களும் 10 ஆண்டில் மின் இணையப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் பேசினார். அப்போது MGR சொன்னது தமிழ்நாட்டில் 1972 அணைத்து கிராமமும் மின் இணையப்பு வழங்கபட்டது என்றார். இதுதான் திராவிட கட்சின் பல சாதனைகளில் ஒன்று. தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட 50 ஆண்டுகள் முன் உள்ளது.

 • narayanan iyer - chennai,இந்தியா

  இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் எல்லா கட்சியினருக்கும் புதிய சின்னம் மட்டுமே கொடுத்து போட்டியிட சொல்லலாம். எந்த கட்சிக்கும் நிலையான ஒரு சின்னத்தை அங்கீகரிக்க வேண்டாம்.

 • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

  சூப்பர் முடிவு. அருமை..

 • selvem - laos,கிரிகிஸ்தான்

  காவிங்களுக்கு சொம்பு தூக்கிட்டு திரிஞ்ச அதிமுக அடிமைங்க எல்லாரும் தூக்கு மாட்டிக்கிட்டு செத்திடுங்கடா... இப்போவே.... காவிங்க திட்டம் போட்டு, நேரம் பார்த்து உங்க கழுத்த அறுத்துட்டானுங்கடா... எம்ஜிஆர் சமாதி ஓரமா ஒரு குழிய தோண்டி ரெட்டை இலைய புதைச்சிட்டு, தமிழ்நாட்டிலேர்ந்து காவி பாஜகவை துடைச்சு எரியுற வேலைய இன்னிக்கே ஆரம்பிங்கடா.

 • Visu Iyer - chennai,இந்தியா

  பழனி சாமி பதவி விளக்கணும். இந்த ஆட்சி கலைக்கப்படணும். மக்கள் இரட்டை இலைக்கு தான் ஓட்டு போட்டனர். இதனை நாஞ்சில் சம்பத் உறுதி செய்து உள்ளார். இரட்டை இல்லை முடக்க பட்டதால் பழனிசாமி தலைமையில் ஆன ஆட்சி கலைக்கப்பட்டு வேண்டும்.

 • muthu Rajendran - chennai,இந்தியா

  தமிழக மக்கள் மத்தியில் மூட நம்பிக்கைகள் ஒழிவதோடு சாதீய பேதங்கள் போகவேண்டும் சமத்துவம் வர வேண்டும் என்று தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் பெரியார். தனக்கு பின்னும் இந்த கொள்கைகள் தழைத்தோங்கவேண்டும் என்ற நோக்கில் தான் தனது அமைப்பை ஒரு நம்பகமாக( டிரஸ்ட் ) ஆக பதிவு செய்தார் . இன்றைய அளவிலும் அந்த அமைப்பு தனது கடமையை செய்து வருகிறது. ஒரு தலைவர் தனக்கு பின்னும் தான் எடுத்த கொள்கைகள் போற்றப்படவேண்டும் என்று நினைத்து செய்த செயல் என்பது இது தான். அதிலிருந்து பிறந்த திமுக ஒரு அமைப்பு ரீதியாக கீழ்மட்டத்திலிலிருந்து தொண்டர்களால் தேர்ந்தெடுக்க பட்டு வட்ட , மாவட்ட ,மாநில அளவில் என்று தொண்டர்கள் தேர்தெடுக்கும் அளவில் விதிகளை இயற்றி அதன் பலனாக இன்று வரை ஒரு வலுவுள்ள கட்சியாக உள்ளது.இதில் ஆதிக்கம் என்றெல்லாம் பேசப்பட்டாலும் தலைமை பொறுப்புக்கு தகுதியுள்ள யாரும் வரலாம் என்பதே இந்த அமைப்பின் விதிகளின் நோக்கம். .எனவே ஒரு கட்சியை தோற்றுவிப்பது பெரிதல்ல அது நிலைத்து நிற்க வழிமுறையும் நடைமுறையும் செய்வது அவசியம்.அதிமுகவை எம் ஜி ஆர் துவங்கும்போது உரிய அனுபவம் வாய்ந்த தலைவர்களோடு கலந்து ஆலோசித்து விதிகளை இயற்றிருந்தால் இன்றைக்கு பொதுச் செயலாளர் தேர்ந்தெடுப்பதில் இவ்வளவு சிக்கல் எழுந்திருக்காது .நான்கு மாநிலத்திலும் உள்ள அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து பொதுச் செயலாளர் தேர்ந்தெடுப்பது எப்படி சாத்தியம்? எம் ஜி ஆர் போன்ற ஜெ போன்ற பெரிய தலைவர்கள் நின்றால் எதிர்த்து போட்டியிட யாரும் தலைப்படமாட்டார்கள் அதனால்தான் போட்டியின்றி பொதுச் செயலாளர்கள் தேர்ந்தெடுக்க பட்டார்கள். அவருக்குப்பின் அது போன்ற தலைவர்கள் யாரும் இல்லை என்ற நிலையில் கட்சியின் முக்கிய பொறுப்பாளரையே தேர்ந்தெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு வேளை தனக்கு பிறகு கட்சி இருக்கவேண்டும் என்றெல்லாம் எம் ஜி ஆர் யோசிக்க வில்லையா ? இல்லை வேண்டுமென்றே தான் செய்தாரா ? எதுவானபோதிலும் எல்லா உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதி மாற்றப்படாத வரை தேர்தல் நடத்துவது என்பது கடினமே

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஜெயலலிதா ஆன்மா கொஞ்சம் சாந்தம் அடைந்து இருக்கும் , நம் நாட்டில் தூக்கில் இடப்படுபவர்க்கும் கூட கடைசி ஆசை சொல்ல வாய்ப்பு உண்டு, ஆனால் ஒரு முன்னாள் முதலமைச்சருடயை கடைசி ஆசை என்ன என்பது தெரியாமலே போயிவிட்டது ??? இந்த மாபியா பண்ண கூத்தால் , கடைசி வரை அந்த தீபா பெண்ணையும் பார்க்க விடவில்லை, கடைசி நேரத்தில் என்னய்யா இன்னபிக்ஷன் வரபோகிறது ?? எவ்வளவு பெரிய துரோகம் செய்து இருந்தால் கூட ஒருவர் மரணப்படுக்கையில் இருக்கும் போது அவர்க்கு ஆறுதல் கூறுவது தான் இயற்கை நீதி அதை செய்ய விட்டுதா இந்த மாபியா ?? என் தந்தையின் கடைசி நிமிடங்களில் கூட இருந்தவன் நான் எனக்கு அந்த உணர்வு எப்படி பட்டது என்று நன்றாக தெரியும்

 • Power Punch - nagarkoil,இந்தியா

  சீப்பை ஒளிந்து வைத்து விட்டார்கள்...இனிமேல் RK நகர் தொகுதியின் மாப்பிளை ஆகி விடுவார் கங்கை அமரன்... .பிஜேபி நினைப்பே பிழைப்பை கெடுக்க போகிறது...

 • subbu - QLD,ஆஸ்திரேலியா

  எப்படியோ திமுகவுக்கு கொண்டாட்டம்தான் அவங்கதான் ஜெயிப்பாங்க

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  குற்றவாளி அணிக்கு 'ஜெயில் கம்பி' சின்னமும், டம்மி பீசு அணிக்கு 'ஆசிட் பாட்டில்' சின்னமும் பொருத்தமா இருக்கும்.

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  குற்றவாளி ஜெயா, ஒரு முறை சொன்னார்.. தான் இறந்த பிறகும் 100 ஆண்டுகள் அதிமுக இருக்கும் என்று... ஹி. ஹி..ஹி.. முதல்ல அதிமுக என்பது ஒரு கட்சியே அல்ல, அது ஒரு கூட்டம்.. காலில் விழும் கொள்கையற்ற கூமுட்டை கூட்டம்.. அடிமைத்தனம், தனி நபர் வழிபாடு, மையப்படுத்தப்பட்ட கொள்ளை இது தான் அதிமுக.. அதிமுக என்ற கட்சி அழிவில் தான் தமிழக நலன் இருக்கிறது.. அது இனி முழு வீச்சில் நடந்தேறும்...

 • spr - chennai,இந்தியா

  " இரட்டை இலை சின்னம் இருதரப்பிற்கும் இல்லாமல் முடக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் சின்னத்தையோ, கட்சியின் பெயரையோ எங்கும் பயன்படுத்தக்கூடாது. " இது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றே தேர்தலில் போட்டியிட சின்னமாக அதனைப் பயன்படுத்தக்கூடாது அவ்வளவே ஆனால் அதனை எடுத்துக் கொண்டு பிரசாரம் செய்து, சேவலைக் கூட சின்னமாகக் காண்பித்தெல்லாம் தேர்தலை நடத்திய பரம்பரை நமது நிதம் இந்த கட்டுப்பாடு மீறப்பட்டது என்று புகார் வந்த வண்ணமிருக்கும் கட்சியின் பெயரைப் பயன்படுத்தக்கூடாதென்றால், ஆட்சியிலிருக்கும் கட்சிக்கு என்ன பெயர்? எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ன பெயர்சொல்லி இவர்களை விமரிசிக்க முடியும்? பெயரே இல்லை, சின்னமில்லை என்றால் அக்கட்சியின் தேர்தலே செல்லாதே அவர்கள் எப்படி ஆட்சியிலிருக்கலாம்

 • அமுதவாணன் - chennai,இந்தியா

  இப்போதாவது பிஜேபி 1000 ஓட்டு வாங்குமா? தேசிய கட்சிகள் அனைத்தும் தமிழ்நாட்டின் துரோகிகள்.

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  இலை இல்லை இப்போது பன்னீர் அணி வெற்றியடையும் இதன் மூலம் வரும் தேர்தலில் இலை சின்னத்தைப் பெற்று மாபெரும் வெற்றி பெறுவார். இரண்டாவது முறையாக தேர்தல் ஆணையம் முடக்கியது துரதிஷடம்.

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  56 ஆம் புலிகேசியின் ஆட்டம் ஸ்டார்ட் ,

 • jey - Bangalore,இந்தியா

  கட்சியே கேவலமா தான் இருக்கு..... இதுல சின்னம் னு ஒன்னு இருந்த என்ன இல்லனா என்ன........ ஏப்ரல் 12 வர என்ன என்ன முடியுமோ எல்லாம் பண்ணுங்க டா......

 • NOONE -

  ஆமா.. 27 வருடங்களுக்கு முன்பு இரட்டை இலை முடக்கப்பட்டதுக்கும் மோடி தான் காரணம்... போங்கடா........... களா.... எந்த காரணமும் இல்லாமல் உங்கம்மா மோடியோட பேசுனப்ப நவ துவாரங்களையும் மூடிட்டு இருந்த.. இப்ப ஜல்லிக்கட்டுகாக ஓபிஎஸ் பேசுனா தப்பாம்..

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  அரை கிணறு தாண்டியாச்சு. அடுத்த அரை கிணறை எப்போ?....நான் சொல்வது..உதய சூரியனை முடக்குவது...

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  பேய் பிசாசு பூதம் போல அந்த ஆட்டம் போடுறா சசி வளர்மதி ETC செய்றாதெல்லாம் அநியாயம் அக்கிரமம் னு தெரிஞ்சும் பிஜேபி ய திட்டும் நாக்கை மிள்காய்உப்பும் கலந்து தேய்க்கணும்

 • Robinson - Chennai,இந்தியா

  ஐயோ பாவம். கடிவாளமிடப்பட்ட நமது அடிமைகளுக்கு வேறு ஒரு சின்னமும் கண்ணுக்கு தெரியாதே...

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  தமிழனுக்கும், தமிழகத்திற்கும் நல்ல காலம் பிறக்க இருக்கிறது. எல்லாம் நன்மைக்கே.

 • Karuppu Samy - MRT,சிங்கப்பூர்

  ரொம்ப சந்தோசம்...இப்ப எவன் ஜெயிக்கிறான் ன்னு பார்க்கலாம். இதில் அரசுகள் தலையீடு இன்றி ஆணையம் நடந்து கொள்ளவேண்டும்.

 • பொலம்பஸ் - CHENNAI,இந்தியா

  அறிவொளி இயக்கம், எல்லோருக்கும் கல்வி இயக்கம், என்று பலவித பெயர்களில் அனைத்து மக்களுக்கும் கல்வி கொடுப்பதாகக் கூறி ஒதுக்கப்பட்ட நிதியை ஒதுக்கிக் கொண்டுவிட்டு, சுதந்திரம் வாங்கி ஒரு நூறு ஆண்டு ஆகப்போகும் இந்த நிலையிலும் பெயரைப் படிக்காத தெரியாமல் சின்னத்தை பார்த்துதான் ஒட்டு போடமுடியும் என்ற இந்த நிலையிலேயே மக்களை வைத்துள்ள இந்த அரசியல் விபசாரிகளுக்கு ஒட்டு ஒரு கேடா.....

 • chidhambaram - chennai,இந்தியா

  அய்யா சாமி இதுபோல் இன்னொரு சின்னமும் (திருட்டு முன்னேற்ற கழகம் ) முடக்கினா, தமிழன் நல்ல இருப்பான் அய்யா

 • K.Sugavanam - Salem,இந்தியா

  அம்மா கட்சி இன்னு பேரு வச்சி, இருக்கை கூப்பும் சின்னம் வச்சிக்கலாம் OPS குரூப்பு ..

 • apn shanmugam - trichy,இந்தியா

  எந்த சின்னத்தில் நின்றாலும் தினகரன் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று தினமலர் கத்தினாலும் கதறினாலும் தினகரன் வெற்றியை தடுக்க முடியாது

 • Shree Ramachandran - chennai,இந்தியா

  உடனடியாக பன்னீர் அவர்கள் "பொன்னாட்சி கட்சி" என்று பெயரிட்டு "இருமலர்கள்" என்ற சின்னத்தில் ஒன்றில் எம் ஜீ யார் படமும் மற்றொன்றில் ஜெயலலிதா படமும் போட்டு தேர்தலில் இறங்க வேண்டும். செய்வாரா.

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  அதிமுகவை அழிப்பது, புறவாசல் வழியே ஆட்சியை பிடிப்பது, நெடுவாசல், மீத்தேன், ஹைட்ரொ கார்பன், மீனவர் பிரச்சினை, நீட் தேர்வு., காவேரி மேலாண்மை அமைக்காதது.... இப்படி தமிழ்நாட்டுக்கு துரோகம் மேல் துரோகம் செய்யும் தேசிய கட்சி, தலை கீழாக நின்னாலும் தமிழகத்தில் ஒரு தொகுதி கூட வெல்ல முடியாது... திருட்டு ரயில் செல்ல, தண்டவாளம் போட்டு கொடுக்கிறது....

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  இங்கு மெஜாரிட்டி ஆட்சி நடக்கிறது,..122 MLA க்கள் உள்ளனர்...37 MP க்கள் உள்ளனர் ..98 % பொதுக்குழு , செயற்குழு ஆதரவு உள்ளது...ஆனால் கட்சி சின்னம் முடக்கப்பட்டுள்ளது... நல்ல நீதி... பாஜகவின் மகிமையே மகிமை...

 • Soosaa - CHENNAI,இந்தியா

  வரலாறு திரும்பியது அதுவும் ஒரு குளோனிங் சைல்ட் மாதிரியே.. கட்சி சின்னம் முடக்கம் தேர்தலுக்கு பிறகு தான் அதே குளோனிங் சைல்ட் இருக்குமா அல்லது வேற ஒரு சைல்ட் ஆ மாறுமா இப்பவும் அ தி மு க mla க்களுக்கு புரிகிறதா இல்லையா இப்ப அவர்கள் ஆட்சி ஒரு கட்சியோ சின்னமோ இல்லாத ஆட்சி அதனால் யார் பெயரும் சட்ட சபையில் கூற முடியாது நாடாளுமன்றத்தில் கூவ அல்லது பாட முடியாது. இதை உணராமலே எப்படி இதனை வருடம் அரசியலில் இருக்கிறார்கள். இனிமேலாவது வறட்டு பிடிவாதத்தால் இல்லாமல் mgr நூற்றாண்டில் அவர்கட்சி நீட்டிக்க அல்லது ஜே ஜே சொன்ன வாக்கை காப்பாற்ற எனக்கு பின்னே கட்சி நூறு ஆண்டு இருக்கும் என்று இப்ப அதிகமா யோசிக்க வேண்டிய இடத்தில உள்ளார்கள். ஆனால் சாதாரண மக்கள் தான் அதிகம் கவலை படுகிறார்கள்.

 • senthil - chennai,இந்தியா

  தமிழகத்திற்கு மோடி செய்த இன்னோரு துரோகம் ..... தமிழகத்தில் பி ஜே பி என்றும் வெற்றி பெற முடியாது ...... தமிழகத்தில் நடக்கும் அனைத்துக்கும் பிரச்சனைக்கும் காரணம் மோடி தான் ....

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  இங்கே கை கொட்டி சிரிக்கிறார்கள்... எகத்தாளம் பண்ணுகிறார்கள்... அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு.... இது ஒன்றை தான் சொல்ல முடியும்.... இங்கு கருத்து எழுதி, இரட்டை இலையை முடக்கியதை கொண்டாடியவர்கள், அதிமுக காரர்களே அல்ல, .....

 • ஒரு சாமானியனின் குரல் - ஈரோடு,இந்தியா

  next hearing on 17 April 2017 that means who ever wins in RK will be gifted with 2 leaves ... nice move EC

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சசிக்கு திருவோடும் பன்னீருக்கு பசுவையும் சின்னமாக கொடுக்கலாம்...

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  சரியான தீர்ப்பு. இது இருந்தால் இதை சொல்லியே பாமர மக்களை மேலும் முட்டாள்கள் ஆக்கிக்கொண்டிருப்பார்கள். சாராயம் மட்டுமே விற்கிற, செயல்படாத, தமிழகத்தை கடன்கார மாநிலமாக்கிய கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  எம்ஜிஆர் துவங்கிய கட்சியை கொள்ளைக்கார மாபியா கும்பல் கைகளில் குரங்கு கை பூமாலை கணக்காக விட்டுச்சென்ற ஜெயலலிதாதான் குற்றவாளி..

 • Muralikrishnan.G - chennai,இந்தியா

  இரட்டை இல்லை சின்னம் இப்ப தினகரன் பக்கம் இல்லாம போகலாம் , எதிர்காலத்தில் உச்ச கோர்ட் தீர்ப்புக்கு தினகரன் பக்கம் மட்டுமே இருக்கும் இது நிச்சயம்.

 • KS HABIB - Johor Bahru,மலேஷியா

  What about the already elected MLAs and MPs elected in the last general elections under AIADMK banner?

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  பாஜக, மத்திய அரசு, மோடி...எல்லாரையும் திட்டி ஸ்டார்ட் மியூசிக்......

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  இப்போதைக்கு இத்தேர்தலுக்கு மட்டும் இம்முடிவு சரியானதாக இருக்கலாம். இரு அணியினரும் ஓன்று படுவதற்கான வாய்ப்புக்காக இம்முடிவு எடுக்கப்பட்டிருக்க்கலாம். மாறாக அதிமுகவை முடக்கி விட்டு மோசடி செய்ய முனைந்தால் அது தவறான செயலாக அமையும். தாங்களே மாற்று என முன்னிற்போரின் முகத்திரை கிழித்து ஜெயா விசுவாசிகள் மோடிக்கு முகம் காட்டுவோரை தவிர்த்து விட்டு ஒன்றிணைய வேண்டும்.

 • guruaswath -

  They need to only party symbol & flag. who did not care of tamilnadu people. This is show the uneducated persons.

 • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

  இடைதேர்தலையே நிறுத்திட்டு>>> சின்னம் பிரச்சனை தீர்வு கண்ட பிறகு தேர்தலை நடதிடலாம். இடை தேர்தல் நடத்தித்தான் ஆகவேண்டிய கட்டாயம் இல்லை. பொது தேர்தலோடு நடத்திடலாம். இதற்கும் தடை வாங்கிடனும் .உள்ளாட்சி தேர்தல் போல்>>>>

 • s t rajan - chennai,இந்தியா

  எம் ஜு ஆர் ஆரம்பிச்ச கட்சியை ரெண்டு பொம்பளைங்க இப்படி கொள்ளையடிச்சு ஊத்தி மூடிட்டாங்க. இதற்குத் தான் பரட்சி தலைமைங்கற பட்டமோ? புரட்சி தலைவலின்னு பேரு வைக்கலாமோ?

 • srideesha - Atlanta,யூ.எஸ்.ஏ

  "ஜெயில்" சின்னம் தினகரனுக்கும், "மது கோப்பை" சின்னம் மதுசூதனனுக்கும், (போயஸ் கார்டன்) "பங்களா" சின்னம் தீபாவுக்கும் ஒதுக்கினால் இந்த ஒரு மாதத்துக்குள் சின்னத்தை பிரபலப்படுத்த இவர்கள் கஷ்டப்படவேண்டாம். நம்ம கிட்ட இது மாதிரி நிறைய ஐடியா இருக்கு. சம்மந்தப்பட்டவர்கள் உணருவார்களா?

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  தேர்தல் ஆணையத்தின் முடிவு சரியே....இதில் அரசியல் உள்நோக்கம் கற்ப்பிப்பது தவறான செயல்..

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  சில தீர்ப்புக்கள் மிகச் சரியாக, சரியான தருணத்தில் வெளி வருகின்றன. இடைத்தேர்தலில் அதிமுக போட்டி கிடையாது என்று தெரிகிறது. போட்டி இட தகுதி இல்லை என்று தான் ஆணையம் சொல்கிறது போல தெரிகிறது. அப்படி என்றால் தினகரன், தீபா, மது சூதனன உள்ளிட்டோர் சுயேச்சைகளாக களம் இறங்க வேண்டும். அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளர், எம் ஜி ஆர், அம்மா ஆதரவு பெற்ற வேட்பாளர் என்றும் கூறிக் கொள்ள கூடாது. போட்டி என்பது கங்கை பாமரனுக்கும், திமுகவின் உள்ளாட்சி செயலருக்கும் தான். ஸ்தாலினுக்கு சந்தோசம். பன்னீருக்கு சந்தோசம், தமிழிசைக்கு சிரிப்பு. நமக்கு வருத்தமில்லை.

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  அப்போ பன்னீர் அணி - வளைகள் அணிந்த ஒரு பெண்ணின் கை கூப்புவது போல சின்னம் - மக்களிடம் சென்றடையும்.

 • Shiva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  BJP played the dirty game. It is proved beyond doubt that EC is highly corrupted.

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  எந்த கச்சிக்கல் நெறைய கொள்ளை அடிச்சுருக்கோ அதற்கு எல்லாம் கூட ஒளிச்சுக்கட்டணும் எல்லாத்தையும் பிடுங்கிண்டு அரசு கஜானாலே சேர்த்தாலேபோரும் நம்ம நாடு மேலும் செழிப்பாக இருக்கும் , வெறும்கையாவரானுக கோடீஸ்வரனா ஆவூரானுக்கோ

 • karunchilai - vallam,இந்தியா

  சரியானது தற்காலிக முடிவு. மக்கள் அனுதாபம் OPS அணிக்கு உள்ளது அதிகாரம் மாபியாவிடம். கட்சிப் பெயரை பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளது மன்னார்குடி கும்பலுக்கு சற்று பலத்த அடி கொடுக்கும். திமுகவும் பிஜேபியும் சற்று ஆதாயம் அடையலாம்.

 • ravisankar K - chennai,இந்தியா

  இரட்டை இலை MGR அறிமுகப்படுத்தியது. ஜெயலலிதா கட்சியையும் சின்னத்தையும் காப்பாற்றி வந்தார் . இப்போதுள்ள யாரும் அந்த சின்னத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது . ஜெயலலிதா வாரிசு என்று யாரையும் அறிமுகப்படுத்தவில்லை . இப்போது கட்சியை சொந்தம் கொண்டாடுபவர்கள் பொதுவான சின்னத்தில் நின்று மக்களிடையே ஆதரவை நிரூபித்து பிறகு சின்னத்திற்கு உரிமை கோரட்டும்

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  ஜெயலலிதா கை கூப்புவதே ஒரு அழகு புன்முறுவலுடன். ஆகையால் பன்னீர் அணி கை கூப்புவது போல் ஒரு சின்னம் தேர்வு செய்யலாம் மக்களுக்கும் எளிதாக புரியும்.

 • Pravin - Chennai,இந்தியா

  தமிழக விடிவெள்ளி அண்ணன் வைகோ அவர்கள் சொன்னது போல், சின்னம்மாவின் சீரிய தலைமையில் இயங்கும் அ.தி.மு.க என்ற மக்கள் இயக்கத்தை யாரும் அழிக்க முடியாது, 90 % MLA க்களும் , 98 % மாவட்ட செயலாளர்கள் கொண்ட சின்னம்மா அணிக்கே சின்னம் ஒதுக்கப்பட வேண்டும், இன்று இல்லையெனில் ஒரு நாள் வந்து சேரும்...1994 இல் கோடான கோடி தொண்டர்கள் வைகோ பக்கம் இருந்தும், முன்னொரு காலத்தில் பிளவு ஏற்பட்ட போது கருணாநிதிக்கு உதய சூரியன் சின்னத்தை பிச்சையாய் போட்டவர் அண்ணன் வைகோ.

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  OPS போட்டோவும் சசிகலா போட்டோவும் சிம்பலாக இருக்கட்டும். மக்கள் confuse ஆகாமல் ஓட் போடலாம். மக்கள் தீர்ப்பே முடிவான தீர்ப்பாக இருக்கும்.

 • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

  இரட்டை இலையை முடக்குவதற்குமுன்,சிந்தனைகளும்,நடுநிலையில் இருந்து ஆராய்ந்து பார்க்கும் ஆழ்ந்த அறிவும் உறைந்து போனதுபோல் தெரிகிறது .தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தினகரன் அதிமுகவின் துணைசெயலர் என்றஅடிப்படையில் விளக்கம் அளித்ததை பல காரணகளளை முன்வைத்து தேர்தல் ஆணையம் தினகரன் கட்சியில் எந்தப்பொறுப்பும் இல்லாதவர் எனக்கூறி அவரின்விளக்கத்தை ஏற்க மறுத்தது.தினகரனுக்கு இரட்டைஇலை சின்னத்தையோ அல்லது,அதிமுக வேட்பாளர் என்றஅங்கீகாரமோ தருவதற்கு,தேர்தல் ஆணையத்தின் ,முந்தய 'மறுப்பின்'அடிப்படையில் மீண்டும்நீராகரிக்கப்பட நியாயமும்,தர்மமும் உண்டு.என்னிடம் அதிகாரம் இருக்கிறது,நான் தவறு என்றால், உச்சநீதிமன்றத்தையோ அல்லது,மாற்றுபரிகாரங்களை தேடிச்செல்லுங்கள் எனக்கூறுவது 'அதிகார போதைப்பொருள்'மயக்கநிலையில் இழுத்து செல்வதாலோ? விதி என்பதிலிருந்து ஜனநாயகத்திற்கு விலக்குகிடையாதுபோல தோன்றுகிறது?

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  இங்கு மட்டும் இல்லை இந்தியா முழுவதும் கட்சி சின்னங்களை தூக்க வேண்டும் . மக்கள் அப்போது தான் யார் நல்லவர் என்று பெயர் பார்த்து வோட்டு போடுவார்கள் , இல்லையென்றால் தங்கள் பிடித்த சின்னத்தை பார்த்து அயோக்கியர்களை தீர்த்து எடுக்கிறார்கள். பெயர் படிக்கச் தெரியாதவர்கள் எழுத படிக்கச் தெரிந்து கொள்ளுவார்கள். அப்படியும் படிக்க தெரியாதவர்கள் அப்படி என்ன நாட்டை பற்றி தெரிந்து விட்டு வோட்டு போட போகிறார்கள் ?

 • SARAN - France

  வடை போச்சே.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இதுதானே எல்லோரும் எதிர்பார்த்தது... நல்ல முடிவு...

 • N. Sridhar - Kanchipuram

  As anticipated, super verdict. Let the public decide who majority. SUPERB.

 • LAX - Trichy,இந்தியா

  Ratan K, Chennai, சீக்கிறமே தூங்கியாச்சு போல..? பாதி தூக்கத்துல எழுந்திருந்து, 23:22 மணிக்கு, உங்க கனவை (BJP அல்லது மார்க்சிஸ்ட்) வெளிப்படுத்தியிருப்பதெல்லாம், நிஜத்தில் நிச்சயமாக நடவாத ஒன்று.. கனவு கனவாகவே இருக்கட்டும்.. வேணும்னா.. 'கனவே கலையாதே' ன்னு பாடிக்கோங்க..

 • Gnanam - Nagercoil,இந்தியா

  சரியான முடிவு. இரட்டை இலை எம் ஜி ஆர் - க்கும், ஜெயலலிதாவிற்கும்தான் சொந்தம். நிரந்தரமாகவே இந்த முடிவை செயல்படுத்தலாம்.

 • Ram,Mylapore -

  வரேவற்கிறோம்.

 • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

  முறையின்படி 122 MLA கள் உள்ள கட்சிக்குத்தான் இரட்டை இல்லை சின்னம் உரித்தாகும்.தேர்தல் ஆணையம் பிஜேபி உத்தரவுக்கு அமைய இந்த பிழையான தீர்மானத்தை எடுத்திருக்குது .இதுதான் இந்தியாவின் அரசியலில் உள்ள பெரிய ஊழல்.mgr ஆள் உருவாக்கப்பட்ட கட்சியை இந்தபன்னீர்செல்வம் அழித்துவிட்டார்.

 • Prem Kumar - Bangalore,இந்தியா

  சட்ட விதிகளை காட்டி ஓ.பி.எஸ். அணியும் ,எண்ணிக்கை பலத்தை காட்டி சசிகலா அணியினரும் தேர்தல் ஆணையத்தில் செய்த முறையிட்டுகள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. எண்ணிக்கை பலம் என்பது தாற்காலகமானதே , தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள கால கெடுவுக்குள் ஓ.பி.எஸ். அணியினர் இதை நன்கு பயன்படுத்திட வேண்டும். உடனடியாக தங்களது ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி தங்களது உண்மையான பலத்தை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக இதை கருத வேண்டும். சசிகலா -மற்றும் தீபாவையும் ஆர்.கே. நகர் தேர்தலில் மக்கள் நிராகரித்த பின், ஓ.பி.எஸ். அணியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க அதிக வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்.

 • M Sheik Abdul Kader - Al Wakra,கத்தார்

  good decision

 • அப்பாவி - coimbatore,இந்தியா

  நன்றி. மக்களுக்கு செய்த துரோகத்திற்கு கட்சியையே முடக்கலாம்

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  நல்ல முடிவு. உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டேன் என இரண்டு அணிகளின் ஒப்பாரி சத்தம் நன்கு கேட்கிறது.

 • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

  கீரிக்கும் பாம்புக்கும் சண்டை எனக்கூறி கூட்டம் சேர்த்து இன்றுவரை சண்டைவிடாத மோடிமஸ்தான் காட்சியினைத்தான் தேர்தல் கமிஷன் அரங்கேற்றியிருக்கிறது .பொதுவாகவே,ஒருசிறிய விஷயம் ஒன்றுமில்லாத வகையில் பெரிதாக ஆக்கப்படுகிறது .ஒரு பெரிய விஷயம் தேவைக்குமேலும் சிறிதாக்கப்பட்டு புறந்தள்ளப்படுத்தல் கண்கூடு.தேர்தல் கமிஷன் அதிகாரிகள் எள்ளு என்றால் எண்ணெயாக தரக்கூடிய தகுதி படைத்தவர்கள்.ஒருஅரசியல் கட்சியின்சட்டதிட்டங்களை மீறி செயல்பட்டவர்களை அடையாளம் காணமுடியாதா போய்விட்டது ?எங்க ஊரு சுப்பன்,குப்பன் 'கட்டப்பஞ்சாயத்தில்' நூறு தீர்ப்புவழங்கும் வல்லமை பெற்றவர்கள் .தேர்தல் கமிசினுக்கு கலக்கமா,நடுக்கமா,மனதிலே தேவை அற்ற குழப்பமா ?நீரளவே ஆகுமாம் நீராம்பல் ,தான்கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு ,தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் ,குலத்தளவே ஆகுமாம் குணம் .(குலம் என்பதை குறுகிய கண்ணோட்டத்தில் காண்பதை தவிர்க்க).

 • DesaNesan -

  ஆளுக்கொரு இலையாகப் பிய்த்துக் கொடுத்திருக்கலாம். காய்ந்த இலைகள்.(Nazim Zaidis இந்துத்துவா  சதியோ என்னவோ ?)

 • Shanu - Mumbai,இந்தியா

  பிஜேபி தமிழ்நாட்டை அழித்து விடும்.

 • vijay,Covai -

  நீங்க மக்களுக்காக உண்மையாக இருந்திருந்தால் சின்னம் கிடைச்சிருக்கும்ல

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  நல்ல தீர்ப்பு நஜீம் ஜைதி அவர்களே. பொதுச்செயலாளர் வெளியில் இல்லை, பொருளாளர் முன்பு பன்னீர் செல்வம். இதில் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருந்தால், அது மக்களுக்கு எதிராகவும் சிறையில் உள்ளவரை ஆதரவளித்ததைபோல இருந்திருக்கும். பன்னீர் செல்வத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்திருந்தால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருக்கு ஆதவளித்ததைப்போல இருந்திருக்கும்.

 • boopathy -

  super for all people of tamilnadu

 • truth tofday - india,இந்தியா

  உண்மையில் அது தான் ஹெலிகாப்டர் கடன் தமிழநாடு ஊழல் A 1 ஆடம்பர ஆணவ ஆட்சியை ஆதரித்த உதவிய சின்னம். இப்போது அதை முடக்கியதால் ஊழல் ஆடம்பரம் ஹெலிகாப்டர் ஆணவம் முடங்கும் அல்லது மீண்டும் ஆடம்பரம் ஆணவம் உளள ஓங்குமா பொறுப்போம்

 • Manasatchi - NYK,யூ.எஸ்.ஏ

  எதிர் பார்த்த தீர்ப்பு. தமிழ் இசை நாலு நாள் முன்னாடியே சொல்லிட்டாங்க. நீங்க ரொம்ப லேட்டு.

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  இதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த முதல் ஆத்மா...MGR... இரண்டாவது...ஜெயலலிதா...

 • Siva Subramaniam - Coimbatore,இந்தியா

  இன்று காலையில் நான் எழுதியது இதுதான். இப்போ அதிகாரபூர்வமாக வந்தாகிவிட்டது. இந்த சர்ச்சைக்குள்ளான இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கிவிட்டு, இரண்டு கட்சிகளுக்கும் வேறு ஏதாவது சின்னத்தை தற்காலிகமாக வழங்கவேண்டும்.

 • LAX - Trichy,இந்தியா

  சூப்பரப்பூ.. // சூப்பர் ஆப்பு.. ( 'சதி'கலா & கோ. வுக்கு)

 • s.sakkaravarthi - sivakasi,இந்தியா

  நல்ல முடிவு, சின்னம் யாருக்கு என்பதை மக்களே முடிவு செய்வார்கள்

 • S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா

  நான் நேற்றைக்கு இதே கருத்து பகுதியில் இரட்டைஇலை சின்னம் யாருக்கும் கிடைக்காதுன்னு கருத்து பதித்திருந்தேன். அதுவே இப்போ நடந்துவிட்டது. ஆனால் சின்னத்தை முடக்கியது என்னமோ தேர்தல் ஆணையம்தான், சின்னத்தை முடக்க சிபாரிசு செய்தவர்கள் யாரோ? எப்படியாயினும் யார் வாய்ஸ் கொடுத்தாலும் டெபாசிட் கிடைக்க போவதில்லை.

 • Ravi Chandran - Vienna,ஆஸ்திரியா

  ஆளுக்கு ஒரு இலையா பிச்சி கொடுத்திருக்கலாம் அதில எதையாவது போட்டு நக்கிட்டு போயிருப்பாங்கல்ல

 • mv murugan - coimbatore,இந்தியா

  ஜெ சமாதியை 3 முறை ஓங்கி ஓங்கி அறைந்தவளுக்கு திரும்ப கிடைத்தது பலமான அறை.

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  மறுபடியும் ஒரு நாள் இரவில் சுகந்திரம் அடைந்த மகிழ்ச்சி , அதை போல் RK நகர் மக்களும் தங்கள் பவர் காண்பிக்க வேண்டிய நேரம் இது

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  அதிமுக தொண்டர்கள் கண்ணீருடன் கவலையில் இருக்க , பாஜக, திமுக, பாஜக B டீம் OPS அணி ஆகியவை குஷியில் மிதக்கின்றன... பாஜக வின் உள்குத்துக்கள் தொடர்கிறது.... மர்மம் என்ற வார்த்தையை OPS பயன்படுத்தினார்... ஒரு மாநில முதல்வர் மரணம் பற்றிய மர்மம் என்ற வார்த்தையை, இன்னொரு முன்னாள் தற்காலிக முதல்வர் பயன்படுத்தினால், மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்?.. அதில் மர்மம் இல்லை என்று சொல்ல வேண்டும்...அல்லது, மர்மம் இருந்தால், புலன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்... இத விடுத்து, OPS ஐ மர்மம் மர்மம் என்று கூவ விடுவது ஒருபுறம், சின்னத்தை இன்று முடக்கியது ஒருபுறம், இப்படி அரசியல் மட்டுமே பாஜக செய்கிறது... நல்லாட்சி இல்லை...பாஜகவை எதிர்ப்பவர்கள், எந்த முகாந்திரத்தில், பாஜக உருவாக்கிய OPS டீமை மட்டும் ஆதரிக்கிறார்கள் என்பதற்கான விடை தெரியவில்லை... தமிழனுக்கு புத்தி மட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.. OPS ஐ ஆதரித்தால் பாஜகவையும் ஆதரித்துவிட்டு போ... பாஜகவை எதிர்த்தால், OPS ஐ ஆதரிக்காதே... முரண்பாடாக நம்மவர்கள் செய்யும் விஷயங்களினால், பாஜக குளிர் காய்ந்து வருகிறது.... அவர்கள் இங்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை...... ஆதலால் தமிழக அரசியலில் ஸ்திரத்தன்மையை குலைக்க தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்கிறார்கள்...[ தினகரன் , இனியாவது சு சாமியை நம்பாமல், இருப்பது நல்லது ]

 • Paran Nathan - Edmonton,கனடா

  சீப்பை எடுத்து விட்டால் திருமணம் நின்று விடுமா? மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இலை மீண்டும் துளிர்விடும், மலர் கருகி மண்ணாகும். பன்னீரின் சேவை இனிதே முடிந்து சாக்கடையில் ஊற்றப்படும்.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  மகன் செத்தாலும் பரவாயில்லை.. மருமக தாலி இருக்கணும்.. - இது ஒரு மாபியாவோட நிலைப்பாடு.. தனக்கு ரெண்டு கண்ணு போனாலும் பரவாயில்லை, அடுத்தவனுக்கு ஒரு கண்ணாவது போகணும்.. - இது இன்னொரு மாபியாவோட நிலைப்பாடு.. ரெண்டு பெரும் ஹேப்பி.. நடுவுலே வெள்ளாமை பண்ணப் போறது யாருன்னு பாப்பம்..

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  பாஜக சின்னத்தில் பன்னீர் அணி போட்டி.. அதிரடி.. செய்தி வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  தொகை தகையல்லை.. அதனாலே யாருக்கும் இலை இல்லை..

 • Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்

  திரு OPS அவர்கள் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான சின்னத்தை தேர்ந்து எடுக்க வேண்டும். தேங்காய் ஆட்டோ ரிக்ஸா மோதிரம் மின் கம்பம் (இரட்டை இலை சின்னம் போல் இருக்கும் ஆனால் இலை இருக்காது) TV சைக்கிள் குக்கர் பிரிட்ஜ் இவைகளில் மூன்றை தேர்ந்து எடுத்தல் நல்லதாக படுகிறது

 • IndhuMathi -

  Super result, we welcome it

 • Raju - jersi,யூ.எஸ்.ஏ

  சூப்பரோ சூப்பர்

 • ராஜன் -

  நல்லது.பன்னீர்க்கு இதில் வெற்றியே.

 • periasamy - Doha,கத்தார்

  சிறந்த முடிவு வரவேற்கத்தக்கது

 • vasu -

  brilliant move.election Commission proved its power of independency

 • VELAN S - Chennai,இந்தியா

  அண்ணன் தினகரன் ரூபாய் 100 கோடி வரை கொடுக்க ரெடியாயிருந்தாராமே ,தலைமை தேர்தல் ஆணையர் பிழைக்க தெரியாதவராயிருப்பார் போலிருக்கிறதே, என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று தினகரன் தலையை பிடித்து கொண்டிருக்கிறாராம் .

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  சாமி, சல்மான் குஷிட், கஞ்சி சாமிகள், தமிழர்களிடம் சசி சுருட்டியதில் ஒரு பகுதியை நோகாமல் நொங்கு எடுத்து சாப்பிட்டு விட்டார்கள்.

 • youngprince -

  aiadmk ... oru sagaptham mudinthathu...

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  நிரந்தரமாக முடக்கினாலும் தவறில்லை. அந்த சின்னத்திற்கு வலு சேர்ந்தவர்களில் ஒருவர் இறந்து விட்டார் இன்னொருவர் சந்தேகத்திற்கிடையில் மறைந்துள்ளார். இரண்டு அணியும் புதிய சின்னங்களை நிரந்தரமாக தேர்ந்தெடுத்துக்கொள்ளட்டும். மக்கள் ஒன்றும் தற்போது எழுத்தறிவில்லா முட்டாள்கள் அல்ல. திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வர ஆரம்பித்த பின் ,இரண்டு தலைமுறைகள் ஆகிவிட்டது. ஆகவே சின்னங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தேவை இல்லை.

 • Mani Madhavan - Erode,இந்தியா

  சரியான முடிவு. மக்கள் தீர்மானிக்கட்டும் யார் உண்மையானவர்கள் என்று.

 • பாரிஸ் எழிலன் - பாரிஸ்,பிரான்ஸ்

  பிஜேபி தனது சகுனி வேலையை தொடங்கிவிட்டது. நேர் வழியில் உள்ளே நுழையமுடியாத காரணத்தால் பிஜேபி பலமான கட்சியான அதிமுகவை சிதைத்து தன்னை விதைத்து கொள்ள நினைக்கிறது. அவர்களின் கனவை உடைத்து நொறுக்க வேண்டிய கடமை அதிமுகவினருக்கு உள்ளது. மன்னார்குடி மாஃபியா குடும்பம், நேற்று பொழிந்த மழையில் முளைத்த காளான் தீபா போன்றவர்களை விரட்டிவிட்டு கட்சியை காப்பாற்ற வேண்டிய கடமை அதிமுகவினருக்கு உள்ளது.

 • C Suresh - Charlotte,இந்தியா

  நல்ல முடிவு.. ஓ.பி.எஸ் க்கு தான் மக்கள் ஆதரவு.. அவர் எப்படியும் எந்த சின்னத்திலேயும் வெல்வார் ....

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இது Makkalai Loot Adikravanga (M.L.A) தேர்வு செய்யும் தேர்தல் ஆகவே இருக்கிறது, ஓரே திருட்டு பயல்கள் தான் வோட்டு கேக்க வராங்க அதற்கு தேர்தல் ஆணையம் முற்று புள்ளி வைக்க வேண்டும்

 • Vakkeel VanduMurugan - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ

  ரொம்ப சந்தோசம்

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  ஒரே பொருளுக்கு ரெண்டுபேரு அடிச்சுக்கும்போது....எங்கப்பா அதை புடுங்கி அலமாரில வச்சி பூட்டிடுவாரு.

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  தற்போதைய சூழ்நிலையில் மிக சரியான முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது பாராட்டக்கூடிய செயல்.

 • S ANBUSELVAN - AL JUBAIL,சவுதி அரேபியா

  நல்ல முடிவு... வரவேற்கத்தக்க முடிவு.. சசியின், தினகரனின் கொட்டம் அடங்கும்...ஜெயாவின் மரணத்திற்கும் விசாரணைக்கமிஷன் வைத்தால் நல்லது...

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  அப்போ இரட்டைக் காலை மாட்டு சின்னம் போலத்தான்இதுவும், இனிமே இரட்டை இலையும் வெளியே வராதோ..( மாட்டுக்குத் தீனி போட்டாபோல.)

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  போகட்டும். பொதுச்செயலராக சசி இருக்கமுடியாது என்றும் உடனடியாக அறிவியுங்கள்.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  பேசாம கைரேகை வச்ச தாளை உபயோகப்படுத்த வேண்டியதுதான்.

 • vijay,Coimbatore -

  super

 • muthukumar -

  GREAT justice

 • Mohan D - Boston,யூ.எஸ்.ஏ

  பிப்ரவரி 14 பிறகு ஒரு நல்ல செய்தி. அப்படியே ஆட்சியை கலைச்சுட்டா தமிழ் நாடு உருப்படும்

 • Vimarsagan - Chennai,இந்தியா

  Good decision by EC to prove the real position of the candidates in RK nagar constituency......

 • MentalTamilan - London,யுனைடெட் கிங்டம்

  சூப்பர் ஆப்பு .....தினகரனுக்கு இப்போ ஜெயில் சின்னம் .... ஹாஹா ....

 • Satheesh Kumar - Chennai,இந்தியா

  nalladhuuuuuu

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  அதிமுக என்ற கட்சி பெயரை பயன்படுத்தவும் தடை. தினகரன் சசி பேரவை மற்றும், எம்ஜியா ர்அம்மா பேரன் பன்னீர் பேரவை என்று பெயர் வைக்கலாம்.

 • Ratan K - Chennai,இந்தியா

  அதிமுக என்ற கட்சி கலைக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது... அதற்கு மாற்றாக பாஜக, கம்யுனிஸ்டு போன்ற தேசியக்கட்சிகள் வந்தால் நல்லது - அல்லது ஆம் அத்மி போன்ற கட்சிகள்.. பாமக தேமுதிக போன்ற கட்சிகள் வளர்வது மீண்டும் விஷக்கிருமிகளைத்தான் பரப்பும்...

 • Emesgee - Yokohama,ஜப்பான்

  போச்சா?

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  சபாஷ் சரியான தீர்ப்பு. வெட்டு ஒன்று. இலை ரெண்டு. இது நிரந்தர தீர்ப்பினால் இன்னும் நன்று.

 • Karuppu Samy - MRT,சிங்கப்பூர்

  அப்பாடா ..அந்த இலையயை ஆட்டுக்கு போடுங்க

 • Sankar MG - Dortmund,ஜெர்மனி

  ஆஹாஹா நல்லதொரு முடிவு.....இதை நான் வரவேற்கிறேன்....

 • சொடலை - Chennai,இந்தியா

  சரியான சந்தர்ப்பம்...திஹார் முன்னேற்ற கழகம் இந்த வாய்ப்பை நழுவ விட கூடாது...உதிக்காத சூரியனை குப்பையில் தூக்கி எரிந்து விட்டு இரட்டை இலையை கைப்பற்ற வேண்டும்...பார்க்கலாம் அப்படியாவது மக்களை ஏமாற்றி ஜெயிக்க முடிகிறதா என்று கீ...கீ..கீ...

 • Rajan - chennai,இந்தியா

  சரியான முடிவு...சபாஷ் இந்த குழப்பம் தீரவேண்டும் என்றால்...பொது செயலர் தேர்தல் நடத்தப்படவேண்டும்....சசிக்கு அடி அடி விழுந்துள்ளது... பெரிய இடி ஆர் கே நகர் மக்கள் கொடுப்பார்கள்...தினகரன் தோல்வி உறுதி..பன்னீர் என்ன செய்யப்போகிறார் ...இவருக்கு இது முதல் வெற்றி...

 • K.Sugavanam - Salem,இந்தியா

  நல்ல முடிவு..

 • ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா

  சூப்பர் தீர்ப்பு........................

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement