Advertisement

இளையராஜா பாடல்களை பாட எஸ்பிபிக்கு தடை

சென்னை: அமெரிக்காவில் இசைநிகழ்ச்சி நடத்தும் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் இசையமைத்த பாடல்களை பாடக்கூடாது என திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேஸ்புக்கில் வெளியிட்ட செய்தி: கடந்த வாரம் அமெரிக்காவின் சியாட்டில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சிகள் சிறப்பாக இருந்தன. ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக செய்திருந்தனர். எங்கள் மீது அன்பு காட்டிய ரசிகர்கள் குறித்து பெருமைப்படுகிறோம்.

சட்ட நடவடிக்கைகள் :சில நாட்களுக்கு முன், இளையராஜா வழக்கறிஞர் சார்பில் எனக்கும், என்மகன் சரண், பாடகி சித்ராவுக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் வந்தது. அதில், அமெரிக்காவில்பல இடங்களில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிகளில், இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரது அனுமதி பெறாமல் நாங்கள் பாடக்கூடாது. தடையை மீறி பாடினால், அதிக அபராதம் கட்ட வேண்டியதுடன் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் சட்ட விதிகள் உள்ளது எனக்கு தெரியாது.
‛எஸ்பிபி 50' என்ற இசை நிகழ்ச்சியை எனது மகன் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பாடு செய்தார். டோரன்டோ நகர், ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியாவின் பல நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளோம். அப்போது இளையராஜா தரப்பிலிருந்து எந்த தகவலும் வரவில்லை. முன்னர் நான் கூறியது போல், இது பற்றிய சட்டம் எனக்கு தெரியாவிட்டாலும் சட்டத்தை மதிக்க வேண்டும். கீழ்படிய வேண்டும்.

ரசிகர்களுக்கு வேண்டுகோள்:இதுபோன்ற சூழ்நிலையில், இளையராஜா இசையமைத்த பாடல்களை எங்களது குழுவால் இனிமேல் பாட முடியாது. ஆனால், இசை நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும். கடவுள் அருளால், மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளேன். அவற்றை பாடுவேன். வழக்கம்போல் இசை நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். இந்த விவகாரத்தில் ரசிகர்கள் எந்த விவாதமும் நடத்த வேண்டாம். மோசமான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம். இதனை கடவுள் திட்டமிட்டிருந்தால் அதற்கு நான் அடிபணிய வேண்டும். இவ்வாறு எஸ்பிபி கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (198)

 • Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் தெரிந்தவன் தான் மனிதன். அதை விட்டு விட்டு ஏன் இப்படி பணத்தாசைப் பிடித்து அலைகிறாய்?

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  பாடலைப் "இன்னொருவர்" அமைத்த இசையை "வேறொருவரை" வைத்து பாடலாம். அதனால், பலன் பெறலாம். ஆனால், இசையமைப்பாளர், அல்லது கவிதையை எழுதியவர் அதை பாட முடியாது பலனடைய முடியாது. இன்னொன்று " இசையால் வசமாகா இதயம் எது ....."

 • p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா

  அப்பா இளையராஜாவுக்கு வணக்கம். நீங்கள் போட்ட பிச்சை தான் இவளவு பாடல்கள் யார் பாடினால் என்ன பொறுத்து கொள்ளுங்கள்.

 • Nagercoil Suresh - India,இந்தியா

  இளையராஜா ஒரு சிறப்பான இசையமைப்பாளர் அதில் மாற்று கருத்து இல்லை. படத்திற்கு இசையமைக்க வாய்ப்புக்கொடுத்தால் இவரே ஒரு படத்திற்கு ஒரு பாடலையும் வாசித்து தன்னுடைய குரலின் கண்றாவியை மக்களை கேட்க வைப்பார் அதிலும் இவர் சிறந்தவர். தற்போது எழுந்திருக்கும் பிரச்சினையை கோர்ட் தலையிட்டு உடனே முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் இல்லையெண்டால் இறந்த இசையமைப்பாளர்கள் கூட இதேபோல் நோட்டீஸ் அனுப்புவார்கள். அடித்த இசைக்கு நல்ல துட்டும் வாங்கி விட்டு தன்னுடைய பின் புத்தியை காட்டிவிட்டார்....

 • RamRV -

  இளையராஜா தன்னுடைய தொழிலில் நிலைபெற்ற பிறகு தயாரிப்பாளர்களுடன் ராயல்டி ஒப்பந்தம் செய்து கொள்ளத் துவங்கினார். இந்த விஷயத்தில் அவர்தான் தமிழ்த் திரை உலகின் முன்னோடி. அதன்படி அவர் அமைத்த இசையை அந்தப் படத்துக்கு தவிர வேறெதற்காவது லாப நோக்கில் பயன்படுத்தினால் அதற்கு உரிய தொகையை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று சட்டபூர்வமான உரிமையை அவர் வைத்திருக்கிறார். இசையமைப்பதற்காக அவர் போடும் ஒப்பந்தத்தில் இது ஒரு முக்கிய பகுதியாகும். மேலும் பல லட்சங்கள் தருகிறோம் ராயல்டி எதற்கு என்று பட முதலாளிகள் கேட்டாலும் அதை ஒப்புக் கொள்ளாமல் தனது நிலையிலிருந்து சற்றும் மாறாமல் இருந்தார். மேலை நாடுகளில் இவை மிகவும் கடுமையாக மதிக்கப் படுகிறது மற்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் இந்தியர்கள் இது போன்ற சட்டங்களை அவ்வளவாக மதிப்பதில்லை. எஸ்பிபி, தான தர்மத்துக்காகப் பாடவில்லை. அவருடைய மகனால் நடத்தப் படும் வணிக ரீதியான ஒரு நிகழ்ச்சியில் பணம் சம்பாதிப்பதற்காகத் தான் பாடுகிறார். அதில் அவர் உபயோகப் படுத்தும் மற்றவர்களுடைய பொருட்களுக்கு அதற்கான பங்கைக் கொடுக்க வேண்டியது நியாயமான கடமையாகும். இளையராஜா இந்தப் பாடல்களுக்கு உரிமையுள்ளவர். அந்த உரிமையை தனது சம்பளத்தின் ஒரு பகுதியாக சட்டபூர்வமாக வாங்கியுள்ளவர். தயவு செய்து நாம் இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

Advertisement