இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது:ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு, மாநில தலைவர் தமிழிசை, நடிகை கவுதமி மற்றும் கங்கை அமரன் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. சென்னையில், நேற்று நடந்த, மாநில தேர்தல் கமிட்டி கூட்டத்தில், கங்கை அமரனின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நட்டா அறிவிப்பு
சென்னை- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க., வேட்பாளராக கங்கை அமரன் போட்டியிடுவார் என பா.ஜ.க.,வின் தேர்தல் பிரிவு செயலாளர் நட்டா அறிவித்தார்.
வெற்றி பெறுவேன்
மக்கள் மாற்றத்தை விரும்புவதால் நான் வெற்றி பெறுவேன் என ஆர். கே. நகரில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிடும் கங்கை அமரன் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -
மாற்றம் தேவை. ஆனால் உங்களைப்போல் பச்சோந்திகள் தேவையில்லை.