Advertisement

பா.ஜ.,வுடன் பன்னீர் அணி கூட்டணியா?

‛பா.ஜ.,வுடனான கூட்டணி குறித்து விரைவில் கட்சித் தலைமை முடிவு செய்யும்' என பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


தலைமை தேர்தல் கமிஷனருடனான சந்திப்புக்கு பின், பன்னீர்செல்வம் கூறியதாவது: சசிகலா இடைக்கால பொதுச் செயலராக அறிவிக்கப்பட்டார்; தேர்ந்தெடுக்கப்படவில்லை. கட்சியின் சட்டவிதிகள் மிகவும் தெளிவாக உள்ளன. அதன்படி, கட்சியின் பொது செயலருக்கு உள்ள அதிகாரங்களை சசிகலா பயன் படுத்த முடியாது. புதிய நிர்வாகிகளை சேர்க்கவோ, ஏற்கனவே உள்ளவர்களை நீக்கவோ, அவருக்கு அதிகாரம் கிடையாது.


அதேபோல் பொதுச் செயலர் பதவி காலியாக இருந்தால், புதியவரை தேர்ந்தெடுக்கும் வரை, கட்சியின் அடுத்த மூத்த தலைவரே, கட்சியை வழிநடத்த வேண்டும். அதன்படி, அவைத் தலைவர் தான் கட்சியை வழிநடத்த வேண்டும். இதையே தலைமை தேர்தல் கமிஷனரிடம் வலியுறுத்தினோம். அதன்படி, ஆர்.கே.நகர் சட்டசபை இடை தேர்த லில், கட்சி வேட்பாளரை அறிவிக்கவும், இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் எங்கள் தரப்புக்கே அதிகாரம் உள்ளது என்பதை திட்ட வட்டமாக, தகுந்த ஆதாரங்களுடன் கூறி யுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தமிழகத்தில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, ''எங்கள் கட்சித் தலைமை அதை முடிவு செய்யும். விரைவில் நல்ல செய்தி வரும்,'' என, பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.


- நமது சிறப்பு நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (188)

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  ஓ.பி.எஸ் தலைமையிலான அதிமுக பாஜக கூட்டணி அமைவது தமிழ்நாட்டுக்கு நல்லது. மைனாரிட்டி வாக்குகள் எந்த காலத்திலும் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் விழாது. குறிப்பாக 95 சதவிகித இஸ்லாமியர்கள் வாக்குகள் எப்போதும் திமுகவுக்கும் காங்கிரசுக்கும்தான் போகும். அதனால் மைனாரிட்டி வாக்குகளை பற்றி கவலைப்படாமல் ஓ.பி.எஸ் தாராளமாக பாஜகவுடன் ஒரு நிரந்தர கூட்டணி ஏற்படுத்திக்கொள்ளலாம். குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல், ஊழல் கூட்டணிக்கு எதிராக அதிமுக பாஜக கூட்டணி என்று நேர்மையாக கெளரவமாக கம்பிரமாக பிரச்சாரம் செய்யலாம்.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  பாஜகவுடன் பன்னீர் அணி கூட்டணியா, இல்லை பன்னீர் அணியுடன் பாஜக கூட்டணியா?

 • handsome - Virginia,விர்ஜின்( யூ.எஸ்.ஏ)

  இந்து முஸ்லீம் உறவு என்பது தொன்றுதொட்டு இருக்கும் உறவுதான் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை தமிழகத்தில். அனைவரும் தொப்புள்கொடி உறவுகளாவே பார்க்கிறார்கள், இனியும் அது தொடரும்.

 • BHAVANI - Chennai,இந்தியா

  தினகரனை வீழ்த்த ஓ பி ஸ் சரியாக மிகவும் சாதுர்யமாக செயல் பட வேண்டும்.

 • S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா

  கறந்த மடியில் பால் புகுமாயின் .. ஆர் கே நகர் தொகுதியில் பா ஜ க விற்கு டெபாசிட் கிடைக்கும்.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  சைபருக்கு தனியாக எந்த மதிப்பும் கிடையாது. அதற்கு முன் உள்ள எண்களின் மதிப்பை மாற்றுவது அதன் இயல்பு.

 • Thamizhan - Pondy,இந்தியா

  வாருங்கள்..... வளருங்கள்... யார் வேண்டாம் என்று சொன்னது ? தமிழக பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு மக்களிடம் வோட்டு வாங்கி வாருங்கள் . ஏன் இப்படி நேர்மையற்ற திரை மறைவு வேலைகளை செய்து, உங்களோடு கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொன்ன தலைவியின் கட்சியோடு கூட்டணி வைத்து வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்பது தான் கேள்வி ....

 • பாரதி - Chennai ,இந்தியா

  பன்னிரு செல்வம் கருணாநிதியை போல் மத்தியில் உள்ள கட்சியை பிஜேபியை பயன்படுத்தி கொண்டு முன்னேற வேண்டும். ஜெயாவை போல் மோதல் போக்கை கடைபிடிக்க கூடாது. மத்தியில் பிஜேபி ஆட்சி வாஜ்பாய் இருந்தபோது ஐந்து ஆண்டுகள் முரசொலி மாறன் அமைச்சராக இருந்தார். அதுபோல் மத்தியில் மன்மோகன், தேவே கவ்ட குஜ்ரால் வி.பி. சிங்க் போன்றவர்கள் ஆட்சியில் தொடர்ந்து 18 ஆண்டுகள் திமுக அமைச்சரவையில் பங்கு பெற்றது. அந்த சாணக்கிய தந்திரத்தை பன்னிர் செல்வம் கற்று கொள்ள வேண்டும்.

 • murali - Chennai,இந்தியா

  எனது இனிய முஸ்லீம் நண்பர்களே மோடி ஒன்றும் உங்களின் எதிரி இல்லை. குஜராத்திலும் உத்தரப்பிரதேஷிலும் முஸ்லிம்களுகு வாக்கு அளித்துள்ளார்கள். நீங்கள் சில தவறான அரசியல் வாதிகளீன் பேச்சை கேட்காமல் உங்களுக்கு எது நல்லது என்று தொண்டுறுகிறதோ அதன்படி வாக்களியுங்கள். ஹிந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு வழிசெய்யுங்கள்

 • Samy - CBe,இந்தியா

  தமிழிசை போன்ற ஆளுக இருக்கும்வரை பி ஜெ பி அதோ கதிதான்.

 • Vaduvooraan - Chennai ,இந்தியா

  சசிகலா மீது வெறுப்புள்ளவர்கள், எம்ஜியார்-ஜெ விசுவாசிகள், திராவிடம்-ஆரியம் என்று பேசிக் கொண்டிருக்காது வளர்ச்சி பற்றி சிந்திப்பவர்கள், 67 இல் காமராஜரை தோற்கடித்து விட்டு அதன் பிறகு ஒவ்வொரு துறையிலும் தமிழகம் தாழ்ந்து போனதை நினைத்து வருத்தப்படுபவர்கள், தேசிய கட்சியின் ஆட்சி வந்தால்தான் அவவ்போது பல வேடங்களில் வரும் பிரிவினைவாதத்தை ஒழிக்கலாம் என்று நம்புபவர்கள், திமுக மீண்டும் துளிர் விடக் கூடாது என நினைப்பவர்கள், ஜாதிக கட்சிகளை பார்த்து நொந்து போனவர்கள், போராளி, பெருச்சாளி, ரஸ்தாளி, எழுச்சி என்று சொல்லிக் கொண்டு கட்டப்பஞ்சாயத்தில் கல்லா கட்டுகிறவர்கள் மீது கடுங்கோபத்தில் இருப்பவர்கள், எதற்கெடுத்தாலும் தங்கள் மத உணர்வுகளை மட்டும் தேர்ந்தெடுத்து புண் படுத்தும் கூட்டத்தினர் மீது கொலைவெறியில் கொதித்துக் கொண்டிருக்கும் ஹிந்து சிந்தனையாளர்கள், சிறுபான்மையினர் என்று சொல்லிக்கொண்டு எங்கோ நடக்கும் போருக்கு இங்கிருந்து திருட்டுத்தனமாக ஓடுபவர்கள் மீது எரிச்சலில் இருப்பவர்கள், இந்த நாட்டின் 5 ,000 வருடத்துக்கும் மேற்பட்ட பாரம்பரியத்தையும் அதன் பெருமையும் உணர்ந்தவர்கள், ஒருமைப்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் ....இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் உத்திர பிரதேச பாணி வெற்றி காத்திருக்கிறது- ஆனால் கூட்டணியில் அதிமுகவுக்கு அடுத்த நிலையில்தான் பாஜக இருந்து செயல் பட வேண்டி வரும். ஆதாயம் பாஜகவுக்கு மட்டுமல்ல மக்களுக்கும்தான்

 • R Sanjay - Chennai,இந்தியா

  கொள்ளை ஆடிப்பவர்களே கூட்டணி வைப்பவர்கள், கூட்டணிக்கு அச்சாரம் போடுபவர்கள். கொள்ளைக்காரர்களிடம் இதைத்தவிர வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்.

 • Paran Nathan - Edmonton,கனடா

  அன்பர்களே பிஜேபி தான் நமக்கு வேண்டாம். நானும் ஒரு இந்துதான். ஆனால் நமக்குள் பிரிவினை வேண்டாமே பிஜேபி தனது சொந்த முயற்சியால் தமிழ்நாட்டில் காலூன்றினால் வரவேற்போம். ஜெயா இருந்தபோது வரவே வராத தீர்ப்பு, அவர் இறந்தபின் வந்தது எப்படி? அதுவும் பன்னீர் முதல்வர் பதவியை இழந்த பின் வந்தது எப்படி? என்னைப் பொறுத்தவரை தமிழகம் மட்டுமே உலகிலேயே மதநல்லிணக்கத்துக்கு உதாரணமாகத் திகழும் ஒரே இடம். உதாரணம் அன்னை வேளாங்கன்னி, நாகூர் தர்க்கா. இங்கு நான் எதனைக் குறிப்பிடுகின்றேன் என்பதை சகலரும் அறிவீர்கள். பூமிப்பந்தில் அற்புதமான பிரதேசம் தமிழகம். இங்கு நாம் அனைவரும் தமிழர்களாக ஜாதி, மத பிரிவினைகள் இல்லாமல் ஒன்றிணைவோம். துள்ளி வருகுது வேல் எனினும் நமது கிள்ளைத் தமிழை இழப்போமா என்ற அன்றைய கலைஞரின் வாசகம்தான் நினைவுக்கு வருகின்றது. தமிழர்களே நாம் அனைவரும் தமிழர்களாக ஒன்றுபடுவோம்.

 • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  பாஜக வளர்வது தமிழ்நாட்டுக்கு நல்லது.. வழக்கம்போல் ஆரெசெஸோமோடியோபோபியா வியாதி உள்ளவர்கள் எதிர்க்கருத்து போடுவர்.. காலத்தின் கட்டாயம் பிஜேபியின் வளர்ச்சி.. பிஜேபி வளர்ச்சியை தடுக்க தமிழ்நாட்டில் எது நடந்தாலும் உடனே மோடியையும் மத்திய அரசையும் இணைத்து குற்றம் சாட்டி ஒரு கும்பல் தவறான கருத்தை பரப்புகிறது.. நிச்சயம் பாஜக தமிழகத்தில் காலூன்றும்... வருவோம்.. வருவோம்

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  அ தி மு க சட்ட திட்டங்களை படித்து பார்த்தால் அதில் அவை தலைவருக்கு கூட்டம் நடக்கும் போது தலைமை பொறுப்பேற்று கூட்டத்தை நடத்தி தரும் பொறுப்பு மட்டுமே இருக்கிறது... சட்டவிதி படி அவருக்கு ஜெனரல் செகிரேட்டரி செய்யும் பொறுப்புக்களை எடுத்து நடத்தும் அதிகாரம் இருப்பதாக தெரியவில்லை... ஆனால் சென்ட்ரல் எக்சிகியூடிவ் கமிட்டீ இந்த சூழ்நிலையில் அந்த அதிகாரத்தை எடுத்து செய்யலாம்.. சென்ட்ரல் எக்சிகியூடிவ் கமிட்டியில் யாருக்கு அதிக பலம் இருக்கிறதோ அவர்கள் ஒரு ரெசொலூஷன் போட்டு தேர்தல் கமிஷனிடம் கொடுத்தால் அவர் ஏற்று கொள்ள வாய்ப்பு உள்ளது... பார்ப்போம் அடுத்த வாரம் தெரிந்துவிடும்...

 • உண்மை விளம்பி - சிங்கப்பூர்,சிங்கப்பூர்

  OPS மற்றும் பாஜக இதனுடன் பாமகவும் கூட்டு சேர்ந்தால் சட்ட சபை தேர்தலில் இரண்டாவது இடம் வாய்ப்பு. திமுகவிற்கு பலமான போட்டி நிச்சயம். MP தேர்தலில் முதல் இடம் வாய்ப்பு. திமுக ஆதரவாளர்கள் இதனை விரும்ப மாட்டார்கள்.

 • Ramesh Sundram - Muscat,ஓமன்

  AIADMK /DMK போன்ற கட்சிகள் ஒரு தொகுதியிலும் போட்டியிடாவிட்டாலும் அந்த தொகுதியில் கூட பிஜேபி வெற்றி பெறாது

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  காங்கிரஸ் போல பிஜேபி யும் எவன் முதுகிலாவது சவாரி செய்தல் தான் தேறும் இல்லை என்றால் பவிசு தெரிந்து விடும் இருமி சர்மிலாவிற்கே 90 வோட்டு பிஜேபி க்கு அந்த வேட்பாளரே வோட்டு போடமாட்டார்

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  இங்கு கருத்து பதியும் பாஜக வெறுப்பாளர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.... தமிழகத்தில் பாஜக வளர்ச்சி என்பது காலத்தின் கட்டாயம்... வந்தே தீரும்.... இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் மாநிலத்திலேயே நாங்க அபாரமான வெற்றியை பெற்றுள்ளோம்..... தமிழ் இந்துக்கள் இந்துக்களாக ஒன்றினையும் காலம் வெகு தூரத்தில் இல்லை.... தமிழ் இந்துக்கள் ஒன்றிணையக் கூடாது என்று நரிக் கணக்காக நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலையும் சக்திகளுக்கு இன்னும் ஆறேழு வருடத்தில் ஆப்பு இருக்குடி.....

 • Larson - Nagercoil,இந்தியா

  OPS பிஜேபியோடு கூட்டணி வைக்காவிட்டால் பிஜேபி தினகரனோடு கூட்டு வைக்கும்... பிஜேபிக்கு தமிழகத்தில் கால் பதிக்க இருக்கிற ஒரே வழி OPS அல்லது தினகரன்....

 • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

  முதலில் லாட்டரியில் பரிசு விழட்டும் அப்புறம் மாடு வாங்கி எவன் காட்டுல மேய விடலாம்னு யோசிக்கலாம்...........

 • Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா

  பூனை குட்டி வெளியில் வந்து விட்டது இதுக்கு தானே அவர்கள் உங்களை முதல்வர் பதவியை விட்டு தூக்கி அடித்தார்கள் இப்பொழுது தெரிகின்றதா உங்களது சுயரூபம். அம்மா எதிர்த்த திட்டத்தை அவசர அவசரமாக கையெழுத்து இட்டு மத்திய அரசுக்கு ஒத்துழைத்து உள்ளீர் . நீவீர் பசு தோல் போர்த்திய புலி என்பதை உலகுக்கு தெரிய படுத்தி விட்டீர்

 • S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா

  தமிழகத்தில் குமரியே தவிர வேறு எங்கும் கிளைகள் இல்லாத பா ஜ க வோடு கூட்டணி அமைத்தால் பன்னீருக்கு "திரு ஓடு" கிடைக்கும்.

 • Sundar - Madurai,ஐக்கிய அரபு நாடுகள்

  It is sensible and constructive view and this will make Panneer to become leader of united ADMK in future.

 • S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா

  பன்னீர் ஆளே இல்லாத பா ஜ க வோடு கூட்டு சேர்ந்தால்.. அவரும் ஒரு அரசியல் அநாதை ஆகிவிடுவார்.

 • S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா

  பா ஜ க தனித்து களம் இறங்க வேண்டும். சாதாரண தொண்டனை பலிகடா ஆக்காமல் தலைவர்கள் ' ராஜா , தமிழிசை போன்றவர்கள் ஆர் கே நகரில் போட்டியிட்டு தங்களது வாக்கு வங்கியை (ஐயாயிரத்துக்கும் குறையாமல்) காட்டி நாங்கள் தான் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்று காண்பிக்க வேண்டும்.

 • S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா

  பன்னீர் உண்மையான அ தி மு க என்றால் ... ஆட்களே இல்லாத பா ஜ க வோடு கூட்டணி வைக்கும் முன், ஜெயலலிதா கடந்த பாராளுமன்ற தேர்தலில் சொன்ன ஒரு திருவாசகத்தை இங்கே நியாபக படுத்துகிறேன்.. "மோடியா இல்லை இந்த லேடியா" என்று தேர்தல் உரையில் சொல்லி தனது பா ஜ க எதிர்ப்பை காட்டிய ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியாக இருந்தால் ஆளே இல்லாத பா ஜ க வை புறம் தள்ளி தங்களது மக்கள் செல்வாக்கை காட்டுங்கள்.

 • Original Indian - Chennai,இந்தியா

  திரு. பன்னீரின் உண்மை முகம் தெரிந்துவிட்டது, வேண்டாம் பிஜேபியுடன் கைகோர்த்தால் தமிழ் நாட்டில் அரசியல் அநாதை ஆகிவிடுவார்.

 • Hari Raj - Kuala Lumpur,மலேஷியா

  நல்ல கூட்டணி . வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  இது எந்த குரூப்புகிட்ட வாங்கின கவருக்கான...

 • நரி - Chennai,இந்தியா

  இவ்வளவு சட்ட திட்டங்கள் தெரிந்தும் ஊழல் ராணி சசிகலவை நீங்கள் தான் அழைத்துவந்து பொதுச்செயலாளர் ஆக்கி இருக்கிறீர்கள் ... புரட்சித்தலைவர் M G R உருவாக்கிய புனிதமான அதிமுகவிற்கு நீங்கள் செய்தது துரோகம் அல்லவா..... "ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்" ...M G R ஆன்மா உங்களை மன்னிக்காது .... பன்னீர் உங்களுக்கு மனசாட்சியே இல்லையா ........ B J P இடம் சோரம்போய் விட்டீர்களே

 • abu lukmaan - trichy,இந்தியா

  துரை முருகன் உங்களுக்கு ஆதரவு தருவோம் என சொன்னாரே ? அவர் உங்கள் கட்சி தலைமையா வர வாய்ப்புள்ளதா ?

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  உள்ளதும் போச்சுடா நொள்ளை கண்ணா போல, BJP கூட ops அந்த சேர்ந்தால் டெபொசிட்டும் கிடைக்காது. பிஜேபி இல்லாமல் தனியாக போட்டியிட்டால் DMK வுக்கு அடுத்து OPS அணி இரண்டாம் இடத்துக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது.

 • Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்

  இது சரியாக வராது. தனியே நின்றால் 30 சதவிகித ஓட்டுகள் வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இரட்டை இலை சின்னம் சென்னையை பொறுத்த வரையில் கவலை பட தேவை இல்லை கிடைத்தால் நல்லது இல்லையேல் வருத்தப்பட வேண்டியதில்லை. இந்த தேர்தலில் இரட்டை இலை யாருக்குமே கிடையாது என்கிற நிலைதான் ஏற்படும் போல் தெரிகின்றது.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  கலங்கிய குட்டையில் கட்டாயம் பா.ஜ.க மீன் பிடிக்க முயலும்...

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  ஜெயாவால் கடைசி வரை நிராகரிக்கப்படட கூட்டணியில் பன்னீர் சேர்வது சசிக்கு கொண்டாட்டமாக அமைந்து விடும். ஜெயா உயிரோடு இருக்கும் வரை சாதிக்க முடியாது என கணித்தவர்கள் இப்போது சாதகம் அடைகிறார்கள் என்றால் மரணத்தின் மர்ம முடிச்சு எங்கோ செல்கிறதே..........

 • anbu - Hamilton,நியூ சிலாந்து

  பா.ஜ.,வுடன் பன்னீர் அணி கூட்டணியா? புது செய்தி போல போடறீர் ஜல்லிக்கட்டு சமாச்சாரம் ஆரம்பமே இந்த கூட்டணியால் தான் இந்த பன்னீர், மதுசூதனன் எல்லாரும் பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்தால் நல்லவர்கள் ஆகிவிட முடியாது .. எல்லாம் களவாணிங்க தான். பிஜேபி யும் இந்த பயல்களுடன் சேர்வது வரவேற்க முடியாது அன்பு, நியூ ஸிலண்ட்

 • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

  விரைவில் கட்சித் தலைமை முடிவு செய்யும்' எனச் சொல்லும் பன்னீர்செல்வம் அவர்களே நீங்கள் ஏற்க்கெனவே எடுத்த முடிவுக்கு அவர்கள் முடிவுச் செய்து அங்கீகாரம் கொடுப்பார்களா அல்லது இனிமேல்தான் முடிவு எடுக்கவேண்டுமா? "எனக்கு முதல்வர் பதவிக் கிடைக்க பாஜக உதவிச் செய்தால் அந்தக் பாஜக வோடு கூட்டணிச் சேருவதில் தவறில்லை" யென்று நீங்கள் முணுமுணுப்பது பலருக்குத் தெரியாதா?

 • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

  என்னமோ இந்த பன்னீர், மதுசூதனன் எல்லாரும் யோக்கிய சிகாமணி மாதிரியும்...அப்படியே புடம் போட்ட தங்கம் மாதிரியும்...எல்லாம் கூட்டு களவாணிங்க தான்....பதவி இல்லை....அதனால் சசி எதிரி....தினகரன் எதிரி....RK நகர் மக்கள் நல்ல தெளிவா சிந்தனை செய்து நல்ல வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்....நேர்மையான ஒரு நபர் ஜெயிக்க வேண்டும்....அப்போது தான் இந்த எம் எல் ஏ களுக்கு ஒரு பயம் வரும்....தீபா என்ன சுதந்திர போராட்ட தியாகியா, ஏன் பன்னிரு சொத்து சேர்க்க வில்லையா....அப்போலோவில் ஜெயா இருந்த பொது இவர்களும் சேர்ந்தது தானே ஒத்து ஊதினார்கள்......இட்லி சாப்புடுறாங்க...தயிர் வடை கட்டங்க....பால் பாயசம் கேட்டாங்க என....ஆட்சி எனக்கு...கட்சி உனக்கு ....டீல் ஒத்து வரல....அம்மாவோட ஆவி பேசிச்சு.....டீல் ஒகே ஆகிருந்தால் ஆவி பேசியிருக்குமா

 • Suresh - Narita,ஜப்பான்

  TASMAC கூட்டணி liquor சப்ளை கூட்டணிக்கு உதறல் எடுக்குது.....

 • Freethinker - Chennai,இந்தியா

  இதுக்கு ஏண்டா வெள்ளையும் சொள்ளையுமா அலையனும் இவுங்க அஜெண்டா தெரிஞ்சதுதானே

 • ra ja - singapore,சிங்கப்பூர்

  இதனை நாளும் மறைமுகமா ops ரிமோட் மூலம் இயக்கிய பிஜேபி இனி நேரடியாக செயல்படும். பன்னீரின்முகம் வெளியே தெரியும் நாள் மிக அருகில்

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  பன்னீர் அணி, பா.ஜெ.க கூட்டணியாக இடை தேர்தலில் போட்டியிடலாம்.... மதுசூதனன் வேட்பாளராக போட்டியிடலாம்.............

 • Sundar - Chennai,இந்தியா

  பூனை வெளியில் வந்து விட்டது . காலில் விழுந்து வாழ்ந்தவர் இவ்வளவு தைரியமா பேசுராரேன்னு பார்த்தா கடைசியில் கேடி சப்போர்ட்டா

 • வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா

  தமிழ் நாடு உருப்பட வேண்டுமென்றால் தனி மாநில பிரிவினை கோஷம் போடும் திருடர்களிடம் இருந்து விலகி வர வேண்டும். தனி மரம் தோப்பாகாது. இங்குள்ள சில கொலை கொள்ளை அரசியல்வாதிகள் மக்களை தங்கள் சுய நலத்திற்காக குறுகிய வட்டத்தில் அடக்கி மொழி, மதம் மற்றும் இன அரசியல் செய்து குளிர் காய்கிறார்கள். காமராஜர் போன்ற அரசியல்வாதிகள் வாழ்ந்த இந்த மாநிலத்தில் இந்த திருட்டு சதிகார கூட்டம் இலவசங்களை கொடுத்து தமிழர்களை அடிமைகளாகவே வைத்துள்ளது. மாற்றம் வேண்டும். தமிழகத்தில் காங்கிரசும், பிஜேபி யும் இனி தங்கள் இடத்தை பிடிக்க வேண்டும். திருடர்களுக்கும், நடிகர்களுக்கும் இனி அரசியலில் இடம் கொடுக்க கூடாது.

 • Ram,Mylapore -

  oooohhhh! கத்திரிக்கா மலிஞ்சா கடத்தெருக்கு வந்துதானே ஆஹனும்!!!

 • Gnanam - Nagercoil,இந்தியா

  நல்ல முடிவு, வாழ்த்துக்கள். தமிழகமெங்கும் தாமரை மலரட்டும். நிச்சயம் நாடு முன்னேற வாய்ப்புக்கள் உள்ளன.

 • Raju - jersi,யூ.எஸ்.ஏ

  நல்லது வரவேற்கத்தக்கது

 • unmai nanban - Chennai,இந்தியா

  வெந்நீர் இதோட அரசியல் அவுட், துரோகிகள் நிறைய நாள் வென்றதில்லை வீரப்பன் கதை தான், கொள்ளை அடித்து வைத்துள்ள பல ஆயிரம் கோடிகள் இருக்கும்வரை ஆட்டம் இருக்கும் அப்பொறம் கோவிந்தா தியானம் நாடகம் கூடிய விரைவில் குட்டு வெளிப்படும் இங்கு தாமரை மலராது இலை உதிர்ந்தால் சூரியனின் வெப்பம் தான் வரும் இன்னும் சிலநாட்களில் நடக்கும் நிகழ்வுகள் இந்த சுயநல கருப்பு ஆடுகள் அடையாளம் காட்டப்பட்டும் எட்டப்பர்கள் முகத்தில் முக்காடு போட்டுகொண்டு தெரு தெருவாக இழுத்து செல்லப்படுவார்கள் அம்மா ஆன்மா அப்போது கேட்க்கும் கேள்விகளை இந்த கூட்டம் எதிர்கொண்டு ஓட்டம் பிடிக்கும்

 • ஜெயாமாலன்.டெக்ஸாஸ். -

  பாஜக வுடன் கூட்டணி அருமையான முடிவு. வாழ்த்துக்கள் மக்களின் முதல்வரே.

 • murasu - madurai,இந்தியா

  பன்னீரை உருவாக்கியதே இந்த உதவாத பிஜேபி தானே . இதுல என்ன தனியா கூட்டு பொரியல்

 • siriyaar - avinashi,இந்தியா

  Panneer makes joins with modi victory is sure. He will be chief minister sooner

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement