Advertisement

' மைக் ' மீது ஆசை - பாடகர் மகாலிங்கம்

சின்னத்திரை சீரியல், மக்களை கட்டிப்போடாதவரை, ஊர் திருவிழா, காதுகுத்து, கல்யாணம் என எந்த நிகழ்ச்சி நடந்தாலும், ஸ்பீக்கர் சத்தம் எட்டு ஊருக்கு கேட்கும்.நினைப்பதை 'யு டியூப்'பில் போட்டு, லைக்சை அள்ளும் நம்மவர்களில், பலர் ஊர் விசேஷங்களில் மைக்கை பிடித்து ஒரு முறையாவது 'ஹலோ' சொல்லி பெருமைப்பட்டிருப்பார்கள்.சினிமா பாட்டு புத்தகத்தை வாங்கி, மைக்கை பிடித்து பாட்டை பாடினால், ஏதோ எஸ்.பி.பி., மாதிரி உணர்வு நம்முள் மேலோங்கும். அது போன்று மைக்கிற்காக தவம் கிடந்து பாடி, இன்று 'ஆவி பறக்கும் டீக்கடை' பாடல் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் பாடகர் மகாலிங்கம்.சண்டே ஸ்பெஷலுக்காக சில நிமிடங்கள்:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நெய்வயல் சொந்த ஊர். ஆறாம் வகுப்பு படிக்கும்போது, கோயில் விழாவில் இரவு நேரத்தில், பாடும்போது, என்னுடைய ஐந்தாம் வகுப்பு தலைமை ஆசிரியர் ''தொந்தரவாக இருக்கிறது, இரவு முழுவதும் பாடினால், போலீசில் புகார் செய்து விடுவேன்'' எனக் கூறினார். அந்த அளவுக்கு பாடல் மீது ஆர்வம் கொண்டவனாக இருந்தேன்.
வெளியூரில் வேலை பார்க்கும் நண்பர்கள், ஊருக்கு வரும்போது, பேன்ட் சட்டை என அணிந்து வருவதை பார்த்த எனக்கும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. ஏழாம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்கு போட்டு, மூன்று ஆண்டு திருச்சி, கோவை, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் மிட்டாய் கம்பெனிகளில் வேலை பார்த்தேன். படிப்பின் அருமை தெரிய ஆரம்பித்தது.மூன்று ஆண்டு இடைவெளிக்கு பின், மீண்டும் ஏழாம் வகுப்பில் சேர்ந்தேன்.தேவகோட்டை பள்ளியில், பிளஸ் 1-ல் சேர்ந்தேன். வறுமையால், பிளஸ் 1 பாதியில் நின்றது. அண்ணன் சரவணனுடன் இணைந்து, பெங்களூருவில் உள்ள, கம்பெனியில் வேலை பார்த்தேன். வேலை பார்த்து கொண்டே கச்சேரிகளில் பாடும் வாய்ப்பு தேடி அலைந்தேன். முதலில் பாடிய மேடை சீர்காழி. எனவே சீர்காழி கோவிந்தராஜனின் ஆசிர்வாதம் தொடர்கிறது.சின்னத்திரையில் பாடிய போது, என்னுடன் பாடிய அனுஷின் அப்பா கணேஷ் வைத்தீஸ்வரன் அறிமுகம் கிடைத்தது. திருமணத்துக்கு பிறகு, சென்னை சென்று கணேஷ் வைத்தீஸ்வரனை சந்தித்து என் நிலைமையை விளக்கிய போது, அவரது நிறுவனத்தில் வேலை கொடுத்து, பணம் கொடுத்து உதவினார்.சின்னத்திரையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராக வந்திருந்த விஜய்ஆனந்த் என் குரல்வளத்தை பார்த்து, இசையமைப்பாளர் ஜெரோம் புஷ்பராஜிடம் அறிமுகப்படுத்தினார். அவர் சில படங்களில் பாட வாய்ப்பு அளித்தார். அதன்பிறகு கிரேஸ் குழுவினருடன் சேர்ந்து மேடை கச்சேரி, ரகளைபுரம் படத்தில் டூயட் பாடினேன்.சலீம் படத்தில், 'சம்போ சிவ சம்போ', ரஜினி முருகன் படத்தில் 'ஆவி பறக்கும் டீக்கடை'சேதுபதி,சண்டிவீரன், தாரை தப்பட்டை என பயணம் தொடர்ந்தது. இதுவரை 150 பாடல் பாடியுள்ளேன். 2016ல் மட்டும் 40-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளேன்.வாய்ப்பு தேடி வரும் போது, இசையமைப்பாளர்களிடம் 'பனைமரத்து மேலே பதநீர் இறக்க போகிறேன்' என்ற கிராமிய பாடலைத்தான் பாடி காட்டுவேன். தற்போது முறைப்படி சங்கீதம் கற்று வருகிறேன், என்றார்.இவரை பாராட்ட 97512 46045.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement