Advertisement

சீமைக் கருவேல மரங்களை அகற்ற வருவாய்த்துறை நோட்டீஸ்

காட்பாடி: தனியார் நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை, 15 நாளில் அகற்றும்படி அதன் உரிமையாளர்கள், 4,000 பேருக்கு, வருவாய்த் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்றும்படி, சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, அனைத்து இடங்களிலும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது.
வேலூர் மாவட்டம் முழுவதும், மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. காட்பாடி தாலுகாவில், 100 ஏக்கரில் வளர்ந்துள்ளன. இதில் பெரும் பாலான நிலங்கள் தனியாருக்கு சொந்தமானவை.
அந்த வகையில், காட்பாடி தாலூகாவில், 86 கிராமங்களில், தனியார் நிலங்களில் உள்ள மரங்களை, 15 நாளில் அகற்றும்படி அதன் உரிமையாளர்கள், 4,000 பேருக்கு, வருவாய்த்துறையினர் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement