Advertisement

மிரட்டுவது ரொம்ப ஈசி - வில்லன் வாய்ஸ்...

தாடி, முறுக்கு மீசை, மிரளவைக்கும் பார்வை கொண்ட சினிமா நடிகர் டி.எம்.ஜெ.ராஜசிம்ஹன். இவர் ராமர், தமிழ்படம், கோ, வேட்டை, கோழி கூவுது, அழகன் அழகி, குட்டிப்புலி, பாயும்புலி, என்னை அறிந்தால், காஞ்சனா -2, கொம்பன் என 40க்கும் மேற்பட்ட சினிமாக்களில் வில்லன் 'கேரக்டரில்' அசத்தியுள்ளார்.தேனி வந்த அவரிடம் சிரிப்பு கேள்விக்கும் வில்லத்தனமான பதில்கள் வந்தன.* சினிமா வாய்ப்பு...வேலை தேடி சென்னைக்கு சென்றேன். ஓட்டல் நடத்தியபோது, நண்பர் ஒருவரால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.*'ஹேர்ஸ்டைல்' ரகசியம்?வில்லன் கேரக்டருக்கு பரட்டை தலை தான் பொருந்தும். இதனால் நடித்த பெரும்பாலான படங்களில் தலைமுடி வாரியது இல்லை. இயக்குனர் வற்புறுத்தியதால் 'என்னை அறிந்தால்' படத்தில் மட்டும் முடிவாரி நடித்திருப்பேன்.* நடித்ததில் பிடித்தது?நடித்த படங்கள் அத்தனையும் பிடிக்கும். குறிப்பிட்டு சொல்ல முடியாது.* பிடித்த ஹீரோ?சிறுவயதில் இருந்தே நடிகர் சூரியாவை பிடிக்கும்.* காமெடி நடிப்பு?அது சுட்டுப்போட்டாலும் எனக்கு வராது. காரணம் பிறரை சிரிக்க வைப்பது கடினம்... மிரட்டுவது எளிது...* 'ஹீரோ' ஆசை உள்ளதாஇல்லை. எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பேன்.* கைவசம் உள்ள படங்கள்ஆரியா நடித்த கடம்பன், புதுமுக ஹீரோ மவுலியுடன் அரசகுளம், நெருப்புடா போன்ற படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது.* பிற மொழி படங்கள் நடித்துள்ளீர்களா......இல்லை. இந்தி படத்தில் நடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை உள்ளது. வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.* லட்சியம் என்ன...சொந்த படம் தயாரிக்க ஆசை. கதை கைவசம் 'ரெடி'யாக உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Sundar - singapore,சிங்கப்பூர்

    சின்ன பசங்கள கொலை பண்ற மாதிரி நடிக்காதிங்க உங்களுக்குனு சில தரமான கொள்கைகளை கடை பிடியுங்கள்..

  • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

    தரமாக நடிக்கவும் .வாழ்த்துக்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement