Advertisement

காதல் கண்ணை கட்டுதே - இயக்குனர் சிவராஜ்

''பார்த்து, பார்த்து ரசித்து விறுவிறுக்க காதலை சொல்றவங்கதான் அதிகம் இருக்காங்க. அப்படியும் இதயங்கள் சொல்ல நினைப்பதை இதழ்கள் சொல்லாமல் மறைப்பதால்தான் காதல் இன்னும் தோற்றுக் கொண்டிருக்கிறது? இங்கு காதல்ங்கிறது கடவுள் மாதிரி, எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைஞ்சிருக்கு'' என்கிறார், சினிமாவை காதலித்த அறிமுக இயக்குனர் சிவராஜ். முதல் படத்துலயே 'காதல் கண்ணை கட்டுதே' என கதை கூறுகிறார்.* காதலன் பற்றி... ஸாரி, உங்களை பற்றி?நானும் காதலன் தானுங்க. சினிமா காதலன். பி.எஸ்.சி., விஷூவல் கம்யூனிகேஷன் படிச்சிருக்கிறேன். சொந்த ஊரு கோவை. பள்ளி படிப்பின்போதே சினிமாவில் எனக்கு ஆர்வமாக இருந்தது. காலேஜ் படிக்கிற காலத்துல குறும்படங்கள் இயக்கியிருக்கேன். அந்த ஆர்வம் தானுங்க என்னை அப்படியே... இங்கே கொண்டாந்தது.* முதல் படம்...?'என் அன்பிற்குரியவளே'. அது ஒரு குறும்படம்ங்க. நிறைய குறும்பட போட்டியில் அதற்கு பரிசும் கிடைச்சுது. கல்லுாரி மாணவர்களிடம் நல்ல 'ரெஸ்பான்ஸ்' கிடைத்தது. அப்படியே அந்த கதையை பெரிசா திரைப்படமா இயக்கலாம்னு தோணுச்சு... அப்ப உருவானது தான் 'காதல் கண் கட்டுதே' படம்.* சினிமா வாய்ப்பு எப்படி?வாய்ப்பை தேடி நான் போகலைங்க. எங்க பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து 'கோவை பிலிம்மெட்'னு ஒரு கம்பெனி ஆரம்பிச்சோம். அதுல நிறைய குறும்படங்கள் இயக்கினோம், எடிட்டிங், ஒளிப்பதிவு பண்ணினோம். அதுல கிடைச்ச பணத்தை வச்சுதான் படமே எடுத்தோம். * முதல் படமே காதலா?காதல் இல்லாத இடம் எங்கேயாவது இருக்குதா. எல்லாருக் கிட்ேடயும், எல்லா இடத்திலேயும் காதல் இருக்குங்க. இலக்கியங்களிலும், சினிமாக்களிலும்... ஏன், நம்ம வாழ்க்கையே காதல், வீரத்தின் களம்தான் என்பதுதானே உண்மை.* காதல் கண் கட்டுதே... படம் எப்படி வந்திருக்கு?'டைட்டிலை' பார்த்து நீங்களே கண்டுபுடிச்சிருப்பீங்க. நல்ல காதல் கதை. அதுல 'காமெடி, கலாட்டா, சாங்க்ஸ்' என தேவைக்கேற்ப மிக்ஸ் பண்ணி புதுசா, ரொம்ப பிரஷ்ஷா உருவாக்கியிருக்கோம். அதனால இளைஞர்கள் மட்டுமில்லே... குடும்பத்தோடு சேர்ந்தே பார்க்கலாம்.* ஹீரோ, ஹீரோயின் யாருங்க?எல்லாம் எங்க ப்ரெண்ட்ஸ் தாங்க.* படம் எப்போ ரீலீஸ்?இந்த ஆண்டு காதலர் தினப் பரிசே நம்ம படம்தாங்க. காதல் மாசத்துல தான் ரீலீஸ் பண்றோம்.* சினிமா கனவில் இருப்பவர்களுக்குகனவு காணுறது தப்பில்லைங்க. சினிமா கனவுல இருக்கும் தம்பிங்களா, அண்ணன்களா... உங்ககிட்ட திறமையும், விடாமுயற்சியும், ஆர்வமும் இருந்தா... சினிமா மட்டுமல்ல... எந்த துறையா இருந்தாலும் நிச்சயம் வெற்றி நமதே, என்றார்.இவரை வாழ்த்த Shivarajrsgmail.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement