Advertisement

நான் பெண்ணியவாதி அல்ல - நடிகை ரோகிணி

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. குழந்தை நட்சத்திரமாக, கதாநாயகியாக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக என பன்முக திறமை கொண்டவர். சமீப காலமாக மாணவர்கள் சார்ந்த நிகழ்வுகளில் அதிகம் பங்கேற்று வருகிறார்.ராமநாதபுரம் அருகே கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் பெண்கள் கல்லுாரி முன்னாள் மாணவர் சந்திப்பு விழாவில் பங்கேற்றவரின் பளீச் பேட்டி:திருமணம், குழந்தை என்று இல்லாமல் அதையும் தாண்டி சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கு வேண்டும். அதற்காக ஆண்களை புறக்கணிக்க வேண்டியது இல்லை. அவர்களின் துணை பாதுகாப்பு, பக்கபலம் இல்லாமல் நாம் எதையும் சாதிக்க முடியாது.என்னை நிறைய பேர் 'ஒரு பெண்ணியவாதியாக' சித்தரிக்கின்றனர். அது தவறு. பெண்ணியவாதி என்றால் ஆண்களுக்கு எதிரானவள் என்ற பொருளும் அல்ல.ஆண்களாகிய நீங்கள் எங்களுக்கு முன்னாள் நடந்தால் எங்களுக்கு வழிகாட்டுபவராக இருங்கள். எங்களோடு சேர்ந்து நடந்தால் எங்களுக்கு உறுதுணையாக இருங்கள். எங்கள் பின்னால் நடந்தால் பாதுகாப்பாக இருங்கள். இந்த உணர்வோடு தான் பெண்கள் ஆண்களை பார்க்கிறோம். பெண் உங்கள் பின்னால் நடந்தால் நீ அதற்குத் தான் தகுதியானவள் என்ற ஆணவத்தோடு இருக்க வேண்டாம்.பெண்கள் முதலில் தாழ்வு மனப்பான்மையை ஒழிக்க வேண்டும். அதுதான் உங்களின் முதல் எதிரி. நம்மை, நாமே குறை கூறிக் கொள்வதை நிறுத்துவோம். நாம் செய்ய வேண்டியதை செய்யாமல் போகும்போது தான் எதிர்மறையான சிந்தனை தோன்றும். எனவே செய்ய நினைத்ததை முதலில் செய்து முடித்துவிடுங்கள்.பெண்கள் தங்கள் அழகிற்காக செயற்கையாக முகப்பொடிகளை பூசினால் மட்டும் அழகு வந்துவிடாது. தினமும் 40 நிமிடம் முறையான உடற்பயிற்சி செய்தாலே போதும் நாள் முழுவதும் புத்துணர்வு கிடைக்கும், அதுவே உங்களை அழகாக்கும்.பாடத்திற்கு அப்பாற்பட்டு நிறைய புத்தகங்களை படியுங்கள். உலக விஷயங்கள், நடப்புகள், வாழ்க்கை முறைகளை அறியவும், அதன் மூலம் நமது வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண வழி பிறக்கும். நான் ஐந்து வயதில் நடிக்க வந்து விட்டேன். கல்லுாரியில் படித்து பட்டம் பெறவில்லை என்ற வருத்தம் எனக்கு இல்லை. காரணம், நுாலகத்தில் என் அறிவை வளர்த்தேன், வாசிப்பை நேசித்தேன். இந்த வாசிப்பு பழக்கத்தால் தான் உலக விஷயங்களை எல்லாம் பேசும் பேச்சுக்கலை எனக்கு வசமானது.சினிமாவில் நடிப்பு தவிர, ஒரு பாடல் ஆசிரியராக 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே' படத்தில் நான் எழுதிய பாடலில்,“நீதானோ நீதானோ பாரதியின் சொப்பனமே நீதானோ” என்ற வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். 'பச்சக்கிளி முத்துச்சரம்', 'சரிகமபதநீ' படங்களில் பாடல்கள் எழுதி உள்ளேன். எல்லாமே காதல் பாடல்கள் தான்.viji05gmail.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து (3)

  • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

    அருமையான எழுத்துக்கள் , ரோகிணி இப்படி பேசியிருந்தாலும் அதனை உன்னிப்பாய் கவனித்து எங்களுக்கு வழங்கிய விஜிக்கு வாழ்த்துக்கள்

  • swaminathan - london,யுனைடெட் கிங்டம்

    பாராட்டுக்கள் ரோகினி சீரிய கருத்துக்கள், நன்றி,

  • spr - chennai,இந்தியா

    பாராட்டுகள் "ஆண்களாகிய நீங்கள் எங்களுக்கு முன்னால் நடந்தால் எங்களுக்கு வழிகாட்டுபவராக இருங்கள். எங்களோடு சேர்ந்து நடந்தால் எங்களுக்கு உறுதுணையாக இருங்கள். எங்கள் பின்னால் நடந்தால் பாதுகாப்பாக இருங்கள். இந்த உணர்வோடு தான் பெண்கள் ஆண்களை பார்க்கிறோம்" சிறப்பான கருத்துக்கள்.பல ஆண்களும், பெண்களைக் குறித்து இப்படித்தான் நினைத்துப் பார்க்கிறார்கள் என்பதனால்தான் இன்னமும் பெண்கள் வெளியுலகில் வந்து சாதிக்க முடிகிறது ஆண்- பெண் உறவைக் கொச்சைப்படுத்தி, மூளைச்சலவை செய்யப்பட்ட சில ஆண்கள் செய்கிற தவறு எல்லோரையும் பாதிக்கிறது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement