Advertisement

உடலுக்கு சிறுநீரகம்; -உயிர் சூழலுக்கு ஈரநிலம் : இன்று உலக ஈரநில நாள்

நாம் தொலைத்துக் கொண்டு இருக்கும் பல நல்ல விஷயங்களில் ஒன்று ஈரநிலம். இன்றைய நம் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு
ஈரநிலம் அழிப்பு முக்கிய காரணம். ஈரநிலங்களின் தொடர் அழிப்பானது, நமக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீர் ஆதாரத்தை முற்றிலும் சிதைத்துவிடும்.
ஈரநிலங்களைப் பாதுகாப்பது குறித்து 1971 ல் ஈரான் நாட்டின் ராம்சர் நகரில் 18 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூடி விவாதித்தனர். இந்தக் கூட்டம் பிப்., 2 ல் நிறைவுற்றது. ராம்சர் நகரில் இந்தக் கூட்டம் நடந்த தால் இங்கு உருவான அமைப்பு, "ராம்சர் அமைப்பு" என்றழைக்கப்படுகிறது. இந்த அமைப்பில் இந்தியா உட்பட 168 நாடுகள் உள்ளன. இன்று உலகில் 2106 இடங்கள் ஈரநிலங்களாகப் பிர
கடனப்படுத்தப்பட்டுள்ளன. இது உலக மொத்த நிலப்பரப்பில் 205,134,095 எக்டேர் நிலப்பரப்பை உள்ளடக்கியது. உலகின் முழு நிலப்பரப்பில் ஆறு சதவீதம் ஈர நிலங்கள். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஈர நிலங்கள் காணப்பட்டாலும் ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்காவின் பிரேசில் பகுதி மற்றும் அமேசன் நதியை அடுத்துள்ள பகுதிகள் புகழ்பெற்ற ஈரநிலங்கள்.
எவை ஈரநிலம்
நீரும் நிலமும் சேருகின்ற இடங்கள் அனைத்தும் ஈரநிலங்களே. ஊருணி, அணை, குளம், குட்டை, ஏரி, ஆறு, கண்மாய், கழிமுகம், கடலோரம், முகத்துவாரம், உப்பளம், காயல், சேறும் சகதியுமான நிலம் என
அனைத்துமே, ஈரநிலம் என்று அழைக்கப்படுகின்றன. மேலும், கடல் மட்டத்திலிருந்து ஆறு
மீட்டருக்கு குறைவான கடல்சார் பகுதிகளில் ஓடுகின்ற அல்லது தேங்கி நிற்கும் தண்ணீர், நன்னீர், உவர் அல்லது சவர் நீர் போன்றவற்றால், நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ மூழ்கியுள்ள இயற்கையான மற்றும் செயற்கையான பகுதிகள் ஈரநிலமாக
அடையாளப்படுத்தப்படுகின்றன.

ஈரநிலங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது, 1. அருவிகள், ஆறுகள், நீர்நிறைந்து காட்சியளிக்கும் குளங்கள் ஆகியவற்றைக் கொண்டது இயற்கையான நன்னீர் ஈரநிலங்கள். 2. கடற்கரைகள், கற்பாறை கடற்கரைகள், தீவுக் கூட்டங்கள், கடல் நீரேரிகள்
உள்ளிட்டவை அடங்கியது உப்பு நீர் ஈரநிலங்கள். உப்புப் பாத்திகளும், நெல் வயல்களும், வயல்களுக்கு நீர் தரும் நீர்த் தேக்கங்களையும் உள்ளடக்கியவை மனிதனால் உருவான ஈரநிலங்கள்.
பயன் என்ன
ஈரநிலங்கள்தான் நமது குடிநீருக்கான ஊற்றுக்கண். அதே நேரத்தில் சுனாமி, புயல், போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பினையும் அவை குறைக்கின்றன. வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் தடுக்கின்றன. புயல்காலங்களில் ஏற்படும் கரையோர மண்ணரிப்பைத் தடுக்கிறது. நீரைத் துாய்மையாக்குதலிலும் ஈரநிலங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. மேற்பரப்புநீர்களில் கரைந்துவரும் கனியங்களை நீக்கும் ஒரு வடிகட்டியாக இது செயல்
படுகிறது. இதனால் நிலத்தடி நீரின் தரம் காக்கப்படுகிறது. ஒரு பிரதேசத்தின் இடம்சார் காலநிலை, நுண் காலநிலை ஆகியவற்றின் தன்மைகளை பேணுவதிலும் ஈரநிலங்களுக்கு முக்கிய பங்குண்டு. இதனால் மிதமான வெப்பநிலை நிலவுவதற்கு வழிவகுக்கிறது.
புகலிடங்கள்
ஈரநிலங்கள் பல்லுயிரினங்களின் புகலிடமாகவும் திகழ்கின்றன. மீனினங்கள், பாலுாட்டிகள், ஈரூடக வாழிகள், ஊர்வன போன்ற உயிரினங்களும், பறவைகளும் ஈரநிலங்களில் அதிகம். காரணம், இவற்றுக்குத் தேவையான உணவு இங்கு
தாராளமாகக் கிடைக்கிறது. மண்ணில் காற்று குறையும் போது அதை ஈடு செய்வதற்கான தாவரங்கள் இந்த ஈரநிலங்களில் உண்டு. ஈரநிலங்களின் பயன்பாடு அனைத்துமே சூழலுக்கும் மனிதனுக்கும் இன்றியமையாதவை.
பாதிப்பு
விதவிதமான புல் செடிகள், அரிய வகை மரங்கள், நீர் நிலைப் பறவைகள், குறிப்பிட்ட விலங்குகள் என அனைத்தும் ஒருங்கிணைந்து வாழும் பகுதியாக ஈரநிலங்கள் உள்ளன. நகரமயமாக்கலுக்காக ஈரநிலங்களிலுள்ள காடுகள் துவம்சம் செய்யப்
படுகின்றன. வேளாண் உற்பத்தி அதிகரிப்புக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள், அணைகள் உள்ளிட்ட கட்டுமானத் திட்டங்களும், சுற்றுலா தலங்களை உருவாக்குதல், ரியல் எஸ்டேட் தொழில் ஆகியவையும் ஈரநிலங்களின் அழிவுக்கு அடிகோலுகின்றன. கழிவுநீர் கலத்தல் மற்றும் ரசாயனக் கழிவுகள், குப்பைகள், தொழிற்சாலைக் கழிவுகளைக் கொட்டுதல் போன்றவற்றால் சூழல் பாதிக்கப்படுவதோடு ஈர
நிலங்களும் அழிகின்றன.பாலாறு (வடிநிலத்தின் பரப்பு 18,300 ச.கி.மீ), வராகநதி (தமிழகத்தில் மட்டும் 4214 ச.கி.மீ.,), பொன்னாறு, பரவனாறு, வெள்ளாறு என எத்
தனையோ வடிநிலங்கள் நகர விரிவாக்கம் என்ற பெயரில் சிக்கலுக்குள்ளாகிஉள்ளன. இவ்வளவு பரப்பும் சிதைவுறும் போது, என்னவெல்லாம் நிகழும் என்ற
கற்பனையே பதற வைக்கிறது.இதில் பாலாறு, வெள்ளாறுகளின் நிலைமை படுமோசம். கல்பாக்கத்தின் அணுத்தொழில் வளாகங்கள் பாலாற்றின் முகத்துவாரத்தில் தான் அமைந்துள்ளன. கல்பாக்கத்தின் நன்னீர் ஆதாரமும் பாலாறு தான். பாலாற்றை நம்பியிருந்த 620 ஏரிகள் மற்றும் 320 கால்வாய்கள் வறண்டுவிட்டன. இவைகளையெல்லாம் எப்படி மீட்டெடுக்கப் போகிறோம்?
பறவை வாழிடம்
இன்றைக்கு பறவைகள் சரணாலயம் சிலவற்றில், பெயர் பலகையை மட்டும்தான் காணமுடிகிறது. பறவைகள் இருப்பதில்லை. ஈரநிலங்களை அழித்ததன் விளைவு இது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பாலாற்றை நம்பித்தான் இருக்கிறது. உள்நாட்டு, வெளிநாட்டுப்
பறவைகளின் வாழிடம் இது.'பயோ டைவர்சிட்டி' எனப்படும் உயிரி பன்மியம் பெருக ஈர நிலங்களே காரணம். ஈரநிலங்கள் பாழ்படுத்தப்படுவதால் பயோ டைவர்சிட்டி அழிந்து போகிறது. ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தும்முன், 'பயோ டைவர்சிட்டி' மதிப்பீடும் கருத்தில் கொள்ளப்படவேண்டும். அதைப் பொருளாதார ரீதியில் லாப, நஷ்டமா என்றும் பார்ப்பது அவசியம். உதாரணத்துக்கு ஒரு ரயில் பாதை அமைக்கப்படும்போது அதனால் கிடைக்கும் பொருளாதார லாபத்தினை, 'பயோ டைவர்சிட்டி' அழிவதால் ஏற்படும் பொருளாதார இழப்போடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். இப்படி, ஒரு திட்டத்தை அணுகும்முறை நம்நாட்டில் கர்நாடக மாநிலத்தில்
மட்டுமே இருக்கிறது.
என்ன செய்யலாம்
உலகின் மிக முக்கிய வளமையங்களில் ஒன்று ஈரநிலங்கள். உடலுக்கு சிறுநீரகம் போல உயிர் சூழலுக்கு ஈரநிலங்கள் அவசியம். உணவுச் சங்கிலி அறுபடாமல் இருக்க ஈரநிலங்கள் தேவையாக இருக்கின்றன. இயற்கையின் சமநிலையைப் பேணுவதற்கும், நாட்டின் வளத்தை மேம்படுத்துவதோடு அதிலுள்ள தாவரங்களையும் உயிரினங்களையும் பாதுகாப்பதற்கும் ஈரநிலங்களைக் காப்பது அவசியம். அதற்கு முதலில் நாம், ஈரநிலங்களை அடையாளம் காணவேண்டும். பின்னர், ஈரநிலங்களை அழிவிலிருந்தும் தரம் குறையாமலம் பாதுகாக்க வேண்டும். தரம் குறைந்த, நிலங்களை மீட்டு, மீண்டும் அவற்றின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். சட்டரீதியான நட
வடிக்கை மூலம் ஈரநில அழிவைத் தடுக்கவேண்டும்.சூழல் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் வீட்டு மனைகளாகவும், குப்பை கொட்டும் இடமாகவும், தொழிற்சாலை கழிவுகளை கலக்கும் இடமாகவும், பேருந்து நிலையமாகவும், வணிக
வளாகங்களாகவும் மாறுவற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.தமிழகத்தில் நீர், நிலப் பகுதிகள் முறைப்படுத்தப்படாமல் உள்ளன. நாமும் அதுகுறித்துக்
கவலைப்படுவதில்லை. காரணம், ஈரநிலங்கள் குறித்து சரியான விழிப்புணர்வும் புரிதலும்
நம்மிடம் இல்லை. இப்படி ஈரநிலங்களையெல்லாம் தொடர்ந்து அழித்து வறண்ட பூமியை உருவாக்கினால், வரும் தலைமுறையினருக்கு இருண்ட காலத்தைத்தான் விட்டுச் செல்வோம். நிலையான வாழ்வாதாரத்தை நோக்கி எதிர்கால தலைமுறைக்காக ஈர நிலங்களை பாதுகாப்போம். பூமியானது சிறந்த வாழ்விடமாக பரிணமிக்க, ஈரநிலங்களைக் காப்பது ஒன்றே வழி.
-ப. திருமலைபத்திரிகையாளர், மதுரை84281 15522

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement