Advertisement

ஞாபக மறதி நோயால் கருணாநிதி அவதி: இயல்பு நிலைக்கு திரும்புவது எப்போது?

ஞாபதி மறதி, பேச்சு திறன் இன்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள, தி.மு.க., தலைவர்
கருணாநிதிக்கு, 'ஸ்பீச் தெரபி' சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, சில மாதங்களுக்கு முன், உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க, தொண்டையில் துளையிட்டு, 'டிராக்கியோஸ்டமி' சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, அவர் கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருக்கிறார்; மருத்துவ சிகிச்சை தொடர்கிறது. மூன்று டாக்டர்கள், செவிலியர்கள் கண்காணித்து வருகின்றனர்.
கருணாநிதியை பார்க்க விரும்புவோருக்கு, கண்ணாடி கதவு வழியாக பார்க்க, அனுமதி வழங்கப்படுகிறது. பார்க்க வரும் கட்சி பிரமுகர்களின் பெயர், அங்குள்ள வருகை
பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது.

'ஸ்பீச் தெரபி' சிகிச்சை
தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: வயோதிகம் காரணமாக, ஞாபக மறதி, கருணாநிதிக்கு அதிகம் உள்ளது. பேச்சும் குறைந்துள்ளது. அதனால், 'ஸ்பீச் தெரபி' சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், ஞாபக மறதியை குணப்படுத்துவதற்கான சிகிச்சையும் தரப்படுகிறது.
அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க பொருத்தப்பட்டிருந்த, குழாய்கள் அகற்றப்பட்டுள்ளன.

மூன்றுநாட்களுக்கு முன், அவரை மாடியிலிருந்து கீழ் தளத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது, அங்கு இருந்த குடும்ப உறுப்பினர்களை பார்த்து, கருணாநிதி சிரித்துள்ளார். ஆனால், பேச முடியவில்லை.
அவரை தனிமையில் இருக்க விடாமல், நெருக்கமானவர்களை சுற்றி இருக்க செய்துள்ளனர். பழைய நினைவுகள் குறித்தும், சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றியும், கருணாநிதியிடம் பேசினால், அவர் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது என, டாக்டர்கள் கருதுகின்றனர்.

மற்றபடி அவரது உடல் நலத்தில், எந்த குறையும் இல்லை. பேச்சு திறனும், ஞாபகமும் வந்து விட்டால் போதும், அவர் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (275)

 • Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ

  எப்போது அவருக்கு ஞாபகசக்தி இருக்கவேண்டுமோ அந்த காலகட்டத்தில் இல்லாதுபோனது வருந்தத்தக்கதே.

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  யோவ் நீ ஏதாவது எக்குத்தப்பா செய்து வைக்க போற, அதுவே உங்கூர்க்காரி தேர்தல்ல நிக்கறதுக்கு வசதியா போயிரும்

 • Alagar Sokkar - Dindigul,இந்தியா

  NAM THALAIVAR NALAMUDAN VALAVUM....ATHUDAN EN ARASIYAL THALAIVAR ANCHA NENCHANUM KATCHI PATHAVIKKU VARAVUM.

 • adalarasan - chennai,இந்தியா

  பாபநாசம் சிவன் அவர்கள் ஒருபாட்டில்" வௌவுறு மனிதனும் செயல் இழந்து ஒரு நாள் கடைசியில் ஆகும்போது "சிவன் நாமம் " வாயில் வராது, ஆகையால் மட மனமே இப்பொழுதே சிவன் நாமம் சொல்லி பழகு என்று " பாடினார் அந்த பாட்டு ஏன் தானோ என் நினைவிற்கு இங்கு வருகிறது?

 • Meenu - Chennai,இந்தியா

  யப்பா யாரவது அய்யாவிடமிருந்து கடனா பணமேதும் வாங்கி இருந்தீர்களா? நீங்கள் திருப்பி கொடுத்தால் வாங்க மாட்டார் ஞாபக மறதியால்

 • adalarasan - chennai,இந்தியா

  "மானிடனே நீ [திருந்துவது],மாறுவது எப்போ" என்ற தேசியாவினாயகள் பிள்ளை அவர்களின் பாட்டு ஞாபகம் வருடு...? இனிமே உடல் நிலை மாறாது? மறதி அதிகமாக இருந்தால் சரி ஆகாது ? வயது ஆகிவிட்டது? பல மாதங்களாகவே இப்படித்தான் பாவம் ? உறுதிமொழி சட்டசபையில் எடுத்துக்கொண்ட போதே, 2 பேர் உதவி தேவைப்பட்டது நல்ல வேலை சிறப்பு நாற்காலி எல்லாம் தயார் செய்யவில்லை?

 • ramaswamy - PUDUCHERRY ,இந்தியா

  வல்லாரை கீரை சாப்பிட்டால் ... மறதி நோய் காணாமல் போய்விடும்

 • S.V.RAMAN - CHENNAI,இந்தியா

  ஒருவரிடம் இருக்கும் நற்பண்புகளைமட்டும் எடுத்துக்கொள்வோமே அவரின் தமிழ் புலமையும் ஓயா உழைப்பும் நமக்கு நினைவுக்கு வரட்டுமே

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  அல்சைமருக்கு மருந்து இருந்தாலும் மூப்பு காரணமாக குணமடைவதில் சிக்கல் இருக்கும்.

 • abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா

  நண்பர்களே ஒரு நிமிடம் ஒதுக்கி இதை படித்து கண்மூடி நினைத்து பாருங்கள் இன்றய நாட்களில் ஊழல் இல்லாத கட்சியோ தலைவர்களோ மிக அரிது அப்புறம் இவர் மட்டும் எப்படி உங்களுக்கு மிகையாக தெரிகிறார் ? இவர் ஊழல் செய்தவர் தான் ஆனால் இவர் காலத்தில் கொண்டுவரப்பட்ட காலத்திற்கும் நிலைத்து நிற்கும் திட்டங்களை வேறு எந்த முதல்வரும் கொண்டு வரவில்லை , 10 ரூபாய்க்கான திட்டத்தில் 5 இவர் பாக்கட்டிற்கு போய் இருந்தாலும் மீதி ஐந்தில் ஒரு உருப்படியான திட்டம் முழுமையாக கிடைத்துவிடும் , வெறும் இலவசங்களை மட்டுமே தந்த ஆட்சியாக தான் இருந்தது ஜெயலலிதாவின் ஆட்சி அவரால் தனது 4 ஆட்சிகளில் கடந்த இருப்பது ஆண்டுகளில் எந்த ஒரு நீண்டகால பயனளிக்கும் திட்டத்தையும் தமிழ் நாட்டிற்கு தர முடியவில்லை வெறும் காட்சி அரசாக மட்டுமே இருந்தது ஆனால் இன்றும் பய தரக்கூடிய வலுவான திட்டங்களை தந்தவர் இதே ஊழல் வாதி கருணாநிதி தான் , இன்றைக்கு பொதுப்பணித்துறை கட்டிடமும் சரி பள்ளி கூட கட்டிடங்களும் சரி நன்றாக ஒவ்வொரு ஊருக்கும் சென்று பாருங்கள் திமுக ஆட்சியில் என்றுதான் அவற்றின் கல்வெட்டுகள் சாட்சியம் அளிக்கும் முதல்வராக இவர் பெயர் தான் இருக்கும் , தொழிற் பேட்டைகளை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொண்டு வந்தது இவர் தான் , ஏழைப்பெண்கள் திருமண உதவி திட்டம் , 108 அவசர ஆம்புலன்ஸ் திட்டம் , உயிர் காப்பீட்டு திட்டம் , டைட்டல் பார்க் , வள்ளுவர் கோட்டம் , கடலுக்கு நடுவே கன்னியாகுமரியில் உள்ள வள்ளுவர் சிலை , சேலம் உருக்காலை, போன்றவை இவர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சில முக்கியமான காலத்தால் அழியாத சாதனைகள் , குடும்பம் இல்லாதவரே ஊழலில் திளைத்து யார் யாருக்கோ அத்தனை சொத்துக்களையும் சேர்த்து தந்துவிட்டு போனபோது தனக்கும் தன பிள்ளைகளுக்கும் என இவரும் ஏராளமான சொத்துகளை சேர்த்து விட்டார் , இவரும் இலவசம் கொடுத்தார் இவர் கொடுத்த டிவி இன்னமும் ஓடிக்கொண்டு உள்ளது ஆனால் அம்மையார் கொடுத்த எந்த பொருளும் வீடுகளில் ஓடவில்லை காயலான் கடையிலும் ஆந்திர சந்தைகளிலும் ஓடின , ஊழலை மட்டுமே செய்து கொண்டு செட்டிலான தலைவர்களுக்கு மத்தியில் மக்களுக்கான நிலையான நீண்டகாலத்திற்கு உபயோகம் ஆகும் நிறைய திட்டங்களையும் கட்டிடங்களையும் தந்து தானும் செட்டிலாகி இருக்கிறார் , தமிழகம் எங்கும் குறிப்பாக போக்குவரதத்தால் தினமும் முடங்கிய சென்னைக்கும் என மேம்பாலங்களையும் தந்தவர் இந்த ஊழல் வாதிதான் , மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை தந்ததும் இவரே இதை ஜெயா அவர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முடக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் சென்னைக்கு இன்னொரு வரப்பிரசாதம் கிடைத்திருக்கும் இப்போது நீதிமன்றத்தின் கண்டிப்பால் தாமதமாக தொடங்கியும் மேற்கொண்டு பணி நடக்காமல் அப்படியே நிற்கிறது , இவை அல்லாது இவரின் நினைவாற்றல் இனி யாருக்கும் வராது அப்படிப்பட்டவர் இன்று தனது நினைவை இழக்கிறார் என்றால் இது அரசியல் கடந்து அனுதாபப்படவேண்டிய மனிதாபிமானம் , ஜெயா அவர்களை திட்டியவர்கள் எல்லாம் இறந்த உடன் அவரின் பெருமை பேசினோம் இப்போது இவருக்கும் அதே நிலை என்றால் இவர் சீக்கிரம் மறைந்தால் தான் இவரின் சாதனைகள் உங்களுக்கு தெரிய வரும் என்றால் செத்த பின்பு நீலிக்கண்ணீர் வடிக்கும் சராசரி மனித கூட்டம் தான் போல நாம் எல்லோருமே. 9 நாளில் 9 ஆண்டுகளில் ஊழல் செய்து திடீர் பணக்காரன் ஆகும் அரசியல்வாதிகள் மத்தியில் 90 வயது வரை மக்களுக்கான நிலையான திட்டங்களை தந்து விட்டு ஊழல் செய்த இவர் மிகையாக தெரிகிறார் என்றால் ஊழலில் கூட ஒருவரிடம் சமாதானமும் இன்னொருவரிடம் வெறுப்பும் காட்டும் நம்மை போல சந்தர்ப்பவாதிகள் இல்லை. அவர் வயது வரை நாம் இருப்போமா என தெரியாது நம் காலத்திலும் நமக்கு முந்தய காலத்திலும் அவரை நினைவில் வைக்க அவர் கொண்டுவந்த காலத்தால் அழியாத நிலையான திட்டங்களே சாட்சி , பிறக்கும் எவ்வுயிரும் படைத்தவன் காலடியில் சென்று சேரத்தான் வேண்டும் அய்யா நீங்கள் உங்கள் உயிர் இருக்கும் வரை நினைவாற்றலோடு இருந்து இறைவனடி சேர பிரார்த்திக்கிறேன்.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  எவ்வளவோ தகிடுதித்தங்கள், தில்லு முள்ளுகள், உலக மகா கொள்ளை என்று வர்ணிக்கமுடியாத அளவுக்கு குற்றவேலைகள் செய்தவர். அடுத்து கெடுப்பவர், இன்று தமிழகம் தடுமாறுவதற்கு அடிக்கோல் ஊன்றியவர், அரசியல் சாணக்கியன். முன்னுக்கு பின் தடம் மாறி பேசுபவர், மக்களை வளர்ச்சிக்கு பதில் தனது குடும்ப வளர்ச்சியை பெரிதும் முக்கியத்துவம் கொண்டவர் , பல தாரம் மணந்தவர், திருமதி, துணைவி என்று பெரிய பட்டியலே இவருக்கு உண்டு. இது இவரின் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் . 93 வயதுவரை நினைவு தப்பாமல், சிறந்த ஞாபக சக்தி கொண்டவர், மக்களின் மனோ நிலையை நன்கு உணர்ந்தவர், தமிழ் ஆர்வலர், இலக்கியங்களை நன்கு படித்தவர், கூட இருப்பவர்களை நன்றாக அனுசரித்து போகும் திறமைசாலி. விடா முயற்சியாளர், இந்தியாவில் மூத்த அரசியல்வாதி. அரசு ஆட்சியில் ஊறி திளைத்தவர் குண்டூசி முதல் கோபுரம் வரை அரசு துறையின் அனைத்து விபரங்களும் அத்துப்படி ஆனவர் . எங்கே தட்டினால் என்ன நடக்கும் என்பதை நன்கு உணர்ந்தவர் . அரசாங்க யந்திரங்கள் அனைத்தும் கற்று தெரிந்தவர் , தனது தமிழ் புலமையினால் மக்களை கட்டிப்போட்டவர், இத்தனை தகுதிகள் இருக்கும் இவர், தனது திறமைகளை தமிழக மக்களுக்கு சாதகமாக திருப்பி இருந்தால் தமிழகமே இன்றைக்கு உலகத்துக்கு வழிகாட்டியாக இருந்திருக்கும்.

 • Sharvintej - madurai,இந்தியா

  கட்சி பணி, எம்.எல்.ஏ பதவியில் இருந்து முற்றிலும் ஓய்வு கொடுங்கள். அதுதான் அவருக்கு இப்போது தேவை.

 • Babu Amidaala - Atlanta,யூ.எஸ்.ஏ

  Vetka kedu , ithula CM aga vendumam, People of that constituency made a mistake by electing this old old old person.

 • Gunasekar - hyderabad,இந்தியா

  மு க வின் உழைப்பு, சாதுரியம் , அவர் அடைந்த இன்னல்கள் ..........அவரிடம் நம் வரும் ஜெனெரேஷன் கற்று கொள்ள வேண்டிய பண்புகள் நிறைய..... அவர் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக ..

 • ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா

  //பழைய நினைவுகள் குறித்தும், சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றியும், கருணாநிதியிடம் பேசினால், அவர் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது என, டாக்டர்கள் கருதுகின்றனர். // எத்தனை ஊழல்கள் இருக்கிறது.. பல காலம் பேசலாம்

 • Karuppusamy Subbya - Chennai,இந்தியா

  நான் வேறுபட்டு இருந்தாலும் அவரு சீக்கிரம் குணம் ஆகி வரணும்

 • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

  . கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு விரைவில் பேச்சு திறனும், ஞாபகசக்தியும் வந்துவிடவும், விரைவில் உடல் நலம் குணமடையவும் வாழ்த்துகிறேன். THINAKAREN KARAMANI.

 • Ambika. K - bangalore,இந்தியா

  கண்ணாடி கதவு வழியாக பார்க்க 500 ரூபாய் சேர்ந்து செலஃபீ எடுத்துக்கொள்ள 5000 ரூபாய் என்றால் கலைஞருக்கு திருட்டு ரயில் தொடங்கி அண்ணாவிடம் மோதிரம் ஆட்டையை போட்டது வரை நினைவிற்கு வந்துவிடும்

 • Jawahar Manickam - Melbourne,ஆஸ்திரேலியா

  விரைவில் நலமடைய கடவுளை பிரார்த்திக்கிறேன் ,வாழ்க நலமுடன் ..

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளை மற்றும் ஹிட்லர் மூளைகளை ஆராய்ந்தது போல் இவரது மூளையும் பின்னால் ஆராயவேண்டும். இவர் மாதிரி ஒரு அரசியல் மூளையை பார்க்கவே முடியாது.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  90 வயது தாண்டியதன் அடையாளம் தான் இது. இது எல்லோருக்கும் நடைபெறுவது தான் ஒரு சிலர் தான் மிக் நல்ல சிந்தனையுடன், நல்ல குரல் வளமுடன், நல்ல ஞாபக சக்தியுடன் இருப்பர்.

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  நினைவாற்றலுக்குப் பெயர் போனவருக்கு மறதி வியாதியா?...இதுதான் காலத்தின் கொடுமை....தலைவரே, உங்களை பரிகசித்து நானுமே பல பதிவுகளை இட்டுள்ளேன்...ஆனால் உங்களுக்கு மறதி வியாதி என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க இயலவில்லை.....அந்த தக்ஷிணாமூர்த்தி உங்களை காத்தருளட்டும்.....

 • Joe - Trichy,இந்தியா

  எத்தகைய மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், மூப்பு நோயால் அவதிப்படுபவரை, அவதூறாக நாம் பேச கற்று கொண்டிருப்பதுதான், இன்றைய அரசியல் கட்சிகள் நம்முள் ஊன்றியிருக்கும் விஷ விதைகள்...

 • common man - rome,இத்தாலி

  ஜெயலலிதாவை விட இவர் ஒன்றும் கொள்ளை அடிக்கவில்லை. உண்மையான தமிழ் தலைவர் கருணாநிதிதான். அவர் ஆட்சியில் மந்திரிகள் மற்றும் மகள் கொள்ளை அடித்தார்கள். அதை இவர் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டார் இதுதான் இவர் செய்த குற்றம். அதனால் இவரை நல்லவர் என்று சொல்லவில்லை.

 • வாழ்க​ பாரதம் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  சைத்தான்கள் அதிக நாள் வாழும் மற்றவர் குடி கெடுக்க மற்றும் தன்குடும்பம் பெருக. இனி இந்த ஐந்து செத்தாலும் கேடு இருந்தாலும் கேடு நாட்டி நாட்டு நலனுக்கு நாட்டு ஒற்றுமைக்கு.

 • Thulasiraman Ramanujam - Bangalore,இந்தியா

  அடித்த கொள்ளைகளை பற்றி சொல்லுங்கள் எல்லாம் திரும்பிவிடும்

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  காலம் முடிந்தால் போய் சேர வேண்டும் , தன் உடலுக்கு தானே பாரமாகிவிடக்கூடாது. இந்த நாட்டிற்கு , சமுதாயத்திற்கு செய்த பாவங்கள் தீர சிவ சிவ என்று சொன்னால் பலன் உண்டு.

 • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

  ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டையும் கொள்ளை அடித்தவர்தான் இந்த கட்டுமரம் .அதுமட்டுமல்ல காங்கிரசுடன் கைகோர்த்து இந்தியாவில் பெரிய ஊழல் மன்னன் ஆனார் .3 லட்சத்துக்கு மேல் தமிழ் ஈழத்து தமிழரின் இனப்படுகொலைக்கு காங்கிரசுடன் சேர்ந்த சூட்சியாளன்.தனது குடும்ப ஆட்சியை நடத்தும் ஒரு போலி ,பொய் அரசியல்வாதி MGR தி மு கவை விட்டு விலகியபோது சொன்ன கருத்துக்களை மக்கள் நினைவாக வைத்திருந்தால் நல்லது .இப்ப மகன் பணம் கொடுத்ததும் ஆட்சி பிடிக்கமுடியவில்லை என்ற கவலைதான் இந்த மஞ்சள் துண்டுக்கு .தமிழ்நாட்டை தமிழன் ஆளும் நேரம் வந்துவிட்டது .தி மு க வை ஆந்திராக் காரன் வழிநடத்தும்போது இனிமேல் ஆட்சியை பிடிக்கமுடியாது .பன்னீர்செல்வத்தின் ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் எவ்வளோவோ சூழ்ச்சி செய்கிறார் அப்பனின் வழியில் மகன்.அம்மாவுக்கு செய்த துரோகம் கொஞ்சம் அல்ல.

 • Bala Subramanian - Chennai,இந்தியா

  அரசியல் வேறுபாடுகளுக்காக கடுமையாக விமர்ச்சிக்காதீர்கள்.

 • Bala Subramanian - Chennai,இந்தியா

  விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்............

 • Vikky - Singapore,சிங்கப்பூர்

  யார் எப்படி எள்ளி நகையாடினாலும் , தலைவர் கலைஞர் நலமுடன் வாழ்வார்

 • Vasanth Kumar - Chennai,இந்தியா

  எல்லாம் வல்ல இறைவன் அருளால் பூரண நலம் பெற வேண்டுகிறேன்

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  மொதல்ல கட்டுமரத்தோட ரெண்டாவது பொண்டாட்டிக்கு மறதிநோய்னு உட்டாங்க. இப்ப கட்டுமரத்துக்கு மறதிநோய்னு உடுறானுங்கோ, இதுல எதோ உள்குத்து இருக்குறமாதிரி தெரியுது. கொள்ளையடித்த ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாயா அப்டின்னா என்னனு கேட்கப்போறாரு பாருங்கோ.

 • thiru - Chennai,இந்தியா

  எல்லாம் போச்சா ??? கோவிந்தா.. கோவிந்தா...

 • Ganesh - chennai,இந்தியா

  I pray that our Dear Kalaingar gets well soon and all his sufferings ends.

 • john - riyadh,சவுதி அரேபியா

  I see here many people are commenting shamelessly inhuman way against this aged man. They think as per them such comments are just and necessary but simply forget that they are exposing their own character being lower than anything as devilish.

 • bal - chennai,இந்தியா

  இயற்கைக்கு எதிராக எதுவும் செய்ய நினைத்து மு க வை அவதி படுத்தாதீர்கள். அனுபவித்தது போதாதா

 • CHANDRA GUPTHAN - doha,கத்தார்

  என்ன தான் நல்லவனாகவே இருந்தாலும் கடைசி காலத்தில் அவனை விரும்பியவர்கள் அவனை தூற்ற வேண்டும் . அப்போது தான் அந்த ஆத்மா போதும்டா இந்த வாழ்க்கை என்று என்ன வேண்டும் அப்போது தான் மரணம் சம்பவிக்கும் இது உலக நியதி . நம்ம தாத்தாவுக்கு கண்ணகி , பராசக்தி போன்ற படங்களின் வசனத்தை காதில் விழுவது போல் செய்யலாம் ,(இதில் நீதியா , நேர்மையா , போன்ற வசனம் நிறைய இருக்கும் , கண்ணகி படத்தில் நானா கள்வன் என்று வரும் ) மானாட மயிலாட நிகழ்ச்சியை 3D யில் எடுத்து காமிக்கலாம் . இப்படியும் இல்லைன்னா சர்க்காரியா , 2G கட்ச தீவு , சேது சமுத்திரம் , இப்படி எல்லாவித ஊழல்களிலும் விடுதலை , கடைசியில் வாய்ப்பாக பழையபடி 500 / 1000 ரூ நோட்டு செல்லும் சொல்லலாம் . விஞ்ஞானி ஸ்டெபன் ஹாக் மாதிரி மனசுல இருக்கிறதை வெளிப்படுத்தி அத டிவி மூலமாக தெரிவிக்கலாம் இவரை விட மூத்தவர் அன்பழகன் . ஜம்முன்னு கோலூன்றி நடக்கிறார் . இவர் .............? இப்படியும் இல்லைனா ஏன் உயிரை வாங்கறே சீக்கிரம் செத்து ஒழின்னும் சொல்லலாம் . செய்த துரோகங்கள் பாவங்கள் நிழலாடுகிறது அனுபவிக்கட்டும் இன்னும் 100 ஆண்டு வாழனும் அம்மாவுக்கு கொடுத்தது போக மீதியை கொடுத்துட்டாங்களோ ? அதனால ஞாபக மறதி . கருணாநிதி ஞாபக மறதி நோயால் அவதி படறதே ஒரு ராஜதந்திர நடவடிக்கைன்னு ஒரு கூட்டம் கிளம்பிருமே ? அரசியலில் மிஸ்டர் சாம்பு ஷெர்லாக் ஹோம்ஸ் , காரல் மார்க்ஸ், மைக்கேல் ஏஞ்சலோ லெனின் இடிஅமீன் எல்லாம் கருணாநிதான் ஸ்டாலினை பத்தி மக்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று கூட வேவு பார்க்கும் பெருசு

 • AYRA. ELUMALAI - villupuram,இந்தியா

  விரைவில் நலம் பெற வேண்டுகிறேன் .

 • Snake Babu - Salem,இந்தியா

  எந்த ஒரு ஆரம்பத்திற்கும் ஒரு முடிவுண்டு... அது இயற்கையின் நியதி.. அதை கேலியும் கிண்டலும் செய்யும் நண்பர்கள் தாங்களும் ஒரு கட்டத்தில் மூப்பின் காரணமாக அத்தகைய நிலையை அடைய வேண்டி இருக்கும் என்பதை உணரவும். ஆனால் அவர் வள்ளுவரின் தோன்றின் புகழோடு தோன்றுக என்னும் வாக்கிற்க்கேற்ப சட்டசபை தேர்தலில் தோல்வியே காணாது இந்தியாவிலேயே அதிக முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றவராகவும், ஐந்து முறை முதல்வர் பணியை செம்மையாக ஆற்றியவராகவும் (மற்றவர்கள் அவர் வயதில் அவ்வளவு கடமை உணர்வோடு பணி ஆற்றி இருப்பார்களா என்பது சந்தேகமே) திகழ்கிறார்.. அவர் ஆட்சிக்காலத்தில் தான் இந்தியாவிலேயே முதல்முதலாக அடிமட்ட மக்களுக்கு பல நல்ல திட்டங்களை அமுல் படுத்தப்பட்டது....(விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், குடிசை வாசிகளுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு, பிற்படுத்தப்பட்டோருக்கு இந்தியாவிலேயே மிக அதிக இடஒதுக்கீடு, வேலை வாய்ப்பை பெருக்க நிறைய தொழிற் பேட்டைகள் அவற்றில் சில..) அவரால் இயன்ற அளவில் நாட்டுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் முன்னேற பாடு பட்டிருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.. மறக்கவும் கூடாது.... அது மட்டும் அல்லாது ஹிந்தி கட்டாய மொழி ஆக்கப்பட்டிருந்தால் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்கள் ஆகி இருப்பார்கள். அதை தடுத்து நிறுத்தி தமிழின் மாண்பை தமிழரின் வாழ்வுரிமையை நிலை நிறுத்தியதும் பாராட்டுதற்குரியது. என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொண்ட மகற்கு என்பது வள்ளுவர் வாக்கு.. பாராட்ட மனமில்லை என்றாலும் ஒரு முன்னாள் முதல்வரை அவர் ஆற்றிய பணிகளை கருதி (இங்கொன்றும் அங்கொன்றுமாய் சில தவறுகள் நடந்திருக்கலாம்.) ஆனாலும் அவரின் நற்பணிகளை நினைவு கூர்ந்து தரம் தாழ்ந்த விமர்சினங்கள் செய்வதை உண்மை தமிழர்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன் அருமை Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா அவர்கேள நன்றி வாழ்க வளமுடன்.

 • Muthuraj Richard - Coimbatore,இந்தியா

  தரமற்ற விமர்சனங்களை தவிர்க்க வேண்டும், எத்தனை பேர் இத்தனை வயது வாழ கொடுத்து வைத்திருக்கிறார்கள்? சில விமர்சனங்கள் படித்த, தன்மை உள்ளவர்கள் எழுதியது போல தெரியவில்லை, கலைஞர் ஒரு நல்ல தலைவர், தவிர்க்க முடியாத தலைவர்களுள் ஒருவராக இருப்பவர், சில்லறைத்தனமான விமர்சனங்கள் தவிர்க்கப்படவேண்டும், பழுத்த மரம் கல்லடிப்படும் என்றாலும் நோய்வாய்ப்பட்டுள்ளவரை கீழ்த்தரமாக விமர்சிக்க வேண்டாம் கலைஞர் நலம் பெற வாழ்த்துவோம் - வாழ்க தமிழகம்

 • M.RAVI.Karaikudi. -

  thalaivar nalam pera valthukkal

 • A shanmugam - VELLORE,இந்தியா

  இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற நேரம் நெருங்கிவிட்டது. வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி: மக்கள் மனதில் நிற்பவர் யார்.......

 • Jayadev - CHENNAI,இந்தியா

  இவர்கள் MLA பதவி வகிக்க முடியாது இவர் ராஜினாமா செய்து விடுவது நல்லது

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  நாட்டை ஆள்பவர்கள் அனைவருக்குமே ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே நினைவாற்றல் மற்றும் பேச்சுத்திறன் இருக்கவேண்டும் என்று இருந்தால் குறிப்பாக ஜனநாயக நாட்டில் நாட்டு மக்கள் எல்லோருமே நாட்டை ஆள முடியும், இல்லையென்றால் குறைந்தது 60 ஆண்டுகள் தனி மனிதர் மற்றும் அவர்களது குடும்பம் மட்டுமே ஆண்டு கொண்டே இருப்பார்கள், நாட்டு மக்கள் மக்களுக்காக பணியாற்றுவது என்பதே இல்லாமல் போகும், இதற்க்கு ஏதாவது மருந்து இருக்கிறதா? வந்தே மாதரம்

 • mrsethuraman - Bangalore,இந்தியா

  எதை மறந்தாலும் அந்த ரெண்டு வீட்டு அட்ரெஸ்களை மட்டும் மறக்க மாட்டார்

 • kumar - chennai,இந்தியா

  கடவுள் தமிழ்நாட்டுக்கு தற்பொழுது மிக நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல வாய்ப்பை தந்திருக்கிறார். திரு ஸ்டாலின் அவர்களும்,திரு பன்னீர் அவர்களும் , கருணாநிதி போன்றோ அல்லது ஜெயலலிதாவை போன்றோ பிரபலமும் இல்லை ஊழலில் திளைத்தவர்களும் இல்லை ( இருவருக்கும் அழகிரி ,சசி போன்ற எதிரிகள் உண்டு) ஒரே சமயத்தில் கருணாநிதி, ஜெயலலிதா அரசியலில் இருந்து ஒதுங்கியது ஒரு நல்ல விஷயமே. தமிழ்நாட்டுக்கு ஒரு நல்ல எதிர்காலமே

 • T.karikalan - tirunelveli,இந்தியா

  அ்ந்த சர்க்காரியா கமிஷன் தீர்ப்பு, அந்த டூ ஜியில் கிடைத்தது... இதையெல்லாம் சுவாரஸ்யமா சொல்லி ஞாபகப்படுத்துங்க. தானா ஞாபகம் வந்துடும்

 • Amanullah - Riyadh,சவுதி அரேபியா

  இது முதுமையின் அடையாளம்... இதில் கவலைப்படவோ அச்சப்படவோ தேவையில்லை. தவிர குடும்பத்தினரின் அன்பும் அரவணைப்பும் அவசியம்.

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  தன் வினை தன்னை சுடும் . தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்

 • SSTHUGLAK - DELTA,இந்தியா

  தன்னை தானே உணர்ந்து கொள்ளக்கூடிய அளவாவது விரைவில் குணம் பெறட்டும் தற்போது அவரை விமர்சனம் செய்வது அநாகரிகம்

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  குறைந்தபட்ச ம்னித நேயமற்றவர்கள் ,மிருகங்களை விட கீழானவர்கள் மட்டுமே இது போன்ற நோயுற்ற தன்மையை கூட விமர்சிப்பார்கள் அத்தகையவர்கள் தங்களை அடையாளம் காண்பிக்கவே விமர்சனம் செய்கிறார்களோ என்ற வினா எழுவதை தவிர்க்க முடியாதோ ?

 • உண்மை விளம்பி - சிங்கப்பூர்,சிங்கப்பூர்

  சீக்கிரமே நீங்கள் நன்றாக நலம் பெற வேண்டுகிறேன்.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  கலைஞர் என்றாலே நிவாற்றல் மற்றும் பேச்சுத்திறமை, இரண்டும்தான் நினைவிற்கு வரும், இவ்விரண்டும் மீண்டும் வந்தால் அவரே வித்தகர், வந்தே மாதரம்

 • Sadasivan Kulaikather - chennai,இந்தியா

  இப்போம் தமிழ்நாடு இருக்குற நிலைமைக்கு கலைஞர் தமிழ்நாடு அரசியல்க்கு தேவை. அவருடை தமிழ் சொல்வடை இனி கேக்க முடியாதோ ?

 • ɥʇıɾ∀ - Chennai ,இந்தியா

  90 வயசுக்கு மேல எல்லாருக்கும் வர வியாதிகள் தான் இது ...குணப்படுத்துவது கஷ்டம் என்று தான் நினைக்கிறன் ... மாற்றி மாற்றி பேசுவார்கள் .. சொன்னதை திரும்ப திரும்ப சொல்வார்கள் ..எதுவுமே ஞாபகம் இல்ல்லாமால் சொந்த பிள்ளைகளிடமே " உனக்கு எத்தனை பிள்ளைகள்?? ...நீ ஏன் இங்கே வரவே மாட்டேன்கிற"... என்பது மாதிரியான கேள்விகள் கேட்பார்கள். கேட்பதற்கு எரிச்சலா தான் இருக்கும்...ஆனாலும் அட்ஜஸ்ட் பண்ணி தான் போகணும் வேற வழி இல்லை ...நமது இறுதி காலம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது .. .. கடைசி நேரத்தில் குழந்தைகள் மாதிரி ஆகி விடுவார்கள் ...என்ன ஒரு வேதனை என்றால் ... குழந்தைகளை எப்படி ஆள் ஆளுக்கு கொஞ்சுகிறோம் .., எப்படி கவனிக்கிறோம் ...ஆனால் வயசானவர்களை வேண்டா வெறுப்பாக தான் நிறைய வீட்டில் கவனிக்கிறார்கள் .. செத்து தொலை என்கிற அளவுக்கு பேச்சும் இருக்கும் ...... கலைஞரை சுத்தி நிறைய பேரு இருப்பதால் நல்ல கவனிப்பு கண்டிப்பாக இருக்கும் ...

 • Kalyana Sundaram - Al-Jubail,சவுதி அரேபியா

  ஒரு வேளை குஷ்பூ கூட இருந்தால் எல்லாம் நன்றாகும் .ஆனால் கருணாநிதி குடும்பம் அனுமதிக்காது .

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  நீங்க உடல் நலம் சரியில்லாத போது சுடாலின் தலைவரா பதவி ஏத்துக்கிட்டாருன்னு சொல்லுங்க ..ஞாபகம் தானா வந்துடும் ...

 • R.Selvaperumal - kuwait,குவைத்

  அவர் எப்படிப்பட்டவராயினும், நாம் மரியாதையுடனும், மனிதாபிமானத்துடனும் கருத்து பதிக்க வேண்டும்.

 • Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ

  வடக்குப்பட்டி ராமசாமிக்கு குடுத்த பணம்....கூகூகூ...

 • makesh - kumbakonam ,இந்தியா

  அவர் நாத்திகவாதியாக இருந்தாலும் அவரது ராமானுஜர் வசனம் மிக பிரமாதம் என்று பிராமணர்களே பாராட்டுவது ஆச்சர்யமானது.. அவரது எழுத்துக்களை தமிழகம் எதிர்பார்க்கிறது, நலம் பெற வாழ்த்துக்கள்

 • christ - chennai,இந்தியா

  வயதானால் எல்லோருக்கும் வருவது தான்

 • Balaji - Bangalore,இந்தியா

  வாழ்க வளமுடன்.

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  இவர் உடல் நலம் தேற வாய்ப்பில்லாவிட்டாலும், சாகாமல் இருக்க வாழ்த்துவோம் அட் லீஸ்ட் 2 ஜி வழக்கிலும் ஏர்செல் வழக்கிலும் தீர்ப்பு வரும் வரை

 • Aravindh Raman - Auckland,நியூ சிலாந்து

  கடும் வயோதிபம் காரணமாக ஏற்படும் வழக்கமான வியாதி..இதை ஒரு செய்தியாக போட்டு கேலித்தனமான விமர்சனங்கள் எதிர்பார்த்த படி கிடைத்துள்ளது. எதிரியையும் மனிதாபத்தோடு விமர்சிக்கும் பண்பு எமக்கு இருக்க வேண்டும்..ஜெயலலிதாவின் நோயை விமர்சித்தவரும் உண்டு...

 • Thamilarasu K - Salem,இந்தியா

  அவர் எப்படிப்பட்டவராயினும், நாம் மரியாதையுடனும், மனிதாபிமானத்துடனும் கருத்து பதிக்க வேண்டும்.

 • Stephen Jawahar - Trivandrum,இந்தியா

  பார்க்க வரும் கட்சி பிரமுகர்களின் பெயர், அங்குள்ள வருகைபதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. அட்டெண்டன்ஸ் எடுக்குறாங்களோ

 • Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  ஒரு மா பெரும் தமிழ் ஆற்றல் உள்ள தலைவனை இந்த மாதிரி விமர்சிப்பது தமிழ் தாய்க்கு செய்யும் அவ மரியாதை. தமிழ் தாய் வெக்கித் தலை குனிகிறாள் . இதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

 • suresh - chennai,இந்தியா

  கருணாநிதியின் உடல் இயலாமையை சுட்டிக் காட்டி செய்தி போட்டால், அவரைப் பற்றி கேலியும், கிண்டலுமாக கருத்துக்கள் குவியும். இதோ, நடந்து விட்டது.

 • Anbazhagan M - Mapusa, Goa,இந்தியா

  எதிரியாக இருந்தாலும், அவனுடைய கஷ்ட காலத்தில் அவனை தூற்றுவது நல்ல மனிதருக்கு அழகல்ல.

 • gargee - rio,அர்ஜென்டீனா

  மீண்டும் தக்ஷிணாமூர்த்தியாக மாறி செய்த பாவங்களுக்கு சிறிதேனும் பிராயச்சித்தம் தேடலாம் - நிறைய தானம் கொடுக்கலாம், முக்கியமாக கோவில் சொத்து அபகரித்திருந்தால் அதனை மொத்தமாக திரும்பி கொடுக்கலாம், அன்ன தானம் தினமும் செய்யலாம், இந்து மதத்திற்கு செய்த இழிவிற்கு மகான்களை சந்தித்து மன்னிப்பு கேட்கலாம். அதற்கு மேல் அவர் செய்த புண்ணியம் அவரோடு வரும்.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  எதுனா ஒரு "குடும்ப பாட்ட" எடுத்து விட்டா நெனவு திரும்ப சான்சு உண்டு...

 • vandemataram -

  நலம் பெற்று இயல்பு வாழ்க்கை வாழ இறைவன் அருளட்டும்.

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  கருணாநிதி அவர்கள் உடல்நலம் தேறி வர மனமார வாழ்த்துக்கள்... [ SENILE DEMENTIA என்பது நடைமுறையில் உள்ள ஓன்று தான்... ஆனால் சில அதிர்ச்சி சம்பவங்கள் நடைபெறும்போது மீண்டும் ஞாபகம் வர வாய்ப்புள்ளது... ஒருவேளை, நம்ம துரைமுருகன் அவர்கள் கருணாநிதி அவர்கள் முன்பு ஒரு மேடை நாடகம் நடத்தி, அதில் அவரை மனோகராவாக நடிக்கவிட்டால், " பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா " என்று கூற வைத்து, துரைமுருகன் மனோகரா போல பொங்கி எழும்போது , அந்த முக பாவனையையும் , பாடி லாங்குவேஜ் ஐயும் பார்த்த அதிர்ச்சியில் ஒருவேளை தலைவருக்கு ஞாபகம் வந்தாலும் வந்துவிட வாய்ப்பு உள்ளது... ]

 • S.Ganesan - Hosur,இந்தியா

  இது வயதானவர்களுக்கு ஏற்படும் நோயே.. இதில் வருத்தப்படுவதற்கு ஏதும் இல்லை. இருப்பினும் முக வுக்கு பெரிய பலமே அவருடைய நினைவாற்றல்தான். அது இல்லாத போது கஷ்டம்தான்.

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  திமுக பொதுக்குழுவில், கனிமொழிக்கு மிக பதவி கொடுக்க இருப்பதாக செய்தி வந்தது. அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு மிக பெரிய பதவி வழங்கப்படும் என்று செய்திகள் வந்தன. ஆனால் திடீரென பொதுக்குழுவுக்கு 4 நாளைக்கு முன்பு, இவரை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அப்புறம் பொது குழுவை ரத்து பண்ணினார்கள்.. பிறிதொரு நாளில் கூட்டினார்கள்.

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  எந்த ஒரு ஆரம்பத்திற்கும் ஒரு முடிவுண்டு...அது இயற்கையின் நியதி.. அதை கேலியும் கிண்டலும் செய்யும் நண்பர்கள் தாங்களும் ஒரு கட்டத்தில் மூப்பின் காரணமாக அத்தகைய நிலையை அடைய வேண்டி இருக்கும் என்பதை உணரவும். ஆனால் அவர் வள்ளுவரின் தோன்றின் புகழோடு தோன்றுக என்னும் வாக்கிற்க்கேற்ப சட்டசபை தேர்தலில் தோல்வியே காணாது இந்தியாவிலேயே அதிக முறை சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றவராகவும், ஐந்து முறை முதல்வர் பணியை செம்மையாக ஆற்றியவராகவும் (மற்றவர்கள் அவர் வயதில் அவ்வளவு கடமை உணர்வோடு பணி ஆற்றி இருப்பார்களா என்பது சந்தேகமே) திகழ்கிறார்.. அவர் ஆட்சிக்காலத்தில்தான் இந்தியாவிலேயே முதல்முதலாக அடிமட்ட மக்களுக்கு பல நல்ல திட்டங்களை அமுல் படுத்தப்பட்டது....(விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், குடிசை வாசிகளுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு, பிற்படுத்தப்பட்டோருக்கு இந்தியாவிலேயே மிக அதிக இடஒதுக்கீடு, வேலை வாய்ப்பை பெருக்க நிறைய தொழிற் பேட்டைகள் அவற்றில் சில..) அவரால் இயன்ற அளவில் நாட்டுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் முன்னேற பாடு பட்டிருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.. மறக்கவும் கூடாது.... அது மட்டும் அல்லாது ஹிந்தி கட்டாய மொழி ஆக்கப்பட்டிருந்தால் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்கள் ஆகி இருப்பார்கள். அதை தடுத்து நிறுத்தி தமிழின் மாண்பை தமிழரின் வாழ்வுரிமையை நிலை நிறுத்தியதும் பாராட்டுதற்குரியது. என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொண்ட மகற்கு என்பது வள்ளுவர் வாக்கு.. பாராட்ட மனமில்லை என்றாலும் ஒரு முன்னாள் முதல்வரை அவர் ஆற்றிய பணிகளை கருதி (இங்கொன்றும் அங்கொன்றுமாய் சில தவறுகள் நடந்திருக்கலாம்.) ஆனாலும் அவரின் நற்பணிகளை நினைவு கூர்ந்து தரம் தாழ்ந்த விமர்சினங்கள் செய்வதை உண்மை தமிழர்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்

 • Idithangi - SIngapore,சிங்கப்பூர்

  தயாளு அம்மாவுக்கு அல்ஜீமர் நோய் என்று சொல்லி 2 ஜி விசாரணையின் போது தப்பிக்க முன்பு முயன்றார்கள். அந்த அம்மா சில பல போது நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துகொண்டார்கள். இப்போது ஊழ்வினை அய்யன் சொல்வழியில் இவரை வந்து பாதிக்கிறதா..?

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  ஒழுங்காக 2001 தேர்தலில் பல்ப் வாங்கினப்பிறகு ரிடையர் ஆகியிருந்தா மக்களால் மதிக்கப்பட்ட தலைவரா இருந்திருப்பார். இப்போ மாக்கள் மட்டுமே மதிக்கற பீஸாகிட்டார்...

 • Pannadai Pandian - wuxi,சீனா

  "பழைய நினைவுகள் குறித்தும், சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றியும், கருணாநிதியிடம் பேசினால், அவர் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது" - கண்ணதாசனுடன் சேர்ந்து கோடம்பாக்கத்து கதவுகளை தட்டிய சுவாரசியமான நிகழ்வுகளை நினைவு கூறுங்கள் தல டக்குன்னு எந்திரிச்சி ஒக்காந்துக்கும்.

 • Bala Subramanian - Los Angeles CA,யூ.எஸ்.ஏ

  ஊறை அடிச்சு உலையில் போட்டது இப்போது ஜ்பகம் வரணுமே. என்ன ஜ்பகம் வந்தாலும் வாய் பேச முடியாது மனதுகுள் அழலாம் 😭 😭

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  இதுகிட்ட இருந்த இரண்டே இரண்டு நல்ல விஷயங்களே ஞாபதிசக்தி மற்றும் பேச்சுதிறன் மட்டும்தான். அதுவும் போச்சா? இப்போதுதான் எனக்கு கடவுள்மேல் முழு நம்பிக்கையே வருகிறது. இப்படியே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கட்டும்.

 • Paranthaman - kadappa,இந்தியா

  ஜெயா இறந்திருப்போனதை சொன்னால் கவனம் திரும்பும்.

 • Karunan - udumalpet,இந்தியா

  அவரே தான் யார் என்று தெரியாமல் இருக்கும் நிலையில் அவருடைய பஞ்சமா பாதகங்களை பேசிப்பயன் என்ன ?பேசாமல் இருப்பீர் சுடு சொல் நிற்க

 • ரங்கன் -

  எது எப்படி இருந்தாலும், அம்மாவின் கடைசி தினங்கள் போல அமுக்கி வைக்காமல் இருக்கிறார்களே....

 • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

  விரைவில் நலம் பெற்று வாருங்கள் மீண்டும் ஒரு இழப்பை தமிழமும் தமிழக அரசியல் களமும் தாங்காது

 • abu lukmaan - trichy,இந்தியா

  வயது அதிகம் ஆனவர்களை குழந்தைகள் போல் ஆக்கி விடுகிறேன் . எனவே யாரும் அவர்களை பார்த்து சீ , இஸ் என பெருமூச்சு கூட விட வேண்டாம் என இறைவன் கூறியுள்ளான் . வாழும் வரை பெரிய நோய்கள் இல்லாமல் வாழ்வதே சிறந்தது . 60 வயதில் வரும் நோய்கள் இப்போது 40 வயதிலேயே வந்து விடுகிறது . சர்க்கரை நோய் , தைரொய்ட் , பக்க வாதம் , கண் பார்வை மங்குதல் , காது கேளாமை ,மன நோய் , மறதி, கிட்னி பாயிலேயர் போன்றவைகள் வந்து விடுகின்றன .

 • Abdul Rahman - Madurai,இந்தியா

  ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன? கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?

 • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

  வருத்தமாக இருக்கிறது .இருந்த இடத்திலே இருந்து 50 வருடத்திற்கு முன் நடத்தை அப்படியே ஞாபகம் வைத்து சொல்பவர் .விரைவில் குணமடையட்டும் .

 • S Rama(samy)murthy - karaikudi,இந்தியா

  OPS முதல்வர் பதவி கொடுத்தால் , ஹிந்து = திருடன் , ராமன்= எந்த பெறியியல் கல்லூரியில் படித்தார் ,ஊழல் புகழ் கருணாவுக்கு நினைவு திரும்பும். சுப ராம காரைக்குடி

 • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

  தலைவருக்கு நியாபகம் திரும்ப பல யோசனைகளை இருக்கின்றன ஆனால் நேரம் இன்மை காரணமாக சிலவற்றை சொல்ல கடமை பட்டுள்ளேன் இல்லாவிடில் எதிர்காலம் என்னை தூற்றும் ....ஆகவேதான் ....1 . காலையில் கோபாலபுரம் மாலையில் cit என்று சந்தோசமாக குதூகல குச்சி கொண்டு வாழ்க்கையை கழித்தவர் எங்கள் தலைவர் ...ஆகவே அவரை அலாக்கா தூக்கி சீட்டை சீட்டோடு இணைத்து சில்லென்ற காற்று படுமாறு காலையில் ஒரு ட்ரிப் மாலையில் ஒரு ட்ரிப் என்று கோபாலபுரத்துக்கும் cit க்கும் அழைத்து சென்றால் சந்தோசம் திரும்ம்பி நியாபகம் வர வாய்ப்பிருக்கிறது 2 . தலைவர் குஸ்பு கட்சியில் இருந்து சென்றதில் இருந்தே மானாவாரியாக மன உழைச்சலில் கஷ்டப்படுகிறான் ... ஆகவே குசுப்புவை கூப்பிட்டு ஒரு குத்தாட்டம் போடச்சொன்னால் (துர்காவுக்கு தெரிய கூடாது ... மிகவும் ரகசியம் ...) உடனே குதூகுலத்தில் எழுந்து உட்கார்ந்து விடுவார் .... 3 . பணத்தை கையில் தொடாமல் கை மாற்றி விடுவதில் வல்லவர் .... ஆகவே பாவி மோடியினால் (மன்னிக்கவும் வேறு வழியில்லை ) செல்லாமல் போன பணத்தை லாரியில் ஏற்றி வந்து தலைவர் கண்முன் வேறொரு லாரிக்கு மாத்தினால் நினைவு வருவதற்கு சாத்திய கூறுகள் அதிகம் .... 4 . தலைவைவரின் கை வரிசையால் வந்தது 1 .72 லட்சம் கோடி ... இதை நியாபக படுத்த பழமொழி மற்றும் மன்னரை நெருக்கமாக நிக்க வைத்து (சாதாரணமாக நின்றாலே போதும் ...அதுவே நெருக்கம் தான் ) அவர்கள் நெத்தியில் G G பச்சை குத்தி தலைவரிடம் காட்டினாள் உடனே நியாபகம் வந்து விடும் ... 5 . தலைவர் தினமும் வீட்டை விட்டு வெளியே வரும் பொது நைசாக யாருக்கும் தெரியாம எதிரே இருக்கும் கிருஷ்ணன் கோவிலை அரை கண்ணால் பார்ப்பது வழக்கம் இப்பொது அது சாத்தியம் இல்லை ...ஆகவே கிருஷ்ணன் கோவிலை பாதியாக உடைத்து தலைவரின் கொடுவந்து காட்டினாள் நியாபகம் உடனே வந்து விடும் இதை கேள்வி பட்டதும் நம்ப சுரமணி உடனே வந்து தலைவரை வாழ்த்துவது போல் ஒரு போஸ் கொடுப்பார் பாருங்கள் உடனே வந்து விடும் ....6 . தலைவருக்கு பூணுல் என்றால் அவ்வளவாக ஆகாது ... ஆகவே ஊரில் வேலைவெட்டியில்லாமல் பையன் வெளிநாட்டில் சம்பாதித்து கொடுக்கும் காசை வைத்து கொண்டு வெட்டிக்கதை பேசிக்கொண்டு இருக்கும் நான்கு பிராமணர்களை காசு கொடுத்து கூட்டிவந்து (ஸ்டாலின் இதற்க்கு மிக சரியான ஆள் ..ராமேஸ்வரம் ...) பூணுலை தலைவரிடம் இருக்கும் ஒற்றை கண்ணில் படும்படி அவிழ்த்தாள் , உடனே நியாபகம் தான் .....

 • Manian - Chennai,இந்தியா

  ஞாபக மறதி நோய்(அல்சீமர்னா)பழசுதான் ஞாபகம் இருக்குதாம். ஆனா சர்க்காரியா கமிட்டிகிட்டே, பழசு எதுவுமே நினைவில்லே, ஆனாலும் "கல் தோன்றி மண் தோன்றாக் காலம் ..மட்டும்தான் ஞாபகம் வருதுன்னாராம். அப்பவே சர்காரியா கமிட்டி இதை விஞ்ஞான மொறை கொள்ளைன்னாங்களாம். ஹவாலா பயலுக எவனும் இந்த மொறையை இவுருக்கு சொல்லிதந்த குருன்னு சொல்லவே இல்லையாம். அப்பவே தூபாய், சிங்கப்பூர், மொரீசியஸ், மலேயா,தாய்லாந்து வீட்டு சாவி எல்லாம் செல்லமகன்டே கொடுத்து "சாவி விட்டது, நினைவும் மறந்தது" இன்னாராம்.இப்போ அதெல்லாம் பேராசிரயருக்கு மட்டும்தான் தெரியும். மதுரை தாகீ ஆவியும் வந்து "என்னியே எப்புடி மறந்தேன்னு" பெரிசு காதுலே கேக்குதாம்- விவரம் அறிந்த,உசிருக்கு பயந்த, பெயர் சொல்ல விரு்ம்பாத ஒடன் பொறப்பு

 • அறிவாளி - நெல்சன் ,கனடா

  உன் சொத்து எல்லாம் அரசு உடைமை ஆக்கப்பட்டு விட்டது என்று காதோரம் முணுமுணுத்தால் ஒரு வேளை நினைவு திரும்புமோ?

 • venkatasubramani - Cincinnati,யூ.எஸ்.ஏ

  மேற்கு வங்காள முதல்வர் ஜோதிபாசுவிற்கு இது போன்ற சிகிச்சை அளிக்க பட்டதாக ஞாபகம்

 • Jagath Venkatesan - mayiladuthurai ,இந்தியா

  நினைவுஆற்றலில் மிக அற்புதமான மனிதர் ...சீக்கிரம் உடல் நலம் பெறவேண்டும்

 • சுரேஷ் குமார். - சொக்கநாதபுரம். ,சிங்கப்பூர்

  பாஷா படம் பார்த்தாருன்னு சொன்னது எல்லாம் .... பொய் தானா? அதிலும் இணையத்தில் எழுதும் 200 ரூபாய் பார்ட்டிகள் அலும்பு தாங்க முடியலை....அவங்களுக்கு எலும்பு துண்டை வீசி எறிஞ்சா ஒழுங்கா உண்மையை எழுதுவாங்க.....

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இது இயற்க்கையே, நமது இல்லங்களில் இருக்கும் நமது தாத்தா பாட்டிகள் அனுபவித்து வரும் இயக்கையின் இடர், இல்லாதவன் இருப்பவன், யாவருமே சந்தித்தே ஆக வேண்டும், எல்லாமே மூச்சு இருக்கும் வரை தான்

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  அப்போ தள்ளுவண்டி இனிமே தேவையில்லை..ஓரமாக ஒருபக்கமாக நகர்த்தி வெச்சுரலாம்...குட்...வூட்லேயே ஒரிஜினல் டிக்கெட்டுடன் திருவாரூர் ரயில் செட்டிங் போட்டு காண்பித்தால் ஞாபகம் அச்சு அசலாக உடனே திரும்பிவிடுமே ...நடை பழக்கமும் பண்ணலாமே..செய்வார்களா? அவுங்க செய்வார்களா?

 • bairava - madurai,இந்தியா

  அய்யா கட்டுமரம் கொஞ்சம் 50 வருசம் பின்னாடி போயிட்டு நினைச்சுப்பார்த்து சொல்லுங்க இப்போ அதிமுக பொதுச்செயலாளர் யாருனு .....? அதெல்லாம் மறந்து போச்சா ?அப்போ உங்களுக்கு எதனை மனைவி ,எதனை பிள்ளைகள் சொல்லுங்க இல்லை யாருக்கும் சொத்து ஏதும் கிடைக்காம போகும்போல.... இந்த செயல் தலைவர் யாருக்கும் ஒன்னும் இல்லைனு சொல்லிட்டாரு...கொறஞ்சது இந்த பெயர்களாச்சும் ஞாபகம் இருக்குமா ( சசிகலா ,நடராஜன் ,ராசாத்தி ,தயாளு ,காந்தி ,கனிமொழி,சாவித்திரி )....ஐயோ பாவம் செமொழிகலைஞருக்கு இந்த நிலைமை ..அப்போ சசிக்கு எப்படியோ ?

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  பாவம்....கடைசி கட்டம் அப்டிங்கறதால இதெல்லாம் சகஜம் தான்....இத்தனை வருஷம் வாழ்ந்ததே சாதனை தான்...நாம எல்லாம் அறுபது வயசை தாண்டி வாழ்வோமா என்றே தெரியாது........

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இவ்வளவு நாளும் ஞாபக நோயால் அவதி - இனி மறதி நோயால் அவதி... எப்படியோ சுபமாக முடிந்தால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லதுதான்...

 • மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

  //ஞாபக மறதி நோயால் கருணாநிதி அவதி// - மறுபடியும் மொதல்லே இருந்து ஆரம்பிக்காமல் இருந்தால் சரி..

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  கருணாநிதி ஞாபக மறதி நோயால் அவதி படறதே ஒரு ராஜதந்திர நடவடிக்கைன்னு ஒரு கூட்டம் கிளம்பிருமே ? அரசியலில் மிஸ்டர் சாம்பு கருணாநிதான்

 • jay - toronto,கனடா

  தமிழரை மறந்து பலவருடம் ஆகிவிட்டது இவருக்கு

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  முன்னர் மக்கள் பின்தொடர்ந்தார்கழ் .இப்போது நோய் தொடர்கிறது.ஒவ்வொருவரும் இதை சந்திக்கத்தான்வேண்டும்.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  ஓய்வெடுக்கட்டும்.

 • Girija - Chennai,இந்தியா

  மருத்துவமனையில் ஜெ வை யாரும் பார்க்க விடவில்லை , veetil ulla எம் கே வை யாரும் பார்க்க அனுமதி இல்லை , அங்கு சசிகலா இங்கு ஸ்டாலின் , இப்போது அங்கு தீபா இங்கு அழகிரி கூட்டி கழிச்சு பார்

 • anbu - London,யுனைடெட் கிங்டம்

  இதற்றகாகத்தான் சட்டசபையில் தி மு க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துவிட்டு இவரை சுற்றி இருக்கிறார்களோ?

 • கட்டுமரம் - Camden, NJ,யூ.எஸ்.ஏ

  கண்ணாடி காதவா இல்லை கண்ணாடி பெட்டியா? ஹி..ஹி..ஹி..

 • Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ

  50 வருடங்களாக தொடர்ந்து திமுகவினர் கூறி வந்தது என்னவென்றால் "... தலைவரை சுற்றி தான் தமிழக அரசியல் .. ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் ..." 50 நாள் வரை முன்பு வரை ... ஆனால் இன்று சசிகலாவை சுற்றி தான் தமிழக அரசியல் நடக்கிறது ... திமுகவினர் சசிகலாவை தாக்கி தான் 50 நாட்களாக கருத்து போட்டு வருகிறார்கள். அவர்களே கருணாநிதியை பற்றி ஒரு கருத்து கூட போடவில்லை கடந்த 50 நாட்களாக .... என்னே காலத்தின் கோலம் ... அரைநூற்றாண்டு மாற்றாதது 50 நாள் மாற்றிவிட்ட்து

 • Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ

  பேச்சு திறன் வந்து இனி இவர் வாழ்வில் முதன்முறையாக நல்ல விஷயங்களை இவர் பேச வேண்டும்எ. அதை நான் கேட்க வேண்டும் என்று விழைகிறேன் .,...பழைய நினைவுகள் வாராமல் இருப்பது நலம் ...புது மனிதராக புறப்படட்டும் பயணம் ...

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  விரைவில் இந்த விஞ்சான ஊழல்வாதியிடம் எங்கெங்கு பணத்தை பதுக்கி வைத்துள்ளார் என்று கேட்டு அறிந்துகொள்ளவும் ,அதிக அளவில் ஊழல்செய்தலினால் அவருக்கு மராத்தி நோய் வந்துள்ளது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement