dinamalar telegram
Advertisement

கனடாவில் மசூதியில் தாக்குதல்; 5 பேர் பலி

Share
Tamil News
ஒட்டாவா: கனடாவில் கியூபெக் சிட்டியில் உள்ள ஒரு மசூதியில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். மசூதியில் மாலை நேர தொழுகையின் போது மர்ம நபர்கள் 3 பேர் வந்து இந்த தாக்குதலை நடத்தியதாகவும், இதில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. பலர் காயமுற்றிருப்பதாகவும், மேலும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
தாக்குதல் நடத்தியது யார் ? 40 பேர் மசூதியில் இருந்ததாகவும் லோக்கல் மீடியாக்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்தியது யார் என்ற விவரம் இன்னும் அறியப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (34)

Advertisement