சென்னை : சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் போலீஸ் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் 5 முறை கண்ணீர் புகைகுண்டுகளை வீசி உள்ளனர். வானை நோக்கிய துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.
போராட்டக்காரர்கள் கல்வீசியதில் போலீஸ் ஆய்வாளர் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. இந்நிலையில் இந்த கல்வீச்சு, கலவரத்திற்கு காரணம் மாணவர்கள் இல்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஊடுருவிய தேச விரோத சக்திகளே இதற்கு காரணம் என தெரிவிக்கப்ப்டடுள்ளது.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.