Advertisement

நான் தைரியமானவள் - நடிகை ஓவியா

'ஒரு முறை பெயரை உச்சரித்தாலே இதய சிறைதனில் பூவாய் பூப்பது இவள் தானோ... இவள் உதட்டு சிரிப்பினில் உசுரும் கரையுமே, நினைத்தால் போதும் மனசும் நிறையுமே, பார்த்தால் நமது பாவமும் நீங்குமே' என இவரை வர்ணித்தால் அது பொய்மையல்ல. 'களவாணி' படம் மூலம் இளைஞர்களின் காதல் மனதை களவாடிய 'கற்பனை சித்திரம்' நடிகை ஓவியா தந்த காவிய பேட்டி* ஓவியா பற்றி கொஞ்சம்...?கொஞ்சமென்ன... தாராளமா சொல்றேன்... பிறந்தது, வளர்ந்தது எல்லாமே கேரள மாநிலம் திருச்சூர். படிப்பு பி.ஏ.ஆங்கிலம். படிக்கும் போதே 'மாடலிங், பேஷன்' ஷோக்கள் பண்ணியிருக்கேன். அப்போ தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.* முதல் வாய்ப்பு?இயக்குனர் சற்குணம் தான் 'களவாணி'ல என்னை அறிமுகம் செய்தார். அப்போ சுத்தமா தமிழ் பேச தெரியாது. (இப்போ மட்டும் என்னவாம்) பயந்துகிட்டே தான் நடிச்சேன்.* உங்க உண்மையான பெயர்?அப்பா, அம்மா வைத்த பெயர் 'ஹெலன்'. சற்குணம் எனக்கு 'ஓவியா' ன்னு பெயர் வைத்தார்.* கிராமத்து பொண்ணு, மாடர்ன் கேர்ள் எது பிடிக்கும்?கதைக்கு தேவைன்னா ரெண்டுலயும்தான் நடிக்க விருப்பம்.* அப்போ... கிளா...மர்?படத்துல அவசியம்னா 'கிளாமரா' நடிக்க வேண்டியது தானே. அதுல என்ன தப்பு இருக்கு.* பேய் படங்கள்ல நடிக்க பயப்பட்டீங்களாமே...?யார் சொன்னது...? கொஞ்சம்கூட பயமே இல்லாம தான், 'யாமிருக்க பயமேன், ஹலோ நான் பேய் பேசுறேன்' படங்கள்ல நடித்தேன். எனக்கு 'பேய்'னா பயம் இல்லைங்க. அதெல்லாம் 'ஜூஜிபி'தான்.* நடித்த படங்கள்?களவாணி, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, ஜில்லுன்னு ஒரு சந்திப்பு, மூடர் கூடம், மதயானைக் கூட்டம், புலி வால், யாமிருக்க பயமேன், சண்டமாருதம், ஹலோ நான் பேய் பேசுறேன்.* சண்டை போட்ட அனுபவம் உண்டா?நான் யாரையும் தொந்தரவு பண்ணமாட்டேன். தொந்தரவு பண்ணுனா தானே சண்டை வரும். நான் தனியா இருக்க தான் விரும்புவேன். அதனால அதுக்கு 'சான்ஸே இல்ல'ப்பா. * நடிப்பு தவிர, உங்க ஆசை?ஆசைன்னு எதுவும் இல்லை. இன்னும் படிக்கணும், 'மாடலிங்' பண்ணனும். ஆனா, என்னோட ஆசை மாறிக்கிட்டே இருக்கும்.* ஓவியா நிஜ கேரக்டர்?எப்பவுமே எதை பற்றியும் கவலைப்படாமல் 'கூலா' இருப்பேன். எதுக்காகவும் ஒருபோதும் 'பீல்' பண்ணினதே கிடையாது. நான் ரொம்ப தைரியமான பொண்ணுங்க.* தப்பு பண்ணி மாட்டியது உண்டா?பத்தாவது படிக்கும் போது என்னோட மார்க் ஷீட்ல, யாருக்கும் தெரியாம அப்பாவோட கையெழுத்த போட்டேன். ஆனா, எப்படியோ மாட்டிக்கிட்டேன்.* உங்க அழகுக்கு என்ன பண்ணுறீங்க?அப்படியெல்லாம் எதுவுமே பண்ணலைங்க. இருக்குற அழகு குறையாம பார்த்துக்குவேன். அப்பப்போ 'ஜிம்' க்கும் போவேன்.* ஜல்லிக்கட்டு பார்த்ததுண்டா?தமிழ்நாட்டுல நடக்கும்னு தெரியும். ஆனா, நேர்ல பார்த்ததில்லை. வெரி இன்ட்ரஸ்டிங்... ஒரு நாள் நேர்ல போய் பார்க்கணும்னு ஆசையா இருக்கு.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement