Advertisement

ஜல்லிக்கட்டு சட்ட விரோதம்; இந்திய பீட்டா தலைவர் பொறுப்பற்ற பேச்சு

சென்னை: பீட்டா அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் பூர்வா ஜோஷிபூரா, அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மத்திய அரசு கொண்டு வரும் அவசர சட்டம் குறித்து நாங்கள், எங்களது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். சட்ட ரீதியாக உள்ள அனைத்து வழிகளும் ஆலோசனை செய்யப்படுகிறது.
விலங்குகளை காப்பாற்ற வேண்டியது எங்களது கடமை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா பலிகடா ஆக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும். இந்திய சட்டப்படி ஜல்லிக்கட்டு சட்ட விரோதம். இதுபற்றி தமிழர்களுக்கு தெரியவில்லை எனக்கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (290)

  • yila - Nellai,இந்தியா

    மிருக வதையை தடுக்க, தமிழ்நாட்டில் நடப்பது "மனித வதை". இனி மனிதர்களையும் காட்சிப்படுத்த முடியாத விலங்குகள் பட்டியலில் சேர்த்தால்தான், மனித வதையில் இருந்து தப்பமுடியும் போலும்....

  • White Crow - Kadaram,மலேஷியா

    இந்த கருத்தை நேரில் வந்து மரீனா பீச் ல சொன்னா?

  • sugandhanan - Ramanadhaburam,இந்தியா

    ஏம்மா போய் புள்ள குட்டிய படிக்க வைக்கிற வேலையை பாரு......தேவையில்லாம சீண்டி பாத்த.....

  • syed vahid.s - trichirappalli,இந்தியா

    nalla pacha pachaya vaaila varuthu vendam pesama poidu

  • Dinesh - Chennai,இந்தியா

    ஏன் இவ்வளவு வன்மம்.. எங்கு செல்கிறது தமிழ் கலாச்சாரம்.. அவர் எவ்வளவு கெட்டவராக இருந்தாலும், எவ்வளவு கேடு செய்தாலும், நாம் ஏன் நம் மரியாதையை குறைத்துக்கொண்டு இவ்வளவு தரக்குறைவாக திட்டுகிறோம்.. நமது அய்யன் வள்ளுவன் 2000 வருடங்களுக்கு முன் சொல்லியது... "இன்னா செய்தாரே ஒருத்தர் அவர் நாண நன்னயம் செய்து விடல்." நாம் வள்ளுவன் வழித்தோன்றல்கள்.. நமக்கு 5000 வருட பண்பாடு உள்ளது.. நேற்று வந்த இவருக்காக நாம் நம் பண்பாட்டை கொச்சை செய்ய வேண்டாம். இவர் வெறும் அம்புதான், எய்த வில் எங்குள்ளது என்று பார்க்க வேண்டும், இவர் வழக்கு தொடுத்தால் நம் நீதி அரசர்களுக்கு (நீதி அரசர் என்று சொல்ல மனம் இல்லை, இருந்தாலும் என்ன செய்வது) எங்கே சென்றது அறிவு.. எந்த சாட்சியத்தின் அடிப்படையில் நாம் காளைகளை கொடுமை செய்வதாக தீர்ப்பு சொன்னார்கள்.. நம் குறி இவர் அல்ல, இவரை ஏவியவர்கள்..

Advertisement